ஒருவர் இந்த உலகத்தில் மகிழ்ச்சியையும் துன்பத்தையும் அனுவிப்பதற்கு அவருடைய பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான 5-ஆம் அதிபதியும், 5-ல் இருக்கும் கிரகமும்தான் காரணம்.
ஒரு ஜாதகத்தில் லக்னமானது ஜாதகரின் ஆன்ம பலத்தையும் சிந்தனையையும் குறிக்கும். அந்த லக்னாதிபதியை எந்த சுபகிரகம் பார்க் கிறதோ, அந்த அளவுக்கு அவர் தெளிவாக இருப் பார். நன்கு சிந்திப்பார். லக்னாதிபதியானது, ஜாதகருக்கு வெற்றி எப்படி கிடைக்கு மென்பதைக் காட்டும்.
2-ஆம் பாவாதிபதி நல்ல நிலையில் இருந்து சுபகிரகத்தால் பார்க்கப்பட்டால், அவருக்கு பேச்சுத் திறமை, பணவசதி இருக்கும். தைரியமாக வாழ்வார். குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். அதே நேரத்தில் 2-ஆம் பாவம் கெட்டுப்போனால், குடும்பத்தில் சந்தோஷம், பணவசதி, பேச்சுத் திறமை இருக் காது. பயத்துடன் வாழ்வார்.
3-ஆம் பாவத்திலுள்ள கிரகம் உச்சத்தில் இருந்தால் அல்லது 3-ஆம் பாவாதிபதி சுபகிர கத்தால் பார்க்கப்பட்டால் அவருக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கும். நல்ல நண்பர்கள் இருப்பார்கள். எல்லா காரியங் களையும் நல்ல முறையில் முடிப்பார்கள். ஆனால், 3-ஆம் பாவம் கெட்டுப்போனாலோ, 3-ஆம் பாவாதிபதி பலவீனமாக இருந்தாலோ வெற்றி கிடைக்காது. தைரியம் இருக்காது. நல்ல நண்பர்கள் இருக்கமாட்டார்கள்.
4-ஆம் பாவாதிபதி நல்ல நிலையில் இருந்தால், ஜாதகருக்கு சொத்து இருக்கும். வீட்டில் சந்தோஷம் நிலவும். அந்த வீட்டிற்கு அதிபதி சுபகிரகத்தால் பார்க்கப்பட்டால் வாகன சுகம் இருக்கும். அன்னையால் மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால், அது நீசமடைந்தாலோ அஸ்தமனமாக இருந்தாலோ தாயின் ஆதரவு கிடைக்காது. சொந்த வீடு இருக்காது.வாகனம் அமையாது.
5-ஆம் பாவாதிபதி நன்றாக இருந்தால் அல்லது 5-ஆம் பாவாதிபதியை சுபகிரகம் பார்த்தால் அவர் புகழுடன் இருப்பார். 5-க்கு அதிபதி உச்சத்தில் இருந்து, அதை சுப கிரகம் பார்த்தால், அவர் உலகம் முழுக்க தெரியக் கூடிய மனிதராக இருப்பார். ஆனால் 5-க்கு அதிபதி அஸ்தமனமாகவோ நீசமாகவோ இருந்தால் அவருக்கு வெற்றி கிடைக்காது. 5-க்கு அதிபதி கெட்டுப்போனால் பலருக்கு வாரிசு இருக்காது. அப்படி வாரிசு இருந்தாலும் அந்த வாரிசால் பிரச்சினை உண்டாகும்.
6-ஆம் பாவாதிபதி பலமாக இருந்து அதை சுபகிரகம் பார்த்தால் அவருக்கு பகைவர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால், 6-க்கு அதிபதி பலவீனமாக அல்லது பாவகிரகத்துடன் இருந்தால் அல்லது பாவகிரகத்தால் பார்க்கப் பட்டால் அவருக்கு விரோதிகள் இருப்பார்கள். நோயால் துன்புறுவார்.
7-ஆம் பாவாதிபதி நன்றாக இருந்தால் அவருக்கு நல்ல முறையில் தொழில் நடக்கும். நல்ல மனைவி அமைவாள். ஆனால், 7-ஆம் பாவாதிபதி நீசமாக அல்லது அஸ்தமனமாக அல்லது பாவகிரகத்துடன் இருந்தால், அவருக்கு இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. நல்ல மனைவி அல்லது நல்ல கணவன் அமையமாட்டார். தொழில் சரியாக இருக்காது.
8-ஆம் பாவாதிபதியைக் கொண்டு ஜாத கரின் ஆயுளைக் கூறிவிடமுடியும். அவருக்கு திடீர் வெற்றி கிடைப்பதாக இருந்தால், அதையும் கூறிவிடலாம். 8-ஆம் பாவாதிபதி நல்ல நிலையில் அல்லது சுபகிரகத்துடன் இருந்தால் அவருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை அமையும். ஆனால், 8-ஆம் பாவாதி பதி கெட்டுப்போனால் அல்லது பாவகிர கத்துடன் இருந்தால் அடிக்கடி உடல்நலம் கெடும். பலருக்கு ஆயுளில் பிரச்சினை இருக்கும்.
9-ஆம் பாவாதிபதி நல்ல நிலையில் சுபகிர கத்துடன் இருந்தால் அல்லது சுபகிரகத்தால் பார்க்கப்பட்டால் அவர் பல வெற்றிகளைப் பார்ப்பார். சந்தோஷமாக இருப்பார். ஆனால், 9-ஆம் பாவாதிபதி கெட்டுப்போனால் அல்லது அஸ்தமனமாகவோ நீசமாகவோ இருந்தால் அல்லது பாவகிரகத்துடன் இருந்தால் வாழ்க்கையில் பல சிக்கல்கள் உண்டாகும்.
10-ஆம் பாவாதிபதி நன்றாக அல்லது உச்சமாக இருந்தால், அவர் சுய முயற்சியால் முன்னுக்கு வருவார். ஆனால், அந்த கிரகம் நீசமாகவோ அஸ்தமாகவோ இருந்தால், பாவகிரகத்தால் பார்க்கப்பட்டால், அந்த ஜாத கரின் முயற்சியில் பல பிரச்சினைகள் உண்டாகும். வெற்றி எளிதில் கிட்டாது.
11-க்கு அதிபதி நல்ல நிலையில் உச்சமாக இருந் தால் அல்லது சுப கிரகங்களால் பார்க்கப் பட்டால், அவருக்கு நன்மைகள் நடக்கும். சந்தோஷம் கிடைக்கும். ஆனால், 11-க்கு அதிபதி பலவீனமாகவோ பாவகிரகத்தால் பார்க்கப் பட்டோ இருந்தால் கடுமையாக முயற்சித் தாலும் ஆதாயம் மிகவும் குறைவாகவே இருக்கும். அண்ணன்- தம்பி உறவு சரியாக இருக்காது.
12-ஆம் பாவாதிபதி நல்ல நிலைமையில் இருந்தால் அல்லது சுபகிரகத்தால் பார்க்கப் பட்டால் அவருக்கு வீண் செலவுகள் இருக்காது.
மனதில் சந்தோஷம் இருக்கும். தூக்கம் நன்றாக வரும். ஆனால், 12-ஆம் பாவாதிபதி கெட்டுப் போனாலோ, பாவகிரகத்துடன் இருந்தாலோ வீண் செலவுகள் ஏற்படும். தூக்கம் சரியாக வராது. உடல்நலம் பாதிக்கப்படும்.
எனவே அவரவர் பிறந்த ஜாதக அமைப்பே வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது. சாதகமற்ற கிரக அமைப்பைத் தெரிந்துகொண்டு அதற் கேற்ற பரிகாரங்கள் செய்துகொண்டால் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம். மகிழ்ச்சியாக வாழலாம்.
செல்: 98401 11534