Advertisment

இந்த வார ராசிபலன் 29-9-2019 முதல் 5-10-2019 வரை

/idhalgal/balajothidam/weeks-zodiac-29-9-2019-5-10-2019

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கன்னி.

30-9-2019- துலாம்.

2-10-2019- விருச்சிகம்.

4-10-2019- தனுசு

கிரக பாதசாரம்:

சூரியன்: அஸ்தம்- 1, 2, 3.

செவ்வாய்: உத்திரம்- 2, 3.

புதன்: சித்திரை- 4, சுவாதி- 1, 2.

குரு: கேட்டை- 3.

சுக்கிரன்: அஸ்தம்- 4, சித்திரை- 1, 2, 3.

சனி: பூராடம்- 1.

ராகு: திருவாதிரை- 4.

கேது: பூராடம்- 2.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந்தாலும், தன் ராசியை 8-ஆம் பார்வை பார்க்கிறார். எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னாதிபதி அல்லது ராசியாதிபதி தன் ஸ்தானத்தைப் பார்த்தாலும் அதற்குப் பலம் கிடைக்கும். அதனால் 6, 8, 12 என்ற மறைவு தோஷமோ, பலவீனமோ ஏற்படாது. மேலும் ராசிநாதன் 9-ஆம் இடம், 12-ஆம் இடம், ஜென்ம ராசியைப் பார்க்கிறார். தகப்பனார், பூர்வபுண்ணிய பலம் அமையும். ராசியைப் பார்ப்பதால் கௌரவம், மதிப்பு, மரியாதை, செல்வாக்கு, அந்தஸ்து ஆகிய வற்றுக்கு எந்தக் குறையும் ஏற்படாது. விரயஸ்தானத்தைப் பார்ப்பதால், செலவுகள் ஏற்பட்டாலும் அவை சுபச்செலவுகள் என்று எடுத்துக்கொள்ளலாம். செவ்வாய் பூமிகாரகன் என்பதால், பூமி, கட்டடம், வாகனம் சம்பந்தமான சுபச்செலவுகள் உண்டாகும். அது சம்பந்தமாக சுபக்கடனும் உண்டாகும். 6-க்குடைய புதனும், 7-க்குடைய சுக்கி ரனும் பரிவர்த்தனை என்ப தால் திருமணத்தடை விலகும். ஆண்களுக்கும் பெண்களுக் கும் நல்ல இடத்து சம்பந்தம் ஏற்பட்டு குடும்ப வாழ்க்கை அமையும். 9-ல் சனி, ராகு; 9-க்குடைய குரு 8-ல் மறைவென்பதால், சிலருக்கு தகப்பனார் வகையில் அல்லது பூர்வீக சொத்துப் பிரச்சினைகளில் மண்டைக் குடைச்சல் உண்டாகி டென்ஷன் ஏற்படும். ஜாதகத்தில் தசாபுக் திகள் பாதகமாக அமைந்துவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு விவகாரங்களை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படலாம். அதுசம்பந்தமான கடன்களும் ஏற்படலாம். 6-ஆம் இடம் பங்காளி ஸ்தானம். பங்காளிப் பகை, வில்லங்கம், விவகாரம் ஏற்பட இடமுண்டு. என்றாலும் ராசிநாதன் ராசியைப் பார்ப்பதால், எல்லா பிரச்சினைகளையும் சந்தித்தாலும் சமாளிக்கலாம்.

பரிகாரம்: செவ்வாய், சனி பார்வை இருப்பதால் பக்கவிளைவுகள் உண்டாகும். அதை சமாளிக்க கூந்தலூர் முருகனை வழிபட வேண்டும். கும்பகோணம்- நாச்சியார் கோவிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவு; பூந்தோட்டம் பாதை. தொடர்புக்கு; செல்: 96886 77538.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 5-ல் கன்னியில் நீசம் என்றாலும், வீடுகொடுத்த புதனும் சுக்கிரனும் பரிவர்த்தனை என்பதால் நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. மேலும் எந்த ஒரு கிரகமும் 5, 9 என்ற திரிகோணம் பெற்றாலும், அந்த கிரகத்தை எந்த தோஷமும் அணுகாது. அதிலும் சுக்கிரன் ராசி நாதன் என்பதால், நீசபலன் மாறி நல்லபலன் தரும் வல்லமை உண்டாகிறது. 5-க்குடைய புதனும், 6-க் குடைய சுக்கிரனும் பரிவர்த் தனை. சுக்கிரனுக்கு (5-ஆம் இடத்துக்கு), ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதியான சனியின் பார்வை (10-ஆம் பார்வை) கிடைக்கிறது. எனவே மக்கள்வகையில் உங்கள் கனவு களும், திட்டங்களும், லட்சியங்களும் எளிதாக ஈடேறும். வாரிசு இல்லாதோருக்கு மக்கட்செல்வம் (புத்திர பாக்கியம்) சித்திக்கும். பெற்றோருக்கு பிள்ளை களால் பெருமையும், மகிழ்ச்சியும், மனநிறை வும் உண்டாகும். இதை வள்ளுவப் பெருந்தொகை- "தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்' என்றும், "மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்' என்றும் சொல்கிறார். "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்றும் வள்ளுவர் சொல்வார். எனவே குரு ராசியைப் பார்ப்பதால், நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள் என்று பெருமைப் படுமளவு "நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்' என்று திருப்தியடையலாம். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், மணவாழ்வு, வாரிசு யோகம் என்று எல்லாமே நல்ல விதமாக அமையும். அதுவே இறைவன் கொடுத்த வரம்.

Advertisment

பரிகாரம்: சுக்கிர தோஷப் பரிகாரமாக திருவாரூர்- குடவாசல் சாலையில் (13 கிலோ மீட்டர்) மணக்கால் அய்யப்பேட்ட

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கன்னி.

30-9-2019- துலாம்.

2-10-2019- விருச்சிகம்.

4-10-2019- தனுசு

கிரக பாதசாரம்:

சூரியன்: அஸ்தம்- 1, 2, 3.

செவ்வாய்: உத்திரம்- 2, 3.

புதன்: சித்திரை- 4, சுவாதி- 1, 2.

குரு: கேட்டை- 3.

சுக்கிரன்: அஸ்தம்- 4, சித்திரை- 1, 2, 3.

சனி: பூராடம்- 1.

ராகு: திருவாதிரை- 4.

கேது: பூராடம்- 2.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந்தாலும், தன் ராசியை 8-ஆம் பார்வை பார்க்கிறார். எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னாதிபதி அல்லது ராசியாதிபதி தன் ஸ்தானத்தைப் பார்த்தாலும் அதற்குப் பலம் கிடைக்கும். அதனால் 6, 8, 12 என்ற மறைவு தோஷமோ, பலவீனமோ ஏற்படாது. மேலும் ராசிநாதன் 9-ஆம் இடம், 12-ஆம் இடம், ஜென்ம ராசியைப் பார்க்கிறார். தகப்பனார், பூர்வபுண்ணிய பலம் அமையும். ராசியைப் பார்ப்பதால் கௌரவம், மதிப்பு, மரியாதை, செல்வாக்கு, அந்தஸ்து ஆகிய வற்றுக்கு எந்தக் குறையும் ஏற்படாது. விரயஸ்தானத்தைப் பார்ப்பதால், செலவுகள் ஏற்பட்டாலும் அவை சுபச்செலவுகள் என்று எடுத்துக்கொள்ளலாம். செவ்வாய் பூமிகாரகன் என்பதால், பூமி, கட்டடம், வாகனம் சம்பந்தமான சுபச்செலவுகள் உண்டாகும். அது சம்பந்தமாக சுபக்கடனும் உண்டாகும். 6-க்குடைய புதனும், 7-க்குடைய சுக்கி ரனும் பரிவர்த்தனை என்ப தால் திருமணத்தடை விலகும். ஆண்களுக்கும் பெண்களுக் கும் நல்ல இடத்து சம்பந்தம் ஏற்பட்டு குடும்ப வாழ்க்கை அமையும். 9-ல் சனி, ராகு; 9-க்குடைய குரு 8-ல் மறைவென்பதால், சிலருக்கு தகப்பனார் வகையில் அல்லது பூர்வீக சொத்துப் பிரச்சினைகளில் மண்டைக் குடைச்சல் உண்டாகி டென்ஷன் ஏற்படும். ஜாதகத்தில் தசாபுக் திகள் பாதகமாக அமைந்துவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு விவகாரங்களை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படலாம். அதுசம்பந்தமான கடன்களும் ஏற்படலாம். 6-ஆம் இடம் பங்காளி ஸ்தானம். பங்காளிப் பகை, வில்லங்கம், விவகாரம் ஏற்பட இடமுண்டு. என்றாலும் ராசிநாதன் ராசியைப் பார்ப்பதால், எல்லா பிரச்சினைகளையும் சந்தித்தாலும் சமாளிக்கலாம்.

பரிகாரம்: செவ்வாய், சனி பார்வை இருப்பதால் பக்கவிளைவுகள் உண்டாகும். அதை சமாளிக்க கூந்தலூர் முருகனை வழிபட வேண்டும். கும்பகோணம்- நாச்சியார் கோவிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவு; பூந்தோட்டம் பாதை. தொடர்புக்கு; செல்: 96886 77538.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 5-ல் கன்னியில் நீசம் என்றாலும், வீடுகொடுத்த புதனும் சுக்கிரனும் பரிவர்த்தனை என்பதால் நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. மேலும் எந்த ஒரு கிரகமும் 5, 9 என்ற திரிகோணம் பெற்றாலும், அந்த கிரகத்தை எந்த தோஷமும் அணுகாது. அதிலும் சுக்கிரன் ராசி நாதன் என்பதால், நீசபலன் மாறி நல்லபலன் தரும் வல்லமை உண்டாகிறது. 5-க்குடைய புதனும், 6-க் குடைய சுக்கிரனும் பரிவர்த் தனை. சுக்கிரனுக்கு (5-ஆம் இடத்துக்கு), ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதியான சனியின் பார்வை (10-ஆம் பார்வை) கிடைக்கிறது. எனவே மக்கள்வகையில் உங்கள் கனவு களும், திட்டங்களும், லட்சியங்களும் எளிதாக ஈடேறும். வாரிசு இல்லாதோருக்கு மக்கட்செல்வம் (புத்திர பாக்கியம்) சித்திக்கும். பெற்றோருக்கு பிள்ளை களால் பெருமையும், மகிழ்ச்சியும், மனநிறை வும் உண்டாகும். இதை வள்ளுவப் பெருந்தொகை- "தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்' என்றும், "மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்' என்றும் சொல்கிறார். "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்றும் வள்ளுவர் சொல்வார். எனவே குரு ராசியைப் பார்ப்பதால், நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள் என்று பெருமைப் படுமளவு "நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்' என்று திருப்தியடையலாம். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், மணவாழ்வு, வாரிசு யோகம் என்று எல்லாமே நல்ல விதமாக அமையும். அதுவே இறைவன் கொடுத்த வரம்.

Advertisment

பரிகாரம்: சுக்கிர தோஷப் பரிகாரமாக திருவாரூர்- குடவாசல் சாலையில் (13 கிலோ மீட்டர்) மணக்கால் அய்யப்பேட்டைக்கு வெள்ளிக்கிழமை சென்று, வைகுண்ட நாராயணப் பெருமாளை நெய் தீபமேற்றி வழிபடவேண்டும். தொடர்புக்கு; ராமசாமி பட்டர். செல்: 97880 40397, தொலைபேசி: 04366-326227.

jothidamanswer

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம். அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் 4-ல் புதன் வீட்டில் பரிவர்த்தனை. சுக்கிரன் கன்னியில் நீசம் என்றாலும், பரிவர்த்தனை யோகத்தால் நீசபங்க ராஜயோகமாகிறார். எனவே களஸ்திரகாரன் என்பதால் சுக்கிரனுக்கு தோஷம் விலகும். அதாவது காரகன் என்ற முறையில் களஸ்திர தோஷமும் விலகும். 5-க்குடையவர் என்பதால் புத்திர தோஷமும் விலகும். அதேசமயம் 7-ல் சனி, கேது, ராகு சம்பந்தப்பட்டு, 7-க்குடைய குரு 6-ல் மறைய, 7-ஆம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால், (செவ்வாய்- சனியைப் பார்க்க, சனி- செவ்வாயைப் பார்ப்பதால்) சிலருக்கு காதல் திருமணம், கலப்புத் திருமணமாகலாம். அல்லது ஒருதாரம் இருக்க, இன்னொரு தாரம் அமையலாம். அரசியல்வாதிகளும், சினிமாக் கலைஞர்களும் இரண்டு, மூன்று தாரம் அமைத்துக்கொள்வார்கள். இது அவர்களின் தவறல்ல- அவர்கள் சார்ந்த துறைக்கு ஏற்படும் சாபக்கேடாகும்! பொதுவாக லக்னம் அல்லது ராசிக்கு ஜென்மம் அல்லது 2-ல் ராகு, கேது இருந்தாலும் மேற்படி இருதார யோகம் ஏற்படும். அப்படி தார தோஷம் இருந்தால், காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்துகொள்ளலாம். அதேபோல பெண்களுக்கும் இப்படி இருமாங்கல்யம் அல்லது இரு திருமண யோகம் அமையலாம். அப்படிப்பட்டவர்கள் காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து, கலச அபிஷேகம் செய்துகொள்ளவேண்டும். காரைக்குடி சுந்தரம் குருக்கள் மேற்படி ‘ஹோமங்களைச் செய்வார். அவரைத் தொடர்புகொள்ளலாம். (செல் 99942 74067.)

