ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- விருச்சிகம்.
18-2-2020- தனுசு.
20-2-2020- மகரம்.
22-2-2020- கும்பம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: அவிட்டம்- 3, 4, சதயம்- 1.
செவ்வாய்: மூலம்- 2, 3.
புதன்: அவிட்டம்- 4, 3, 2.
குரு: பூராடம்- 3, 4.
சுக்கிரன்: உத்திரட்டாதி- 4, ரேவதி- 1, 2.
சனி: பூராடம்- 4.
ராகு: திருவாதிரை- 2.
கேது: மூலம்- 4.
கிரக மாற்றம்:
புதன் வக்ரம், அஸ்தமனம்.
21-2-2020- மகர புதன். (வக்ரம்).
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 9-ல் திரிகோணம் பெறுகிறார். அங்கு ஆட்சிபெற்ற குருவோடு சேர்க்கை. 10-க்குடைய சனியும் அங்கு சேர்க்கை. இது தர்மகர்மாதிபதி சேர்க்கை என்பதால், உங்களுக்கு எல்லாவகையிலும் இனிய பலன்களாக நடைபெறும்; ஏற்றம் தரும் பலன்களாக நடைபெறும். ஒரு ஜாதகத்தில் தர்மகர்மாதிபதிகள் சேர்க்கையாக இருந்தாலும், பரிவர்த்தனையாக இருந்தாலும் அல்லது ஏதோ ஒருவகையில் சம்பந்த மாக இருந்தாலும் அந்த ஜாதகருக்கு எல்லாத் துன்பங்களும், சிக்கல்களும் சூரியனைக் கண்ட பனிபோல விலகியோடிவிடும். இலவம்பஞ்சு புடவையாகக் காய்த்தமாதிரி பயனுள்ள பலனாக நடைபெறும். திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம். கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம். லட்சுமி ஸ்தானம் என்பது பூர்வஜென்ம பயனாக அதிர்ஷ்டம்தரும் யோகம். விஷ்ணு ஸ்தானம் என்பது முயற்சிக்கேற்ற பலனை அடையும் யோகம். வள்ளுவர் சொல்லிலிலியமாதிரி "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருந்தக்கூலி தரும்.' இங்கு 9, 10-க்குடையவர்களின் சேர்க்கை உங்கள் முயற்சிக்கு கூலியும் தரும்; போனஸ் கிடைத்த மாதிரி அதிர்ஷ்டப் பரிசும் கிடைக்கும். ஓட்டலிலில் சர்வர் தன் கடமையைச் செய்தாலும் இனாம் (டிப்ஸ்) தருவதுமாதிரி.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 11-ல் உச்சம் பெறுகிறார். எனவே, ரிஷப ராசிக்கு அட்டமச்சனி நடைபெற்றாலும், பொங்குசனியாகப் பொலிலிவைத்தரும். விரும்பிய இடப்பெயர்ச்சி, விரும்பிய பதவி உயர்வு, விரும்பிய தொழில் ஈடுபாடு, விரும்பிய வேலை யோகம் போன்ற நன்மைகள் எல்லாம் உண்டாகும். அட்டமச்சனி நடக்கும் இக்காலம் சந்திர தசையோ சந்திரபுக்தியோ நடந்தால் மட்டும் சிக்கல் உண்டாகும். விபரீத விளைவுகளைச் சந்திக்கவேண்டிய நிலை! அப்படிப்பட்டவர்கள் திங்கள் கிழமைதோறும் சிவலிலிங்கத்துக்கு காலையில் அபிஷேகத்துக்குப் பால் வாங்கித் தரலாம். வசதியிருந்தால் சிவன் கோவிலில் ருத்ர ஹோமம் வளர்த்து ருத்ராபிஷேக பூஜை செய்யலாம். அதனால் உயிர்ச்சேதம், பொருள் சேதம் ஏற்படாமல் தப்பிக்கலாம். மற்ற தசாபுக்திகள் நடந்தால் வேறு எந்தப் பரிகாரமும் தேவையில்லை. அட்டமச் சனியின் தாக்கம் குறைய சனிக்கிழமை தோறும் காலபைரவருக்கு மிளகு தீபம் (நெய்யில்) ஏற்றலாம். அவரவர் வயதுடன் ஒரு எண்ணிக்கை சேர்த்து, அத்தனை மிளகுகளை ஒரு சிவப்புத் துணியில் பொட்டலமாகக் கட்டி, மண்விளக்கில் நெய் நிரப்பி மிளகுப் பொட்டலத்தை நனைத்து தீபமேற்றுவதே மிளகு தீபமாகும். எந்தக் காரணத்தைக்கொண்டும் சனீஸ்வரருக்கு எள் விளக்கு ஏற்றக்கூடாது. எள் விளக்கேற்றுவது சாஸ்திர விரோதம்! இது பலருக்குத் தெரிவதில்லை. திருநள்ளாறு கோவிலிலிலேயே எள் தீபம்தான் விற்கிறார்கள். நீங்கள் அதை வாங்கவேண்டாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 9-ல் திரிகோணம் பெறுகிறார். அவர் 1, 4-க்குடையவர்; கேந்திராதிபதியாவார். கேந்திராதிபதி திரிகோணம் பெறுவது மிகச்சிறப்பு. திரிகோணம் என்பது அதிர்ஷ்ட ஸ்தானம், லட்சுமி ஸ்தானம். கேந்திரம் என்பது முயற்சி ஸ்தானம், விஷ்ணு ஸ்தானம். ஆந்திராவில் இரண்டு பிரம்மச்சாரிகள் இருந்தார்கள். அவர்கள் பணக்காரராவதற்குத் தீவிரமான லட்சுமி பூஜைகளெல்லாம் செய்தார்கள். லட்சுமி தோன்றி, ""இந்தப் பிறவியில் உங்களுக்கு செல்வந்தராகும் யோகமில்லை'' என்றார். அவர்கள் குருநாதரை அணுகிக் கேட்டபோது, ""அதற்காக நீங்கள் மரணமடைந்து மறுபிறவி எடுக்கத் தேவையில்லை. இந்தப் பிறவிலேயே சந்நியாசம் வாங்கிக்கொண்டால் மறுபிறவி எடுத்ததற்குச் சமம்'' என்றார். அதன்படி சந்நியாசம் வாங்கிக்கொண்டவுடன், லட்சுமி குபேரனுக்கு உத்தரவிட, குபேரன் சங்க நிதி, பதுமநிதியை வாரிவழங்கிவிட்டார். சந்நியாசம் பெற்றதால், பணத்தின் மேலிருந்த பற்று விலகிவிட்டது. அந்த செல்வத்தைக் கொண்டுதான் ஆந்திர சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். அவர்கள் உண்மையான சந்நியாசிகள். அதிர்ஷ்டம் வந்தாலும், வராவிட்டாலும் முயற்சிக்குப் பலன் உண்டு. "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்!'
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 8-ல் சூரியன் புதனும், 6-ல் செவ்வாய், குரு, சனி, கேதுவும் மறைகிறார்கள். 4, 11-க்குடைய சுக்கிரன் 9-ல் உச்சம். சூரியனும் புதனும் 2-ஆமிடத்தைப் பார்ப்பதோடு, தனகாரகன் குருவும் 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். எனவே, பொருளாதாரத்தில் நெருக்கடி நிலைக்கு இடமில்லை. 9-க்குடைய குருவும், 10-க்குடைய செவ்வாயும் சேர்வது தர்மகர்மாதிபதி யோகமாகும். எந்த ஒரு ஜாதத்திலும் தர்மகர்மாதிபதி யோகம் இருந்தால், அந்த ஜாதகர் எந்தக் காலத்திலும் வீழ்ச்சியடையமாட்டார். எந்தச் சூழ்நிலையிலும் தாழ்வடையமாட்டார். குதிரைப் பந்தயத்தில் குதிரை இடறி விழுந்தாலும், வேகமாக எழுந்து மீண்டும் ஓடுவதுபோல, தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் தொடர்ந்து செயலாற்றி வெற்றிபெறலாம். இதுதான் தர்மகர்மாதிபதி யோகத்தின் பலன். கர்மம் (10) என்பது கேந்திரம். 9- என்பது திரிகோணம், தெய்வ அனுகூலம். ஆக, இரண்டும் சேர்ந்தால், தளர்ச்சியில்லாத முயற்சியால் வளர்ச்சியும் வெற்றியும் உண்டாகும். அதனால்தான் தர்மகர்மாதிபதி யோகமுள்ள ஜாதகத்தை எப்போதும் வீழ்ச்சியடைவதில்லை என்று குறிப்பிட்டோம். வாழ்ந்து கெட்டவர்கள் உண்டு. வீழ்ந்தவர்கள் மீண்டும் எழுந்து வாழ்வதும் உண்டு.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியனும், 2, 11-க்குடைய புதனும் 7-ல் இணைந்து ராசியைப் பார்க்கிறார்கள். உங்கள் திறமைக்கேற்ற பெருமையுண்டு. செயலுக்கேற்ற சிறப்புண்டு. செயல் வேகம் புயல் வேகமாகி, செல்வாக்கும் பெருமையும் அடையலாம். குடத்துக்குள் எரிந்த தீபத்தை கோபுர உச்சியில் ஏற்றிவைத்ததுபோல, உங்கள் ஆற்றலும் பெருமையும் ஊரறியும்; உலகறியும். அதற்குக் காரணம் 5-ல் திரிகோணம் பெற்று ஆட்சிபெற்ற குரு உங்கள் ராசியைப் பார்ப்பதுதான். அத்துடன் 9-க்குடைய செவ்வாய் 10-க்குடை சுக்கிரனையும் பார்க்கிறார். இதுவும் தர்மகர்மாதிபதி யோகம். ஏற்கெனவே எழுதியபடி பரிவர்த்தனை பெறும் கிரகங்களும், தர்மகர்மாதிபதி யோகமுடைய ஜாதகர்களும் எப்போதும் வீழ்வதில்லை. 8, 5-க்குடையவர் 5-ல் ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பதால், எதிர்பாராத அதிர்ஷ்டமும் யோகமும் உங்களுக்கு உருவாகும். காமராஜர் ஆட்சிக்காலத்தில் பூவராகன் என்ற இளைஞர் தேர்தலில் ஜெயித்தவுடன், அந்த இளைஞர் சார்ந்த சமூகத்துக்கு ஒரு மந்திரி பதவி தரவேண்டுமென்று காமராஜர் விரும்பி, அவரை வரச்சொல்லிலி ஏற்பாடு செய்தார். இளைஞர் லாரியில் பயணம் செய்து முதல்வரைப் போய்ப் பார்த்தார். மந்திரி பதவி கிடைத்தது. இதுதான் அதிர்ஷ்டம்!
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 6-ல் மறைவு; 12-க்குடைய சூரியன் சம்பந்தம். புதன் 1, 10-க்குடையவர்; 12-ஆமிடத்தையே பார்க்கிறார்கள். 4, 7-க்குடைய குருவோடு சம்பந்தப்பட்ட சனி 5, 6-க்குடையவராகி ராசியைப் பார்க்கிறார். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகமும், வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு யோகமும் உண்டாகும். சொந்தவீடு அல்லது வாகன யோகம் அமையும். தொழில் இல்லாதவர்களுக்குத் தொழில் அமையும். மேற்படி காரணங்களுக்காக சிலர் கடன் வாங்கலாம். அது எளிய தவணைக் கடனாகவும் அமையலாம். (EMI). 7-ல் 2, 9-க்குடைய சுக்கிரன் உச்சம் பெறுவதால், திருமணமானவர்களுக்கு மனைவியால் யோகமும், சொத்து யோகமும் உண்டாகும். சிலருக்கு வாகன யோகம் அமையும். சிலருக்கு மனைவியின்பேரில் டிரான்ஸ்போர்ட், டாக்ஸி, லாரி போன்ற வாகனத் தொழில் செய்யலாம். அதற்காகக் கடன் வாங்கியும் செய்யலாம். 10-ல் ராகு. 10-க்குடைய புதன் அதற்குத் திரிகோணம். ஆனால் ராசிக்கு 6-ல் மறைவு. தொழில் துறையிலோ வேலை அமைப்பிலோ, உத்தியோகத்திலோ டென்ஷனும் பிரச்சினைகளும் கடுமையாக இருந்தாலும், அவற்றையெல்லாம் எளிமையாக சமாளித்து முன்னேறலாம். பதவி உயர்வுக்கும், விரும்பிய இடப்பெயர்ச்சிக்கும் தடையில்லை.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந்தாலும், உச்ச பலமாக இருப்பதால் மறைவு தோஷமில்லை. ஒரு குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றம் முழுமையாக நிரூபிக்க முடியாமல், சந்தேகத்தின் அடிப்படையில் வழக்கு நடந்தால், கோர்ட் கலையும்வரை அவருக்கு கோர்ட்டில் இருக்கும்படி தண்டனை கொடுப்பது வழக்கம். அதனால் குற்றவாளிக் கூண்டிலிலிருந்து அவரை விடுவித்து, ஒரு நாற்காலியில் அமரச் செய்வதுண்டு. அதுபோலவே ராசிநாதன் மறைவானாலும் உச்சபலம் என்பதால் மறைவு தோஷம் விலகும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், ஜார்ஜ் மன்னருக்கு போக்குவரத்து வழக்கில் தண்டனை கொடுக்கவேண்டிய நிலை வந்தது. மன்னர் பரம்பரைக்கு தண்டனை கொடுத்தால், இங்கிலாந்து அரசுக்கு இழுக்கு என்பதால், நீதிபதிகள் தடுமாறினார்கள். அப்போது இந்திய அரசின் தலைமை நீதிபதியாக இருந்தவர் (ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் என்று நினைவு. அச்சமயம் செம்பு உலோகத்தில் காலணா நாணயம் வெளிவந்தது. ஆங்கிலேயர் காலம் என்பதால், உலோக நாணயங்களில் மகாராஜாவின் படம் (கிரீடம் வைத்த படம்) அச்சிடப்பட்டிருக்கும்.) கிரீடத்தை எடுத்துவிட்டு ஆங்கிலேய மன்னரின் படத்தை அச்சிடவேண்டும் என்று தீர்ப்பளித்தார். அதன்படியே "மொட்டத்தலை காலணா' (செம்புக்காசு) வெளிவந்தது. 60-70 வயது உடையவர்களுக்கு இந்த விவரம் தெரியும். இந்தச் செயல்மூலமாக இந்தியர்களுக்கு உலகளவில் மதிப்பும் மரியாதையும் கூடிவிட்டது. அதுபோல ராசிநாதனுக்கு ஆட்சி, உச்சம், பலம் என்றால் மறைவு தோஷம், நீச தோஷம் போன்றவை விதிவிலக்கு ஆகும். மேலும், சுக்கிரன் குருவின் வீட்டில் (மீன ராசியில்) இருப்பதும் ஒருவகையில் பலமாகும். குருவும் சுக்கிரனும் பகை என்பார்கள். அது தவறு. குரு- தேவர்களுக்கு குரு; சுக்கிரன்- அசுரர்களுக்கு குரு. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும்தான் பகை! குருவும் சுக்கிரனும் அவர்களின் வக்கீல். கோர்ட்டில் வாதி- பிரதிவாதி வக்கீல்கள் காரசாரமான விவாதம் செய்துகொண்டாலும், வெளியில் இருவரும் இணைந்து காபி சாப்பிட வருவதில்லையா?
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 2-ல்- குரு வீட்டில் மூல நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். மூல நட்சத்திர அதிபதி கேது. அவரும் செவ்வாயோடு சேர்ந்திருக்கிறார். செவ்வாயும் மூல நட்சத்திரம்தான். ஆக, இவர்கள் தனுசு ராசியில், குரு வீட்டில் குருவோடு சேர்க்கை என்பதால், எல்லா தோஷங்களும் விலகிவிடுகின்றன. "நல்லாரைக் காண்பதுவும் நன்று நல்லாரோடு இணங்கி இருப்பதுவும் நன்று' என்பது பொன்மொழி. ஒன்பது கிரகங்களில் குருதான் மிகமிக நல்லவர். அவருக்கடுத்து சுக்கிரனும் நல்லவர். நல்லவர்களாகிய தேவர்களுக்கு குரு (வியாழன்) குருநாதர். பொல்லாதவர்களாகிய அசுரர்களுக்கு சுக்கிரன் குருநாதர். குருவின் வீடான மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெறுவதால், அவரும் முழுமையான நல்லவராகிவிடுகிறார். அது எப்படியென்றால், சில வழக்குகளில் வாதியின் வக்கீல் பிரதிவாதியின் வக்கீலிடம் பேரம்பேசி மறைமுக உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டால், பிரதிவாதியின் வக்கீல் எதிர்வாதம் செய்யாமல் ஒதுங்கிவிடுவாரல்லவா- அதுபோல! இன்றைய காலகட்டத்தில் போலீஸ் இலாகாவில் "சில நேரங்களில் சில மனிதர்கள்' என்று ஜெயகாந்தன் கதை எழுதியதுபோல, சில போலீசார் திருடனோடு ஒப்பந்தம் செய்து (குற்றவாளியோடு), வழக்கை வலுவாக்காமல் காப்பாற்றுவதற்குச் சமம். உங்கள் கிரக அமைப்பு சாதகமாக இருந்தால், எதிர்தரப்பை விலைபேசலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு ஆட்சியாக இருக்கிறார். அவருடன் திரிகோணாதிபதி செவ்வாயும் இருக்கிறார். எனவே ஜென்மச்சனி, ஏழரைச்சனி நடைபெற்றாலும், ஜென்ம கேதுவாக இருந்தாலும், நீங்கள் கேடுகெடுதிக்கு இடமில்லை. ராகு சம்பந்தம் என்பதால், நீங்கள் மனசஞ்சலம், கௌரவப் போராட்டம், வாகன விபத்துகள், ஏமாற்றம், விரயம், வீண் செலவுகளை சந்திக்கநேரும். குறிப்பாக, ஜென்மச்சனி நடக்கும் இக்காலம் ஜாதகரீதியாக சந்திர தசை, சந்திர புக்தி நடந்தால், மேலே சொன்ன பலன்களை சந்திக்கலாம். பெரிய அளவில் அரசு தண்டனை, அபராதத்திற்கு இடமில்லை என்றாலும், சிறியளவில் செலவினங்கள் ஏற்படலாம். பொதுவாக யாருக்காவது கிரகரீதியாக ஏதாவது ஒரு கெடுதல் நடந்தால், அதை மறக்குமளவு அவர்களுக்கு வேறு ஏதாவதுவகையில் ஒரு நல்லது நடக்கும். இது இயற்கை நியதி. நெல்லிக்காய் முதலில் துவர்ப்பாக இருந்தாலும், பின்னர் இனிப்பாக மாறுவதே. மேற்கூறிய சம்பவத்திற்கு உதாரணம். அதுபோலவே நல்லோர்கள் உறவும் அறிவுரையும் முதலில் வெறுப்பாகத் தெரிந்தாலும் பின்னால் மதிப்பாக அமையும். தேனும் நெல்லிக்கனியும் நல்லவர்களுக்கு உதாரணமாகச் சொல்லப்படும். தேன் தானும் கெடாது. தன்னோடு சேர்ந்ததையும் கெடவிடாது.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைகிறார். ஏழரைச்சனியில் இப்போது நடப்பது விரயச்சனி. அவரோடு 4, 11-க்குடைய செவ்வாயும் சம்பந்தம். அவர்களுக்கு வீடுகொடுத்த குருவும் அவர்களுடன் சம்பந்தம்; ஆட்சி பலம். செவ்வாய் சகோதரகாரகன். தாயார் வகையிலோ, வாகன வகையிலோ, தேக ஆரோக்கியத்தின் பாதிப்பு காரணமாகவோ சிலருக்குத் தவிர்க்கமுடியாத விரயங்களும் செலவுகளும் ஏற்படலாம். வாகன காரகன் சுக்கிரன் உச்சம் என்பதால், சிலருக்கு வாகன வகையில் பழுதுச் செலவுகளும் வரலாம். அல்லது வாகனப் பரிவர்த்தனையால் சுபச்செலவுகளும் வரலாம். ஒருசிலருக்கு வேலை அல்லது உத்தி யோகம் சம்பந்தமான ஊர் மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். தொழிலதிபர்கள் வெளியூர்களில் கிளைகள் ஆரம்பிக்கலாம். வெளிநாட்டு வர்த்தகத் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆக, 12-ஆமிடம் என்பது மாற்றம் என்பதால், அந்த மாற்றம் முன்னேற்ற மாக அமையும். 6-ல் உள்ள ராகு ரோகம், ருணம், சத்ரு என்ற 6-ஆமிடத்துக் கெடுதல்களை எல்லாம் நீக்கி சாதகமான பலனைத் தருவார்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம் பெறுகிறார். பொதுவாக 3, 6, 11-ஆமிடங்கள் சனிக்கு யோகமான இடங்களாகும். அதேபோல ராகு- கேது, செவ்வாய்க்கும் அவையே அற்புதமான இடங்கள். செவ்வாய், சனி, கேது மூவரும் 11-ல் பலம்பெற, அவர்களுக்கு வீடுகொடுத்த குருவும் அங்கு ஆட்சி பலம் பெறுவதால், உங்களுக்கு வெற்றியும், ஜெயமும் உண்டாகும். மகாகவி பாரதியார் "எங்கெங்கு நோக்கினும் சக்தியடா' என்று பாடினார். நீங்கள் "எங்கு நோக்கினும் வெற்றியடா' என்று பாடலாம். 11-ஆமிடம் மூத்த சகோதர ஸ்தானம். அத்துடன் உபய களஸ்திர ஸ்தானம். ஜாதக தசாபுக்திகள் அமைப்பு இருந்தால், சிலருக்கு மூத்த சகோதர நன்மைகளும், அனுகூலமும் எதிர்பார்க்கலாம். சிலருக்கு உபய களஸ்திர யோகம் (இளைய தாரம்) ஏற்பட இடமுண்டு. அதனால் ஆதாயமும் அனுகூலமும் உண்டு. (அதற்காக ஜோதிடர் சொல்லிவிட்டார் என்று இளைய தாரத்திற்காகத் தேடி அலையாதீர்கள்). "தாரமும் குருவும் தலைவிதிப்படி' என்பார்கள். அப்படியமைந்த நல்ல தாயின் கண்ணீரும், நல்ல மனைவியின் கண்ணீரும் கேடு விளைவிக்கும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சிபலம் பெறுகிறார். மீன ராசியில் 3, 8-க்குடைய சுக்கிரன் உச்சம் பெறுகிறார். உச்சம் பெறும் சுக்கிரன் தொடக்கத்தில் சனியின் சாரத்திலும், (உத்திரட்டாதி) பிறகு புதனின் சாரத்திலும் (ரேவதி) சஞ்சாரம் செய்கிறார். புதன் 12-ஆமிடத்திலும், சனி 10-ஆமிடத்திலும் இருக்கிறார்கள். தொழில் துறையிலும், உங்களின் தீவிர முயற்சிகளிலும் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகும். அதனால் தவிர்க்கமுடியாத சில விரயங்களையும் சந்திக்கவேண்டும். என்றாலும் 10-ல் 9-க்குடைய செவ்வாயும், 10-க்குடைய குருவும் இணைந்திருப்பதால், "யானை படுத்தாலும் குதிரை மட்டம்' என்ற பழமொழிப்படி, நீங்கள் சாய்ந்துவிடமாட்டீர்கள்; ஓய்ந்துவிடமாட்டீர்கள். ரேஸில் ஓடும் குதிரை இடறி விழுந்தாலும், துள்ளி எழுந்து ஓடி முதலிடம் பெற்று பரிசு வாங்குவதுபோல, உங்கள் செயல்களும், முயற்சிகளும், நடவடிக்கைகளும் வெற்றியடையும். பொதுவாக, 12 ராசிக்காரர்களில் தனுசு, மீனம் ஆகியவற்றில் பிறந்த ராசிக்காரர்களும், லக்னக் காரர்களும் தாழ்ந்தாலும் வீழ்ந்து விடமாட்டார்கள். சாய்ந்தாலும் ஓய்ந்துவிடமாட்டார்கள். இந்த இரு ராசிக்காரர்களும் உபய ராசிக்காரர்கள்.