Advertisment

இந்த வார ராசிபலன் 8-3-2020 முதல் 14-3-2020 வரை

/idhalgal/balajothidam/weeks-zodiac-8-3-2020-14-3-2020

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- சிம்மம்.

10-3-2020- கன்னி.

12-3-2020- துலாம்.

14-3-2020- விருச்சிகம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: பூரட்டாதி- 2, 3, 4.

செவ்வாய்: பூராடம்- 2, 3, 4.

புதன்: அவிட்டம்- 2, 3, 4.

குரு: பூராடம்- 4, உத்திராடம்- 1.

சுக்கிரன்: அஸ்வினி- 3, 4, பரணி- 1.

சனி: உத்திராடம்- 1.

ராகு: திருவாதிரை- 1.

கேது: மூலம்- 3.

கிரக மாற்றம்:

11-3-2020- கும்ப புதன்.

14-3-2020- மீன சூரியன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 9-ல் திரிகோணம் பெறுகிறார். அவருக்கு வீடுகொடுத்த குரு 9-ல் ஆட்சியாக இருக்கிறார். செவ்வாய்க்கு சாரம்கொடுத்த சுக்கிரன் ஜென்ம ராசியில் இருக்கிறார். குரு சம்பந்தம் ராசிக்கும் ராசிநாதனுக்கும் கிடைக்கிறது. அத்துடன் 10-க்குடைய சனி 9-ல் இருப்பதும், 9-க்குடைய குருவோடு சம்பந்தப்படுவதும் தர்மகர்மாதிபதி யோகம். எந்தவொரு காரியத்தையும் முறையாக திட்டமிட்டு திறமையாகச் செயல்படுவீர்கள். வருவாய்க்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் அவை பயனுள்ள செலவுகளாக அமையும். குடும்பத்தினர் அனைவரும் உங்களுக்கு அனுகூலமாக ஒத்துழைப்பார்கள். ஆதரவாகவும் செயல்படுவீர்கள். கூடியவரை அடுத்தவர்களின் ஆலோசனையைக் கேட்பதைவிட உங்கள் புத்தி என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவது நல்லது. "அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்' என்ற பாடலுக் கேற்றபடி, காலமும் நேரமும் உங்கள் கருத்துக்கு ஆதரவாக ஒத்து ழைக்கும். அதனால் சோதனைகளை வென்று சாதனைகளைப் படைக்கலாம். 11-ஆம் தேதி கும்ப ராசிக்கு மாறும் புதன் போட்டி, பொறாமை, எதிரி, கடன் ஆகியவற்றையெல்லாம் சாய்த்துவிடுவார். சூரியனும் புதனும் உங்கள் எண்ணங்களை ஈடேற்று வார்கள். திட்டங்களை வெற்றியடையச் செய்வார்கள். பிள்ளைகள்வகையில் நல்லவை நடக்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

Advertisment

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய், சுக்கிரன் சாரம் பெறுகிறார். (பூராடம்). 8-ல் உள்ள குரு, சுக்கிரன் சாரம்பெற்று சுக்கிரனையே பார்க்கிறார். ராகு- கேதுக்களுடைய சம்பந்தம் கிடைப்பதால், சிற்சில காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும், தடைகளைக் கடந்து முன்னேறலாம். சோதனைகளை வென்று சாதனை படைக்கலாம். 8-ஆமிடம் என்பது அதிர்ஷ்ட ஸ்தானத்தையும் குறிக்கும். அதனால் அதிர்ஷ்டம் தேடிவந்து உங்களை அரவணைக் கும். அது இஷ்டமாக வருவதுதான் அதிர்ஷ்டம். 10-க்குடைய சனி 8-ல் மறைந் தாலும் 10-ஆமிடத்தையே பார்க்கிறார். 10-ல் சூரியன் பலம்பெறுகிறார். சூரியன் நிற்பது சனியின் ராசி. சூரியனுக்கும் சனிக்கும் பகை என்றாலும், சனியின் பார்வையைப் பெறும் சூரியன் பகைநீங்கி தற்காலிக நட்பாகிறார். எனவே பகைவர்களாலும் உங்களுக்கு நல்லதே நடக்கும். செய்யும் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோ கத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுண்டாகும். தனியார்துறைப் பணியில் இருப்ப வர்களுக்கு மேலிடத்தாரின் ஆதரவும் அனுகூலமும் உண்டாகும். செயற்கரிய செயல்களைச் செய்து பாராட்டுப் பெறலாம். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்திசெய்யலாம். எதிர்பாராத தனப்ராப்தி உண்டாகும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் தொடக்கத்தில் 8-ல் மறைவாக இருக்கிறார். 11-ஆம் தேதி 9-ல் கும்ப ராசிக்கு மாறுகிறார். 8-ஆமிடம் மறைவு ஸ்தானம் என்றாலும், "மறைந்த புதன் நிறைந்த தனம்' என்ற கருத்துப்படி, பொருளாதார வகையில் சிரமம் நேராது. அடுத்து, திரிகோணம் பெறுவதால் குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். வீடு, வாகன வகையில் சுபச்செலவுகள் உண்டாகும். 10-க்குடைய குருவும், 11-க்குடைய செவ்வாயும், 9-க்குடைய சனியும் ஒன்றுகூடுவதால், பணியில் இருப்பவர்களுக்கு தனி மதிப்பும், மரியாதை யும் உண்டாகும். பதவி உயர்வு, விரும்பிய இடப்பெயர்ச்சி போன்ற நன்மைகளை அ

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- சிம்மம்.

10-3-2020- கன்னி.

12-3-2020- துலாம்.

14-3-2020- விருச்சிகம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: பூரட்டாதி- 2, 3, 4.

செவ்வாய்: பூராடம்- 2, 3, 4.

புதன்: அவிட்டம்- 2, 3, 4.

குரு: பூராடம்- 4, உத்திராடம்- 1.

சுக்கிரன்: அஸ்வினி- 3, 4, பரணி- 1.

சனி: உத்திராடம்- 1.

ராகு: திருவாதிரை- 1.

கேது: மூலம்- 3.

கிரக மாற்றம்:

11-3-2020- கும்ப புதன்.

14-3-2020- மீன சூரியன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 9-ல் திரிகோணம் பெறுகிறார். அவருக்கு வீடுகொடுத்த குரு 9-ல் ஆட்சியாக இருக்கிறார். செவ்வாய்க்கு சாரம்கொடுத்த சுக்கிரன் ஜென்ம ராசியில் இருக்கிறார். குரு சம்பந்தம் ராசிக்கும் ராசிநாதனுக்கும் கிடைக்கிறது. அத்துடன் 10-க்குடைய சனி 9-ல் இருப்பதும், 9-க்குடைய குருவோடு சம்பந்தப்படுவதும் தர்மகர்மாதிபதி யோகம். எந்தவொரு காரியத்தையும் முறையாக திட்டமிட்டு திறமையாகச் செயல்படுவீர்கள். வருவாய்க்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் அவை பயனுள்ள செலவுகளாக அமையும். குடும்பத்தினர் அனைவரும் உங்களுக்கு அனுகூலமாக ஒத்துழைப்பார்கள். ஆதரவாகவும் செயல்படுவீர்கள். கூடியவரை அடுத்தவர்களின் ஆலோசனையைக் கேட்பதைவிட உங்கள் புத்தி என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவது நல்லது. "அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்' என்ற பாடலுக் கேற்றபடி, காலமும் நேரமும் உங்கள் கருத்துக்கு ஆதரவாக ஒத்து ழைக்கும். அதனால் சோதனைகளை வென்று சாதனைகளைப் படைக்கலாம். 11-ஆம் தேதி கும்ப ராசிக்கு மாறும் புதன் போட்டி, பொறாமை, எதிரி, கடன் ஆகியவற்றையெல்லாம் சாய்த்துவிடுவார். சூரியனும் புதனும் உங்கள் எண்ணங்களை ஈடேற்று வார்கள். திட்டங்களை வெற்றியடையச் செய்வார்கள். பிள்ளைகள்வகையில் நல்லவை நடக்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

Advertisment

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய், சுக்கிரன் சாரம் பெறுகிறார். (பூராடம்). 8-ல் உள்ள குரு, சுக்கிரன் சாரம்பெற்று சுக்கிரனையே பார்க்கிறார். ராகு- கேதுக்களுடைய சம்பந்தம் கிடைப்பதால், சிற்சில காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும், தடைகளைக் கடந்து முன்னேறலாம். சோதனைகளை வென்று சாதனை படைக்கலாம். 8-ஆமிடம் என்பது அதிர்ஷ்ட ஸ்தானத்தையும் குறிக்கும். அதனால் அதிர்ஷ்டம் தேடிவந்து உங்களை அரவணைக் கும். அது இஷ்டமாக வருவதுதான் அதிர்ஷ்டம். 10-க்குடைய சனி 8-ல் மறைந் தாலும் 10-ஆமிடத்தையே பார்க்கிறார். 10-ல் சூரியன் பலம்பெறுகிறார். சூரியன் நிற்பது சனியின் ராசி. சூரியனுக்கும் சனிக்கும் பகை என்றாலும், சனியின் பார்வையைப் பெறும் சூரியன் பகைநீங்கி தற்காலிக நட்பாகிறார். எனவே பகைவர்களாலும் உங்களுக்கு நல்லதே நடக்கும். செய்யும் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோ கத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுண்டாகும். தனியார்துறைப் பணியில் இருப்ப வர்களுக்கு மேலிடத்தாரின் ஆதரவும் அனுகூலமும் உண்டாகும். செயற்கரிய செயல்களைச் செய்து பாராட்டுப் பெறலாம். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்திசெய்யலாம். எதிர்பாராத தனப்ராப்தி உண்டாகும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் தொடக்கத்தில் 8-ல் மறைவாக இருக்கிறார். 11-ஆம் தேதி 9-ல் கும்ப ராசிக்கு மாறுகிறார். 8-ஆமிடம் மறைவு ஸ்தானம் என்றாலும், "மறைந்த புதன் நிறைந்த தனம்' என்ற கருத்துப்படி, பொருளாதார வகையில் சிரமம் நேராது. அடுத்து, திரிகோணம் பெறுவதால் குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். வீடு, வாகன வகையில் சுபச்செலவுகள் உண்டாகும். 10-க்குடைய குருவும், 11-க்குடைய செவ்வாயும், 9-க்குடைய சனியும் ஒன்றுகூடுவதால், பணியில் இருப்பவர்களுக்கு தனி மதிப்பும், மரியாதை யும் உண்டாகும். பதவி உயர்வு, விரும்பிய இடப்பெயர்ச்சி போன்ற நன்மைகளை அடையலாம். வேலைதேடி முயற்சிப் பவர்களுக்கு வெற்றிச்செய்தி கிட்டும். 2020 டிசம்பரில் சனிப்பெயர்ச்சி. அப்போது அட்டமத்துச்சனி ஆரம்பமாகும். அதற்கு முன்னதாக இப்போதே அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். வரப்போகும் அட்ட மத்துச்சனி உங்களுக்குப் பொங்கு சனியாக செயல்படும். வருமானம் இல்லாதவர்களுக்கு வருமான யோகம், திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகம், பூமி, வீடு, வாகன யோகம் போன்ற யோகங்களையெல்லாம் எதிர்பார்க்கலாம். சுமையில்லாத கடனும் அமையலாம்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

Advertisment

கடக ராசிக்கு 6-ல் செவ்வாய், குரு, சனி, கேது ஆகிய நான்குபேரும் மறை கிறார்கள். ராசிக்கு 8-ல் சூரியன் மறைகிறார். 10-ஆமிடமாகிய தொழில் ஸ்தானத்துக்கு 6-ஆமிடம் என்பது பாக்கியஸ்தானமாகும். 10-க்கு 9-ல் செவ்வாய், குரு, சனி, கேது இருப்பது பலம். வாழ்க்கையிலும் தொழில்துறையிலும் நினைத்ததை சாதிக்கலாம். சாதிக்க நினைப்போர் போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறுகள் எல்லாவற்றையும் சமாளிக்கத்தானே வேண்டும். பரீட்சையில் வெற்றிபெற்று சாதிக்க விரும்பும் மாணவன் சோதனைகளை சந்திக்கத்தானே வேண்டும். அப்போதுதானே சாதனைகளைப் படைக்கலாம். ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு "ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி' என்று வசனம் பேசுவார். அதுபோல சோதனைகளை சந்தித்து வெற்றிபெறுவதே உங்கள் சாதனை. அந்த தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் 10-ல் இருக்கும் சுக்கிரன் உங்களுக்குத் தருவார். சுக்கிரனுக்கு வீடுகொடுத்த செவ்வாய் 6-ல் மறைந்தாலும் உங்கள் ராசியைப் பார்க்கிறார். கடக ராசிக்கு செவ்வாய் 5, 10-க்குடையவர். திரிகோணாதிபத்தியமும் கேந்திராதிபத்தியமும் கிடைப்பதால் செவ்வாய் ராஜயோகாதிபதி யாகிறார். அவர் ராசியைப் பாôப்பதால் வெற்றிமேல் வெற்றி வந்து உங்களைச் சாரும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

jjசிம்ம ராசிநாதன் சூரியன் தன் ராசிக்கு 7-ல் கேந்திரம் பெற்று ராசியைப் பார்க்கிறார். அத்துடன் 5-ல் குரு ஆட்சிபெற்று, அவரும் ராசியைப் பார்க் கிறார். ராசிநாதன் சூரியனுக்கு வீடுகொடுத்த சனியும் சூரியனைப் பார்க்கிறார். எனவே உழைப்பிற்கேற்ற பலனைப் பெறுவதில் தடையேதும் இருக்காது. "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்' என்பது திருக்குறள். தெய்வத்தால் ஆகாதது என்பது எதுவுமில்லை. அப்படியே இருந்தாலும் முயற்சிக்குத் தனிப்பலன் உண்டு. கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம். திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம். இங்கு 7-க்குடைய கேந்திர ஸ்தானாபதி சூரியன் 5-ல் திரிகோணம் பெறுவதால், கேந்திரமும் திரிகோணமும் சேர்ந்து பலன் தரும். லட்சுமியும் விஷ்ணுவும் இணைந்து உங்களுக்கு நல்லருள் புரிவார்கள் என்னும்போது வேறென்ன வேண்டும்? "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாட வேண்டியதுதானே! உங்களுடைய நீண்டகால திட்டங்கள் யாவும் இப்போது நிறைவேறும் காலம். படிப்பு, வேலை, சம்பளம் சுபகாரியம், திருமணம், வாரிசு யோகம் போன்ற சுபமங்கள் காரியங்கள் நிறைவேறும். வேலைதேடி அலைவோருக்கு நல்ல வேலை அமையும். வேலையில் இருப்போருக்கு விரும்பிய இட மாறுதலும், பதவி உயர்வும் உண்டாகும். ஜாதக தசாபுக்திகள் சாதக மாக அமைந்துவிட்டால் வெளிநாட்டு யோகம் அமையும். ஏற்கெனவே வெளி நாட்டில் வேலை செய்கிறவர்களுக்கு பதவியில் உயர்வும், வருமான உயர்வும் கிடைப்பதால், சொந்த ஊரில் வீடுகட்டுவது, இடம் வாங்குவது போன்ற சுபகாரியங்களில் செலவு செய்யலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவான சூழ்நிலை உண்டாகும். சிலருக்கு புதிய வாகனயோகம் அமையும். டூவீலர் அல்லது கார் போன்ற ஆடம்பர- அவசியமான வாகனயோகம் அமையும். அதற்காக எளிய தவணைக்கடன் வசதியும் எதிர்பார்க்க லாம்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் திரிகோணம் பெறுகிறார். அவருக்கு வீடுகொடுத்த சனி 4-ல் கேந்திரம் பெற்று ராசியைப் பார்க் கிறார். அத்துடன் 10-ஆமிடத்தையும் சனி பார்க் கிறார். "எட்டில் ஒரு ஏழையேனும் பத்தில் ஒரு பாவியேனும் இருக்கவேண்டும்' என்பது ஜோதிடப் பழமொழி. இங்கு 8-ல் சுக்கிரன் இருக்கிறார். அவர் 9-க்குடையவர். பித்ரு காரகன் சூரியன் 6-ல் மறைவு. ஆக, தகப்பனார் அல்லது தகப்பனார் வர்க்கத்தில் உள்ளவர் களால் வம்பு, வழக்குகளையும் தொல்லை களையும் சந்திக்கநேரும். ஜாதக தசாபுக் திகள் யோகமாக அமைந்தால் பாதிப் பிருக்காது. சிலசமயம் கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்ற அடிப்படையில் சில நன்மைகளும் உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அல்லது வெளி மாநில வேலைவாய்ப்புகள் உண்டாகும். ஏற்கெனவே அங்கிருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியாக அமையும். 6-க்குடைய சனி 4-ல் இருப்பதால், இவை சம்பந்தப்பட்டவகையில் கடன் உருவானாலும் அவை சுபக்கடன் எனலாம். தொழில் சம்பந்தமான புதுமுயற்சிகளை தைரியமாகத் தொடங்கலாம். ஏற்கெனவே தொழில்புரியும் தொழிலதிபர்கள் கிளைகள் தோற்றுவிக்கும் முயற்சிகளில் இறங்கலாம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் ராசியைப் பார்த்தாலும், லக்னா திபதி லக்னத்தைப் பார்த்தாலும், பாவாதிபதி பாவகத்தைப் பார்த்தாலும் பலம் என்பது "பலதீபிகை'யின் கருத்து. ஒவ்வொரு பாவகத்துக்கும் பாவகாதிபதி என்றும், பாவக காரகன் என்றும் உண்டு. பாவகாதிபதி அந்தந்த பாவகத்திற்குத் தொடர்புடையவராக இருந் தால், அந்தந்த பாவகம் சிறப்படையும்; பெருமையடையும்; பலமடையும். அதேபோல சனியைத்தவிர, மற்ற காரக கிரகங்கள் அந்தந்த பாவகத்தில் இருந்தால் அவை நாசமடையும். அதாவது பித்ரு காரகன் சூரியன் பித்ரு ஸ்தானத் தில் இருந்தாலும், மாத்ரு காரகன் சந்திரன் மாத்ரு ஸ்தானத்தில் இருந்தாலும், சகோதர காரகன் செவ்வாய் சகோதர ஸ்தானத்தில் இருந்தாலும், களஸ்திர காரகன் சுக்கிரன் களஸ்திர ஸ்தானத்தில் இருந்தாலும், புத்திர காரகன் குரு புத்திர ஸ்தானத்தில் இருந்தாலும் அந்தந்த பாவம் பலம் குறைந்துவிடும். இதுதான் "காரகோ பாவக நாசம்; இதில் சனிக்கு மட்டும் விதிவிலக்கு. ஆயுள்காரகன் சனி ஆயுள் ஸ்தா னத்தில் இருந்தால் ஆயுள்விருத்தி எனப்படும். இப்படி அமைவதில் அந்தந்த பாவக அதிபதி லக்னாதிபதியாகவோ, ராசியதிபதியாகவோ அமைந்தால் கெடுதல் செய்யாது என்பது ஜோதிடவிதி. எனவே தொழில், வேலை, குடும்பம், பொருளாதாரம் என எல்லா வகையிலும் நன்மையை எதிர்பார்க்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 2-ல் சுக்கிரன் சாரம் பெறுகிறார். (பூராடம்). சுக்கிரன் இருப்பது செவ்வாயின் ராசியாகும். அவருக்கு சுக்கிரன் சாரம் பெற்ற குருபார்வை கிடைக் கிறது. எனவே, களஸ்திரகாரகன் சுக்கிரன் 6-ல் மறைகிறார் என்ற தோஷம் விலகும். செவ்வாய், சனி, கேது, ராகுவோடு சம்பந்தப்படுவதால், 7-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைவதாலும், ஏழரைச்சனி நடப்பதாலும் ஒருசிலருக்கு குடும் பத்தில் சிக்கல் உண்டாகும். சிலருக்கு பணச் சிக்கல், சிலருக்கு மனச்சிக்கல், சிலருக்கு சரீர சிக்கல்- இப்படி ஏதாவதொன்று பாதிக்கலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் அவற்றை சமாளிக்கலாம். என்றாலும் செவ்வாய், சனி, கேது 2-ல் இருப்பதால் பேச்சில் நிதானம் தேவைப்படும். "வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டார்கள்' என்று சொல்வது போல சில விபரீத விளைவுகள் ஏற்படலாம். அதற்கு ஏழரைச்சனியில் வாக்குச்சனியும் ஒரு காரணமாக அமைகிறது. அதனால்தான் திருவள் ளுவர், "தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு' என்று சொன்னார். பொதுவாகவே விருச்சிக ராசிக்காரர்கள் முன்கோபக்காரர்கள். இந்நிலையில் வாக்கில் செவ்வாய், சனி, கேது, ராகு சம்பந்தப்படுவது