பரிகாரம்: 7-ல் உள்ள சனி, கேது (ராகு பார்வை) தோஷ நிவர்த்திக்கு, வசதியிருப்பவர்கள் சூலினிதுர்க்கா ஹோமமும், சனி சாந்தி ஹோமமும் செய்துகொள்ளலாம். வசதியில்லாதவர்கள், தேனி அருகில் உத்தமபாளையம் சென்று (தென்காளஹஸ்தி) வழிபடலாம்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 6-ல் சனி, கேது, 12-ல் ராகு இருப்பது உங்களுக்கு பலம். அதாவது பாவ ஸ்தானங்களில் பாவ கிரகம் இருப்பது நல்லது. அதனால் ரோகம், ருணம், சத்ரு, கடன், வைத்தியச்செலவு போன்ற 6-ஆம் இடத்துக் கெடுபலனும்; வீண்விரயம், எதிர்பாராத ஏமாற்றம், நஷ்டம் போன்ற 12-ஆம் இடத்துக் கெடுபலனும் மறைந்து விடும். கடக ராசிநாதன் சந்திரன் சஞ்சார கிரகம்; வளர்பிறை, தேய்பிறை என்ற நிலைக்குக் கட்டுப்பட்டவர். அதனால் கடக ராசி அல்லது கடக லக்னத்தாருக்கு ஏற்றமும் இறக்கமும், உயர்வும் தாழ்வும் சகஜமாக இருக்கும். அதேசமயம் குரு ராசியைப் பார்ப்பதால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சமாதானப்படுத்திக் கொள்வதுபோல, சமாளிக்கும் ஆற்றலும் உண்டு. போட்டி, பொறாமைகள், எதிர்ப்பு, இடையூறு போன்ற தடைகள் குறுக்கிட்டாலும், எல்லாவற்றையும் எதிர்நீச்சல் போட்டு சமாளித்து வெற்றிபெறும் தகுதியும் இருக்கும். அறுசுவையில் இனிப்பு ஒரு அளவில்தான் ஏற்றுக்கொள்ளமுடியும். பிறகு திகட்டிவிடும். அதற்குப் பரிகாரம் காரம் சாப்பிடவேண்டும். அதேபோல எல்லாமே வெற்றியாக அமைந்துவிட்டால் சலிலிப்பு தட்டி விடும். இடைநடுவே தடையும், தாமதமும், தோல்வியும் இருக்கத்தான் வேண்டும். தோல்வி யால் தொய்வடையக்கூடாது; சோர்ந்து விடக்கூடாது. தோல்வி- வெற்றிக்குப் போடப் படும் முதல் படிக்கல் என்று, மீண்டும் முயற் சிக்கு முக்கியத்துவம் தந்தால் வெற்றி உங்களுக்கே!

பரிகாரம்: குருவின் பலம்பெருக வியாழக் கிழமைதோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீப மேற்றி, கொண்டைக்கடலை மாலை சாற்றவும். திருவாரூர் அருகில் மடப்புரம் சென்று குரு தட்சிணாமூர்த்தி ஜீவசமாதியை வழிபடலாம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 2-ல் செவ்வாய்- சுக்கிரன் சேர்க்கையாக இருக்கிறார். செவ்வாய், சூரியனின் உச்ச ராசிநாதன். சுக்கிரன் 3, 10-க்குடையவர். சுக்கிரன் நீசம் என்றாலும், புதனோடு பரிவர்த்தனை என்பதால் நீசபங்கம் அடைவார். சிம்ம ராசிக்கு 3, 10-க்குடையவர் என்பதால், உடன்பிறப்புகள் வகையிலும், தொழில்துறையிலும், உத்தியோகம்- வேலை வகையிலும் உங்களுக்கு அனுகூலமான பலன் களை எதிர்பார்க்கலாம். தொழில் முன்னேற்றம், வேலையில் திருப்தி, பதவி உயர்வு போன்ற நன்மைகள் உண்டாகும். அதேபோல கணவன்- மனைவிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளும் பிணக்குகளும் விலகி, நெருக்கமும் இணக்கமும் உருவாகும். பிரிந்திருக்கும் தம்பதிகளும் இணைந்துவாழும் யோகம் உண்டாகும். 6, 7-க்குடைய சனி 5-ல்- கேது, ராகு சம்பந்தம் பெறுவது குற்றம் என்றாலும், சிம்ம ராசிக்கு பாக்கியாதிபதி செவ்வாய் பார்ப்பதால் தோஷம் விலகும். "சந்திர காவியம்' என்ற ஜோதிட நூலிலில் "அஞ்சு ஒன்பதுக்கு அதிபர் பாபர் சுபரானாலும் பொன்போன்ற சுபமே செய்வார்கள்' என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது 5, 9- எனும் திரிகோண சம்பந்தம் பெறுவது சிறப்பு. திரிகோணம் லட்சுமி ஸ்தானம். 4, 7, 10 கேந்திரம்- விஷ்ணு ஸ்தானம். கேந்திரம் என்பது முயற்சி திருவினையாக்கும் என்பதுபோல முயற்சிக்கேற்ற பலனைத்தான் தரும். அதாவது உழைப்பிற்கேற்ற சம்பளம்- கூலிலி கிடைக்கும். திரிகோணம் என்பது போனஸ், இனாம் கிடைப்பதுபோல- அதிர்ஷ்டமும் புகழும் உண்டாகும். அதுதான் லட்சுமி கடாட்சம்! சிலசமயம் கேந்திரமும், திரிகோணமும் ஒன்றாக அமையும். உதாரண மாக, ரிஷபத்துக்கு 9, 10. துலாத்துக்கு 4, 5. கடகத்துக்கு 5, 10. மகரத்துக்கு 5, 7, 10 என்று கேந்திர, திரிகோணம் இரண்டும் அமையும். அதனால் அவை ராஜயோகம் எனப்படும்.

பரிகாரம்: 5-ல் உள்ள சனி, கேது, ராகு தோஷம் விலக திருப்பத்தூர் கண்டரமாணிக்கம் அருகிலுள்ள பெரிச்சியூர் சென்று ஒற்றை சனீஸ்வரரை வழிபடவும். இங்கு நவபாஷாண பைரவர் சந்நிதி இருப்பது சிறப்பு. சனீஸ்வரரின் குருநாதர் பைரவர்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதனும், 2-ஆமிட துலா ராசிநாதன் சுக்கிரனும் பரிவர்த்தனையாக இருக்கிறார்கள். அதனால் ஜென்ம சுக்கிரனுக்கு நீசபங்கம் ஏற்படுகிறது. புதன் 1, 10-க்குடையவர். சுக்கிரன் 2, 9-க்குடையவர். எனவே உங்களுடைய செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, கௌரவம், ஆற்றல் எல்லாம் மிகமிகச் சிறப்பாக அமையும். எந்த முயற்சி எடுத்தாலும் அது வளர்ச்சியடையும். தளர்ச்சி வேண்டாம்; கிளர்ச்சி வேண்டாம்! 7-க்குடைய குரு 7-க்கு திரிகோணம் பெற்று 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால், திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண யோகம் கூடும். அதேபோல நடந்துமுடிந்த ஏழரைச்சனிக் காலத்தில் பிரிந்த கணவனும் மனைவியும் குடும்பமும் இப்போது ஒன்றுசேரும் யோகம் உண்டாகும். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் (கணவனும் மனைவியும்) 15 ஆண்டுகளாகப் பிரிந்திருந்தார்கள். ஒருகாலகட்டத்தில் மீண்டும் ஒன்றுசேர்ந்து குடும்பம் நடத் தினார்கள். ராமாயணத்தில் ராமரும் சீதையும், வருடக் கணக்கில் பிரிந்திருந்த வர்கள், இராவண வதத்துக்குப்பிறகு மீண்டும் ஒன்றுசேரவில்லையா? அதில் ஒரு குறை என்னவென்றால், கற்புக்கரசியான சீதையை களங்கமில்லாதவளென்று இந்த உலகத்துக்கு நிரூபிக்க அக்னிப் பிரவேசம் செய்ய வைத்தது. இது இராமனுக்குக் களங்கம்தான். இராமன் தூய்மையானவன், ஏகபத்தினி விரதன் என்றாலும், இரண்டு இடத்தில் அவன்' பெருமைக்கு பங்கம் ஏற்படுகிறது. வாலிலியை மறைவிலிலிருந்து அம்பெய்ததும், சீதையை அக்னிப்பிரவேசம் செய்யவைத் ததும் இராமனுக்கு கரும்புள்ளி ஏற்படுத்தி விட்டது.

பரிகாரம்: பிரிந்திருக்கும் கணவனும் மனைவியும் ஒன்றுசேர நாமக்கல்லிலில் இருந்து எட்டுக் கிலோமீட்டர் தூரமுள்ள மோகனூர் சென்று சம்மோஹன கிருஷ்ணனை வழிபடவும். தொடர்புக்கு; ஸ்ரீதர், செல்: 94499 57143, 99659 96100.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரனும், 12-க்குடைய புதனும் பரிவர்த்தனையாக இருக்கிறார்கள். அதனால் சுக்கிரனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. பரிவர்த்தனை பெறும் கிரகங்கள் அவரவர் ராசியில் ஆட்சிபெறுவதற்குச் சமம். அதாவது சுக்கிரன் துலாத்திலும், புதன் கன்னியிலும் இருப்பதாக அர்த்தம்! அதனால் உங்களுடைய முயற்சிகள் தளர்ச்சியில்லாமல் வளர்ச்சியடையும். பொருளாதாரத்திலும் சரளமான பணப்புழக்கம் காணப்படும். செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, கௌரவம், ஆற்றல் எல்லாம் மேலோங்கும். கொடுத்த வாக்குறுதியைக் குறைவின்றி நிறைவேற்ற 2-ல் உள்ள குரு பகவான் அருள்வார். அதேபோல வரவேண்டிய பணமும் வசூலாகும். கொடுக்கவேண்டிய பணத்தையும் கொடுத்து, வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். 6-க்குடையவர் 2-ல் இருப்பதால், வரவேண்டிய பணம் வந்துசேரும். அதேபோல 2-க்குடையவர் 6-ல் மறைந்தால், நமது பணம் சுற்றியிருப்போருக்குப் போகும். 3-ல் சனி, கேது- ராகு பார்வை. அவர்களுக்கு செவ்வாய் பார்வை என்பதால், உடன்பிறந்தோர் வகையில் சில வருத்தங்களும், கசப்புணர்வுகளும் ஏற்படலாம். வருடக்கணக்கில் நெருங்கிப் பழகிய நண்பர்களுக்குள் காரணகாரியமில்லாமல் பகையுணர்வு உண்டாகிப் பிரிந்திடும் சூழ்நிலை உண்டாகும். உதாரணம்- "சொல்லின் செல்வர்' சம்பத்தும், "கவியரசர்' கண்ணதாசனும் மிகமிக நெருக்கமாக இருந்தார்கள். சம்பத்துக்கு கண்ண தாசன் உதவிகரமாகவும், உதவும்கரமாகவும் இருந்தார். ஒருகாலகட்டத்தில் இருவரும் கருத்து வேறுபாடாகி வெறுத்து ஒதுங்கிவிட்டார்கள். ஒருகாலத்தில் இருவருமே எனக்குப் பழக்கமாக, நெருக்கமாக இருந்தவர்கள். (1965).

பரிகாரம்: சுக்கிரனின் நீசம் பங்கமாகி, ராஜயோகமாக அமைய பண்ருட்டி- உளுந்தூர்பேட்டை சாலையிலுள்ள திருநாவலுர் சென்று சுக்கிர லிங்கத்தை (வெள்ளிக்கிழமை) வழிபடவும். தொடர்புக்கு: செந்தில் குருக்கள், செல்: 94861 50809, 84381 13743.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 11-ல் கன்னியில் புதன் வீட்டில், சூரியன் சாரத்தில் (உத்திரம்) இருக்கிறார். அது (கன்னி) செவ்வாய்க்கு பகைவீடு என்றாலும், செவ்வாய்க்கு வீடுகொடுத்த புதனும் சுக்கிரனும் பரிவர்த்தனை என்பதோடு, செவ்வாயின் உச்ச ராசிநாதன் சூரியன் சேர்க்கை என்பதால், பகை வீடு தற்காலிக நட்பாக அமைகிறது. கொள்கை வேறுபட்ட இரு கட்சிகள தேர்தல் கூட்டணி சேர்வது போல! அதுமட்டுமல்ல; எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்ற பாலிசிப்படி, எதிரியும் தற்காலிக நட்பாக மாறலாம். ஜென்ம குரு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தருவார். உங்களுடைய முயற்சிக்கெல்லாம் உறு துணையாக நிற்பார். கம்பர், "தம்பியுடையான் படைக்கஞ்சான்' என்று பாடினார். அதுபோல "இந்தப்படை போதுமா- இன்னும் கொஞ்சம் வேணுமா' என்று சவால் விடுமளவு உங்களுக்கு நண்பர்களும் உடன்பிறப்புகளும் தோள் கொடுப்பார்கள். "தோள்' என்றதும் எனக்கு வாரியார் நினைவுவருகிறது. பல ஆண்டுகளுக்குமுன்பு, அறிஞர் அண்ணாவுக்கு தோள்வலி வந்த சமயம், கிருபானந்த வாரியார் சுவாமிகள் நெய்வேலிக் கூட்டத்தில் அதை விமர்சனம் செய்து, கட்சிக்காரர் களின் கண்டனத்துக்கு ஆளானார். விருச்சிக ராசிக்கு 2020 மார்ச்வரை ஏழரைச்சனி நடக்கிறது. முதல் சுற்று மங்கு சனி, இரண்டாம் சுற்று பொங்கு சனி, மூன்றாம் சுற்று மரணச்சனி என்பார்கள். ஆனால் மங்குசனிதான் கெடுதல் செய்யும். மற்ற சனி பாதிக்காது. சனி பொதுவாக நல்லவர் தான். பிறகு ஏன் அவரைப் பார்த்து எல்லாரும் பயப்படுகிறார்கள்? சனி இருப்பதைக் கெடுப்பார் இல்லாததைக் கொடுப்பார். நம்பாதோரைத் தடுப்பார். எண்கணி தத்தில் ஒன்றுடன் ஒன்றுசேர இரண்டு என்று உயர்வாகும்; பெருகும். சனிக்கு 8-ஆம் எண். 1 ஷ் 8=8, 2 ஷ் 8=16, (7) 3 ஷ் 8=24-(6), (7) 4 ஷ் 8=32 (5) என்று 8, 7, 6, 5 என்ற இறங்குமுகமாகும். அதுதான் மைனஸ்!

பரிகாரம்: தேனிவழி சின்னமனூர் அருகில் குச்சனூர் சென்று சனீஸ் வரரை வழிபட, ஏழரைச்சனியின் வேகம் தணியும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசியில் சனி, கேதுவும், 7-ல் ராகுவும் இருக்கிறார்கள். சனியும் செவ்வாயும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். பொதுவாக சனி, செவ்வாய் பார்வை கெடுபலனையே தரும். உங்களுக்கு இவர்களிருவரின் பார்வையும் நற்பலனையே நடத்தும். சனி 2, 3-க்குடையவர். செவ்வாய் 5, 12-க்குடையவர். இருவருக்கும் 10-ஆம் பாவத்தில் தொடர்பு ஏற்படுவதால், தொழில், வாழ்க்கை, முயற்சி எல்லாம் பழுதில்லாமல் வெற்றியடையும். விருதுகளுக்கும் பாராட்டுக்கும் மனநிறைவுக்கும் ஆளாகலாம். ராசிநாதன் குரு 7, 10-க்குடைய புதன் சாரம் பெற்று 12-ல் இருப்பதால், சுபச்செலவுகள் உண்டாகும். திருமணம், புதுத்தொழில், உபதொழில், மனைவியின் பெயரில் தொழில் யோகம், வாகன யோகம், பூமி, வீடு யோகம் போன்றவற்றில் சுபமங்களச் செலவுகள் ஏற்படும். குரு 6-ஆமிடத்தைப் பார்ப்பதால் அது சம்பந்தமான சுபச்செலவும் ஏற்படும். ஒருசிலர் திருமணவயதை ஒட்டிய பிள்ளைகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்களையும், சீமந்தம், வளைகாப்பு (திருமணமானவர்களுக்கு) போன்ற சுபகாரியத்தையும் நிறைவேற்றலாம். இதுவரை உடலை வருத்திய நோய்நொடிகளும் வைத்தியச்செலவும் விலகிவிடும்.

பரிகாரம்: ஜென்மச்சனியின் பாதிப்பு விலக திருக்கொள்ளிக்காடு சென்று வழிபடவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிக்கு விரயச்சனி நடக்கிறது. முதல் சுற்று ஏழரைச்சனி நடப்பவர்களுக்கு வீண்விரயச் செலவாகவும், தொழில் நஷ்டம்- கஷ்டமாகவும், கடனா ளியாகவும் பலன்தரும். அது மங்குசனி. இரண்டாம் சுற்று ஏழரைச்சனி நடப் பவர்களுக்கு பொங்கு சனி. வீடு, தொழில், திருமணம், புத்திர பாக்கியம், வாகன யோகம் போன்ற சுபச்செலவுகளாக அமையும். மூன்றாம் சுற்று நடப்பவர்களுக்கு அறுபதாம் கல்யாணம், தெய்வ ஸ்தல ஆன்மிக யாத் திரை போன்றவகையில் சுபச்செலவு உண்டாகும். மூன்றாம் சுற்று ஏழரை நடப் பவர்களுக்கு ஏதோ ஒருவகையில் கடன் ஏற்படும். வட்டி நட்டம் ஏற்படும். ஒருசிலர் சிறுசேமிப்பு சீட்டு போட்டாலும் (ஏலச்சீட்டு), அத்தியாவசியத் தேவைக்காக அதை முறித்து ஏலம் எடுத்து செலவுசெய்யும் சூழ்நிலை உருவாகும். பெரும்பாலும் இடப்பெயர்ச்சி, தொழில் மாற்றம் ஏற்படலாம். அவரவர் ஜாதகப்படி யோகமான தசைகள் நடந்தால், சுபமங்களக் காரியங்களுக்கான சுபச்செலவாக அமையும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் ஏமாற்றம், இழப்பு, தண்டம், தீர்வை போன்றவகையில் வீண்விரயச்செலவாக அமையும்.

பரிகாரம்: அறந்தாங்கி அருகில் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள எட்டியத்தளி சென்று வழிபடவும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம்பெறுகிறார். அவருடன் கேது சம்பந்தம்; ராகு பார்வை. சனி, கேது, ராகு மூவருக்கும் 11-ஆம் இடம் நன்மை தரும் பலமான இடம். ராகு 5-ல் இருந்தாலும் 11-ஆம் இடத்தைப் பார்க்கிறார். ஒரு திரைப்படத்தில் "ராஜா கைய வைச்சா அது ராங்கா போனதில்லை' என்று பாடியமாதிரி நீங்கள் கைவைத்தது கைகூடும். தொட்டது துலங்கும். எண்ணியதெல்லாம் ஈடேறும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். தாமரை இலை தண்ணீர்போல ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் குடும்ப உறவுகள் எல்லாம், பட்டும் படாமலும் இருக்கும் பந்தபாசம் எல்லாம் பாலும் நீரும் கலந்ததுபோல இரண்டறக் கலந்துவிடும். விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போவதில்லை என்ற ஞானோதயம் பிறந்துவிடும். சூரியன், செவ்வாய், சுக்கிரன் மூவரும் 8-ல் மறைவதால், சிறு தோல்விகளைக்கூட ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்காது. "திருவிளையாடல்' திரைப்படத்தில் நாகேஷ் ஒரு வசனம் பேசுவார். "பாட்டு எழுதிப் பேர் வாங்கும் புலவர்கள் உண்டு. குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கும் புலவர்களும் உண்டு' என்பார். எனவே குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்ற பெருந் தன்மையை வளர்க்கவும்.

பரிகாரம்: 5-ஆமிடத்து ராகு உங்களுக்கு மனக்குறையை நிவர்த்திக்ககு வடக்குப் பார்த்த அம்மன் அல்லது துர்க்கையை வழிபடவும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். "அகப்பட்டவனுக்கு அட்டமத்துச் சனி- ஓடிப்போனவனுக்கு 9-ல் குரு' என்பார்கள். குரு 9-ல் நின்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். உங்களது திறமையும், புகழும் வெளிப்படும். முயற்சிகள் வெற்றிபெறும். காரியங்கள் கைகூடும். ஒருவருக்கு நல்ல நேரம் வரும்போது நல்லவர்கள் எல்லாம் ஒன்றுகூடுவார்கள். அதுபோல உங்கள் அருமை பெருமை தெரியாமல் இருந்தவர்கள் அவற்றைப் புரிந்து வந்து இணைவார்கள். சகோதர- சகோதரி வகையில் மனவருத்தமும் சங்கடங் களும் விலகி ஒற்றுமையும் நட்பும் உண்டாகும். உங்களுக்கு இளையவர்கள் உங்களுக்கு முக்கி யத்துவம் கொடுக்காமல் உதாசீனப்படுத்தி யிருப்பார்கள். மறப்போம் மன்னிப்போம் என்று நீங்கள் பெருந்தன்மையாக நடந்து கொள்வீர்கள். அதுவே அவர்களுக்கு தண்டனை யாக நினைத்து மனம் மாறி, பாசத்தோடு நேசக்கரம் நீட்டுவார்கள். தண்டனை என்பது குற்றம் செய்தவரை பழிவாங்குவதற்கு அல்ல. மனம் திருந்தி நல்வழி வாழ்வதற்காகத்தான். குற்றம் செய்தவர்களின் குற்ற உணர்வே அதாவது அவர்கள் மனசாட்சியே அவர்களுக்கு தண்டனையாகிவிடும்; திருத்திவிடும்.

பரிகாரம்: குருவருளும் திருவருளும் இருந்தால் எல்லாம் நிறைவாகும். உங்கள் மனம் நாடும் சற்குருவை வழிபட்டு நற்பலன் அடையலாம்.

bala041019
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe