இந்த வார ராசிபலன் 20-10-2019 முதல் 26-10-2019 வரை

/idhalgal/balajothidam/weeks-zodiac-20-10-2019-26-10-2019

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மிதுனம்.

21-10-2019- கடகம்.

23-10-2019- சிம்மம்.

25-10-2019- கன்னி.

கிரக பாதசாரம்:

சூரியன்: சித்திரை- 3, 4, சுவாதி- 1.

செவ்வாய்: அஸ்தம்- 2, 3.

புதன்(வ): சுவாதி- 4, 3.

குரு: கேட்டை- 4.

சுக்கிரன்: சுவாதி- 4, விசாகம்- 1, 2, 3.

சனி: பூராடம்- 1.

ராகு: திருவாதிரை- 4, 3.

கேது: பூராடம்- 2, 1.

கிரக மாற்றம்:

21-10-2019- புதன் அஸ்தமனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந்தாலும், 8-ஆம் பார்வையாக மேஷ ராசியைப் பார்க்கிறார். தன் ராசியை ராசிநாதனே பார்ப்பது சிறப்பு. அதனால் மறைவு தோஷம் விலகும். எந்த ஒரு ராசிநாதனும் லக்னநாதனும் அல்லது பாவாதிபதியும் தன் வீட்டைத் தானே பார்ப்பது மிகமிக விசேஷம். ஆட்சி, உச்சம்பெற்ற கிரகப் பலனைவிட இந்தப் பார்வைக்கு பலம் அதிகம்! அதாவது பருத்திச் செடி புடவையாகக் காய்த்தமாதிரி! அதனால் உங்கள் பெருமை, செல்வாக்கு, கீர்த்தி, கௌரவம் எல்லாம் சிறப்பாகத் திகழும். தேர்தல் போட்டிக்களத்தில் போட்டியே இல்லாமல் ஏகமனதாகத் தேர்ந்தெடுப்பதற்குச் சமம்! 6-ஆம் இடம் என்பது போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறு, கடன், நோய், பிணி, பீடை, வைத்தியச்செலவுகளைக் குறிக்கும் இடம். அங்கு ராசிநாதனே இருப்பது மேற்கண்ட துர்ப்பலன்களையெல்லாம் அடித்து விரட்டுவதுபோல! அவர் 4-க்குடைய சந்திரன் சாரம் (அஸ்தம்). செவ்வாய் பூமிகாரகன். 4-ஆம் இடம் பூமி, வீடு, வாகன யோகத்தைக் குறிக்கும் இடம். அதனால் இடம், வீடு, மனை போன்ற யோகம் கைகூடும். வாகன யோகமும் அமையும். மேற்கண்ட சுபகாரியங்களுக்காகக் கடன் வாங்கலாம். குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும். விளம்பரங்களில் "0'- பெர்சன்ட் வட்டி என்றும், சுலபத்தவணை (ஈஸி ஈ.எம்.ஐ.) என்றும் காணப்படுவதுபோல அந்த சலுகையும் வசதியும் அமையும். பாக்கிய விரயாதிபதியான குரு ராசிக்கு 8-ல் மறைகிறார்- விரயாதிபதி விரயஸ்தானத் தைப் பார்க்கிறார். அதனால் பூர்வீகச் சொத்துகளில் பரிவர்த்தனை யோகமோ, மாற்றுத் திட்டங்களோ செயல்படலாம். 10-க்குடைய சனி 9-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் அமைந்தாலும், கேது- ராகு சம்பந்தம் பெறுவதாலும், 9-க்குடையவர் 8-ல் மறைவதாலும் தகப்பனார்வகை ரத்தபந்த சொந்தங்கள் உங்களுக்குத் தொல்லைகள் தரலாம். "வாழுகிற வீட்டில் வன்குரங்கு நுழைந்தாற்போல'- "இராமாயணத்தில் கூனி சதித் திட்டம் தீட்டியதுபோல' உங்கள் ஒற்றுமைக்கு வத்தி வைத்து முதுகில் குத்தலாம். செவ்வாய் 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால், அப்படிப்பட்ட கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வேண்டும். இதனால் உறவில் பிளவு ஏற்படவிடாமல் தடுக்கலாம்.

