ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மிதுனம்.
23-9-2019- கடகம்.
26-9-2019- சிம்மம்.
28-9-2019- கன்னி.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திரம்- 3, 4, அஸ்தம்- 1.
செவ்வாய்: உத்திரம்- 1, 2.
புதன்: அஸ்தம்- 4, சித்திரை- 1, 2, 3.
குரு: கேட்டை- 3.
சுக்கிரன்: அஸ்தம்- 2, 3, 4.
சனி: மூலம்- 4, பூராடம்- 1.
ராகு: திருவாதிரை- 4.
கேது: பூராடம்- 2.
கிரக மாற்றம்:
25-9-2019- துலா புதன்.
26-9-2019- கன்னிச் செவ்வாய்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 5-ஆம் இடத்தில் திரிகோணமாக இருக்கிறார். அவருக்கு வீடுகொடுத்த சூரியன் சாரத்திலும் இருக்கிறார் (உத்திரம்). பாக்கியாதிபதி குரு 8-ல் மறைந்திருந்தாலும் செவ்வாயின் 4-ஆம் பார்வையைப் பெறுவதால், குருவுக்கு மறைவு தோஷம் விலகும். எனவே உங்களுடைய எண்ணங்களும் திட்டங்களும் நூற்றுக்கு நூறு நிறைவேறும். "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்ற குறளின்படி, பாக்கியாதிபதி 8-ல் மறைவதால், தெய்வ அனுகூலம் கைகூடத் தாமதமானாலும், உங்களுடைய விடாமுயற்சியும், வைராக்கியமும் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். அதற்கு உதாரணம் விசுவாமித்திரர்தான். பலமுறை தவமிருந்து விடாமுயற் சியினாலும், வைராக்கியத்தாலும் பிரம்மரிஷியானார். 10-க்குடைய சனி 9-ல் நிற்பது தர்மகர் மாதிபதி யோகமாகும். எனவே குலதெய்வ வழிபாடும், இஷ்டதெய்வ வழிபாடும் உங்களை வழிநடத்தி வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்லும். 9-ல் சனி, கேது, ராகு சம்பந்தம் இருப்பதால் தகப்பனார் அல்லது தந்தைவழியினர் அல்லது பூர்வீகச் சொத்து பிரச்சினைகள் சிலருக்கு வருத்தம் ஏற்படுத்தலாம்.
பரிகாரம்: பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமியை வழிபடவும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 5-ல் நீசம். என்றாலும் அவருக்கு வீடுகொடுத்த புதன் அங்கு ஆட்சிபெறுவதால் சுக்கிரனுக்கு நீசபங்க ராஜயோகம். ராசிநாதன் நீசமடைவது மைனஸ். அவர் 6-ஆமிடத்து அதிபதி என்பதால், ப்ளஸ் பாயின்ட். போட்டி, பொறாமை, எதிரி, கடன், நோய், வைத்தியச்செலவு ஆகிய 6-ஆமிடத்துப் பலன்கள் எல்லாம் விட்டு விலகும்; கெட்டுப்போகும். அதுதான் உங்களுக்கு ப்ளஸ் பாயின்ட். மேலும் ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடந்தாலும், சனிக்கு வீடுகொடுத்த குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். எனவே, அட்டமத்துச்சனியின் வேகம் தணியும். அத்துடன் குருவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் குருவைப் பார்ப்பதால், திருமணத்தடை விலகும். திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணயோகம் கூடும். திருமணமானவர்கள் மனைவியின் ஆதரவும், மனைவிவழி உறவினர்களின் ஆதரவும் எதிர்பார்க்கலாம். ஜாதகரீதியாக யோகமிருந்தால் மனைவிமூலமாக சிலருக்கு சொத்து சுக யோகங்கள் அமையும். அல்லது மனைவியின் சம்பாத்தியம் குடும்பத்திற்கு சி
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மிதுனம்.
23-9-2019- கடகம்.
26-9-2019- சிம்மம்.
28-9-2019- கன்னி.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திரம்- 3, 4, அஸ்தம்- 1.
செவ்வாய்: உத்திரம்- 1, 2.
புதன்: அஸ்தம்- 4, சித்திரை- 1, 2, 3.
குரு: கேட்டை- 3.
சுக்கிரன்: அஸ்தம்- 2, 3, 4.
சனி: மூலம்- 4, பூராடம்- 1.
ராகு: திருவாதிரை- 4.
கேது: பூராடம்- 2.
கிரக மாற்றம்:
25-9-2019- துலா புதன்.
26-9-2019- கன்னிச் செவ்வாய்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 5-ஆம் இடத்தில் திரிகோணமாக இருக்கிறார். அவருக்கு வீடுகொடுத்த சூரியன் சாரத்திலும் இருக்கிறார் (உத்திரம்). பாக்கியாதிபதி குரு 8-ல் மறைந்திருந்தாலும் செவ்வாயின் 4-ஆம் பார்வையைப் பெறுவதால், குருவுக்கு மறைவு தோஷம் விலகும். எனவே உங்களுடைய எண்ணங்களும் திட்டங்களும் நூற்றுக்கு நூறு நிறைவேறும். "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்ற குறளின்படி, பாக்கியாதிபதி 8-ல் மறைவதால், தெய்வ அனுகூலம் கைகூடத் தாமதமானாலும், உங்களுடைய விடாமுயற்சியும், வைராக்கியமும் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். அதற்கு உதாரணம் விசுவாமித்திரர்தான். பலமுறை தவமிருந்து விடாமுயற் சியினாலும், வைராக்கியத்தாலும் பிரம்மரிஷியானார். 10-க்குடைய சனி 9-ல் நிற்பது தர்மகர் மாதிபதி யோகமாகும். எனவே குலதெய்வ வழிபாடும், இஷ்டதெய்வ வழிபாடும் உங்களை வழிநடத்தி வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்லும். 9-ல் சனி, கேது, ராகு சம்பந்தம் இருப்பதால் தகப்பனார் அல்லது தந்தைவழியினர் அல்லது பூர்வீகச் சொத்து பிரச்சினைகள் சிலருக்கு வருத்தம் ஏற்படுத்தலாம்.
பரிகாரம்: பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமியை வழிபடவும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 5-ல் நீசம். என்றாலும் அவருக்கு வீடுகொடுத்த புதன் அங்கு ஆட்சிபெறுவதால் சுக்கிரனுக்கு நீசபங்க ராஜயோகம். ராசிநாதன் நீசமடைவது மைனஸ். அவர் 6-ஆமிடத்து அதிபதி என்பதால், ப்ளஸ் பாயின்ட். போட்டி, பொறாமை, எதிரி, கடன், நோய், வைத்தியச்செலவு ஆகிய 6-ஆமிடத்துப் பலன்கள் எல்லாம் விட்டு விலகும்; கெட்டுப்போகும். அதுதான் உங்களுக்கு ப்ளஸ் பாயின்ட். மேலும் ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடந்தாலும், சனிக்கு வீடுகொடுத்த குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். எனவே, அட்டமத்துச்சனியின் வேகம் தணியும். அத்துடன் குருவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் குருவைப் பார்ப்பதால், திருமணத்தடை விலகும். திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணயோகம் கூடும். திருமணமானவர்கள் மனைவியின் ஆதரவும், மனைவிவழி உறவினர்களின் ஆதரவும் எதிர்பார்க்கலாம். ஜாதகரீதியாக யோகமிருந்தால் மனைவிமூலமாக சிலருக்கு சொத்து சுக யோகங்கள் அமையும். அல்லது மனைவியின் சம்பாத்தியம் குடும்பத்திற்கு சிறுசேமிப்பாக அமையும். இடமாற்றம் ஏற்பட இடமுண்டு.
பரிகாரம்: அட்டமத்துச்சனியின் வேகம் குறைய பைரவருக்கு மிளகு தீபமேற்றுங்கள்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசியில் ராகு நிற்பதும், அவரை சனி, கேது பார்ப்பதும் பிரச்சினைகள்தான். ஒரு பிரச்சினை முடிந்தவுடன் இன்னொரு பிரச்சினை கடல் அலைபோல வந்துவந்து மோதும். கௌரவப் போராட்டமும், கௌரவப் பிரச்சினையும் உங்கள் அமை தியைக் கெடுக்கும். ஆனந்தத்தைத் தடுக்கும். என்றாலும் ராசிநாதன் புதன் 4-ல் ஆட்சிபெறுவதாலும், தைரிய ஸ்தானத்தில் (3-ல்) செவ் வாய் பலம்பெற்று, அவருக்கு வீடுகொடுத்த சூரியன் ராசிநாதனோடு சம்பந்தப்படுவதாலும், இடியே விழுந்தாலும் இதயம் கலங்காத நிலையாக தைரியத்தோடு போராடி எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். உடன்பிறந்தார் வகையிலும் சில சங்கடங்களும் வருத்தங்களும் வந்துவிலகும். பொதுவாக ரத்தபந்த சொந்தம்வகையில் ஒருவழிப்பாதை மாதிரிதான் உங்கள் காரியங்கள் அமையும். 7-ல் சனி, கேது இருப்பதால், பருவ வயதுடையவர்களுக்கு (ஆண்களுக்கும் பெண்களுக்கும்) திருமணம் தாமதமாகலாம்; தடைப்படலாம். களஸ்திரகாரகன் சுக்கிரன் நீசம் என்பதால்- அவரை சனி பார்ப்பதால், ஒருசிலர் கலப்புத் திருமணம், காதல் திருமணம் செய்யநேரும்.
பரிகாரம்: இருபாலரும் காமோகர்ஷண ஹோமமும், பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும், ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும் செய்துகொண்டால் திருமணக் குழப்பம் மாறும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 9-க்குடைய குரு 5-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 5-ம், 9-ம் திரிகோண ஸ்தானங்கள். அத்துடன் 9-க்குடைய குருவை 10-க்குடைய செவ்வாய் 4-ஆம் பார்வை பார்ப்பதால், தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. 7-க்குடைய சனி, களஸ்திரகாரகன் சுக்கிரனைப் பார்ப்பதால், கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் ஆதாயமும் அனுகூலமும் எதிர்பார்க்கலாம். சிலசமயம் நெய்க்குத் தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒருவருக்கொருவர் ஆதாரமாகவும், அன்யோன்யமாகவும் இருக்கலாம். ஒருசிலருக்குத் தொழில்துறையில் திருப்பங்கள் ஏற்பட்டாலும், அது மிகமிக முன்னேற்றமான திருப்பங்களாக ஏற்றுக்கொள்ளலாம். 7-க்குடைய சனி தன் ஸ்தானத்துக்கு 12-லும், ராசிக்கு 6-ல் மறைவதாலும், கேது- ராகு சம்பந்தம் பெறுவதாலும் ஒருசிலருக்கு மனைவியின் உடல்நிலையில் அல்லது கணவரின் உடல்நிலையில் சுகவீனம் காணப்பட்டாலும், பாதிப்புக்கு இடமில்லாதபடி அன்றாடக் காரியங்களை கவனிக்கலாம்.
பரிகாரம்: பிரதோஷ வழிபாடும், சித்தர்களின் ஜீவசமாதி வழிபாடும் நல்லது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 2-ல் சுயசாரம் பெறுகிறார். ஜென்ம ராசியில் நிற்கும் செவ்வாயும் சூரியன் சாரம் பெறுகிறார். வாரக்கடைசியில் செவ்வாய் கன்னி ராசிக்கு மாறுவார். 5-க்குடைய குரு 4-ல் கேந்திரம் பெற்று 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால், உங்களுடைய முயற்சிகளும், செயல்களும், காரியங்களும் தங்குதடையின்றி நிறைவேறும். வேலை, உத்தியோகம், தொழில்துறையில் "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடியமாதிரி, எல்லாம் நிறைவாக செயல்படும். குரு 8-க்குடையவர் என்பதால், சிலருக்கு தொழில் மாற்றம் அல்லது உத்தியோக மாற்றம் ஏற்பட இடமுண்டு. அந்த மாற்றம் முன்னேற்றமான மாற்றமாகவும் அமையும். அல்லது பூமி, வீடு, வாகன வகையிலும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். 6-க்குடையவர் சனி என்பதால், மேற்படித் தேவைகளுக்காக கடன் வாங்கும் சூழ்நிலையும் அமையும். எளிய தவணைமுறையில் திட்டங்கள் கைகூடும். 5-ஆம் இடம் புத்திர ஸ்தானம். அங்கு சனி, கேது, ராகு சம்பந்தம் ஏற்படுவதாலும், 5-க்குடையவரும் புத்திரகாரகனுமான குரு 5-க்கு 12-ல் மறைவதாலும், சிலருக்கு புத்திரபாக்கியம் தாமதப்படலாம்.
