ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கும்பம்.
18-8-2019- மீனம்.
20-8-2019- மேஷம்.
23-8-2019- ரிஷபம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: மகம்- 1, 2, 3.
செவ்வாய்: மகம்- 2, 3.
புதன்: ஆயில்யம்- 3, 4, மகம்- 1, 2.
குரு: கேட்டை- 2.
சுக்கிரன்: மகம்- 1, 2, 3.
சனி: மூலம்- 4.
ராகு: புனர்பூசம்- 1, திருவாதிரை- 4.
கேது: பூராடம்- 3, 2.
கிரக மாற்றம்:
சனி வக்ரம்.
21-8-2019- சிம்ம புதன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் கடந்த வாரம்முதல் 5-ல் மாறி திரிகோணம் பெறுகிறார். அவருடன் 5-க்குடைய சூரியனும் ஆட்சிபெறுகிறார். அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றியாகும்; காரியங்கள் பூர்த்தியாகும். 2-க்குடைய சுக்கிரனும் 5-ல் இருப்பதால் பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். மனதில் தோன்றிய திட்டங்கள் எண்ணங்கள் எல்லாம் செயல்பாடாக மாறும். அதற்கு உறுதுணையாக 10-க்குடைய சனி 9-ல் இருக்கும் தர்மகர் மாதிபதி யோகமும் அமையும். வார மத்தியில் 3-க்குடைய புதனும் 5-ல் மாறுகிறார். ஆக சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் நால்வரும் 5-ல் ஒன்றுகூடியிருப்பது சிறப்புதான். குரு 8-ல் மறைந்தாலும் 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். தாய் சுகம், தன் சுகம் பாதிக்காது. வாகனம் சம்பந்தப் பட்ட வகையில் புதிய வாகனம் வாங் கலாம். 3-ல் உள்ள ராகு; அதைப் பார்க்கும் சனி, கேது சகோதர, சகோதரிகளுக்கிடையே மனக்கிலேசம், கருத்து வேறுபாடு போன்றவற்றை உருவாக்கும். ராசிநாதன் செவ்வாய் 11 மற்றும் 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். தொழில்துறையில் லாபமும் உண்டு. சுபவிரயமும் உண்டு. உறவினர்கள் வகையில் மொய்ச்செலவும், சுபச்செலவும் உண்டாகலாம். குருவும் 12-ஆம் இடத்தைப் பார்ப்பதால் மங்களகாரிய விரயம் ஏற்படலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
கடந்த வாரம் 3-ல் மறைவாக இருந்த ராசிநாதன் சுக்கிரன் இந்த வாரம்முதல் 4-ல் மாறுகிறார். என்றாலும் அஸ்தமனமாக இருக்கிறார். எனவே உங்களது செயல்பாடுகள் பூர்த்தியாவதில் தாமதம் அல்லது ஆமை வேகத்தில் நடக்கும் காரியங்கள் எல்லாம் மனதை வாட்டும். அட்டமத்துச்சனியும் அதற்கு ஒரு காரணம். குரு ராசியைப் பார்ப்பதால், மேற்கூறிய பலனைத் தாமதமாகச் செய்தாலும் சிறப்பாகச் செய்துமுடிக்கலாம்- "லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவேன்' என்று ரஜினிகாந்த் ஒரு படத்தில் சொன்ன மாதிரி! திருமண வயதையொட்டிய ஆண்- பெண் களுக்குத் திருமண முயற்சிகள் கைகூடும். 12-க்குடைய செவ்வாய் 4-ல் அமர்ந்து தொழில் ஸ்தானம், லாப ஸ்தானம் இரண்டையும் பார்க் கிறார். வியாபாரத்தில் முன்னேற்றகரமான திருப்பங்களை எதிர்பார்க்கலாம். தொழில் துறையில் புதிய அணுகுமுறைகளைக் கையாள லாம். என்றாலும், புதிய தொழில் ஒப்பந்தங்களை ஒத்திப்போடுவது நல்லது. அதிக முதலீடுகளைத் தவிர்க்கவும். செவ்வாய் 7-ஆமிடத்தைப் பார்த்தாலும், குரு அங்கிருப்பதால் தாமதத் திருமணம் என்பதற்கு இடமிருக்காது. 2-ல் உள்ள ராகுவும், அவரைப் பார்க்கும் சனி, கேதுவும் பொருளாதாரத்தில் சிக்கலை ஏற்படுத்தினாலும் தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் பொறுமை காப்பது அவசியம். ஒவ்வொரு முயற்சியிலும் செயல்பாட்டிலும் அதிகப் பிரயாசைப்பட்டே முடிக்கும் சூழல் உருவாகலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
இந்த வார மத்தியில் ராசிநாதன் புதன் கடகத்திலிருந்து சிம்ம ராசிக்கு மாறுவார். (21-8-2019). சிம்மம் 3-ஆம் இடம்- மறைவு ஸ்தானம் என்றாலும், எப்போதும் புதனுக்கு மறைவு தோஷம் ஏற்படாது- மறைவு பாதிப்பு ஏற்படாது. "தில்லானா மோகனாம்பாள்' என்ற திரைப்படத்தில் "மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன?' என்று நாட்டியப் பேரொளி பத்மினி பாடி ஆடுவார். வாலியை ராமபிரான் மறைந்திருந்தே அம்பு எய்து கொன்றார். யுத்த தர்மத்திலே மறைந்திருந்து தாக்கும் நிலை ஒரு கலையாகப் போற்றப்படும். (கொரில்லாப் போர் மாதிரி). மிதுன ராசிக்கு 7, 10-க்குடைய குரு பாதகாதிபதி எனப்படும் என்பது ஜோதிட விதி! அவர் 6-ல் மறைவது ஒருவகையில் நன்மை. பாதகாதிபத்திய தோஷம் மறைகிறது என்று அர்த்தம். சர ராசிக்கு 11-க்குடையவரும், ஸ்திர ராசிக்கு 9-க்குடையவரும், உபய ராசிக்கு 7-க்குடையவரும் பாதகாதிபதி எனப் படுவார்கள். 7-ல் சனி, கேது, ராகு சம்பந்தப் படுவதால், மிதுன ராசிக்காரர்களுக்கு- ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந் தாலும் திருமணம் தாமதப்படும்; தடைப் படும். 30 வயதுவரைகூட தாமதம் ஏற்படலாம். இளமையில் திருமணம் ஏற்பட்டால் களஸ்திர தோஷம் அல்லது மாங்கல்ய தோஷம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தோஷப் பரிகாரம் செய்துகொள்ள வேண்டியது அவசியம். 6-ல் மறையும் குரு மணவாழ்க்கையில்தான் மகிழ்ச்சியை இழக்கச் செய்யும் என்றாலும், அவர் 10-க்குடையவர்; 10-ஆம் இடத்தையே பார்ப்பதால் தொழில் மேன்மை, பதவி உயர்வு, செயல்களில் சிறப்பு ஆகிய பலன்களை எதிர்பார்க்கலாம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் 3, 10-க்குடைய புதன் இருக்கிறார். கடகத்தில் இருக்கும்வரை ஆயில்யம்- சுயசாரம் பெறுகிறார். 21-ஆம் தேதி சிம்மத்திற்கு மாறுவார்; கேதுசாரம் பெறுவார். கேது 6-ல் இருப்பதால், பாவகிரகங்கள் 3, 6, 11 என்ற உபஜெய ஸ்தானங்களில் இருப்பது உத்தமப் பலன். ஆகவே, புதன்- கடகம், சிம்மம் இரண்டு ராசிகளிலும் சஞ்சரிக்கும் காலம் நீங்கள் அனுகூலமான பலன்களையும், ஆதாயமான பலன்களையும் சந்திக்கலாம். மேலும் சிம்மத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சம்பந்தம். இவர்கள் மூவரும் கேதுசாரம் பெறுவதால் தனயோகம், தொழில் யோகம், மனைவியின் பெயரில் சம்பாத்தியம், சேமிப்பு, உடன்பிறந்தவர்களால் அனுகூலம், தகப்பனார் வகையில் நன்மைகள் போன்ற நற்பலன்களை எல்லாம் எதிர்பார்க்கலாம். 9-க்குடைய குரு 5-ல் நின்று 9-ஆம் இடத்தைப் பார்ப்பதும், 10-க்குடைய செவ்வாய் 2-ல் நின்று குருவைப் பார்ப்பதும் தர்மகர்மாதிபதி யோகமாகும். அதனால் உத்தியோகம், பதவி, தொழில், வேலை, வாழ்க்கை எல்லாவற்றிலும் உன்னதமான பலன்களையும், உயர்வான நிலையையும் அடையலாம். ஜாதக யோகம் அமைந்தால், சிலர் சொந்த வீடு, வாகன யோகம் போன்றவற்றை அடையலாம். சிறுசேமிப்பும் பெருகும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 9-க்குடைய செவ் வாயும், 10-க்குடைய சுக்கிரனும் சம்பந்தம். இவர்கள் மூவரும் 5-ல் நிற்கும் கேதுவின் சாரம்பெறுகிறார்கள். ராகு, கேது, சனி, செவ் வாய் போன்ற கிரகங்கள் பாவகிரகங்கள் என்று ஜோதிட விதியில் சொல்லப்பட்டாலும், குரு வீட்டில் இருந்தாலும், குரு பார்வை பெற் றாலும் அவர்களுக்கு பாவத்தன்மை சேராது; பாதிக்காது. "மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்குவாள். கங்கை சூதகமானால் எங்கே மூழ்குவாள்?'' என்று பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் சொன்னார். சொல்லிவிட்டு, "கங்கைக்கு சூதகமே இல்லை' என்றும் ஒரு தத்துவம் சொன்னார். பித்துக்குளி முருகதாஸ் சக்தியைப் பாடும்போது, "அகிலமெல்லாம் ஈன்றும் இன்னும் கன்னியாக இருப்பவளே' என்று பாடுவார். கிறிஸ்துவர்கள், "இயேசுவைப் பெற்றும் அன்னை மேரி கன்னியாகவே இருக் கிறாள்' என்று போற்றுவார்கள். ஆக, சனி, கேது, ராகு இவர்களுக்கு குரு சம்பந்தம் இருப்பதால் (குரு வீடு) அவர்களுக்கு பாவமன்னிப்பு- விதிவிலக்கு ஏற்படுகிறது. சட்டரீதியாகவும் குற்றங்கள் செய்தவன் அப்ரூவராக மாறும் போது விதிவிலக்கு உண்டு. தண்டனை குறையும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் வாரத் தொடக் கத்தில் 11-ல் இருக்கிறார். சுயசாரம் பெறு கிறார். 21-ஆம் தேதி 12-ல் மறைவார்; கேதுசாரம் பெறுவார். சிம்மத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் மூன்றுபேரும் இருக்க, அவர்களோடு புதனும் கூடுவதால், இந்த நால்வருமே தனுசு ராசியில் இருக்கும் கேதுவின் சாரம் பெறுகிறார்கள். (மகம்). இருபத்தேழு நட்சத் திரங்களுள் எந்த நட்சத்திரமும் கெட்ட நட்சத் திரமல்ல. அதேபோல, நவகிரகங்களும் கெட்ட கிரகமல்ல. அதனால் திருஞான சம்பந்தர், "ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே' என்று பாடினார். "ஆசறு' என்றால் "குற்றமற்ற' என்பது பொருள். "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே' என்று எம்.ஜி.ஆர். ஒரு படத்தில் பாடினார். அதேபோல "கிருஷ்ண பக்தி' என்ற பழைய படத்தில் பி.யு. சின்னப்பா "எல்லாரும் நல்லவரே' என்று பாடினார். (அவரின் இயற் பெயர் சின்னச்சாமி. என் தகப்பனார் அந்த காலத்தில் நாடகம் நிறைய நடத்தினார். அவருக்கு சின்னப்பா என்றும், அந்த காலத்து வள்ளிக்கண்ணு என்ற நடிகைக்கு கே.எல்.வி. வசந்தா என்றும் பெயர் மாற்றம் செய்துவைத்தார். அந்தப் பாரம்பரியத்தினால் இன்று நான் பலபேருக்கு எண்கணிதப்படி பெயர் வைத்துக்கொடுத்துக்கொண்டிருக் கிறேன்.) எனவே உங்கள் காரியங்கள் எண்ணி யபடி ஈடேறும் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும், அவற்றைத் தகர்த்து வெற்றி பெறலாம்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 11-ல் இருக் கிறார். துலா ராசிக்கு 11-ஆமிடம் பாதக ஸ்தானம் என்று சொல்லப்படும். ஆனால் அங்கு சூரியன், செவ்வாய், சுக்கிரன் நிற்க, அவர்களோடு புதனும் கூடுவார். நால்வரும் கேதுசாரம் பெற, கேது குரு வீட்டில்- துலா ராசிக்கு ராஜயோகாதிபதியான சனியுடன் சம்பந்தப்படுவதால், பாதக தோஷம் விலகு கிறது. கன்னி ராசியில் எழுதியமாதிரி எல்லாரும் நல்லவர்களே! நீதிமன்றத்தில், குற்றம் செய்தவனுக்கு தண்டனை கொடுப் பது அவனை வருத்தும் நோக்கத்தோடு கட்டளை போடுவது அல்ல; குற்றவாளி யைத் திருத்துவதற்காகத்தான் தீர்ப்பு சொல்லப் படுகிறது. கிறிஸ்துவ சம்பிரதாயத்தில், பாவிகளை இரட்சிக்க இறைவன் வருவ தாகச் சொல்வார்கள். இந்து சம்பிரதாயத் திலும் தவறு செய்கிறவர்களைத் தடுத்தாட் கொள்வதற்காகவே இறைவன் அவதாரம் எடுப்பதாக ஐதீகம். காமவெறியனை அருண கிரிநாதராக மாற்றி "திருப்புகழ்' பாட வைத்ததும், கொள்ளைக்கார வால்மீகியை ராமாயணம் பாடவைத்ததும், வழிப்பறிக் கொள்ளைக்காரனை திருவடி தீட்சை கொடுத்து திருமங்கையாழ்வாராக மாற்றி யதும் இறைவன் கருணைதான்! ஆக, தவறு செய்யாதவர்கள் யாருமில்லை; அதை உணர்ந்து திருத்திக்கொள்பவர் மாமனிதன்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 10-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அங்கு 2, 5-க்குடைய குரு இருக்கிறார். ஏழரைச்சனியின் கடைசிக்கட்டத்தில் இருக்கும் விருச்சிக ராசிக் காரர்களுக்கு, இதுவரை நடந்த சனி மங்கு சனியாக இருந்தாலும், இனி பொங்குசனியாக மாறிப் பொலிலிவைத்தரும். ஏன் அப்படி? சனிக்கு 9-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சேர்ந் திருக்க, 21-ஆம் தேதி அவர்களுடன் புதனும் கூடுவார். அதனால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படும். (சனிக்கு 9, 10). 9-என்பது திரிகோணம், 10-என்பது கேந்திரம். எந்த ஒரு ஜாதகத்திலும் திரிகோணாதிபதியும் கேந் திராதிபதியும் சம்பந்தப்படுவது ராஜயோகம் எனப்படும். அதனால்தான் ஏழரைச்சனியில் பொங்கு சனி என்று குறிப்பிட்டேன். கன்னி ராசியில் எழுதியபடி எந்த ஒரு கிரகமும் முழுக்க முழுக்க கெட்ட கிரகம் அல்ல. கெட்ட திலும் நல்லது உண்டு. குரு துரோணர், துரியோ தனனிடமும் தருமனிடமும், ""உலகத்தில் எத்தனைபேர் நல்லவர்- கெட்டவர்'' என்ற புள்ளி விவரம் கேட்டார். துரியோதனன், ""உலகத்தில் நல்லவனே இல்லை. எத்தனை நல்லவனிடத்திலும் கெட்ட குணம் இருக் கிறது'' என்றான். தருமரோ, ""உலகத்தில் கெட்ட வர்களே இல்லை. எத்தனை கெட்டவனிடத் திலும் ஒரு நல்லவன் இருக்கிறான்'' என்றான். இந்த தத்துவத்தைப் புரிந்துகொண்டால்- உணர்ந்துகொண்டால் எல்லாரும் நல்ல வர்களே!
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசியில் சனி, கேது நிற்க, ராகு பார்க்கிறார். நவகிரகங்களில் சுக்கிரனும் குருவும்தான் முழு சுபகிரகம் எனப்படும். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய ஐந்து கிரகங்களும் முழு கெட்ட கிரகங்கள் எனப்படும். வளர்பிறையில் சந்திரன் சுபகிரகம்; தேய்பிறையில் சந்திரன் பாவகிரகம். சுபரோடு சேர்ந்த புதன் சுபராகவும், பாவ ரோடு சேர்ந்த புதன் பாவராகவும் கருதப் படுவார். இதைத்தான் "ஐந்துக்கு இரண்டு பழுதில்லை' என்பார்கள். இதில் குரு 12-ல் மறைந்திருந்தாலும், வீடுகொடுத்த செவ்வாயின் பார்வையைப் பெறுவதால் மறைவு தோஷமில்லை. 9-க்குடைய சூரியன் 9-ல் ஆட்சி என்பதால் சூரியனுக்கும் பாவதோஷமில்லை. குருவீட்டில் சனி, கேது நிற்க, ராகு குருவீட்டைப் பார்ப்பதாலும், குருசாரம் பெறுவதாலும் (புனர்பூசம்) மூவரின் பாவ சாம்ய தோஷமில்லை. "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!' என்ற தமிழ்ப்பாடலிலின் கருத்துப்படி, தனுசு ராசிக் காரர்களுக்கு ஜென்மச்சனி நடைபெற்றாலும், பொங்குசனிப் பலனைப் பூரிப்போடு அனுப விக்கலாம். ராசிநாதன் குரு விரய ஸ்தானத்தில் இருப்பதால், உங்களுக்கு சுபவிரயச் செலவுகள் உண்டாகும். ஆன்மிகச் சுற்றுப் பயணம் உருவாகும். தெய்வ வழிபாடு, பிரார்த்தனை நிறைவேறும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு, வக்ரம். அவருக்கு சாரம்கொடுத்த கேது அவருடனே இருக்கிறார். எனவே, 12-ஆமிடத்து சனியும் கேதுவும் செலவுகளை ஏற்படுத்தினாலும், அதை சுபச்செலவாக ஏற்றுக்கொள்ளலாம். 4-க்குடைய செவ்வாய் 12-க்குடைய குருவைப் பார்ப்பதால் வீடு, நிலம், வாகன வகையில் சுபச்செலவுகளை சந்திக்கலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக அமைந்தால், வேலைக்காக சிலர் வெளிநாடு போகலாம், வெளிமாநிலம் போகலாம். அல்லது வெளியூரும் போகலாம். உள்ளூரில் இருப்போருக்கு வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் உண்டாகலாம். ஆக, விரயச்சனியும் விரயக்கேதுவும் சுபவிரயங்களை ஏற்படுத்தும் என்பது உறுதி. ஏற்கெனவே தொழில் நடத்துபவர்கள் உள்ளூரில் அல்லது வெளி யூரில் கிளைகள் ஏற்படுத்தலாம். அதேபோல திருமணவயதில் காத்திருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் கூடிவரும். 5-ஆம் இடத்தை குரு பார்ப்பதால், திருமணமானவர்களுக்கு வாரிசு யோகம் அமையும். பெண் பிள்ளைகளை மட்டும் பெற்றவர்கள் ஆண் வாரிசுபெற கும்பகோணம்- குடவாசல் அருகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத் ரேயரைப் பூஜிக்கலாம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் கேதுவோடு சம்பந்தம்; ராகு பார்வை. ராசிநாதன் சனி ராசியைப் பார்க்கிறார். அவர்களுக்கு வீடுகொடுத்த குரு செவ்வாய் வீட்டில் நின்று செவ்வாயின் பார்வையைப் பெறுவதோடு செவ்வாயும் கும்ப ராசியைப் பார்க்கிறார். கும்ப ராசிக்கு 9-க்குடைய சுக்கிரனும், 10-க்குடைய செவ்வாயும் 7-ல் சேர்ந்திருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். அத்துடன் 21-ஆம் தேதி 7-க்குடைய சூரியனோடு 5-க்குடைய புதனும் ஒன்றுகூடுவார். அங்கு 4, 9-க்குடைய சுக்கிரனும் சேர்க்கை. ஆக, கேந்திராதிபதியும் திரிகோணாதிபதியும் சம்பந்தப்படுவதால், கும்ப ராசிக்காரர்களுக்கு எல்லா வகையிலும் மங்களம் பொங்கும். அபிராமிப்பட்டர் பாடியதுபோல, "தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் நல்லன எல்லாம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே' என்று எல்லா நன்மைகளும் உண்டாகும். அபிராமிப்பட்டர் பாடிய "அன்பர்' என்பவர்கள் கும்ப ராசிக்காரர்கள்தான். ஜாதக தசாபுக்திகள் யோகமாக அமைந்துவிட்டால் நீங்கள்தான் அதிர்ஷ்டசாலிலிகள்; ராஜயோகாதிபதிகள்! நலமும் வளமும் இணையும் பலசாலிகள்!
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். குரு 10-க்குடையவர். அவர் 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகம். அத்துடன் 9-க்குடைய செவ்வாய் 6-ல் நின்று, 10-க்குடைய குருவைப் பார்ப்பதும் தர்மகர்மாதிபதி யோகம். 10-ஆம் இடமான தனுசு ராசி வாழ்க்கை ஸ்தானம், தொழில் ஸ்தானம். அதற்கு 9-க்குடைய சூரியன் ஆட்சிபெற, அவருடன் 10-க்குடைய புதனும் (21-ஆம் தேதிமுதல்) கூடுவதால், 10-ஆம் இடத்துக்கும் (அதாவது தனுசுவுக்கு) தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. 5-ஆம் இடமான கடகம் புத்திரஸ்தானம். கடகத்துக்கு 10-க்குடைய செவ்வாய் சிம்மத்தில் நின்று 9-க்குடைய குருவை 4-ஆம் பார்வை பார்ப்பதும் தர்ம கர்மாதிபதி யோகம். 7-ஆம் இடமான கன்னி ராசி களஸ்திர ஸ்தானம். அதற்கு 9-க்குடைய சுக்கிரனும், 10-க்குடைய புதனும் (21-ஆம் தேதி முதல்) கூடுவதாலும் தர்மகர்மாதிபதி யோகம். ஆக, ஜென்ம ராசி, 5-ஆம் இடம் புத்திரஸ்தானம், 7-ஆம் இடம் களஸ்திரஸ்தானம் அல்லது கணவன் ஸ்தானம், 10-ஆம் இடம் தொழில், வாழ்க்கை ஸ்தானம் ஆகியவற்றுக்கு தர்மகர்மாதிபதி யோகம் அமைகிறது. இதனால் நீங்கள் மிகப்பெரும் அதிர்ஷ்டசாலிலியாகும் பாக்கியம் உடையவர்கள் ஆவீர்கள். "ஜெனனீஜென்ம சௌக்யானாம் வர்தனீ குலம் சம்பதாம் பதவீபூர்வ புண்யானாம்' என்று ஜாதகம் எழுதும்போது எழுதும் வாக்கியப்படி பதவி, சம்பத் (செல்வம்), வாழ்க்கை, பெருமை, அதிர்ஷ்டம் எல்லாம் உங்களைத் தேடிவரும் காலம்! ஆக, 12 ராசிக்காரர்களில் இன்றைய கோட்சார நிலை முதலிடம் மீன ராசிக்கும், அடுத்து கும்ப ராசிக்கும்தான் 100-க்கு 100 ராஜயோகம் அமைகிறது. "எண்ணியா எண்ணியாங்கு எய்துப- எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்று வள்ளுவப் பெருந்தகை சொல்வார். அதாவது "திண்ணியர்' என்பதற்குப் பொருள் வைராக்கியம், விடாமுயற்சி, சாதனை என்பதாகும். இந்த மூன்றும் உங்களை வழிநடத்தி வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். 4-ல் ராகுவும், 10-ல் சனி, கேதுவும் உங்களைச் சோம்பேறிகளாக்கலாம். அந்தச் சோம்பேறித்தனத்தை விரட்டி யடித்து, சோதனைகளை வென்று சாதனை படைத்தால் உங்கள் எதிர்காலம் நற்கால மாகும். பொற்காலமாகும்! வாய்ப்பைப் பயன்படுத்துவதே உங்கள் கடமை! பொறுப்பு!