Advertisment

திடீர் மயக்கம் வர என்ன காரணம்?

/idhalgal/balajothidam/what-causes-sudden-fainting

ஜோதிடம் என்பது அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது.

ஜோதிடத்தைக் கொண்டு ஒரு தனி மனிதனுடைய உடல் ஆரோக்கியத்தை மிகத்தெளிவாக அறிந்துகொள்ளலாம். மனிதனின் தலைப் பகுதியைப் பற்றி அறிந்துகொள்ள அந்த ஜாதகரின் ஜென்ம லக்னம் என்பது மிகவும் முக்கிய பங்குவைக்கிறது. ஜென்ம லக்னம் பலமாக இருந்தால் அந்த ஜாதகரின் முகத்தோற்றம் சிறப்பாக இருக்கும். தலைப்பகுதியில் நல்ல ஆரோக்கியம் இருக்கும்.

Advertisment

லக்ன பாவத்தில் சுபகிரகங்கள் இருப்பது, சுபகிரகங்கள் லக்ன பாவத்தைப் பார்ப்பது ஜாதகரின் முகத்தோற்றத்திற்கும், தலை பாகத்துக்கும் அனுகூலப் பலனைத் தரும். ஜாதகத்தில் லக்ன பாவத்தில் பாவகிரங்கள் இருந்தாலும், லக்னத்தை பாவ கிரகங்கள் பார்த்தாலும் அந்த ஜாதகரின் முகத்தோற்றரீதியாக பாதிப்புகள், சனி பார்வை ஜென்ம லக்னத்திற

ஜோதிடம் என்பது அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது.

ஜோதிடத்தைக் கொண்டு ஒரு தனி மனிதனுடைய உடல் ஆரோக்கியத்தை மிகத்தெளிவாக அறிந்துகொள்ளலாம். மனிதனின் தலைப் பகுதியைப் பற்றி அறிந்துகொள்ள அந்த ஜாதகரின் ஜென்ம லக்னம் என்பது மிகவும் முக்கிய பங்குவைக்கிறது. ஜென்ம லக்னம் பலமாக இருந்தால் அந்த ஜாதகரின் முகத்தோற்றம் சிறப்பாக இருக்கும். தலைப்பகுதியில் நல்ல ஆரோக்கியம் இருக்கும்.

Advertisment

லக்ன பாவத்தில் சுபகிரகங்கள் இருப்பது, சுபகிரகங்கள் லக்ன பாவத்தைப் பார்ப்பது ஜாதகரின் முகத்தோற்றத்திற்கும், தலை பாகத்துக்கும் அனுகூலப் பலனைத் தரும். ஜாதகத்தில் லக்ன பாவத்தில் பாவகிரங்கள் இருந்தாலும், லக்னத்தை பாவ கிரகங்கள் பார்த்தாலும் அந்த ஜாதகரின் முகத்தோற்றரீதியாக பாதிப்புகள், சனி பார்வை ஜென்ம லக்னத்திற்கு இருந்தால் தலை பாகத்தில் ஏதாவது குறைபாடு ஏற்படக்கூட வாய்ப்புண்டு. லக்ன பாவத்தில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் இருப்பது, லக்னாதிபதி

ss

ராகு- கேது சேர்க்கையுடன் மிக நெருக்கமாக இருப்பது, லக்னாதிபதி நீசம் பெறுவது- லக்னாதிபதி வக்ரம் பெறுவது- குறிப்பாக ஒருவருக்கு தலைரீதியாக சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பை உண்டாக்கும்.

நவகிரகங்களில் புதன் நரம்பு மண்டலத்துக்குக் காரகன் ஆவார். எந்தவொரு ஜாதகருக்கு லக்னாதி பதியுடன் புதன் பலவீனமாக இருந்து, பாவிகள் சேர்க்கை இருந்தாலும், பாவிகள் பார்வையுடன் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு குறிப்பிட்ட தசை, புக்திக் காலத்தில் தலை பாகத்தில் ரத்த ஓட்டரீதியாக பாதிப்புகள் ஏற்படும். உடலில் கட்டிகள் ஏற்படுவதற்கு சந்திரன் காரகன் ஆவார். ஒரு ஜாதகத்தில் லக்ன பாவத்தில் சந்திரன் பலவீனமாக இருந்தாலும், லக்னாதி பதியுடன் சந்திரன் பலவீனமாக இருந்தாலும் இதன்காரணமாக தலையில் நீர் சேர்ந்து தலைவலி,

தலையில் கட்டி வரக்கூடிய அமைப்புகள், அதன் மூலமாக தலைவலி ஏற்படக்கூடிய அனுகூலமற்ற நிலை உண்டாகும்.

அடுத்து குறிப்பாக சந்திரன்- சனி சேர்க்கைப்பெற்று சுபகிரக சேர்க்கையின்றி சந்திரன்- சனி பலவீனமாக இருந்தாலும், சந்திரன்- புதனுடன் இணைந்து பலவீனமாக இருந்தாலும் மனக்கவலை, அச்சம், பய உணர்வு, எதையாவது நினைத்து தன்னைத்தானே குழப்பிக்கொள்ளக்கூடிய நிலை, அதன்காரணமாக மன உளைச்சல்கள், தலைவலி, நிம்மதிக் குறைவுகள் ஏற்படும்.

லக்னாதிபதியுடன் சந்திரன் 6, 8, 12-ல் பாவிகளுடன் சேர்க்கைப் பெற்றால் தலைவலி, தலையில் நீர் சேர்தல், சளி சம்பந்தப்பட்ட தொந்தரவுகள்- இதன் காரணமாகத் தலைவலி, தூக்கமின்மை உண்டாகும். லக்னாதிபதியும் புதனும் ஒரு ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால் அந்த ஜாதகருக்கு நரம்புத் தளர்ச்சி, கால்- கை வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.

புதன் ஒரு ஜாதகத்தில் செவ்வாயுடன் இணைந்து பலவீனமாக 6, 8, 12-ல் இருந்தால் அதிக அலைச்சல், முன்கோபத்தால் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நிலை, எரிச்சல், அதன்காரணமாக உடல் அசதி, மூளையில் கோளாறு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடிய நிலை உண்டாகும்.

லக்னாதிபதியும் சனியும் பலவீனமாக ஜென்ம லக்னத் திற்கு 6, 8, 12-ல் இருந்தால் தலையில் ஏதாவது பாதிப்பு ஏற்படக்கூடிய அனுகூலமற்ற நிலை உண்டாகும். லக்னாதிபதியுடன் செவ்வாய் பலவீனமாக இருந்தால் தலைப்பகுதியில் ரத்த ஓட்டரீதியாக பாதிப்புகளும், இதன்காரணமாக மூளைக்குச் செல்லக்கூடிய ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு தலைவலி, மயக்கம் போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு.

ஜாதகத்தில் புதன் பலவீனமாக இருந்து, அத்துடன் செவ்வாய், சந்திரன் போன்ற கிரகங்கள் பலவீனமாக இருந்தால் அந்தக் கிரகங்களுடைய தசை, புக்திக் காலத்தில் ஜாதகர் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. புதன் பலவீனமாக இருந்தால் நரம்புத் தளர்ச்சி, திடீரென்று மயக்கம் வரக்கூடிய அமைப்புகள், மூளைக்குச் செல்லக்கூடிய நரம்புகளில் பிரச்சினை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதன் பலவீனமாக இருந்தால் அதனுடைய தசை, புக்தி நடைபெறுகின்றபொழுது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, புதனுக்குப் பரிகாரமாக மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, எதிலும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது, வேலைப்பளுவை சற்று குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது.

bala300824
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe