Advertisment

தீபாவளிக்கு எந்த நிறத்தில் புத்தாடை எடுக்கலாம்?

/idhalgal/balajothidam/what-color-can-you-wear-diwali

ருடத்திற்கு ஒருமுறை வரும் தீபாவளிக்கு அனைவரும் புத்தாடை, ஆபாரணங்கள், சிலர் வாகனங்கள் வாங்வோம். வரும் பண்டிகைக்கு ராசிப்படி என்ன வண்ணங்களில் வாங்கலாம் என பார்ப்போம்.

Advertisment

24-10-2022 அன்று தீபாவளிப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி மகிழவிருக்கிறோம். தீபாவளித் திருநாள் திங்கட்கிழமை அஸ்த நட்சத்திரத்தில் வருவது சிறப்பாகும். அஸ்தம் சந்திரனின் ஆதிக்கம்பெற்ற நட்சத்திரமாகும். எனவே, வ

ருடத்திற்கு ஒருமுறை வரும் தீபாவளிக்கு அனைவரும் புத்தாடை, ஆபாரணங்கள், சிலர் வாகனங்கள் வாங்வோம். வரும் பண்டிகைக்கு ராசிப்படி என்ன வண்ணங்களில் வாங்கலாம் என பார்ப்போம்.

Advertisment

24-10-2022 அன்று தீபாவளிப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி மகிழவிருக்கிறோம். தீபாவளித் திருநாள் திங்கட்கிழமை அஸ்த நட்சத்திரத்தில் வருவது சிறப்பாகும். அஸ்தம் சந்திரனின் ஆதிக்கம்பெற்ற நட்சத்திரமாகும். எனவே, வெள்ளை, வெளிர் நிறங்கள் கொண்ட ஆடையணிவது சிறப்பாகும். தீபாவளி நாளில் கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக உள்ளது. குரு, சனி ஆட்சிபெற்றுக் காணப்படுவதால் குடும்பத்தில் தனவரவு சிறப்பாகவே இருக்கும். சுக்கிரன், புதன் ஆட்சிபெற்றிருப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

இந்த தீபாவளித் திருநாளில் ஒவ்வொரு ராசியினரும் என்ன நிறத்தில் ஆடையணிந்தால் யோகம் தரும் என்பதைப் பார்ப்போம்.

செவ்வாயின் ஆதிக்கமான மேஷம், விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் வெண்மை, சிவப்பு, இளஞ் சிவப்பு நிறத்தில் உடைகளைத் தேர்வுசெய்து அணியலாம்.

Advertisment

dd

ரிஷபம், துலா ராசியினருக்கு ராசிநாதன் சுக்கிரனா வார். எனவே நீங்கள் வெள்ளை, ரோஸ், பால்போன்ற வெண்மை ஆகிய நிறங்களைத் தேர்வுசெய்து அணிவது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

புதனின் ஆதிக்கம்கொண்ட மிதுனம், கன்னி ராசியில் பிறந்தவர்கள் பச்சைநிறம் கொண்ட உடைகளைத் தேர்ந்து அணிவது யோகத்தை உண்டாக்கும். இளம்பச்சை, கரும்பச்சையும் யோகம் தரும். வெள்ளை, சிவப்பு கலந்த நிறமும் நன்மை தரும்.

கடக ராசியினரின் ராசிநாதன் சந்திரன்.

அவர் இந்நாளில் புதன் வீடாகிய கன்னியில் சஞ்சாரம் செய்கிறார். எனவே வெண்மை, பச்சை என இரண்டு நிறம் கலந்த உடைகளைத் தேர்ந் தெடுத்து அணியலாம். பால்போன்ற வெண்மைநிற உடைகளை அணிவதன்மூலம் மனதிற்கு மகிழ்ச்சி யும் சந்தோஷமும் ஏற்படும்.

சிம்ம ராசியினருக்கு ராசிநாதன் சூரியனாவார்.

எனவே நீங்கள் வெளிர்சிவப்பு, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சுபோன்ற நிறங்களில் உடைகளைத் தேர்வுசெய்து அணிவது சிறப்பாகும்.

குரு ஆதிக்கம் பெற்ற தனுசு, மீன ராசியினர் வெளிர்மஞ்சள் நிறத்திலும், பொன்னிறத்திலும் ஆடைகளைத் தேர்வுசெய்து அணிவது உத்தமம்.

மகரம், கும்ப ராசியினருக்கு ராசிநாதன் சனி ஆவார். நீலநிறத்தில் ஆடைகள் அணிவது உத்தமம்.

அடர் ஊதா நிறமும் சிறப்பான யோகத்தைக் கொடுக்கும்.

bala211022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe