சென்ற இதழ் தொடர்ச்சி...
குரு
குரு கிரகத்துக்குரிய நிறம் மஞ்சள். குருவின் எதிரி கிரகங்களாக புதனும் சுக்கிரனும் கூறப்பட்டுள்ளன.
புதன் பச்சை நிறத்தையும், சுக்கிரன் வெள்ளை நிறத்தையும் கொண்டுள்ளனர்.
இதன்மூலம் குரு சார்புடைய தொழில் புரிபவர்கள் பச்சை, வெள்ளை நிறத்தைத் தவிர்ப்பது நல்லது என தெரிகிறது.
இதிலும் ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது. குருவின் மீன ராசியில் புதன் நீசமடைவார். சுக்கிரன் உச்சமடைவார். எனவே வெள்ளை நிறத்தைவிட பச்சை நிறத்தை அறவே ஒதுக்குவது குரு சார்ந்த தொழில்புரிவோருக்கு சாலச் சிறந்தது என தெளிவாகிறது.
குரு என்றாலே தெய்வீக பணிகள்தான் முதலில் நினைவுக்கு வரும். எனவே கோவில் சார்ந்த பணி செய்வோர் கூடியமட்டும் பச்சைநிற ஆடைகளைத் தவிர்த்திடுங்கள்.
இதுபோல, குருவின் காரகத் தொழில்களான நீதித்துறை, வங்கிப்பணி, நிர்வாகம், ஜோதிடம், பூஜைப்பொருட்கள் விற்பனை, பூஜையறை அமைப்போர், சேமிப்பு வகை தொழில் உடையோர் போன்றோர் பச்சை நிறத்தைத் தவிர்த்துவிட்டு, மஞ்சள்நிறப் பயன்பாட்டை அதிகரியுங்கள். மஞ்சள் நிறத்தை அடிப்படையாகக் கொண்ட பிஸ்கெட் நிறம், ப்ரவுன் நிறம் உபயோகிக்கலாம்.
குருவுக்கு சுக்கிரனும் பகை கிரகமாகக் கூறப்பட்டுள்ளது. குருவை தேவகுரு என்றும், சுக்கிரனை அசுரகுரு என்றும் அழைப்பர். இருவரும் பகையாக இருப்பதில் ஆச்சரியமில்லை. குரு ஆன்மிகப் பாதையை உடையவர். சுக்கிரன் இல்வாழ்க்கை இன்பங்களை சுட்டிக்காட்டுபவர். எனவே ஆன்மிகம், நீதித்துறை, பக்தி, ஞானவழி செல்லுபவர்கள் வெள்ளை நிறத்தைத் தவிர்த்து, மஞ்சள் நிறத்தைப் பயன்படு
சென்ற இதழ் தொடர்ச்சி...
குரு
குரு கிரகத்துக்குரிய நிறம் மஞ்சள். குருவின் எதிரி கிரகங்களாக புதனும் சுக்கிரனும் கூறப்பட்டுள்ளன.
புதன் பச்சை நிறத்தையும், சுக்கிரன் வெள்ளை நிறத்தையும் கொண்டுள்ளனர்.
இதன்மூலம் குரு சார்புடைய தொழில் புரிபவர்கள் பச்சை, வெள்ளை நிறத்தைத் தவிர்ப்பது நல்லது என தெரிகிறது.
இதிலும் ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது. குருவின் மீன ராசியில் புதன் நீசமடைவார். சுக்கிரன் உச்சமடைவார். எனவே வெள்ளை நிறத்தைவிட பச்சை நிறத்தை அறவே ஒதுக்குவது குரு சார்ந்த தொழில்புரிவோருக்கு சாலச் சிறந்தது என தெளிவாகிறது.
குரு என்றாலே தெய்வீக பணிகள்தான் முதலில் நினைவுக்கு வரும். எனவே கோவில் சார்ந்த பணி செய்வோர் கூடியமட்டும் பச்சைநிற ஆடைகளைத் தவிர்த்திடுங்கள்.
இதுபோல, குருவின் காரகத் தொழில்களான நீதித்துறை, வங்கிப்பணி, நிர்வாகம், ஜோதிடம், பூஜைப்பொருட்கள் விற்பனை, பூஜையறை அமைப்போர், சேமிப்பு வகை தொழில் உடையோர் போன்றோர் பச்சை நிறத்தைத் தவிர்த்துவிட்டு, மஞ்சள்நிறப் பயன்பாட்டை அதிகரியுங்கள். மஞ்சள் நிறத்தை அடிப்படையாகக் கொண்ட பிஸ்கெட் நிறம், ப்ரவுன் நிறம் உபயோகிக்கலாம்.
குருவுக்கு சுக்கிரனும் பகை கிரகமாகக் கூறப்பட்டுள்ளது. குருவை தேவகுரு என்றும், சுக்கிரனை அசுரகுரு என்றும் அழைப்பர். இருவரும் பகையாக இருப்பதில் ஆச்சரியமில்லை. குரு ஆன்மிகப் பாதையை உடையவர். சுக்கிரன் இல்வாழ்க்கை இன்பங்களை சுட்டிக்காட்டுபவர். எனவே ஆன்மிகம், நீதித்துறை, பக்தி, ஞானவழி செல்லுபவர்கள் வெள்ளை நிறத்தைத் தவிர்த்து, மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தினால் உள்ளார்ந்த ஞானபலம் கூடும். ஆன்மிக அறிவு செழிக்கும். வாழ்க்கைத் தடை நீங்கும்.
நீண்டநாள் குழந்தை வரம் வேண்டிக் காத்திருக்கும் தம்பதிகள் கூடியமட்டும் பச்சை நிறத்தைத் தவிர்த்துவிடுங்கள். குருவுக்கு புதன் பகை மட்டுமல்ல; அவர் வீட்டில் (மீனத்தில்) நீசமும் அடைவார். எனவே குருவுக்கு பகை கிரக பச்சை நிறத்தை ஒதுக்கி, குருவின் நிறமான மஞ்சள் வண்ணத்தை அதிகமாகப் பயன்படுத்துங்கள். இதன்மூலம் குழந்தை உருவாகும் நிலை விரைவாகும். தடை தகர்க்கப்படும்.
சுக்கிரன்
சுக்கிரனுக்குரிய வண்ணம் வெண்மை. சுக்கிரனின் பகை கிரகங்களாக சூரியன், சந்திரன், குரு குறிப்பிடப்பட்டுள்ளன. "உத்தரகாலாம்ருதம்' சுக்கிரனின் பகை கிரகங்களாக சூரியனையும் சந்திரனையும் மட்டுமே சுட்டிக் காட்டுகிறது.
சுக்கிரனின் வீடான துலாத்தில் சூரியன் நீசமடைவார். இதனால் சுக்கிரனும் சூரியனும் கடும் பகைவர்கள் எனக் கொள்ளலாம். சுக்கிரனின் நிறம் வெண்மை; சூரியனின் நிறம் சிவப்பு.
சுக்கிரனின் இன்னொரு பகை கிரகமாக சந்திரனைக் குறிப்பிட்டுள்ளனர். சுக்கிரன் இளம்பெண்களைக் குறிப்பார். சந்திரன் வயது முதிர்ந்த பெண்களைக் குறிப்பார். ஆயினும் சுக்கிரனின் வீட்டில் சந்திரன் உச்சமடைவது கவனிக்கத்தக்கது. சந்திரன், சுக்கிரன் இருவருக்குமே வெண்மை நிறம்தான். இதன்மூலம் சுக்கிரனுக்கு பகை கிரகம் சந்திரன் என்பதையும், அதன் வெண்மை நிறத்தைத் தவிர்ப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சுக்கிரனின் தொழில் எனும்போது, முதலிலில் கலைத்தொழில்தான் நினைவுக்கு வருகிறது. எனவே கலைத்தொழிலிலில் பிரகாசிக்க முயல்பவர்கள் பகை கிரகமான சூரியனின் சிவப்பு நிறத்தைத் தவிர்த்திடுங்கள். சுக்கிரனின் மற்ற தொழில்களான வைர வியாபாரம், அழகு- ஆடம்பர பொருள் விற்பனை, துணிக்கடைக்காரர்கள், வாகன விற்பனை, அழகான கட்டடம் கட்டுவோர், சுற்றுலா விடுதிகள் நடத்துவோர், இனிப்பு விற்பனை, ஒப்பனை செய்வோர், திருமண அமைப்பு நடத்துவோர், வெள்ளி விற்பனை செய்வோர் போன்றவர்கள் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தக்கூடாது.
மேற்கண்ட வியாபாரிகள் (சுக்கிரன் முக்கியமாக வியாபாரத்தையே குறிப்பார்) சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தினால், அரசுத் தொந்தரவுகளும், கீழ்மைத்தனமும், நீசத்தனமான காரியங்கள் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுதலும் ஏற்படக்கூடும்.. சிவப்பு நிறத்தை நீக்குவதால் வாழ்வுத் தடை நீங்கும்.
அதிலும், மிக முக்கியமான வியாபார விஷயங்கள் ஆரம்பிக்கும்போது சுக்கிரனுக்கு பெரு விருப்பமான வெண்பட்டு பயன்படுத்துங்கள். ஆரம்பிக்கும் எவ்விஷயமும் நல்விதமாகப் பூர்த்தியாகும்.
சனி
சனியின் நிறங்களாக கருப்பு, ஊதா, கிரே எனப்படும் சாம்பல் வண்ணம் கூறப்பட்டுள்ளன.
சனியின் பகை கிரகங்களாக சூரியன், சந்திரன், செவ்வாய், கேது குறிப்பிடப்பட்டுள்ளன. "உத்தரகாலாம்ருதம்' சனிக்குப் பகையென்று சூரியன், சந்திரன், செவ்வாய் கூறப்பட்டுள்ளன.
சனியும் சூரியனும் கொடும்பகைவர்கள் என்பது அறிந்ததுதான். சனி, சந்திரன் சேர்க்கை என்பது புனர்பூ யோகம் எனும் வேண்டாத நிகழ்வுகளை நடத்திவிடும்.
சனியின் இன்னொரு பகை கிரகம் செவ்வாய். சனி வீட்டில் செவ்வாய் உச்சமடைவார். செவ்வாய் வீட்டில் சனி நீசமடைவார்.
இவ்வாறு நிகழும்போது எவ்வாறு சனிக்கு செவ்வாயைப் பிடிக்கும்? கடும் பகைதான்.
சூரியனின் நிறம் சிவப்பு. சந்திரனின் வண்ணம் வெள்ளை. செவ்வாயின் நிறம் அடர்ந்த சிவப்பு நிறம். இதன்மூலம் சனியை வேண்டுவோர் அசந்து மறந்து சிவப்பு, வெள்ளை அல்லது இந்த இரு கிரகங்களின் கலவையான ஆரஞ்சு வண்ணங்களைத் தவிர்த்தல் நல்லது.
ஏழரைச்சனி, அஷ்டமச்சனி என கோட்சாரகால சனிப்ரீதி செய்யும்போதும், மற்ற சனி தொழில்களான இரும்பு, எண்ணெய் வியாபாரிகளும், மாசு நீக்கும் தொழில் செய்பவர்களும், சிறிய தொழில்- வியாபாரிகளும் கண்டிப்பாக சிவப்பு நிறத்தைத் தவிர்த்திடுங்கள்.
தோல் பை, தோல் செருப்புக் கடைக்காரர்களும், தொழிற்சாலைகளில் கடினமான வேலை செய்பவர்களும், பழைய பொருட்கள் விற்பனை, சுரங்கத் தொழில் செய்பவர்களும் சிவப்பு நிறத்தைத் தவிர்த்துவிடுங்கள்.
பழைய பேப்பர் கடை வைத்திருந்தாலும் சரி; மாபெரும் சுரங்கம் வைத்து அதன் அதிபராக இருந்தாலும் சரி- நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்துகொண்டே இருந்தால் அங்கு சிவப்பு, ஆரஞ்சு வண்ணங்களைத் தவிர்த்துவிட்டு, ஊதா அல்லது கிரே கலர் பயன்படுத்திப் பாருங்களேன். முதலாளிகளிடம் ஏற்படும் ஒரு எதிரி மனப்பான்மை குறைந்து உங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளிகள் நட்புடன் வேலை செய்ய ஆரம்பிப்பார்கள்.
ராகு- கேதுக்கள்
இந்த இரு பாம்பு கிரகங்களுக்கும் பொதுவான பகை கிரகங்கள் சூரியனும் சந்திரனும். ஏனெனில் இவ்விரு கிரக சம்பந்தம் ஏற்படும்போது கிரகண நிலை ஏற்பட்டுவிடும்.
ராகுவுக்கு செவ்வாயும், கேதுவுக்கு சனியும் பகைவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ராகுவின் நிறம் கருப்பு. கேதுவின் வண்ணம் பழுப்பு அல்லது பல வண்ணம்.
பொதுவாக ராகு- கேதுக்களின் செயல்பாடுகள் சற்றே மறைமுகமாக நடக்கும். இவர்கள் எந்த கட்டுப்பாட்டுக்கும் அடங்காதவர்கள். அதனால்தான் எல்லா கிரகங்களும் ஒரு பக்கமாக சென்றால் இவ்விரு கிரகங்களும் எதிராகச் சுற்றுவர். எனவே ராகு- கேதுவைப் பொருத்தவரை இந்த வண்ணம் நல்லது- இந்த நிறம் கெட்டது என்ற பாகுபாடே வேண்டாம். "போங்கடா நீங்களும் உங்கள் வண்ணங்களும்' என்று அவர்கள் நினைத்தபடி தாறுமாறாக சுற்றி, ஜாதகர்களையும் சுற்றலில் விடுவர்.
அவர்களுக்குப் பிடித்த வண்ணம்- பிடிக்காத வண்ணம் என எதனைப் பயன்படுத்தினாலும், அதையெல்லாம் ராகு- கேதுக்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.
அதெல்லாம் மற்ற கிரகங்களுக்குதான். பாம்பு கிரகங்களுக்கு அல்ல.
வாழ்க்கை ஒழுங்காக, தடையில்லாமல் செல்ல எதனைப் பயன்படுத்த வேண்டும்- எதனைத் தவிர்க்க வேண்டும் என்ற சூட்சுமம் மனிதர்களுக்கு கண்டிப்பாகத் தெரியவேண்டும். வாழ்க்கை மேன்மையடைய, முதலில் ஒருவருக்கு "நோ' (சஞ) சொல்லத் தெரியவேண்டும் என்பர். வாழ்க்கை முன்னேற்றக் குறிப்புகளின் முதல் பாடம் இதுவாகத்தான் இருக்கும். இதனைப் படிக்கும்போது எளிதாகத் தோன்றலாம். ஆனால் நடைமுறை வாழ்வில் "நோ', "இல்லை', "மாட்டேன்', "முடியாது' என்று கூறுவது மிகமிகக் கடினம்.
சிலவற்றைத் தவிர்த்தால் வாழ்க்கை வண்டி சிக்கலிலில்லாமல் ஓடும். அதுபோல் சில வண்ணங்களைத் தவிர்த்தால், வாழ்க்கை எளிதாக அமையும். வண்ணங்களே வாழ்க்கைத் தடையாக விட்டுவிடாதீர்கள்.
செல்: 94449 61845