ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவிதத் துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் மேஷ ராசி வாசகர்களே, உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால், உங்களுடைய செயல்கள் எல்லாம் பரிபூரண வெற்றியைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந் திருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துகளால் கிடைக்கவேண்டிய அனுகூலம் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளால் பொருளாதார நிலை உயர்வடையும். கடன்களும் படிப்படியாகக் குறையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இருக்காது. உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதி களைக் காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர்மூலமாக நல்ல செய்தி உங்களைத் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சஷ்டியன்று முருகனை வழிபடுவது, முருகனுக்குரிய ஸ்தோத் திரங்கள் சொல்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 27.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
எந்தக் கஷ்டத்தையும் தாங்கக்கூடிய, சகிப்புத்தன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி வாசகர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியான நற்பலன்களைத் தரும் அமைப்பாகும். தொழில், வியாபார ரீதியாக மேன்மை, புதிய வாய்ப்புகளை அடையும் யோகம் உண்டாகும். போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சூரியன் 2-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு, மந்தநிலை தோன்றும் என்றாலும், அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படமுடியும். கணவன்- மனைவி இடையே வாக்குவாதங்களைத் தவிர்த்தால் ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நல்ல வரன் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத் தையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிவன் மற்றும் அம்மனை வழிபடுவது சிறப்பு.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 25.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசைத்துறைகளில் சிறந்து விளங்கும் மிதுன ராசி வாசகர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். சூரியன், ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவது, உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும், எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு மன அமைதி குறையலாம். பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற் றால் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். சனி பகவானை மனதார வழிபட்டால் சகல நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 26, 27.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும், அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் கடக ராசி வாசகர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சிறுசிறு நெருக்கடிகள் இருந்தாலும், நெருங்கியவர்களின் ஆதரவு ஆறுதலைத் தரும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள்வழியில் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் அனுசரித்துச் செல்வது உத்தமம். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள்மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சூரியன், ராகு 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் தேவையற்றவழியில் கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உடல் ஆரோக் கியத்தில் அக்கறை செலுத்துவது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தள்ளிவைப்பது மிகச்சிறப்பு. கூட்டாளி களையும், தொழிலாளர்களையும் அனுசரித்துச் செல்வதும், கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவதும் நல்லது. உத்தியோகத்தில் பளு கூடினாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். சிவன், விஷ்ணு வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 25.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி யாவும் உடையவராகவும், சூதுவாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் சிம்ம ராசி வாசகர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், புதன், ராகு சேர்க்கை பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால், நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். செய்ய நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். கணவன்- மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். புத்திரர்கள்வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம். செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால், வாகனங் களில் செல்கிறபோது நிதானத்துடன் செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். பெரிய தொகை ஈடுபடுத்தும்போது மட்டும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருக்கும் மறைமுக எதிர்ப்புகள் குறைந்து, ஏற்றம்மிகுந்த பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர்ப் பயணங்களால் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிட்டும். தட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 26, 27.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
எவ்வளவுதான் கற்றறிந்திருந்தாலும் எந்தவித அகம்பாவமும் இன்றி தாம் கற்றதைப் பிறருக்கும் போதிக்கும் கன்னி ராசி வாசகர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால், பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். தொழில், பொருளாதார ரீதியான ஏற்றம்மிகுந்த பலன்கள் ஏற்படும். முயற்சிகளில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் அபிவிருத்தி பெருகும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்துடன் சேரும் வாய்ப்பு அமையும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால், கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான நிலை இருந்தாலும் அன்றாடப்பணிகளைச் செய்ய முடியும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். முருகன் மற்றும் அம்மனை வழிபடுவது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 23, 24, 25.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும், கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் துலா ராசி வாசகர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 6-ல் செவ்வாய், 9-ல் புதன் சஞ்சரிப் பதால், கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் விலகி ஏற்றம்மிகுந்த பலன்களை அடைவீர்கள். முயற்சிகளில் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருக்கும் போட்டி, பொறாமை மறைந்து வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருக்கும் சின்னச்சின்ன பிரச்சினைகள் நீங்கி அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள், உடன்பிறந்தவர்களால் அனுகூலப் பலன் கிட்டும். சிறப்பான தனவரவால் வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். குரு, சனி 4-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்துப் பணிகளையும் சிறப்பாகச் செய்துமுடிக்க முடியும். மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் இல்லத்தில் இனிய செய்திகள் வந்து சேரும்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 25, 26, 27.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்கமுடியாத அளவிற்குப் பேசும் விருச்சிக ராசி வாசகர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்பதால், சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். முயற்சிகளில் இருக்கும் தடைகள் விலகி ஏற்றங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். புதிய சொத்துகள் வாங்கும் விஷயத்தில் சற்று நிதானம் தேவை. ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது உத்தமம். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிப்பதும் நற்பலனைத் தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளிடம் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்து வது நல்லது. விஷ்ணு, தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27.
சந்திராஷ்டமம்: 21-6-2020 அதிகாலை 00.35 மணிமுதல் 23-6-2020 காலை 7.35 மணி வரை.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறுவயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்மசிந்தனையும் கொண்ட தனுசு ராசி வாசகர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 7-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் பிரச்சினைகள் மேலோங்கும். நெருங்கியவர்களால் நிம்மதிக்குறைவுகள், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். கணவன்- மனை வியிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் விட்டுக்கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உற்றார் உறவினர் களை அனுசரித்துச் செல்வது உத்தமம். பணவரவு தேவைகேற்றபடி அமைந்து தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும், ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையைத் தவிர்ப்பது உத்தமம். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் சற்று சிக்கல்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தநிலை இருந்தாலும் லாபம் குறையாது. கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கிடைக்கவேண்டிய புதிய வாய்ப்புகள் சற்று தாமதமாகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணி நிமித்தமாக சிறு சிறு ஆரோக்கியக்குறைவுகள் ஏற்படலாம். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல் குறையும். முருகனை வழிபடுவது, சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 27.
சந்திராஷ்டமம்: 23-6-2020 காலை 7.35 மணி முதல் 25-6-2020 பகல் 12.25 மணிவரை.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச் சுவை உணர்வுடனும் கள்ளங்கபடமற்ற வெகுளித்தனமாக செயல்படும் மகர ராசி வாசகர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் முயற்சியில் வெற்றி, எல்லாவகையிலும் வளர்ச்சிகள் உண்டாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும். வெளித்தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் தேடிவரும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக்குறைவுகள் ஏற்பட் டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருக்கும் பிரச்சினைகள் விலகும். பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடிவரும். விரோதிகளும் நண்பர்களாக மாறுவார்கள். தெய்வ காரியங்களுக்காக சிறுதொகை செலவிடுவீர்கள். உத்தியோகஸ் தர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமை பாராட்டப்படும். சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேய ரையும் வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 23, 24.
சந்திராஷ்டமம்: 25-6-2020 பகல் 12.25 மணி முதல் 27-6-2020 மாலை 3.50 மணிவரை.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
தம்முடைய சொந்தப் பொருட்களையும் பிறருக்கு தானமளிக்கக்கூடிய பரந்த நோக்கம் கொண்ட கும்ப ராசி வாசகர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் உண்டாகும். செவ்வாய் 2-ல் இருப்பதால் பேச்சில் மட்டும் சற்றுப் பொறுமையுடன் இருந்தால், ஏற்படக்கூடிய சிறுசிறு பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். முயற்சியில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றி பெறுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் நிலவினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. சிறப்பான பணவர வால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை அடைவதில் சிறு தடை, தாமதங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபம் பெறமுடியும். சிவன், முருகனை வழிபடுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 25, 26.
சந்திராஷ்டமம்: 27-6-2020 மாலை 3.50 மணிமுதல் 29-6-2020 மாலை 6.25 மணிவரை.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள காலநேரம் பார்க்காமல் உழைக்கும் மீன ராசி வாசகர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால், எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. குரு, சனி 11-ல் இருப்பதால் பணவரவுகள் சற்று சாதகமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். முடிந்தவரை வீண்செலவுகளைத் தவிர்ப்பது, ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பதன்மூலம் ஓரளவு அனுகூலப்பலன் கிட்டும். அசையும், அசையா சொத்துகளால் லாபம் உண்டாகும். கடன்கள் குறையும். எடுக்கும் காரியங்களில் சிறிய தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும் என்றாலும், கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் எதிர்பார்க்கும் லாபங்களை அடையலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்குப் பணிச்சுமை அதிகரிப்பால் ஆரோக்கியப் பாதிப்புகள் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வதன்மூலம் அனுகூலங்கள் உண்டாகும். சிவனை வழிபடுவது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27.