Advertisment

இந்த வார ராசிபலன் 2-2-2020 முதல் 8-2-2020 வரை

/idhalgal/balajothidam/weeks-zodiac-2-2-2020-8-2-2020

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மேஷம்.

3-2-2020- ரிஷபம்.

5-2-2020- மிதுனம்.

7-2-2020- கடகம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: திருவாதிரை- 3, 4, அவிட்டம்- 1, 2.

செவ்வாய்: கேட்டை- 3, 4.

புதன்: அவிட்டம்- 4, சதயம்- 1, 2, 3.

குரு: பூராடம்- 3.

சுக்கிரன்: பூரட்டாதி- 3, 4, உத்திரட்டாதி- 1.

சனி: பூராடம்- 4.

ராகு: திருவாதிரை- 2.

கேது: மூலம்- 4.

கிரக மாற்றம்:

4-2-2020- மீனச் சுக்கிரன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைவு ஸ்தானத்தில் ஆட்சியாக இருக் கிறார். மறைவென்றாலும் ஆட்சியாக இருப் பதால், மறைவு தோஷமில்லை. எந்த ஒரு ஜாதகத்திலும் ராசிநாதனோ லக்னாதி பதியோ மறையக்கூடாது. அப்படி மறையும் கிரகம் ஆட்சி, உச்சம் பெற்றால் மறைவு தோஷம் விலகும். லக்னம் என்பது உங்கள் செயல்பாடுகளைக் குறிக்கும்; மதிப்பு, மரியாதை, கௌரவம், திறமை ஆகியவற்றை வெளிப்படுத்தும். உங்கள் முயற்சிகளிலும், செயல்களிலும் குறுக்கீடுகளும் தடைகளும் காணப்பட்டாலும் அவற்றைக் கடந்து முன்னேறமுடியும். அதேசமயம் குரு 9-ல் ஆட்சிபெற்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் நினைத்ததை நிறைவேற்றலாம். சிந்தித்த காரியங்களை சாதிக்கலாம். 9-க்குடைய குருவும், 10-க்குடைய சனியும் 9-ல் சேர்வதால் தர்மகர்மாதிபதி யோகம் அமைகிறது. அதனால் குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். குலதெய்வத்தின் அருளும், இஷ்ட தெய் வத்தின் அருளும் உங்களுக்குப் பரிபூரண மாக அமையும். வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திரபாக்கியம் போன்ற எல்லா சுகயோகங்களும் சுமுகமாக நடை பெறும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடக்கிறது. 2-ல் ராகு, 8-ல் கேது. "பகலிலில் பக்கம் பார்த்துப் பேசவும். இரவில் அதுவும் பேசாதே' என்பது பழமொழி. ஆகவே, வார்த்தையில் நிதானம் தேவை. குடும்பத்திலும் அமைதி தேவை. நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் காது கேளாதமாதிரியும், கண்கள் பார்க்காத மாதிரியும் நடந்து கொண்டு, மௌனமாக இருக்கவேண்டும். "மௌனம் கலக நாஸ்தி' என்பார்கள். 7, 12-க் குடைய செவ்வாய் ராசியைப் பார்க்கிறார். குரு மறைகிறார். சொல் லாததையெல்லாம் சொன்னதாக வம்பு, வழக்கு வரும். அதாவது நல்லது சொன்னாலும் பொல்லாப்பாக முடியும். உங்கள் பணியில் மிகுந்த கவனத்துடன் செயல் படவேண்டும். உங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள உறவினர்களை நம்ப வேண்டாம். நண்பர் களையும், மற்றவர்களை யும் நம்பிச் செயல் படுங்கள். ஒரு முயற் சிக்குப் பலமுயற்சிகள் செய்தால் எதிர்பார்ப் புகள் ஈடேறும். குறிப் பாக உங்கள் சமூகத் தாரைத்தவிர வெளி சமூகத்தினரும் அல்லது முஸ்லிலிம், கிறிஸ்துவ இனத்தவர்களும் உங்களுக்கு ஆதரவாகவும், அனுகூலமாகவும் இருப்பார்கள். எந்த ஒரு செயலிலிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

tt

Advertisment

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் மு

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மேஷம்.

3-2-2020- ரிஷபம்.

5-2-2020- மிதுனம்.

7-2-2020- கடகம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: திருவாதிரை- 3, 4, அவிட்டம்- 1, 2.

செவ்வாய்: கேட்டை- 3, 4.

புதன்: அவிட்டம்- 4, சதயம்- 1, 2, 3.

குரு: பூராடம்- 3.

சுக்கிரன்: பூரட்டாதி- 3, 4, உத்திரட்டாதி- 1.

சனி: பூராடம்- 4.

ராகு: திருவாதிரை- 2.

கேது: மூலம்- 4.

கிரக மாற்றம்:

4-2-2020- மீனச் சுக்கிரன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைவு ஸ்தானத்தில் ஆட்சியாக இருக் கிறார். மறைவென்றாலும் ஆட்சியாக இருப் பதால், மறைவு தோஷமில்லை. எந்த ஒரு ஜாதகத்திலும் ராசிநாதனோ லக்னாதி பதியோ மறையக்கூடாது. அப்படி மறையும் கிரகம் ஆட்சி, உச்சம் பெற்றால் மறைவு தோஷம் விலகும். லக்னம் என்பது உங்கள் செயல்பாடுகளைக் குறிக்கும்; மதிப்பு, மரியாதை, கௌரவம், திறமை ஆகியவற்றை வெளிப்படுத்தும். உங்கள் முயற்சிகளிலும், செயல்களிலும் குறுக்கீடுகளும் தடைகளும் காணப்பட்டாலும் அவற்றைக் கடந்து முன்னேறமுடியும். அதேசமயம் குரு 9-ல் ஆட்சிபெற்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் நினைத்ததை நிறைவேற்றலாம். சிந்தித்த காரியங்களை சாதிக்கலாம். 9-க்குடைய குருவும், 10-க்குடைய சனியும் 9-ல் சேர்வதால் தர்மகர்மாதிபதி யோகம் அமைகிறது. அதனால் குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். குலதெய்வத்தின் அருளும், இஷ்ட தெய் வத்தின் அருளும் உங்களுக்குப் பரிபூரண மாக அமையும். வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திரபாக்கியம் போன்ற எல்லா சுகயோகங்களும் சுமுகமாக நடை பெறும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடக்கிறது. 2-ல் ராகு, 8-ல் கேது. "பகலிலில் பக்கம் பார்த்துப் பேசவும். இரவில் அதுவும் பேசாதே' என்பது பழமொழி. ஆகவே, வார்த்தையில் நிதானம் தேவை. குடும்பத்திலும் அமைதி தேவை. நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் காது கேளாதமாதிரியும், கண்கள் பார்க்காத மாதிரியும் நடந்து கொண்டு, மௌனமாக இருக்கவேண்டும். "மௌனம் கலக நாஸ்தி' என்பார்கள். 7, 12-க் குடைய செவ்வாய் ராசியைப் பார்க்கிறார். குரு மறைகிறார். சொல் லாததையெல்லாம் சொன்னதாக வம்பு, வழக்கு வரும். அதாவது நல்லது சொன்னாலும் பொல்லாப்பாக முடியும். உங்கள் பணியில் மிகுந்த கவனத்துடன் செயல் படவேண்டும். உங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள உறவினர்களை நம்ப வேண்டாம். நண்பர் களையும், மற்றவர்களை யும் நம்பிச் செயல் படுங்கள். ஒரு முயற் சிக்குப் பலமுயற்சிகள் செய்தால் எதிர்பார்ப் புகள் ஈடேறும். குறிப் பாக உங்கள் சமூகத் தாரைத்தவிர வெளி சமூகத்தினரும் அல்லது முஸ்லிலிம், கிறிஸ்துவ இனத்தவர்களும் உங்களுக்கு ஆதரவாகவும், அனுகூலமாகவும் இருப்பார்கள். எந்த ஒரு செயலிலிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

tt

Advertisment

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசியில் ராகு நிற்க, அவரை சனி, செவ்வாய், கேது பார்ப்பது குற்றம். அதனால் "நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று; அதனாலே முழிக்குது அம்மா கண்ணு' என்று ஒரு திரைப்படத்தில் பாடியமாதிரி, உங்கள் நினைப்பும் நிகழ்ச்சியும் மாறுபாடாக அமையும். என்றாலும் குரு 7-ல் ஆட்சிபெற்று 5-க்குடைய சுக்கிரன் சாரம் பெற்று (பூராடம்) ராசியைப் பார்க்கிறார். முறை யாக திட்டமிட்டு செயல்படுவது அவசியம். கூடியவரை அடுத்தவர்களின் ஆலோசனையைக் கேட்பதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் மனமும் புத்தியும் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவது மிகமிக நல்லது. உங்களின் விருப்பங்கள் நிறைவேற கட்டிய மனைவியும், பெற்ற பிள்ளைகளும் உற்ற துணையாக ஒத்துழைப் பார்கள். 3-க்குடைய சூரியன் 8-ல் மறைவ தால், உடன்பிறப்புகளையும் நண்பர் களையும் ஒதுக்கிவைத்து சிந்திப்பது நல்லது. அதுமட்டுமல்ல; சிரிக்கச்சிரிக்கச் சொல்கிறவர்கள் சீரழிக்க வைப்பவர்கள் என்றும், அழஅழச் சொல்கிறவர்கள் ஆதரவாக நிற்பவர்கள் என்றும் உணர்ந்து செயல்படுவது நல்லது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 8-ல் புதனும் சுக்கிரனும் சேர்க்கை. அவர்களுக்கு செவ்வாய், சனி பார்வை. சனி பார்வை தாமதப்பலனைக் குறித்தாலும், செவ்வாய் பார்வை தோல்வியில்லாத வெற்றியைக் குறிக்கும். உங்களின் திட்டங்கள் நிறைவேற உடனிருப்போர் உளமுவந்து ஒத்து ழைப்புத் தருவார்கள். அதனால் எதிலும் வெல்வது உறுதி. நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம். புதனும் சுக்கிரனும் 8-ல் மறைந்தாலும் தோல்விக்கு இடமில்லை. சிலகாரியங்களில் உடனுக் குடன் அதிரடி வெற்றி, அதிரடி லாபத்தை சந்திக்கலாம். சில காரியங்களில் தாமத வெற்றி, தாமத லாபத்தை சந்திக்கநேரும். பெரும்பாலும் தொய்வுக்கும் இடமில்லை; தோல்விக்கும் இடமில்லை. ஹைவேஸ் ரோட்டில் பாலம் வேலை நடக்கும்போது "டேக் டைவர்ஷன்' என்று மாற்றுப் பாதையில் வாகனங்கள் போவதுபோல, உங்கள் பயணம் தடைப்படாமல் மாற்று வழியில் பயணிக்கும். 9-க்குடைய குரு 6-ல் மறைந்தாலும் ஆட்சிபெற்று10-ஆமிடத் தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். 2-க்குடைய சூரியன் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் குடும்பம், பொருளாதாரம் சிறப்பாக அமையும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 6-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த சனி 5-ல் குரு வீட்டில் குருவோடு சம்பந்தம். ஒரு கிரகம் நின்ற இடத்துப் பலனையும், சாரம் கொடுத்த கிரகத்தின் பலனையும் செய்யும். தன்னைப் பார்க்கும் கிரகத்தின் பலனையும், தான் நின்ற வீட்டதிபதியின் பலனையும், அந்த கிரகத்திற்கு கேந்திர- திரிகோணங் களின் பலனையும், தன்னுடைய ஆதிபத்தியப் பலனையும் (சொந்தவீட்டுப் பலன்) செய்யும். இதுதான் "ஷட்பலம்' என்பது. அதனடிப் படையில், ராசிநாதன் 6-ல் மறைந் தாலும் உங்களுக்கு மறைவு தோஷமில் லாமல் நற்பலன்கள் நடைபெறுமென்று எதிர்பார்க்கலாம். 