பரிகாரம்: திருவாரூரில் மடப்புரம் என்ற பகுதியில் தட்சிணாமூர்த்தி மடத்தில் தட்சிணாமூர்த்தி ஜீவசமாதி இருக்கிறது. வியாழக்கிழமை சென்று வழிபட்டால் குரு 8-ல் மறைந்த தோஷம் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைவென்றாலும் துலா ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார். ஆட்சி, உச்சம் பெற்ற கிரகத்துக்கு மறைவு தோஷம் இல்லை- விதிவிலக்கு! அதனால் உங்களுடைய முயற்சிகளிலும், செயல்களிலும் குறுக்கீடுகளும், தடைகளும், இடையூறுகளும் ஏற்பட்டாலும் தளர்ச்சி இருக்காது; தோல்வி இருக்காது! ரோடுகளில் வேகத்தடை (ஸ்பீடு பிரேக்) இருப்பதுபோல தாமதம் ஏற்படலாமேதவிர, பயணம் தடைப் படாது. பாலம் வேலை நடக்கும்போது மாற்று வழியில் (டேக் டைவர்ஷன்) போக்குவரத்தைத் திருப்பியனுப்புவதுபோல மாற்றுவழி அமைக் கப்படும். 8, 11-க்குடைய குரு ராசியைப் பார்ப் பதால், சிலசமயம் நேரடியான வெற்றி கிடைக்கும். சிலசமயம் நடுவரால் மறுஉத்தரவு பெற்று பந்தாட்டத்தில் கோல் போட்டு ஜெயிக்க லாம். 11-ஆம் இடம் வெற்றி ஸ்தானம். 8-ஆம் இடம் அதிர்ஷ்ட ஸ்தானம்! அதனால் அதிர்ஷ்ட வசமான, எதிர்பாராத வெற்றி அடையும் நிலை யாகும். 7-க்குடைய செவ்வாய் 5-ல் இருப் பதும், 2-ல் ராகு நிற்பதும், 8-ல் சனி, கேது சேர்வதும், களஸ்திர காரகன் சுக்கிரன் 6-ல் மறைவதும் களஸ்திர தோஷம் அல்லது தாமதத் திருமணத்தை உருவாக்கலாம். தாமதத் திருமணம், திருமணத்தில் குழப்பம், கலப்புத் திருமணம், காதல் திருமணம் போன்ற பலன் களைத் தரலாம். திருமண மானவர்களுக்குள் பிரிவு, பிளவு உண்டாகலாம். ஜாதக ரீதியாக யோகமான தசா புக்திகள் நடந்தால் தொழில், பதவி, வேலை சம்பந்தமாக மனைவி, மக்கள், குடும் பத்தைவிட்டுப் பிரிந்து சிலர் வேறிடம் மாறும் சூழ்நிலை ஏற்படலாம். திருமண மாகாதவர்கள் வெளியூர் வாசம், வெளிநாடு போகும் சூழ்நிலை உருவாகும். 2-ஆம் இடத்து ராகுவும், 8-ஆம் இடத்து சனி- கேதுவும் கூட்டுக் குடும்பத்

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மிதுனம்.

21-10-2019- கடகம்.

23-10-2019- சிம்மம்.

25-10-2019- கன்னி.

கிரக பாதசாரம்:

சூரியன்: சித்திரை- 3, 4, சுவாதி- 1.

செவ்வாய்: அஸ்தம்- 2, 3.

புதன்(வ): சுவாதி- 4, 3.

குரு: கேட்டை- 4.

சுக்கிரன்: சுவாதி- 4, விசாகம்- 1, 2, 3.

சனி: பூராடம்- 1.

ராகு: திருவாதிரை- 4, 3.

கேது: பூராடம்- 2, 1.

கிரக மாற்றம்:

21-10-2019- புதன் அஸ்தமனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந்தாலும், 8-ஆம் பார்வையாக மேஷ ராசியைப் பார்க்கிறார். தன் ராசியை ராசிநாதனே பார்ப்பது சிறப்பு. அதனால் மறைவு தோஷம் விலகும். எந்த ஒரு ராசிநாதனும் லக்னநாதனும் அல்லது பாவாதிபதியும் தன் வீட்டைத் தானே பார்ப்பது மிகமிக விசேஷம். ஆட்சி, உச்சம்பெற்ற கிரகப் பலனைவிட இந்தப் பார்வைக்கு பலம் அதிகம்! அதாவது பருத்திச் செடி புடவையாகக் காய்த்தமாதிரி! அதனால் உங்கள் பெருமை, செல்வாக்கு, கீர்த்தி, கௌரவம் எல்லாம் சிறப்பாகத் திகழும். தேர்தல் போட்டிக்களத்தில் போட்டியே இல்லாமல் ஏகமனதாகத் தேர்ந்தெடுப்பதற்குச் சமம்! 6-ஆம் இடம் என்பது போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறு, கடன், நோய், பிணி, பீடை, வைத்தியச்செலவுகளைக் குறிக்கும் இடம். அங்கு ராசிநாதனே இருப்பது மேற்கண்ட துர்ப்பலன்களையெல்லாம் அடித்து விரட்டுவதுபோல! அவர் 4-க்குடைய சந்திரன் சாரம் (அஸ்தம்). செவ்வாய் பூமிகாரகன். 4-ஆம் இடம் பூமி, வீடு, வாகன யோகத்தைக் குறிக்கும் இடம். அதனால் இடம், வீடு, மனை போன்ற யோகம் கைகூடும். வாகன யோகமும் அமையும். மேற்கண்ட சுபகாரியங்களுக்காகக் கடன் வாங்கலாம். குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும். விளம்பரங்களில் "0'- பெர்சன்ட் வட்டி என்றும், சுலபத்தவணை (ஈஸி ஈ.எம்.ஐ.) என்றும் காணப்படுவதுபோல அந்த சலுகையும் வசதியும் அமையும். பாக்கிய விரயாதிபதியான குரு ராசிக்கு 8-ல் மறைகிறார்- விரயாதிபதி விரயஸ்தானத் தைப் பார்க்கிறார். அதனால் பூர்வீகச் சொத்துகளில் பரிவர்த்தனை யோகமோ, மாற்றுத் திட்டங்களோ செயல்படலாம். 10-க்குடைய சனி 9-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் அமைந்தாலும், கேது- ராகு சம்பந்தம் பெறுவதாலும், 9-க்குடையவர் 8-ல் மறைவதாலும் தகப்பனார்வகை ரத்தபந்த சொந்தங்கள் உங்களுக்குத் தொல்லைகள் தரலாம். "வாழுகிற வீட்டில் வன்குரங்கு நுழைந்தாற்போல'- "இராமாயணத்தில் கூனி சதித் திட்டம் தீட்டியதுபோல' உங்கள் ஒற்றுமைக்கு வத்தி வைத்து முதுகில் குத்தலாம். செவ்வாய் 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால், அப்படிப்பட்ட கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வேண்டும். இதனால் உறவில் பிளவு ஏற்படவிடாமல் தடுக்கலாம்.

பரிகாரம்: திருவாரூரில் மடப்புரம் என்ற பகுதியில் தட்சிணாமூர்த்தி மடத்தில் தட்சிணாமூர்த்தி ஜீவசமாதி இருக்கிறது. வியாழக்கிழமை சென்று வழிபட்டால் குரு 8-ல் மறைந்த தோஷம் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைவென்றாலும் துலா ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார். ஆட்சி, உச்சம் பெற்ற கிரகத்துக்கு மறைவு தோஷம் இல்லை- விதிவிலக்கு! அதனால் உங்களுடைய முயற்சிகளிலும், செயல்களிலும் குறுக்கீடுகளும், தடைகளும், இடையூறுகளும் ஏற்பட்டாலும் தளர்ச்சி இருக்காது; தோல்வி இருக்காது! ரோடுகளில் வேகத்தடை (ஸ்பீடு பிரேக்) இருப்பதுபோல தாமதம் ஏற்படலாமேதவிர, பயணம் தடைப் படாது. பாலம் வேலை நடக்கும்போது மாற்று வழியில் (டேக் டைவர்ஷன்) போக்குவரத்தைத் திருப்பியனுப்புவதுபோல மாற்றுவழி அமைக் கப்படும். 8, 11-க்குடைய குரு ராசியைப் பார்ப் பதால், சிலசமயம் நேரடியான வெற்றி கிடைக்கும். சிலசமயம் நடுவரால் மறுஉத்தரவு பெற்று பந்தாட்டத்தில் கோல் போட்டு ஜெயிக்க லாம். 11-ஆம் இடம் வெற்றி ஸ்தானம். 8-ஆம் இடம் அதிர்ஷ்ட ஸ்தானம்! அதனால் அதிர்ஷ்ட வசமான, எதிர்பாராத வெற்றி அடையும் நிலை யாகும். 7-க்குடைய செவ்வாய் 5-ல் இருப் பதும், 2-ல் ராகு நிற்பதும், 8-ல் சனி, கேது சேர்வதும், களஸ்திர காரகன் சுக்கிரன் 6-ல் மறைவதும் களஸ்திர தோஷம் அல்லது தாமதத் திருமணத்தை உருவாக்கலாம். தாமதத் திருமணம், திருமணத்தில் குழப்பம், கலப்புத் திருமணம், காதல் திருமணம் போன்ற பலன் களைத் தரலாம். திருமண மானவர்களுக்குள் பிரிவு, பிளவு உண்டாகலாம். ஜாதக ரீதியாக யோகமான தசா புக்திகள் நடந்தால் தொழில், பதவி, வேலை சம்பந்தமாக மனைவி, மக்கள், குடும் பத்தைவிட்டுப் பிரிந்து சிலர் வேறிடம் மாறும் சூழ்நிலை ஏற்படலாம். திருமண மாகாதவர்கள் வெளியூர் வாசம், வெளிநாடு போகும் சூழ்நிலை உருவாகும். 2-ஆம் இடத்து ராகுவும், 8-ஆம் இடத்து சனி- கேதுவும் கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களைக் காரணமில்லாத வருத்தங்களினால் கருத்து வேறுபட்டுப் பிரிந்து போகச் செய்வார்கள். எது நடந்தாலும் அது ஒரு நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும், என்பது பகவத் கீதையின் சாரம்!

பரிகாரம்: திண்டிவனம்- புதுச்சேரி பாதையில் திருவக்கரையில் வக்ரகாளியம்மன் சந்நிதியும், குண்டலினி முனிவர் ஜீவசமாதியும் உள்ளன. அங்கு சென்று வழிபடுவது உத்தமம்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம். அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் அங்கு ஆட்சி! அவர்களுடன் 3-க்குடைய சூரியன் சம்பந்தம்! சூரியன் நீசம் என்றா லும், சுக்கிரன் ஆட்சிபெறுவதால் சுக்கிரன் நீசபங்க ராஜயோகம் அடைகிறார். 5-ஆம் இடம் மக்கள், மகிழ்ச்சி, எண்ணம், திட்டம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். புத்திரகாரகன் குரு 6-ல் மறைவது குற்றம் என்றாலும், அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய் ராசிக்கு கேந்திரம் பெறுவதால் மறைவு தோஷம் நீங்கி நிறைவுப் பலனாக மாறிவிடுகிறது. பொதுவாக எந்த ஒரு கிரகமும் 6, 8, 12-ல் மறைவு பெற்றால், அதற்கு வீடுகொடுத்த கிரகம் கேந்திரம்- திரிகோணம் ஏறினால், அந்த கிரகத்துக்கு மறைவு தோஷம் நீங்கும். எந்த ஒரு விதி இருந்தாலும், அதற்கு விதிவிலக்கென்று ஒன்றிருக்கும். உதாரணமாக, ஒருவழிப்பாதை (நோ என்ட்ரி) என்று இருந்தால், எல்லா வாகனங்களும் அதில் போவது சட்ட விரோதமானாலும் போலீஸ் வாகனம், தீயணைப்பு வாகனம், எமர்ஜென்ஸி ஆம்புலன்ஸ் வாகனம் போகலாம் என்பது விதிவிலக்காகும்! எனவே, குரு நல்ல ஆதிக்கம் பெற்றவரோ கெட்ட ஆதிக்கம் பெற்றவரோ, எப்படியிருந்தாலும் குரு- குருதான்! ஆசான்- ஆசான்தான்! அதனால்தான் "குரு பார்க்க கோடி தோஷம் போகும்' என்றும், குரு பார்க்க நன்மை என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே, 6-ஆம் இடத்து குருவால் உங்களுக்கு கேடு கெடுதிக்கு இடமில்லை. அதேசமயம் 7-க்கு டையவர் 6-ல் மறைவதாலும், 7-ல் சனி, கேது இருப் பதாலும் திருமணத்தடை அல்லது தாமதம் ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் குடும்பக் குழப்பம், பிரிவு, பிளவு என்ற பலன்களைச் சந்திக்கலாம். செவ்வாயும் சனியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதால், சிலருக்கு காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் நடக்கலாம். தசாபுக்திகளை அனுசரித்து மறுமண யோகமும் நடக்கலாம். அப்படி முறையற்ற காதலாக இருந்தால் காமோகர்ஷண ஹோமம் செய்யவேண்டும். திருமணத்தடை விலக ஆண்களுக்கு கந்தர்வராஜ ஹோமமும், பெண் களுக்கு பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ளவேண்டும்.

பரிகாரம்: 7-ல் உள்ள சனி, கேதுவின் தாக்கம் குறைய, சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீபமேற்றவேண்டும். அவரவர் வயதுடன் ஒன்றுசேர்த்து, அத்தனை எண்ணிக்கை மிளகை சிவப்புத்துணியில் பொட்டலமாகக் கட்டி நெய்யில் நனைத்து தீபமேற்றவேண்டும்.

fff

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 5-ல் குரு அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். கடக ராசிக்கு குரு 9-க்குடையவர்; திரிகோணாதிபதியாவார். அவர் மற்றொரு திரிகோணமான 5-ல் இருப்பது சிறப்பு. கேட்டை 4-ல்- நவாம் சத்தில் குரு மீனத்தில் ஆட்சி பெறுவார். திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம். கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம். அதிர்ஷ்டவசமாக பிரயாசை இல்லாமல் பலன் தருவது திரிகோணம். முயற்சியாலும் பிரயாசையாலும் பலன் கிடைப்பது கேந்திரம். ஒரு மனிதனின் முழு வெற்றிக்கும் யோகத் துக்கும் திரிகோணமும் வேண்டும்; கேந் திரமும் வேண்டும். இதை வள்ளுவப் பெருந் தகை "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்' என்பார். தெய் வத்தால் ஆகாதது என்று எதுவுமே இல்லை. அதேசமயம் முயற்சிக்கேற்ற பலன் கிட்டும். அதுதான் "தன்மெய்வருத்த' என்பதன் அர்த்தம்! முயற்சியில் சாதாரண முயற்சி, விடாமுயற்சி, பகீரத முயற்சி (கடின முயற்சி) என்று மூன்றுவகை உண்டு. சாதாரண முயற்சி எல்லாரும் செய்வது. ஒருகாலகட்டத்துக் குப்பிறகு சலிப்படைந்து, விரக்தியடைந்து, சோர்வடைந்து விட்டுவிடுவது. விடாமுயற்சி என்பது அடுத்தடுத்து நம்பிக்கையோடு செய்வது (பலன் அடையும்வரை செய்வது). கடின முயற்சி என்பது நம்பிக்கை தளராமல், சோதனை வந்தாலும் வேதனையடையாமல் சாதனைபுரிவது. பகீரதன் என்ற மன்னன் கடும் தவமிருந்து கங்கையை பூமிக்கு வரவழைத் தான். விசுவாமித்திரர் மீண்டும் மீண்டும் தவ மிருந்து பிரம்மரிஷிப் பட்டம் பெற்றார். ஆக, குரு 9-க்குடையவர் 5-ல் நின்று உங்கள் ராசியைப் பார்ப்பதால், தளர்ச்சியடையாத முயற்சி செய்து வெற்றிபெறுவீர்கள். விசுவாமித்திரரின் தவத்தைக் கலைக்க மேனகையும், இந்திராதி தேவர்களும் செய்த இடையூறுகளைப்போல 6-ஆம் இடத்து சனியும் கேதுவும் தடுத்தாலும், சோதனைகளையும் வேதனையையும் விரட்டி சாதனை படைக்கலாம். அதற்கான மனவுறுதியை யும் வைராக்கியத்தையும் ஐந்தாம் இடத்து குரு உங்களுக்குத் தருவது உறுதி! குருவுக்கு வீடுகொடுத்த செவ்வாயும் 3-ல் நின்று தைரியத் தைத் தருவார். சகோதரவகையிலும், நண்பர்கள் வகையிலும் உங்களுக்கு சகாயத்தையும் உதவியை யும் ஏற்படுத்துவார். அதனால் நன்மையும் லாபமும் எதிர்பார்க்கலாம்.

பரிகாரம்: மதுரை திருப்பரங்குன்றத்தில் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி ஜீவசமாதியும், சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதியும் உள்ளன. (இன்ஜினீயரிங் கல்லூரிப் பாதையில்). சென்று வழிபடலாம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 3-ல் மறைவு, நீசம் என்றாலும், அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் ஆட்சிபெறுவதால் சூரியனுக்கு நீசபங்க ராஜ யோகம் ஏற்படுகிறது. அதனால் உங்களுடைய செயல்களும் திட்டங்களும் முழுவெற்றி யடையும். செல்வாக்கும் கீர்த்தியும் மேலோங்கும். பெருமையும் பாராட்டும் உண்டாகும். 5-ல் சனியும் கேதுவும் நிற்க, ராகுவும் செவ்வாயும் பார்ப்பதால் பிள்ளைகள்வகையில் தொல்லை களும் வருத்தங்களும் உருவாகலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் புத்திர தோஷம் ஏற்பட இடமுண்டு. அப்படியிருந் தால் சந்தான பரமேஸ்வர ஹோமமும், சந்தான கோபால கிருஷ்ண ஹோமமும், சந்தான கணபதி ஹோமமும் செய்யவேண்டும். அத்துடன் கும்ப கோணம் அருகில் குடவாசல் வழி சேங்காலி புரம் சென்று தத்தாத்ரேயரையும் வழிப டலாம். கரு உருவான தாய்மார்கள் சுகப்பிர சவமாக திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமியை வழிபடலாம். வாழைத்தார் படைக் கலாம். தாயுமான சுவாமியை ஒரு வணிகரும் அவரின் மனைவியும் பக்தியோடு வழிபட்டனர். மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது, கணவர் வெளியூர் வணிகத்துக்குப் போய்விட்டார். போகும்போது மாமியாரிடம் துணைக்குப் போகும்படி சொல்லிச் சென்றார். மனைவியின் தாயார், மகள் வீட்டுக்கு வரும் போது காவேரியில் கரைபுரண்டு வெள்ளம் ஓடியது. படகுகூட போகமுடியாத வெள்ளம். வடகரையில் மாமியார் தங்கிவிட்டார். பெண்ணுக்கு பேறுகால நேரம் நெருங்கி விட்டது. கர்ப்பிணிப் பெண் தாயுமான சுவாமியை (மாதேஸ்வரரை) வேண்டி அழுதாள். உடனே சுவாமி பெண்ணின் தாயார் வடிவில் வந்து பெண்ணுக்குப் பேறுகாலம் பார்த்தார். அழகான ஆண் குழந்தை பிறந்தது. வெள்ளம் வடிந்ததும் பெண்ணின் தாயார் பரபரப்போடு வந்து மகளைப் பார்த்து "எப்போது பேறு காலம் ஆச்சு? என்ன குழந்தை, என்று வினவ, ""என்ன அதிசய மாகக் கேட்கிறாய்? நீதானே பேறுகாலம் பார்த் தாய்? என்று பதில் சொல்ல, எல்லாம் சுவாமியின் திருவிளையாடல் என்றுணர்ந்தார்கள். அதனால் தான் சுவாமிக்கு "தாயுமானவர்' என்று பெயர்.

பரிகாரம்: சென்னை- திருத்தணி பாதையில் திருவள்ளூரை அடுத்து ஆற்காடுகுப்பம் என்ற கிராமத்தில் அனுமந்த சுவாமி- ஜெயராம் சுவாமி ஜீவசமாதிகள் விளங்குகின்றன. அனுமந்த சுவாமி பூராட நட்சத்திரம். ஜெயராம் சுவாமி பூர நட்சத்திரம். குருபூஜை நடக்கும். வழிபடவும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசி அதிபன் புதன் 2-ல் ராகு சாரத்தில் இருக்கிறார். புதனுக்கு வீடுகொடுத்த சுக்கிரன் அவருடன் ஆட்சி பலமாகவும், 12-க்குடைய சூரியன் அவர்களுடன் நீசபங்க ராஜயோகமாகவும் சேர்க்கை! செல்வாக்கு, திறமை, பெருமை, கௌரவம் ஆகியவற்றுக்குக் குறைவில்லை. என்றாலும் ஜென்மச் செவ்வாய் 4-ல் உள்ள சனி- கேதுவைப் பார்க்க, சனியும் செவ்வாயைப் பார்க்கிறார். பொதுவாக சனியும் செவ்வாயும் சேர்ந்திருந்தாலும் அல்லது பார்த்துக்கொண்டாலும் கெடுபலனே நடக்கும்! "மந்தன் சேய் இருவரும் சேர்ந்திடவும் பார்த்திடவும் தீது' என்பது ஜோதிட "சந்திரகாவிய, விதி! செவ்வாயின் ராசியான மேஷத்தில் சனி நீசம். சனியின் ராசியான மகரத்தில் செவ்வாய் உச்சம்! இப்படி எதிர்மறையாக இருப்பது சிலசமயம் கெடுதல், சிலசமயம் நல்லது. அதாவது நெகட்டிவ்- பாசிட்டிவ்! அதாவது கிழக்கும்- மேற்கும், வடதுருவம்- தென்துருவம்போல! அட்டமாதிபதி செவ்வாய் ஜென்மத்தில் இருப்பதால், உங்கள் கற்பனைகளும் திட்டங்களும் எப்போதும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்! ஒரு திரைப்படத்தில் நாகேஷ் ஒரு திருமணத்துக்கு வருவார். மணமேடை அருகில் ஒரு குத்துவிளக்கு எரிந்துகொண்டிருக்கும். காற்றாடி காரணமாக அந்த விளக்கின் திரி ஆடிக்கொண்டிருக்கும். மேடையில் இருக்கும் திரைச்சீலை காற்றில் ஆடியாடி தீபத்தில் பட்டு எரிய, அந்தத்தீ மணமேடையில் பரவி மண்டபத்தையே எரித்துவிடுவதுபோல கற்பனைசெய்து அழத்தொடங்குவார். இப்படி வேண்டாத கற்பனையும், விபரீதக் கற்பனையும் உங்கள் மகிழ்ச்சியைக் குறைத்துவிடும்; மனநிறைவை மறைத்துவிடும். இதுதான் செவ்வாய்- சனி பார்த்துக்கொள்வதன் பலன்! அதற்குத் துணைபோவதுபோல 10-ஆம் இடத்து ராகுவும் செயல்படுவார். அதாவது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும்.

பரிகாரம்: சனி- செவ்வாய் பார்வை தோஷம் காரணமாக உடல்நலக்குறைவு, மனநலக்குறைவு, தொழில் முன்னேற்றத்தடை, போட்டி, பொறாமை, வில்லங்கம், விவகாரம் போன்ற பலன்களைச் சந்திக்கநேரிடும். கும்பகோணம் அருகில் நாச்சியார்கோவில்- பூந்தோட்டம்வழியில் கூந்தலூர் முருகன் கோவில் சென்று வழிபடவும். விவரங்களுக்கு செல்: 96886 77538-ல் பேசலாம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் தனது ராசியில் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் சூரியனும் புதனும் சம்பந்தம். சூரியன் நீசபங்கம். 2-ல் குரு பலம். 2-க்குடையவரும், 7-க்குடையவருமான செவ்வாய் 12-ல் மறைவு. துலா ராசிக்கு யோகாதிபதியான சனி 12-ல் உள்ள செவ்வாயைப் பார்க்க, செவ்வாய் 3-ல் உள்ள சனியைப் பார்க்கிறார். "மந்தன் சேய் இருவரும் சேர்ந்திடவும் தீது- பார்த்திடவும் தீது' என்பது "சந்திரகாவிய' விதி. அதாவது துலா ராசிக்கு 4, 5-க்குடையவர் சனி; செவ்வாய் 2, 7-க்குடையவர். அதனால் தாயார், தன் சுகம், கல்வி, பூமி, வீடு, வாகனம் ஆகிய 4-ஆம் இடத்துப் பலனையும்; பிள்ளைகள், மகிழ்ச்சி, எண்ணம், திட்டம் போன்ற 5-ஆம் இடத்துப் பலனையும்; வாக்கு, தனம், குடும்பம், பார்வை (நேத்திரம்), வித்தை என்ற 2-ஆம் இடத்துப் பலனையும்; களஸ்திரம், கணவர், திருமணம், உபதொழில் ஆகிய 7-ஆம் இடத்துப் பலனையும் பாதிக்கலாம். 3-ஆம் இடத்துச் சனியும் கேதுவும் நண்பர்கள், உடன்பிறப்புகள் வகையில் சலனங்களை உருவாக்கலாம். 9-ஆம் இடத்து ராகு தகப்பனார், பூர்வீகச்சொத்து போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அதேசமயம் 9-ஆம் இடத்து ராகு தெய்வ பக்தி, பூஜை வழிபாடு, ஆன்மிக சிந்தனைகளை உருவாக்கு வார். அதனால் மற்ற சங்கடங்களையெல்லாம் நீக்கி இங்கிதமாக்கிவிடலாம். பிரச்சினை இல்லாமல் யார் இருக்கிறார்கள்? ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. அவரவர் பிரச்சினைகளைத் தீர்க்கவே வழிகாண முடியாத நிலையில் அடுத்தவர் பிரச்சினைகளும் தலைச்சுமையாக அழுத்தும். ஒரு பழமொழி உண்டு. "கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனாளாம். அங்கு ரெண்டு கொடுமை ஜிங்கு சங்கா தங்கு தக்கா' என்று ஆடிக்கொண்டிருந்ததாம்.' ஒருசிலரின் அனுப வத்தில் ஏழரைச்சனியில்கூட இவ்வளவு பிரச்சினை இல்லையென்று சொல்லுமளவு பிரச்சினை அலைகள் வந்து வந்து மோதிச் செல்லும். எந்த துன்பமும் பிரச்சினையும் எப்போதும் தொடர்ந்து இருக்காது. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பிறகு மாறத்தானே வேண்டும்.

பரிகாரம்: சென்னை பூந்தமல்லிலியிலிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள சித்துக்காடு என்ற ஊரில் தாந்தீஸ்வரர் கோவிலும், ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோவிலும் உள்ளன. சென்று வழிபடலாம். தொடர்புக்கு; செல்: 93643 48700.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 11-ல் பலம்பெறுகிறார். பொதுவாக ராகு, கேது, செவ்வாய், சனி போன்ற குரூர கிரகங்களுக்கு 3, 6, 10, 11-ஆம் இடங்கள் அற்புதப்பலன் தரும் இடங்கள். அத்துடன் செவ்வாய், பாக்கியாதிபதியான சந்திரன் சாரம் பெறுகிறார். 2, 5-க்குடைய குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கிறார். எனவே குருவருளும் திருவருளும் பரிபூரண மாக இருந்து உங்களை வழிநடத்தும். ஜென்ம குரு 5-ஆமிடத்தையும் பார்க்கிறார்; 7-ஆமிடத்தையும் பார்க்கிறார். 5-க்குடையவரே 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் செயல்படும்; நிறைவேறும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் அனுகூலம், ஆதாயத்தை எதிர்பார்க்கலாம். 7-ஆம் இடத்துக்கு குரு அட்டமாதிபதி என்ப தாலும், 7-ஆம் இடத்துக்கு அட்டமத்தில் சனி இருப்பதாலும், ஜென்ம ராசிக்கு ஏழரைச்சனி இருப்பதாலும் இடமாற்றம் உண்டாகும். தொழில், வேலை ஆகியவற் றிலும் மாற்றங்களை எதிர்பார்க்க லாம். ஏழரைச்சனியின் கழிவு நேரம் ராசிநாதன் செவ்வாய் சனியைப் பார்ப்பதால், ஏழரைச்சனி பொங்கு சனியாகப் பொலிலிவைத் தரும்.

பரிகாரம்: திருப்பத்தூர் அருகில் பட்டமங்கலத்தில் அட்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் இருக்கிறது. அங்கு வியாழக்கிழமை சென்று வழி படவும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 12-ல் மறைந்தாலும், குருவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் ராசியைப் பார்க்கிறார். செவ்வாய் 5, 12-க்குடையவர். பிள்ளைகள்வகையில் நல்லவை நடக்கும். ஜென்மச்சனி நடப்பதால், தவிர்க்கமுடியாத பயணங்கள் ஏற்பட்டாலும் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். ஜென்ம கேது, சப்தம ராகுவால் ஒருசிலருக்கு அலைச்சல் ஏற்பட்டாலும், அந்த அலைச்சல் ஆனந்தமான அலைச் சலாக இருக்கும்; ஆதாயமான அலைச்சலாக வும் இருக்கும். சனியும் செவ்வாயும் ஒருவரை யொருவர் பார்த்துக்கொள்வதால் சுபமங்களச் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி யும், மனநிறைவும் ஏற்படலாம். கொடுக்கல்- வாங்கல் தாராளமாக இருக்கும். எதிர்கால இன்ப வாழ்க்கைக்கான சேமிப்புத் திட்டங் கள் கைகூடும். ஜென்மச்சனி பொங்கு சனியாகப் பொலிலிவைத் தரும். வாக்கு நாணயம் காப்பாற்றப் படும். மதிப்பும் மரியாதையும் செல்வாக்கும் உண்டாகும். வேலை செய்கிறவர்களுக்கு வேலையில் திருப்தியும் நிறைவும் ஏற்படுவ தோடு, பணி செய்யுமிடத்தில் பாராட்டுகளும் குவியும். தேக ஆரோக்கியத்தில் தெளிவும் முன்னேற்றமும் தெரியும். குரு கேந்திராதிபதி; செவ்வாய் திரிகோணாதிபதி. தேக சுகம், சௌக்கியம், பூமி, வீடு, மனை, வாகன யோக மெல்லாம் நன்றாக இருக்கும்.

பரிகாரம்: கண்டரமாணிக்கம் அருகில் பெரிச்சியூர் என்ற ஊரில் ஒற்றை சனீஸ்வரர் இருக்கிறார். சனியின் குருநாதர் பைரவரும் நவபாஷாண பைரவராக அருள்புரிகிறார். வழிபடவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைந் தாலும், சனியுடன் கேது- ராகு சம்பந்தம் பெறுவதாலும், செவ்வாய் பார்ப்பதாலும், குரு 11-ல் இருப்பதாலும் ஏழரைச்சனி விரயச்சனி சுபவிரயமாகவும், பொங்கு சனியாகவும் பலன்தரும். 4, 11-க்குடையவர் 9-ல் நின்று 4-ஆம் இடத்தையே பார்க்கிறார். எனவே பூமி, வீடு, வாகனம் போன்ற திட்டங்கள் எல்லாம் வெற்றியடையும். ஏற்கெனவே பழைய வாகனம் வைத்திருப்பவர்கள் அதைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கலாம். வாகனக்காரகன் சுக்கிரன் 4-ஆமிடத்தைப் பார்ப்பதால், வாகனவகையில் நற்பலன்கள் உண்டாகும். 9-க்குடைய புதனும், 10-க்குடைய சுக்கிரனும் ஒன்றுகூடி 10-ல் இருப் பதால் தர்மகர்மாதிபதி யோகம் செயல்படும். அவர்களுடன் அட்டமாதிபதி சூரியன் இருப் பது ஒரு தடையாக இருந்தாலும், 11-ஆம் இடத்து குரு தடைகளைத் தாண்டி வெற்றியை யும் லாபத்தையும் ஏற்படுத்துவார். காய்த்த மரத் தில்தான் கல்லைவிட்டு எறிவார்கள். அது மாதிரி வளமையான உங்கள் வாழ்க்கையில் திருஷ்டிப் பரிகாரமாக சில விபரீதப் பலன் களும் நடக்கலாம். அதற்கு ஜாதகரீதியான பரிகா ரங்களைத் தேடிக்கொள்ளுங்கள்.

பரிகாரம்: ஏழரைச்சனி பொங்குசனியாகத் தங்குதடையில்லாத பலன்களைத் தர வாடிப் பட்டி நெடுஞ்சாலையிலுள்ள நவமாருதி ஆஞ்சனேயர் கோவில் சென்று வழிபடவும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்கிறார். கேது- ராகு சம்பந்தம் பெறுகிறார்; செவ்வாய் பார்க்கிறார். சனி, ராகு- கேது, செவ்வாய் இவர்களுக்கு 3, 6, 10, 11-ஆம் இடங்கள் நல்ல இடங்கள்; யோகம் தரும் இடங்கள். 9-ல் சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கை இருப் பதால், குருவருளும் திருவருளும் பரிபூரண மாக செயல்படும். 2-ஆம் இடத்தை குருவும் செவ்வாயும் பார்ப்பதால், கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவுகளில் வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். தனகாரகனும், 2-க்குடையவரும் 2-ஆம் இடத்தையே பார்ப்பதால் தாராளமான வரவு- செலவுகளும், பணப் புழக்கமும் ஏற்படும். 11-ஆம் இடத்தில் இருக்கும் சனி, அவரைப் பார்க்கும் செவ்வாய் காரணமாக வழக்கு, விவகாரம், வியாஜ்ஜியங்களில் வெற்றி உண்டாகும். 7-க்குடைய சூரியன் நீசபங்க ராஜயோகமாக இருப்பதாலும் மனைவிவகையில் கணவருக்கும், கணவர்வகையில் மனைவிக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். சொத்து சுகங்களும் உண்டாகும். சிலர் சொந்த முயற்சியில் வீடு, மனை, பிளாட் யோகங்களைப் பெருக்கிக்கொள்ளலாம். வாகன யோகங்களை அடையலாம். 10-ல் உள்ள குரு தொழில் முயற்சியை உருவாக்குவார்.

பரிகாரம்: கடையநல்லூர் கிருஷ்ணா புரத்தில் ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சனேயர் கோவில் சென்று வழிபடவும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 10-க்குடைய குரு 9-ல் நிற்பது தர்மகர் மாதிபதி யோகம். 9-க்குடைய செவ்வாயும், 10-க்குடைய குருவும் உங்கள் ராசியைப் பார்ப் பதாலும் தர்மகர்மாதிபதி யோகம் உண்டா கிறது. 5-ஆம் இடத்தை குரு பார்ப்பதாலும் உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் எளிதாக ஈடேறும். கனவுகளும் திட்டங்களும் கைகூடும். சொல்வாக்கும், செல்வாக்கும் பெருகும். பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும். 4-ல் ராகு, 10-ல் சனி, கேது சம்பந்தம் இருப்பதால், பயணங்களும் அலைச்சல்களும் பயனுள்ளவை யாகவும், பலன் தருபவையாகவும் அமையும். 10-ல் உள்ள சனியையும், 10-ஆம் இடத்தையும் 9-க்குடைய செவ்வாய் பார்ப்பது தர்மகர் மாதிபதி யோகம். எனவே சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் 8-ல் மறைந்த தோஷம் விலகும். 4-ல் உள்ள ராகு; அவரைப் பார்க்கும் சனி, கேது ஒருசிலருக்கு ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்த லாம். இருந்தாலும் பாதிக்காது. புதிய முயற் சிகள் கைகூடும். தொழில் விருத்தியடையும். பொருளாதார வளர்ச்சியினால் மனத்தளர்ச்சி யும் கிளர்ச்சியும் மாறிவிடும். நண்பர்கள், நல்லோர்கள் நட்பு நலம் தரும்பலம்; தரும்.

பரிகாரம்: திருப்புனல்வாசல் அருகில் தீயத்தூர் சென்று சகஸ்ர லட்சுமீஸ்வரரை வழிபடவும். மகாலட்சுமி ஆயிரம் தாமரை மலர்களால் ஈசுவரனைப் பூஜை செய்த தலம். மகாசிவராத்திரி அன்று சிறப்புப் பூஜை நடக்கும்.

bala251019
இதையும் படியுங்கள்
Subscribe