நம் பாரதத்தில் பாசம் என்னும் சொல் பல நூற்றாண்டுகளாகத் தேசத்தையும், நம்மையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. இன்று அதில் ஏற்பட்ட தளர்வுகள் நாட்டின் கலாசாரத்தைக் கேள்விக் குறியாக்கிவிட்டது. பிறந்த ஊரில் ஒருவரின் குடும்பத்தைப் பற்றிப் பரம்பரை பரம்பரையாக முழுமையாக எல்லாருக்கும் தெரியும் என்பதால், பாகுபாடில்லாமல் எங்கு கண்டாலும் கேட்காமலேயே உதவிகளும், தவறுசெய்தால் உடனே உரிமையுடன் கண்டிக்கவும் செய்தார்கள். இன்று தவறுகள் செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டதால், கண்டித் தால் தண்டித்து பழிவாங்கி விடுகிறார்கள். இதனால், என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாமல் விலகிப்போய்விடுவதே நல்லது என ஒதுங்கத் தொடங்கி விட்டனர்.
ஊர்ப் பாசம் மட்டுமல்ல; உடன்பிறந்தவர்கள் பிள்ளைகளை பெரியப்பா, சித்தப்பா, மாமா என்கிற உரிமையில் கண்டிக்க, உடன்பிறந்தவர்களே உரிமை தருவதில்லை. "என் பிள்ளையைக் குறைசொல்கிறாயா? எங்களை அசிங்கப்படுத்த நினைக்கிறாயா?
இதுவரை ஏதாவது என் பிள்ளை களுக்குப் பணச்செலவு செய்திருக் கியா? என் பிள்ளையின் ஒழுக்கத் தைக் கேவலப்படுத்த வந்த உனக்கும், உன் பிள்ளைகளுக்கும் இப்படி நடக்காமலா போகும்?' என திசைதிருப்பி, கேள்விகேட்டு காயப்படுத்துவதால், ""யாரோ எப்படியோ போங்க'' என கண்டு கொள்ளாமல் செல்கிறார்கள்.
தவறுகள் யார்தான் செய்யவில்லை? நீ முதல்ல யோக்கியமா? இந்தக் காலத்துல அப்படி இப்படி இருந்தாதான் பொளைக்க முடியும்'' என்கிற மலிவான அறிவுரைகளையும் நெருங்கிய சொந்தங்களே வழங்குகிறார்கள்.
அன்பு, அக்கறை, பாசம்தான் குடும்பக் கட்டுக்கோப்பு கலையாமல், குடும்பக் கௌரவம் என்கிற பாதுகாப்பில், இளைய தலைமுறையின் ஒழுக்கம், ஆரோக்கியம் முன்னேற்றத்தைக் காப்பாற்றிக்கொண்டிருந்தது. இன்று நமக்கு கேட்டவுடன் பணம் தருகிறவர்தான் நம்மீது அக்கறை, பாசம் உள்ளவர். பணமில்லா தவர், பணம் தர மறுப்பவருடைய பாசம் நமக்குத் தேவையில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டனர்.
பணம் இருந்தா இஷ்டப்படி வாழலாம் என்கிற ஆசை யால், சொந்தபந்தம், நண்பர்கள் மட்டுமல்ல; பெற்றவர்களும் தேவையில்லை என்கிற நிலைக்கு வந்துவிட்டனர். ""என்மீது பாசம் யாரும் வைக்கவேண்டாம். நானும் யார்மீதும் பாசம் வைக்கவேண்டிய அவசியமில்லை'' எனப் பேசுவது மனிதன் மீண்டும் மிருகமாகிவிட்டான் என்பதையே காட்டுகிறது.
சொந்தபந்தங்களின் உண்மையான பாசத்தை அனுபவிக்காதவர்கள், அன்பைத் தர யோசிப்பவர்களுக்கு பாசம் பற்றி சொல்லிப் புரியவைக்க முடியாது. பாசம் கிடைத்தால் எவ்வளவு பெரிய கஷ்டத்தையும் தாங்கி உலகமே வியக்கும் சாதனை பல படைக்கலாம்.
தாத்தா- பாட்டி பாசம்
இளம்வயதில் தொழில், வருமானத் துக்காக நேரமின்றி உழைப்பதால், சொந்தபந்தம், குடும்பத்தின்மீது சிலர் முழுப்பாசம் காட்டமுடியாமல் தவித்திருப்பர். பிள்ளைகளுக்கான கடமைகளை முடித்து வயதான பின்பு, தான் பிள்ளைகளிடம் காட்டத்தவறிய அன்பை பேரன், பேத்திகளுக்கு அள்ளித் தருவர். பாசத்தைப் பொழியும் தாத்தா- பாட்டி எல்லாருக்கும் அமைவதில்லை. சிலரின் தாத்தா- பாட்டி இறந்திருப்பார்கள். சிலருக்கு வயது முதிர்ந்த தாத்தா- பாட்டியைக் கவனிக்க விரும்பாத பெற்றோரின் துரோகத்தால் பேரன், பேத்திகளுடன் சந்தோˆமாக இருக்கமுடியாத சூழல் அமைந்துவிடும்.
உண்மையில் பாசமற்ற தாத்தா- பாட்டி என யாருமில்லை. ஜோதிடரீதியாக அப்பாவின் அப்பா பற்றி 5-ஆமிடத்தையும், அம்மா பற்றி 12-ஆமிடத்தையும்.
அம்மாவின் அப்பா பற்றி 12-ஆமிடத்தையும், அம்மா பற்றி 7-ஆமிடத்தையும் வைத்து தாத்தா- பாட்டிகளின் நிலையை அறியலாம். ராகு-, அப்பாவின் அப்பா, அம்மாவின் அம்மாவையும் குறிக்கும். கேதுவை வைத்து அப்பாவின் அம்மா, அம்மாவின் அப்பாவைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
ராகு- கேதுக்கள் நீசம்பெறுவது, சூரியன், சந்திரனுடன் ராகு- கேதுக்கள் இணைவது, பாவகிரகப் பார்வை, சேர்க்கை பெறுவது, 1, 4, 7, 8, 12-ஆமிடங்களில் நிற்பது, 5-ஆமிடமாகிய பூர்வ புண்ணியம் கெட்டுப்போவது, 7, 12-ஆமிடங்கள் பாதிப்பது போன்றவை தாத்தா- பாட்டியை ஏதாவது ஒருவகையில் பாதித்து, பாசம் அனுபவிக்கவிடாமல், கிடைக்காமல் செய்துவிடும்.
பெற்றோர் பாசம்
ஒன்பதாமிடம் தந்தையையும், நான்காமிடம் தாயையும் குறிக்கும். 4, 9-ஆமிடங்களில் பாவகிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது இருப்பது, 4, 9-ஆமிடங்களை பாவகிரகங்கள் பார்வையிடுவது, 4, 9-ஆம் அதிபதியுடன் பாவகிரகச் சேர்க்கை பெறுவது, 3, 6, 8, 12-க்குரியவர்கள் தொடர்பு, 4, 9-க்குரியவர்கள் 6, 8, 12- ல் மறைவது, 4, 9-ஆம் அதிபதி நீசம், நீசகிரகச் சேர்க்கை, 4-ல் சந்திரன், 9-ல் சூரியன் இருப்பது போன்றவற்றால், பெற்றோருக்கு பாதிப்பு, பெற்றோரால் பாதிப்பு, பெற்றோர் பிரிவு, வறுமை, தொழில் நஷ்டம், பணத்திற்காகக் குடும்பப் பிரிவு ஆகியவை ஏற்பட்டுப், பெற்றோரால் கிடைக்கவேண்டிய சந்தோˆங்களை இழக்கநேரும்.
சூரியன், சந்திரன் நீசமாவதும், ராகு தசை நடக்கும்போதும் பெற்றோருக்கு அவமானம், நோய், கடன், பிரிவை ஏற்படுத்தும். கண்டச்சனி, அஷ்டமச்சனி, ஏழரைச்சனிக் காலங்களிலும் பெற்றோருக்கு பாதிப்புகள் ஏற்படுவதால், பாசத்தை முழுதாகப் பெறமுடியாத சூழல் ஏற்படும்.
அப்பா, அம்மாவுக்கு கண்டம், மனஸ்தாபம் ஏற்பட்டுப் பிரிவதால், பெற் றோர் பாசத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது. 4, 9-ஆமிடங்களில் சுபகிரகம், 4, 9-ஆம் அதிபதி பலம்பெற்று, சுபகிரகத் தொடர்பிருந்தால் தாய், தந்தைக்கு முன்னேற்றம், சந்தோஷம் கிடைத்து, பெற்றோர் பாசம், அன்பு ஜாதகருக்கு முழுமையாகக் கிடைக்கும்.
உடன்பிறந்தோர் பாசம்
பெற்றோர்களுக்குப் பின் பாசத்தை உடன்பிறந்தவர்களிடம்தான் எதிர்பார்க்க முடியும். 3-ஆமிடம் இளைய சகோதரத்தையும், 11-ஆடம் மூத்த சகோதரத்தையும் குறிக்கும். 3, 11-ஆமிடங்கள் சுபகிரகப் பார்வை, இணைவு பெற்றால் சகோதர பாசம் நிலைத்திருக்கும்.
சகோதர ஸ்தானம் வலுத்திருந்தால், தாய்- தந்தைசெய்யும் கடமைகளை யெல்லாம் உடன்பிறந்தவர்கள் எதிர்பார்ப் பின்றி செய்வார்கள். சுபகிரக இணைவு, பார்வை உடன்பிறந்தவர்களுக்குள் பேரன் பைக் கொடுக்கும். 3, 11-ஆம் அதிபதிகள் கெட்டிருந்து, 6, 8, 12-க்குரியவர்கள் இணைவு, பார்வை பலவித நஷ்டத்தையும், பங்காளிப் பகையையும் தரும். இன்று, பலர் தானும், தான் பெத்த பிள்ளைகளும், உடன்பிறந்தவர்களைவிட உயர்ந்த அந்தஸ்தில் இருக்கவேண்டும் என்கிற சுயநல எண்ணத்துடன் இருப்பதால் சகோதர பாசம் குறைந்துவிட்டது.
உடன்பிறந்தவர்கள் அதிகமாக இருந்த காலத்தில்கூட பாசம் குறையவில்லை. இன்று ஒன்றிரண்டு சகோதரர்களுக்குள் எதற்கெடுத்தாலும் போட்டி, பொறாமை அதிகரித்துவிட்டது. அதற்குக் காரணம் பாவகிரகப் பார்வை, சேர்க்கை மற்றும் 3, 11-ஆமிடங்களுடன் பாதகாதிபதி, 6, 8, 12 அதிபதிகள் இணைந்த தசைகள் நடக்கும்போது பிரிவைத் தந்து, பாசத்தையும் இழக்கச்செய்யும்.
ஏழரைச்சனிக் காலத்தில் உடன் பிறப்புகளுக்குள் உரசல் ஏற்படும். உலகில் பணத்திற்காக யார் யாரிடமெல்லாம் கெஞ்சி, தன்மானத்தை விட்டுக் கொடுப்பவர்கள் உடன்பிறந்தவர்களிடம் ஈகோ பார்த்து கெட்டுப்போகிறார்கள். பெத்த பிள்ளைகளுக்காக, உடன்பிறந்த வர்கள், சொந்தங்களின் பாசத்தைப் பகைத்துக்கொண்டவர்கள் நன்றாக இருந்ததாக சரித்திரம் இல்லை. உண்மையான பாசம் வைத்திருப்பவர்களுக்கு எந்த தசை நடந்தாலும் முழுப்பிரிவு தராது.
கணவர்- மனைவி பாசம்
இந்த ஜென்மத்தில் நிம்மதியாக இருக்கவேண்டுமானால் கணவர்- மனைவி பாசம் உண்மையாக இருக்கவேண்டும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்க இருவர் மனநிலையும் ஒத்துப்போக வேண்டும். பாசம் என்பது தானாக வரவேண்டும். கட்டாயப்படுத்தி வரக் கூடாது. எவ்வளவு பெரிய கவலைகளையும் நம்பிக்கையான ஒரு வார்த்தையில் கடந்து விடமுடியும். ஆதலால், வார்த்தைகளில் கவனம்வேண்டும். ""உன்னை கல்யாணம் பண்ணியதால்தான் இப்படிக் கஷ்டபடு கிறேன்'' என்கிற வார்த்தைகள் பாச உணர்வைக்கொன்று பல குடும்பத்தைக் கெடுத்துவிடுகின்றன. உண்மையில், யாரைத் திருமணம்செய்தாலும் என்ன விதியோ அதன்படியே நடக்கும்.
வெறுப்புணர்வுகளை வளர்த்தல் எளிது. அனுபவம்மிக்க பெரியவர்களின் பாசமான வார்த்தைகளைக் கேட்டுத் தெரிந்து குடும்பம் நடத்தினால்தான் இல்லறம் இனிக்கும். நம்மீது அன்பாக இருக்கவேண்டும் என நினைப்பவர்கள் முதலில் அன்பைக் கொடுக்கவேண்டும். கணவரைத்தாண்டிய சிந்தனையும், மனைவியைத் தவிர்த்த ஆசைகளும் குடும்பத்தை நிர்மூலமாக்கிவிடும். காதல் கைகூடாத பலர் பழைய காதலை நினைத்து ஏங்கி புதிய வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.
2-ஆமிடமான குடும்ப வாழ்க்கையில், நான்காமிடத்தால் சுகம் பெற்று, ஏழாமிட களத்திரத்தால், எட்டாமிட மாங்கல்ய பலத்தால், ஒன்பதாமிட பாக்கியம், ஐந்தாமிட பூர்வ புண்ணிய பலத்தால் பாசமான துணை திருமண வாழ்க்கையில் அமைந்து மகிழ்ச்சியாக இருப்பர். 2, 4, 7, 8-ஆமிடங்கள், அதிபதிகள் ஆட்சி, உச்சம், சுபகிரகப் பார்வை, சேர்க்கை பெற்றால் பாசமான துணைவர் அமைவர். 2, 4, 7, 8-ல் பாவகிரகப் பார்வை, சேர்க்கை, நீசம் , செவ்வாய், சனி பார்வை, சேர்க்கை, செவ்வாய் தோˆம், நாக தோஷம், களத்திர தோஷம், பிதுர் தோஷம் ஆகியவை சுகமற்ற இல்லறத்தைத் தரும். தோஷம் உள்ளவளர்கள் தாமதமாகத் திருமணம் செய்துகொண்டால் இல்லறம் நல்லறமாகும்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
செல்: 96003 53748