ந்தியாவின் வானசாஸ்திர சித்தாந்தத்தில் ஆறுவிதமான ருதுக்கள் சொல்லப்பட்டுள்ளன. (ஒரு ருது கடந்து செல்ல இரண்டு மாதமாகும்). அவை முறையே வஸந்த ருது (சித்திரை, வைகாசி), கிரிஷ்ம ருது (ஆனி, ஆடி), வர்ஷ ருது (ஆவணி, புரட்டாசி), சரத் ருது (ஐப்பசி, கார்த் திகை), ஹேமந்த ருது (மார்கழி, தை), சிசிர ருது (மாசி, பங்குனி). இந்த ருதுக்களுக்கேற்ப பருவ நிலை மாறும்.

மேலும் வேத ஜோதிடரீதியாக ஒன்பது கிரகங்கள், 12 ராசி மண்டலங்கள், 28 நட்சத் திரங்கள் (அபிஜித் உட்பட), 108 பாதங்கள், 3,600 விநாடிகள், 60 நாழிகைகள் கொண்ட 24 மணிநேரம், 21,600 நாட்களைக்கொண்ட 60 வருடங்கள், 15 திதிகள், 27 யோகங்கள், 11 கரணங்கள் போன்றவையும் பருவநிலைகளைத் தீர்மானம் செய்ய உதவுகின்றன. வேத ஜோதிடத் தில் இன்றியமையாத ஒன்பது கிரகங்களின் சார்புடைய மேகக்கூட்டங்கள் முறையே தமோ மேகம், வாய மேகம், வருண மேகம், நீல மேகம், காள மேகம், துரோண மேகம், புஷ்கல மேகம், சங்கவர்த்த மேகம், ஆவர்த்த மேகம் ஆகியவையாகும். இவ்வகையான மேகக் கூட்டங்கள் 12 ராசிகளில் குறிப்பிட்ட நட்சத் திரத்தில் அமைவதைப் பொருத்தே மழையின் அலகுக் குறியீடுகள் "மரக்கால்'களாக பஞ்சாங் கங்களில் மேற்கோள் காட்டப்படுகின்றன. மழையின் அலகுக் குறியீடு ஒரு மரக்கால் என்பது 100 யோஜனை தூரம் நீளம் மற்றும் அகலம்கொண்ட அளவாகும். மேலும் குறுணி, பதக்கு, முக்குறுணி, தூணி (அ) மரக்கால் போன்ற குறியீடுகள் மழை யைக் குறிப்பிடும் பழமையான அளவீடுகள் ஆகும். தற்கால விஞ்ஞானரீதியாக நீரின் அலகுக் குறியீடுலிட்டர், காலன் மற்றும் அணைகளில் தேக்கிவைக்கும் அளவுக்கதிகமான நீர் டீ.எம்.சி என குறிப்பிடப்படுகிறது. மழையின் அளவை மில்லிலிமீட்டர் என்னும் அலகால் குறிக்கின்றனர்.

cc

இந்தியன் மெட்ரோலாஜிக்கல் டிப்பார்ட் மென்ட் (ஐ.எம்.டி) என்பது, இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற தட்பவெப்ப நிலைகளைக் கண்டறிய ஏற்படுத்தப்பட்ட ஒரு தனித்துறையாகும். நம் முன்னோர்கள் 159 நாட்களுக்கான (ஜுன் 1 முதல் நவம்பர் 29 வரை) வானியல் குறிப்புகளை "ஹரித்ர சக்ர' என்னும் பெயரில் தொகுத்தளித்துள்ளனர். இவ்விதிகள் 5,000 ஆண்டுகள் பழமையானவை. சூரியன் மிதுன ராசியிலிலிருந்து தனுசு ராசிவரை (ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை) சஞ்சாரம் செய்யும் காலம் ஹரித்ர சக்கரத்திற்குரிய காலமாகும். தென்மேற்குப் பருவக்காற்று (ஜுன் 1 முதல் ஆகஸ்ட் வரை), வடகிழக்குப் பருவக் காற்று (அக்டோபர் 1 முதல் டிசம்பர் மத்தி வரை) ஆகிய இரு பருவக்காற்றால்தான் இந்தியாவில் மழை பெய்கிறது. சில பருவ காலங்களில் மழை பொய்த்து விடுவதும் உண்டு. இந்திய துணைக் கண்டத்திற்கு வருடத்திற்கு சராசரியாக 40 சென்டிமீட்டர்முதல் 50 சென்டிமீட்டர் வரை யிலான மழை இன்றியமையாத தேவையாகும்.

