நம்மில் ஏழை- பணக்காரர் அனைவருக்குமே, ஜோதிட நியதிப்படி 5, 2, 1-ஆம் பாவாதிபதி வலுத்துநின்று, அக்கிரக தசாபுக்திக்காலத்தில், குரு பகவானும் 11, 9, 7, 5-ல் உலாவரும் காலத்தில் அதிர்ஷ்ட தேவதை ஆரத் தழுவுவாள். பணவசதிக்குப் பஞ்சமிராது. சிறகடிக்கும் பாலபருவம்முதல், முதுமைவரையிலும் நாம் அடையவிருக்கும் சுப- அசுபப் பலன்களை நமது கட்டங்கள் திட்டமாகத் தெரிவிக்கும்.
வெற்றி ஜோதிடர்கள், உங்களின் 1, 5, 9-க்குரிய கிரகத்தின் அடிப்படையிலே, வளவாழ்வு அமையுமா அல்லது வழுக்கிவிழ நேருமா என்பதைக் கணித்து, ராகு- கேதுக்களின் நிலை மற்றும
நம்மில் ஏழை- பணக்காரர் அனைவருக்குமே, ஜோதிட நியதிப்படி 5, 2, 1-ஆம் பாவாதிபதி வலுத்துநின்று, அக்கிரக தசாபுக்திக்காலத்தில், குரு பகவானும் 11, 9, 7, 5-ல் உலாவரும் காலத்தில் அதிர்ஷ்ட தேவதை ஆரத் தழுவுவாள். பணவசதிக்குப் பஞ்சமிராது. சிறகடிக்கும் பாலபருவம்முதல், முதுமைவரையிலும் நாம் அடையவிருக்கும் சுப- அசுபப் பலன்களை நமது கட்டங்கள் திட்டமாகத் தெரிவிக்கும்.
வெற்றி ஜோதிடர்கள், உங்களின் 1, 5, 9-க்குரிய கிரகத்தின் அடிப்படையிலே, வளவாழ்வு அமையுமா அல்லது வழுக்கிவிழ நேருமா என்பதைக் கணித்து, ராகு- கேதுக்களின் நிலை மற்றும் பார்வைகளைப் பொருத்து, உங்களின் கர்மவினைப் பயனையும், ஊழ்வினையிலிருந்து தப்பிக்கும் வழிவகை களையும் தெளிவுபடுத்துவார்கள். நெஞ்சம் விம்மும் போராட்டங்களை ஒருவர் மணவாழ்வில் எதிர்கொள்வதை 6, 8-ஆம் அதிபதிகளின் நிலைப்பாடு விவரிக்கும்.
ஒருவரது ஜாதகம் யோக ஜாதகமானாலும், சில கிரக நிலைகள்- நட்சத்திரங்கள் நின்ற பாகைகள்- அனுகூலமற்ற துன்பச் சாரல்களையே வீசுவது ஏன் என்பதை விளக்கவே குரு பணிக்கர் பெருமகனார் ஆசியுடன் இங்கு சில ஜோதிட சூட்சுமங்கள்.
நல்லவர்களுக்குக்கூட பிறப்பின்போது அமையும் லக்ன டிகிரி, சந்திரன் நின்ற டிகிரி மற்றும் லக்னாதிபதி நின்ற பாகை இவற்றில் ஒன்றோ இரண்டோ கீழ்க்கண்ட ராசிகளின் பாகை, கலைகளில் நின்றுவிட்டால், எல்லாம் இருந்தும் துன்பச் சாரல்களே வாழ்வில் அனுப மாகும். இதில் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டு மானால் உபயராசி, லக்னங்களான மீனம், தனுசு, கன்னி, மிதுனத்தின் 4 டிகிரி, 17 பாகையிலும், ரிஷபத்தின் 6 டிகிரிமுதல் 10 பாகைவரை யிலும் சந்திரனோ லக்னாதிபதியோ லக்னமோ அமைந்துவிட, பலவழித் தொல்லைதான் வாழ்வில்; சீரழிவே. எத்தனை யோகம் ஜாத கத்தில் இருந்தபோதும் வெற்றிக்கனி எட்டாது. இதேபோல ஒருவரைத் துன்பக்கடலில் சிக்கவைக்கும் மேலும் சில கிரகப் பாகைகள் யாதெனக் கேட்டால்- கும்ப ராசியின் 18 மற்றும் 19 பாகைகளும், மகரத்தின் 26 மற்றும் 29 டிகிரியும், விருச்சிகத்தின் 19 பாகை மற்றும் 18-ஆவது டிகிரியில் நின்ற சந்திரனோ, லக்னாதிபதியோ- உல்லாச வாழ்வோ, உயர் படிப்போ தருவதில்லை. முன்னேற்றத்தைத் தடைப்படுத்தும் பாகைகள் இவை. சிம்மத்தின் 18 பாகைமுதல் 28 பாகைவரையிலுமே நின்ற கிரகமோ, சந்திரனோ, லக்னாதிபதியோ ஒருவருக்கு சுபிட்ச நிலை தருவதில்லை. கல்வி யைப் பரிசளித்தால் கல்யாணக் கனவைத் தட்டிப்பறிக்கும். கல்யாணம் பல சிரம முயற் சிக்குப்பின் நடந்தேறினாலும் கட்டில் இனிக் காது. தொட்டில் கனவாகிப்போகும் நிலைதரும். இதைத்தான் சில ராசிகளில் அமைந்த "கிரக பாதகம்' என்கிறது வேத ஜோதிடம்.
குற்றமற்ற குணமான பிறப்பு நட்சத் திரங்களாக சித்தரிக்கப்பட்டுள்ள புனர்பூசம், அனுஷம், சதயம், மிருகசீரிடம், திருவோணம், சுவாதி, அவிட்டம், உத்திராடம் மற்றும் உத்திரட்டாதியில் பிறந்த யோக ஜாதகர் களுக்குக்கூட சிம்மத்தின் 5 பாகையில் வேறொரு கிரகமோ அல்லது லக்னாதிபதியோ நின்றுவிட்டால் அதிர்ஷ்டம் குறைவேதான்- ஜாதகருக்கும் பெற்றோர்களுக்கும்.
வாசக நெஞ்சங்களுக்கு 2019 மாசியில் மாறும் சர்ப்பங்கள் சந்தோஷ வாழ்வு அருளட்டும்; வாழ்க வளமுடன்!
செல்: 94431 33565