னித வாழ்க்கையில் நடை பெறும் நல்லவை- கெட்டவை அனைத் திற்கும் காரணம்- அவர்களின் ஜாத கத்திலிருக்கும் கிரக அமைப்புகள் தான். அவை சரியில்லாமல் இருந்தால், கெட்ட நிகழ்வுகள் நடக்கும். அந்த நிலையில் அவர்கள் வீட்டிலும், அலுவலகத்திலும் தவறான வண்ணத் தைப் பூசியிருந்தால் பாதிப்புகள் அதிகமாகும்.

Advertisment

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன் இருந்தால், அவர் தைரிய மானவராக- நிறைய சிந்திக்கக்கூடிய வராக இருப்பார். அந்த சூரியனுடன் புதன் இருந்தால், அவருக்கு புதாதித்ய யோகம் இருக்கும்.

அதனால், அவர் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதை நன்கு சிந்தித்துச் செய்வார். ஆனால், அவருக்கு நேரம் சரியில்லாமல் இருக்கும்போது, அவருக்கு ஜாதகத்தில் 6-ஆம் அதிபதியின் தசை நடந்தால், அதில் 8 அல்லது 2-ஆம் அதிபதியின் அந்தரம் நடக்கும்போது, அவர் தன் வீட்டில் பச்சை வண்ணத்தைப் பூசியிருந்தால் அவருக்கு காரியத் தடை உண்டாகும். எந்தக் காரியத் தைச் செய்தாலும் அவருக்கு வெற்றி கிடைக்காது. வடக்குச் சுவரில் சிவப்பு வண்ணத்தைப் பூசியிருந்தால் அவருடைய தொழிலே ஒழுங்காக நடக்காது. உதா ரணத்திற்கு- ஒரு தொழிற்சாலையின் பிரதான வாசல் வடக்கு திசையில் இருந்து, அந்த வாசலுக்கு சிவப்பு வண்ணம் பூசியிருந்தால், அங்கு தடைகள் உண்டாகிக் கொண்டே இருக்கும். சிறிய தொழில் செய்பவராக இருந் தால் அங்குவரும் வாடிக்கையாளர்கள் பொருட்களைப் பார்ப்பார்களே தவிர வாங்கமாட்டார்கள்.

ஒரு ஜாதகத்தில் செவ்வாயின் நிலை சரியில்லை யென்றால், செவ்வாய் 1, 4, 7, 8, 12-ல் இருந்து அதை பாவகிரகம் பார்த்தால் திருமணத்தடை உண்டாகும். அல்லது திருமணம் நடந்தபிறகு இவ்வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும். அவர் தன் வீட்டின் வடக்கு திசையில் சிவப்பு, பச்சை அல்லது மஞ்சள் வண்ணம் பூசியிருந்தால் அவருக்கு காரியங்களில் தடைகள் உண்டாகும்.

Advertisment

perumalபடுக்கையறையில் அடர்த்தியான பச்சை நிறம்- அதுவும் தெற்குப் பக்க சுவரில் பூசப்பட்டிருந்தால், அங்கிருக்கும் கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. சிலருக்கு விவாகரத்துவரை போய்விடும். தெற்கு திசை சுவரில் சிவப்பு வண்ணம் இருந்தால் அவர் பல பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும்.

உறவுகள் துண்டிக்கப்படும் நிலைமை ஏற்படும்.

படிக்கும் குழந்தைகளின் படுக்கையறையில் சிவப்பு வண்ணம் இருந்தால் அந்த குழந்தைகளுக்கு கோபம் அதிகமாக வரும். படுக்கையறை வடகிழக்கில் இருந்து அங்கு சிவப்பு வண்ணம் பூசப்பட்டிருந்தால் குழந்தைக்கு கோபம் நிறைய வரும். சரியாகப் படிப்பு வராது. அந்த அறையில் பச்சை வண்ணம் பூசப்பட்டிருந்தால் குழந்தைக்கு சீதளம் பிடிக்கும்.

ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் 6, 8, 12-ல் இருந்தால் அவருக்கு மனம் சம்பந்தப்பட்ட பிரச் சினைகள் ஏற்படும். நிறைய சிந்திப்பார். அவரின் படுக்கையறை வடமேற்கு திசையில் இருந்து- அதில் நீலம் அல்லது சிவப்பு வண்ணம் பூசப் பட்டிருந்தால் அவருக்கு தலைவலி ஏற்படும். சிவப்பு நிறம் இருந்தால் அதிகமாகக் கோபப் படுவார்.

Advertisment

ஜாதகத்தில் 4-க்குரிய கிரகம் நீசமாக அல்லது பலவீனமாக அல்லது அஸ்தமனமாக இருந்து, அவருடைய வீட்டின் வடமேற்கு திசையில் கருப்பு, பச்சை அல்லது சிவப்பு வண்ணம் பூசப்பட்டிருந்தால் அவருக்கு ஆதரவாக இருப்பவர்கள்கூட அவரைவிட்டு விலகிச் சென்றுவிடுவார்கள். பொருளாதார உதவிகள் துண்டிக்கப்பட்டுவிடும்.

ஒருவர் வீட்டின் மேற்குப் பகுதியில் மேற்கு திசையில் தலைவைத்துப் படுத்தால், அந்த படுக்கையறையில் சிவப்பு அல்லது நீல நிறம் இருந்தால் அவருக்கு சரியாகத் தூக்கம் வராது. மனஅழுத்தம் உண்டாகும். அதனால் தன் வேலைகளை அவரால் சரியாக முடிக்க முடியாது.

ஜாதகத்தில் புதன் சரியில் லாமலிருந்தால் அவர் அதிக மாக சிந்திப்பார். புதன் அஸ்த மனமாக இருந்தால் எப்போதும் பரபரப்புடன் காணப்படுவார். பொருட்களை எங்கு வைத் தோம் என்பதைக்கூட சில நேரங்களில் மறந்து விடுவார். அவருடைய வீட்டின் வடக்கு, வடக்கு மத்திய பகுதி அல்லது வடமேற்கில் அவர் படுத்தால், அங்கு சிவப்பு, ப்ரவுன், அடர்த்தியான பச்சை நிறம் இருந்தால் அவரால் சந்தோஷமாக இருக்க முடியாது.

ஒருவரின் ஜாதகத்தில் சனி சரியில்லாமலிருந்தாலும், நீசமாக லக்னத்தில் இருந்தாலும், 4, 6, 8, 12-ல் இருந்தாலும், அவருடைய வீட்டின் பிரதான வாசல் கிழக்கு திசையில் இருந்தாலும், அதற்கு சிவப்பு அல்லது நீலநிறம் ஆகியவற்றைப் பூசக்கூடாது. பச்சை நிறமும் இருக்கக்கூடாது.

பரிகாரங்கள்

வீட்டின் கிழக்கு திசையில் வெளிர்பச்சை நிறத்தைப் பூசலாம். வடக்கு திசை சுவரில் வெளிர் நீல வண்ணத்தைப் பூசலாம்.

வீட்டின் மத்தியப் பகுதியில் மஞ்சள் நிறத் தையும், தெற்கு, தென்மேற்கு திசையில் மஞ்சள் நிறத்தையும், தென்கிழக்கில் சிவப்பு நிறத்தையும் பூசலாம்.

மேற்கு, வடமேற்கு திசைகளுக்கு வெள்ளை நிறம் ஏற்றது.

மனநிம்மதியுடன் வாழவேண்டுமென்று நினைப்பவர்கள் வீட்டில் ஒரே வண்ணத் தைதான் பூச வேண்டும். வெள்ளை அல்லது சந்தன நிறம் பூசினால், அந்த வீட்டில் இருப்ப வர்கள் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ்வார்கள்.

செல்: 98401 11534