சித்தர் இடைக்காடரின் பருவ வழிகாட்டி பதினெட்டுச் சித்தர்களில் போகரின் சீடரான இடைக்காடர் தன் மெய்யறிவுமூலம் மருத்து வம் மற்றும் ஜோதிடம் போன்ற பல விஷயங் களை விவரித்துள்ளார். அவற்றுள் ஜோதிடத் திற்கான 60 வெண்பாக்கள் முறையே பிரபவ முதல் அட்சய வரை 60 தமிழ் வருடத்திற்கு ஒரு வெண்பா வீதம் பிரத்யேகமாக இயற்றி யுள்ளார். ஒவ்வொரு சித்திரை மாதம் முதல் நாளை அவ்வருடத்திற்குப் பொருத்திப் பார்ப்போமேயானால், அப்புதிய வருடத்தில் முறையே பயிர்த்தொழில், மழையளவு, உஷ்ணம், தட்பவெப்பநிலை, கால்நடைகள், குடிமக்கள், மிருகங்கள், யானைகள், குதிரைகள், பாலைவன மிருகங்கள் மற்றும் சர்ப்பங்கள் (நகர்வன) போன்றவற்றின் நன்மை- தீமைகள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

சனியின் விருச்சிகம், மேஷம், சிம்மம் பருவநிலை மாற்றம் மற்றும் ரிஷப ராசியில் வறட்சி சனி பகவானின் விருச்சிக ராசிப் பிரவேசத் தில் தவிர்க்கமுடியாத பருவநிலை மாற்றங்கள் ஏற்படும். கடந்த 16 டிசம்பர் 2014 முதல் 19 டிசம்பர் 2017 வரை சனி பகவானின் விருச்சிக ராசிப் பிரவேசத்தில், பல்வேறு தட்பவெப்ப நிலைகள், மிகவும் வெப்பமான "எல் நினோ' போன்ற பருவநிலை மாற்றம் ஏற்பட்டது. பூமியின் மேற்பகுதியில் அதிக வெப்பம் ஏற்பட்டு தாவரங்கள், ஜீவராசிகள் அழிவுக் குள்ளாகின. அன்டார்டிகா போன்ற குளிர் துருவப் பிரதேசத்தில் உறைபனி அதிகமாக உருகி பூமி வெப்பமயமாதல் அதிகரித்தது. பனிப் பிரதேசத்தில் ஏற்படும் "அவேலன்ஸ்' என்ற பெரும் மேகமூட்ட உராய்வுகளால் கட்டுக்கடங்காத பெருமழை பெய்து பனிப் பாறைச் சரிவுகளால் பெருத்த சேதம் ஏற்பட்டது.

இத்தகைய மழை ஒரே நாளில் 40 சென்டி மீட்டர் அளவில் பெய்து, வெள்ளப்பெருக்கில் தேசிய அளவில் பேரழிவு ஏற்படுத்தியது. இந்தியாவில் காஷ்மீரிலும் மற்றும் ஜார்க் கண்ட் கேதார்நாத்திலும், சனி பகவான் விருச் சிக ராசி (2014 -2017) வாசத்தால் ஏற்பட்ட அழிவுகள் நாம் நேரில் கண்ட உண்மைச் சம்பவங்களாகும். சனி பகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கும்போதும் தட்பவெப்ப நிலை மாற்றம் காணப்படும். மேஷ ராசியின் விஜயம் 2027- 2029-ல் காணலாம். சனி பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும்போதும் தட்பவெப்ப நிலை மாற்றம் காணப்படும். சிம்ம ராசியின் விஜயம் 2036- 2039-ல் காணலாம்.

சனி பகவான் ரிஷப ராசியைக் கடக்கும் போது 'ய' வடிவ குறுகிய ரோகிணி நட்சத் திரத்தைக் கடக்கும் காலம் தண்ணீர்த் தட்டுப் பாடு ஏற்பட்டு நாட்டில் பஞ்சம் ஏற்பட வாய்ப் புள்ளதாக ஜோதிட சாஸ்திரம் உறுதிப்படுத்து கிறது. துவாபர யுகமான ராமாயண காலத்தில், வானசாஸ்திர விதியறிந்த குலகுரு வசிஷ்டர் ஞான திருஷ்டியால் முன்கூட்டியே இத்தகைய தகவலை அறிந்து, தன் அரசரான தசரத சக்கரவர்த்திக்கு அறிவுறுத்தினார். தசரதன் சனி பகவானை சந்தித்து தன் நாட்டில் வரப்போகும் பஞ்சத்தைத் தடுத்து மக்கள் நோயின்றி வாழ அருள்புரியமாறு வேண்டினார். தசரத சக்கரவர்த்தி சனி பகவானை சந்தித்த வேளையில் துதித்துக் கூறிய மந்திரங்களை தற்காலத்தில் சனியின் நிவாரணப் பரிகார- பிராயச்சித்த மந்திரங்களாகக் கருதி மக்கள் தனித்த சனி பகவான் சந்நிதியிலும், நவகிரகங்கள் அமைந்த ஆலயங்களிலும் சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றியும், மனமுருகித் துதித்தும் பாராயணம் செய்துவருகின்றனர்.

முழு சூரிய கிரகணம்

சூரிய கிரகணமானது சூரியன் மற்றும் சந்திரன் ஒரே ராசியில் சந்திக்கும் தருணத்தில் அமாவாசையில்தான் நிகழும். சூரியன் (வலமாக) ஒரு நட்சத்திரத்தில் 1, 2, 3 மற்றும் 4-ஆம் பாதம் கடந்துவரும்போது, நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது (இடமாக) 4, 3, 2 மற்றும் 1-ஆம் பாதம் கடந்துவரும்போது முழு கிரகணம் பலமணி நேரம் ஏற்படும்.

சூரியன், நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது நட்சத்திரத்தின் பிற பாதங்களைக் கடந்து வரும்போது முழு கிரகணம் ஏற்படுவதில்லை. சூரியன் மற்றும் சந்திரன் நேராக வருவது அமாவாசை காலகட்டத்தில்தான். சந்திர அனுஷ்டானப்படி மாசாந்தம் எனப்படும். மாசாந்தம் தவிர பிற திதிகளில் சூரிய கிரகணம் ஏற்படாது. வானசாஸ்திர கோட் பாட்டில் ஒரு வருடத்தில் சூரியன், நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவைக் கடந்துவரும்போது கிரகணம் ஏற்படும்.

ஆனால் தனியாக சந்திரன், நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவைக் கடந்துவரும்போது கிரகணம் ஏற்படுவதில்லை.

பொதுவாக ஒரு வருடத்தில் நான்கு கிரகணங்கள் வானில் தோன்றும். அவற்றில் இரு சூரிய கிரகணம், இரு சந்திர கிரகணம் அமையும். சூரிய அயனாம்ச அடிப்படையில் இக்கிரகணங்கள் வெவ்வேறு நாட்டில் அமையும்போது, கிரகணத்தின் கால அளவுகள் ஏற்றத்தாழ்வுகளுடன் அமையும். இத்தகைய நிலையில் மேற்கூறிய கிரகண கோட்பாட்டின்படி ஒரு நாட்டில் முழு சூரிய கிரகணம் பல மணிநேரம் அமையுமானால், அந்நாட்டின் பருவநிலை அவ்வருடத்தில் சரிவர அமையும் என்பதில் ஐயமில்லை. இந்திய துணைக்கண்டத்தில் கடந்த மூன்று வருடத்திற்குமேல் முழு சூரிய கிரகணம் ஏற்படவில்லையாதலால், காலத்திற்கேற்ற பருவநிலை அமையவில்லை. மாறாக பல்வேறு முழு சந்திர கிரகணங்களே கடந்த வருடங்களில் இந்தியாவில் ஏற்பட்டன.

இந்தியாவில் 26-12-2019 அன்று பல மணிநேரம் கொண்ட முழு சூரிய கிரகணம் ஏற்படும் என அசல் எண். 28 வாக்கியப் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக அடுத்த சில மாதங்களில் நம் இந்திய தேசத்தில் தட்பவெப்பநிலை சீராக அமையும் வாய்ப்புள்ளது. தீங்கான பருவநிலை கொண்ட விபரீத மாற்றங்கள் எதுவும் ஏற்படாது.

கிரகண பலன்கள்

வருண மண்டல நட்சத்திரங்கள்- பூராடம், ஆயில்யம், திருவாதிரை, மூலம், சதயம், உத்திராடம், ரேவதி; அக்னி மண்டல நட்சத்திரங்கள்- பரணி, கார்த்திகை, மகம், பூசம், விசாகம், பூரட்டாதி; பூ மண்டல நட்சத்திரங்கள்- ரோகிணி, அனுஷம், அவிட்டம், கேட்டை, திருவோணம், உத்திரட்டாதி; வாயு மண்டல நட்சத்திரங்கள்- அஸ்வினி, மிருகசீரிஷம், புனர் பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி ஆகும். வருண மண்டல நட்சத்திரத்தில் கிரகணம் ஏற்பட்டால் உத்தமம். பூ மண்டல நட்சத்திரத்தில் ஏற்பட்டால் மத்திமம்; அக்னி மண்டல நட்சத்திரத்தில் ஏற்பட்டால் அதமம்; வாயு மண்டல நட்சத்திரத்தில் கிரகணம் ஏற்பட்டால் துர்பலன்கள் மற்றும் யுத்தம் ஏற்படும்.

மேகக் கூட்டங்களால் மழையின் அளவு வேத ஜோதிடத்தில் இன்றியமையாத ஒன்பது கிரகங்களின் சார்புடைய மேகக் கூட்டங்கள் (தமோ மேகம், வாயு மேகம், வருண மேகம், நீல மேகம், காள மேகம், துரோண மேகம், புஷ்கல மேகம், சங்கவர்த்த மேகம், ஆவர்த்த மேகம்) 12 ராசி வீடுகளில் அமையும் நிலையைப் பொருத்து தக்க திசைகளில் மேகம் தோன்றி, குளிர் காற்றுடன் சங்கமித்து பூமியில் மழை பெய்கிறது. நீராவியின் பரிணாமமே மேகம் எனப்படும்.

வானில் தமோ மேகம் தோன்றினால் வெகு மழை பெய்யும். புஷ்கல மேகம் தோன்றினால் வெகு மழை பெய்து பிரளயம் சம்பவிக்கும். துரோண மேகம்- வெகு மழை பெய்து வெள்ளம் ஏற்படும். வாயுமேகம்- வெகுமழை பெய்யும்; மலை சார்ந்த இடத்திலும் பயிர்கள் விளையும். நீல மேகம்- ஓரிடத்தில் வெகு மழை; மற்றோரிடத்தில் அற்ப மழை. வாயு மேகம்- குறைந்த மழை- பஞ்சத்தை ஏற்படுத்தும். சங்கவர்த்த மேகம்- பெரும் காற்று; அற்ப மழை; ஆவர்த்த மேகம் தோன்றினால் புல் மழை பெய்யும்.

ஒவ்வொரு புது வருடமும் பிறந்து, பின் அவ்வருடம் முடியும்வரை பொதுவாகவே பூமியில் நான்கு மடங்கு மழையும், காட்டிலும் மலையிலும் ஆறு மடங்கு மழையும், கடலிலில் பத்து மடங்கு மழையும் பெய்யும்.

ஆடிக்குறியீட்டால் மழை தோன்றல் ஓராண்டுக்குப் பெய்யக்கூடிய மழையின் அளவை ஆடிமாதம் பிறக்கும் கிழமையைக் கொண்டு அறியலாம். இதை "ஆடிக்குறியீடு' என்பர்.

ஆடிமாதம் ஞாயிற்றுக்கிழமையில் பிறக்குமே யானால் குறைந்த மழை பெய்யும். திங்கட் கிழமை- வெள்ளம் உண்டாகும். செவ்வாய்க் கிழமை- மழை உண்டாகாது. புதன்கிழமை- பெரும் காற்று உண்டாகி மழை தடைப்படும். வியாழக்கிழமை- நல்ல மழை பெய்து விளைச்சல். வெள்ளிக்கிழமை- பெருமழை பெய்து வெள்ளம். சனிக்கிழமை- மழையின்றி பயிர்த்தொழில் நலிவடையும்.

ஆனி மற்றும் ஆடி மாதங்களில் கிழக்கே வானவில் தோன்றினால் அவ்வருடம் பஞ்சம் உண்டாகும்.

செல்: 98401 96422