பரிகாரம்: கும்பகோணம்- குடவாசல் அருகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபடவும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் கன்னியில் ஆட்சிபெறுகிறார். அவருடன் 2, 9-க்குடைய சுக்கிரன் நீசமாக இருந்தாலும் நீசபங்கம் அடைகிறார். விரயாதிபதி சூரியன் ஜென்ம ராசியில் அமர்கிறார். இவர்களை சனி பார்க்கிறார். சிலருக்கு தேக ஆரோக்கியத்தில் பிரச்சினைகள், சிலருக்கு தொழில்துறையில் பிரச்சினைகள் அல்லது வேலை, உத்தியோகத்தில் பிரச்சினைகள். பூமி, வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட 4-ஆம் பாவத்திலும் பிரச்சினைகள் எல்லாம் இருந்தாலும் 9-க்குடைய சுக்கிரனும், 10-க்குடைய புதனும் இணைவதால், தர்மகர்மாதிபதி யோகம் ஏற்பட்டு உங்களை வழிநடத்தும். அதனால் உங்களுடைய எண்ணங்களும், திட்டங்களும் தடையின்றி நிறைவேறும். ஜென்ம ராசியை 6-க்குடைய சனி பார்ப்பதாலும், 10-ல் ராகு- கேது சம்பந்தப்படுவதாலும் சில காரியங்கள் திட்டமிட்டபடி உடனுக்குடன் நடக்கலாம். சில காரியங்கள் தடை, தாமதமாகலாம். மொத்தத்தில் தோல்விக்குக்கு இடமில்லை. நினைத்ததை நிறைவேற்றலாம். உங்களுக்கு உறுதுணையாக மனைவி, மக்கள், குடும்பத்தார் இருப்பதால் வெற்றி நிச்சயம்.
பரிகாரம்: வடக்குப் பார்த்த அம் மனுக்கு ராகு காலத்தில் நெய் தீபமேற்றி வழிபடவும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 12-ல் மறைவு, நீசம். என்றாலும் அவருக்கு வீடுகொடுத்த புதன் ஆட்சிபெறுவதால், நீசபங்க ராஜயோகமாகிறார். ராசிநாதன் நீசம், மறைவு என்பதால், சில எண்ணங்களும், காரியங்களும் தடைப்படும்; தாமதப்படலாம். அதேசமயம் சுக்கிரன் 8-க்குடையவர் என்பதால், தாமதப்பட்டாலும் நூற்றுக்கு நூறு அனுகூலமாக எல்லாம் நிறைவேறும். ஏலச்சீட்டு போடுகிறவர்கள் இடையில் எடுத்தால் நஷ்டம் ஏற்படும். கடைசியில் எடுத்தால் கட்டிய பணத்திற்குமேல் லாபத்தோடு பணம் பெறலாம். அதுபோல உங்கள் முயற்சிகளும், காரியங்களும் தாமதப்பட்டு, தடைப்பட்டு இறுதியில் நிறைவேறுவதால், லாபமும் நன்மையுமாக அமையும். 9-ல் ராகு நிற்க, அவரை சனி, கேது பார்ப்பதால், தெய்வ வழிபாடு, நித்திய பூஜை, குலதெய்வ வழிபாடு போன்றவற்றில் குழப்பங்களும் தடைகளும் ஏற்படலாம். சிலருக்கு தீட்டு முதலிலிய காரியங்களால் நித்திய வழிபாட்டுக்குத் தடை ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டில் விளக்கேற்ற முடியாமல் போனாலும்கூட பூசலார் நாயனார்மாதிரி மானச பூஜை செய்துகொள்ளலாம்.
பரிகாரம்: இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் பிள்ளையாருக்கு மட்டும் எப்போதும் தீட்டு இல்லை; வழிபடலாம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 10-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். ஜென்ம ராசியில் குரு இருக்கிறார். அவர் 2, 5-க்குடையவர். 5-ஆமிடம், 7-ஆமிடம், 9-ஆமிடங்களையும் பார்க்கிறார். குரு பலத்தாலும், ராசிநாதன் செவ்வாய் பலத் தாலும் ஏழரைச்சனியின் பிடியிலிலிருந்து உங்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கும். ஒரு முறை தேவேந்திரன் மகனுக்கு திருமணம் செய்வதற்கு குருவும், மற்றவர்களும் முகூர்த்த நாள் பார்த்தார்கள். அப்போது, குரு பார்வை எந்த லக்னத்துக்கும் சுபப்பார்வையாக அமை யாமல் தடுமாறியபோது சுக்கிரன் "நீங்கள் இருக்கும் இடமே சுபலக்னம்தானே! அதையே அமைத்துவிடுங்கள்' என்றாராம்- அதாவது குரு பார்வைக்கும் பலம். குரு இருக்கும் இடத் துக்கும் பலம். அந்த விதிப்படி உங்கள் ஜென்ம ராசியில் குரு இருப்பதால், உங்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். ஏழரைச்சனியின் பாதிப்பும் விலகும். 2-ல் கேது, 8-ல் ராகு என்ற தோஷமும் மாறும். ஞானசம்பந்தப் பெருமான் பாடியமாதிரி நவகோளும் ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல என்று திருப்திப்படலாம்.
பரிகாரம்: ஏழரைச்சனியின் தாக்கம் குறைய காலபைரவருக்கு மிளகு தீபமேற்றலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. அதேபோல ஜென்மக் கேதுவும், சப்தம ராகுவும் நடக்கிறது. ராசிநாதன் குருவும் 12-ல் மறைவு. வசதி வாய்ப்பு, உணவு, உடை, உறைவிடம், தொழில், வேலை, சம்பாத்தியம் ஆகியவற்றுக்குக் குறைவில்லை என்றாலும், ஏதோ ஒரு கவலை மனதை வாட்டும். சிலருக்கு ஆரோக்கியத்தில் பிரச்சினை. சிலருக்கு வேலைப்பளுவால் பிரச்சினை. சிலருக்கு ஒரு நாளில் இரண்டுமுறை அலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய நிலை மாறி, மாதக்கணக்கில் உறவுகளோடு பேசமுடியாத நிலை. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினையும் கவலைகளும் மனசந்தோஷத்தைக் கெடுத்தாலும், 9-க்குடைய சூரியனும், 10-க்குடைய புதனும் 10-ல் ஒன்றுகூடி இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் அமைகிறது. அந்த யோகம் கவலை களை மறந்து, கடமைகளைக் குறைவற நிறை வேற்றுகிறமாதிரி கிரகங்கள் அனுகூலம் புரியும். மனச்சோர்வான நேரத்தில் தொலைக் காட்சியில் சிரிப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்து கவலைகளை மறப்பதுபோல புத்துணர்வு ஏற்படும்.
பரிகாரம்: ஜென்மச்சனியின் தாக்கம் குறைய அனுமனையும் விநாயகரையும் வழிபடலாம்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைகிறார். அவருடன் கேது, ராகு சம்பந்தம். பொதுவாக ராகு, கேது, சனி, செவ்வாய் இவர்கள் சம்பந்தம் இருந்தாலே பிரச்சினைகள்தான். குதிரை கீழே தள்ளி, குழியையும் பறித்ததாம் என்று சொல்வதுபோல, ஒதுங்கிப் போனாலும் பிரச்சினைகள் துரத்திவந்து தொல்லைப்படுத்தும்; சந்தோஷத்தைக் கெடுக்கும். பொது இடத்தில் அகப்பட்டுக் கொண்ட திருடரை, போவோரும் வருவோரும், சம்பந்தப்படாதவர்களும் தர்ம அடி கொடுப்பதுபோல, நீங்கள் நல்லதே செய்தாலும் பொல்லாப்பாக மாறும். குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் அன்பாகப் பேசினாலும் வம்பாக முடியும். பேசினாலும் குற்றம், பேசாமல் இருந்தாலும் குற்றம் என்று சங்கடப்படுத்தும். இதற்குக் காரணம் ஏழரைச்சனியா? 2-ஆம் இடத்தைப் பார்க்கும் சனி, செவ்வாயா? 5, 10-க்குடைய சுக்கிரன் நீச ராசியில் இருப்பதா? செவ்வாய் 8-ல் மறைவதா என்று புரியாத புதிராக இருக்கும்; குழப்பமாக இருக்கும்.
பரிகாரம்: நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று வருவதை ஏற்றுப் பொறுமையாக இருப்பதே பரிகாரம். வேறு பரிகாரம் தேவையில்லை.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 2-க்குடைய குரு 10-ல் நின்று 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். மதிப்பு, மரியாதை கௌரவம், செல்வாக்கு ஆகியவற்றுக்குக் குறைவில்லை. அன்றாடத் தேவைகளுக்கும் வசதிகளுக்கும் குறை வில்லை. நேரத்திற்கு சாப்பாடு, நிம்மதியான உறக்கம். எந்தக் காரியத்திலும் தோல்விக்கு இடமில்லை. எல்லாம் இருந்தும் மனதில் அமைதியில்லை. ஆனந்தம் இல்லை. எதைச் செய்தாலும் மயக்கமா? தயக்கமா? மனதிலே குழப்பமா என்று திரைப்படத்தில் பாடிய மாதிரி தவிப்பு. இதற்குக் காரணம் 5-லுள்ள ராகு. அவரைப் பார்க்கும் சனி, கேது. 5-க்குடைய புதன் 8-ல் மறைவு. வசதிவாய்ப் புகள் எல்லாமிருந்தும், பெண் பிள்ளை களுக்குச் செய்யவேண்டிய கல்யாணம் காட்சி செய்யமுடியவில்லை. படித்துமுடித்த பையன்களுக்கு நல்ல வேலையில்லை. சம்பாத்தியமில்லை. தேவைகளை எல்லாம் நிறைவேற்றியும்கூட குடும்பத்தில் அமைதி, ஆனந்தம், கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை, ஒத்துழைப்பு இல்லை. என்ன காரணம் என்பதும் புரியவில்லை.
பரிகாரம்: பூர்வபுண்ணிய தோஷம்தான் எல்லாவற்றுக்கும் காரணம். பித்ரு சாப தோஷநிவர்த்தி செய்துகொள்ளவும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். குருவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் 6-ல் மறைந் தாலும் குருவையும் பார்க்கிறார். ராசியையும் பார்க்கிறார். 9-க்குடைய செவ்வாய் 10-க்குடைய குருவைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். ஆகவே, வாழ்க்கையில் எவ்வளவு சங்கடங்கள் ஏற்பட்டாலும், பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் சமாளித்து, தடையில்லாமல் நினைத்ததை நிறைவேற்றுகிற நேரம் கூடிவருகிறது. கருதிய காரியங்கள் கைகூடும். எண்ணியவை ஈடேறும். 10-ல் சனி, கேது-ராகு சம்பந்தம் ஏற்படுவதால், அவசரமாக வெளியில் புறப்படும் போது மழைபெய்து பயணத்தை நிறுத்துவதுபோல காரியங்கள் தேக்கமாகின்றன. தடைகளும் குறுக்கீடுகளும் ஒருபுறம் இருந் தாலும், அவற்றைப் பொருட் படுத்தாமல் தன்னம்பிக்கையும் வைராக்கியமும் உங்களை வழிநடத்தும். அந்த விடாமுயற்சி உங்களுக்கு வெற்றிவாய்ப்பினைத் தரும். தூறலிலிலும் போகக்கூடாது; தும்மலிலிலும் போகக்கூடாது என்று சகுனத்தடையாகச் சொன்னாலும், காத்திருந்து தடை விலகியவுடன் தொடரவேண்டும்.
பரிகாரம்: குரு, தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.