ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- துலாம்.

23-12-2019- விருச்சிகம்.

25-12-2019- தனுசு.

27-12-2019- மகரம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: மூலம்- 2, 3, 4.

செவ்வாய்: விசாகம்- 2, 3, 4.

புதன்: மூலம்- 1, 2, 3, 4, பூராடம்- 1.

குரு: மூலம்- 4.

சுக்கிரன்: உத்திராடம்- 3, திருவோணம்- 1, 2.

சனி: பூராடம்- 2.

ராகு: திருவாதிரை- 3, 2.

கேது: பூராடம்- 1, மூலம்- 4.

கிரக மாற்றம்:

குரு அஸ்தமனம்.

26-12-2019- சனி அஸ்தமனம்.

28-12-2019- விருச்சிகச் செவ்வாய்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிக்கு 9-ல் தனுசு ராசியில் ஆறு கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. வார ஆரம்பம்முதல் கடைசிவரை ஐந்து கிரகச் சேர்க்கைதான். 25-12-2019 முதல் 27-12-2019 வரை அவர்களுடன் சந்திரன் வந்து சேரும்போது ஆறு கிரகச் சேர்க்கை யாகிறது. மேஷ ராசிக்கு 9-ல்- திரிகோணத்தில் இவர்கள் கூடுவதால், உங்களுக்கு மிகுந்த நன்மையே ஏற்படும். இது மேஷ ராசிக் காரர்களுக்கு மட்டுமல்ல; மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் நன்மையே உண்டாக்கும். 5-ஆமிடமும், 9-ஆமிடமும் திரிகோண ஸ்தானங்களாகும். "அஞ்சு ஒன்பதுக்கதிபர் பாபர் சுபரானாலும் பொன் போன்ற நன்மையே புரிவார்' என்பது "சந்திர காவிய' விதியாகும். மேலும் மேஷ ராசிக்கும் மேஷ லக்னத்துக்கும் 9-க்குடைய குருவும் 10-க்குடைய சனியும் 9-ல் இணைவது தர்மகர்மாதிபதி யோகமாகும். 5-க்குரிய சூரியன் திரிகோணாதிபதியாவார். அவரும் 9-ல் குருவோடு கூடுவது சிறப்பு. இரண்டு திரிகோணாதிபதிகள் சேர்க்கை உங்களுக்கு குருவருளையும் திருவருளையும் வாரிவாரி வழங்கப்போகிறது. அத்து டன் செவ்வாயும் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப் பது சிறப்பு. காலங்கடந்து, தாமதப்பட்ட திருமணத் தடைகள் எல்லாம் விலகி யோடி ஆண்- பெண் இரு பாலாருக்கும் திருமண யோகம் கூடிவரும். திருமண மான தம்பதிகளுக்கு ஆண் வாரிசும், பெண் வாரிசும் என்று புத்திர யோகம் அமையும். இதற்காக வேறு எந்தப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை. காலம் கனிந்துவிட்டது. கருதியவை கைகூடும். கஷ்டங்கள் எல்லாம் மறைந்துவிடும். இஷ்டப்படியே எல்லாம் சிறந்துவிடும். இன்னல்களும் இடையூறுகளும் பறந்துவிடும்.

Advertisment

பரிகாரம்: இஷ்டதெய்வ, குலதெய்வ வழிபாடு போதுமானது. அஷ்டலட்சுமி வழிபாடு அஷ்ட ஐஸ்வர்யங்களை அருளும்!

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏற்கெனவே அஷ்டமச்சனி நடக்கிறது. அத்துடன் இப்போது ஆறு கிரகச் சேர்க்கையும் கூடுகிறது. அதனால் உங்களுக்கு இந்தச் சேர்க்கை ஒரு சோதனைக் களமாக மாறும்; வேதனைக் களமாக அமையும். அதேசமயம் இந்த ஆறு கிரகச் சேர்க்கை கூட்டணியில் அகப்படாமல், ராசிநாதன் சுக்கிரன் மட்டும் 9-ல்- மகரத் தில் தனித்திருப்பது உங்களுக்கு ஒரு பிளஸ் பாயின்டுதான். அதாவது "கழுவின மீனில் நழுவின மீன்' என்பதுபோல அதிர்ஷ்டவச மாகத் தப்பிக்கலாம். ஜனன ஜாதகத்தில் திரிகோணாதிபதிகளின் சம்பந்தப்பட்ட தசாபுக்திகள் நடந்தால்- எந்த ஆபத்தும் உங்களை அணுகாது. மாடியில் இருப்பவனை நோக்கி கீழே இருப்பவன் கல்லை விட்டெறிந்த கதை யாகி- எறிந்தவர் மேலேயே கல் விழும்! ஆனாலும் 8-ல் உள்ள ஆறு கிரகச் சேர்க்கை ஏதோ ஒரு வகையில் உங்களை சோதிக்க லாம் அல்லது பாதிக்கலாம். அதேசமயம் 7, 12-க்குடைய செவ்வாய் 6-ல் மறைந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்றமாதிரி உங்களுக்கு யோகம் செய்யலாம். உங்களின் வாழ்க்கைத்துணை (கணவரானால் மனைவி யும், மனைவியானால் கணவரும்) உங்களுக்கு உறுதுணையாக அமைந்து, உங்கள்மேல் எந்த ஆபத்தும் அணுகவிடாமல் காப்பாற்றலாம். திருமணமாகாதவர்களுக்கு பெற்றோர் அல்லது உடன்பிறப்பு அல்லது நண்பர்கள் மெய்க்காப்பாளராக அமைந்து பாதுகாப்புத் தரலாம். புராணத்தில் ஒரு அசுரனை வெல்ல கிருஷ்ண பகவானுக்கு பாமா துணையாக இருந்தாராம். அதுமாதிரி உங்களுக்கும் ஒரு நல்ல துணை வல்லமையாக விளங்கும். சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படலாம். ஜாதகத் தில் யோக தசாபுக்திகள் நடந்தால் அந்தப் பெயர்ச்சி பேரின்பப் பெயர்ச்சியாகவே அமையும். சொந்த வீடு, வாகனம், பதவி உயர்வு என மேன்மையாகத் திகழும்.

பரிகாரம்: அட்டமச்சனி பாதிப்பு விலக அவரவர் வயதுடன் ஒரு எண்ணிக்கை சேர்த்து, அந்த எண்ணிக்கை அளவு மிளகை சிவப்புத் துணியில் பொட்டலம் கட்டி காலபைரவர் சந்நிதியில் சனிக்கிழமை நெய் தீபமேற்றவும்.

மிதுனம்

Advertisment

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர் பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 7-ல் கேது சாரம் பெறுகிறார். அவருக்கு சாரம் கொடுத்த கேதுவும், வீடுகொடுத்த குருவும் அங்கேயே இருக்கிறார்கள். மேலும் 9-க்கு டைய சனியும், 10-க்குடைய குருவும் 7-ல் சேர்க்கை. அது தர்மகர்மாதிபதி யோகம் எனப்படும். எந்த ஒரு ஜாதகத்திலும் தர்மகர்மாதிபதி சேர்க்கையோ, பரிவர்த்தனை யோகமோ அமைந்துவிட்டால், அந்த ஜாதகர் அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்புக்கு ஆளாவார் என்று அர்த்தம். தேர்தல் களத்தில் எல்லா போட்டியாளர்களும் வாபஸ் பெற்றுக் கொள்ள, ஒருவர் மட்டுமே வெற்றி பெறுவதுபோல. இந்த இரு தர்மகர்மாதி பதிகளும் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார்கள். ராசிநாதனோடு சேர்க்கை யாகவும் இருக்கிறார்கள். அதனால் ஜென்ம ராகுவின் தோஷம் முழுமையாக விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வும், மேலதிகாரி களின் பாராட்டும் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கு முன்னேற்றமும், லாபமும், அனுகூலமும் உண்டாகும். வாட்டிவதைத்த போட்டியாளர்கள் எல்லாம் "துண்டைக் காணோம் துணியைக் காணோம்' என்று ஓடிவிடுவார்கள். வேலையற்றவர்களுக்கு நல்ல வேலையும், வேலையில் இருப்போருக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் உண்டாகும். தேக சுகம் நன்றாக இருக்கும்.

