காலையிலிருந்து கடுமையாக உழைக்கும் மனிதருக்கு சரியாகத் தூக்கம் வரவில்லையென்றால் மனநோய் வந்துவிடும். அதன்காரணமாக சில உடல் நோய்களும் வரலாம். இரவில் தூக்கமில்லாததால் மறுநாள் முழுவதும் சோர்வுடன் காட்சியளிப்பார். யாருடனும் சரியாகப் பழகமாட்டார். எப்போதும் ஏதோ சிந்தனையில் இருப்பதைப்போல காணப்படுவார். இவ்வாறு தூக்க மில்லாமல் போவதற்குக் காரணம்- அவருடைய ஜாதகத் திலிலிருக்கும் 12-ஆம் பாவமும், 12-ஆம் பாவாதிபதியும், அதைப் பார்க்கும் கிரகங்களும், சந்திரனின் நிலைமையுமே.
ஒரு ஜாதகத்தில் 12-ஆம் பாவாதிபதி 12-ல் அஸ்தமனமாக இருந்து, அந்த கிரகத்தை வேறொரு பாவகிரகம் பார்த்தால் அவருக்கு சரியாகத் தூக்கம் வராது.
லக்னாதிபதி 12-ல் இருந்தால், ஜாதகர் எப்போதும் சிந்தனை செய்துகொண்டேயிருப்பார். 12-ல் செவ்வாய், சனி சேர்ந்திருந்தால் அவருக்கு சரியான நேரத்தில் தூக்கம் வராது. அவர் வெளியே யாருடனாவது தகராறு செய்துவிட்டு வருவார். அந்த வெறுப்பில் தூக்கம் வராது. அவருக்கு ஏழரைச்சனி அல்லது அஷ்டமச்சனி நடந்தால் தூக்கம் வராமல் சிரமப்படுவார்.
சந்திரன் லக்னாதிபதியாகி அது 12-ல் இருந்தால் அவர் ஏதாவது சிந்தனையில் இருப்பார். அதனால் தூக்கம் வராது. அந்த சந்திரனை குரு பார்த்தால் அவர் பிறரைக் குறைகூறிக்கொண்டே நன்கு உறங்குவார்.
சந்திரன் லக்னம் அல்லது 5 அல்லது 9-ல் இருந்து, அதை சுபகிரகம் பார்த்தால், அவர் நன்றாகத் தூங்குவார். 12-ல் கேது, சனி அல்லது செவ்வாய், சுக்கிரன், ராகு இருந்தால் சரியாகத் தூக்கம் வராது.
ஒரு ஜாதகத்தில் 6-ஆம் பாவத்தில் சனி இருந்தால், அது 12-ஆவது பாவத்தைப் பார்க்கும். இவ்வாறு உள்ள வருக்கு சரியாகத் தூக்கம் வராது.
சந்திரன் 11-ல் பலவீனமாக இருந்தால் ஜாதகர் அதிகமாக சிந்திப்பார். வயிற்றில் பிரச் சினை இருக்கும். அதனால் சரியாகத் தூக்கம் வராது.
லக்னத்தில் ராகுவுடன் சூரியன் இருந்து, சந்திரன் 3, 6, 8-ல் இருந்தால் சரியாகத் தூக்கம் வராது.
மாரகாதிபதி தசை நடக்கும் போது, அந்த மாரகாதிபதி கிரகம் கோட்சாரத்தில் 6, 8, 12-ல் இருக்கும்போது அவருக்கு சரியாகத் தூக்கம் வராது.
ஒருவர் வாழும் வீட்டில் வடமேற்கு திசையிலிலிருக்கும் அறையில், தலையை மேற்கு திசையில் வைத்துப்படுத்தால் அவருக்கு சரியாகத் தூக்கம் வராது. படுக்கையறையின் வாசல் தென்கிழக்கில் இருந் தாலும் தூக்கம் சரியாக வராது.
ஒரு வீட்டின் பிரதான வாசல் தென்மேற்கு திசையில் இருந்து, படுக்கையறை வடகிழக்கில் இருந்தாலும்; ஒரு வீட்டிற்கு வடமேற்கு வாசல் இருந்து, தென்கிழக்கு திசையில் படுக்கையறை இருந்தாலும் தூக்கம் சரியாக வராது.
படுக்கையறையின் வாசல் வடமேற்கு திசையில் இருந்தால், அங்கு படுப்பவர் மனநோயால் பாதிக்கப்படுவார். அதனால் சரியாகத் தூக்கம் வராது.
ஒரு வீட்டின் தென்கிழக்கு திசையில் தேவையற்ற பொருட்கள் சேர்த்துவைக் கப்பட்டிருந்தால் அங்கிருப்பவருக்கு சரியாக பணவரவு இருக்காது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காது. அதனால் தேவையற்ற சிந்தனைகள் தோன்றி, அதன்காரணமாக சரியாகத் தூக்கம் வராது.
ஒரு வீட்டிற்கு வடமேற்கு திசையில் கழிவறை, குப்பைத் தொட்டி அல்லது தேவையற்ற குப்பைகளைச் சேர்த்துவைத் திருந்தால் அவருக்கு வெளியே பண உதவி கிடைக்காது. வங்கிகள் உதவ மறுத்துவிடும். அதன்காரணமாக அவருக்கு சரியாகத் தூக்கம் வராது.
பரிகாரங்கள்
தெற்கு அல்லது கிழக்கு திசையில் தலை வைத்துப்படுக்க வேண்டும். படுக்கையறையில் முகம்பார்க்கும் கண்ணாடி வடமேற்கில் அல்லது தென்மேற்கில் இருக்கக்கூடாது. படுக்கையறையின் வண்ணம் அடர்த்தியாக இருக்கக்கூடாது. குறிப்பாக பச்சை, நீலம், சிவப்பு வண்ணங்களைத் தவிர்க்கவேண்டும்.
தினமும் சிவனுக்கு பால், நீர் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடுவது நற்பலன் தரும்.
தன் லக்னாதிபதியின் ரத்தினத்தை அணிவது சிறப்பு.
அமாவாசையன்று பசுவுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் அல்லது வெல்லம் தரலாம்.
வீட்டின் தென்கிழக்கு, வடமேற்கு, தென் மேற்கு திசைகளில் கிணறு அல்லது நீர்த் தொட்டி இருக்கக்கூடாது.
செல்: 98401 11534
_________
குருதி பூஜையுடன் பத்து ஹோமங்கள்!
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 73-ஆவது சுதந்திர தினம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு 15-8-2019 வியாழக்கிழமை காலை 7.00 மணிமுதல் நண்பகல் 1.00 மணிவரை பாரத மாதா ஹோமம்; மாணவ- மாணவிகள் கல்வித்தரம் உயர ஸ்ரீஹயக்ரீவர் ஹோமம், எதிரிகள் விலக மகா சுதர்சன ஹோமம், ஆயுள்பயம் நீங்க ஆயுஷ்ய ஹோமம், ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள்பெற மகா தன்வந்திரி ஹோமம், வாழ்வில் வளம்பெற குபேர லக்ஷ்மி ஹோமம் ஆகிய ஐந்து ஹோமங்கள். பௌர்ணமி யாகங்கள், ராகு- கேது ப்ரீதி ஹோமம், ஸ்ரீ ஏக ரூப ராகு- கேதுவுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து மாலை 7.00 மணி முதல் 10.00 மணிவரை பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள காலபைரவருக்கும் காளிக்கும் குருதி பூஜை நடைபெறவுள்ளது.
குருதி பூஜை
எதிரிகள் தொல்லை அகலவும், முயற்சிகளில் வெற்றிபெறவும், எமபயம் அகலவும், ரத்த சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகவும், ஒளிமறை நோய்கள் விடுபடவும், சகல ஐஸ்வர்யங்களும் பெற்று நல்வாழ்வு கிடைக்கவும், கிரக தோஷங்கள் நீங்கவும், வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கவும், விபத்துகள், அகால மரணம் போன்ற துர்வினைகள் நீங்கவும், துஷ்ட சக்திகள் மற்றும் செய்வினை பாதிப்புகள் ஒழியவும் காலபைரவருக்கும் காளிக்கும் குருதி பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜையை கேரள மாநிலம், பட்டாம்பியிலிருந்து ஐந்துக்கும் மேற்பட்ட தாந்திரிகர்கள் பங்கேற்று நடத்தவுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு:
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை- 632 513.
வேலூர் மாவட்டம், தொலைபேசி: 04172- 230033, 230274. அலைபேசி: 94433 30203.
Email : [email protected]