ஒருவருக்கு பக்கவாதநோய் வந்தால் அவரின் உடலின் ஒரு பகுதி செயல்படாமல் போய்விடும்.
மருத்துவரீதியாக அதற்குக் காரணங்கள் இருக் கின்றன. மூளையிலிருக்கும் இரத்தக் குழாய்கள் கொழுப் பால் அடைக்கப்படும்போது உடலின் ஒரு பகுதி செயல்படாத சூழ்நிலை உண்டாகும்.
ஜோதிடரீதியாகவும் அதற்குக் காரணங்கள் உள்ளன.
ஒருவர் தன் உணவில் அதிக கொழுப்புச் சத்தையும் உப்பையும் சேர்த்தால், அவருக்கு கோபம் அதிகமாக வரும். தசாகாலங்களும் சரியில்லாமல் போகும் போது பக்கவாத நோய் வரும்.
ஒருவர் ஜாதகத்தில் 6-ஆம் பாவாதிபதி பாவ கிரகத்துடன் இருந்து, அதை இன்னொரு பாவகிரகம் பார்த்தால் அவருக்கு ரத்தக் கொதிப்பு உண்டாகும். அதனால் பக்கவாதம் வரும். லக்னத்தில் சூரியன், 6-ல் சனி, 8-ல் செவ்வாய் இருந்தால் அவருக
ஒருவருக்கு பக்கவாதநோய் வந்தால் அவரின் உடலின் ஒரு பகுதி செயல்படாமல் போய்விடும்.
மருத்துவரீதியாக அதற்குக் காரணங்கள் இருக் கின்றன. மூளையிலிருக்கும் இரத்தக் குழாய்கள் கொழுப் பால் அடைக்கப்படும்போது உடலின் ஒரு பகுதி செயல்படாத சூழ்நிலை உண்டாகும்.
ஜோதிடரீதியாகவும் அதற்குக் காரணங்கள் உள்ளன.
ஒருவர் தன் உணவில் அதிக கொழுப்புச் சத்தையும் உப்பையும் சேர்த்தால், அவருக்கு கோபம் அதிகமாக வரும். தசாகாலங்களும் சரியில்லாமல் போகும் போது பக்கவாத நோய் வரும்.
ஒருவர் ஜாதகத்தில் 6-ஆம் பாவாதிபதி பாவ கிரகத்துடன் இருந்து, அதை இன்னொரு பாவகிரகம் பார்த்தால் அவருக்கு ரத்தக் கொதிப்பு உண்டாகும். அதனால் பக்கவாதம் வரும். லக்னத்தில் சூரியன், 6-ல் சனி, 8-ல் செவ்வாய் இருந்தால் அவருக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். உரிய நேரத்தில் உணவுண்ண மாட்டார்.
அதனால் அவருக்கு பக்கவாதம் உண்டாக வாய்ப்பிருக்கிறது.
ராகு, செவ்வாய், சனி லக்னம் அல்லது 4, 7, 8-ல் இருந்தால், அவருக்கு உணவுக் கட்டுப்பாடு இருக்காது. எண்ணெய் அதிகமாக இருக்கும் உணவை விரும்பிச் சாப்பிடுவார். அதனால் பக்கவாதம் வர வாய்ப்புள்ளது.
சந்திரன் பலவீனமாக அல்லது 6, 8, 12-ல் இருந்தால் அவருக்கு ரத்தக் கொதிப்பு இருக்கும். மாரகாதிபதி தசை நடந்தால் பக்கவாத நோய்வர வாய்ப்பிருக்கிறது.
லக்னத்தில் சூரியன், 2-ஆம் பாவத்தில் செவ்வாய், 6-ல் சனி இருந்தால், அவர் கடுமையாக உழைக்க வேண்டிய திருக்கும். சரியான நேரத்தில் உணவுண்ண மாட்டார். அதனால் அவருக்கு பித்தம் உண்டாகும்.
அப்போது மாரகாதிபதி தசையோ சந்திர தசையோ நடந்தால், பக்கவாத நோய் வரலாம்.
ராகு, சனி 8-ல் இருந்து சந்திரன் 6 அல்லது 12-ல் இருந்தால், சந்திர தசை சரியில்லாமல் போகும்போது அவருக்கு பக்கவாதம் வரலாம்.
ஒரு ஜாதகத்தில் 8-ஆவது பாவத்தில் சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன் இருந்து, அவருக்கு வயது 60-க்குமேல் இருந்தால், மாரகாதிபதியின் தசை அல்லது ரோகாதிபதியின் தசை நடந்தால் பக்கவாத நோய் வரலாம்.
ஒருவர் வாழும் வீட்டில் நீர்த் தொட்டி அல்லது கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு தென்கிழக்கில் அல்லது தெற்கு மத்தியப் பகுதியில் இருந்தால் அவருக்கு பக்கவாத நோய் வர வாய்ப்புண்டு.
வீட்டின் மேற்கூரை மேற்குப் பக்கம் சாய்ந் திருந்தால் அங்கு வாழ்பவருக்கு பக்கவாதம் வரலாம்.
சாளரத்திற்கு வெளியே இருக்கும் மேற்கூரை மேற்கு அல்லது தெற்கு திசையை நோக்கி சாய்ந்திருந்தால், அங்கிருப்பவருக்கு பக்கவாதம் வரலாம்.
வீட்டின் சமையலறையின் மேடைக்குக்கீழ் நீர் பிடித்துவைத்தால், அந்த வீட்டில் இருப்பவருக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகும். பக்கவாதம் வரலாம்.
வீட்டின் பிரதான வாசல் தெற்கு திசையில் இருந்து, தெற்கு திசை அதிகமாக காலியாக இருந்து, தென்மேற்கு திசையில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்தால், அங்கிருப்பவருக்கு பக்கவாத நோய்வர வாய்ப்பிருக்கிறது.
வீட்டின் படுக்கையறை வடமேற்கில் இருந்து, அதில் காற்றுவர வழியில்லாமலிலிருந்து, அந்த அறைக்கு பச்சை வண்ணம் இருந்தால், அங்கிருப்பவருக்கு பக்கவாத நோய்வர வாய்ப்புள்ளது.
பரிகாரங்கள்
பக்கவாதம் வராமல் இருப்பதற்கு...
லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியலாம்.
வீட்டில் பச்சை, நீல வண்ணங்களைத் தவிர்க்கவேண்டும்.
படுக்கையறையின் தென்மேற்கு திசையில் முகம் பார்க்கும் கண்ணாடி, கடிகாரம் இருக்கக்கூடாது.
சமையல் மேடைக்குக்கீழே நீர்பிடித்து வைக்கக்கூடாது.
தினமும் சிவனுக்கு பால், நீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது நல்ல பரிகாரம்.
சனிக்கிழமை ஆலமரத்திற்குக் கீழே தீபமேற்ற வேண்டும்.
பக்கவாதம் குணமாவதற்கு...
மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தைக் கூறவேண்டும்.
கிழக்கில் தலைவைத்துப் படுப்பது நன்று.
கருப்புநிற ஆடையைத் தவிர்க்கவும்.
கடுகெண்ணெய்யைத் தேய்த்துக் குளிக்கவேண்டும்.
சனிக்கிழமை இரும்புப் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதை ஏழுமுறை சுற்றிவிட்டு, அதை ஏழைக்கு தானமளிக்க வேண்டும். அல்லது கோவிலுக்குத் தந்துவிடலாம்.
செல்: 98401 11534