ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- ரிஷபம்.
1-7-2019- மிதுனம்.
3-7-2019- கடகம்.
5-7-2019- சிம்மம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: திருவாதிரை- 3, 4, புனர்பூசம்- 1.
செவ்வாய்: பூசம்- 1, 2.
புதன்: புனர்பூசம்- 2, 1.
குரு: கேட்டை- 3.
சுக்கிரன்: மிருகசீரிடம்- 3, 4, திருவாதிரை- 1.
சனி: பூராடம்- 1.
ராகு: புனர்பூசம்- 1.
கேது: பூராடம்- 3.
கிரக மாற்றம்:
புதன் வக்ரம், அஸ்தமனம்.
குரு, சனி வக்ரம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் கடகத்தில் நீசமாக இருக்கிறார். சனியின் சாரம் பெறுகிறார். சனி, செவ்வாயின் உச்ச ராசிநாதன் (மகரம்). அந்த ராசிநாதன் சனியின் நட்சத்திரத்தில் (பூசம்) இருப்பதால் நீசபங்க ராஜயோகம். அத்துடன் பாக்கியாதிபதி குரு, செவ்வாய் வீட்டிலிலிருந்து செவ்வாயைப் பார்க்கிறார். ஆகவே ராசிநாதன் செவ்வாய் நீசமடைந்தது எந்த வகையிலும் உங்களை பாதிக்காது. 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். 10-ஆம் இடத்தையும் செவ்வாய் பார்க்கிறார். தொழில்துறையிலும், வேலையிலும், உத்தியோகத்திலும் தளர்ச்சி யில்லாத வளர்ச்சிபெறும் காலம். வேலை என்பது தனியார்துறையில் பணிபுரிவது. உத்தியோகம் என்பது அரசுத்துறையில் வேலை பார்ப்பது. அதேபோல வாழ்க்கையிலும் திருப்தியும் முன்னேற்றமும் ஏற்படும் காலம். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். ஏற்கெனவே செய்துவரும் தொழில்துறையில் லாபம், திருப்பம், முன்னேற் றம், புதுமுயற்சிகளிலும் வெற்றி போன்ற எல்லா நன்மைகளையும் எதிர்பார்க்கலாம். வெளியூர், வெளிநாடு செல்லும் முயற்சிகளில் இருப்போருக்கு வெற்றிச் செய்தி கிடைக்கும். ஏற்கெனவே அங்கிருப்போருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு, அந்தஸ்து உயர்வு உண்டாகும். அட்டமாதிபதி செவ்வாய் 4-ல் இருப்பதால் (நீசம் என்பதாலும்) ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 2-ல்; சூரியன், புதன், ராகுவுடன் சம்பந்தம். அவர்களுக்கு 8-ல் உள்ள சனி, கேது பார்வை. பொருளாதாரத்தில் பற்றாக்குறைக்கும் பாதிப்புக்கும் இடமில்லை என்றாலும், ஒவ்வொரு தேவையையும் கஷ்டப்பட்டு நிறைவேற்றவேண்டும். வாடகை கொடுப்பது, கரன்ட் பில் கட்டுவது, குழந்தைகளுக்கு பள்ளிக்கட்டணம் போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்கெல்லாம் கையேந்தி கௌரவப் பிச்சை எடுத்துதான் நிறைவேற்றவேண்டும். அட்டமத்துச்சனியும், 2-ஆம் இடத்து ராகுவும்தான் இதற்குக் காரணம். தாயார் வகையிலும், நண்பர்கள் வகையிலும் அவ்வப்போது உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உறுதிமொழி கொடுத்தாலும், அதை உத்தர வாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டாம். செவ்வாய் நீசம் என்பதால் (சகோதரகாரகன்) கடைசி நேரம் காலை வாரிவிட்டுவிடுவார்கள். அட்டம லாபாதிபதி குரு ராசியைப் பார்ப்பதால், கடைசி நேரம் எதிர்பாராத நபர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். காரணமில்லாத கவலைகளும், கற்பனை பயமும், தேவையற்ற கவலைகளும் உங்களை முற்றுகையிடும். எதை, எப்படி, எப்போது சமாளிக்கவேண்டும் என்பது உங்கள் சாமர்த்தியத்தைப் பொருத்தது. குரு பார்ப்பதால் தெய்வ அனுகூலம் உண்டு என்பது தெளிவு. அதை வைத்து எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிக்கலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் வக்ரமாகவும் இருக்கிற
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- ரிஷபம்.
