இவ்வாண்டு ஏற்றம் பெறும் தொழில்கள் எவை? ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/what-are-booming-industries-year-r-mahalakshmi

நாடி ஜோதிடம் ஜாதகரைக் குறிக்க குரு கிரகத்தையே முக்கியமாக எடுத்துக்கொள்ளும். லக்னத்தை அவ்வளவு முக்கியமாகக் கொள்ளாது. அதுபோல சகோதரனைக் குறிக்க செவ்வாயின் நிலையும், மனைவியைக் குறிக்க சுக்கிரனின் இருப்பையும், கணவனைக் குறிக்க செவ்வாயின் நிலைப்பாட்டையும், தொழிலைக் குறிக்க சனியைக் கொண்டும் பலா

பலன்களை நிர்ணயம் செய்யும்.

எனவே சனியின் நிலையைக்கொண்டு தொழில்நிலையைத்தெளிவாக அறிந்துகொள்ளலாம். இந்த வருட- அதாவது2018-ன் தொழில்நிலை எவ்வாறுஎன்பதை சனியைக் கொண்டுஅறியலாம்.

தற்போது சனி, தனுசு ராசியில் சஞ்சாரம். இரண்டரை வருடத்துக்கு அவர் தனுசு ராசியில்தான் பயணப்பட்டுக் கொண்டிருப்பார்.

தனுசு ராசியின் இரண்டேகால் நட்சத்திரத்தில் அவர்கோட்சாரப்படி சுற்றுவார். இரண்டேகால் நட்சத்திரம் என்பது ஒன்பது பாதங்கள் உடையது. இந்த ஒன்பது பாதங்களையும் சனி கடக்கும்போது, ஒரு நட்சத்திரத்தின் நான்கு பாதங்களைக் கடக்கஒரு வருடம் எடுத்துக்கொள்வார்.

அதன்படி ஒரு பாதம் கடக்கஏறக்குறைய மூன்று மாதம்,பத்து நாட்கள் என்றாகிறது.

sivan

சனி, தனுசு ராசியில் முதலில்மூலம் எனும் கேது சார நட்சத்திரத்திலும், அடுத்து பூராடம்எனும் சுக்கிர சார நட்சத்திரத்திலும், பின் உத்திராடம் எனும் சூரிய சார நட்சத்திரத்திலும் ஊர்ந்து செல்வார்.

இந்த 2018-ல் சனி அனேகமாக மூல நட்சத்திரத்தில் செல்வார். இடையில் பூராட நட்சத்திரம் சென்றாலும், வக்ரகதி அடைந்துமறுபடியும் மூல நட்சத்த

நாடி ஜோதிடம் ஜாதகரைக் குறிக்க குரு கிரகத்தையே முக்கியமாக எடுத்துக்கொள்ளும். லக்னத்தை அவ்வளவு முக்கியமாகக் கொள்ளாது. அதுபோல சகோதரனைக் குறிக்க செவ்வாயின் நிலையும், மனைவியைக் குறிக்க சுக்கிரனின் இருப்பையும், கணவனைக் குறிக்க செவ்வாயின் நிலைப்பாட்டையும், தொழிலைக் குறிக்க சனியைக் கொண்டும் பலா

பலன்களை நிர்ணயம் செய்யும்.

எனவே சனியின் நிலையைக்கொண்டு தொழில்நிலையைத்தெளிவாக அறிந்துகொள்ளலாம். இந்த வருட- அதாவது2018-ன் தொழில்நிலை எவ்வாறுஎன்பதை சனியைக் கொண்டுஅறியலாம்.

தற்போது சனி, தனுசு ராசியில் சஞ்சாரம். இரண்டரை வருடத்துக்கு அவர் தனுசு ராசியில்தான் பயணப்பட்டுக் கொண்டிருப்பார்.

தனுசு ராசியின் இரண்டேகால் நட்சத்திரத்தில் அவர்கோட்சாரப்படி சுற்றுவார். இரண்டேகால் நட்சத்திரம் என்பது ஒன்பது பாதங்கள் உடையது. இந்த ஒன்பது பாதங்களையும் சனி கடக்கும்போது, ஒரு நட்சத்திரத்தின் நான்கு பாதங்களைக் கடக்கஒரு வருடம் எடுத்துக்கொள்வார்.

அதன்படி ஒரு பாதம் கடக்கஏறக்குறைய மூன்று மாதம்,பத்து நாட்கள் என்றாகிறது.

sivan

சனி, தனுசு ராசியில் முதலில்மூலம் எனும் கேது சார நட்சத்திரத்திலும், அடுத்து பூராடம்எனும் சுக்கிர சார நட்சத்திரத்திலும், பின் உத்திராடம் எனும் சூரிய சார நட்சத்திரத்திலும் ஊர்ந்து செல்வார்.

இந்த 2018-ல் சனி அனேகமாக மூல நட்சத்திரத்தில் செல்வார். இடையில் பூராட நட்சத்திரம் சென்றாலும், வக்ரகதி அடைந்துமறுபடியும் மூல நட்சத்திரத்திற்கே வந்துவிடுகிறார்.

இதன்படி, சனி, மூல நட்சத்திரத்தின் கேது சாரத்தில் இவ்வருடத்தை அனேகமாகக் கடக்கிறார். இதன்பொருட்டு, இவ்வருடத்தில் எத்தகைய தொழில்கள் மேன்மையடையும் என்று காண்போம்.

சனியின் குணத்தை கவனித்தால் மந்தத்தனம், சோம்பேறித்தனம், தொழிலுக்குக்காரகர், அடிமட்ட வேலை செய்யும் செயல்களுக்கு உரியவர், தாமதப்படுத்தும் குணம் கொண்டவர், தடைசெய்யும் தன்மை கொண்டவர் என சொல்லிக்கொண்டே போகலாம்.

இவர் பயணம் செய்யும் மூல நட்சத்திர கேது சார குணங்கள் என்னவென்று பார்த்தால் பிரிக்கும் தன்மை கொண்டது; தடை, தாமதம் செய்யும் குணமுடையது; தளரச்செய்யும் தன்மையது; வெட்டிவிடும் வேலை உடையது; பெயரச் செய்யும் முனைப்பு கொண்டது; பகிரச் செய்யும் பண்புடையது; பிரிவினை உண்டாக்கும் சக்தியுள்ளது; எதிலும் ஒட்டாமலிருக்கும் சந்நியாச மனோபாவம் ஏற்படுத்துவது; விட்டு ஓடும் இயல்புடையது; வீண் விவாதம் கொள்வது; வதந்தி பரப்புவது; கலப்படம் செய்யத் தூண்டுவது; சதிவேலை செய்வது என சொல்லிக்கொண்டே போகலாம்.

இவ்வருடம், சனி பகவான் தொழிலின் காரகராகி, கேதுவின் சாரத்தில் சஞ்சாரம் செய்வார். எனில் இவ்வருடம் எந்த தொழில்கள் ஏற்றம்பெறும்?

முதல் மூன்று மாதங்கள் சனி, கேது 1-ஆம் பாதத்தில் செல்வார். அப்படியாயின் சனி அம்சத்தில் நீசம்பெறுவார். கேதுவின் 1-ஆம் பாதம், மேஷ அம்சம் பெறும். மேஷத்தில் சனி நீசமடைவார்.

இந்த நீச அம்ச சனியின் மூன்று மாத காலத்தில் தொழில் ஓடுமா என்றால்ஓடாது. தொழில் நடக்குமா என்றால் நடக்காது. அப்படி என்றால் தொழிலின் நிலை என்ன? படுத்துவிடும். தொழிலுக்கு- வேலைக்கு "உயிர் இருக்கா இல்லையா' என தண்ணீர் தெளித்துக் கண்டுபிடிப்பதிலேயே மாதங்கள் ஓடிவிடும். ஒன்றுதொழிலாளர்களுக்குள் பிரிவினைஏற்பட்டு தொழில் ஓடாது. அல்லது தொழில்களை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி தொழிலை ஸ்தம்பிக்கச் செய்வர்.

(சனி, தற்போது காலபுருஷனின் 9-ஆமிடம் எனும் தனுசில் சஞ்சரிக்கிறார்.

9-ஆமிடம் பயணத்தைக் குறிப்பது. தற்போது பயணம் சம்பந்தமான பிரச்சினை ஓடிக்கொண்டிருப்பது கண்கூடு).

முதல் மூன்று மாதம் சென்றபிறகு ஏற்றமடையும் தொழில்கள்.

ஆன்மிகவாதிகள் தங்களுக்குள் பிரிந்து வேறுவேறு மடங்கள், வேறு கோவில்கள், வேறு ஸ்தாபனங்கள் தொடங்குவர். இதன்மூலமுள்ள வேலைகளும் தொழில்களும் பெருகும்.

அரசியலில் நிறைய கட்சிகள் தோன்றும். அல்லது இருக்கிற கட்சிகள் பிரியும். இதனால் கட்சி சார்புடைய தொழில்கள் செழித்தோங்கும்.

ஜோதிடர்கள் நிறைய பெருகி,மானாவாரியாக ஜோதிடப் பத்திரிகைகள் ஆரம்பிக்கப்படும். இதன்மூலம் ஜோதிடமும், பத்திரிகைத் தொழிலும் வளரும்.

நிறைய ஆன்மிகப் பத்திரிகை வர ஆரம்பிக்கும். அது சார்ந்த எழுத்தாளர்களும், பத்திரிகை அலுவலகமும் வேலைபெறும்.

பல் பிடுங்கும் பல் மருத்துவத்துறையில் நிறைய வேலை இருக்கும்.

சித்தர்கள் சமாதி, சித்தர் பீடங்களை உனக்குப் பாதி, எனக்குப் பாதி என பிரித்து வேறு பெயரில் நடத்த ஆரம்பிப்பர். அது சார்ந்த வேலை, தொழில் பெருகும்.

கட்டடத் தொழிலில் பிரித்து சேர்க்கும் வகையில் அல்லது கற்களைப் பொடித்துப் பயன்படுத்தும் வகையில் தொழில் ஏற்றம் பெறும்.

பழைய கட்டடங்களைப் பிரித்து புதிதுபோல கட்டும் தொழில் வளரும்.

தையல் தொழில் மிக மேன்மை பெறும்.

கேது ஆகாயத்தைக் குறிப்பார். சனி இயந்திரத்தைக் குறிப்பார். எனவே விமானம்,அது சார்ந்த தொழில்களும் வேலைகளும் பல்கிப்பெருகும்.

பழமையான பட்டுப்புடவைகள்அல்லது அதனைத் தயாரிக்கும் முறையிலுள்ள தொழிலும், வேலையும் புதுப்பொலிவு பெறும்.

அழுக்கு நீக்கும் அழகு நிலையங்கள் பெருகும்.

அழகு சம்பந்தமான மருத்துவமனைகள் நிறைய வேலைவாய்ப்பு பெறும்.

பழமையான இனிப்புகள், உணவகங்களின் பெருமை உணரப்பட்டு மேன்மை பெறும்.

தோல் பொருட்கள் சம்பந்தமான தொழில், வெட்டி ஒட்டுதல் என்ற முறையில் ஏற்றுமதி தொழில் அதிகரிக்கும்.

பழமையான ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகள் பரவலாகப் பயன்படுத்தப்படும். இது சார்ந்த மருத்துவர்கள், மருத்துவத் தொழில் பல்கிப் பெருகும்.

கால்நடைத்துறை மேம்பாடு அடைவதுமட்டுமல்லாமல், அதன் கழிவுகளும்உரிய முறையில் பயன்படுத்தும் தொழில்கள் வளரும்.

வருமான வரித்துறை நிறைய வேலை பார்த்து, சிலசமயம் கணக்குகளைத் தணிக்கை செய்யும். அது சம்பந்தமான ஆடிட் வேலை மிகும்.

பழைய ஆடைகள் விற்பனை, பழைய நகைகள் விற்பனை அல்லது மாற்றி விற்றல் என்பன போன்ற தொழில் பெருகும்.

செவிலியர்களை உருவாக்கும் கல்லூரிகள் பெருகும்.

சுரங்கத் தொழிலாளர்கள் அதிக வேலை வாய்ப்பு பெறுவர். சுரங்கத்தொழில் விரிவடையும்.

அறுவை சிகிச்சைக் கருவிகள் தயாரிக்கும் தொழில் மேன்மை பெறும்.

நதி நீரைத் தடுக்கும் அணைக்கட்டு, தடுப்பணை சம்பந்தமான தொழில் நிறைய நடக்க ஆரம்பிக்கும்.

மொழிமாற்றம் சம்பந்த வேலைகள் அதிகரிக்கும்.

கைபேசி வகைக் கடைகள், தொழில்கள் பெருகும்.

சனி கேதுவின் சாரத்தில் செல்லும்போது, கள்ளக் கையெழுத்து, சட்டத்தை மீறுதல், கள்ளக்கடத்தல் போன்ற இன்னபிற சம்பவங்கள் அதிகரிப்பதால், காவல்துறையின் பெண்டு நிமிர்ந்துவிடும்.

விவசாயத்தில் வரப்புபிரிப்பது, குழாய் பதிப்பது போன்ற சம்பந்தம் கொண்டோருக்கு வேலை இருந்துகொண்டே இருக்கும்.

மின்கம்பிகள் சம்பந்த தொழிலும் வேலையும் நடந்துகொண்டேஇருக்கும்.

கோவில்களில் மொட்டை போடுதல் சம்பந்த வேலை மிகும்.

வெளிமாநிலம், வெளிநாடு, வேறு மதம் சம்பந்த மனிதர்கள் பலதரப்பட்ட வேலைகள் செய்வதை இன்னும் அதிகமாகக் காணலாம்.

இதுபோன்ற வெட்டி ஒட்டும் தொழில்கள், பிரிக்கும்- தடுக்கும் தொழில்கள் இந்த வருடம் ஏற்றம் காணும். தண்ணீரைச் சுருக்கினால் பனிக்கட்டி ஆகிவிடும். இதுபோன்ற தொழில்களுக்கு இந்த வருடம் வாய்ப்பு அதிகம்.

2018-ல் சனி, கேது சாரத்தில் செல்லும்போது இவ்வகையான தொழில்களுக்கு வாய்ப்பு அதிகமிருக்கும். தேடுங்கள்; கிடைக்கும்.

செல்: 94449 61845

இதையும் படியுங்கள்
Subscribe