பரிகாரம்: ஜென்ம ராகு அனுகூலமாக அமைய ராகு- கேதுவை வழிபடவும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 6-ஆமிடத்தில் ஆறு கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. 6-ஆமிடம் என்பது போட்டி, பொறாமை, கடன், எதிரி ஆகியவற்றைக் குறிப்பிடும் இடம். என்றாலும் தொழில் ஸ்தானமாகிய 10-ஆமிடத்திற்கு அது 9-ஆமிடமான பாக்கிய ஸ்தானமாகும். எனவே வாழ்க்கையிலும், தொழிலிலும் தோல்விக்கு இடமில்லை. வெற்றி முகம்தான். மேலும் 9-க்குடைய குரு 10-ஆமிடத்தைப் பார்க்கிறார். அதுவும் தர்மகர்மாதிபதி யோகமாகும். தர்மஸ்தானம் என்பது 9. கர்மஸ்தானம் என்பது 10. 9- திரிகோணம். 10- கேந்திரம். திரிகோணமும், கேந்திரமும் ஒன்று சேர்ந்தால் ராஜயோகமாகிறது. ஆகவே, உங்களுக்கு ராஜயோகம் உண்டாகும். குருவருளும் திருவருளும் பெருகும். எந்த வொரு ராசிக்கும், லக்னத்திற்கும் திரி கோணாதிபத்தியமும், கேந்திராதிபத்தியமும் அடையும் கிரகங்கள் அந்த ராசி அல்லது லக்னத்திற்கு ராஜயோகாதிபதிகள் எனப் படும். எனவே 6-ஆமிடத்தில் ஆறு கிரகச் சேர்க்கை ஏற்படும் என்பதற்காக நீங்கள் கலங்க வேண்டாம்; தயங்க வேண்டாம்; மயங்க வேண்டாம். கவியரசர் எழுதிய மாதிரி "மயக்கமா கலக்கமா வாழ்க்கையில் நடுக்கமா?' சாதனையும் வைராக்கியமும் இருப்பதால் உங்கள் வேதனை களை விரட்டி சோதனையில் ஜெயித்து விடலாம்.

பரிகாரம்: சித்தர்களின் ஜீவசமாதியை வழிபட்டு சிறப்புகள் அடையலாம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

சிம்ம ராசிக்கு 5-ஆமிடத் தில் ஆறு கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. 5-ஆமிடம்- மனது, திட்டம், மக்கள், புத்தி, செயல் ஆகியவற்றைக் குறிக்குமிடம். இங்கு அந்த ஆறு கிரகச் சேர்க்கை உங்களை வழிநடத்தி, உங்கள் எண்ணங்களை ஈடேற்றும்; லட்சியங்களை வெற்றியடையச் செய்யும்; விருப்பங்களை நிறைவேற்றும். எதிரிகளை உதிரிகளாக்கிவிடும். குருவருளும் திருவருளும் பரிபூரணமாக உங்களை வழிநடத்தும். அதற்குக் காரணம் 9-க்குடைய செவ்வாய் 10-ஆமிடத்தை 8-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். 9- திரிகோண ஸ்தானம். 10- கேந்திர ஸ்தானம். ஏற்கெனவே கூறியபடி, திரிகோணமும் கேந்திரமும் ஒன்று கூடும்போது யோகம்தான். திரிகோணம் லட்சுமி ஸ்தானம். கேந்திரம் விஷ்ணு ஸ்தானம். அதிர்ஷ்டவசமாக அடையும் யோகம் திரி கோணம். முயற்சியின் பலனாக அடையும் நன்மை கேந்திரம். அதிர்ஷ்டம் அது இஷ்ட மாக வரும். ஆனால் முயற்சி எப்போதும் ஏமாற் றாது. முயற்சிக்கேற்ற பலன் உண்டு. அதனால் தான் வள்ளுவப் பெருந்தகை "தெய்வத்தாலா காது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக்கூலி தரும்' என்றார். தெளிவாகச் சொன்னால் கேந்தி ரம் என்பது செய்த வேலைக்கேற்ற கூலி. திரி கோணம் என்பது கூலியோடு சேரும் போனஸ்.

