என்ன தொழில் செய்யலாம்? பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/what-business-can-you-do-prasanna-astrologer-i-anandhi

ரு மனிதனின் வாழ்வாதார சக்தியாக விளங்குவது தொழில், உத்தியோகம். ஒருவரின் ஜாதகரீதியான ஜீவன அமைப்பை தேர்வுசெய்வதில் பலவிதமான கருத்து வேறுபாடு நிலவிவருகிறது. ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் அதிபதி ஆதிபத்தியம் சார்ந்த தொழில், உத்தியோகத்தை ஒருவர் தேர்வது சாலச் சிறந்தது. இந்த கட்டுரையில் 12 லக்னத்தினருக்கும் பயன்படும் தொழில், உத்தியோகம் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

மேஷம்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் உணவு விடுதி, உணவுப் பொருட்கள் வியாபாரம், உர வியாபாரம், எண்ணெய் வியாபாரம், சுரங்கத் தொழில், சிறு பொருட்கள் விற்பனை, திரவப் பொருட்கள் விற்பனை, கழிவுப்பொருட்கள் விற்பனை, தோல் வியாபாரம், இரும்பு வியாபாரம், விவசாயம், கட்டட வேலை, மர வியாபாரம், கல், மண் வியாபாரம், கடினமான வேலைகள், கீழ்மட்ட ஊழியம் போன்றவை தேர்வுசெய்யலாம்.

ரிஷபம்

ரிஷப லக்னத்தினர் மனவியல் கலை, ஜோதிடம், ஆன்மிகம், ஆசிரியர் பணி, ஆராய்ச்சி துறை . நிர்வாகப் பொறுப்பு, ஆலோசனை வழங்குதல், வாயு பொருட்கள் விற்பனை, விமானத்துறை, வ

ரு மனிதனின் வாழ்வாதார சக்தியாக விளங்குவது தொழில், உத்தியோகம். ஒருவரின் ஜாதகரீதியான ஜீவன அமைப்பை தேர்வுசெய்வதில் பலவிதமான கருத்து வேறுபாடு நிலவிவருகிறது. ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் அதிபதி ஆதிபத்தியம் சார்ந்த தொழில், உத்தியோகத்தை ஒருவர் தேர்வது சாலச் சிறந்தது. இந்த கட்டுரையில் 12 லக்னத்தினருக்கும் பயன்படும் தொழில், உத்தியோகம் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

மேஷம்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் உணவு விடுதி, உணவுப் பொருட்கள் வியாபாரம், உர வியாபாரம், எண்ணெய் வியாபாரம், சுரங்கத் தொழில், சிறு பொருட்கள் விற்பனை, திரவப் பொருட்கள் விற்பனை, கழிவுப்பொருட்கள் விற்பனை, தோல் வியாபாரம், இரும்பு வியாபாரம், விவசாயம், கட்டட வேலை, மர வியாபாரம், கல், மண் வியாபாரம், கடினமான வேலைகள், கீழ்மட்ட ஊழியம் போன்றவை தேர்வுசெய்யலாம்.

ரிஷபம்

ரிஷப லக்னத்தினர் மனவியல் கலை, ஜோதிடம், ஆன்மிகம், ஆசிரியர் பணி, ஆராய்ச்சி துறை . நிர்வாகப் பொறுப்பு, ஆலோசனை வழங்குதல், வாயு பொருட்கள் விற்பனை, விமானத்துறை, விண்வெளி துறை, தீயணைப்புத்துறை, சிறைச் சாலை பணி, தொல்பொருள் ஆராய்ச்சி, பொறியியல் துறை, சுரங்கப்பாதை அமைத்தல், வெடிகுண்டு தயாரிப்பு, பொதுஜன வழிகாட்டி, சுங்க இலாகா பணி, இறைச்சி கடை, உளவுத்துறை போன்ற தொழில், உத்தியோகத்தில் பணி செய்யலாம்.

bb

மிதுனம்

மிதுன லக்னத்தினர் கல்வித்துறை, ஆன்மிகம், மருத்துவம், நிதித்துறை, நீதித்துறை, தூதரகம், கடற்படை, நீர் நிலைகளில் வேலை செய்தல், ஆலயப் பணி, மத போதனை செய்தல், வங்கியில் பணி செய்தல்.

கடகம்

கடக லக்னத்தில் பிறந்தவர்கள் அரசு உத்தியோகம், காவல்துறை, இராணுவம், தீயணைப்புத் துறை, விளையாட்டுத்துறை, பொறியியல் துறை, தொழிற்சாலைகளில் பணி செய்தல், இரும்பு சம்பந்தமான தொழில், உழைக்கூடம் தொடர்பான தொழில், செங்கல் சூளை வைத்தல், மட்பாண்டங்கள் செய்தல், சுரங்கத் தொழில், அறுவை சிகிச்சை மருத்துவம், ஆயுதங்கள் தயாரித்தல் மட்டும் விற்பனை செய்தல், சமையல் கலை, பூமித்தொழில் விவசாயம் செய்தல்.

சிம்மம்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் பொன், வெள்ளி மற்றும் ரத்தின வியாபாரம், கால்நடை வளர்ப்பது, வட்டி தொழில், தரவுத்தொழில், நிதி நிறுவனங் களில் பணி செய்தல், கலைப்பொருட்கள், அழகுப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், சுவையான உணவுப் பொருட்கள், சொகுசு பொருட்கள் மற்றும் இனிப்பான பானங்கள் விற்பனை செய்தல், இயல், இசை நாடகம், திரைப்படம், கவிதை, எழுதுதல் மற்றும் பாட்டு பாடுதல் போன்ற கலைத் தொழில்கள், தங்கும் விடுதி மற்றும் கேளிக்கை விடுதிகள் நடத்துதல்.

கன்னி

கன்னி லக்னத்தை சார்ந்தவர்கள் செய்தி மட்டும் தகவல் தொடர்புத் துறை, விண்வெளித்துறை, கல்வித் துறை, தபால் துறை, தொலைபேசித் துறை, தந்தி துறை, புத்தகத் தொழில், கணிதத்துறை, கணக்கர், தணிக்கை யாளர் போன்ற தொழில்கள், சட்டம் மற்றும் நீதித்துறை, ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், நவீன பொறியியல் துறை, எழுத்து துறை, மேடைப்பேச்சு, ஜோதிடம், பலவிதமான வியாபாரம் செய்தல், தூதரகம் போன்ற பணிகளில் ஈடுபடலாம்.

துலாம்

துலா லக்னத்தினர் திரவப் பொருட்கள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்தல், ஏற்றுமதி- இறக்குமதி செய்தல், கடல்கடந்து சென்று வியாபாரம் செய்தல், வேளாண்மை தொழில், மருத்துவம், ஜோதிடம், ஆன்மிகம், போக்குவரத்து, கலைத்துறை, கல்வித்துறை போன்றவற்றில் ஆர்வம் செலுத்தலாம்.

விருச்சிகம்

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அரசு உத்தியோகம், அரசியல், பிரதம மந்திரி, முதலமைச்சர், நிர்வாகப் பொறுப்பு, இரும்பு மற்றும் நெருப்பு சம்பந்தமான தொழில், பொறியியல் துறை, அறுவை சிகிச்சை மருத்துவர், சமூக சேவை செய்தல், தர்ம ஸ்தாபனம் நடத்துதல் சிறப்பான பலன் தரும்.

தனுசு

தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் கணக்கர் தொழில், தணிக்கையாளர், பலவிதமான வியாபாரம் செய்தல், ஆசிரியர், எழுத்தர், மளிகைக் கடை வைத்தல், சில்லறை வியாபாரம் ஆகியன பயன் தரும்.

மகரம்

மகர லக்னத்தைச் சார்ந்தவர்கள் பொன், வெள்ளி மற்றும் ரத்தின வியாபாரம், அழகுப் பொருட்கள், கலைப் பொருட்கள், சொகுசுப் பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் விற்பனை செய்தல், வட்டி தொழில், தரகு தொழில், வங்கிப் பணி, நிதி நிறுவனங்களில் பணி செய்தல், நிதித்துறை, நீதித்துறை, தங்கும் விடுதி, கேளிக்கை விடுதி மற்றும் அழகு நிலையங்கள் நடத்துதல், இயல், இசை, நாடகம், நடிப்பு மற்றும் பாட்டு மற்றும் கலைத் தொழில்கள் பயன் தரும்.

கும்பம்

கும்ப லக்னத்தினர் நெருப்பு சம்பந்தமான தொழில், பொறியியல் துறை, சுரங்கத் தொழில், விவசாயம், மின்னியல் துறை, மாந்திரீகம், ஜோதிடம், ஆன்மிகம், பூமித்தொழில், தாதுப் பொருட்கள் சம்பந்தமான தொழில், ஆராய்ச்சி செய்தல், உலோகங்கள் மற்றும் கருவிகள் சம்பந்தமான தொழில் பலன் தரும்.

மீனம்

மீன லக்னத்தினர், மர வியாபாரம், ஆன்மிகத்துறை, வங்கித்தொழில் சட்டம் மற்றும் நீதித்துறை, அறநிலையத்துறை, நிதித்துறை, கல்வித்துறை, ஆயுத சாலை, போற்பயிற்சி, சமூக சேவை தர்ம ஸ்தாபனங்கள் நடத்துதலாம். பெரும்பான்மையாக ஒருவரின் விதிப்படி அவரவரின் தொழில், உத்தியோகத்தை பிரபஞ்சமே நிர்ணயித்துவிடும். தொழில் சார்ந்த குழப்பம் இருப்பவர்களுக்கு இந்த கட்டுரை நல்ல பயன் தரும்.

செல்: 98652 20406

bala131023
இதையும் படியுங்கள்
Subscribe