ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு,

(பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம்

காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

Advertisment

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- சிம்மம்.

4-8-2019- கன்னிச் சந்திரன்.

Advertisment

6-8-2019- துலாச் சந்திரன்.

8-8-2019- விருச்சிகச் சந்திரன்.

11-8-2019- தனுசு சந்திரன்.

கிரக பாதசாரம்:

சூரியன்: ஆயில்யம்- 1, 2, 3.

செவ்வாய்: ஆயில்யம்- 3, 4, மகம்- 1.

புதன்: பூனர்பூசம்- 4, பூசம்- 1, 2, 3.

குரு: கேட்டை- 2.

சுக்கிரன்: பூசம்- 3, 4, ஆயில்யம்- 1, 2.

சனி: பூராடம்- 1.

ராகு: புனர்பூசம்- 1.

கேது: பூராடம்- 3.

கிரக மாற்றம்:

சனி வக்ரம்.

சுக்கிரன் அஸ்தமனம்.

7-8-2019- குரு வக்ரநிவர்த்தி.

10-8-2019- சிம்மச் செவ்வாய்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் தொடர்ந்து கடகத்தில் நீச ராசியில் இருந்தாலும், மூன்றுவகையில் நீசம் தெளிகிறது. ஒன்று- சந்திர கேந்திரம் (4-ஆம் இடம்). இரண்டு- மேஷ ராசிக்கு உச்சநாதன் சூரியனோடு சம்பந்தப்படுகிறார். மூன்று- பாக்கியாதிபதி குரு பார்க்கிறார். ஆகவே, செவ்வாய்க்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. வக்ரத்தில் இருக்கும் குருவும் சனியும், உங்கள் முயற்சிகளுக்கும் செயல்களுக்கும் பக்கபலமாக இருந்து, தக்கதருணத்தில் வெற்றிபெறச் செய்வர். தொழில்வகையிலும், உத்தியோகத்தின் அடிப்படையிலும் வேகத்தோடும் உற்சாகத்தோடும் செயல்படுவீர்கள். குரு 8-ல் மறைந்திருந்தாலும், 9-ல் 10-க்குடைய சனி இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. சுறுசுறுப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்படுவீர்கள். "தெய்வத்தானாகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்' என்று வள்ளுவர் சொல்வார். தெய்வத்தாலாகாது என்று எதுவுமே இல்லை. முயற்சி என்பது உங்கள் பங்கு- அதன் வெற்றியும் பலனும் இறைவன் பங்கு. சுக்கிரன் அஸ்தமனம் என்பதால், குடும்பத்தில் சிலசமயம் குழப்பங்களும் பிரச்சினைகளும் உருவாக இடமுண்டு. அதற்கு இடம் தராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் அஸ்தமனமாக இருக் கிறார். அஸ்தமனம் என்றால் இருட்டு. எந்த ஒரு கிரகமும் வக்ரமடையலாம்; வக்ரத்தில் உக்ரபலம் என்பார்கள். நீசமடையலாம்; நீசபங்க ராஜயோகத்துக்கும் இடமுண்டு. ஆனால் அஸ்தமனமடைந்தால் எந்த நன்மையும் இருக்காது. இருட்டில் எதைத் தேடுவீர்கள்? அத்துடன் ரிஷப ராசிக்கு இப்போது அட்டமத்துச்சனி நடக்கிறது. ஆகவே, அட்டமத்துச்சனியில் தொட்டது துலங்காது என்பார்கள். நீங்கள் எவ்வளவு கெட்டிக்காரராக இருந்தாலும், திறமைசாலியாக இருந்தாலும் ஒரு சிறு துரும்பைக்கூட அசைக்கமுடியாத நிலையாக இருக்கும். எந்த ஒரு செயலுக்கும் அடுத்தவரின் ஆலோசனையை நாடவேண்டிவரும். அதில் கௌரவம் பாராட்டக்கூடாது. "காரியம் பெரிதா வீரியம் பெரிதா' என்றால், காரியம் தான் பெரிது. காரியம் ஆகவேண்டு மென்றால் கழுதையானாலும் காலைப்பிடிக்கத்தான் வேண்டும். அந்த பாலிசியை நீங்கள் கடைப் பிடித்தால் உங்களுக்கு தோல்வி இல்லை. இயேசுபிரான், "எவனொரு வன் தன்னைத் தாழ்த்திக்கொள் கிறானோ அவன் தெய்வ சந்நிதியில் உயர்த்தப்படுவான்' என்று சொன்னார். ஆகவே வறட்டுக் கௌரவத்தை விரட்டியடிக்க வேண்டும்.

ttt

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் வாரத் தொடக்கத்தில் புனர்பூசம் 4-ல், கடகத்தில் வர்க்கோத்தமமாக இருப்பார். அடுத்து 7-ல் உள்ள சனியின் சாரம் (பூசம்) பெறுவார். எந்தவொரு செயலும் முயற்சியும் முதலில் வெற்றியளிப்பதுபோல் தோன்றும். ஆனால் முடிவில் எதிர்மறைப் பலனாக அமைந்து விடும். "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்று சொல்வதுபோல, எல்லாம் பயமாக வும் தயக்கமாகவும் அமையும். அதனால் கவியரசர் கண்ணதாசன் பாடியதை நினைவுகூருங்கள். "மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா- வாழ்க்கையில் என்றால் ஆயிரம் இருக்கும்- எறும்புக் குக்கூட வாழ்க்கை உண்டு.' இதை அவர் ஏன் குறிப்பிட்டார் என்றால், சோதனைகளைக் கண்டு வேதனையடையக் கூடாது; சாதனை படைக்க வேண்டும் என்று உங்களைத் தூண்டி விடுவதற்காகத்தான். அணையப்போகும் விளக்குக்கு எண்ணெய் ஊற்றவேண்டும். அப்போது ஜோதி பிரகாச மாக மாறும். கமல்ஹாசன், படத்தில் "உன்னால் முடியும் தம்பி' என்று சொன்னது போல, எல்லாம் உங்களால் முடியும். உள்ளுக்குள் உறங்கிக்கிடக்கும் ஆற்றலைத் தட்டி எழுப்புங்கள்; வெற்றி உங்களுக்கு!

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

பிரம்மா உலகத்தைப் படைக்கும் போது கடக லக்னம் உதயமானதாக ஒரு கருத்துண்டு. கடகம் என்றால் நண்டு. எல்லா ஜீவ ராசிகளும்- மனிதன் உட்பட திரும்ப வேண்டுமென்றால் உடலைத் திருப்ப வேண்டும். நண்டு மட்டும் உடம்பைச் சுற்றி கால்கள் இருப்பதால் எந்த திசையிலும் பயணிக்கலாம். அதே போல நீங்கள் அதிசாமர்த்தியசாலிகள். எந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்கும் தகுதி பெற்றவர்கள். அந்த ஆற்றலைப் பெருக்குவற்கு 5-ல் உள்ள குருவும் உங்கள் ராசியைப் பார்க்கிறார். "குரு பார்க்க கோடி நன்மை' என்பார்கள். ஆகவே கோட்சாரம் வலுவாக இருக்கும் இக்காலத்தில், தசாபுக்திகளும் வலுவாக இருந்தால் வெற்றிக்கனியை எட்டிப் பறிக்கலாம். சொந்த வியாபாரம், அடிமை உத்தியோகம், சொந்தத் தொழில் புரிவோர் எல்லாரும் இக்காலம் நற்காலம் என்று பெருமைப்படலாம். சிலருக்கு கூட்டுமுயற்சிகளில் நாட்டம் ஏற்படும். சஷ்டாஷ்டகம் இல்லாத ராசிக்காரர்களோடு இணைந்து செயல்படலாம். தனுசுவும், கும்ப ராசியும் சஷ்டாஷ்டக ராசிகள். இவர்களைத் தவிர்த்து, மற்ற ராசிக்காரர்களை பார்ட்னர்ஷிப் வைத்துக்கொள்ளலாம். மனைவி- மக்கள் வகையில் நிறைவு ஏற்படும். தேக சுகம் தெளிவுபெறும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிக்கு 12-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் நான்குபேரும் மறைகிறார்கள். சூரியன் ராசிநாதன். செவ்வாய் பாக்கியாதிபதி. சுக்கிரன் தொழில் ஸ்தா னாதிபதி. புதன் லாபாதிபதி. ஒருமுறைக்குப் பலமுறை முயற்சிகள் எடுத்து, ஒவ்வொரு காரியத்தையும் நிறைவேற்றவேண்டும்; சாதிக்க வேண்டும். சிலசமயம் ஓட்டை வாளியில் கிணற்றில் நீர் இறைப்பதுபோல விரயமாகிவிடும். காலவிரயம், பொருள்விரயம் இரண்டும் உங்களை சோர்வடையச் செய்யும். ஒருசிலருடைய அனுபவத்தில் கீழே இருந்து மேட்டுப்பகுதிக்கு நீர் இறைப்பது போலவும் ஆகிவிடும். ஒருசிலர் தான் பார்க்கவேண்டிய வேலைக்கு தம்பியை அனுப்பி ஏமாற்றத்தை சந்திக்கவேண்டியும் வரும். "உடையவர் இல்லையென்றால் ஒரு முழம் கட்டை' என்று சொல்வார்களே, அந்தக் கதைதான். ஒருசிலருடைய அனுப வத்தில் தொழில்துறையில் அடுத்தவர் களையும், தூரத்து மனிதர்களையும் நம்பித் தான் செயல்படவேண்டும். நம்பிக்கை நாணயமாக அமையுமா? ஏமாற்றமாக அமையுமா என்ற சந்தேகம் ஏற்படத்தான் செய்யும். "வேலைக்காரனை நம்பி பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இல்லை யென்றால் வேலைக்காரனை நீக்கவேண்டும்' என ஆங்கிலப் பழமொழி உண்டு.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிக்கு 11-ல் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் அமர, அவர்களை குரு பார்க்கிறார். ராசிக்கு 4-ல் சனி நின்று ராசியைப் பார்ப்பதோடு, 10-ஆம் இடத்தையும் பார்க்கிறார். 10-ல் ராகுவும் இருக்கிறார். ஜோதிடத்தில் ஒரு பழமொழி உண்டு. "எட்டில் ஒரு ஏழையேனும், பத்தில் ஒரு பாவியேனும் இருக்கவேண்டும்' என்பார்கள். ஆகவே வாழ்க்கை, தொழிலில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், அவ்வள வையும் சமாளிக்கலாம். தாமரை பூத்த தடாகத்தில் நீர் நிறைந்திருக்கும்போது நீர்மேல் தாமரை இருக்கும். நீர் குறைந் தாலும் தாமரை விழுந்துவிடாது; நீர்மேல் தாழ்ந்து நிற்கும். அதுபோல உங்கள் முயற்சிக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்ற மாதிரிதான் உங்கள் செயல்களின் வெற்றி- தோல்வி நிர்ணயிக்கப்படும். 11-ல் நிற்கும் சுக்கிரனும் புதனும் கன்னி ராசிக்கு தர்மகர்மாதிபதி ஆவார்கள். விரயாதிபதி சூரியனும் இருப்பதால், சிலசமயம் செலவுகள் கூடினாலும் நினைத்ததை சாதிக்கலாம். ஏலத்தில் விரும்பிய பொருளை எடுப்பதற்கு கூடுதல் தொகை கொடுப்பது போலதான் இதுவும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 3-ல் மறைவென்றாலும், அஸ்தமனமாவதால் மறைவு தோஷம் விலகும். எப்படியென்றால், டபுன் மைனஸ்= ஒரு பிளஸ் என்ற கணித அடிப்படையிலும், "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்ற ஜோதிட விதிப்படியும் (மறைவு+அஸ்தமனம்=நிவர்த்தி) தோஷம் நீங்கும். மேலும் அங்கு செவ்வாய் நீசம்; அவருடன் சுக்கிரன் சம்பந்தம். முள்ளை முள்ளால் எடுப்பதுபோல, நீசனோடு சேர்ந்த அஸ்தமனச் சுக்கிரனுக்கு தோஷமில்லை. ஆகவே உங்களின் எதிர்காலம், செயல் பாடுகளில் எந்தப் பின்னடைவுக்கும் இடமிருக் காது. உங்களுக்கு விடாமுயற்சி தேவை. அதனால் "தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிலிதரும்' என்ற குறளுக்கேற்ப, உங்களுடைய விடாமுயற்சிக் கேற்ற பலன் கிடைப்பது உறுதி! அதேசமயம் உங்கள் முயற்சி 100 சதவிகிதம் தேவைப்படும். அதற்கேற்ப 100 சதவிகிதப் பலனும் உறுதியாகக் கிடைக்கும்! ஆறு நிறைய வெள்ளம் ஓடினாலும், சிறுசெம்பில் எடுத்தால் குறைந்த அளவுதான் நீர் எடுக்கமுடியும். பெரிய குடத்தில் முகந்தால் கொள்ளளவு அதிகம் இருக்கும்! "நாழி முகவாது நாநாழி' என்று ஒரு விதி உண்டு. அதாவது கால்படி உழக்கு கால் படியளவுதான் கொள்ளும்; அரைப்படியளவு கொள்ளாது. அதைத்தான் உங்கள் முயற்சிக்கேற்ற பலன் என்று வள்ளுவர் சொல்வார். மிஸ்டிக் செல்வம் என்று எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவரது இயற்பெயர் செல்லப்பா. அடியேன்தான் அவருக்கு மிஸ்டிக் செல்வம் என்று (ஆங்கிலத்தில் 46 வரும்படி) பெயர் மாற்றம் செய்தேன். அதிலிலிருந்து அவர் வாழ்க்கைத்தரம் உயரத்தில் உச்சம் பெற்றுவிட்டது. டாக்டர் பட்டமும் கிடைத்தது. அவர், ""நினைப் பதில் எதற்குக் கஞ்சத்தனம்? கற்பனையில் கோடீஸ்வரனாக நினைக்கலாமே'' என்பார். இதுதான் ""உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்'' என்பதாகும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 9-ல் நீச ராசியில் இருந்தாலும், நீசபங்கம் அடைவார். மேஷத்தில் சூரியன் உச்சம். செவ்வாய்க்கு சூரியன் உச்சநாதன். எனவே உச்சநாதனோடு சேர்ந்திருப்பதால், நீசபங்கம் ராஜயோகமாக அமையும். மேலும் அவர்களுடன் சுக்கிரன் சம்பந்தம். சுக்கிரன் மீனத்தில் உச்சம். அதன் அதிபதி குரு செவ்வாய் வீட்டில் இருந்து இவர்களைப் பார்ப்பதாலும் யோகம் உண்டாகும். (நீசபங்க ராஜயோகம்). எனவே ஆயுள் தீர்க்கம், ஆரோக்கிய விருத்தி, திருமண யோகம், வாரிசு யோகம், தனயோகம், கடன் நிவர்த்தி, சத்ரு ஜெயம், குடும்ப க்ஷேமம் ஆகிய எல்லா நலமும், வளமும் உண்டாகும். மேலும் 2020 வரை ஏழரைச்சனி நடப்பதால், சனியின் வேகமும் சோகமும் விலகும். தாக்கமும் தணியும். எந்த ஒரு ஜாதகத்திலும், எந்த ஒரு ஜாதக தோஷம் இருந்தாலும் அது நிவர்த்தியாக பரிகார பூஜை உண்டு. அதை முறையாகச் செயதால் அதற்கு முழுப்பலன் உண்டு. இதுதான் சாபவிமோசனம் அல்லது பாவவிமோசனம் என்பது. அதைவிட பெரிய நிவர்த்தி குருபார்வை இருந்தால் போதும். குரு பார்க்க கோடி தோஷம் விலகும். கோடி நன்மை பிறக்கும். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுத்த பிரம்மச்சாரி மட்டுமல்ல; சிறந்த ஆன்மிகவாதியும்கூட. அவர் ஒருசமயம், ""மங்கை சூதகமானால் கங்கையில் நீராடுவாள். கங்கை சூதகமானால் எங்கே நீராடுவாள்'' என்றார். அதன் உள்ளர்த்தம்- கங்கைக்கு சூதக தோஷமே இல்லை என்பதுதான். எல்லா தீட்டுகளையும் தண்ணீர் போக்கும்! தண்ணீருக்கு தீட்டு உண்டா? பசுவுக்கும் பாலுக்கும் தண்ணீருக்கும் எப்போதும் தீட்டு இல்லை. அதனால்தான் புண்ணியாஹ வாசனம் செய்யும்போது "பஞ்ச கவ்யம்' தயாரித்து புரோக்ஷணம் செய்வார்கள். அதேபோல தர்ப்பையையும் தீட்டு அணுகாது!

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 12-ல் இருந்தாலும், அவருக்கு வீடுகொடுத்த செவ்வாயைப் பார்ப்பதால் மறைவு தோஷமில்லை. எந்த ஒரு கிரகமும் 6, 8, 12-ல் அல்லது பகை வீட்டில் அல்லது நீச வீட்டில் இருந்தாலும், அதற்கு நிவர்த்தி உண்டு. அந்த கிரகத்திற்கு சாரம்கொடுத்த கிரகம் அல்லது வீடுகொடுத்த கிரகம் சம்பந்தமிருந்தால் மறைவு தோஷம் விலகும். பகைக்கு "தற்காலிலிக மித்ரு' என்று ஒரு விதி உண்டு. நீசத்துக்கு "நீசபங்கம்' என்று விதிவிலக்குண்டு. ஆக, நவகிரகமாகட்டும், 27 நட்சத்திரமாகட்டும், 12 ராசியாகட்டும்- எதற்கும் கெட்ட பலன் மட்டும் ஒட்டாது. நல்ல பலனும் உண்டு. அதனால்தான் ஞானசம்பந்தப் பெருமான், "ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே' என்றார். குரு துரோணர் தன் சீடர்களான துரியோதனன், தருமர் இருவரிடமும், ""உலகத்தில் எத்தனை சதவிகிதம் நல்லவர்கள்? எத்தனை சதவிகிதம் கெட்டவர்கள்?'' என்று புள்ளிவிவரக் கணக்கு (சென்ஸஸ்) எடுத்துவரச் சொன்னார். துரியோதனன், ""உலகத்தில் யாருமே நல்லவர் இல்லை. எவ்வளவு பெரிய நல்லவன் என்றாலும், அவனிடம் ஒரு கெட்ட குணம் இருக்கிறது'' என்றான். தருமரோ, ""உலகத்தில் யாருமே கெட்டவர் என்று இல்லை. எவ்வளவு பெரிய கெட்டவனாக இருந்தாலும் அவனிடமும் ஒரு நல்ல குணம் இருக்கிறது'' என்றான். ஆக, நல்லதும் கெட்டதும் அவரவர் பார்வையிலும் எண்ணத்திலும்தான் பிரதிபலிலிக்கிறது. பொதுவாக, இறைவன் நல்லவர்களைவிட கெட்டவர்களைத்தான் விரும்பிவந்து தடுத்தாட்கொள்வான். கொள்ளைக்கார வால்மீகி, காமவெறியன் அருணகிரிநாதர், 12 ஆழ்வார்களில் திருட்டுத் தொழில்புரிந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார், சூரபத்மன், சிசுபாலன் என்று எத்தனையோ உதாரணங்கள் உண்டு. எனவே, உங்களுக்கு நடக்கும் ஏழரைச்சனியும், உங்களுக்கு ஞானத்தை வழங்கும் பொங்குசனியாக விளங்கும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் கேதுவுடன் சம்பந்தம். ராகு பார்வை. வீடுகொடுத்த குரு அவர்களுக்கு 12-ல் மறைவு. அத்துடன் ஜென்மச்சனி வேறு! எனவே நல்லது சொன்னாலும் பொல்லாப்பு வரும் நேரம்! ஒரு மாமியார் மருமகளைப் பாராட்ட, ""பசுமாடு மாதிரி சாந்தம்'' என்றார். உடனே மருமகள், தன்னை மாடு என்று மாமியார் திட்டியதாக சண்டை போட்டாள். இதுதான் "ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும்' என்பது! 9-க்குடைய புதனும், 10-க்குடைய சுக்கிரனும் 7-ல் இணைவது தர்மகர்மாதிபதி யோகம். உங்கள் எண்ணங்கள் ஈடேறும். அதற்கு உங்கள் குடும்பத்தாரும், உற்றார்- உறவினரும் உறுதுணையாக நிற்பார்கள். (அழைப்பிதழ்களில் "தங்கள் நல்வரவை நாடும் சுற்றமும் நட்பும்' என்று அச்சிடுவதுபோல.) விரயச்சனி குரு வீட்டில் நிற்பதால் சுபவிரயச் செலவுகள் நடக்கும். கேது- ராகு சம்பந்தம் பெறுவதால், சிலசமயம் செய்த செலவையே திரும்பவும் செய்யும்படியான நிலை ஏற்படும். உதாரணமாக, நகரப் பேருந்து களில் முன்னால் இருப்பவரும் டிக்கட் எடுக்க, பின்னால் இருப்பவரும் தெரியாமல் டிக்கட் எடுப்பதுபோல! இப்படி சில அனுபவங்கள் பலருக்கும் நடப்பதுண்டு! விருந்து விழாக்களில் அதிகம் கலந்து கொள்ளும் நிலையும் உண்டாகும். அதனால் மொய்ச் செலவும் உண்டாகும். இது ஒருவகை சுபவிரயம்தான்! இந்த ராசிப்பெண் வாசகர்களுக்கு தாய்வீட்டு உதவி, சன்மானம், சீதனம் கிடைக்க வாய்ப்பு உண்டு. படித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு யோகம் தேடிவரும். அல்லது வீட்டில் டியூசன், டெய்லரிங் போன்ற தொழில் செய்து சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். அல்லது சமையல் பண்டங்கள் (ஊறுகாய் போன்றவை) தயாரித்து விற்பனை செய்யலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் கேது சம்பந்தம். ராகு பார்வை. பொதுவாக சனி, ராகு- கேது இவர்களுக்கு 3, 6, 11 ஆகியவை உத்தமமான இடங்கள். அதேபோல செவ்வாய்க்கும் 6-ஆம் இடம் நல்ல இடம்தான். ஆனால் 10-குடையவர் (3-க்குடையவரும் ஆவார்) 6-ல் நீசம். என்றாலும் நீசபங்கராஜ யோகம் அடைவார். ஆகவே தொழில்துறையிலும், வேலை, உத்தியோகத்திலும் பாதிப்புக்கு இடமில்லை என்றாலும், சில மாற்றங்களோ மாறுதல்களோ ஏற்படலாம். எதுவாக இருந்தாலும் அது உங்கள் எதிர்கால முன்னேற்றத்துக்காகவும், லாபத்துக்காகவும், நன்மைக்காகவும்தான் அமையும். ஆகவே வருவதை நிராகரிக்காமல் ஏற்றுக்கொள்ளவும். 5-ல் ராகு இருப்பதை சிலர் தோஷம் என்பார்கள். ராகு குரு சாரத்தில் (புனர்பூசம்) இருப்பதாலும், ராசிநாதன் சனி பார்ப்பதாலும் தோஷம் நிவர்த்தியாகும். அதாவது எந்த ஒரு கிரகமும் தோஷசாம்யம் அடைந்தாலும், 5, 9 திரிகோணாதிபதி அல்லது ராசி- லக்னாதிபதி அல்லது குரு சம்பந்தம் பெற்றாலும் அந்த தோஷசாம்யம் நிவர்த்தியாகும். இதில் குரு நீசம், பகை, 6, 8, 12 என்ற பேச்சுக்கே இடம் ஏற்படாது. குரு- குருதான்! வாத்தியார் வாத்தியார்தான்! திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியான அஜீத், ஒரு கல்லூரியில் படிக்க மாணவனாக சேருவார். (ஒரு குற்றவாளியைக் கண்காணிக்க). அப்போது அங்கு புரொபஸராக உள்ள நயன்தாராவைக் காதலிலிப்பார். நாசரிடம் (அஜீத் அப்பா) மாணவி ஒருவரைக் காதலிலிப்பதாக புகார் போகும். அவர் விசாரிக்க, அஜீத், ""ஸ்டூடண்ட் அல்ல; பேராசிரியர் (புரொபஸர்)'' என்பார். அதாவது, அஜீத் ரேஞ்சுக்கு பேராசிரியர் பொருத்தமானவர்தான் என்று அப்பா (நாசர்) திருப்தியடைவார். அதுபோல உங்கள் ரேஞ்சுக்கு ஏற்றவகையில் நீங்கள் காதலிலிக்கலாம்- திருமணம் செய்யலாம்- பிள்ளைகளைப் பெற்றெடுக்கலாம்- தொழில் தொடங்கலாம்- லாபம் பார்க்கலாம்!

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். அதைவிட வேறொரு சிறப்பு என்னவென்றால், குரு 10-க்குடையவர் 9-ல் நின்று 9-க்குடைய செவ்வாயைப் பார்ப்பதுதான். அதனால் தர்மகர்மாதிபதி யோகம் அமைகிறது. பல நூற்றுக்கணக்கான யோகங்களும், விதிகளும் ஜோதிட சாஸ்திரத்தில் இருந்தாலும், சில குறிப்பிட்ட யோகங்களுக்கு முக்கியத்து வமும் சிறப்பும் உண்டு. அதில் ஒன்று தர்மகர்மாதிபதி யோகமாகும். இதுதவிர, வர்க்கோத்தமம், ஆட்சி, உச்சம், நீசபங்க ராஜயோகம் போன்றவையும் உண்டு. ஆகவே நடப்பு கோட்சார கிரக அமைப்பு 12 ராசிகளில் மீன ராசிக்கே மிகமிகச் சிறப்பாக அமைகிறது. ராசிநாதனே ராசியைப் பார்ப்பதும், 10-க்குடையவரே திரிகோணம் பெற்றுப் பார்ப்பதும் சிறப்பு! மேற்படிப்பு, பட்டம் பெறுதல், அதற்கேற்ற வேலைவாய்ப்பு, அதற்கேற்ற சம்பாத்தியம், வருமானம், திருமணம், புத்திரயோகம், வாழ்க்கை முன்னேற்றம் ஆகிய எல்லா யோகங்களையும் அடையலாம். அதேபோல திருமணமானவர்களுக்கு வாழ்க்கை வசதிகள் நிறைவு, சொந்தவீடு, வாகன யோகம் போன்ற நன்மைகளும் உண்டாகும். உங்கள் வெற்றியின் ரகசியம் சிலருக்கு தாயாராகவும், சிலருக்கு மனைவியாகவும் அமையும். "தாய்க்குப்பின் தாரம்' என்ற வாக்கு பலிலிக்கும். சிலருக்கு மனைவிக்கு பதிலாக காதலிலியாகவும் இருக்க லாம். அல்லது அம்மா, அக்கா, தங்கை போன்று ஒரு பெண்ணாகவும் அமைய லாம். களஸ்திரகாரகன் சுக்கிரன் 3, 8-க்குடையவர் 5-ல் இருப்பதால், ஒரு பெண்ணால் எதிர்பாராத அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். 2, 9-க்குடைய செவ்வாய் 5-ல் நீசபங்க ராஜ யோகம் என்பதால், சிலருக்கு தகப்பனார் வகையில் அல்லது தகப்பனார்வழி சொத்துவகையில் யோகம் உண்டாகும். அதிர்ஷ்டம் உண்டாகும்.