பரிகாரம்: ஞாயிறுதோறும் சூரிய வழிபாடு உத்தமம்.

tt

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிக்கு 4-ல் ஆறு கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. அவர்கள் 10-ஆமிடத்தைப் பார்க்கிறார்கள். 4-ஆமிடமும், 10-ஆமிடமும் கேந்திர ஸ்தானங்களாகும். ஏற்கெனவே சிம்ம ராசியில் எழுதியதுபோல கேந்திரம் என்பது முயற்சி ஸ்தானம். ஆகவே உங்களுடைய முயற்சிக்கேற்ற பலன் கிடைப்பது உறுதி. 10-ல் உள்ள ராகுவும் அதைப் பிரதிபலிக்கச் செய்யும். உங்கள் விருப்பப்படி எல்லாம் நிறைவேறும். எல்லாம் என்றால்- நியாயமான விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். பொருளாதாரம் சீராக இருக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் அமையும். தொழிலதிபர்கள் தொழிலில் நிலவும் தொய்வுகளை அகற்றி உய்வடையலாம். அரசு ஊழியர்கள் சக ஊழியர்களின் அன்பிற்கும் ஆதரவுக்கும் ஆளாகி அனுகூலம் பெறலாம். மேலதிகாரிகளின் பாராட்டு களுக்கும் ஆளாகலாம். 10-ல் உள்ள ராகு தொழில்துறையில் படிப்படியாக முனனேற் றங்களை ஏற்படுத்தி, கடன்களையெல்லாம் நிவர்த்திசெய்வார். ஒருசிலருக்கு பழைய கடன் அடைபடும். புதிய கடன் உருவாகும். அதே சமயம் 6-க்குடையவர் 6-ஆமிடத்தையே பார்ப்ப தால், கடன் வாங்கி கடனைக் கொடுப்பதைக் கைவிடவேண்டும். கடன் வாங்கி கடனைக் கொடுப்பவரும் மரம் ஏறிக் கைவிட்டவரும் ஒன்று என்பார்கள்.

பரிகாரம்: கும்பகோணம் அருகில் திருச்சேறை சென்று கடன் நிவர்த்தீஸ்வரரை வழிபடவும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 4-ல் அமர்ந்து, 10-ஆமிடத்தையே பார்க்கிறார். ஜென்ம ராசியில் 2, 7-க்குடைய செவ்வாய் அமர்ந்திருக்கிறார். வாரக்கடைசியில் 28-ஆம் தேதிதான் செவ்வாய் மாற்றம். துலா ராசிக்கு 3-ஆமிடத்தில் ஆறு கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. துலா ராசிக்காரர்கள் இந்த ஆறு கிரகச் சேர்க்கையால் ஓரளவு ராஜயோகத்தை அடையப்போவது உறுதி. 9-ல் ராகு இருப்பதால் மேலும் அவர் சுயசாரம் பெறுவதால் ஆன்மிக நாட்டமும் ஈடுபாடும் அதிகமாகும். ஒருசிலர் குலதெய்வ வழிபாடு செய்யலாம். அது சம்பந்த மான பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம். தர்மப் பரிபாலன நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளலாம். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், ஊதிய உயர்வு போன்ற நன்மைகள் உண்டா கும். ராசிநாதன் சுக்கிரன் 4-ல் இருப்பதாலும், அவரை பூமிகாரகன் செவ்வாய் பார்ப்ப தாலும் சிலருக்கு பூமி, வீடு, வாகன யோகம் ஏற்படும். வாடகை வீட்டில் இருப்போர் ஒத்தி வீட்டுக்குப் போகலாம். ஒத்திவீட்டில் இருப்போர் சொந்தவீட்டு முயற்சியில் இறங்கலாம்.

பரிகாரம்: பொன்னம ராவதி வழி செவலூர் சென்று பூமிநாத சுவாமியையும், அருப்புக்கோட்டை அருகே யுள்ள திருச்சுழி பூமிநாதரை யும் வழிபடலாம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிக்கு 2-ஆமிடத்தில் ஆறு கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. நியாயமாக சந்திரன் நீங்கலாக, ஐந்து கிரகச் சேர்க்கைதான் அமைகிறது. டிசம்பர் 25 முதல் 27 வரைதான்- சந்திரன் சேருகிறபோதுதான் ஆறு கிரகச் சேர்க்கை. இந்த கிரகச் சேர்க்கை உங்களுக்கு மிகச்சிறப்பாக அமையும். தொழில், பொருளா தாரம், குடும்ப வாழ்க்கை எல்லாவற்றிலும் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு போட்டி, பொறாமைகள் மறைந்து முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். அரசியல் தலைவர்களுக்கு செல்வாக்கு பெருகும். மக்கள் ஆதரவு பெருகும். 8-ல் உள்ள ராகு பூர்வீக சொத்துப் பிரச்சினைகளில் மாற்றங்களையும், முன்னேற் றங்களையும் ஏற்படுத்தலாம். (8-ஆமிடம் என்பது 9-ஆமிடத்துக்கு 12-ஆமிடம்). 9-ஆமி டத்தை சுக்கிரனும் பார்க்கிறார். பயன்படாத சொத்துகளை நல்ல லாபத் தோடு விற்பனைசெய்து, பயன்படும் வகையில் பரிவர்த்தனை செய்துகொள்ள லாம். 2-ஆமிடத்தில் ஆறு கிரகச் சேர்க்கை என்பதால், வரவேண்டிய வரவு வசூலாகும்.

பரிகாரம்: சொர்ணா கர்ஷண பைரவரை வழிபட லாம். சொர்ணாகர்ஷண பைரவ மந்திரத்தைப் பாராயணம் செய்யலாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

உங்கள் ராசியில்தான் ஆறு கிரகச் சேர்க்கை ஏற்படு கிறது. 9-க்குடைய சூரியனும், 10-க்குடைய புதனும் ஜென்ம ராசியில் இணைவதோடு, அவர்களுக்கு வீடுகொடுத்த குருவும் அங்கு ஆட்சியாக இருக்கிறார். எனவே தர்மகர்மாதிபதி யோகம் அமைவதால், உங்களுக்கு எல்லாவிதமான முன்னேற்றங் களும் அமையும். 7-ல் ராகு இருப்பது நாகதோஷம் என்றாலும், ஆறு கிரகச் சேர்க்கையால் தோஷம் நிவர்த்தியாகிறது. அதாவது ஆறு கிரகங்களும் 7-ஆமிடத்தைப் பார்க்கிறார்கள். 5-க்குடைய செவ்வாய் 5-ஆமிடத்தையே பார்ப்பதால் புத்திரயோகம் உண்டாகும். குடும்பம் ஓரிடம், தான் வேறிடம் என்று பணியில் இருப்பவர்களுக்கு, இப்போது எல்லாரும் ஓரிடமாக இணைந்து செயல்படுத்தலாம். திருமணப் பேச்சுகள் கைகூடும். மனைவி அல்லது கணவர்வகையில் வருமானம் பெருகும். சேமிப்பு உருவாகும். வேலையில் பணி உயர்வு, ஊதிய உயர்வு எதிர்பார்க்கலாம். கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் நன்மை உண்டாகும். 11-க்குடையவர் 2-ல் இருப்பதால் தனம் பெருகும். லாபம் பெருகும்.

பரிகாரம்: திருப்பத்தூர் அருகில் பெரிச்சியூர் சென்று ஒற்றை சனீஸ்வரரை வழிபடவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிக்கு 12-ல் ஆறு கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. 12 என்பது விரயஸ்தானம். இதனால் செலவுகளும் விரயங்களும் அதிகமாக ஏற்படும். ஜனன ஜாதகத்தில் 5, 9 என்ற திரிகோணாதிபதிகள் சம்பந்தமான தசாபுக்தி கள் நடந்தாலும் அல்லது 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானாதிபதிகள் சம்பந்தம் பெற்றாலும் சுபமங்களச் செலவுகளாக ஏற்படும். 6, 8, 12-க்குடைய தசாபுக்திகள் நடந்தால் வீண்விரயம், ஏமாற்றம், இழப்புகள் போன்ற செலவுகள் ஏற்படும். சுபமங்கள செலவுகளாக மாறுவதற்கு சொர்ணாகர்ஷண பைரவரை வழிபடலாம். அவர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். (காலபைரவரை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது.) ஏழரைச்சனி நடப்பதால் வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாட்டு வேலை ஏற்படும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். சிலர் மனைவி, மக்களைப் பிரிந்து வெளியூரில் தங்கி வேலைபார்க்கும் அமைப்பு உருவாகும். பிள்ளைகளின் படிப்புக் காக அவர்கள் இருந்த இடத்திலேயே இருப்பார் கள். அதாவது மனைவி, மக்கள் இருந்தும் அருகில் இல்லாமல் தனியாக இருக்கும் நிலை!

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் ஆஞ்சனேயரை வழிபடலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிக்கு 11-ஆமிடத்தில் ஆறு கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. 11-ஆமிடம் ஜெயஸ்தானம், வெற்றி ஸ்தானம். ஆகவே, நீங்கள் முயற்சி செய்யும் எல்லாக் காரியங்களிலும் வெற்றித் திருமகளின் ஆசிர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கும். வில்லங்கம், விவகாரம், வழக்குகள் எல்லாவற்றிலும் ஜெயம் உண்டாகும். செய்யும் தொழிலிலில் லாபம் பெருகும். தொழில்துறையில் கிளைகளை உருவாக்கி லாபத்தைப் பெருக்க லாம். பொருளாதாரம் சீராக விளங்கும். பிரிந்து சென்ற சொந்தங்கள் எல்லாம் மீண்டும் வந்துசேரும். மாணவர்கள் உயர்கல்விக்குரிய வழிகளைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் வர்த்தகத்தைப் பெருக்கலாம். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கிளை களைத் தோற்றுவிக்கலாம். அரசுத்துறை ஊழி யர்களுக்கும், தனியார்துறை ஊழியர்களுக்கும் திருப்தியான சூழல் அமையும். அரசு வேலைக்குப் பரீட்சை எழுதுபவர்களுக்கும், முயற்சி செய்பவர் களுக்கும் வெற்றிச்செய்தி கிட்டும். தேக ஆரோக் கியத்தில் தெளிவுண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். கனவுகளும் திட்டங்களும் கைகூடும்.

பரிகாரம்: நவகிரக வழிபாடு உத்தமம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிக்கு 10-ஆமிடத்தில் ஆறு கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. இந்த ஆறு கிரகச் சேர்க்கையால் பயனும் பலனும் அடைகிற வர்களில் மீன ராசிக்காரர்களும் ஒருவர். மேஷம், சிம்மம், தனுசு, ஆகிய ராசிக்காரர்களுக்கும் நல்ல யோகங்களை உருவாக்கும். நீண்டநாள் திட்டங்கள் நிறைவேறும். கஷ்டங்களுக்கும் கவலைகளுக்கும் நிவர்த்தி உண்டாகும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகமும், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர யோகமும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை யோகமும் ஏற்படும். வேலையில் இருப்போருக்கும், சொந்தத்தொழில் செய்கிற வர்களுக்கும் இந்த ஆறு கிரகச் சேர்க்கை பேராதரவாகவும், சீரான பலனாகவும் அமையும். நோய்த் தொல்லையிலிலிருந்து விடுபடலாம். லட்சியக் கனவுகள் நிறைவேறும். தாராளமான வரவு- செலவுகளும் பொருளாதாரப் புழக்க மும் காணப்படும். ஒருசிலருக்கு கடன் ஏற்பட் டாலும், அது சுபக்கடனாக- தொல்லையில்லாத கடனாக அமையும். ஒருசிலர் லட்சக்கணக் கிலும், கோடிக்கணக்கிலும் திட்டமிட்டு தொழில்துறையில் இறங்கலாம்.

பரிகாரம்: பேரளம் அருகில் திருமீயச்சூர் சென்று லலிலிதாம்பிகை அம்மனை வழிபடவும்.