1-7-2019- மிதுனம்.
3-7-2019- கடகம்.
5-7-2019- சிம்மம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: திருவாதிரை- 3, 4, புனர்பூசம்- 1.
செவ்வாய்: பூசம்- 1, 2.
புதன்: புனர்பூசம்- 2, 1.
குரு: கேட்டை- 3.
சுக்கிரன்: மிருகசீரிடம்- 3, 4, திருவாதிரை- 1.
சனி: பூராடம்- 1.
ராகு: புனர்பூசம்- 1.
கேது: பூராடம்- 3.
கிரக மாற்றம்:
புதன் வக்ரம், அஸ்தமனம்.
குரு, சனி வக்ரம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் கடகத்தில் நீசமாக இருக்கிறார். சனியின் சாரம் பெறுகிறார். சனி, செவ்வாயின் உச்ச ராசிநாதன் (மகரம்). அந்த ராசிநாதன் சனியின் நட்சத்திரத்தில் (பூசம்) இருப்பதால் நீசபங்க ராஜயோகம். அத்துடன் பாக்கியாதிபதி குரு, செவ்வாய் வீட்டிலிலிருந்து செவ்வாயைப் பார்க்கிறார். ஆகவே ராசிநாதன் செவ்வாய் நீசமடைந்தது எந்த வகையிலும் உங்களை பாதிக்காது. 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். 10-ஆம் இடத்தையும் செவ்வாய் பார்க்கிறார். தொழில்துறையிலும், வேலையிலும், உத்தியோகத்திலும் தளர்ச்சி யில்லாத வளர்ச்சிபெறும் காலம். வேலை என்பது தனியார்துறையில் பணிபுரிவது. உத்தியோகம் என்பது அரசுத்துறையில் வேலை பார்ப்பது. அதேபோல வாழ்க்கையிலும் திருப்தியும் முன்னேற்றமும் ஏற்படும் காலம். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். ஏற்கெனவே செய்துவரும் தொழில்துறையில் லாபம், திருப்பம், முன்னேற் றம், புதுமுயற்சிகளிலும் வெற்றி போன்ற எல்லா நன்மைகளையும் எதிர்பார்க்கலாம். வெளியூர், வெளிநாடு செல்லும் முயற்சிகளில் இருப்போருக்கு வெற்றிச் செய்தி கிடைக்கும். ஏற்கெனவே அங்கிருப்போருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு, அந்தஸ்து உயர்வு உண்டாகும். அட்டமாதிபதி செவ்வாய் 4-ல் இருப்பதால் (நீசம் என்பதாலும்) ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 2-ல்; சூரியன், புதன், ராகுவுடன் சம்பந்தம். அவர்களுக்கு 8-ல் உள்ள சனி, கேது பார்வை. பொருளாதாரத்தில் பற்றாக்குறைக்கும் பாதிப்புக்கும் இடமில்லை என்றாலும், ஒவ்வொரு தேவையையும் கஷ்டப்பட்டு நிறைவேற்றவேண்டும். வாடகை கொடுப்பது, கரன்ட் பில் கட்டுவது, குழந்தைகளுக்கு பள்ளிக்கட்டணம் போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்கெல்லாம் கையேந்தி கௌரவப் பிச்சை எடுத்துதான் நிறைவேற்றவேண்டும். அட்டமத்துச்சனியும், 2-ஆம் இடத்து ராகுவும்தான் இதற்குக் காரணம். தாயார் வகையிலும், நண்பர்கள் வகையிலும் அவ்வப்போது உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உறுதிமொழி கொடுத்தாலும், அதை உத்தர வாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டாம். செவ்வாய் நீசம் என்பதால் (சகோதரகாரகன்) கடைசி நேரம் காலை வாரிவிட்டுவிடுவார்கள். அட்டம லாபாதிபதி குரு ராசியைப் பார்ப்பதால், கடைசி நேரம் எதிர்பாராத நபர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். காரணமில்லாத கவலைகளும், கற்பனை பயமும், தேவையற்ற கவலைகளும் உங்களை முற்றுகையிடும். எதை, எப்படி, எப்போது சமாளிக்கவேண்டும் என்பது உங்கள் சாமர்த்தியத்தைப் பொருத்தது. குரு பார்ப்பதால் தெய்வ அனுகூலம் உண்டு என்பது தெளிவு. அதை வைத்து எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிக்கலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் வக்ரமாகவும் இருக்கிறார்; அஸ்தமனமாகவும் இருக்கிறார். சூரியனோடு இணையும் கிரகங்களெல்லாம் (ராகு, கேதுவைத் தவிர) அஸ்தமனம் அடையும். அமாவாசையை யொட்டி சந்திரனும் சூரியனோடு சேரும்போது சந்திரன் உதயமாவதில்லை. இதில் சூரிய னோடு எப்போதும் சேர்ந்து பயணிக்கும் கிரகம் புதன். அதனால் அவர் அடிக்கடி அஸ்தமனமாவார்; உதயமாவார். எனவே, அதை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டாம். தினசரி காலையில் நமது வீட்டுக்கு ஓசிப் பேப்பர் படிக்கவரும் எதிர்வீட்டுக்காரருக்கு முக்கியத்துவம் தருவதில்லை. அத்துடன் ஒரு கப் காபியும் கொடுக்கப்படும். ஆனால் எப்போதுமே வராத ஒரு நண்பர் வருகை புரிந்தால், அவருக்கு உபசாரம் பலமாக இருக்கும். அதுபோல சூரிய னோடு தொடர்ந்து சஞ்சாரம் செய்யும் புதன் அஸ்தமனம் பற்றிக் கவலை வேண்டாம். அதேபோல புதன் வக்ரமாக இருப்பதால், வக்ரத்தில் உக்ரபலம் என்பதுபோல, உங்கள் முயற்சிகளில் தோல்வி களும் தொய்வுகளும் இருக்காது. ஆனால் ராகு- கேது சம்பந்தம் பெறுவதால், பிள்ளைகள் வகையில் தொல்லைகளும், தவிர்க்கமுடியாத செலவுகளும் (5, 12-க்குடையவர் சுக்கிரன்) காணப்படும். தொல்லைகளில் இரண்டு விதம்- ஒன்று அன்புத்தொல்லை. மற்றொன்று வம்புத் தொல்லை. ராசிநாதன் ஆட்சி என்பதால் உங்களுக்கு அன்புத்தொல்லை.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் 5, 10-க்குடைய செவ்வாய் நீசமாக இருக்கிறார். மேஷ ராசியில் எழுதியபடி செவ்வாய் நீசபங்கமடைவார். அத்துடன் பாக்கியாதிபதி குருவும் பார்க்கிறார். குரு 6-க்குடையவர் என்பதால், ஒருசிலருக்குக் கடன் தொல்லை இருக்கும். ஒருசிலருக்கு உடன்பிறந்தோரால் பிரச்சினைகள் உண்டாகும். பூமி, இடம் சொத்து சம்பந்த மான கவலைகளும் ஏற்படும். என்றாலும் குரு பார்ப்பதால்- "குரு பார்க்கக் கோடி தோஷம் விலகும்' என்பதுபோல எல்லா சங்கடங்களும் இல்லாமல் மறைந்துவிடும். 9-க்குடைய குரு 10-க்குடைய செவ்வாயைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. அதனால் குடும்பம், தொழில், வாழ்க்கை ஆகியவற்றில் எந்த சங்கடமும் நேராது. "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்பது நூற்றுக்கு நூறு உங்களுக்கே பொருந்தும். முக்கியமான எல்லா கிரகங்களும் (ஆறு கிரகங்கள்) 6, 12-ல் மறைவ தால், ஆடிமாத எதிர்க்காற்றில் சைக்கிளில் மிதித்துப் போவதுபோல ஒவ்வொரு காரியத்தையும் கஷ்டப்பட்டு நிறைவேற்ற வேண்டும். அதேசமயம் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றுவிடலாம். "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிலி தரும்' என்ற வள்ளுவர் வாக்குப்படி தர்மகர்மாதிபதி யோகப்பலன் உங்களை வழிநடத்துவதால் நினைத்தது நிறைவேறும். கருதியது கைகூடும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 11-ல் பலம். அவருடன் 2, 11-க்குடைய புதனும் ஆட்சி. அவர்களுடன் 3, 10-க்குடைய சுக்கிரன் சம்பந்தம். எனவே ராகு- கேது, சனி 11-ஆம் இடத்துக்கு சம்பந்தப்படுவதால் தளர்ச்சியில்லாது முயற்சிகள் வளர்ச்சியடையும். முழுப்பலன் கிடைக்கும். செய்தொழில் லாபம் பெருகும். வேலையில் உடனிருப்போர் ஒத்துழைப்பால் திருப்திகரமாக சாதனை புரியலாம். மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறலாம். போட்டியாக இருப்பவர்கள் நாட்டமில்லாமல் தானே விலகிப் போவதால், எளிதாக வெற்றியும், பலிலிதமான லாபமும் அடையலாம். பொதுவாக 11-ல் சூரியன் இருக்கும்படி ஒரு லக்னம் அமைத்துக்கொடுத்து ஒரு காரியம் செயல்பட்டால் அது வாழ்வாங்கு வளம்பெறும்; நலம்பெறும். அதன் வேகத்தையும் முன்னேற்றத்தையும் எந்த சக்தியும் தடுத்துநிறுத்த முடியாது. ஆதலால் உங்களுக்கு அப்படிப்பட்ட கிரக அமைப்பு இருக்கிறது. 11-ஆமிடத்து ராகுவும் எளிதான வெற்றிகளை அடையச் செய்வார். 10-க்குடைய சுக்கிரனும் எதிர்பார்த்ததற்குமேல் லாபத்தையும் வெற்றியையும் தருவார். வில்லங்கம், விவகாரம், வழக்குகளில் சமரச உடன்பாடு உண்டாகும். தொழில் மேன்மையும் ஏற்படும். வாழ்க்கையில் வளமும் நலமும் பெருகும். குடும்பத்தேவைப் பொருட்களை சேகரிக்கலாம். எல்லாம் இன்பமயமாக ஈடேறும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 10-ல் ஆட்சி. அவருடன் 9-க்குடைய சுக்கிரன் சேர்க்கை. எனவே, தர்மகர்மாதிபதி யோகம் அமைகிறது. "எடுத்துவைத்தாலும் கொடுத்துவைக்க வேண்டும்' என்பார்கள். உங்கள் யோகத்துக்கு எடுத்து வைக்காமலே நீங்கள் கொடுத்து வைத்தவர்களாக அனுபவிக்கலாம். விரயாதிபதி சூரியன் 10-ல் இருப்பதால், விரும்பிய பொருளை அடைந்து தீரவேண்டுமென்ற லட்சிய வெறிக்காக கூடுதல் விலைகொடுத்து வாங்கி அனுபவிக்கலாம். அந்த விரயம் வீண்விரயமாகாது. விரும்பியதை அடைந்தோம் என்ற சுபவிரயமாக எடுத்துக்கொள்ளலாம். அரசுக் காரியங்களில் ஏலம் எடுக்கும் போது (டெண்டர்) கூடுதல்தொகை கொடுத்து வாங்கலாம். முடிவில் அதில் அதிக லாபமும் அடையலாம். ராகு, கேது, சனி சம்பந்தம் என்பதால் போட்டிகளைச் சந்தித்தாலும், சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கையால் முயற்சிகளில் வெற்றியும் நன்மையும் அடையலாம். கோரிக்கை ஈடேறும். 7-ஆமிடத்தை 7-க்குடைய குரு பார்ப்பதால், உங்கள் வெற்றிக்கும் லாபத்துக்கும் மனைவி அல்லது மனைவி வர்க்கத்தால் உதவி அமையும். சகாயம் உண்டாகும். புராணத்தில் கிருஷ்ணருடைய வெற்றி (ஒரு அசுரனை வதம் செய்ய) பாமாவின் உதவியால் கிடைக்கப்பெற்றது. அதை பாமா விஜயம் என்பார்கள்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 9-ல் திரிகோணம். அதில் 9-க்குடைய புதனும், 11-க்குடைய சூரியன் சேர்க்கை. 3, 6-க்குடைய குரு 2-ல்; 6-ஆமிடத்தையும் பார்க்கிறார். 10-ல் செவ்வாய் நீசம். ஆக எந்த ஒரு காரியத்தைத் தொட்டாலும், செயல்பட்டாலும் உங்கள் எஸ்டிமேட்டுக்கு அதிகமான பட்ஜெட்டாகிவிடும். அதை சமாளிக்க ஏற்கெனவே வாங்கிய கடனோடு மேலும் புதுக்கடன் வாங்கும் சூழ்நிலை அமையும். உதாரணமாக, ஒரு வாகனத்தை ரிப்பேர் செய்வதென்றாலும், ஒரு வீட்டை சீர்திருத்தம் செய்யவேண்டுமென்றாலும், டி.வி. அல்லது. ஏ.சி.யை பழுதுபார்க்க வேண்டு மென்றாலும் திட்டமிட்ட எஸ்டிமேட்டுக்கு மேல் அதிகம் செலவாகும். அதற்காக கடன்பட நேரும். இதை அத்தியாவசியக் கடன் என்பதா? சுபக்கடன் என்பதா? எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி; செலவைப் பற்றி சிந்திக்காமல் குறைகளை நிவர்த்திசெய்து நிறைவுபெறலாம். 2-ஆமிடத்து குரு அதற்குரிய வரவுகளையும், வசதிவாய்ப்புகளையும் தருவார். ஒருசிலருடைய அனுபவத்தில் "மெது வாகத் தாருங்கள்; உங்கள் தோதுபோலக் கொடுக்கலாம்' என்று கடன் கொடுத்த வர்கள், திடீரென்று தேவைக்குப் பணம் வேண்டுமென்று நெருக்கடி தரலாம். கழுத்தில் துண்டைப்போட்டுக் கடனைத் திரும்பக் கேட்கலாம். அதே சமயம் 2-ஆமிடத்துக் குரு மாற்றுவகையில் கடனை வாங்கித் தருவார்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 9-ல் நீசம் என்றாலும், நீசபங்க ராஜயோகமாகிறார். செவ்வாயின் உச்ச ராசிநாதன் சனி. அவரு டைய நட்சத்திரமான பூசத்தில் செவ்வாய் இருப்பதால் நீசபங்க ராஜயோகமாகும். அத்துடன் சனிக்கு வீடுகொடுத்த குருவும் செவ்வாயைப் பார்க்கிறார். ஆகவே எல்லா வகையிலும் ஏழரைச்சனி உங்களை பாதிக்காது. 2, 5-க்குடையவர் ஜென்மத்தில் இருப்பதால், பொருளாதாரத்தில் தட்டுப் பாட்டுக்கு இடமில்லை. தாராளமான வரவு- செலவுகள் இயங்கும். ஏராளமாக வரவுகள் வந்தாலும், அதற்குச் சமமாக செலவுகளும் காணப்படும். 2-ஆமிடத்தில் சனியும் கேதுவும் இருப்பதாலும், 8-ல் மறையும் நான்கு கிரகங்களாலும் உங்கள் தேவைகள் முழு அளவில் நிறைவேறாவிட்டாலும், கல்யாண வீட்டில் கடைசிப்பந்தியில் உட்காருபவருக்கு வடை இல்லை, பாயச மில்லை, அப்பளமில்லை என்று சொல்வது மாதிரி, ஏதோ சாப்பிட்டு எழுந்திருப்பது போல காரியங்கள் கைகூடும்! ருசிக்கு உணவு கிடைக்காவிட்டாலும், கிடைப் பதைக்கொண்டு பசியாறலாம். வாகனம் அல்லது டி.வி., வாஷிங் மெஷின் ரிப்பேர் செய்யுமிடத்தில் ஒரு சிறிய பொருள் கிடைக்கவில்லையென்று, ஒரு மணிநேரத்தில் முடிக்கவேண்டிய வேலைக்கு ஒரு வாரம் இழுத்தடிப்பார்கள். அதனால் உங்கள் அனுபவ சுகமும் திருப்தியும் குறைவாகும். இது ஏழரைச்சனியின் பலன்!
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. சனியோடு கேது சம்பந்தம். அவர்களுக்கு 8-ல் செவ்வாய் நீசபங்கம் என்பதோடு மறைவு. அதனால் காரணமில்லாத கவலைகளும், கற்பனை பயமும் நிலவும். 7-ல் ராகுவும், 6-க்குடைய சுக்கிரனும் இருப்பதால், சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினை உண்டாகும். சிலருக்கு கண் பார்வையில் பிரச்சினை, சிலருக்கு டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியாத நோய்த்தொல்லை சிலருக்கு பெற்றவர்கள்- பிறந்தவர்களுக்கு இடையில் கௌரவப் பிரச்சினை. இப்படி பல தொல்லைகள் இருந்தாலும், 9-க்குடைய சூரியனும், 10-க்குடைய புதனும் 7-ல் இணைவதால் ஏற்படும் தர்மகர்மாதிபதி யோகத்தால் எல்லாப் பிரச்சினைகளும் சூரியனைக்கண்ட பனிபோல விலகிவிடும். "நீரடித்து நீர் விலகாது', "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை' என்று ஆறுதல் அடையலாம். ஜென்மச்சனியின் பலனாக, வேலை செய்கிறவர்கள் கம்பெனி அலுவல் காரணமாக அடிக்கடி பயணம் போகலாம். கம்பெனி செலவிலேயே ஸ்டார் ஹோட்டலில் தங்கலாம். விமானத்தில் பறக்கலாம். முதல் வகுப்பு ரயிலில் பயணிக்கலாம். அல்லாதவர்கள் சொந்தம் சுற்றத்தாருடைய விருந்து, விழா என்று பயணம் போகலாம். வேறுசிலர் கோவில் வழிபாடு, பிரார்த்தனை என்று ஆன்மிகச் சுற்றுலா போகலாம். ஒருசிலர் குடியிருப்பு வீட்டுப் பராமரிப்பிற்காக லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கலாம். ஆக ஜென்மச்சனியும் கேதுவும் ஏதோ ஒருவகையில் உங்களை வீட்டில் தங்காமல் அலையவைப்பார்கள். ஜாதக தசாபுக்திக்கேற்றவாறு பரிகாரங் களைத் தேடிக்கொள்வதோடு, தினசரி விநாயகரை வழிபடுவது நல்லது. சனிக் கிழமைதோறும் பைரவருக்கு மிளகு தீபமேற்றலாம். இந்த அலைச்சலும் பயணமும் ராசிநாதன் குரு ஆடி 22-ஆம் தேதி (7-8-2019) வக்ரமாக இருக்கும்வரை நீடிக்கும். அதன்பிறகு ஒரே இடத்தில் ஸ்டெடியாக இருக்கலாம்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த குரு அவருக்கு 12-ல் மறைவு. குருவுக்கு வீடுகொடுத்த செவ்வாய், ராசிநாதன் சனிக்கு 8-ல் மறைவு. இதனால் எந்தக் காரியத்தைத் தொட்டாலும், "தொட்டுக்கோ துடைச்சுக்கோ' என்றமாதிரி இழுபறியாக இருக்கும். தொன்னூறு சதவிகிதம் முடியும் தறுவாயில் ஏமாற்றமாகி, இழப்பாகி, மீண்டும் ஆரம்பத்திலிலிருந்து தொடங்கும். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை "எழுதி எழுதி மேற்செல்லும் விதியின் கம' என்று பாடினார். ஆனால் உங்கள் கிரக அமைப்பின்படி "ஆ' என்று எழுதத் தொடங்கி ங,ச என்று முடித்து, அதற்குப் பிறகு எழுதமுடியாமல் எழுதிய பேப்பரைக் கிழித்துவிட்டு மீண்டும் "ஆ' என்று எழுதத் தொடங்கும் நிலையாக இருக்கும். வேடிக்கையாகப் "படித்துக் கிழித்துவிட்டீர்கள்' என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் எழுதியெழுதிக் கிழிப்பீர்கள். எதையும் முழுமையாகப் பூர்த்திசெய்யமுடியாது. இதுதான் 6-ல் மறைவுபெற்ற ஆறு கிரகங்களின் கதை. 11-ல் உள்ள குரு 7-ஆமிடத்தைப் பார்ப்பதோடு, 7-ஆமிடமாகிய கடகத்துக்கு 9, 10-க்குடைய தர்மகர்மாதிபதி யோகம் அமைவதால் (குரு, செவ்வாய்) உங்களுக்கு யோகம் இல்லாவிட்டாலும், உங்கள் மனை யோகத்துக்கு எல்லாம் நடக்கும். மனைவி யோகத்துக்கு வீடு, மனைவி, வாகனம், கட்டடம் போன்ற யோகங்கள் அமையும். அதற்குக் கடன்களும் கிடைக்கும். நீங்கள் கேரண்டராக ஜாமின் பொறுப்பேற்பவராக கையெழுத்துப் போடலாம். ஒருசிலர் இந்த வசதிவாய்ப்புகளை பிள்ளைகள்பேரில் ஏற்படுத்திக்கொள்ளலாம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்க, அவருடன் கேது சம்பந்தம். அவர்களுக்கு வீடுகொடுத்த குரு, செவ்வாய் வீட்டில் 10-ல் திக்பலம். செவ்வாய் 6-ல் நீசபங்க ராஜயோகமாகி ராசியைப் பார்க்கிறார். 2-ஆமிடம், 4-ஆமிடம், 6-ஆமிடங்களுக்கு குரு பார்வை கிடைக்கிறது. கருதிய காரியங்களை அலைந்துதிரிந்து முடிக்கவேண்டி வரும். திட்டமிட்ட செயல்களை திசைமாறிச் செயல்பட்டு முடிக்கவேண்டும். உறவினர்கள், நண்பர்களின் நெருடல்கள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். நடக்கவில்லை என்று யாரையும் பகைக்கவேண்டாம். நடந்துவிட்டது என்பதற்காக யாரையும் உயரத்தில் ஏற்றி அமரச்செய்ய வேண்டாம். ஒரு படத்தில் எம்.ஜி.ஆர் பாடிய மாதிரி, ""என்னம்மா ராணி பொன்னான மேனி ஆலவட்டம் போடுகின் றதோ- ஏறிவந்த ஏணி தேவையில்லை என்று ஏழைபக்கம் சாடுகின்றதோ'' என்று பாடியமாதிரி ஒதுக்கவேண்டாம். "சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்று கருதி செயல்படுங்கள். மற்றவர்களுக்காக செலவு செய்து பெருமைப்படுவீர்கள். புதிய உத்தியோகத்தில் மனநிறைவை அடையலாம். வருமானமும் பெருகும். குடும்பத்தில் தேவைகளும் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில், வியாபாரத்தை ஆரம்பிக்கலாம். உத்தியோகத்தில் சக ஊழியரின் பாராட்டும் கிடைக்கும். சுருதி, யுக்தி, அனுபவம் என்று மூன்றுநிலை உண்டு. இந்த மூன்றும் உங்களுக்குண்டு. அந்த அனுபவ ஆற்றல் உங்களை வழிநடத்துவதால் "குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா' என்று மனநிறைவடையலாம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். அத்துடன் 5-ஆமிடத்தையும் பார்க்கிறார்; 3-ஆமிடத்தையும் பார்க்கிறார். இதுவரை உடன்பிறப்புகள் வகையில் நீரும் நெருப்புமாக இருந்த நிலைமாறி நீரும் பாலுமாக இரண்டறக்கலந்து செயல்படும் தன்மை உருவாகும். 10-க்குடைய குரு 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். உங்கள் திறமைக்கும், செயலுக்கும் மதிப்பு, மரியாதை உயரும். செல்வாக்குப் பெருகும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி நிறைவேற்றலாம். வீடு, தொழில், வாகனம் எல்லாவற்றிலும் சீர்சிருத்தங்களும் முன்னேற்றகரமான மாற்றங்களும் உருவாகும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெருகும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். நெருங்கியவர்களை சந்தித்து, விரும்பியபடி எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றகரமான அம்சங் களைக் கலந்து நிறைவேற்றுவீர்கள். ஒருபுறம் பயணமும் அலைச்சலும் காணப்பட்டாலும், அவற்றால் பயனும் பலனும் அதிகளவில் எதிர்பார்க்கலாம். எந்த ஒரு சிறுகாரியத்தைச் செய்தாலும் அதனால் எத்தனை பர்சன்டேஜ் லாபமும், நன்மையும் என்று கணக்குப் பார்த்துச் செய்வீர்கள். லாபமில்லாத காரியங் களை கழற்றிவிடுவீர்கள். வியாபாரத்திலும், தொழில்துறையிலும் புதிய நுணுக்கங்களைக் கையாளலாம். பணம் பெறலாம். பயனடையலாம். வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணாமல் சிந்தித்து, சீர்தூக் கிப் பார்த்து செயல்பட்டால், எப்போதும் வெற்றிதான்!