சிக்கல்தான். குரு 2-ல் ஆட்சிபெறுவதால், வாக்கைக் கட்டுப்படுத்திக்கொண்டால் விபரீத விளைவுகள் வராமல் சமாளிக்கலாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. ஜென்மச் செவ்வாய், ஜென்ம கேதுவும் நடக் கிறது. இவையெல்லாம் உங்களுக்கு எதிர் மறைப் பலன்களைத் தரும் நிலை என்றாலும், இவர்களுக்கு வீடுகொடுத்த குரு ஆட்சி பெறுவதால், உங்கள் புத்தி சாதுர்யத்தாலும், விவேகத்தாலும் விபரீத விளைவுகள் ஏற்படாமல் சமாளிக்கலாம். ஜென்மச்சனியில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடப்பவர் களுக்கு மட்டும்தான் சிக்கலாகத் தெரியும். அதற்குப் பரிகாரமாக திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்திற்குப் பாலபிஷேகம் செய்து சிவவழிபாடு செய்பவர்களுக்கு பொங்குசனி யாக மாறிப் பொலிவைத் தரும். தேவையற்ற அலைச்சல்களும், தேவையற்ற விரயச்செலவு களும் குறுக்கிட்டாலும் அவற்றை எளிதாகச் சமாளிக்கலாம். எல்லாவற்றையும் சந்தித்து ஜெயிக்கலாம். ஜென்ம குரு 5, 7, 9-ஆமிடங்களைப் பார்ப்பதால், மனைவி, மக்கள், ரத்தபந்த உறவினர்கள்வகையில் உங்களுக்கு நல்லதே நடக்கும். சிலருக்கு கற்பனைக் கவலையும் கற்பனை பயமும் இருந்தாலும், அவற்றை குருவருளாலும் திருவருளாலும் சமாளித்து சாதனை புரியலாம். குடும்பம், தொழில், வேலை செய்யுமிடங்களில் கடமைகளும் பொறுப்புகளும் சுமையாகத் தெரிந்தாலும், உங்கள் தெய்வ வழிபாட்டால் சுகமான சுமையாக அவை மாறிவிடும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைந்தாலும், அவருக்கு வீடுகொடுத்த குரு அவருடன் சேர்ந்திருப்பதாலும், சனியின் ராசியான மகரத்திற்கு உச்சநாதன் செவ்வாயோடு சேர்ந்திருப்பதாலும் மறைவு தோஷம் விலகும். ராமாயணத்தில், வாலியின் எதிரில் நின்று தாக்குகிறவர்களின் பாதிபலம் வாலிக்கு வந்து விடும் என்று ஒரு வரம் உண்டு. அதனால் ஸ்ரீராம பிரான் வாலியை மறைந்திருந்து அம்பெய்து கொன்றதாக ஒரு வரலாறு. அதேபோல யுத்த களத்தில் மறைந்திருந்து எதிரிகளைத் தாக்கலாம் என்று ஒரு விதியுண்டு. அதுவும் ஒருவகையில் யுத்த தர்மம்தான். மகாபாரதத்தில், குருநாதர் துரோணாச்சாரியை துரியோதனன் தரப் பிலிருந்து விலகச்செய்ய, கிருஷ்ணபரமாத்மா ஒரு தந்திரத்தைக் கையாண்டார். துரோணரின் அன்பு மகன் அஸ்வத்தாமா. அவனை அர்ஜுனன் கொன்றுவிட்டதாக கிருஷ்ணர் ஒரு வதந் தியைப் பரப்பினார். துரோணர் அதை நம்பாமல், தர்மரிடம் "அஸ்வத்தாமா கொல்லப்பட்டது உண்மையா' என்று கேட்டார். தர்மர், "அஸ்வத் தாமா என்ற யானை இறந்தது உண்மைதான்' என்றதும், துரோணரின் காதில் யானை என்ற சொல் கேளாதபடி கிருஷ்ணர் சங்கை ஊதிவிட்டார். உடனே துரோணர், மகன் இறந்துவிட்டதாகக் கருதி வில், அம்பைத் தூக்கியெறிந்துவிட்டு, யுத்த களத்தைவிட்டு வெளியேறிவிட்டார். இவையெல்லாம் யுத்த தர்மத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகள். துரோணருக்கு இந்த இக்கட்டான சூழ்நிலை ஏன் ஏற்பட்டது