Advertisment

இந்த வார ராசிபலன் 5-1-2020 முதல் 11-1-2020 வரை

/idhalgal/balajothidam/weeks-zodiac-5-1-2020-11-1-2020

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மேஷம்.

6-1-2020- ரிஷபம்.

9-1-2020- மிதுனம்.

11-1-2020- கடகம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: பூராடம்- 2, 3, 4, உத்திராடம்- 1.

செவ்வாய்: அனுஷம்- 1, 2.

புதன்: பூராடம்- 4, உத்திராடம்- 1, 2, 3, 4.

குரு: பூராடம்- 1.

சுக்கிரன்: அவிட்டம்- 1, 2, 3.

சனி: பூராடம்- 3.

ராகு: திருவாதிரை- 2.

கேது: மூலம்- 4.

கிரக மாற்றம்:

குரு, சனி, புதன் அஸ்தமனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் எட்டில் மறைந்தாலும் ஆட்சி பலம்! ஒரு கிரகம் ஆட்சி, உச்சம் பெற்றால் அவருக்கு மறைவு தோஷம் ஏற்படாது. விதிவிலக்கு. எனவே உங்களுடைய ஆற்றல், செயல்பாடு, திறமை எல்லாவற்றுக்கும் எந்தவிதத் தடையும் இருக்காது. குறுக்கீடுகள் காணப்பட்டாலும் அவற்றை வேகத்தடைபோல (ஸ்பீடு பிரேக்கர்) கடந்துசெல்லலாம். தர்மாதிபதி குருவும், கர்மாதிபதி சனியும் 9-ல் நின்று ராசியைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகமாகும். எந்த ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் அமை கிறதோ, அந்த ஜாதகரின் லட்சியம் வெற்றி யடையும்; எண்ணங்கள் ஈடேறும். அடியேனுக்கு அந்த பாக்கியம் உண்டு. அசைவப் பிரியனாக வாழ்ந்த எனக்கு சிவபூஜை செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு முழுவதும் பிரபலம் அடையவேண்டும் என்றும், பாராட்டுப் பெறவேண்டும் என்றும் ஒரு ஆவல்! ஓரளவு அது நிறைவேறிவிட்டது. அந்தப் பெருமை அடியேனது குருநாதர் பள்ளத்தூர் அய்யா குருக்களுக்கும், நக்கீரன் கோபால் அவர்களுக்குமே சேரும். "வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை கருத்தறிந்து முடிப்பான் தன்னைத் தூயானை தூவெள்ளையேற்றான் தன்னைச் சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென் தாயா னைத் தவமாய தன்மையானைத் தலையாய தேவாதி தேவர்க்கென்றும் சேயானைத் தென்கூடல் திருவாலவாய் சிவனடியே சிந்திக்கப்பெற்றேன் நானே' என்று நால்வரில் ஒருவர் திருநாவுக்கரசர் பாடினார். அதையே திருவள்ளுவப் பெருந்தகையும் "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்றார். ஆகவே, உங்கள் லட்சியங்களும், எதிர்காலக் கனவுகளும் ஈடேற வைராக்கியமும் சாதனையும் வேண்டும். அதற்கு உதாரணம் அரச போகத்தில் திளைத்த மன்னன் சந்திரவன்ஷி (சோமவன்ஷி)தான் "பிரம்மரிஷி' பட்டம் பெற்று விசுவாமித்திரர் ஆனார். காமவயப்பட்ட அருணகிரியார் "திருப்புகழ்' பாடினார். கொள்ளைக்காரன் ரட்சகன் இராமாயணம் இயற்றி வால்மீகி யானார்! உங்கள் ராசிக்கும் தர்மகர்மாதிபதி யோகம் இருப்பதால், உங்களின் நியாயமான ஆசைகளும் லட்சியங்களும் ஈடேறும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிக்கு 8-ஆமிடத்தில் ஐந்து கிரகச் சேர்க்கை இருக்கிறது. பத்து தினங்களுக்கு முன்னதாகவே ஆறு கிரகச் சேர்க்கை முடிந்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக இன்னும் சில தினங்கள் ஐந்து கிரகச் சேர்க்கை இருக்கும். இந்த கிரகச் சேர்க்கை யால் உங்களுக்குப் பெரும் பாதிப்புகளுக்கு இடமில்லை என்றாலும், வேகத்தடை போல அவ்வப்போது சில குறுக்கீடுகளும், தடைகளும் ஏற்படலாம். அவற்றைக் கடந்து நீங்கள் முன்னேறவேண்டும். முயற்சி யுடையார் இகழ்ச்சியடையார் என்பதுபோல உங்கள் முயற்சிக்கும் வளர்ச்சிக்கும் தளர்ச்சி இருக்காது. "முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்' என்றார் வள்ளுவர். அதாவது முயற்சி

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மேஷம்.

6-1-2020- ரிஷபம்.

9-1-2020- மிதுனம்.

11-1-2020- கடகம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: பூராடம்- 2, 3, 4, உத்திராடம்- 1.

செவ்வாய்: அனுஷம்- 1, 2.

புதன்: பூராடம்- 4, உத்திராடம்- 1, 2, 3, 4.

குரு: பூராடம்- 1.

சுக்கிரன்: அவிட்டம்- 1, 2, 3.

சனி: பூராடம்- 3.

ராகு: திருவாதிரை- 2.

கேது: மூலம்- 4.

கிரக மாற்றம்:

குரு, சனி, புதன் அஸ்தமனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் எட்டில் மறைந்தாலும் ஆட்சி பலம்! ஒரு கிரகம் ஆட்சி, உச்சம் பெற்றால் அவருக்கு மறைவு தோஷம் ஏற்படாது. விதிவிலக்கு. எனவே உங்களுடைய ஆற்றல், செயல்பாடு, திறமை எல்லாவற்றுக்கும் எந்தவிதத் தடையும் இருக்காது. குறுக்கீடுகள் காணப்பட்டாலும் அவற்றை வேகத்தடைபோல (ஸ்பீடு பிரேக்கர்) கடந்துசெல்லலாம். தர்மாதிபதி குருவும், கர்மாதிபதி சனியும் 9-ல் நின்று ராசியைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகமாகும். எந்த ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் அமை கிறதோ, அந்த ஜாதகரின் லட்சியம் வெற்றி யடையும்; எண்ணங்கள் ஈடேறும். அடியேனுக்கு அந்த பாக்கியம் உண்டு. அசைவப் பிரியனாக வாழ்ந்த எனக்கு சிவபூஜை செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு முழுவதும் பிரபலம் அடையவேண்டும் என்றும், பாராட்டுப் பெறவேண்டும் என்றும் ஒரு ஆவல்! ஓரளவு அது நிறைவேறிவிட்டது. அந்தப் பெருமை அடியேனது குருநாதர் பள்ளத்தூர் அய்யா குருக்களுக்கும், நக்கீரன் கோபால் அவர்களுக்குமே சேரும். "வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை கருத்தறிந்து முடிப்பான் தன்னைத் தூயானை தூவெள்ளையேற்றான் தன்னைச் சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென் தாயா னைத் தவமாய தன்மையானைத் தலையாய தேவாதி தேவர்க்கென்றும் சேயானைத் தென்கூடல் திருவாலவாய் சிவனடியே சிந்திக்கப்பெற்றேன் நானே' என்று நால்வரில் ஒருவர் திருநாவுக்கரசர் பாடினார். அதையே திருவள்ளுவப் பெருந்தகையும் "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்றார். ஆகவே, உங்கள் லட்சியங்களும், எதிர்காலக் கனவுகளும் ஈடேற வைராக்கியமும் சாதனையும் வேண்டும். அதற்கு உதாரணம் அரச போகத்தில் திளைத்த மன்னன் சந்திரவன்ஷி (சோமவன்ஷி)தான் "பிரம்மரிஷி' பட்டம் பெற்று விசுவாமித்திரர் ஆனார். காமவயப்பட்ட அருணகிரியார் "திருப்புகழ்' பாடினார். கொள்ளைக்காரன் ரட்சகன் இராமாயணம் இயற்றி வால்மீகி யானார்! உங்கள் ராசிக்கும் தர்மகர்மாதிபதி யோகம் இருப்பதால், உங்களின் நியாயமான ஆசைகளும் லட்சியங்களும் ஈடேறும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிக்கு 8-ஆமிடத்தில் ஐந்து கிரகச் சேர்க்கை இருக்கிறது. பத்து தினங்களுக்கு முன்னதாகவே ஆறு கிரகச் சேர்க்கை முடிந்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக இன்னும் சில தினங்கள் ஐந்து கிரகச் சேர்க்கை இருக்கும். இந்த கிரகச் சேர்க்கை யால் உங்களுக்குப் பெரும் பாதிப்புகளுக்கு இடமில்லை என்றாலும், வேகத்தடை போல அவ்வப்போது சில குறுக்கீடுகளும், தடைகளும் ஏற்படலாம். அவற்றைக் கடந்து நீங்கள் முன்னேறவேண்டும். முயற்சி யுடையார் இகழ்ச்சியடையார் என்பதுபோல உங்கள் முயற்சிக்கும் வளர்ச்சிக்கும் தளர்ச்சி இருக்காது. "முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்' என்றார் வள்ளுவர். அதாவது முயற்சி ஒருவனுக்கு செல்வத்தைப் பெருகச் செய்யும். முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைத் தந்துவிடும். 2-ஆமிடத்து ராகுவும், 8-ஆமிடத்துக் கேதுவும் கடுமையான முயற்சி களுக்குப்பிறகு தனவரவைக் கொடுத்தாலும், விரயாதிபதி செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் சேமிக்கமுடியாமல் செலவாகிவிடும். விரயம் ஏற்பட்டாலும் ரிஷப ராசிக்கு ராஜயோகா திபதியான சனியின் சாரத்தில் (அனுஷம்) செவ்வாய் சஞ்சரிப்பதால், பயனுள்ள செலவாக வும், பலன்தரும் செலவாகவும் அமையும். அதேசமயம் 8-ஆமிடத்தில் குரு, சனி சேர்க்கை இருப்பதால், இறைக்கிற கிணறு ஊறும் என்பதுபோல வருமானமும் வந்துசேரும்.

ss

மிதுனம்

Advertisment

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

ராசிநாதன் புதன் சூரிய னோடு சேர்ந்து ராசியைப் பார்க்கிறார். இது புதாதித்திய யோகமாகும். அத்துடன் 9-க்குடைய சனியும், 10-க்குடைய குருவும் 7-ல் சேர்ந்திருப்பதும், ராசியைப் பார்ப்பதும் தர்மகர்மாதிபதி யோகமாகும். எந்த ஒரு ஜாதகத்திலும் தர்மகர்மாதிபதி யோக மிருந்தால், அவர்களுக்கு குருவருளும் திருவருளும் பெருகும். அதுதான் பூர்வ புண்ணிய யோகம் என்பது. 6, 11-க்குடைய செவ்வாய் 6-ல் ஆட்சிபெற்று ராசியைப் பார்க்கிறார். 6-ஆமிடம் என்பது சத்ரு ஸ்தானம் என்றாலும் (ரோகம், ருணம், சத்ரு), ஜென்ம ராகு உங்களு டைய முயற்சிகளுக்கும், செயல்களுக்கும் வெற்றியைத் தேடித்தரும். ராகுவும் கேதுவும் ஆன்மிக கிரகங்கள். அதனால் உங்களுடைய ஆன்மிக பலம் அதிகரிக்கும். அது வைராக்கியத்தையும், சாதனைகளையும் ஏற்படுத்தித் தரும். வெற்றிவாகை சூடலாம். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவுகளில் நிலவும் கடுமையான சூழ்நிலைகள் விலகும். திருமணமாகாதவர்களுக்கு ஆண்களானா லும், பெண்களானாலும் திருமணம் கைகூடும். ஆண்களுக்கு மனதுக்கேற்ற மனைவி அமைவார். பெண்களுக்கு மனம் போல் மாங்கல்யம் கூடும். 8-ல் உள்ள சுக்கிரன், கணவர் பெயரில் அல்லது மனைவி பெயரில் சொத்து, சுகபோக யோகங்களை அமைத்துக்கொடுப்பார்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 4, 11-க்குடைய சுக்கிரன் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். பெண்கள் என்றால் கணவராலும்; ஆண்கள் என்றால் மனைவியாலும் பெருமை சேரும் காலம். "ஜாடிக்கேற்ற மூடி' என்று சொல்வது போல செயல்படலாம். அரசவைக் கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை "காதலர் இருவர் கருத்தொருமிற்று ஆதரவு பெற்றதே இன்பம்' என்றார். வள்ளுவப் பெருமானும் "இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக்கடை' என்றார். ஆகவே மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். 12-ல் உள்ள ராகுவை 5, 10-க்குடைய செவ்வாய் பார்ப் பதால், கடமை, காரியங்களில் நிலவும் தடங்கல்களும், குறுக்கீடுகளும் விலக்கி, துணிவோடு செயல்படும் ஆற்றலைக் கொடுப்பார். 6-ஆமிடத்திலுள்ள ஐந்து கிரகச் சேர்க்கை தொழில், ஜீவித ஸ்தான மான 10-ஆமிடத்துக்கு பாக்கிய ஸ்தானம் என்பதால், வேதனைகளை விலக்கலாம்; சோதனைகளை ஜெயிக்கலாம்; சாதனை களைப் படைக்கலாம். தெய்வ பக்தியும், கடமை உணர்வும் உங்களுக்கு எளிமையாக வெற்றியை எட்டிப்பறிக்கச் செய்யும். 5-ல் ஆட்சிபெற்ற செவ்வாய் வைராக்கியத்தை வளர்க்கும். தெய்வத்தின் பேரருளைப் பெற்றுத் தரும். பொதுவாக இறைவன் துரோகிகளுக்கும், சோம்பேறிகளுக்கும் உதவிசெய்யமாட்டார்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 5-ல் இருக்கிறார். அவரோடு புதன், குரு, சனி, கேது சேர்க்கை. திரிகோணத்தில் ஏற்படும் ஐந்து கிரகச் சேர்க்கை உங்களுடைய எதிர்காலத்தைப் பிரகா சிக்கச் செய்யும். ஒளிமயமான எதிர்காலம் உங்கள் கண்ணுக்குத் தெரியும். வருங்காலம் வளமும் நலமும் பெறும் காலமாக மாறும். உங்களுக்கும் வாழ்வு வரும். உங்களை நம்பி இருப்போருக்கும் வாழ்வு வரும். திரைப்படத்தில் பாடியமாதிரி "எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும். வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே.' அதேபோல "வாழு, வாழவிடு' என்று ஒரு மகான் சொன்னார். அந்த அர்த்தத்தில்தான் கவிஞர் வாலியும் "ஏமாறாதே ஏமாற்றாதே' என்று பாடல் எழுதினார். 5-ஆமிடம் மனம், திட்டம், மக்களைக் குறிக்குமிடம். அதுவே மகிழ்ச்சி ஸ்தானம். மக்களுக்கு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். உங்கள் இதயத்தில் தேக்கிவைத்திருக்கும் திட்டங்கள் ஈடேறும். நெஞ்சில் நினைத்தது ஈடேறும். கடந்தகால வேதனைகளை விலக்கிவிட்டு, எதிர்கால வெற்றி களை நினைத்து நிகழ்கால சாதனைகளைப் படைக்கலாம். அர்த்தநாரீஸ்வரர் தத்துவம்போல கணவரும் மனைவியும் இணைந்து வாழ்வில் வளம் காணலாம். குடும்பநலம் பேணலாம்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

2020 புத்தாண்டு உங்கள் லக்னத் தில்தான் பிறந்தது. 4-ஆமிடத்தில் ஐந்து கிரகச் சேர்க்கை ஏற்பட்டு, 10-ஆமிடத்தை அந்த ஐவரும், அத்துடன் செவ்வாயும் பார்ப்பதால், ஆறு கிரகப் பார்வைப் பலனாக உங்கள் வாழ்வும், தொழிலும், பதவியும், உத்தியோகமும் வளம்பெறும். நலம்பெறும். வாடகை வீட்டில் குடியிருப்போர் ஒத்திவீடு போகலாம். ஒத்திவீட்டில் இருப்போருக்கு சொந்தவீடு குடிபோகும் வாய்ப்பு அமையும். சொந்த வீட்டில் குடியிருப்போர் கடை, வணிக வளாகம் போன்ற வகையில் வருமானம் தேடலாம். சிலர் புதிய வாகனங்கள் வாங்கலாம். அல்லது வாகன மாறறம் செய்யலாம். இவையெல்லாவற்றுக்கும் பணப்பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்கலாம். கம்ப ராமாயணத்தில், ஆயுதமின்றி நிராயுத பாணியாக நின்ற இராவணனை, இராமபிரான் "இன்று போய் நாளை வா!' என்றார். அப்போது "கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று கம்பர் பாடினார். இதனால் கம்பர் கடன் வாங்கியிருப்பாரோ என்று சந்தேகிக்க வேண்டாம். கலைவாணியின் அருள்பெற்ற கம்பருக்கு சக்தி அருள், அனுபவ அறிவு இரண்டும் இருந்ததால்தான் அவர் எழுதிய எல்லா கதாபாத்திரங்களாகவே ஒன்றி எழுதிவிட்டார்

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 4-ல் கேந்திர பலம்பெறுகிறார். 2-ல் செவ்வாய் ஆட்சிபலம் பெறுகிறார். 3-ஆமிடம் உபஜெய ஸ்தானம். ஐந்து கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. 9-ல் ராகு. ஆன்மிக நாட்டம் பெருகும். குலதெய்வப் பிரார்த்தனைகள் ஈடேறும். குறிசொல்வது, அருள்வாக்கு சொல்வது, ஜோதிடம் சொல்லும்வகையில் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். (ராகுவை செவ்வாய் பார்ப்பதால்). ஒருசிலருக்கு கோவிலிலில் பூஜை செய்யும் வாய்ப்புகள் உருவாகும். எனக்குத் தெரிந்த அரசு டாக்டர் ஒருவர் பணிநிறைவு பெற்று வீட்டில் ஓய்வாக இருந்தார். அவர் வீட்டருகில் ஒரு பிள்ளையார் கோவில். அந்தப் பிள்ளையார் கோவில் கமிட்டியினர் பிள்ளையாருக்கு பூஜை செய்யும் பணியினை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவரும் மனமுவந்து ஏற்றுக்கொண்டார். அதேபோல இன்னொரு நண்பர் எங்கள் பகுதியில் சாய்பாபா கோவிலிலில் சிறிய அளவில் இருக்கும் சாய்பாபாவிற்கு பூஜைசெய்யும் தருமப் பணியை மேற்கொண்டார். பாபாவின் கருணையால் அவர் ஆந்திர மாநிலத்துக்கு மாறும் சூழ்நிலை வந்துவிட்டது. (மகள் வீட்டுக்கு). அங்குள்ள பாபா கோவிலுக்கு பூஜைசெய்யும், பராமரிக்கும் பணி கிடைத்தது. ஆக, எதை விசுவாசமாக, உண்மை யாக விரும்புகிறீர்களோ அது உங்களுக்குக் கிடைக்கும். எங்கு போனாலும் அந்த வாய்ப்பு உங்களைத் தேடிவரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். 2-ஆமிடத்தில் சூரியன், புதன், குரு, சனி, கேது ஆகிய ஐந்து கிரகங்களும் சேர்க்கை. அவர்களை ராகு பார்க்க, ராகுவை செவ்வாய் பார்க்கிறார், உண்மையில் இதை ஏழு கிரகச் சேர்க்கையாகக் கருதவேண்டும். (சுக்கிரன், சந்திரன் இருவரைத் தவிர). இது உங்களுக்கு ஒரு ப்ளஸ் பாயின்ட். 10-ஆமிடம் தொழில் ஸ்தானம். அதற்கு திரிகோணத்தில் இத்தனை கிரகச் சேர்க்கை அமைவதால், திட்டமிடும் காரியங்களில் வெற்றிபெறுவதென்பது இயற்கை. ஆனால் திட்டமிடாத காரியங்களிலும் வெற்றிபெறுவதென்பது யோகம் அல்லது அதிர்ஷ்டம். உங்கள் கிரக அமைப்பு, உங்களுக்கு அந்த அதிர்ஷ்டத்தை யும் யோகத்தையும் கொடுக்கும். கவியரசர் கண்ணதாசன் எழுதி, நடிகர் சந்திரபாபு பாடிய பாடல் ஒன்றை இங்கு குறிப்பிடத்தான் வேண்டும். "வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலிலி இல்லை. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.' ஆக, வெற்றிபெறுவதற்கும் யோகம் வேண்டும், அதிர்ஷ்டம் வேண்டும்; அதேசமயம் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் வைராக்கியமாக, தளர்ச்சியில்லாத முயற்சி உடையவர்களுக்கு தாமதமானாலும் வெற்றி நிச்சயம். அதற்கு உதாரணம் விசுவாமித் திரர்தான். பல சோதனைகளைக் கடந்து சாதனைகளைப் புரிந்து "பிரம்மரிஷி' பட்டம் பெற்றார்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசியில் ஐந்து கிரகச் சேர்க்கை இருக்கிறது. ஆறாவது கிரகமான ராகு அவர் களைப் பார்க்கிறார். ராகுவை, ஆட்சிபெற்ற செவ்வாயும் பார்க்கிறார். ஆகவே ஐந்து கிரகச்சேர்க்கை என்பதைவிட ஏழு கிரகச் சேர்க்கை என்றே சொல்லவேண்டும். அதனால் ஏழரைச்சனியோ, ஜென்மச்சனியோ, எந்த தோஷமா உங்களை பாதிக்காது. முப்பது வருடத் திற்கு ஒருமுறை அவரவர் ராசியில் சனிபெயர்ச்சி யாகும். இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி; பன்னிரண்டு ராசிகளைக் கடக்க முப்பது வருடம். ஒவ்வொரு முப்பது வருடமும் ஒரு மாற்றம் நிகழும். ஆகவே "முப்பது வருடங்களுக்குமேல் தொடர்ந்து யார் ஒருவரும் யோகத்திலே திளைத்தவரும் இல்லை; சோகத்தால் இளைத்தவருமில்லை' என்பது ஒரு கணக்கு. இந்த சனிபகவான் சுற்றை மங்கு சனி, பொங்குசனி, மரணச்சனி என்று மூன்றுவிதமாகக் கூறுவார்கள். முதல்சுற்று மங்குசனி. இரண்டாம் சுற்று பொங்குசனி. மூன்றாம் சுற்று மரணச்சனி என்பது பொதுவிதி அல்லது பொதுக்கணக்கு. அதற்கும், யோகத்துக்கும் மரணத்துக்கும் சம்பந்தமில்லை. 7-ஆமிடத்தையும், 10-ஆமிடத்தையும், 3-ஆமிடத்தையும் சனி பார்க்க, மற்ற கிரகங்கள் 7-ஆமிடத்தைப் பார்க் கிறார்கள். கணவன்- மனைவி இருவருக்கும் பெருமையும் யோகமும் சேரும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிக்கு யோகாதிபதியான சுக்கிரன் மகரத்தில் இருக்கிறார். 12-ல் ஐந்து கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. அவர்களைப் பார்க்கும் ராகுவை செவ்வாய் பார்ப்பதால், இதை ஏழு கிரகச் சேர்க்கை எனலாம். இந்த கிரகச் சேர்க்கை மட்டுமல்ல; எந்த கிரகச் சேர்க்கைகளும் மனப் பக்குவம் அடைந்தவர்களையும், ஞானம் பெற்றவர்களையும் பாதிக்காது. ஆசாபாசம், சபலமுடையவர்களுக்குத்தான் கிரகங்களின் பலன்கள் நடக்கும். கோள் செய்யும் பலன்கள் எல்லாம் முடிவாகாது. நாள் செய்யும் பலன்கள் எல்லாம் தீர்வாகாது. அதாவது நாளும் கோளும் நல்லோருக்கும் இல்லை. நலிலிந்தோருக்கும் இல்லை. அதனால்தான் ஞானசம்பந்தப் பெருமான் கோளறு பதிகத்தில் "ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே' என்று பாடினார். ஐந்து கிரகச் சேர்க்கையோ, ஏழு கிரகச் சேர்க்கையோ உங்கள் ராசிக்கு 12-ல் அமைவதால், இவை நல்லது செய்யுமா? கெட்டது செய்யுமா என்ற ஆராய்ச்சி தேவையில்லை. அவரவர் ஜாதக பூர்வபுண்ணிய வசமான கர்மப்பலனைப் பொருத்தது. 6-ஆமிடத்துக்கு இந்த கிரகச் சேர்க்கை அமைவதால், சிலருக்கு கடன் வரலாம். அந்தக் கடன் சுபக்கடனாக மாறும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிக்கு 11-ல் ஐந்து கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. செவ்வாய், ராகுவைச் சேர்த்தால் ஏழு கிரகச் சேர்க்கையாகும். ஐந்து கிரகங்களை ராகு மட்டும்தானே பார்க்கிறார். ஆக, ஆறு கிரகச் சேர்க்கை என்றுதானே சொல்லவேண்டும். ஐந்து கிரகத்தைப் பார்க்கும் ராகுவை செவ்வாய் பார்ப்பதால், கூட்டணிக் கட்சிகள் அடிப்படையில் ஏழு கிரகச் சேர்க்கை என்று சொல்லலாம். 11-ஆமிடம் வெற்றி ஸ்தானம், ஜெய ஸ்தானம். இதில் இத்தனை கிரகச் சேர்க்கை இருப்பதால், தொட்ட தெல்லாம் துலங்கும். பட்டதெல்லாம் துளிர்க்கும். விட்டதெல்லாம் கிடைக்கும். நீண்டகாலமாக நிலுவையிலிலிருக்கும் வழக்குகள் எல்லாம் சாதகமாகத் தீர்ப்பாகும். போட்டி, பொறாமை, கடன்கள் எல்லாம் மறையும். கவலைகள் குறையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். 2, 11-க்குடைய குரு 3, 5, 1-ஐப் பார்ப்பதால் சகோதர சகாயம் உண்டாகும். நண்பர்களால் உதவி அமையும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகம், புத்திர பாக்கியமில்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவ- மாணவியர் மேற்படிப்புக்காக வேறிடம் செல்லலாம். அல்லது வெளிநாடும் போகலாம். மேற்படிப்புச் செலவுக்கு வசதிவாய்ப்பு இல்லாத வர்களுக்கு வங்கிக்கடனுதவி கிடைக்கும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தற்கால கிரக அமைப்பும், ஐந்து கிரகச் சேர்க்கை அமைப்பும், (செவ்வாய், ராகுவைச் சேர்த்தால் ஏழு கிரக அமைப்பும்) பன்னிரண்டு ராசிக்காரர்களில் மீனம், மேஷம், சிம்மம், கும்பம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கும்தான். இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் இது ராஜயோகமான காலம் எனலாம்! இந்த நான்கு ராசிக்காரர்களும் எண்ணியதை அடையலாம். நினைத்ததை நிறைவேற்றலாம். விரும்பியதைப் பெறலாம். பொதுவாக "நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்' என்பார்கள். இந்த நான்கு ராசிக்காரர்களையும் நல்லவர்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம். அதற்காக மற்றவர்கள் கெட்டவர்கள் என்று அர்த்தமல்ல. இந்த நான்கு ராசிக்காரர்களும் யோக ராசிக்காரர்கள் என்று அர்த்தம். முதல்பரிசு பெறத் தகுதியுடையவர்கள் என்று அர்த்தம். கும்பிடப்போன தெய்வம் எதிரில் வந்து தரிசனம் தந்து ஆசிர்வாதம் செய்வதற்குச் சமம்! இதைத்தான் சிலர் "அதிர்ஷ்டயோகம்' என்பார்கள். அதாவது காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த நிலை! மீன ராசிக்காரர்கள் எப்போதும் நல்ல உள்ளம் படைத்தவர்கள். வள்ளுவர் "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்; மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து' என்று சொல்வார். அதாவது எண்ணுவ தெல்லாம் உயர்வைப் பற்றியே அல்லது உயர்வாகவே எண்ணவேண்டும். அந்த உயர்வான எண்ணம் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விட்டுவிடக் கூடாது என்பது அர்த்தம். சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதுபோல நல்லோர்கள் எப்போதும் நல்லவர்கள்தான். அவர்கள் மனதில் எப்போதும் நல்லதே குடிகொண்டிருக்கும். மீன ராசிக்காரர்கள் நல்லவர்கள்.

bala100120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe