ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- ரிஷபம்.
28-7-2019- மிதுனம்.
31-7-2019- கடகம்.
2-8-2019- சிம்மம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூசம்- 3, 4. ஆயில்யம்- 1.
செவ்வாய்: ஆயில்யம்- 2, 3.
புதன்: புனர்பூசம்- 2, 3, 4.
குரு: கேட்டை- 2.
சுக்கிரன்: பூசம்- 1, 2, 3.
சனி: பூராடம்- 1.
ராகு: புனர்பூசம்- 1.
கேது: பூராடம்- 3.
கிரகமாற்றம்:
குரு, சனி வக்ரம்.
சுக்கிரன் அஸ்தமனம்.
3-8-2019 கடக புதன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் ஆகஸ்ட் 10-ஆம் தேதிவரை கடகத்தில் நீசமாக இருக் கிறார். செவ்வாயும் சூரியனும் சேர்ந்திருப்ப தால் செவ்வாய்க்கு நீசபங்க ராஜயோகம் கிடைக்கிறது. செவ்வாயின் வீடான மேஷ ராசியில்தான் சூரியன் உச்சமாகிறார். உச்சநாத னோடு சேர்வதால் செவ்வாய்க்கு நீசபங்க ராஜயோகம். ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் நீசமடையலாம்; நீசபங்க ராஜயோகம் என்ற விதிவிலக்கு உண்டு. வக்ரமடையலாம்; வக்ரத்தில் உக்ரபலம் என்று அர்த்தம். ஆனால் அஸ்தமனமடையக் கூடாது. அஸ்தமனம் என்றால் இருட்டு. இருட்டில் எதையும் தேடமுடி யாது; பார்க்க முடியாது. ஆந்தை ஒன்றுக் குத்தான் இருளில் பார்வை தெரியும். அஸ்த மனம் என்பது திருடர் களுக்குத்தான் யோகம். சத்யசீலர்களுக்கு யோக மில்லை. இரட்சகன் என்ற வேடன் கெட்டவன். அவன் ஞானம் பெற்று வால்மீகி யானார். அருணாகிரிநாதர் காமவெறியன். கோபுரத் தி−ருந்து கீழேவிழத் துணிந்தபோது முருகன் தடுத்தாட்கொண்டு அருணகிரிநாதராக்கித் திருப்புகழ் பாடவைத்தான். ஆக, கெட்டவர்கள் நல்லவர்களாகலாம். நல்லவர்கள் கெட்டவர்களாகலாமா? இராவணன் நல்லவன்; சிவபக்தன். சீதைமேல் கொண்ட காமத்தால் கெட்டவனாகி அழிவைச் சந்தித்தான். நீங்கள் நல்லவரா? கெட்டவரா?
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிக்கு 8-ல் சனியும் கேதுவும் உள்ளனர். 2-ல் புதன், ராகு. குடும் பத்தில் குழப்பம் மிகுதியாகும். நல்லது சொன்னாலும் பொல்லாப்பாக முடியும். சிலபேருக்கு இடப்பெயர்ச்சி வரும். மாண வர்கள், விடுதியில் தங்கிப்படிக்கநேரும். வேலை செய்வோருக்கு வேலை மாற்றம் வரும். ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால், மனைவி, மக்களைப் பிரிந்து வெளிநாடு சென்று வேண்டிய அளவு சம்பாதிக்கலாம். கணவன் மனைவி கையாலும், பிள்ளை தாயின் கையாலும் உபசரித்துச் சாப்பிட முடியாது. சிலருக்கு வீடு மாற்றம் வரும். டூவீலர் அல்லது கார் வைத்திருப் பவர்கள் வாகன மாற்றம் செய்யும் சூழ்நிலை உருவாகும். சொந்தமாக லாரி வைத்து நடத்துகிறவர்களுக்கு எதிர்பாராத விரயமும் நஷ்டமும் உண்டாகலாம். குடும்பத்தில் மனைவியால் தேவையற்ற விரயங்களும் செலவுகளும் உண்டாகும். கணவருக்குத் தெரியாமல் கொடுக்கல்- வாங்கல், சீட்டுப் பிடித்தல் போன்ற வரவு- செலவுகளைச் செய்யும் மனைவி களுக்கு இழப்பும் ஏமாற்றமும் ஏற்படும். முடிவில் கணவர் தலையிட்டு நஷ்டங்களை ஈடுசெய்து பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும். "திங்கிறவன் திங்க திருப்பத்தூரான் தண்டம் கொடுத்த கதை'யாக சிலருடைய அனுபவம் அமையும். "எங்கவீட்டுப் பிள்ளை' திரைப்படத்தில் ஒரு எம்.ஜி.ஆர். சாப்பிட, வெறும் காபி மட்டும் சாப்பிட்ட எம்.ஜி.ஆர். பில் கொடு
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- ரிஷபம்.
28-7-2019- மிதுனம்.
31-7-2019- கடகம்.
2-8-2019- சிம்மம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூசம்- 3, 4. ஆயில்யம்- 1.
செவ்வாய்: ஆயில்யம்- 2, 3.
புதன்: புனர்பூசம்- 2, 3, 4.
குரு: கேட்டை- 2.
சுக்கிரன்: பூசம்- 1, 2, 3.
சனி: பூராடம்- 1.
ராகு: புனர்பூசம்- 1.
கேது: பூராடம்- 3.
கிரகமாற்றம்:
குரு, சனி வக்ரம்.
சுக்கிரன் அஸ்தமனம்.
3-8-2019 கடக புதன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் ஆகஸ்ட் 10-ஆம் தேதிவரை கடகத்தில் நீசமாக இருக் கிறார். செவ்வாயும் சூரியனும் சேர்ந்திருப்ப தால் செவ்வாய்க்கு நீசபங்க ராஜயோகம் கிடைக்கிறது. செவ்வாயின் வீடான மேஷ ராசியில்தான் சூரியன் உச்சமாகிறார். உச்சநாத னோடு சேர்வதால் செவ்வாய்க்கு நீசபங்க ராஜயோகம். ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் நீசமடையலாம்; நீசபங்க ராஜயோகம் என்ற விதிவிலக்கு உண்டு. வக்ரமடையலாம்; வக்ரத்தில் உக்ரபலம் என்று அர்த்தம். ஆனால் அஸ்தமனமடையக் கூடாது. அஸ்தமனம் என்றால் இருட்டு. இருட்டில் எதையும் தேடமுடி யாது; பார்க்க முடியாது. ஆந்தை ஒன்றுக் குத்தான் இருளில் பார்வை தெரியும். அஸ்த மனம் என்பது திருடர் களுக்குத்தான் யோகம். சத்யசீலர்களுக்கு யோக மில்லை. இரட்சகன் என்ற வேடன் கெட்டவன். அவன் ஞானம் பெற்று வால்மீகி யானார். அருணாகிரிநாதர் காமவெறியன். கோபுரத் தி−ருந்து கீழேவிழத் துணிந்தபோது முருகன் தடுத்தாட்கொண்டு அருணகிரிநாதராக்கித் திருப்புகழ் பாடவைத்தான். ஆக, கெட்டவர்கள் நல்லவர்களாகலாம். நல்லவர்கள் கெட்டவர்களாகலாமா? இராவணன் நல்லவன்; சிவபக்தன். சீதைமேல் கொண்ட காமத்தால் கெட்டவனாகி அழிவைச் சந்தித்தான். நீங்கள் நல்லவரா? கெட்டவரா?
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிக்கு 8-ல் சனியும் கேதுவும் உள்ளனர். 2-ல் புதன், ராகு. குடும் பத்தில் குழப்பம் மிகுதியாகும். நல்லது சொன்னாலும் பொல்லாப்பாக முடியும். சிலபேருக்கு இடப்பெயர்ச்சி வரும். மாண வர்கள், விடுதியில் தங்கிப்படிக்கநேரும். வேலை செய்வோருக்கு வேலை மாற்றம் வரும். ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால், மனைவி, மக்களைப் பிரிந்து வெளிநாடு சென்று வேண்டிய அளவு சம்பாதிக்கலாம். கணவன் மனைவி கையாலும், பிள்ளை தாயின் கையாலும் உபசரித்துச் சாப்பிட முடியாது. சிலருக்கு வீடு மாற்றம் வரும். டூவீலர் அல்லது கார் வைத்திருப் பவர்கள் வாகன மாற்றம் செய்யும் சூழ்நிலை உருவாகும். சொந்தமாக லாரி வைத்து நடத்துகிறவர்களுக்கு எதிர்பாராத விரயமும் நஷ்டமும் உண்டாகலாம். குடும்பத்தில் மனைவியால் தேவையற்ற விரயங்களும் செலவுகளும் உண்டாகும். கணவருக்குத் தெரியாமல் கொடுக்கல்- வாங்கல், சீட்டுப் பிடித்தல் போன்ற வரவு- செலவுகளைச் செய்யும் மனைவி களுக்கு இழப்பும் ஏமாற்றமும் ஏற்படும். முடிவில் கணவர் தலையிட்டு நஷ்டங்களை ஈடுசெய்து பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும். "திங்கிறவன் திங்க திருப்பத்தூரான் தண்டம் கொடுத்த கதை'யாக சிலருடைய அனுபவம் அமையும். "எங்கவீட்டுப் பிள்ளை' திரைப்படத்தில் ஒரு எம்.ஜி.ஆர். சாப்பிட, வெறும் காபி மட்டும் சாப்பிட்ட எம்.ஜி.ஆர். பில் கொடுத்தமாதிரி.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசியில் ராகுவும், 7-ல் சனி- கேதுவும் இருப்பது ஒருவகையில் மைனஸ் பாயின்ட்டுதான். அத்துடன் 7, 10-க்குடைய குருவும் 6-ல் மறைவது டபுள் மைனஸ் ஆகும். கணிதவியல்படி, டபுள் மைனஸ் =ப்ளஸ் ஆகும். 7-க்குடையவன் தன் ஸ்தானத்துக்கு 12-லும், 10-க்குடையவன் 10-க்குத் திரிகோணத்திலும் நின்று 10-ஆமிடத்தையே பார்க்கிறார். மனைவிவகையில் ஏற்படும் விரயங் களையும், செலவுகளையும், வருத் தங்களையும் தொழில், உத்தி யோகம், வேலைரீதியாக ஏற்படும் உயர்வுகள் மனநிறைவைத் தந்து மகிழ்ச்சியாக்கிவிடும். எனக்குத் தெரிய, ஒரு குடும்பத்தில் தினசரி கணவரோடு மனைவி சண்டை போட்டுக்கொண்டிருப்பார். அந்த அம்மாள் சண்டை போடப்போட அவருக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைத்தது. அதனால் திருநெல்வே−லி அல்வாவும் மல்லி−கைப் பூவும் வாங்கிக் கொண்டுபோய் மனைவியை சமாதானப்படுத்துவார். அதற்கும் அந்தம்மா சண்டை போட்டு, ""வாடிப்போகும் பூவும், ஜீரண மாகும் அல்வாவும் எதற்கு? கைக்கு மோதிரமோ காதுக்குத் தங்கத்தோடோ வாங்கிப் போடக் கூடாதா?'' என்று சண்டை போடுவார். மனைவியின் வசை முழுவதும் ஒருசில கணவர்களுக்கு தேவாரம், திருவாசகம்போல தெரியும். இதுதான் 7-ல் சனி, கேது என்ற பலன்!