தெரியுமா? அரசப் பரம்பரையினருக்கு மட்டுமே வில்வித்தை கற்றுக் கொடுக்கும் துரோணர்- வேற்றினத்தவரான ஏகலைவனுக்கு வில்வித்தை கற்றுக்கொடுக்க மறுத்துவிட்டார். ஆனாலும் ஏகலைவனிடம் துரோணரை மானசீக குருவாக வணங்கி, குருவருளாலும் திருவருளாலும் அர்ஜுனனை மிஞ்சிய வில்லாளியாகிவிட்டான். இது அர்ஜுனனுக்கு பொறாமையைத் தூண்டியது. ஏகலைவன் வில்லைத் தொடாதபடி அவன் கட்டைவிரலை குரு காணிக்கையாக வாங் கும்படி துரோணரைத் தூண்டிவிட்டான். அவரும் அர்ஜுனன்மேலிருந்த அபிமானத் தால், ஏகலைவனிடம் கட்டைவிரலை வெட்டித் தரும்படி கேட்க, அவனும் குருவை மதித்து கட்டை விரலைக் காணிக்கையாகக் கொடுத்தான். இதன்பலனாக பாரத யுத்தத்தில் முக்கியமான கட்டத்தில் வில்லைத் தொடாதபடி- துரோணர் வில்லைத் தூக்கியெறிந்துவிட்டு வெளியேறிவிட்டார். அதாவது "அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்' என்பதுதான் தர்மதேவதையின் நியதி! எனவே ராசியாதிபதியின் மறைவு தோஷம் விலகுவதால் எல்லா வகையிலும் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம். சனி பகவானுக்கு 3, 6, 11-ஆமிடங்கள் பலம்பொருந் திய- பலன் தரும் இடங்களாகும். "ஆறு பன்னொன்பான் மூன்றில் அந்தகன் நிற்கு மாகில் கூறுபொன் பொருளுண்டாம்; குறை யிலாச் செல்வமுண்டாம்; ஏறு பல்லக்குண்டாம்; இடம் பொருள் ஏவலுண்டாம்; காறு பாலாஷ்ட லட்சுமி கடாட்சமும் உண்டாகும்தானே' என்பது "சந்திரகாவிய' விதி! எனவே 11-ல் உள்ள சனி குருவோடும் செவ்வாயோடும் சேர்ந்திருப் பது சிறப்பு. குரு- சனிக்கு வீடுகொடுத்தவர். செவ்வாய்- சனியின் மகர ராசிக்கு உச்சநாதன். எனவே கோட்சாரம் உங்களை எல்லா வகையிலும் ஏற்றம்பெறச் செய்யும். ஜாதக தசாபுக்திகளும் சாதகமாக அமைந்துவிட்டால் நீங்கள் கோடீசுவரர்தான். இல்லாவிட்டால் கடைக்கோடியில் நிற்பவராகிவிடுவீர்கள். மேலும் 7-க்குடைய சுக்கிரன் ஜென்ம ராசியில் நின்று 7-ஆமிடத்தைப் பார்ப்பதோடு, சூரியனையும் ராசிநாதன் சனி பார்ப்பது யோகம்! ஒரு மனிதனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். உங்கள் வெற்றிக்குக் காரணமாக திருமணத் துக்கு முன்பு தாயாரும், திருமணத்துக்குப் பிறகு தாரமும் இருப்பார்கள். அதனால்தான் "தாய்க் குப்பின் தாரம்' என்றார்கள். காமவெறியனான அருணகிரி- அருணகிரிநாதராக மாறி "திருப் புகழ்' பாடி பெருமையடைந்ததற்குக் காரணம் அவர் அக்காதான்! ஆங்கிலேயர்கள், மேலை நாட்டவர்கள் பிறந்த நாட்டை "தந்தைநாடு' என்பார்கள். ஆனால், நாம் இந்த நாட்டை "தாய்நாடு' என்கிறோம். ஆகவே தந்தையை அந்திமக் காலத்தில் பராமரிக்கத் தவறி னாலும், தாயைக் கண்டிப்பாகப் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொரு மகனின் கடமை! அதனால்தான் தாயார் சாகும்வரை பட்டினத் தார் உள்ளூரிலேயே சுற்றித்திரிந்தார். தாயார் இறந்ததும் "முன்னையிட்ட தீ முப்புரத்திலே- பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே- அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே- யானுமிட்ட தீ மூழ்கமூழ்கவே' என்று பச்சை வாழை மரத்தால் தீமூட்டி அன்னையின் அந்திமக் காரியத்தை நிறைவேற்றினார். ஆகவே பெற் றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க் காமல் கடமையாற்றுவதும், கவனிப்பதும் பிறந்த பிள்ளைகளின் பொறுப்பு! அப்படிச் செய்தால் அவர்களின் வாரிசு வளமாக செயல்படும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சி. அவருடன் 9-க்குடைய செவ்வாய் சம்பந்தம்! அதனால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படும். அவர்களுடன் சனி, கேது, ராகு சம்பந்தம் என்பதால், ஒருசிலருக்கு "தர்மசங்கடமான சூழ்நிலை' உருவாகும். அதாவது திருமணத்துக்கு முன்பு- திருமணத்துக்குப் பின்பு என்ற இரு நிலை உருவாகும். தாயை தெய்வமாகக் கருதிப் போற்றியவர்கள், தாரம் வந்தபிறகு தலையணை மந்திரத்தால் குடியிருந்த கோவிலை குறைசொல்லி இடிப்பார்கள். எல்லாரும் அல்ல- ஒருசிலர். மாமியார்- மருமகள் பிரச்சினை உருவாகி விசுவரூபம் எடுக்கும்போது, இருவரையும் அனுசரித்து இணைத்துச் செல்வோர் எல்லா நன்மைகளையும் அடையலாம். பெற்றவள் பேச்சைக் கேட்டு வந்தவளை நொந்து வேதனைப்படுத்துவதும் அல்லது கட்டியவளைத் திருப்திப்படுத்த பெற்றவளைக் குற்றம்கூறி கொடுமைப்படுத்துவதும் பாவச்செயல்! கானகத்தில் ஒரு முனிவர் மரத்தடியில் தவமிருந்தார். அப்போது அவர் மரத்தின் மேலிருந்த ஒரு கொக்கு எச்சமிட்டதும் முனிவர் கோபமாக கொக்கைப் பார்க்க, கொக்கு எரிந்து சாம்பலாகிவிட்டது. முனிவர் தவம் சித்தியடைந்ததாகக் கருதி ஊருக்குள் வந்து பிச்சை கேட்டார். (வள்ளுவர் வீட்டில்). வள்ளுவர் மனைவி கணவருக்குப் பணிவிடைசெய்த காரணத்தால் பிச்சையிட தாமதம் ஏற்பட்டது. உடனே முனிவர் கோபமாக முறைத்துப்பார்க்க, அந்த அம்மணி, "கொக்கென்று நினைத்தீரோ கொங்கணவா?' என்றதும், முனிவருக்கு "கானகத்தில் நடந்த சம்பவம் இல்லற மாதுவுக்கு எப்படித் தெரியும்' என்று வியப்பு ஏற்பட்டது. உடனே அந்த அம்மையார், "உங்கள் சந்தேகம் தீர, ஊர் எல்லையிலுள்ள கசாப்புக் கடைக்காரனைப் பார்' என்றார். "கருணை, இரக்கமில்லாமல் ஆட்டை வெட்டிக் கூறுபோடும் கசாப்புக்காரன் என்ன தத்துவம் சொல்லப்போகிறான்?' என்று வந்தார். அவனோ "வள்ளுவர் அம்மணி அனுப்பினார்களோ' என்றுகூறி, அமரச்செய்து, வியாபாரம் முடிந்ததும் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். முனிவரை அமரச்செய்து, தாக சாந்தி செய்துவிட்டு, கண் பார்வையற்ற வயதான தன் பெற்றோரை உபசரித்து, பசியாற்றி ஓய்வெடுக்க வைத்துவிட்டு, முனிவரிடம் வந்தான். அவர் "தம்பி எல்லாம் உணர்ந்தேன். அவரவர் கடமைகளை அவரவர் செய்வதே தர்மம் என்று புரிந்தது' என்றார். கசாப்பு வெட்டுவது அவன் தொழில். பெற்றோரைப் பேணுவது அவன் கடமை. முனிவர்கள் தவமியற்றுவது நாட்டு நன்மைக்கு.

bala130320
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe