ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- தனுசு.
6-10-2019- மகரம்.
9-10-2019- கும்பம்.
11-10-2019- மீனம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: அஸ்தம்- 3, 4, சித்திரை- 1.
செவ்வாய்: உத்திரம்- 3, 4, அஸ்தம்- 1.
புதன்: சுவாதி- 2, 3, 4.
குரு: கேட்டை- 3, 4.
சுக்கிரன்: சித்திரை- 3, 4, சுவாதி- 1.
சனி: பூராடம்- 1.
ராகு: திருவாதிரை- 4.
கேது: பூராடம்- 2.
கிரக மாற்றம்:
இல்லை.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைகிறார். 5-க்குடைய சூரியனும் அவருடன் சேர்ந்து 6-ல் மறை கிறார். உங்கள் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகலாம். கையளவு இதயத்தில் கடலளவு ஆசைகள். கடல் அலைகள் கரையைத் தொட்டுத்தொட்டு விலகிவிடுவதுபோல, உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் உருப்படியில்லாமல், உருத் தெரியாமல் மறைந்துவிடு கின்றன. பாக்கியாதிபதி குரு 8-ல் மறைவதால், இரவில் படுக்கப் போகும்போது ஆயிரம் கற்ப னைகள், ஆயிரம் திட்டங்கள்; காலையில் எழுந்தவுடன் அவை யெல்லாம் மாறிவிடும்; மறைந்து விடும். "குடிகாரன் பேச்சு விடிந் தால் போச்சு' என்பதுபோல எல்லாம் கேலிக்கூத்தாகி விடுகிறது. என்றாலும் 10-க் குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். எனவே உங்கள்மேல் அனுதா பப்பட்டு, தோல்விக்கு இடமில் லாமல் காப்பாற்றுகிறது. 5-க்குடையவர் 6-லும், 7-ல் 6-க்குடையவரும் இருப்பதால், மனைவி, மக்கள் எல்லாரும் தாமரை இலை தண்ணீர்போல ஒட்டியும் ஒட்டாமலும், தொட்டும் தொடாமலும் பழகுவார்கள். பாலைப் பார்ப்பதா, பானையைப் பார்ப்பதா என்பதை நினைவில்வைத்து, குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்ற அடிப்படையில் பெருந்தன்மையோடு நடந்துகொள்ளவும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந்தாலும், ஆட்சிபெறுவதால் வீழ்ச்சிக்கு இடமில்லை. எந்த ஒரு ராசிநாதனும் லக்னநாதனும் 6, 8, 12-ல் மறையக்கூடாது. அப்படி மறைந்தால் ஒரு கை ஓசையாக, வழியில்லாமல் போய்விடும். அதேசமயம் அப்படி மறையும் கிரகம் ஆட்சி, உச்சம் பெற்றால், திரைப்படங்களில் நடிப்பவர்கள் வாய் மட்டும் அசைக்க, அவருக்கு குரல் கொடுப்போர் பின்னணி பேசுவதுபோல, உங்களுக்காக வக்காலத்து வாங்கிப் பேசுவதற்கு ஆள் அமைவார்கள். நீதிமன்றங்களில் நமக்காக வாதாடி, வழக்கு களைச் சந்தித்து, ஜெயித்துக் கொடுப்பதற்கு வக்கீல்கள் இருப் பதுபோல, குடும்பத்திலும் வெளிவட்டாரத்திலும் உங்களுக்காக வாதாட ஆள் அமைவார்கள். 7-ல் குரு அமர்ந்து ராசியைப் பார்ப்பது ஒரு பலம். அதேபோல 5-ல் சூரியனும் செவ்வாயும் இருப்பது இன்னொரு பலம். 8-ல் சனி இருந்தாலும், ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதியாகி சூரியனையும் செவ்வாயையும் பார்ப்பதால், உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக கட்டிய மனைவியும், பெற்ற பிள்ளையும் ஆதரவாக இருப்பார்கள். 2-ஆமிடத்து ராகுவும், 8-ஆமிடத்துக் கேதுவும் உங்களுக்கு உதவ முன்வரும். உறவினர்களை பேச்சினால் நோகடிக்காமல் நடந்துகொள்வது அவசியம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். அவருடன் 5-க்குடைய சுக்கிரன் ஆட்சிபெறு கிறார். புதன் ராசிநாதன் என்பதோடு 4-க்குடையவரும் ஆவார். 4-ஆமிடம் என்பது கேந்திர ஸ்தானம். கேந்திராதிபதி திரிகோணம் ஏறுவது ராஜயோகமாகும். எந்த கிரகத்துக்கு கேந்திராதிபத்தியமும் திரிகோணாதிபத்தியமும் கிடைக்கிறதோ, அந்த கிரகம் அந்த ராசிக்கு ராஜயோகாதிபதியாவார். உதாரணமாக, ரிஷப ராசிக்கும் துலா ராசிக்கும் அதிபதியான சனிக்கு கேந்திர, திரிகோணாதிபத்தியம் கிடைப்பதால், அந்த ராசிக்கு அவர் ராஜயோகாதிபதியாவார். கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம். திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம். விஷ்ணுவும் லட்சுமியும் அருள்புரியும்போது அதிர்ஷ்டசாலியாகி விடலாம். அதாவது முயற்சிகள் தளர்ச்சி யில்லாமல் வளர்ச்சியடையும்போது கிளர்ச்சி யில்லாமல் வெற்றிகளைக் குவிக்கலாம். கேந்திரம்- முயற்சி, உழைப்பைக் கொடுக்கும். திரிகோணம்- வேலைக்கேற்ற கூலி தருவ தோடு, ஊக்கத்தொகையும் தரும். அதை "டிப்ஸ்' என்றும் சொல்லலாம்; "சன்மானம்' என்றும் சொல்லலாம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு குரு பார்வை கிடைக்கிறது. குரு 6, 9-க்குடையவர். அதே போல 9-ஆம் இடத்தை 10-க்குடைய செவ் வாயும் பார்க்கிறார். அதனால் தர்மகர் மாதிபதி யோகம். ஒரு ஜாதகத்தில் ஆட்சி, உச்சம் பெறும் கிரகங்களைவிட, பரிவர்த் தனை பெறும் கிரகங்களுக்கு பலம் அதிகம். அதேபோல கேந்திராதிபத்தியம், திரிகோணா திபத்தியம் பெறும் கிரகங்களுக்கும் பலம் அதிகம். 5, 9- திரிகோணம். 4, 7, 10- கேந்திரம். மிதுன ராசியில் எழுதியபடி கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம். திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம். கேந்திரம்- முயற்சி. திரிகோணம்- பலம். இதை திருவள்ளுவர் "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்' என்று சொன்னார். ஆகவே, முயற்சியுடையார் இகழ்ச்சி யடையார். கடும் பிரயாசையும், தீவிர முயற்சி யும் இருப்பவர்களை தெய்வம் கைவிடாது. அதற்கு உதாரணம் விசுவாமித் திரர். அரச யோகத்தைத் துறந்து, கடும் தவமிருந்து பிரம்மரிஷியானார். அவரவர் உழைப்பென்பது அவரவர் சேமிப்புக் கணக்கில் சேரும் முதலீடாகும். அந்தப் பலனை அவர்கள் அடைந்தே தீரவேண்டும். இறைவன் இருவருக்கு உதவமாட்டார். சோம்பேறி மற்றும் நம்பிக்கைத் துரோகி.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 2-ல் செவ்வாயோடு கூடியிருக்கிறார். செவ்வாய் சிம்ம ராசிக்குத் திரிகோணாதிபதி என்பதோடு, சூரியனுக்கு உச்ச ராசிநாதன் ஆவார். செவ்வாயின் ராசியான மேஷத் தில்தான் சூரியன் உச்சமாவார். வாரத் தொடக்கத்தில் விரயாதிபதியான சந்திரன் சாரத்தில் (அஸ்தம்) சூரியன் இருந்தாலும், வாரப் பிற்பகுதியில் செவ்வாயின் சாரத்தில் (சித்திரை) மாறுவார். எனவே, 6, 7-க்குடைய சனி 5-ல் நின்று சூரியனையும் செவ்வாயையும் பார்ப்பதால் ஏற்படும் கெடுபலன்கள் மறைந்துவிடும். அதேசமயம் 5-ல் கேது இருப்பதால், உங்களுக்கு நீங்களே எதிரியாக விளங்குவீர்கள். பூட்டிய வீட்டை சிறிது தூரம் சென்றபிறகு, சரியாகப் பூட்டினோமா இல்லையா என்று சந்தேகப்பட்டு, திரும்பிவந்து பூட்டை இழுத்துப்பார்க்கும் தன்மை 5-ல் உள்ள சனிக்கும் கேதுவுக்கும் இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் திட்டவட்ட மான, தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தைக் கொடுக்கும். சனி- கேது, ராகு இப்படி குழப்பங்களை ஏற்படுத்தினாலும், சிம்ம ராசிக்கு யோகாதிபதியும் திரிகோணா திபதியுமான செவ்வாய் அவர்களைப் பார்ப்ப தால், தேர்ந்து தெளிதல் வேண்டும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 2-ல் 2-க்குடைய சுக்கிரனோடு சம்பந்தம். புதன் ராகு சாரம். அவரோடு சேர்ந்து தொடக்கத்தில் 3, 8-க்குடைய செவ்வாய் சாரம் பெற்றாலும், வாரப் பிற்பகுதியில் அவரும் ராகு சாரம் பெறுவார். (சுவாதி). ராகு 10-ல் இருக்கிறார்; 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். ஒரு திரைப் படத்தில் கவுண்டமணி, "தானும் படுக்க மாட்டான். தள்ளியும் படுக்கமாட்டான்' என்று வசனம் பேசுவார். அதுபோல நீங்களே ஒரு முடிவெடுத்து செயல்படவும் மாட்டீர்கள்; மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு வழிநடக்கவும் மாட்டீர்கள். 8-க்குடைய செவ்வாயும், 12-க்குயை சூரியனும் ஜென்ம ராசியில் இருப்பதாலும், அவர்களை சனி பார்ப்பதாலும் "நனைந்து சுமக்கிறவர்கள்' என்று சொல்லலாம். அதனால் ஏமாற்றமும் விரயமும் சர்வசாதாரணமாக இருக்கும். பணிவோடு குனிந்து நிலைப்படியைத் தாண்டுவது ஒருவகை. முட்டிக்குனிவது இன்னொருவகை. இதுதான் கன்னி ராசிக் காரர்களின் நிலை. அதேசமயம் 7-க்குடைய குரு 7-ஆமிடத்தைப் பார்ப்பதால், திருமண மாகாதவர்கள் தாயார் அல்லது சகோதரர்கள் ஆலோசனையைக் கேட்டு நடக்கவும். ஆனவர்கள் மனைவியின் ஆலோசனையின்படி நடக்கவும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் ஆட்சிபெறு கிறார். அவருடன் பாக்கியாதிபதியும் விரயாதி பதியுமான புதன் சேர்க்கை. 2-ல், 3, 6-க்கு டைய குரு இருக்கிறார். 6-க்குடையவர் 2-ல் இருந்தால், அந்நியர் தனம் உங்கள் கையில் புரளும். அதாவது தயங்காமல் எல்லாரிடமும் கடன் வாங்குவது; அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள் கூசாமல் கைநீட்டி லஞ்சம் வாங்கு வது. 2-க்குடையவர் 6-ல் மறைந்தால், நமது பணம் அந்நியர்கள் வசமாகும். நம்பிக் கொடுத்து ஏமாறுவார்கள். அல்லது இருந்து, கொடுத்து வாங்குவதற்கு நடந்து அலைய வேண்டும். 7-ஆமிடத்தை 8-க்குடைய சுக் கிரனும், 12-க்குடைய புதனும் பார்ப்பதாலும், 7-க்குடைய செவ்வாய் 12-ல் மறைவதாலும் சிலர் மனைவியால் கடன்காரர் ஆகலாம். அல்லது கணவர்பட்ட கடனை மனைவி அடைக்கலாம். ஆக, ஏதோ ஒருவகையில் கடனாதிக்கம் குடும்பத்தில் கோலோச்சும். அதேசமயம் ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்குவதால், மயில்ராவணன் கதை போல கடன் பெருகிக்கொண்டே போகும். இராவணன் தம்பி மயில்ராவணன். யுத்தத்தில் அவன் உடலிலிருந்து சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும் பல மயில்ராவணன்கள் உதயமாவார்களாம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிக்கு 2020 மார்ச்வரை ஏழரைச்சனி. மார்ச் 28-ல் தனுசுச் சனி மகர ராசிக்கு அதிசாரமாக மாறுகிறார். 20-5-2020-ல் மகரத்தில் சனி வக்ரம் ஆரம்பம். 16-6-2020-ல் சனி மீண்டும் தனுசுவுக்கு வக்ரமாக வருகிறார். 15-9-2020-ல் மீண்டும் மகரத்திற்கு சனி மாறுகிறார். உண்மையில் டிசம்பரில் வரும் சனிப்பெயர்ச்சிதான் சரியான பெயர்ச்சி. ஆக, 2020 டிசம்பர்வரை விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரைச்சனி இருப்பதாக எடுத்துக்கொள்ளவேண்டும். இடையில் மகரத்திற்கும் தனுசுவுக்கும் அதிசாரமாக- வக்ரமாக வரும் காலம்- அரசு அலுவலகங்களில் விடுமுறைக்குப் போன அதிகாரிக்கு பதிலாக வேறொரு அதிகாரி "ஆக்டிங் ட்யூட்டி' பார்ப்பதற்குச் சமம். அவர் கோப்புகளைப் (பைல்களை) பார்க்கலாமே தவிர, எந்த உத்தரவும் பிறப் பிக்க முடியாது. எனக்குத் தெரிந்த ஒரு தாசில்தார் விடுமுறையில் சென்ற சமயம், அவர் வேலையைப் புதியவர் பார்த்தார். அது பென்ஷன் வழங்கும் துறை. பென்ஷன் வாங்கியவர்கள் அவருக்கு நூறு ரூபாய் சன்மானம் கொடுத்தார்கள். பழையவர் அது தனக்குரியதான பணம் என்று புதியவரிடம் சண்டை போட்டாராம். இது ஏழரைச்சனி வேலை.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. 2020 மார்ச்சில் ஜென்மச்சனி விலகுவதாக பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டாலும், அது அதிசாரம்தான். ஜூன் 2020-ல் மீண்டும் தனுசுவுக்கு ஜென்மச்சனியாக மாறுவார். டிசம்பரில்தான் நிரந்தரமான பெயர்ச்சி. ஒரு ரயில் நிலையத்தில், தாமதமாக வரவேண்டிய ரயில் சீக்கிரமாக வந்துவிட்டால், முதலில் வரவேண்டிய ரயிலுக்காக அந்த ரயில் காத்திருக்கும். அந்த ரயில் வந்துபோன பிறகுதான், முதலில் வந்த ரயில் புறப் பட்டுப்போகும். அந்தக் காலத்தில் சாவி மாற்றும் முறை என்ற ஒன்று இருந்தது. அதுபோலத்தான் கிரகங்களின் அதிசாரமும் வக்ரமும் செயல்படும். ராசிநாதன் 12-ல் மறைவதால், தவிர்க்கமுடியாத செலவுகளும் விரயங்களும் ஒருவகையில் ஏற்பட்டாலும், ஜென்ம ராசியை 5, 12-க்குடைய செவ்வாய் பார்ப்பதால், அவை முக்கியமான செலவுகளாகவும் பயனுள்ள செலவுகளாவும் அமையும். சிலருக்கு சுபமங்களச் செலவுகளாகவும் அமையும். 10-ஆமிடம் தொழில் ஸ்தானம் என்பதால், தொழில் முதலீட்டுச் செலவாகவும் அமையும். 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் பூமி, வீடு, வாகன வகையில் சுபச்செலவாகவும் அமையும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிக்கு விரயச்சனி நடக்கிறது. சனி ராசிநாதன் என்பதால், விரயச்சனியைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். மேலும் மகர ராசிக்கு உச்ச ராசிநாதனான செவ்வாய் சனியைப் பார்க்க, சனியும் செவ்வாயைப் பார்க்கிறார். பொதுவாக சனியும் செவ்வாயும் பார்த்தால்- சேர்ந்தால் கெடுபலன்தான். "மந்தன் சேய் இருவரும் சேர்ந்திடவும் தீது; பார்த்திடவும் தீது' என்பது ஜாதக அலங் கார விதி. ஆனால் உங்களுக்கு சனி ராசிநாதன் என்பதால், விதிவிலக்கு உண்டு. செவ்வாயோ சனியோ ராசிநாதனா கவோ, லக்னநாதனாகவோ இருந்தால் அந்த விதி பொருந்தாது; விதிவிலக்காகும். 3-க்குடைய குரு 11-ல் நின்று 3-ஆம் இடத்தைப் பார்ப்பதால், உடன்பிறந்தவர்கள் வகையில் உங்களுக்கு அனுகூலமும், நன்மையும் உண்டாகும். 3-ஆமிடம் நண்பர்கள் ஸ்தானமும்கூட. நண்பர்கள் வகையிலும் நன்மைகள் நடக்கும். நீண்டகாலமாகப் பிரிந்திருக்கும் நண்பரின் சந்திப்பும் நட்பும் புத்துணர்வு தரும். மலரும் நினைவுகளால் மகிழ்ச்சியடையலாம். 7-ஆமிடத்தை குரு பார்ப்பதால், ஒருசிலர் நீண்டகாலமாகப் பிரிந்திருக்கும் காதலியை சந்திக்கலாம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அவரை ராகுவும் செவ்வாயும் பார்க்கிறார்கள். செவ்வாய்- சனியைப் பார்க்க, சனி- செவ்வாயைப் பார்க்கிறார். சனி ராசிநாதன் என்பதால், சனி- செவ்வாய் பார்வை நல்லதைச் செய்யும்; கெடுக்காது. 3, 10-க்குடைய செவ்வாய் 8-ல் மறைந்தாலும் 3-ஆமிடத்தையும் பார்க்கிறார்; 11-ஆமிடத்தையும் பார்க்கிறார்; 2-ஆமிடத்தையும் பார்க்கிறார். எனவே, புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் உயர்வு பெறலாம். ஏற்கெனவே நடந்துவரும் தொழிலை விருத்தி செய்யலாம். முதலீடு பற்றாக் குறையாக இருந்தால் கூட்டாளியைச் சேர்த்துக்கொள்ளலாம். ஒருசிலர் வருமான வரிக்காக மனைவி அல்லது சகோதரர்களை பார்ட்னர்ஷிப் சேர்த்துக்கொள்ளலாம். 5-ல் ராகு இருப்பதும், 5-ஆமிடத்துக்கு புத்திரகாரகன் குரு 6-ல் மறைவதும், 5-ஆமிடத்தை சனியும் கேதுவும் பார்ப் பதும் புத்திரதோஷம் எனப்படும். 4, 5, 7, 8-ஆம் தேதிகளில் திருமணம் நடந்தால் வாரிசு தடையாகும். 1, 3, 6-ஆம் தேதிகளில் மறுமாங்கல்யம் அணிவித்தால் வாரிசு உருவாகும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
கடந்த சில வாரங்களாகவே மீன ராசிக்காரர்களுக்கு கோட்சாரம் மிக அனுகூலமாக இருக்கிறது. அதாவது மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்ப்பது ஒருவகையில் பலம். இன்னொரு வகையில் 10-க்குடையவர் 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகம். அத்துடன் 2, 9-க்குடைய செவ்வாய் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதும் மற்றொரு வகையில் பலம். "எட்டில் ஒரு ஏழையேனும் பத்தில் ஒரு பாவியேனும் இருக்க வேண்டும்' என்பது ஜோதிடப் பழமொழி. அதன்படி 8-ல் புதனும் சுக்கிரனும் அமைந்து, 10-ல் சனி, கேதுவும் நின்று, செவ்வாயும் ராகுவும் பார்ப்பதால், மீன ராசிக்காரர் களுக்கு "குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா' என்று போற்றிப் பாடலாம். "போற்றிப் பாட்டி கண்ணே' என்று, ஒரு படத்தில் பாடியமாதிரி, உங்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். 4-ல் ராகு ஒருசிலருக்கு தனக்கோ தாயாருக்கோ ஆரோக்கியக்குறைவை ஏற்படுத்தினாலும், ராகுவுக்கு வீடுகொடுத்த புதனும் ராகுவும் ராகு சாரத்தில் நிற்பதால், எந்த தோஷங்களும் இல்லை. அதாவது அடுத்தவர் உங்கள் கன்னத்தில் அறையும்போது அடி பலமாக விழும். நீங்களே அறைந்துகொண்டால் அடியின் வலி குறையும்.