ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மேஷம்.
10-12-2019- ரிஷபம்.
12-12-2019- மிதுனம்.
14-12-2019- கடகம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: கேட்டை- 2, 3, 4.
செவ்வாய்: சுவாதி- 3, 4, விசாகம்- 1.
புதன்: அனுஷம்- 2, 3, 4, கேட்டை- 1.
குரு: மூலம்- 3.
சுக்கிரன்: பூராடம்- 2, 3, 4, உத்திராடம்- 1.
சனி: பூராடம்- 2.
ராகு: திருவாதிரை- 3.
கேது: பூராடம்- 1.
கிரக மாற்றம்:
இல்லை.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். வாரத்தொடக்கத்தில் ராகு சாரத்திலும் (சுவாதி), வாரக்கடைசியில் குரு சாரத்திலும் (விசாகம்) சஞ்சாரம். ராகு மூன்றிலும், குரு ஒன்பதிலும் பலம்பெறுகிறார்கள். குரு ராசியைப் பார்க்கிறார். ஒன்பதில் சுக்கிரன், சனி, கேது இருக்கிறார்கள். பத்துக்குடைய சனி ஒன்பதில் இருப்பது தர்மகர் மாதிபதி யோகம். உங்களுடைய செயல்கள், நடவடிக்கைகள், முயற்சிகள் எல்லாவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும். வறுமை, தரித்திரத் திற்கு இடமே இல்லை. ராசிநாதன் செவ்வாய் 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். அத்துடன் 2-ஆமிடத்தை 8-ல் உள்ள சூரியனும் புதனும் பார்க்கிறார்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். கொடுக்கவேண்டிய கடன் அடைபடும். நாணயம் காப்பாற்றப்படும். எதிர்பாராத அதிர்ஷ்டங்களுக்கும், பணவரவுக்கும் யோக முண்டு. குடும்பத்தாரின் தேவைகளையெல்லாம் பூர்த்திசெய்யலாம். தகப்பனாருக்கு சுபமங்களச் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளுக்கு நல்ல காரியங்கள் நடக்கும். உடன்பிறந்தவர்களுடைய உதவி, ஒத்தாசை எதிர்பார்க்கலாம். மொத்தத்தில் இந்த வாரம் ஆனந்தமான வாரம்!
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைகிறார். ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதியான சனியும் 8-ல் மறைகிறார். இவர்களுடன் 8-க்குடைய குருவும் 8-ல் மறைகிறார். என்றாலும் குரு ஆட்சிபெறுவதால், அட்டமாதி பத்திய தோஷமில்லை. 8-ல் கேதுவும் இருப்பதால், தன்னைத்தானே வருத்திக் கொள்ளக்கூடிய அளவு அல்லது துன்பப் படுமளவு உங்களுடைய முயற்சிகளும், காரியங்களும் அமைந்துவிடும். பொதுக் காரியங்களில் ஒதுங்கியிருப்பதே உத்தமம். குறிப்பாக, குலதெய்வக் கோவில்கள், பங்காளிகள் வழிபாட்டுத் தலங்களில் உங்களுக்கு வேண்டாதவர் களின் ஆட்டமும் பாட்டமும் உங்களுக்கு வெறுப்பை உண்டாக்கலாம்; ஆத்திரத்தை ஏற்படுத்தலாம். எதையும் கண்டுகொள்ளாமல் மௌனமாகப் போவது நல்லது. நல்லதும் சொல்ல வேண்டாம்; பொல்லாததும் சொல்ல வேண்டாம். சூரியனும் புதனும் ராசியைப் பார்ப்பதால், அதர்மத்தைக் கண்டு பொறுக்கமுடியாமல் ஆத்திரம் ஏற்படலாம். அதேசமயம் அட்டமத்துச் சனி நடப்பதாலும், ராசிநாதன் 8-ல் மறை வதாலும், கலாட்டா நடக்கும் கூட்டத் தில் வேடிக்கை பார்க்கப் போனவருக்கு போலீசின் லத்தி அடி விழுவதுபோல, எல்லா பழியும் பாவமும் உங்களை வந்தடையும்; கவனம் தேவை.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 6-ல் மறை கிறார். புதனை மட்டும் 6-ஆமிடத்து தோஷம் பாதிக்காது. "மறைந்த புதன் நிறைந்த தனம்' என்பார்கள். பொதுவாக, சூரியனுடன் எப் போதும் இணைந்து சஞ்சரிக்கும் கிரகம் புதன்தான். அவரை அஸ்த மனம், வக்ரம் போன்ற எந்த தோஷங்களும் அணுகாது. ஜென்ம ராசியில் ராகு நிற்பது ஒருவகையில் மைனஸ் பாயின்ட்டுதான் என்றாலும், குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் தோஷம் விலகிவிடும். மேலும் ராசிநாதன் புதன் 6-ல் மறைந
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மேஷம்.
10-12-2019- ரிஷபம்.
12-12-2019- மிதுனம்.
14-12-2019- கடகம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: கேட்டை- 2, 3, 4.
செவ்வாய்: சுவாதி- 3, 4, விசாகம்- 1.
புதன்: அனுஷம்- 2, 3, 4, கேட்டை- 1.
குரு: மூலம்- 3.
சுக்கிரன்: பூராடம்- 2, 3, 4, உத்திராடம்- 1.
சனி: பூராடம்- 2.
ராகு: திருவாதிரை- 3.
கேது: பூராடம்- 1.
கிரக மாற்றம்:
இல்லை.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். வாரத்தொடக்கத்தில் ராகு சாரத்திலும் (சுவாதி), வாரக்கடைசியில் குரு சாரத்திலும் (விசாகம்) சஞ்சாரம். ராகு மூன்றிலும், குரு ஒன்பதிலும் பலம்பெறுகிறார்கள். குரு ராசியைப் பார்க்கிறார். ஒன்பதில் சுக்கிரன், சனி, கேது இருக்கிறார்கள். பத்துக்குடைய சனி ஒன்பதில் இருப்பது தர்மகர் மாதிபதி யோகம். உங்களுடைய செயல்கள், நடவடிக்கைகள், முயற்சிகள் எல்லாவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும். வறுமை, தரித்திரத் திற்கு இடமே இல்லை. ராசிநாதன் செவ்வாய் 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். அத்துடன் 2-ஆமிடத்தை 8-ல் உள்ள சூரியனும் புதனும் பார்க்கிறார்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். கொடுக்கவேண்டிய கடன் அடைபடும். நாணயம் காப்பாற்றப்படும். எதிர்பாராத அதிர்ஷ்டங்களுக்கும், பணவரவுக்கும் யோக முண்டு. குடும்பத்தாரின் தேவைகளையெல்லாம் பூர்த்திசெய்யலாம். தகப்பனாருக்கு சுபமங்களச் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளுக்கு நல்ல காரியங்கள் நடக்கும். உடன்பிறந்தவர்களுடைய உதவி, ஒத்தாசை எதிர்பார்க்கலாம். மொத்தத்தில் இந்த வாரம் ஆனந்தமான வாரம்!
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைகிறார். ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதியான சனியும் 8-ல் மறைகிறார். இவர்களுடன் 8-க்குடைய குருவும் 8-ல் மறைகிறார். என்றாலும் குரு ஆட்சிபெறுவதால், அட்டமாதி பத்திய தோஷமில்லை. 8-ல் கேதுவும் இருப்பதால், தன்னைத்தானே வருத்திக் கொள்ளக்கூடிய அளவு அல்லது துன்பப் படுமளவு உங்களுடைய முயற்சிகளும், காரியங்களும் அமைந்துவிடும். பொதுக் காரியங்களில் ஒதுங்கியிருப்பதே உத்தமம். குறிப்பாக, குலதெய்வக் கோவில்கள், பங்காளிகள் வழிபாட்டுத் தலங்களில் உங்களுக்கு வேண்டாதவர் களின் ஆட்டமும் பாட்டமும் உங்களுக்கு வெறுப்பை உண்டாக்கலாம்; ஆத்திரத்தை ஏற்படுத்தலாம். எதையும் கண்டுகொள்ளாமல் மௌனமாகப் போவது நல்லது. நல்லதும் சொல்ல வேண்டாம்; பொல்லாததும் சொல்ல வேண்டாம். சூரியனும் புதனும் ராசியைப் பார்ப்பதால், அதர்மத்தைக் கண்டு பொறுக்கமுடியாமல் ஆத்திரம் ஏற்படலாம். அதேசமயம் அட்டமத்துச் சனி நடப்பதாலும், ராசிநாதன் 8-ல் மறை வதாலும், கலாட்டா நடக்கும் கூட்டத் தில் வேடிக்கை பார்க்கப் போனவருக்கு போலீசின் லத்தி அடி விழுவதுபோல, எல்லா பழியும் பாவமும் உங்களை வந்தடையும்; கவனம் தேவை.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 6-ல் மறை கிறார். புதனை மட்டும் 6-ஆமிடத்து தோஷம் பாதிக்காது. "மறைந்த புதன் நிறைந்த தனம்' என்பார்கள். பொதுவாக, சூரியனுடன் எப் போதும் இணைந்து சஞ்சரிக்கும் கிரகம் புதன்தான். அவரை அஸ்த மனம், வக்ரம் போன்ற எந்த தோஷங்களும் அணுகாது. ஜென்ம ராசியில் ராகு நிற்பது ஒருவகையில் மைனஸ் பாயின்ட்டுதான் என்றாலும், குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் தோஷம் விலகிவிடும். மேலும் ராசிநாதன் புதன் 6-ல் மறைந் தாலும், அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய் ராசிக் குத் திரிகோணம் பெறுவதால் பாதிப்புக்கு இடம் ஏற்படாது. உங்கள் செயல்களிலும், முயற்சிகளிலும் குறுக்கீடுகளும் தடைகளும் அளவுக்கதிகமாகவே காணப்பட்டாலும், அவற்றையெல்லாம் கடந்து "கழுவின மீனில் நழுவின மீனைப்போல' தப்பிக்கலாம்; சாதனைபுரியலாம். 10-க்குடைய குருவும், 9-க்குடைய சனியும் 7-ல் இணைவதால், தர்மகர்மாதிபதி யோகம் உங்களுக்குத் துணைபுரியும். உங்கள் எண்ணங்களையும் திட்டங்களையும் இடர்ப்பாடுகள் இல்லாமல் ஈடேறச்செய்யும். மனைவிவகையிலும், மக்கள்வகையிலும், உறவினர்கள்வகையிலும் எல்லாரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு முக்கியமான கிரகங்கள் எல்லாம் 8-ல் மறைகிறார்கள். பாக்கியாதிபதி குருவும், லாபாதிபதி சுக்கிரனும், சப்தம அட்டமாதிபதி சனியும் 6-ல் மறைவதோடு, கேதுவும் 6-ல் மறைகிறார். கேதுவுக்கு 6-ஆமிடம் பலமான இடமாகும். 8-க்குடைய சனி 6-ல் மறைவதும் நல்லதுதான். சுக்கிரன் லாபாதிபதி என்றாலும், சர ராசிக்கு 11-க்குடைய பாதகாதிபதி என்பதால், அதுவும் நல்லதுதான். ஆகவே கெடுதல்களெல்லாம் உங்களுக்கு நல்லதாக மாறிப் பலன் தரும். எதிரியும் உங்களுக்கு உதவியாக இருப்பார். குளத்திலே வாழும் மீன்கள் அசுத்தங்களை உணவாகச் சாப்பிடுவதால் குளம் சுத்தமாவதில்லையா? அதுபோலதான்! 4-ல் அமர்ந்திருக்கும் செவ்வாய் 5, 10-க்குடைய ஆதிபத்தியம் பெற்று 10-ஆமிடத்தையே பார்க்கிறார். எனவே, வாழ்க்கையிலும், தொழில்துறையிலும், உங்கள் முயற்சிகளிலும், நீங்கள் ஈடுபடும் காரியங்களிலும் தங்குதடையில்லாத முன்னேற்றமும், வெற்றியும் அடையலாம். 6-ல் இருக்கும் கிரகங்களால் இடையூறு களும், தடைகளும் காணப்பட்டாலும்' அவை ஸ்பீடு பிரேக்கர்மாதிரி, உங்களை எச்சரிக்கைப் படுத்துவதுதானேதவிர, பயணத்தைக் கெடுப்பதாகாது!
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 4-ல் கேந்திரம் பெறுகிறார். அவருடன் 2, 11-க்குடைய புதன் சம்பந்தம். சிம்ம ராசிக்கு 9-க்குடைய செவ்வாய் 3-ல் அமர்ந்து 10-ஆமிடத்தைப் பார்க்கிறார். 9-க்குடையவர் 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. சூரியனும் புதனும் 10-ஆமிடத்தைப் பார்க்கிறார்கள். எனவே உங்கள் வாழ்க்கையிலும், தொழில்துறையிலும், செய்முயற்சிகளிலும், கருதிய காரியங்களிலும் எந்தவிதமான இடையூறுகளும், தடைகளும் இல்லாதபடி- வேகமாகச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்மாதிரி சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் செயல்படுவீர்கள். பொருளாதாரத்திலும், வரவு- செலவுகளிலும், பணப்புழக்கத்திலும் எந்தக் குறையுமிருக்காது. உங்கள் வீட்டுக்கு நீங்கள் தனிக்காட்டு ராஜாவாக செயல்படுவீர்கள். மேலும் 5-ல் ஆட்சிபெற்ற குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். ஆகவே, குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்துவதால், எல்லாவகையிலும் முடிசூடாத மன்னராக கோலோச்சுவீர்கள். உங்களுக்குப் பக்கபல மாகவும், தக்கதுணையாகவும் மனைவி, மக்களும் மற்றும் குடும்பத்தாரும் இருப்பார்கள்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 3-ல் இருக்கிறார். ஆரம்பத்தில் சனியின் சாரத்திலும், வாரக் கடைசியில் தனது சொந்த சாரத்திலும் சஞ்சாரம். 3, 6, 8, 12 ஆகியவை மறைவு ஸ்தானங்கள் என்று ஜோதிடவிதி இருந்தாலும், புதனுக்கு மட்டும் அது பொருந்தாது. சதாசர்வகாலமும் சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கும் கிரகம் புதனாகும். ஆகவே, அவரை அஸ்தமனம், மறைவு, வக்ரம் போன்ற எந்த தோஷங்களும் பாதிக்காது. நமது வீட்டிற்கு பேப்பர் படிக்க வரும் பக்கத்து வீட்டு நண்பருக்கு முக்கியத்து வம் கொடுக்கமாட்டோம். எப்போதோ வரும் விருந்தாளிக்கு மட்டும் உபசரிப்பு பிரமாத மாக இருக்கும் அல்லவா- அதுபோலதான்! 8-க்குடைய செவ்வாய் 2-ல் இருப்பதால், சிலசமயம் எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் அமையும். வரவேண்டிய பணமெல்லாம் வந்துசேரும். கொடுக்கல்- வாங்கல் சீராக நடக்கும். 6-க்குடையவர் 2-ல் இருந்தால், அந்நியர் தனம் நமது கைகளில் புரளும். 2-க்குடையவர் 6-ல் இருந்தால், நமது பணம் அந்நியர் வசமாகும். 8-க்குடையவர் 2-ல் இருந்தால், எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும். 2-க்குடையவர் 8-ல் மறைந்தால் ஏமாற்றம், இழப்பு ஏற்படும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 3-ல் மறைந் தாலும், தனது சொந்த நட்சத்திரமான பூராடத்தில் சஞ்சரிக்கிறார். ஆகவே, மறைவு தோஷம் அவரை பாதிக்காது. மறைந்திருந்து செயல்படுத்துவதிலும் சில நன்மைகளும் உண்டு; வெற்றிகளும் உண்டு. யுத்த களத்தில் மறைந்திருந்து போர் புரிவதை "கொரில்லாப் போர்' என்று கூறுவார்கள். அது ஒருவகையான ராஜதந்திரம் தான். வேடன் கண்ணி வைத்துப் பறவைகளைப் பிடிப்பதும் ஒரு ராஜதந்திரம். சுக்கிரன் 3-ல் மறைந்தாலும், வீடுகொடுத்த குருவும் அவரோடு சேர்ந்திருப்பதாலும், துலா ராசிக்கு ராஜயோகாதிபதியான சனியும் சேர்ந்திருப்பதாலும் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் நடக்குமென்று நம்பலாம். வாலிலியை வதம்செய்வதற்கு ராமர் மறைந்திருந்துதான் அம்பெய்தார். ராகுவும் கேதுவும் மறைந்திருந்து பெரும்வெற்றிக்குத் துணையாக இருப்பார்கள். சனி, ராகு- கேது ஆகியோருக்கெல்லாம் 3-ஆமிடம்தான் யோகமான இடமாகும். சூரியனும் புதனும் 2-ல் இருப்பது, விரயத்தின்பேரில் லாபத்தை சந்திக்கும் காலகட்டத்தை உணர்த்துகிறது.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் 2-ல். எனவே, வரவும் உண்டு; செலவும் உண்டு. சிலசமயம் வரவுக்கு முன்னதாகவே செலவுவந்து வாசலில் கதவைத் தட்டும். அதைச் சமாளிக்க உடனே அடுத்து வரவும் வரும்- அதாவது இறைக்கிற கிணறு ஊறுவதுபோல! ஜாதக தசாபுத்திகள் பாதகமாக இருந்தாலும், 6, 8, 12-க்கு சம்பந்தமாக இருந்தாலும், வற்றிய கிணறாக ஊற்று அடைபட்டு, நீரில்லாத கிணறாகவும் அமைந்துவிடும். அடுத்து மழைபெய்து கிணற்றில் நீர் ஊறவேண்டும்! விருச்சிக ராசிக்கு 2020 டிசம்பர்வரை ஏழரைச்சனி இருப்பதால், சனி முடியும்வரை பொருளாதார நெருக்கடியும், பணப் பற்றாக் குறையும், வரவுக்குமீறிய செலவுகளும் இருக்க லாம். 6-க்குடைய செவ்வாய் 12-ல் மறைந் தாலும், 6-ஆமிடத்தையே பார்ப்பதாலும், கடன்- சக்திக்குமீறிய கடனாக இருக்கத்தான் செய்யும். அதேசமயம் 2-க்கும், 5-க்குமுடைய குரு 2-ல் ஆட்சிபெற்று 6-ஆமிடத்தைப் பார்ப்பதால், கடன் பிரச்சினையால் உங்கள் கௌரவம் பாதிக்காது; செல்வாக்கும் குறை யாது. கடன் கொடுத்தவர்கள் உங்களை விரட்டாமல், தொல்லை கொடுக்காமல், "உங்களால் முடியும்போது திரும்பக் கொடுங்கள்' என்று கருணை காட்டுவார்கள். அதற்காக, வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்காமல், மெத்தனமாக இருந்துவிட மாட்டீர்கள். வாக்கு நாணயமாக நடந்து கொள்வீர்கள். திருக்குரானில் ஒருவாசகம் உண்டு- "வாங்கிய கடனைத் திரும்பக்கொடுக்க வேண்டுமென்று மனதார நினைப்பவருக்கு அல்லா வரவைத் தருவார்- திரும்ப அடைக்க நினைக்காதவருக்கு, அவர் அன்றாடச் செலவுக்கே தட்டுப்பாடாகிவிடும்' என்பது தான் அது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடந்தாலும், ராசிநாதன் குரு அங்கே ஆட்சியாக இருப்பதோடு, சனி பகவானுக்கு பாசகன் சுக்கிரனும் அவருடன் சேர்ந்திருப்பதால், சனி உங்களுக்கு பொங்கு சனியாக, தங்குதடையில்லாத மங்களச்சனி யாகப் பலன்செய்வார். ஒவ்வொரு கிரகத்துக் கும் போதகன், வேதகன், பாசகன், காரகன் என்று உண்டு. "கூறு பலனைக்கொடு என்பான் போதகனாம்- வேறுபண்ணி தட்டுவிப்பான் வேதகனாம்- தேறுபலன் கூட்டுவிப்பான் பாசகனாம்- கோல மகா திசைக்கே ஈட்டுப்பொருள் காரகன் ஈவான்' என்பது "சோதிட கிரக சிந்தாமணி' பாடல். எனவே சனிக்கு சுக்கிரன் பாசகன் ஆவார். அதாவது நல்ல பலனைக் கூட்டுவிப்பவன். ஆகவே ஏழரைச்சனி யோகச்சனியாக மாறும். மேலும் குருவும் ஆட்சி! வேலையில் செயல்வேகம், விறுவிறுப்பு, சுறுசுறுப்பு ஏற்படுவதோடு, மேலதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும், ஊதிய உயர்வும் எதிர்பார்க்கலாம். தனியார்துறையில் இருப்போருக்கும் முன்னேற்றம் எதிர்பார்க்கலாம். சொந்தத் தொழில் புரிகிறவர்களுக்கும் சந்தோஷமும், திருப்தியும், லாபமும் பெருகும். கிளைகள் ஆரம்பித்து வியாபாரத்தை விரிவடையச் செய்யலாம். குரு 1, 4-க்குடையவர் என்பதால், சிலர் பிளாட் வாங்கலாம். சிலர் சொந்த வீடு வாங்கலாம். சிலர் கார், ஸ்கூட்டர் வாங்கலாம். சிலர் பழைய வாகனத்தை மாற்றி புது வாகன மாக்கலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவும் முன்னேற்றமும் தெரியும். தாய்- சேய் உறவு பலமடையும். பாசமும் நேசமும் நலமடையும். இரத்தபந்த சொந்தங்களில் சில களை யெடுப்பு நடத்தி, பாசமானவர்களை இணைத்துக்கொள்ளலாம். நேசமானவர்களை நெருக்கமாக்கிக்கொள்ளலாம். துவேஷமானவர்களையும் வேஷம் போடுகிறவர்களையும் தூரத் தள்ளிவைக்கலாம்- விலக்கிவிடலாம். நல்லவர்கள் யார், பொறாமை யாளர்களும், பொல்லாதவர்களும் யார் என்பதை அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைந்தாலும், அவர் குரு, சுக்கிரன், கேதுவோடு சேர்க்கை! மகர ராசிக்கு இப்போது ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. என்றாலும் ஜனன ஜாதகரீதியாக சந்திர தசையோ, சந்திர புக்தியோ நடப்பவர்களுக்கு மட்டும் விரயச் சனி வேதனைச் சனியாகவும், சோதனைச்சனி யாகவும் பலன்செய்யும். மற்றவர்களுக்கு சாதனைச்சனியாகப் பலன் தரும். வீடு, வாகனம், இடம், பிளாட் போன்றவகையில் சுபமுதலீடு, சுபவிரயம் ஏற்படும். பிள்ளை களுக்கு கல்வி சம்பந்தமான சுபமுதலீடு உண்டாகும். குடும்பத்தில் மங்கள காரியங் கள் நடக்கும். அதுசம்பந்தமாக சுபச்செலவு உருவாகும். சிலர் புதிய தொழில் தொடங்க லாம். சிலர் வெளிநாட்டு வேலைக்குப் போகலாம். அல்லது வெளியூர்களில் தொழில் தொடங்கலாம். அரசுப்பணியில் இருப் போருக்கு விரும்பிய இடப்பெயர்ச்சி, பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நன்மைகள் நடக்கும். நல்ல காரிய செலவுகளுக்காக தனியார்க் கடனும் வங்கிக்கடனும் கிடைக்கும். வாங்கிய கடனுக்காக வட்டி செலுத்துவது விரயச்சனியின் வேலையாகும். அப்படிப் பட்ட கடன் சுபக்கடனாகும்; விருத்திக் கடனாகவும் இருக்கும். 10-ல் செவ்வாய் இருப்பதால், அக்னி சம்பந்தமான தொழில் அல்லது கட்டட கான்டிராக்ட் போன்ற தொழில் சிறப்பாக விளங்கும்! ஏற்கெனவே வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம், ஊதிய உயர்வு ஆகிய நன்மை களை அடைவதோடு, சொந்த ஊரில் பிளாட், வீடு போன்றவகையில் முதலீடு செய்யலாம். என்.ஆர்.ஐ. திட்டத்தில் லோன் வசதியும் கிடைக்கும். 10-ல் செவ்வாய் பலம்பெற்று ராசியைப் பார்ப்பதால், உடன்பிறந்தோர் வகையில் உதவியும், ஒத்தாசையும் உண்டாகும். ஏழரைச்சனி விளைவாக கருத்து வேறுபாடு இருப்பவர்களும் இக்காலம் வேறுபாடுகளை அகற்றி, உடன்பாடு உருவாகி ஒற்றுமையோடு செயல்படலாம்; சிறப்படையலாம்!
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம் பெறுகிறார். "ஆறு பன்னொன்பான் மூன்றில் அந்தகன் (சனி) நிற்குமாகில் கூறுபொன் பொருளுண்டாம்; குறைவிலாச் செல்வ முண்டாம்; ஏறு பல்லக்குண்டாம்; இடம் பொருள் ஏவலுண்டாம்' என்பது "சந்திர காவியம்' என்ற ஜோதிடவிதி. அதேபோல 3, 6, 11-ஆமிடங்கள் ராகு- கேதுவுக்கு யோக மான இடங்கள். கேது 11-ல் நிற்க, அவரை ராகு 6-ல் இருந்து பார்க்கிறார். எனவே உங்கள் முயற்சிகள் யாவும் நூறு சதவிகிதம் வெற்றியடையும். குடும்பம், தொழில், வேலை, உத்தியோகம், நண்பர்கள் வட்டாரம், உறவினர்கள்வகையில் எல்லாம் உங்கள் எண்ணம், விரும்பியதுமாதிரி ஏற்றமும், முன்னேற்றமும் உடையதாக அமையும். 10-க்குடைய செவ்வாய் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். ஒரு ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் அமைந்துவிட்டால் போதும்- அவருக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாகத் திகழும். விரும்பியதெல்லாம் வந்தடையும். வேண்டியதெல்லாம் தேடி வரும். கருதியதெல்லாம் கைகூடும். தொட்டதெல்லாம் துலங்கும். நல்ல சீடனை நாடி குருவே தேடிவந்து உபதேசிப் பார். குருவைத்தேடி சீடன் அலைய வேண்டியதில்லை. இரணியன் மனைவியின் கர்ப்பத்திலிலிருந்த பிரகலாதனுக்கு நாரதர் உபதேசம் செய்தார். சுபத்திரையின் கர்ப்பத் திலிருந்த அபிமன்யுவுக்கு கிருஷ்ணர் யுத்தத் தில் பத்மவியூகத்தை உடைத்து, உள்ளே போவ தைப்பற்றி உபதேசம் செய்தார். இராம கிருஷ்ணரை சீடன் நரேந்திரன் தேடிச்சென்று உபதேசம் பெற்று, விவேகானந்தர் ஆனார். ஏகலைவன்- குரு துரோணாச்சாரியாரை மானசீகக் குருவாக மனதில் போற்றி அர்ஜுனனை மிஞ்சிய வில்லாளியானான். ஆடுமேய்க்கும் சிறுவனாக இருந்த காளிதாஸ், காளிதேவி அருளால் மகாகவி காளி தாஸாக பிரபலம் அடைந்தார். இதைதான் வள்ளுவர் "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்றார்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சி. அவருடன் அவருக்கு சாரம்கொடுத்த கேதுவும் (மூலம்- 3-ல் குரு), 3, 8-க்குடைய சுக்கிரனும், 11, 12-க்குடைய சனியும் சம்பந்தம். 9-க்குடைய செவ்வாய் 8-ல் மறைந்தாலும், 2-ஆமிடத்தை- தன் ஸ்தானத்தைத் தானே பார்ப்பது பலம்! எனவே வாக்கு, தனம், குடும்பம், வித்தை, நேத்திரம் ஆகிய 2-ஆமிடத்துப் பலனில் எந்தக் குறைகளும் ஏற்படாது. "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடலாம். 4-ஆமிடத்து ராகு, ஒருசிலருக்கு ஆரோக்கியக்குறைவை ஏற்படுத்தினாலும், ராசிநாதன் குரு பார்ப்பதால் கோடி தோஷம் அகலும். வேலையில்லாதோருக்கு வேலையும், தொழில் இல்லாதோருக்கு தொழில் யோகமும், தொழில்துறையில் இருப்போருக்குத் தொய்வில்லாத முன்னேற் றமும், பதவி யோகம்- உபதொழில் போன்ற உயர்வுகளும் உண்டாகும். 10-க்குடைய குரு 2-ஆமிடத்தையும், 4-ஆமிடத்தையும், 6-ஆமிடத்தையும் பார்ப்பதால் குடும்ப முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்தி நிறைவடையலாம். மேற்படி திட்டங்களுக்காக பற்றாக்குறையை சரிசெய்ய சிலர் கடன் வாங்கலாம். அது சுபக்கடன்தான். 10-ல் சுக்கிரன், சனி, கேது சம்பந்தம் பெறுவதால், சிலர் கலைத்துறையில், சினிமா தயாரிப்பில் ஈடுபடலாம். பொருளாதாரத்துக்காக நம்பிக்கையானவர்களிடம் கடன் வாங்கலாம். லாபம் ஈட்டி, கடனை அசலும் வட்டியுமாக அடைத்து வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். ஒருசிலர் யோகத்துக்கு "கேபிட்டல் பார்ட்னர்' அமையலாம். அதாவது பங்கு முதலீடுசெய்து கூட்டுசேரலாம். குரு, சுக்கிரன் சஞ்சாரம் மிகவும் சாதகமாக அமைவதால், உங்கள் எண்ணமும் திட்டமும் நூறு சதவிகிதம் வெற்றியடையும். லாபமும் கிடைக்கும். நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம். மீன ராசிக்காரர்களும், மீன லக்னத்தாரும் நல்லவர்கள். ஏனென்றால் இந்த ராசி, லக்னாதிபதி குரு என்பதால், குரு நல்லவர்! நல்லவராக மட்டுமல்ல; வல்லவராகவும் செயல்படலாம்.