ஒரு பெண்ணுக்கு கர்ப்பம் தங்காமலிருப் பதற்குக் காரணம்- அந்தப் பெண்ணின் ஜாதகத்தில் 5-ஆம் பாவம் கெட்டுப்போயிருப் பதுதான்.
5-ஆம் பாவத்திற்கு அதிபதியான கிரகம் அஸ்தமனமாகி இருக்கும் அல்லது. 5 க்கு அதிபதி யான கிரகம் 6, 8, 12-ல் இருக்கும். அதை இன்னொரு பாவகிரகம் பார்க்கும். 5-க்கு அதிபதியான கிரகம் 5-ல் அஸ்தமனமாக இருந்து, அதை பாவகிரகம் பார்த்தால், குழந்தை வயிற்றில் சில நாட்கள் தங்கி, பிறகு கர்ப்பச் சிதைவு உண்டாகி விடும்.
லக்னாதிபதி அஸ்த மனமாக இருந்து, 5-ல் செவ்வாய், சனி, ராகு இருந்தால், வயிற்றில் குழந்தை தங்குவதைப்போல இருக்கும். ஆனால், தங்காது.
11-ஆவது வீட்டில் சூரியன், சனி இருந் தால், அவர்கள் 5-ஆவது வீட்டைப் பார்ப்பார்கள். அதனால் கர்ப்பம் தங்காது. அடிக்கடி கர்ப்பச் சிதைவு உண்டாகும்.
5-க்கு அதிபதியான கிரகம் 11-ல் பாவகிரகமாக இருந்து, அந்த ஜாதகத் தில் சூரியன், சனி, ராகு 5, ,7-ல் இருந்தால், கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலைகூட உண்டாகும்.
சந்திரனுக்கு 5-ஆம் பாவத்தில் பாவகிரகம் இருந்து, அதே ஜாதகத்தில் சந்திரனுக்கு 7-ல் சனி, சூரியன் இருந்தால், கர்ப்பத்தில் பிரச்சினை இருக்கும். கர்ப்பம் தங்காது.
5-ஆம் பாவத்தில் குரு, கேது இருந்து, அதே ஜாதகத்தில் 11-ல் சூரியன், சனி, ராகு இருந்தால், கர்ப்பத்தில் பிரச்சினை உண்டாக வேண்டும் என்பதற்காக குடும்பத்தில் உள்ளவார்களே சூனியம் செய்வார்கள்.
5-க்கு அதிபதியான கிரகம் 8-ல் இருந்து, அதே ஜாதகத்தில் 6-ல் செவ்வாய், 10-ல் சனி இருந்தால், வயிற்றில் குழந்தை தங்கக்கூடாது என்பதற்காக சூனியம் செய்வார்கள்.
லக்னத்தில் சூரியன், புதன், சனி, 5-ல் செவ்வாய் இருக்கும் பெண்ணின் கர்ப்பப் பையில் கோளாறு இருக்கும். அதனால் குழந்தை தங்காது.
5-ஆவது வீட்டில் சூரியன், செவ்வாய், 6-ல் கேது, 5-க்கு அதிபதியான கிரகம் 8-ல் இருந்தால், கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். பல நேரங்களில் மாதவிடாய்ப் பிரச் சினையும் இருக்கும். வயிற்றில் குழந்தை தங்காது.
5-ல் ராகு, சனி, சூரியன் இருந்தால், கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும்.குழந்தை தங்காது.
5-ல் சூரியன், 11-ல் சனி, செவ்வாய் இருந்து, அந்தப் பெண் வாழும் வீட்டின் தென்கிழக்கில் நீர்த்தொட்டி இருந்து, வீட்டிற்குத் தென்கிழக்கு வாசல் இருந்து, படுக்கையறை வீட்டின் வடமேற்கில் இருந்தால், அங்கிருக்கும் பெண்ணுக்கு அடிக்கடி கர்ப்பச் சிதைவுண்டாகும். சிலருக்கு குழந்தை இறந்தே பிறக்கும்.
5- க்கு அதிபதியான கிரகம் 6-ல் சனி, செவ்வாய், ராகுவுடன் இருந்தால், அந்தப் பெண்ணின் வயிற்றில் குழந்தை தங்காது. சில பெண்களுக்கு கர்ப்பப்பை சிறியதாக இருக்கும். சில பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வராது. சிலருக்கு உடலில் இரத்தம் குறைவாக இருக்கும்.
5-ல் சூரியன், சுக்கிரன், 6-ல் ராகு, சனி இருந்தால், குழந்தை உருவாகும்போது பிரச்சினை உண்டாகும். கர்ப்பப் பையில் சிலருக்கு கோளாறு இருக்கும்.
வீட்டிற்கு தெற்கு மத்தியப் பகுதியில் நீர்த்தொட்டி இருந்து, தென் மேற்கில் பிரதான வாசல் இருந்து, படுக்கையறை தென்கிழக்கில் இருந்தால், அந்தப் பெண்ணின் வயிற்றில் குழந்தை தங்காது.
வீட்டின் வடக்கு திசை சார்ந்த வடமேற்கில் பிரதான வாசல் இருந்து, அந்த வீட்டின் படுக்கை யறை தென்கிழக்கில் இருந்தால், அங்கு வாழும் பெண்ணுக்கு வயிற்றில் குழந்தை தங்காது.
கர்ப்பச் சிதைவு ஆகாமல் இருப்பதற்குச் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குலதெய்வத்தை வழிபடவேண்டும் கணவர் சூரியனை வணங்கவேண்டும்.
வீட்டில் குரு எந்திரத்தை வைத்து பூஜை செய்யவேண்டும்.
பெண்கள் தினமும் அரச மரத்திற்கு நீர் விடவேண்டும்.
படுக்கையறையின் வடக்கு சுவரில் பகவான் கிருஷ்ணரின் குழந்தைப் பருவ உருவம் இருக்கவேண்டும்.
கிழக்கில் தலைவைத்துப் படுக்கவேண்டும்.
வியாழக்கிழமை மாலைநேரம் அரச மரத்திற்கு தீபமேற்றிவிட்டு, விநாயகரைச் சுற்றிவர வேண்டும்.
ஐந்தாம் பாவ கிரகத்தின் ரத்தினத்தை அணியவேண்டும்.
அடர்த்தியான பிரவுன், நீலம், கறுப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது படுக்கையறையின் வர்ணம் அடர்த்தியாக இருக்கக்கூடாது.
வீட்டின் தென்கிழக்கில் நீர்த்தொட்டி, கிணறு இருக்கக்கூடாது.
செல்: 98401 11534