"ஜனனீ ஜன்ம சௌக்கியானாம்
வுர்த்தனி குல சம்பதாம்
பதவீ புர்வ புண்யாணாம்
-க்யதே ஜென்ம பத்ரிகா'
என்னும் சுலோகத்தை எழுதிவிட்டு தான் ஒவ்வொரு ஜாதகமும் எழுதுவார்கள். ஒரு மனிதனின் வேலை, தொழில், பதவி, திருமணம், புத்திரபாக்கியம் போன்றவை அமைவது அவரவர்களது பூர்வ புண்ணியத்தைப் பொருத்தது.
ஒரு மனிதனின் ஜாதகத்தில் ஆறாமிடம் என்பது கடன், நோய், எதிரி, வம்பு போன்ற வற்றைக் குறிக்கும் இடமாகும். பத்தாமிடம் என்பதை ஜீவன ஸ்தானம், தொழில் ஸ்தானம், இராஜ்ஜிய ஸ்தானம் என்று அழைப்பார்கள்.
ஒருவருடைய பதவி, தொழில், வேலை, வியாபாரம், சொந்த முயற்சி யில் முன்னுக்கு வரும் திறமைகள் அனைத்துமே பத்தாம் இடத்தைப் பொருத்து அமையும். அதற்கு ஆதார மாக 6-ஆமிடம் என்
"ஜனனீ ஜன்ம சௌக்கியானாம்
வுர்த்தனி குல சம்பதாம்
பதவீ புர்வ புண்யாணாம்
-க்யதே ஜென்ம பத்ரிகா'
என்னும் சுலோகத்தை எழுதிவிட்டு தான் ஒவ்வொரு ஜாதகமும் எழுதுவார்கள். ஒரு மனிதனின் வேலை, தொழில், பதவி, திருமணம், புத்திரபாக்கியம் போன்றவை அமைவது அவரவர்களது பூர்வ புண்ணியத்தைப் பொருத்தது.
ஒரு மனிதனின் ஜாதகத்தில் ஆறாமிடம் என்பது கடன், நோய், எதிரி, வம்பு போன்ற வற்றைக் குறிக்கும் இடமாகும். பத்தாமிடம் என்பதை ஜீவன ஸ்தானம், தொழில் ஸ்தானம், இராஜ்ஜிய ஸ்தானம் என்று அழைப்பார்கள்.
ஒருவருடைய பதவி, தொழில், வேலை, வியாபாரம், சொந்த முயற்சி யில் முன்னுக்கு வரும் திறமைகள் அனைத்துமே பத்தாம் இடத்தைப் பொருத்து அமையும். அதற்கு ஆதார மாக 6-ஆமிடம் என்பது ஒருவருடைய உடல்நிலை, மனநிலை, மனோபாவத்தின் அடிப்படையில் ஒருவருடைய பதவியை அமைத்துக் கொடுக்கிறது. இந்த 6-ஆமிடம், 10-ஆமிடம்தான் தொழில், வேலையை நிர்ணயிக்கிறது.
ஆறாமிடம் வலுவாக இருந்தால் தான் ஒருவருடைய மனதில் வலு விருக்கும். திறன், தெம்பிருக்கும். ஆக்கப் பூர்வமான சிந்தனைகள் இருக்கும். ஒருவருக்கு நல்ல வேலை, தொழில் அமைந் தாலும், மேற்கண்டவை இருந்தால்தான் முன்னுக்கு வரமுடியும். அப்படிப்பட்ட வாய்ப்புகள், சந்தர்ப்பங்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆறாமிடம் உதவுகிறது.
பத்தாமிடமான ஜீவனஸ்தானத் தில் எந்த கிரகம் வலுவாக உள்ளது- எந்த கிரகம் சேர்க்கை, பார்வை பெற்றிருக்கிறது- நடப்பு தசை கைகொடுக்குமா கொடுக்காதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவருக்கு எப்படிப்பட்ட தொழில் அமையும் என்பதை பத்தாமிடத்தைக் கொண்டு முடிவு செய்ய முடியும்.
இந்த நிலையில் ஒருவருக்கு ஆறாமிடம் வலுவாக இருந்து பத்தாமிடம் வலுவில்லை யென்றால், தொழில், வியாபாரம் செய்வதற்கு அனைத்துவிதமான திறமை, உழைப்பு, அறிவு, பணம் இருந்தும் அடுத்தவரிடம் கைகட்டி வேலை பார்ப்பவர்களாக இருப்பார்கள். அடிமைத் தொழிலே அமையும். சுயதொழில் அமையாது. சுயதொழில் செய்தாலும் நஷ்டமடையும். தொழில், வியாபாரம் செய்தாலும் கடன் அதிகமாக ஏற்படும். உடல் பாதிக்கப்பட்டு தொழில் செய்யமுடியாமல் போகலாம். தொழி-ல் எதிரி, வம்பு, வழக்கு உருவாகும்.
எனவே இந்த வகையினர் ஒருவரிடம் வேலைபார்ப்பதே நல்லது. வேலை பார்த்தாலும் இவர்களுக்கு லாபம், ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். மற்றவர்கள் இவர்களால் லாபம் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்தாமிடம் வலுவாக இருந்து ஆறாமிடம் வலுவாக இல்லையென்றால் ஜாதகரிடம் வியாபாரத் திறமை இருக்காது. ஆனால் ஒரு பெரிய நிறுவனத்தில் தலைவராக இருப்பார்கள். பிறரை வைத்து வேலை வாங்குவார்கள். இவருக்காக பலர் பணிபுரிவர். நல்ல திறமைசா-கள், தொழில் வல்லுனர்கள் அமைந்து இவருடைய தொழில் தரம் பெருமளவு வளர்ந்து ஜாதகர் கோடீஸ்வரராக மாறிவிடுவார்.
ஆறாமிடம், பத்தாமிடம் சமஅளவில் வலுவாக இருந்தாலும், அதற்குரிய தசாபுக்தி நடைமுறையில் வரவில்லையென்றால், ஜாதகருக்கு மிகப்பெரிய கெட்டிக்காரத்தனம்,
பெரிய ஆளாக வரக்கூடிய தகுதி, பிறரால் பாராட்டப்படும் நிலை இருந்தாலும், மேற்கண்ட எதுவும் நடைமுறையில் நடக்காது. கிடைக்காது.
ஆறாமிடம், பத்தாமிடம் இரண்டும் பலவீனமாக இருந்து, நடைமுறையில் யோக தசாபுக்தி வருகிறதென்றால், எந்தவிதத் திறமையோ அதிக உழைப்போ அறிவோ இல்லா மல், ஒரு குறிப்பிட்ட காலம்வரை அந்த துறைகளில் பெயர், பதவி, புகழ், அந்தஸ்து, வருமானம் அனைத்தையும் பெற்று சமுதாயத்தில் எல்லாராலும் பாராட்டும்படி இருப்பார்கள்.
இது யோக தசாபுக்தி நடைமுறையில் இருக்கும்வரை இருக்கும். அதே முடிந்து விட்டால் திடீரென்று ஒருநாள் மேற்கண்டவை யெல்லாம் மிகப்பெரிய சரிவுகள் ஏற்பட்டு விலாசம் தெரியாத அளவிற்கு தலைமறைவு வாழ்க்கை வாழும் நிலைக்குக்கூட தள்ளப்படு வார்கள். பிறரால் அவமானம், தலைகுனிவு ஏற்படும்.
செல்: 98403 69513