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் 5, 10-க்குடைய செவ்வாய் (ஜென்ம ராசியில்) நீசம். இருந்தாலும் சூரியனோடு சம்பந் தப்படுவதால் நீசபங்க ராஜயோகம். (சூரியன் செவ்வாயின் உச்ச ராசி நாதன்). 9-க்குடைய குரு 5-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். எவ்வளவு பிரச்சினைகளைச் சந்தித்தாலும், எவ்வளவு சோதனைகளும் வேதனைகளும் உங்களை முற்றுகையிட்டாலும், "கழுவின் மீனில் நழுவின மீனைப்போல' சமாளித்து, முன்னேறுமளவு திறமையும் சாமர்த்தியமும் உங்களுக்கு இருக்கும். கடகம் என்றால் நண்டு. மற்ற எல்லா ஜந்து களும், மிருகங்களும், மனிதர்களும் திரும்ப வேண்டுமென்றால் "யு' டர்ன் அடித்துதான் திரும்ப வேண்டும். ஆனால் நண்டுக்கு உடலைச் சுற்றி கால்கள் இருப்பதால், எந்தப் பக்கம் போவதென்றாலும் அந்தப்பக்கம் உடலை வளைக்காமல், திருப்பாமல் போகலாம். அதேபோல கடக ராசி, கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அந்த சாமர்த்தியமும் தனித்துவமும் உண்டு. இது உங்கள் ப்ளஸ் பாயின்ட். பிரம்மா இந்த உலகத்தைப் படைக்கத் தொடங்கியபோது கடக லக்னம் உதயமானதாக சாஸ்திரம் சொல்கிறது. அதோடு 9-க்குடைய குரு, 10-க்குடைய செவ்வாயைப் பார்ப்பதால், தர்மகர்மாதிபதி யோகம் இணைகிறது. ஆகவே "வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்பதுபோல நீங்கள் எதிலும் ஜெயிக்கலாம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியனும், சிம்ம ராசிக்கு ராஜயோகாதிபதியான செவ்வாயும் 12-ல் மறைகிறார்கள். எந்த ஒரு கிரகத்துக்கு கேந்திராதிபத்தியமும் திரிகோணாதிபத் தியமும் கிடைக்கிறதோ, அந்த கிரகம் அந்த ராசிக்கு ராஜயோகாதிபதியாவார்கள். கேந்திரம் என்பது முயற்சி; அதை விஷ்ணு ஸ்தானம் என்பர்கள். திரிகோணம் என்பது தெய்வ கடாட்சம்; அதை லட்சுமி ஸ்தானம் என்பார்கள். இரண்டும் இணைகிறபோது குருவருளும் திருவருளும் பரிபூரணமாக அமையும். அத்துடன் 9-க்குடைய செவ்வாயும், 10-க்குடைய சுக்கிரனும் இணைவது தர்மகர்மாதிபதி யோகம். ஆனால் ராசிநாதன் சூரியனோடு அவர்கள் 12-ல் மறைவதால், அதிர்ஷ்டமும் யோகமும் அது இஷ்டமாக தாமதமாகத்தான் வரும். அதுவரை நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டும். 5, 8-க்குடைய குரு அவர்களைப் பார்ப்பதால், எதிர்பாராத தனப் ராப்தியும் எதிர்பாராத வகையில் வந்துசேரும். "திருஷ்டம்' என்பது கண்ணுக்குத் தெரிவது. "அதிருஷ்டம்' என்பது கண்ணுக்குத் தெரியாது. கண்ணுக்குத் தெரியாமல் வருவது அதிர்ஷ்டம். இந்த யோகாதிபதிகளோடு ராகு- கேது, சனி சம்பந்தப்பட்டால், கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் எதிர்பாராத விபத்துகளும் வந்து சேரும். அது அவரவர் ஜாதக தசாபுக்திப் பலனைப் பொருத்தது.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 10-ல் ஆட்சியாக இருக்கிறார். 4, 7-க்குடைய குருசாரம் பெறு கிறார். புதனும், சாரம்கொடுத்த குருவும் 6, 8-ஆக இருக்கிறார்கள். அத்துடன் புதனுக்கு ராகு- கேது, சனி சம்பந்தமும் ஏற்படுகிறது. மதிப்பு, மரியாதை, கௌரவம், அந்தஸ்து ஆகிய வற்றுக்கெல்லாம் எந்தத் குறையும் ஏற்படாது. என்றாலும், "நித்தியகண்டம் பூரண ஆயுசு' என்ற வகையில், தினமும் செத்துச்செத்துப் பிழைக்கும் நிலையாக இருக்கும். 4-ல் உள்ள சனி ராசியையும் பார்க்கிறார்; ராசிநாதனையும் பார்க்கிறார். எனவே, "காலைச் சுற்றிய பாம்பு கடித்தபாடுமில்லை; கழன்றுவிட்டு போன பாடும் இல்லை' என்பதுமாதிரி அவதிப்பட வேண்டிவரும். சிலருக்கு மனைவியே தொல்லை யாக அமைவார். சிலருக்குத் தொழிலும் உத்தியோகமுமே தொல்லையாக அமையும். எவ்வளவு விசுவாசமாக செயல்பட்டாலும் குடும் பத்தாரைத் திருப்திப்படுத்த இயலாது. வேலை யிலும் நிறைவு, நிம்மதி இருக்காது. அரசு உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு சர்வீஸ் அடிப் படையில் பதவி உயர்வுக்கான பட்டிய−ல் பெயர் இருந்தாலும், மேலி−ட அதிகாரிகளின் செல்வாக் கால், உங்களுக்குப் பின்தங்கிய நிலையிலுள்ள வர்கள் சிபாரிசு அடிப்படையில் பதவி உயர்வு அடைவார்கள். உங்களைப் பின்னால் தள்ளிவிடு வார்கள். இதுதான் காலக்கொடுமை என்பது!
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 10-ல் அஸ்த மனமாக புரட்டாசி 3-ஆம் தேதி (20-9-2019) வரை இருக்கிறார். ஏற்கெனவே எழுதியபடி, எந்த ஒரு கிரகமும் நீசமடையலாம்; வக்ரம டையலாம்; நிவர்த்திக்கு இடமுண்டு. ஆனால் அஸ்தமன தோஷத்திற்கு மட்டும் நிவர்த்தியும் பரிகாரமும் இல்லை. ஆன்மார்த்தமாக நீங்கள் யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காமல் நல்லது செய்தாலும், அது பொல்லாப்பாக முடியும்; அவப்பெயரைத் தேடித்தரும். சுக்கிரன் துலா ராசிக்கு ராஜயோகாதிபதியான சனியின் சாரம் (பூசம்) பெறுகிறார். சனி கேது- ராகு சம்பந்தம் பெறுகிறார். உடன்பிறந்தவர்கள் வகையிலும், பெற்ற தாய்- தந்தை வகையிலும் உங்கள் மகிழ்ச்சிக்கும், மனநிறைவிற்கும் சோதனை உருவாகும் காலம். "ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு' என்று கிராமத்தில் பழமொழிசொல்வதுபோல, பெற்றவர்களே நடந்துகொள்ளும்போது மற்றவர்களைப் பற்றி கவலைப்பட முடியுமா? "கொண்டு வந்தால் தந்தை, சீர் கொண்டுவந்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி' என்ற "தூக்கு தூக்கி'ப் படத்தின் வசனத்திற்கேற்ற மாதிரி, உங்கள் வாழ்க்கையின் சந்தோஷத்தை சீரழிக்கும். அதுவே, நோயையும் உருவாக்கும். மனநோயே உடல்நோய்!
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 9-ல் நீச ராசியில் இருக்கிறார். 7, 12-க்குடைய சுக்கிரனும், 10-க்குடைய சூரியனும் அவரோடு சம்பந்தம். 2-ல் சனி, கேது. 8-ல் புதன், ராகு. இதனால் எடுத்து வைத்தாலும் கொடுத்துவைக்கவில்லையே என்ற நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். ஏழரைச்சனியில் வாக்குச்சனி, குடும்பச்சனி. பேசத்தெரியாமல் பேசி அவப்பெயரைத் தேடிக்கொள்வீர்கள். "பாவம் ஓரிடம் பழி ஓரிடம்' என்று முன்பின் யோசிக்காமல் பேசிவிட்டு, பிறரை நோகடித்து பழிபாவத்தையும் சம்பாதித்துக் கொள்வீர்கள். ஜென்மத்திலுள்ள குரு காரண மாக, நீங்கள் எதார்த்தவாதியாக இருந்தாலும் "எதார்த்தவாதி வெகுஜனவிரோதி' என்ற நிலைக்கு ஆளாகி பழிபாவத்தை ஏற்றுக்கொள் வீர்கள். உதாரணமாக, யாரிடம் எந்த ரகசி யத்தை சொல்லக்கூடாது என்று உங்களை எச்சரிப்பார்களோ, அவரிடமே அந்த ரகசி யத்தை வாய்தவறி உளறிக் கொட்டுவீர்கள். அதனால் வரும் பின்விளைவுகளையும் சமாளிக்க முடியாமல் சங்கடப்படுவீர்கள். இதுதான் வாக்கில் உள்ள சனி- கேதுவின் விளையாட்டு! இருந்தாலும் ஜென்ம குரு உங்கள் அப்பாவித் தனத்திற்கு சப்பைக்கட்டு கட்டிவிடுவார். அதனால்தான் பெரியவர்கள் "சபையறிந்து பேசுக' என்றும், "பேசாமலி−ருந்தும் பழக வேண்டும்' என்றும் சொன்னார்கள்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. ஜென்மத்தில் சனி, கேதுவும், 7-ல் புதன், ராகுவும் சேர்க்கை. ராசிநாதன் குரு 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய் ராசிக்கு 8-ல் மறைவு. பாக்கியாதிபதி சூரியனும் 8-ல் மறைவு. அடிப்படை வாழ்க்கை வசதி, சௌகரியங்களுக்குக் குறைவில்லை. அன்றாடத் தேவைகளுக்கும் பாதிப்பில்லை. என்றாலும் மனதில் நிறைவில்லை; மகிழ்ச்சி இல்லை. எதையோ ஒன்றைப் பறிகொடுத்தமாதிரி அல்லது இழந்தமாதிரி ஒரு உணர்வு. கல்யாண வீட்டில் வெளியூரி−ருந்து வந்துள்ள சொந்தபந்தம், சுற்றத்தார், உறவினர்களால் கலகலப்பாக இருந்த நிலையில், விசேஷம் முடிந்தவுடன் அவரவர் ஊருக்கு அவரவர் பிரிந்து போனபிறகு வீடே களையிழந்தமாதிரி ஒரு தனிமையும், சோகமும், விரக்தியும் நிலவுமே- அப்படிப்பட்ட ஒரு மனநிலை உங்களிடம் காணப்படும். தினசரி ஐந்தாறு முறை செல்போனில் பேசிக்கொண்டிருந்தவர்களும், பேச வேண்டியவர்களும் இப்போது பேசா ம−ருப்பதும் ஒருவகையில் கவலை. பத்து பேருக்குமேல் சமையல் செய்து பரிமாறிய அன்னமிட்ட கை தனக்கு மட்டும் அல்லது தனக்கும் கணவருக்கும் மட்டும் சமைப்பது என்பது வேண்டா வெறுப்பானநிலை! யார் கண்பட்டதோ அல்லது யார் மனம் புண்பட்டதோ என்று புரியாமல் தவிப்பீர்கள். இது ஏழரைச்சனியின் வேலையா? சனியோடு சேர்ந்த கேதுவின் வேலையா? இந்நிலை மாறுமா? காலம் பதில் சொல்லும்! காத்திருங்கள்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு; கேது- ராகு சம்பந்தம். அவர்களுக்கு வீடுகொடுத்த குரு அதற்கு 12-ல் மறைவு. விரயச்சனி நடக்கும் இக்காலம் தவிர்க்கமுடியாத விரயங்களும் செலவுகளும் வருமென்றாலும், அதை சுபவிரயச் செலவாக மாற்றிக்கொள்வது உங்கள் புத்திசாலிலித் தனத்தைப் பொருத்தது. விரயச்செலவில் மூன்றுவகை உண்டு. சுபச்செலவு, தவிர்க்கமுடியாத தண்டம்- தீர்வையான விரயச்செலவு, எதிர்பாராத நஷ்டச் செலவு. ஜாதகதசா புக்திகள் 6, 8, 12-க்குடைய வர்கள் சம்பந்தமாக இருந்தால், அவர் களோடு சனி, செவ்வாய், ராகு சம்பந்தம் இருந்தாலும், பின்னால் சொல்லப் பட்ட எதிர்பாராத நஷ்டச்செலவு விரய மாக இருக்கும். 6, 8, 12-க்குடையவர் களோடு 5, 9-க்குடையவர்கள் அல்லது குரு சம்பந்தம் பெற்றிருந்தால் அது சுபச்செலவாகவும் சுபக்கடனாகவும் அமையும். இவர்களோடு 2, 4-க்குடைய வர்கள் சம்பந்தம் பெற்றால், படிப்பு சம்பந்த மான செலவு அல்லது பூமி, வீடு சம்பந்த மான செலவு என்று எடுத்துக் கொள்ளலாம். 7-க்குடையவர் சம்பந்தம் அல்லது சுக்கிரன் சம்பந்தம் பெறும்போது கல்யாணம் போன்ற சுபச்செலவு, 10-க்குடையவர் சம்பந்தம் பெறும்போது தொழில் செலவு. கோட்சாரம் என்பது இருபது சதவிகிதம். "தசாபுக்தி என்பது எண்பது சதவிகிதம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக் கிறார். 2-க்குடைய குரு 10-ல் இருந்து 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். அதனால் வாக்கு, தனம், குடும்பம், வித்தை என்ற 2-ஆமிடத்துக்குரிய பலன்கள் எல்லாம் எந்தக் குறையுமின்றி நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வக்கீல் தொழில் செய்கிறவர்களுக்கும், தரகு வேலை செய்கிறவர்களுக்கும் இக்காலம் பொற்காலமாகும். சிலர் வெளிநாட்டு வேலைக்குச் சென்று கைநிறைய சம்பாதிக்கலாம். 6-ல் உள்ள செவ்வாய் கடன்களை எல்லாம் அடைக்கச் செய்வார். சூரியன், சுக்கிரன் சேர்க்கையால் மனைவிவழியில் பணவரவும் யோகமும் உண்டாகும். சிலர் மனைவியின் சம்பாத் தியத்திலேயே மஞ்சள்குளிக்கலாம். எனக்குத் தெரிந்த ஒருவர் மனைவி அரசு வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதிக்க, கணவர் பிள்ளை களையும், சமையலையும், வீட்டு நிர்வாகத் தையும் பார்த்துக்கொண்டு, மனைவியிடம் பேட்டா வாங்கிக்கொண்டு சுகவாசியாக வாழ்கிறார். இதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும். சம்பாதித்துக்கொடுக்கும் கணவரையே, டேபிளில் சாப்பாட்டை எடுத்துவைத்துவிட்டு, "எடுத்துக்கொள்' என்று சொல்−விட்டு டி.வி. பார்க்கப்போகும் பெண்களும் உண்டு. ராசியை சனி பார்ப்பதால், வெளியில் சொன்னால் வெட்கம் என்று வறட்டுப் பெருமையாக வாழ்கிற ஆண்களும் உண்டு.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
சனி 10-ல் வக்ரமாக இருப்பதோடு கேதுவுடன் சம்பந்தம். 4-ல் புதனும் ராகுவும் இருப்பதால், எந்த ஒரு சிறு செயலையும் அலைந்துதிரிந்து ஒருமுறைக்குப் பலமுறை முயற்சிசெய்து நிறைவேற்றவேண்டும். பலனற்ற, பயனற்ற பயணங்களும் உண்டு. தாய்வழி உறவுகளால் செலவுகளும் வருத்தங்களும் ஏற்படலாம். என்றாலும் குருவின் பார்வை யால் "டேக் இட் ஈஸி' என்ற பாலி−சிப்படியும், நடிகர் விஜய் ஒரு படத்தில் "ஆல் இஸ் வெல்' என்று சொன்ன பாலி−சிப் படியும் எல்லாவற்றையும் இனிமை யாகவும், சுமுகமாகவும் எடுத்துக் கொள்வீர்கள். உங்கள் எண்ணங் களும் திட்டங்களும் தாமதப் பட்டாலும், நூற்றுக்கு நூறு நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். மனைவி மக்கள், மருமகள்கள், மருமகன்கள் வகையில் நட்பு மலரும். ஒட்டுதலோடும் பற்றுதலோடும் உறவு பலப்படும். தாமரை இலைத் தண்ணீராக இருந்த எண்ணங்களும், செயல்களும் பாலி−ல் கலந்த நீராகக் கலந்துவிடும். பெரியோர் செய்த பிழைகளை சிறியோர் மறந்து கைகொடுப்பதும், சிறியோர் செய்த பெரும்பிழைகளை பெரியார் மன்னித்து ஏற்றுக் கொள்வதும்தான் மனிதாபி மானம்.! கண்ணகியைவிட்டு கோவலனைப் பிரித்து மாதவியோடு சேர்த்ததும் காலம் தான்! மாதவியைவிட்டுப் பிரித்து கண்ணகியோடு சேர்த்ததும் காலம்தான்!