கோமேதகம் என்பது ராகு பகவானுக்கான கல்.
ராகு ஒரு சாயா கிரகம். அது எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த வீட்டின் பலனைச் செய்யும். அதற்கென்று சொந்த வீடு இல்லை. அது எந்த கிரகத்துடன் சேர்ந்திருந்தாலும் அந்த கிரகத்தின் தன்மையை தனக்குள் கொண்டுவந்துவிடும்.
ஒரு ஜாதகத்தில் ராகு சரியில்லையென்றால், அவருக்கு மன நோய், தோல் நோய், மூல நோய் ஆகியவை வரும். பூச்சிக்கடி உண்டாகும். கை, கால்களில் வீக்கம், பல உறுப்புகளிலும் நோய் இருக்கும். மின் பொருட்கள் அடிக்கடி பாதிப் படையும். தொற்று நோய்கள் உண்டாகும். எல்லா காரியங்களிலும் தடைகள் ஏற்படும். எதிர்பாராமல் ஏமாற்றப்படுவார்கள்.
ராகு நல்ல நிலைமையிலிருந்தால், அவர் ஆழ்ந்த சிந்தனை கொண்டவராக இருப்பார். பெயர்பெற்ற அரசியல் தலைவராக இருப்பார். பலவகையான வர்த்தகங்களைச் செய்வார். உயர் அரசு அதிகாரி யாக- விமானியாக- ஆராய்ச்சியாளராக இருப்பார். தொலைபேசி இலாகாவில் அதிகாரி யாக இருப்பார். சிலர் மந்திர, தந்தி ரங்கள் செய்பவர்களாக இருப்பார்கள்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகர் பலசாலியாக- தைரியசாலியாக இருப்பார். ஆனால், ராகு பாவகிரகத்துடன
கோமேதகம் என்பது ராகு பகவானுக்கான கல்.
ராகு ஒரு சாயா கிரகம். அது எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த வீட்டின் பலனைச் செய்யும். அதற்கென்று சொந்த வீடு இல்லை. அது எந்த கிரகத்துடன் சேர்ந்திருந்தாலும் அந்த கிரகத்தின் தன்மையை தனக்குள் கொண்டுவந்துவிடும்.
ஒரு ஜாதகத்தில் ராகு சரியில்லையென்றால், அவருக்கு மன நோய், தோல் நோய், மூல நோய் ஆகியவை வரும். பூச்சிக்கடி உண்டாகும். கை, கால்களில் வீக்கம், பல உறுப்புகளிலும் நோய் இருக்கும். மின் பொருட்கள் அடிக்கடி பாதிப் படையும். தொற்று நோய்கள் உண்டாகும். எல்லா காரியங்களிலும் தடைகள் ஏற்படும். எதிர்பாராமல் ஏமாற்றப்படுவார்கள்.
ராகு நல்ல நிலைமையிலிருந்தால், அவர் ஆழ்ந்த சிந்தனை கொண்டவராக இருப்பார். பெயர்பெற்ற அரசியல் தலைவராக இருப்பார். பலவகையான வர்த்தகங்களைச் செய்வார். உயர் அரசு அதிகாரி யாக- விமானியாக- ஆராய்ச்சியாளராக இருப்பார். தொலைபேசி இலாகாவில் அதிகாரி யாக இருப்பார். சிலர் மந்திர, தந்தி ரங்கள் செய்பவர்களாக இருப்பார்கள்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகர் பலசாலியாக- தைரியசாலியாக இருப்பார். ஆனால், ராகு பாவகிரகத்துடன் சேர்ந்திருந்தால், சர்ப்ப தோஷ யோகம் உண்டாகி கணவன்- மனைவி உறவு கெடும்; மன நிம்மதி இருக்காது. ராகு, செவ்வாயுடன் சேர்ந்திருந்தால், அங்காரக தோஷம் உண்டாகும். அதனால் திருமணத்தடை உண்டாகும். சிலருக்கு இரண்டாவது திருமணம் அல்லது தாமதமாக திருமணம் நடக்கும். ரத்தம் குறைவாக இருக்கும்.
2-ஆம் பாவத்தில் ராகு இருந்தால் ஜாதகர் நல்ல படிப்பாளியாக இருப்பார்.
நன்றாகப் பேசுவார். சிலர் வழக் கறிஞர்களாக இருப்பார்கள். ஆனால் ராகு, செவ்வாயுடன் அல்லது சனி, சூரியனுடன் சேர்ந்திருந்தால் அவருக்கு குடும்பத்தில் சந்தோஷம் கிடைக்காது. வீட்டில் சண்டை இருக்கும். பணச் சிக்கல் தொல்லை தரும். வீட்டிலிருந்து ஓடிவிடலாமா என்று நினைப்பார். சிலரின் முகத்தில் தழும்புகள் இருக்கும்.
3-ஆம் இடத்தில் ராகு இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். அனைத்து காரியங்களையும் நல்ல முறையில் செய்வார். வாழ்க்கையின் முற்பகுதியில் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். ராகு, செவ்வாயுடன் இருந்தால் அண்ணன்- தம்பி உறவும்; ராகு, சுக்கிர னுடன் இருந்தால் கணவன்- மனைவி உறவும் சரியாக இருக்காது. ராகு, சனி, சுக்கிரன் சேர்க்கை இருந்தால் நண்பர் களிடம் ஏமாறுவார். style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ராகு 4-ஆம் பாவத்தில் இருந்தால் பலருக்கு இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. தாயின் உடல்நலம் சரியாக இருக்காது. ராகு, செவ்வாயுடன் இருந்தால், கணவன்- மனைவி உறவு அடிக் கடி பாதிக்கும். ராகு, சனியுடன் இருந் தால், தொழிலில் எதிர்பாராத நஷ்டம் ஏற்படும். ராகு, சூரியன் அல்லது சந்தி ரனுடன் இருந்தால், தாய்- தந்தைக்கு நோய் இருக்கும். பண வசதி இருக்காது.
5-ஆம் இடத்தில் ராகு இருந்தால் பலர் படித்த படிப்பிற்கு சம்பந்தமற்ற தொழிலைச் செய்துகொண்டிருப் பார்கள். ராகு, பாவகிரகத்துடன் இருந்தால், பலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். ராகு, சூரியன், சுக்கிரன் சேர்க்கை இருந்தால் வாரிசு உண்டாகும்போது பிரச்சினை ஏற்படும். சிலருக்கு தீராத நோய் இருக்கும்.
ராகு 6-ஆம் பாவத்தில் இருந்தால், அந்த ஜாதகருக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள். எதைச் செய்தாலும் வெற்றி கிடைக்கும். ஆனால் அங்கு சனி, செவ்வாயுடன் ராகு இருந்தால் அவர்களுக்கு நோய் வரும். இல்வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு திருமணத்தில் தடைகள் உண்டாகும். கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது.
7-ஆம் பாவத்தில் ராகு இருந்தால், அந்த ஜாதகர் ஏதாவது குறை கூறிக்கொண்டேயிருப் பார். பலருக்கு சர்ப்ப தோஷம் உண்டாகும். அதனால் பல பிரச்சினைகள் ஏற்படும். அந்த ராகு, சூரியனுடன் அல்லது சந்திரனுடன் இருந்தால் மனநோய் ஏற்படும். ராகு, சனியுடன் இருந்தால், அவசியமற்ற சிந்தனைகளில் ஈடுபடுவார்கள். நண்பர்கள் ஏமாற்றுவார்கள்.
ராகு 8-ஆம் இடத்தில் இருந்தால் திருமணம் தள்ளிப்போகும். பிறரைக் குறைகூறுவதில் மன்னராக இருப்பார். ராகு, செவ்வாய், சனியுடன் சேர்ந்திருந்தால், திருமணத்தடை உண்டாகும். சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும்.
9-ஆம் பாவத்தில் ராகு இருந்தால், இளமைக் காலத்தில் பல கஷ்டங்கள் அனுபவிப்பார். ராகு, செவ்வாய், சனி அல்லது ராகு, சனி, சுக்கிரன் சேர்ந்திருந்தால், அவர் 36 வயதிற்குப்பிறகு நன்கு வாழ்வார். ஆனால் தந்தையுடன் உறவு சரியாக இருக்காது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
10-ல் ராகு இருந்து, ஜாதகருக்கு ராகு தசை நடந்தால், லக்னாதிபதியும் 5-க்கு அதிபதியுமான கிரகமும் சரியான நிலையில் இருந்தால் ஜாதகர் பெரிய அரசியல் தலைவராக வருவார். ஆனால் ராகு பாவகிரகத்துடன் இருந்தால், அவருக்கு வரக்கூடிய அந்த வாய்ப்பு கைநழுவிப் போய் விடும்.
11-ல் ராகு இருந்து அவருக்கு ராகு தசை நடந்தால் நன்கு சம்பாதிப்பார். புகழுடன் இருப்பார். ஆனால், ராகு, பாவகிரகத்துடன் இருந்தால் வயிறு சம்பந்தப்பட்ட நோய், மனநோய், காலில் நோய் வரும். சகோதரர்களுடன் உறவு சுமுகமாக இருக்காது.
12-ல் ராகு இருந்து ராகு தசை நடந்தால், அவருக்கு எதிர்பாராத நஷ்டம் உண்டாகும். சிலருக்கு மனநோய் வரும். ராகு, பாவகிர கத்துடன் அல்லது சூரியன், சனியுடன் இருந்தால், அவருக்கு திடீரென்று விபத்து உண்டாக வாய்ப்பிருக்கிறது.
மேற்கண்ட ஜாதக அமைப்புள்ளவர்கள் கோமேதகம் அணிந்தால் துன்பங்கள் தணியும்.
ராகு 3, 6, 11-ல் இருந்தால் அவர்கள் நல்ல நிலைமையில் இருப்பார்கள். கோமேதகம் அணிந்தால் நன்மைகள் மேலும் கூடும்.
செல்: 98401 11534