ன்பது கிரகங்களுக்கும் தனித்தனி உருவம், குணம், உலோகம், தானியங்கள், மலர், சுவை, ரத்தினம், நிறம், தேவதை என தனித்துவமான செய்திகள் ஜோதிடத்தில் காணக்கிடைக்கின்றன.

கிரகங்களும் வண்ணங்களும்

Advertisment

மேற்கூறிய கிரகங்களின் தனித்துவத்தில் வண்ணம் என்ற நிறம் பற்றி ஆராய்வோம்.

எந்த கிரகத்துக்கு எவ்வண்ணம்?

சூரியன்- சிவப்பு, மஞ்சள், மெருன்.

சந்திரன்- வெள்ளை.

செவ்வாய்- சிவப்பு, ரோஸ், மெஜந்தா.

புதன்- பச்சை.

குரு- மஞ்சள், பிஸ்கட் கலர்.

சுக்கிரன்- வெள்ளை.

சனி- கறுப்பு, ஸ்கை ப்ளூ, டல் கிரே.

ராகு- கறுப்பு.

கேது- சிவப்பு.

இதுவல்லாது எல்லா கிரகங்களும் தனித்தன்மையான தொழில் வகைகளைக் கொண்டிருக்கும். அந்தத் தொழில் செய்பவர்கள், அந்த கிரகத்திற்குரிய நிற உடைகளைப் பயன்படுத்தும்போது அவர்கள் வாழ்வு செழிப்பாகத்தான் இருக்கும்; ஐயமில்லை.

கிரகங்கள் அனைவரும் ஒருவரோடொருவர் நட்பு பாராட்டி, கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார்களா என்றால் இல்லவேயில்லை. ஒவ்வொரு கிரகத்துக்கும் வேறொரு கிரகம் பகையாக இருக்கும். ஒரு ஜாதகர் ஒரு கிரக தத்துவத் தொழிலைச் செய்துகொண்டு அதற்குப் பகை கிரக நிறப்பொருட்களை- ஆடைகள் அணிந்தால் என்னவாகும்- தொழிலில் வெற்றி கிட்டாது.

Advertisment

கிரகங்களில் யாருக்கு யார் பகை? சூரியன் ஷ் சுக்கிரன், சனி, ராகு, கேது. சந்திரன் ஷ் புதன், சுக்கிரன், சனி, ராகு, கேது. (சில நூல்களில் சந்திரனுக்கு பகை கிரகங்களே கிடையாது என கூறப்பட்டுள்ளது).

செவ்வாய் ஷ் புதன், சனி, ராகு.

புதன் ஷ் சந்திரன், செவ்வாய், குரு, கேது.

குரு ஷ் புதன், சுக்கிரன்.

சுக்கிரன் ஷ் சூரியன், சந்திரன், குரு.

சனி ஷ் சூரியன், சந்திரன், செவ்வாய், கேது.

ராகு ஷ் சூரியன், சந்திரன், செவ்வாய்.

கேது ஷ் சூரியன், சந்திரன், சனி.

பொதுவாக எந்த கிரகத்துக்கு எந்த நிறத்தைப் பயன்படுத்தினால் வாழ்வு உயரும் என குறிப்பிடுவர். இப்போது எந்த கிரக காரகத்துக்குரிய தொழில் செய்வோர், எந்த நிறத்தைப் பயன்படுத்தக்கூடாது என பட்டியலிடுவோம்.

சூரியன்

சூரியனின் நிறம் சிவப்பு. சூரியனின் முக்கியமான தொழில் அரசு, அரசு சார்ந்த பணிகள், முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்கள், அரசு நிர்வாகப் பொறுப்பில் உள்ளோர், தங்கம், மாணிக்க நகைக் கடைக்காரர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள் போன்ற சூரிய கிரக தத்துவத் தொழில் செய்வோர் ரத்தச்சிவப்பு நிறம் சார்ந்த பொருட்களை- உடைகளைப் பயன்படுத்த ஏற்றது. அல்லது மெருன் கலர் பயன்படுத்தலாம்.

Advertisment

சூரியனின் பகை கிரகங்கள் சுக்கிரன், சனி, ராகு, கேது. சுக்கிரன் வெண்மை நிறத்தையும், சனி கறுப்பு நிறத்தையும் குறிப்பர்.

மேற்கண்ட சூரிய சம்பந்த வேலை செய்வோர், பயன்படுத்தக் கூடாத நிறங்கள்.

சுக்கிரன் - வெள்ளை

சூரிய சார்புடைய தொழில்புரிவோர் வெள்ளை நிறத்தைப் பயன்படுத்தக் கூடாது. சுக்கிரன் வீட்டில் சூரியன் நீசமாவார். எனவே வெள்ளை நிறம் பயன்படுத்தினால் தொழிலில் பின்னடைவும், கௌரவக் குறைச்சலும், ஒரு தேக்க நிலையும் ஏற்பட்டுவிடும். பெண்களால் அவமானமும் வரக்கூடும். மேலும் அழகான வெள்ளை நிற மாளிகையை ஆசையாகக்கட்ட, அதுவே வீழ்ச்சிக்குக் காரணமாகிவிடும். எனவே பெரிய அரசுப் பதவிகளில் இருப்போர் கூடியமட்டும் வெள்ளை நிறத்தைத் தவிர்ப்பது சாலச்சிறந்தது.

சனி- கறுப்பு

கிரே, ஊதா நிறங்கள் சனியின் வண்ணங்கள் ஆகும். சூரியனுக்கும், சனிக்கும் பெரும் பகை. சனிக்கு, சூரியனைக் கண்டால் ஆகவே ஆகாது.

இதன்மூலம் சூரியனை வெறுக்கும் சனி கிரக நிறங்களை சூரியன் சார்புடைய தொழில் செய்வோர் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.

அவ்வாறு பயன்படுத்தினால் அரசியலில் முன்னேற்றம் இராது. காலப்போக்கில் காணாமல் போகவும் வாய்ப்புள்ளது. சனிக்கு முதன்மையான பகை கிரகம் என்றால் அது சூரியன்தான். எனவே அரசு அதிகாரிகள், அரசு சார்பு தொழில் புரிவோர், கறுப்பு, ஊதா, கிரே கலர்களைத் தவிர்த்திடுங்கள்.

perumal

சில நூல்கள் சூரியனுக்குப் பகையாக ராகு- கேதுவைக் குறிப்பிட்டுள்ளன. ஆனால் "உத்தர காலாம்ருதம்' சூரியனுக்குப் பகை என சனியையும் சுக்கிரனையும் மட்டுமே குறிப்பிட்டுள்ளது. எனினும் சூரியன், பாம்பு கிரகங்களான ராகு- கேது சம்பந்தம் பெறும்போது கிரகண நிலையை அடைவார். எனவே கறுப்பு நிறத்தை சூரிய கிரக தத்துவத் தொழில் புரிவோர் தவிர்ப்பது நலம்.

சூரிய சார்புடைய தொழில்களில் உள்ளோர், சிவப்பு, மெஜந்தா, அரக்கு, ஆரஞ்சு என சிவப்பு நிறத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணங்களைப் பயன்படுத்த வாழ்வின் போக்கு எளிதாகும்.

சந்திரன்

"உத்தரகாலாம்ருதம்' சந்திரனுக்கு எந்த கிரகமும் பகையில்லை என குறிப்பிட்டுள்ளது. எனினும் வேறுசில மூல நூல்களில் புதன், சுக்கிரன், சனி, ராகு- கேது என உள்ளது. பொதுவாக சந்திரனுக்கு எந்த கிரகமும் பகையில்லை என்றே கூறுவர். எனினும் சந்திரனுக்கு, ராகு- கேது சம்பந்தம் ஏற்படும்போது கிரகண நிலை ஏற்பட்டு பாதிப்பு ஏற்படலாம்.

சந்திரனின் காரக நீர்த் தொடர்புத் தொழில்கள் கொண்டோர் கறுப்பு நிறத்தைத் தவிர்த்துவிடுங்கள்.

உணவு விடுதிகள், உணவு பரிமாறுவோரும் கறுப்பு நிறம் பயன்படுத்தக்கூடாது.

சந்திரன், உணவு சம்பந்தமான விவசாயத்தைக் குறிப்பதால் விவசாயிகளும் கறுப்பு நிறம் பயன்படுத்தாதீர்கள்.

மேலும் சந்திரனின் காரகத்தொழிலான வைர வியாபாரம், முத்து விற்பனை, மீன் விற்பனை, அரிசி, தயிர் வியாபாரம், பூ வியாபாரம், வெளிநாடு சம்பந்தத் தொழில் போன்ற சம்பந்தபட்டோர் கறுப்பு நிறத்தைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும். கறுப்பு நிறத்தைப் பயன்படுத்தினால், யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழும் நிலை ஏற்படலாம்.

கறுப்பு தவிர்த்து பிற வண்ணங்களைப் பயன்படுத்தலாம். முக்கியமாக வெள்ளை நிறம் பயன்படுத்த தடையில்லா வாழ்வு பெறலாம்.

செவ்வாய்

செவ்வாய்க்கு புதன், சனி, ராகு போன்ற கிரகங்கள் பகை. ஆனால் சில நூல்கள் சனி சமம் எனவும் கூறுகிறது. எனவே செவ்வாய்க்கு புதன் மட்டுமே கடும்பகை எனக் கொள்ளலாம்.

செவ்வாயின் காரகத் தொழில்களில் முக்கியமானது காவல், இராணுவம், தீயணைப்புத் துறைதான். எனவே செவ்வாயின் நிறமான சிவப்பு அல்லது அரக்கு நிறம், மெஜந்தா போன்றவை ஏற்புடையவை. அதுவல்லாது இத்தொழில் புரிவோர் அதன் எதிரி கிரக நிறமான பச்சை நிறத்தை (செவ்வாய்க்கு பகை புதன்; புதனின் நிறம் பச்சை) பயன்படுத்தினால் நிறைய தடைகள் ஏற்படும். அளப்பரிய குழப்பங்கள் உண்டாகும். ஒருவித தெளிவில்லாத நிலை ஏற்பட்டு, பணியில் தொய்வுண்டாகும்.

செவ்வாயின் அடுத்த முக்கிய தொழில் விவசாயம். செவ்வாய் பூமிகாரகன். எனவே பூமி சம்பந்தத் தொழில் புரிவோர் கண்டிப்பாக பச்சை வண்ணத்தை பகிஷ்கரிக்க வேண்டும், நீங்கள் வண்ணத்தைப் பயன்படுத்த பயன்படுத்த விவசாயம் செய்யவே முடியாத நிலை உண்டாகிவிடும். (தற்போதைய காலகட்டத்தில் விவசாயிகள் அணிந்துள்ள துண்டின் நிறத்தை கவனியுங்கள். உள்ளங்கை நெல்லிக்கனிபோல், இவ்வுண்மை புரிபடும்). பூமி சம்பந்தமான ரியல் எஸ்டேட் தொழில்புரிபவர்களும் பச்சை வண்ணத்தைப் பக்குவமாக விலக்குங்கள்.

செவ்வாய், பானை உள்ளிட்ட சமையல் கலைக்கும் உரியவர். எனவே சமையல் கலைஞர்களும் பச்சை வண்ணத்தை ஒதுக்கிவிடுங்கள்.

இரும்பு, பொறியியல், மின்சாரத்துறையினரும் பச்சை நிறம் தவிர, மற்ற வண்ணங்களைப் பயன்படுத்தவும்.

பொதுவாக செவ்வாய் காரகத் தொழில்களுக்கு சிவப்பு, பிங்க், ரோஸ், மெஜந்தா போன்ற சிவப்பு நிறத்தை அடிப்படையாகக் கொண்ட நிறங்களே ஏற்றவை. வாழ்வு செழிப்பாக செவ்வனே நடக்கும்.

புதன்

புதன் கிரகத்தின் வண்ணம் பச்சை. புதனின் எதிரி கிரகங்களாக சந்திரன், செவ்வாய், குரு, கேது குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆயினும் "உத்தரகாலாம்ருதம்' புதனின் எதிரி கிரகமாக சந்திரனை மட்டுமே கூறியுள்ளது. எனினும் புதனும் செவ்வாயும் பகை கிரகங்கள்தான். குரு, கேது சமம் என கூறப்பட்டுள்ளதால் அதனை விட்டுவிடலாம்.

புதனின் வண்ணம் பச்சை. அவரின் எதிரி கிரக சந்திரனின் நிறம் வெண்மை. ‘புதனின் முக்கியத்தொழில் கல்விதான். எனவே கல்வி சம்பந்தமான வேலை செய்வோர், தொழில்புரிவோர் வெள்ளை நிறத்தை விலக்குவது உத்தமம். இப்போது எல்லாருக்கும் ஒரு சந்தேகம் வரலாம். கல்விக்குரிய சரஸ்வதி தேவியே வெள்ளைநிற வஸ்திரம் அணியும்போது நாம் ஏன் அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்? சரஸ்வதி எனும் சாரதாம்பிகை அம்பாளுக்கு எல்லா நிறமும் உகந்தது.

நாம் மானுடர்கள். "எத்தை தின்றால் பித்தம் தெளியும்' என்று அலைந்து கொண்டிருக்கும் நிலை. அதன் ஒரு பகுதியாக, புதனுக்குரிய பச்சை நிறத்தைப் பயன்படுத்தி, எதிரி கிரகமான வெள்ளை நிறத்தைத் தவிர்த்தால் ஏதேனும் நல்லது நடக்கும். குழந்தைகள் படிப்பில் முதன்மை பெறுவார்கள் என்ற நம்பிக்கைதான். நம்பிக்கைதானே வாழ்க்கை.

புதனின் அறிவு சார்ந்த தொழில்களைப் பின்பற்றுவோர் உங்கள் தொழிலிலில் ஏற்ற கிரகங்கள் இருப்பின் பரீசாட்த்தமாக சில நாளுக்கு வெள்ளை நிறத்தைத் தவிர்த்துதான் பாருங்களேன்.

புதன், பத்திரிகை போன்ற எழுத்துப் பணிகளைக் குறிப்பார். எனவே பத்திரிகை நடத்துவோர், தனியார் நூலகங்கள் நடத்துவோர், பள்ளிப் பயன்பாட்டு பொருட்கள் விற்பனை செய்வோர், கணக்கு சார்ந்த ஆடிட்டிங் போன்ற தொழில் செய்வோர், தனியார் நர்ஸரி நடத்துவோர் உங்கள் தொழில் செய்யும் இடத்தில் வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துவதை கூடியமட்டும் குறையுங்கள். தொழில் சார்ந்த பச்சை நிறத்தின் பயன்பாட்டை அதிகரியுங்கள். வாழ்க்கை பலம் அதிகரிக்கும்.

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

செல்: 94449 61845