6-ஆமிடம் என்பது தொழில், வாழ்க்கை, எனசொல்லப்படும் 10-ஆமிடத்துக்கு திரிகோண ஸ்தானம். எனவே, உங்களுடைய வாழ்க்கையும், தொழிலும் சிறப்பாக அமையும். அத்துடன் சூரியனுக்கு வீடுகொடுத்த சனி 5-ல் குருவோடு கூடிநிற்க, குரு ராசியைப் பார்ப்பதால், உங்களுடைய எண்ணங்களும் திட்டங்களும் எளிதாக நிறைவேறும். 9-க்குடைய செவ்வாய் 10-ஆமிடத்தைப் பார்ப்பதும் உங்களுக்கு ராஜயோகத்தைத் தரும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 6-ல் மறைந் தாலும் 2, 9-க்குடைய சுக்கிரனோடு சம்பந்தம். 4-ஆம் தேதி மீன ராசிக்கு மாறி உச்சம் பெற்றாலும், புதனுக்கு செவ்வாய், சனி பார்வை கிடைக்கும். ஆக, செவ்வாய், சனி, சுக்கிரன் மூவரின் சம்பந்தம் ராசிநாதனுக்கு ஏற்படுவதால், உங்களுடைய எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். காரியங்கள் கைகூடும். புதன் 10-க்குடையவர். சுக்கிரன் 9-க்குடையவர். இருவரும் சேர்வது தர்ம கர்மாதிபதி யோகம். சனி திரிகோணாதி பதி. செவ்வாய் 1, 10-க்குடைய புதன் சாரம். (கேட்டை). வியாபாரம் நல்ல முறையில், லாபகரமாக நடைபெறும். கூட்டாளிகளும், வேலையாட்களும் உங்கள் மனம்போல நடந்துகொள் வார்கள். ஒற்றுமையாகவும் இருப் பார்கள். குடும்பத்தில் எல்லாரும் ஒத்து ழைப்பார்கள். பிள்ளைகள்வகையில் நல்லவை நடைபெறும். குறிப்பாக பெண் மக்கள்வகையில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சனி 6-க்குடையவர் என்பதால், சில நற்காரியங்களுக்காக சுபக்கடன் வாங்கும் அமைப்புண்டாகும். அப்படி கடன் வாங்குவதால் போட்டி, பொறாமை, எதிர்ப்பு போன்ற பலன்கள் அடிபடும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 5-ல்- கும்பத்தில் திரிகோணம் ஏறுகிறார். அவருக்கு 2, 7-க்குடைய செவ்வாய் பார்வை; செவ்வாய் ஆட்சி! எனவே திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகமும், பிரிந்திருக்கும் தம்பதிகள் இணைந்துவாழும் யோகமும் உண்டாகும். சுக்கிரன் 1, 8-க்குடையவர் என்றாலும் தொடக்கத்தில் திரிகோணமாகவும், 4-ஆம் தேதிமுதல் உச்சமாகவும் சஞ்சரிப்பதால், 8-க்குடைய கெட்ட ஆதிபத்தியம் விலகி, ராசி நாதன் என்ற ஆதிபத்தியப் பலனே பலமாகப் பலன் செய்யும். ஜாதகரீதியாக நல்ல தசாபுக் திகள் நடந்தால், பூமி, வீடு, வாகனம் போன்ற வகையில் சுபச்செலவுகளும், அதுசம்பந்தமான சுபக்கடனும் ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் அடையலாம். ஆர்வம், அக்கறை ஏற்படும். மார்ச், ஏப்ரலில் தேர்வுகளில் தெளிவான நிலையில் வெற்றி பெற்று முன்னேறவும், விரும்பிய பாடத் திட்டத்தில் இணையவும் வாய்ப்புண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமையும், அனுகூலமும் உண்டாகும். தொழிலதிபர்களுக்கு புதிய முயற்சிகளும் திட்டங்களும் கைகூடும். வியாபார விருத்தியும் லாபமும் பெருகும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைப்பேறு, சடங்கு, திருமணம், காதணி விழா, கிரகப் பிரவேசம், சொந்த வீட்டு இடப் பத்திரப்பதிவு போன்ற சுபமங்களச் செலவுகள் உண்டாகும். சிலர் கோவில், புண்ணியத் தீர்த்த வழிபாடு, குலதெய்வப் பிரார்த்தனை நிறைவேற்றம் போன்ற செயல்களினால் சிந்தை மகிழலாம்; சிறப்படையலாம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் தன் ராசியில் ஆட்சிபெறுகிறார். 8, 11-க்குடைய புதன் சாரம் பெற்றாலும், புதன் ராசிக்கு 4-ல் நின்று செவ்வாயின் பார்வையைப் பெறுவது விசேஷம். அத்துடன் சனியின் பார்வையையும் பெறுகிறார். எனவே பூமி, வீடு, இடம், வாகனம் போன்ற நான்காமிடத்து யோகங்களை அடையலாம். செவ்வாய் 6-க்கும் அதிபதி என்பதால், இதுசம்பந்தமாக கடன் வாங்கலாம். அது சுபக்கடன், விருத்திக்கட னாகும். 4-க்குடைய சனி 2-ல் குரு, கேதுவோடு சேர்வதால், வாகன யோகம், வாகன மாற்றம் போன்ற சுபப்பலன்கள் நடப்பதோடு, தேக ஆரோக்கியத்திலும் தெளிவான முன்னேற் றம் தெரியும். வைத்திய செலவுகளை "டாட்டா' காட்டி அல்லது "குட்பை' கூறி வழியனுப்பிவிடலாம். யாராவது உங்களை "நலம்தானா? சௌக்கியமா?' என்று நலம் விசாரித்தால், சௌக்கியத்துக்கு "ஹெட் ஆபீஸ்' என்று சந்தோஷமாகச் சொல்லுமளவு ஆரோக்கியம் தெளிவாக விளங்கும். அதுமட்டு மல்ல; ஏழரைச்சனியின் பாதிப்பால் உங்க ளோடு பகையாகவும், வருத்தமாகவும் இருக்கும் சகோதரர்கள் அல்லது நண்பர்கள் பகை மறந்து, நட்பு கொண்டாடி, நேசக்கரம் நீட்டி நெருங்கிவருவார்கள். நீங்களும் பாசத்தோடு ஏற்றுக்கொண்டு மகிழலாம். ராசிநாதன் செவ்வாயின் பார்வை 4, 7, 8-ஆமிடத்துக்குக் கிடைப்பதோடு, குருவும் 8-ஆமிடத்தைப் பார்ப்பதால், சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட யோகமும், தனவரவும் கிடைக்கும் பாக்கியம் ஏற்படலாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு, தன் வீட்டில் ஆட்சியாக இருக்கிறார். 5, 7, 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். 5- புத்திர ஸ்தானம். 7- மனைவி ஸ்தானம். 9- தகப்பனார், பூர்வபுண்ணிய ஸ்தானம். ஆக, இந்த உறவுகளுக்கெல்லாம் (பிள்ளைகள், கணவன்- மனைவி, தகப்பனார், பூர்வபுண்ணிய சொத்துகள் வகையில்) அற்புதப் பலனும் மகிழ்ச்சியும் உண்டாகும். அரசுப் பணியாளர்களுக்கும், தனியார்துறை வேலை யாட்களுக்கும் தற்காலம் நற்காலமாகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விரும்பிய இடப் பெயர்ச்சி போன்ற நன்மைகளும், தொழிலதி பர்களுக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களில் வெற்றியும், செயல்களில் முன்னேற்றமும் திருப்தியும் உண்டாகும். குருவோடு சனி, கேது, ராகு சம்பந்தப்படுவதால், ஒருசிலருக்கு உத்தியோகத்தில் ஓய்வில்லாத பொறுப்புகள் மிகுதியாக அமையலாம். உணவு சாப்பிடு வதற்கும், ஓய்வெடுப்பதற்கும்கூட நேரமில் லாமல் போகலாம். உங்களுடைய வேலை ரிக்கார்டில் பெருமையும் சிறப்புகளும் அமையும். (ப்ளஸ் பாயின்ட்). இது உங்களுக்கு பதவி உயர்வுக்கும், சம்பள உயர்வுக்கும், போனஸ் கிடைப்பதற்கும் வழிவகையாக அமையும். ஒருசிலருக்கு சொந்த வீடு, வாகன யோகம் அமையும். அதுசம்பந்தமான சுபக்கடன் உண்டாகும். ஏற்கெனவே வீட்டுக்கடன் இருந் தால், அவை விரைவாக அடைபட வழிவகை அமையும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைகிறார்; கேது, ராகு சம்பந்தப்படுகிறார். என்றாலும் 12-க்குடைய குரு ஆட்சிபெறுவதால் பாதிப்பு களுக்கு இடமில்லை. 11-ல் செவ்வாயும் ஆட்சி. எந்தக் காரியத்தைச் செய்தாலும் நிதானமாகவும் பொறுமையாகவும் செய்யுங்கள். அதனால் பின்விளைவுகள் பாதிக்காமல் சமாளிக்கலாம். வியாபாரம் அல்லது தொழில் ஏற்ற- இறக்கமாக இருந்தாலும், தேக்கமில்லாத இயக்கமாக அமையும். கூடியவரை பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளாமல், அவ்வப்போது வரவு- செலவு செய்துகொள்வது நல்லது. அதேபோல அரசுப்பணியிலும், தனியார் துறைப்பணியிலும் இருப்பவர்கள் உடன்பணியாற்றுகிறவர் களோடு சுமுகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது நல்லது. மனதிற்குள் வெறுப்பு இருந் தாலும், பழகும்போது அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், உதட்டுச் சிரிப்போடு நடந்து கொள்வது நல்லது. சிறுதுரும்பும் பல்குத்த உதவும் என்பதுபோல, சகவாச நண்பர்களின் நட்புறவு சமயத்தில் பயன்படும். அன்பால் எதையும் சாதிக்கலாம் என்பதுபோல, எல்லா ரிடமும் கனிவாகவும் பணிவாகவும் நடந்துகொள்வது உங்கள் உயர்வுக்குப் பாதை அமைக்கும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம்பெற்று ராசியைப் பார்க்கிறார். 3-க்குடைய குருவும் ஆட்சியாக இருக்கிறார். கேது- ராகு சேர்க்கை. கேதுவுக்கும் ராகுவுக்கும் 11-ஆமிடம் உகந்த இடம்தான். அத்துடன் 3, 10-க்குடைய செவ்வாயும் உங்கள் ராசியைப் பார்க்கிறார். பெரும்பாலும் நற்பலன்களையே அடைந்து மகிழும் வாய்ப்பைப் பெறுவீர்கள். அரசுப் பணியாளர்கள் பணியில் நிறைவும், நிம்மதியும் அடையலாம். பதவி உயர்வுக்கும், விரும்பிய பதவிக்கும், எதிர்பார்க்கும் இடப்பெயர்ச்சிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஜாதக தசாபுக்திகள் யோகமாக அமைந்தால், ஒருசிலர் பொறுப்பான உயர்பதவி களை அடையலாம். சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கு சிறப்பும் செல்வாக்கும் லாபமும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளே ஆதரவாக, அனுகூலமாக அமைவார்கள். வேலை செய்யுமிடத்திலும், குடும்பச் சூழ்நிலையிலும் எல்லாரும் அனுகூலமாக நடந்துகொள்வார்கள். ஆகவே, உங்களுக்கு பேரானந்தமாகவும், பெரும் பரிசாகவும் அமையும். பிள்ளைகள்வகையில் நல்லவை நடைபெறும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சிபலம் பெறுகிறார். 9-ல் செவ்வாய் ஆட்சிபலம் பெறுகிறார். 10-ல் 11-க்குடைய சனி இருப்பதும் மிகச்சிறப்பு உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பது உறுதி. முறையான திட்ட மிட்டு. நிதானமாகச் செயல்படுவீர்கள். பெரும் நோக்கத்தோடு, பெரிய அளவிலேயே எதையும் செய்யவேண்டும், சாதிக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். உங்கள் விருப்பம் போலவும், எண்ணம்போலவும் சுற்றுச்சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக அமைந்து நல்ல பலனைத் தரும். எந்த திட்டத்தையும் ஆயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் சிந்திக்காமல் கோடிக்கணக்கில்தான் திட்டமிடுவீர்கள். தெய்வபலமும், உங்கள் விடாமுயற்சியும் வைராக்கியமும் உங்களை வெற்றிபெறச் செய்யும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து எல்லா உதவிகளும் உங்களுக்கு வந்தடையும். அதேபோல வாக்கு நாணயத்தையும் காப்பாற்றமுடியும். மகாகவி பாரதியார் பாடியமாதிரி, "எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி, தங்குதடையில்லாமல் பொங்கும் வெற்றி. வெற்றிமேல் வெற்றி' உண்டாகும். நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்.

bala070220
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe