Advertisment

இந்த வார ராசி பலன் 23-6-2019 முதல் 29-6-2019 வரை

/idhalgal/balajothidam/weeks-zodiac-results-23-6-2019-29-6-2019

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கும்பம்.

24-6-2019- மீனம்.

27-6-2019- மேஷம்.

29-6-2019- ரிஷபம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: திருவாதிரை- 1, 2, 3.

செவ்வாய்: புனர்பூசம்- 3, 4, பூசம்- 1.

புதன்: புனர்பூசம்- 3, 2.

குரு: கேட்டை- 3.

சுக்கிரன்: ரோகிணி- 4, மிருகசீரிடம்- 1, 2, 3.

சனி: பூராடம்- 2, 1.

ராகு: புனர்பூசம்- 1.

கேது: பூராடம்- 3.

கிரக மாற்றம்:

புதன், குரு, சனி வக்ரம்.

செவ்வாய் அஸ்தமனம்.

24-6-2019- கடகச் செவ்வாய்.

29-6-2019- மிதுனச் சுக்கிரன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் இந்த வாரம் திங்கட்கிழமை (24-6-2019) கடகத்துக்கு மாறுகிறார். அது அவருக்கு நீச ஸ்தானம். ராசிநாதன் அல்லது லக்னநாதன் நீசமடைவது பலக்குறைவு. ஆகஸ்ட் 10-ஆம் தேதிவரை நீசமாக இருக்கிறார். பிறகு சிம்மத்துக்கு மாறுவார். எனவே இக்காலம் மேஷ ராசியில் பிறந்தவர்களும், மேஷ லக்னத் தில் பிறந்தவர்களும் கற்பனை பயம், கௌரவப் பிரச்சினைகள், மனக்குழப்பம் எல்லாவற்றையும் சந்திக்கவேண்டும். சிலசமயங்களில் சரியானதாகவும் நியாயமானதாகவும் தெரிந்தாலும், அந்தக் கருத்தைப் பிறரிடம் வலியுறுத்திச் சொல்லாமல், பேசாமல் மௌனத் தைக் கடைப்பிடிப்பது நல்லது. ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் ஆரோக்கியம், பூமி, மனை, வீடு, வாகனம் போன்றவற்றில் தவிர்க்கமுடியாத செலவுகளைச் சந்திக்கவேண்டும். கடகச் செவ்வாயை விருச்சிக குரு பார்க்கப் போவதால், நீசச் செவ்வாயின் கெட்டபலன் குறைய வாய்ப்புண்டு. அதற்குப் பரிகாரம் தெய்வ பக்தியும் பூஜை வழிபாடுகளும்தான். ஒருசில குடும்பங்களில் முன்னோர்கள், மூதாதையர்கள், குடும்பத்தில் சுமங்கலியாக இறந்தவர்கள் ஆகியோரை வழிபாடு செய்யவேண்டும். திருக் குறளில் அப்படிப்பட்டவர்களுக்குதான் முதல் மரியாதையும் பூஜையும் சொல்கிறார். பிறகுதான் தெய்வ வழிபாடு. "தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.' இந்த ஐந்தும் இல்லறத்தில் கடைப்பிடித்தல் நல்லறமாகும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி 2020 டிசம்பர்வரை இருக்கிறது. சனிக்கு வீடுகொடுத்த குரு 7-ல் நின்று ராசியைப் பார்க்கும்வரை அட்டமத்துச்சனி உங்களுக்குப் பொங்கு சனியாக நன்மைகள் செய்யும். அக்டோபர் 29-ஆம் தேதிவரை குரு விருச்சிகத்தில் இருக் கிறார். பிறகு தனுசுவுக்கு- ராசிக்கு 8-ல் மறைவார். அப்போதும் குரு ஆட்சிபெற்று சனியோடு சேர்ந் திருப்பதால் சனியின் தாக்கம் குறையும். குரு சேர்ந்தாலும், பார்த்தாலும் அந்த ராசி, லக்னத் துக்கும் அல்லது கிரகத்துக்கும் கெடுபலன் குறையும். உதாரணம், கங்கை நதியில் அசுத் தங்கள் சேர்ந்தாலும் கங்கையின் புனிதம் கெடுவ தில்லை. அசுத்தங்களும் சுத்தமாகிவிடும். அப்படிப்பட்ட ஒரு பெருமை ஒன்பது கிரகங் களில் குருவுக்குதான் உண்டு. கு- என்றால் இருட்டு; ரு- என்றால் போக்குவது. இருளைப் போக்கி ஒளியைப் பரப்பும் கிரகம் குரு ஒருவர்தான். அவருக்கு உச்சம், நீசம், வக்ரம், அஸ்தமனம் போன்ற தோஷங்கள் எதுவு மில்லை. இது விதிவிலக்கு. ஒருவழிப் பாத

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கும்பம்.

24-6-2019- மீனம்.

27-6-2019- மேஷம்.

29-6-2019- ரிஷபம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: திருவாதிரை- 1, 2, 3.

செவ்வாய்: புனர்பூசம்- 3, 4, பூசம்- 1.

புதன்: புனர்பூசம்- 3, 2.

குரு: கேட்டை- 3.

சுக்கிரன்: ரோகிணி- 4, மிருகசீரிடம்- 1, 2, 3.

சனி: பூராடம்- 2, 1.

ராகு: புனர்பூசம்- 1.

கேது: பூராடம்- 3.

கிரக மாற்றம்:

புதன், குரு, சனி வக்ரம்.

செவ்வாய் அஸ்தமனம்.

24-6-2019- கடகச் செவ்வாய்.

29-6-2019- மிதுனச் சுக்கிரன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் இந்த வாரம் திங்கட்கிழமை (24-6-2019) கடகத்துக்கு மாறுகிறார். அது அவருக்கு நீச ஸ்தானம். ராசிநாதன் அல்லது லக்னநாதன் நீசமடைவது பலக்குறைவு. ஆகஸ்ட் 10-ஆம் தேதிவரை நீசமாக இருக்கிறார். பிறகு சிம்மத்துக்கு மாறுவார். எனவே இக்காலம் மேஷ ராசியில் பிறந்தவர்களும், மேஷ லக்னத் தில் பிறந்தவர்களும் கற்பனை பயம், கௌரவப் பிரச்சினைகள், மனக்குழப்பம் எல்லாவற்றையும் சந்திக்கவேண்டும். சிலசமயங்களில் சரியானதாகவும் நியாயமானதாகவும் தெரிந்தாலும், அந்தக் கருத்தைப் பிறரிடம் வலியுறுத்திச் சொல்லாமல், பேசாமல் மௌனத் தைக் கடைப்பிடிப்பது நல்லது. ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் ஆரோக்கியம், பூமி, மனை, வீடு, வாகனம் போன்றவற்றில் தவிர்க்கமுடியாத செலவுகளைச் சந்திக்கவேண்டும். கடகச் செவ்வாயை விருச்சிக குரு பார்க்கப் போவதால், நீசச் செவ்வாயின் கெட்டபலன் குறைய வாய்ப்புண்டு. அதற்குப் பரிகாரம் தெய்வ பக்தியும் பூஜை வழிபாடுகளும்தான். ஒருசில குடும்பங்களில் முன்னோர்கள், மூதாதையர்கள், குடும்பத்தில் சுமங்கலியாக இறந்தவர்கள் ஆகியோரை வழிபாடு செய்யவேண்டும். திருக் குறளில் அப்படிப்பட்டவர்களுக்குதான் முதல் மரியாதையும் பூஜையும் சொல்கிறார். பிறகுதான் தெய்வ வழிபாடு. "தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.' இந்த ஐந்தும் இல்லறத்தில் கடைப்பிடித்தல் நல்லறமாகும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி 2020 டிசம்பர்வரை இருக்கிறது. சனிக்கு வீடுகொடுத்த குரு 7-ல் நின்று ராசியைப் பார்க்கும்வரை அட்டமத்துச்சனி உங்களுக்குப் பொங்கு சனியாக நன்மைகள் செய்யும். அக்டோபர் 29-ஆம் தேதிவரை குரு விருச்சிகத்தில் இருக் கிறார். பிறகு தனுசுவுக்கு- ராசிக்கு 8-ல் மறைவார். அப்போதும் குரு ஆட்சிபெற்று சனியோடு சேர்ந் திருப்பதால் சனியின் தாக்கம் குறையும். குரு சேர்ந்தாலும், பார்த்தாலும் அந்த ராசி, லக்னத் துக்கும் அல்லது கிரகத்துக்கும் கெடுபலன் குறையும். உதாரணம், கங்கை நதியில் அசுத் தங்கள் சேர்ந்தாலும் கங்கையின் புனிதம் கெடுவ தில்லை. அசுத்தங்களும் சுத்தமாகிவிடும். அப்படிப்பட்ட ஒரு பெருமை ஒன்பது கிரகங் களில் குருவுக்குதான் உண்டு. கு- என்றால் இருட்டு; ரு- என்றால் போக்குவது. இருளைப் போக்கி ஒளியைப் பரப்பும் கிரகம் குரு ஒருவர்தான். அவருக்கு உச்சம், நீசம், வக்ரம், அஸ்தமனம் போன்ற தோஷங்கள் எதுவு மில்லை. இது விதிவிலக்கு. ஒருவழிப் பாதையில் (நோ என்ட்ரி) ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், காவல்துறை வாகனங்கள் போகலாமல்லவா! என்றாலும் அட்டமத்துச்சனியின் பாதிப்புக்குறைய காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும். பஸ்ஸில் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணம் செய்யும்போது காற்றின் வேகம் முகத்தில் அடிக்கத்தானே செய்யும்!

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

Advertisment

மிதுன ராசிநாதன் புதன் 24-6-2019 முதல் வக்ரமாகப் பயணிப்பார். ஜூலை 20-ஆம் தேதிவரை வக்ரம். அஸ்தமனம் என்றால் செயலிழப்பு, பலக்குறைவு. வக்ரத்தில் உக்ரபலம். 1, 4-க்குடையவர் ஜென்மத்தில் வக்ரமாக இருப்பதாலும், புனர்பூசம் குரு சாரம் பெறுவதாலும் ஆரோக்கியம், கணவன்- மனைவி உறவு, தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் எந்த பாதிப்புக்கும் இடமில்லை. அதேசமயம் ஜென்ம ராகு 7-ல் சனி- கேதுவுடன் சம்பந்தப்படுவதால், "சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டிபோல' சிலநேரம் பிரச்சினைகள் வெடிப்பதற்கு நீங்களே காரணமாக அமைந்துவிடுவீர்கள். இதை வைத்துதான் "எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற பழமொழி பிறந்தது. சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருப்பதால் போட்டி, பொறமைகள், கடன் தொல்லைகளை சந்தித்து சமாளிக்கும் தைரியம் வரும். ஒருசிலருடைய அனுபவத்தில் உடன்பிறப் புகள், பங்காளிகள் வகையில் நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு. உறவுகள் வகையில் ஏற்படும் பிரிவுகளையும் முறிவுகளையும் வாழ்க்கைத்துணையின் துணைகொண்டு சரிக்கட்டலாம்; சமாதானப்படுத்தலாம். ஆண்கள் என்றால் மனைவியாலும், பெண்கள் என்றால் கணவராலும் சகாயமும் ஆதரவும் எதிர்பார்க்கலாம். தேக சுகத்தில் அவ்வப்போது வைத்தியச்செலவு வந்தாலும் பாதிப்புக்கு இடமில்லை. பயம் வேண்டாம்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 6-ல் சனி, கேது, 12-ல் சூரியன், செவ்வாய், ராகு, புதன் என்று ஆறு கிரகங்களும் மறைகிறார்கள். 5-ஆமிட மாகிய திரிகோணத்தில் குரு அமர்ந்து ராசியைப் பார்ப்பதும், 11-ல் சுக்கிரன் ஆட்சி பெறுவதும் நல்ல பலம். மேலும் 5-ல் உள்ள குரு 9-ஆமிடத்தையும், 11-ஆமிடத்தையும், ஜென்ம ராசியையும் பார்ப்பதால், நூற்றுக்கு நூறு தெய்வபலம் உங்களை வழிநடத்தும். எல்லாக் காரியங்களும் தெய்வத்தால்தான் ஈடேறுகிறது. படைபலமும் பணபலமும் பயனற்றதாகிவிடும். அதேசமயம் பாக்கியாதி பதி குரு 6-க்குடையவர் என்பதால், எந்த ஒரு யோகத்தையும், நன்மையையும் உடனே எதிர்பார்க்க முடியாது. தெய்வம் சோதித்த பிறகுதான் சுகத்தைக் கொடுக்கும். அதனால் தான் சோதனையை சாதனையால் ஜெயிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதிர்ஷ்டம் என்பது அது இஷ்டமாகத்தான் வருமே தவிர, நாம் தேடிப்போவதால் கிடைக்காது. அதை வைத்துதான் விரும்பிப்போனால் விலகிப் போகும்; விலகிப்போனால் விரும்பிவரும் என்று பெரியவர்கள் சொன்னார்கள். எட்டு கிரகங்கள் மறைந்தாலும், ஒரு கிரகம் பலம் பெற்றால் அவர்களுக்கு பாக்கியமும் அதிர்ஷ்டமும் தேடிவரும் என்பது கணக்கு. அந்த அமைப்பு உங்களுக்கு உண்டு. அதை அனுபவத்தால்தான் உணரமுடியும்.

ttt

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 11-ல் பலம் பெறுகிறார். அவருடன் செவ்வாய், புதன், ராகு மூன்றுபேரும் சம்பந்தம். இந்த நான்கு கிரகங்களுக்கும் 11-ஆமிடம்தான் யோக மான இடம். பொதுவாக ஒரு காரியத் தைத் தொடங்குவதற்குமுன் 11-ல் சூரியன் இருக்கும்படி ஒரு லக்னம் அமைத்துக்கொடுத் தால், அந்தக் காரியம் முழு வெற்றிபெற்று நூற்றுக்கு நூறு பலன் தரும். அந்த காலத்தில் "சூரியன், சந்திரன் உள்ள காலம்வரை' என்று சொல்வார்கள். அது சிரஞ்சீவித் தன்மை பெற்று அழியாமல் இருக்கும் என்று அர்த்தம். அதே போல 11-ல் சூரியன் இருக்கும்படியான லக்னத் தில் தொடங்கும் காரியம் வளர்ச்சி பெறும்; தளர்ச்சியடையாது. பணவரவுகள் தாராளமாக அமையும். செலவுகளும் தாராளமாகவே இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டினை குறுகிய காலத்தில் லாபம் பார்த்து சேமித்துவிடலாம். புதிய முயற்சி களிலும் முழுமையான வெற்றி கிடைக்கும். 10-ல் சுக்கிரன் ஆட்சி. அதற்கு குரு பார்வை. வேலைக்குப் போவோருக்கு வெளிநாட்டு யோகம் அமையும். வெளிநாட்டில் இருப்போர் தான் பார்க்கும் வேலையைக் காட்டிலும் உயர்ந்த வேலைக்கோ, கூடுதல் சம்பாத்தியத்திற்கோ மாறலாம். உள்ளூரில் இருப்போர் வெளியூர் களுக்குப் போகும் வாய்ப்புண்டு. திருமணமா காதவர்களுக்குத் திருமண யோகம் கைகூடும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 10-ல் ஆட்சிபெறு கிறார். வக்ரமாகவும் இருக்கிறார். புதன் குரு சாரத்திலும், குரு புதன் சாரத்திலும் சாரப் பரிவர்த்தனை. குருவும் வக்ரம். 10-ல் ராகு. 4-ல் சனி, கேது. ஆக 10-ஆம் பாவத்துக்கு சனி, கேது, ராகு, விரயாதிபதி சூரியன், அட்டமாதிபதி செவ்வாய் சம்பந்தமிருப்பதால், தொழில் முயற்சிகளில் வளர்ச்சி குறையும், தளர்ச்சி காணப்படும். என்றாலும் கிளர்ச்சி அடையாமல் விடாமுயற்சியாக செயல்பட்டால் தோல்வி யைத் துரத்தியடித்துவிடலாம். வெற்றியை வாழ்த்தி வரவேற்கலாம். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறலாம். தொழில், வியாபாரம் தடையின்றி நடைபெறும். தனவரவு களும் தாராளமாக அமையும். பொருளா தாரத்தில் நிறைவும் நிம்மதியும் உண்டாகும். வரவேண்டிய பாக்கிசாக்கி பணம் வரவாகும். அதனால் கொடுக்கவேண்டிய பாக்கிசாக்கி களைக் குறிப்பிட்டபடி கொடுத்து நாணயத் தைக் காப்பாற்றலாம். உடல் ஆரோக்கியத்தில் சில நேரம். நரம்பு, உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிணிபீடைகள் காணப்பட்டாலும், எளிய சிகிச்சை முறையில் குணமாகிவிடும். செவ்வாய், சனி சமசப்தமமாகப் பார்த்துக்கொள்வதால், சிலருக்கு அறுவைச்சிகிச்சை ஏற்பட இடமுண்டு. அதைத் தவிர்ப்பது நல்லது. மாற்றுச் சிகிச்சை முறைகளை எடுத்துக்கொள்ளலாம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைந்தாலும் ஆட்சியாக இருக்கிறார். அவரை குரு பார்க்கிறார். குரு 3, 6-க்குடையவர் என்பதால், அவருடைய பார்வை நல்லதா, கெட்டதா என்ற சந்தேகம் ஏற்படலாம். அத்துடன் குருவும் சுக்கிரனும் பகை என்றும் ஒரு வாதம் உண்டு; ஒரு சந்தேகம் உண்டு. உண்மையில் ஒன்பது கிரகங்களில் குருவும் சுக்கிரனும்தான் முழு சுபர்கள். வளர்பிறைச் சந்திரன், சுபரோடு சேர்ந்த புதன்- சுபர். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய ஐவரும் முழு அசுபகிர கங்கள். சுக்கிரன்- அசுரர்களுக்கு குரு. குரு- தேவர்களுக்கு குரு. இதில் வாதிக்கும் பிரதி வாதிக்கும் வக்காலத்து வாங்கி வாதாடும் வக்கீல்கள்போல வக்கீல்களுக்குள் பகையோ, கருத்து வேறுபாடோ தனிப்பட்ட முறையில் இருக்காது. மேலும் குருவின் வீடான மீன ராசியில்தான் சுக்கிரன் உச்சமடைவார். எனவே குரு, சுக்கிரன் பார்வை பரிபூரண மாக நன்மையைச் செய்யும். அனுகூலமான பலனைத் தரும். குரு, சுக்கிரன் பகைத் தன்மை என்ற வாதத்துக்கே இடமில்லை. 2-ல் உள்ள குரு காரணமாக பொருளாதாரத்தில் பிரச்சினையில்லை. குடும்பச் சூழ்நிலையிலும் பிரச்சினைக்கு இடமில்லை.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் அஸ்தமனமாக இருக்கிறார். அத்துடன் 24-6-2019 முதல் கடகத்தில் (9-ஆமிடத்தில்) நீசமடைவார். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால், தந்தைவழி உறவினர்கள் அல்லது பூர்வீகச் சொத்து விவகாரங்களில் பூகம்பம் வெடிக்கும். இருந்தாலும் ஜென்மத்திலுள்ள குரு கடகத்தில் நீசமான செவ்வாயைப் பார்க்கப்போவதால், தனிப்பட்ட முறையில் அந்த கௌரவப் பிரச்சினைக்கும் இடம் வராது. திறமை, செயல்பாடுகளுக்கும் பங்கம் ஏற்படாது; பாதிப்பும் வராது. ஆனால் ராசிக்கு 2-ல் உள்ள சனியும் கேதுவும், அவரைப் பார்க்கும் ராகுவும், அட்டமாதிபதி புதனும் பொருளாதாரத்தில் தேக்க நிலையை ஏற்படுத்தலாம். வரவு- செலவுகளில் முன்பின் காலதாமதம் ஏற்படலாம். ஒருசிலர் ஒருபுறம் கடனை வாங்கி, இன்னொரு புறம் கடனை அடைக்கலாம். என்றாலும் ராசிநாதன் செவ்வாய் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால், 10.00 மணிக்குத் தருகிறேன் என்று சொன்ன வாக்குறுதியை 12.00 மணிக்குக் காப்பாற்றலாம். அல்லது 2.00 மணிக்குக் காப்பாற்றலாம். பொய்யாகாது; ஏமாற்றமாகாது. கௌரவம் பாதிக்காது. ஆரோக்கியத்தில் கேடுகெடுதிக்கு இடமில்லை. கவலைதான் உடலை வருத்தும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. அதிலும் ஜென்மச்சனி. சனியும் வக்ரம். சனிக்கு வீடுகொடுத்த குருவும் வக்ரம். குரு 12-ல் மறைவு. இவையெல்லாம் தனுசு ராசிக்கு மைனஸ் பாயின்ட்டுகள் என்றாலும், 7, 10-க்குடைய புதன் குருவின் சாரம் பெற்று (புனர்பூசம்), ராசிநாதன் குரு கேட்டையில் புதன் சாரத்திலிலிருந்து, குருவும் புதனும் சாரப்பரிவர்த்தனை பெறுவதால், ஜென்மச்சனி எந்த சுற்றாக இருந்தாலும் உங்களைத் தாக்காது; பாதிக்காது. ஜென்மச்சனி ஒருசிலருக்கு சாப்பிடக்கூட நேரமில்லாதபடி, ஓய்வெடுக்கமுடியாத உழைப்பைத் தரலாம். ஒருசிலருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு கண் உபாதைகளைக் கொடுக்கலாம். வசதிவாய்ப்பு, சௌகரியங்களுக்குக் குறைவில்லை என்றா லும், மனக்குறை இருக்கும். அது காரணம் சொல்லமுடியாத குறையாக இருக்கும். என்றா லும், குரு, சுக்கிரன் பார்வை பலத்தால் எல்லாவற்றையும் சமாளித்து, "குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடுவதோடு, "தெளிவாக இருக்கிறேன்' என்று பேசுவீர்கள். தனிமையில் புலம்பி னாலும் வெளியில் காட்டிக்கொள்ளாதபடி நாளை ஓட்டுவீர்கள். இதுதான் உங்களுக்கு ப்ளஸ் பாயின்ட்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த குரு அதற்கு 12-ல் மறைவு. குருவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் அதற்கு 8-ல் மறைவு. இப்படி அவரவருக்கு மறைவு என்றிருப்பதால், நீச்சல் தெரியாதவன் கிணற்றில் விழுந்தவனைக் காப்பாற்ற கைகொடுத்தால்- விழுந்தவன் கைகொடுத்தவனையும் இழுத்து கிணற்றில் வீழ்த்திய கதைதான்! ஒரு அன்பர் வங்கியில் கடன் வாங்கி இருந்தார். அவருக்கு இன்னொருவர் ஜாமின் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்தேதியிட்ட செக்கை (காசோலை) கொடுத்தார். அந்தக் குறிப்பிட்ட தேதியில், அந்த செக் கிளியராகவில்லை. ஆக, கடன் வாங்கியவருக்கு வங்கி மேலாளர் நோட்டீஸ் அனுப்பிவிட்டார். எதையும் சமாளிக்கமுடியாத நிலை. இப்படி பல சம்பவங்கள் மகர ராசிக்கு எற்படும். இன்னொரு உதாரணம், ஒருவழிப்பாதை சந்தில் ஒருவர் டூ-வீலரில் வந்தார். எதிரில் வந்தவர், "கார்னரில் போலீஸ் ரெய்டு நடக்கிறது. மாற்றுவழியில் போங்க' என்று சொன்னார். வந்தவரோ மப்டியில் வந்த போலீஸ்காரர்; இவரையும் அழைத்துச் சென்றுவிட்டார். "இப்படித்தான் திருடனுக்கு பாதுகாப்பு கொடுப்பீர்களோ?' என்று இவர்மேலும் கேஸ் போட்டுவிட்டார். இது நடந்த சம்பவம்! புண்ணியம் பார்த்தால், அது பாவமாக முடியும். இதுதான் இந்த வாரக் கோட்சார கிரகத்தின் பலன். ஆகவே, எதையும் பார்க்காதமாதிரி, எதையும் கேட்காதமாதிரி உங்கள் சொந்த வேலையை மட்டும் பார்த்துக் கொள்ளவேண்டும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் கேதுவுடன் சம்பந்தம். அவருக்கு சூரியன், செவ்வாய், ராகு, புதன் ஆகிய நால்வரின் பார்வை. ஆக பணத் தளவில், வசதி வாய்ப்பு களில் எந்தக் குறையு மில்லை. ஆனால் மனத் தளவிலே எல்லாக் குறைகளும் இருக்கும். கணவன்- மனைவிக்குள் அன்பு, அன்யோன்யம், ஒற்று மைக்குக் குறைவில்லை. அதேசமயம் கணவருக்கு மனைவிவகையிலும், மனைவிக்கு கணவர் வகையிலும், உறவினர்கள் வகையில் கவலைகளும் பிரச்சினைகளும் உருவாகி மகிழ்ச்சிக் குறைவை ஏற்படுத்தும். எதிலும் சிந்தித்து செயல்படுவதும், சிக்கனத்தைக் கையாள் வதும் மிகவும் நல்லது. அலுவலகத்திலுள்ள பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் ஆதங்கப் படுவதோ, கோபப்படுவதோ ஆகாது. அதேபோல மற்றவர்களிடம், உறவினர் களிடம் இருக்கும் வருத்தத்தைக் குடும்பத்தில் உள்ளவர்கள்மேல், பிள்ளைகள்மேல் காட்டுவதும் கூடாது. நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று ஆன்றோர்கள் சொன்னார்கள். குடும் பத்தை பல்கலைக் கழகமாக்குவதும், பள்ளிக் கூடமாக்குவதும், சந்தைக் கடையாக்குவதும் உங்கள் கையில்தான் உள்ளது. உங்கள் சாமர்த்தியம்தான்! ஆரோக்கியத்தில் எந்த பாதிப்புமில்லை.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சமீபகாலமாக பன்னிரண்டு ராசிக்காரர்களிலும் மீன ராசிக்குரிய கிரக நிலைகள்தான் மிகமிக அற்புத மாக இருக்கிறது. ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்ப்பது சிறப்பு. அவர் 10-க்குடையவர் என்பதோடு 9-ல் இருப்பது அதைவிட சிறப்பு. 10-க்கு டையவர் 9-ல் அல்லது 9-க்குடையவர் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். 4-க்குடையவர் 4-ல் (புதன்) ஆட்சி. 9-க்குடைய திரிகோணாதிபதி (செவ்வாய்) 4-ல் கேந்திர பலம். ஆக, கேந்திரமும் திரிகோணமும் செவ்வாய்க்குக் கிடைப்பது ஒரு யோகம். 6-க்குடைய சூரியன் தன் ஸ்தானத்துக்கு 11-ல்; ராசிக்கு 4-ல். 6-ஆமிடம் என்பது தொழில் ஸ்தானமாகிய 10-ஆமிடத்துக்கு பாக்கிய ஸ்தானம். அந்த இடத்தை சூரியனும் பார்க் கிறார்; செவ்வாயும் பார்க்கிறார். 10-ஆம் இடத்துக்கு செவ்வாய் திரிகோணாதி பதி. ஆகவே, உங்களுக்கு எல்லா வகை யிலும் எந்தக் குறையுமில்லாமல் யோகத்துக்குமேல் யோகம், அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டமாகும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் காலம். செல்வாக்கும் பெருமையும் சிறந்தோங்கும் காலம்!

bala280619
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe