ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மீனம்.
16-9-2019- மேஷம்.
19-9-2019- ரிஷபம்.
21-9-2019- மிதுனம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திரம்- 1, 2, 3.
செவ்வாய்: பூரம்- 3, 4, உத்திரம்- 1.
புதன்: அஸ்தம்- 1, 2, 3.
குரு: கேட்டை- 3.
சுக்கிரன்: உத்திரம்- 3, 4, அஸ்தம்- 1, 2.
சனி: மூலம்- 4.
ராகு: திருவாதிரை- 4.
கேது: பூராடம்- 2.
கிரக மாற்றம்:
புதன், சுக்கிரன் அஸ்தமனம்.
17-9-2019- கன்னிச் சூரியன்.
17-9-2019- புதன் உதயம்.
20-9-2019- சுக்கிரன் உதயம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 5-ல் திரிகோணமாக இருக்கிறார். அவருக்கு வீடுகொடுத்த சூரியன் அவரோடு சேர்க்கை. சூரியன் ஆட்சி என்பது மட்டுமல்லாமல், மேஷ ராசியின் உச்சநாதனும்கூட. 5-ஆம் பாவம் என்பது மனசு, புத்தி, புத்திரர்கள், மகிழ்ச்சி ஆகியவற்றைக் குறிக்குமிடம். எனவே இதுசம்பந்தப்பட்ட எல்லா பலன்களும் நல்ல முறையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு கிடைக்கும். நீண்டநாள் திட்டங்கள் நிறைவேறும். பொன், பொருள் சேர்க்கையும் உண்டாகும். தந்தை- மக்கள் உறவு பலப்படும். பாசமும் நேசமும் பெருகும். பெண் பிள்ளைகளுக்கு சுபகாரியங்கள் நடைபெறும். படிப்புத்துறையிலும், வேலைத்துறையிலும் முன்னேற்றகரமான திருப்பங்கள்அமையும். பிள்ளைகளின் நல்ல செயல்களும், பிள்ளைகளுக்குக் கிடைக்கும் பெருமையும் பாராட்டும் உங்களுக்கு மகிழ்ச்சியையும், மனஆறுதலையும் தரும். "தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தியிருப்பச் செயல்' என்று திருவள்ளு வரின் தெளிவுரைப்படி பெற்றோர்களுக்கும், "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்' என்ற குறளின் வாசகப்படி பிள்ளைகளும் நடந்துகொள்ளும் வாய்ப்பு உருவாகும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 5-ல் நீசமடைந்தாலும், அவருக்கு வீடுகொடுத்த புதன் அங்கு ஆட்சி என்பதால் சுக்கிரனுக்கு நீசபங்க யோகம் ஏற்படுகிறது. மேலும் 7-ல் குரு அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். எனவே மதிப்பு, மரியாதை, செல்வாக்கு எல்லாம் மிகச்சிறப்பாக இருக்கும். ரிஷப ராசிக்கு 8-ல் சனியும் கேதுவும் இருந்தாலும், ராசியை குரு பார்க்கும் காரணத்தால், சனி- கேதுவினுடைய தோஷம் விலகும். அட்டமத்துச்சனி சிலருக்கு இட மாறுதலை ஏற்படுத்தலாம். திருமண யோகம், புத்திர யோகம், தொழில் யோகம், தனயோகம் போன்ற எல்லா பாக்கியங்களையும் அடையலாம். இடமாறுதல் என்பது வேலை, தொழில், குடியிருப்பு வகையிலும் சனி ஏற்படுத்துவார். அந்த மாறுதல் ஆறுதலைத் தரும்; தேறுதலைத் தரும். அதேசமயம் 2-ஆமிடத்து ராகு- விஷவாக்கு எனச் சொல்லப்படும். ஆகவே, பேசும்போது நிதானமும் பொறுமையும் அவசியம் தேவைப்படும். ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும் என்பதால், மற்றவர்களைப் புண்படுத
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மீனம்.
16-9-2019- மேஷம்.
19-9-2019- ரிஷபம்.
21-9-2019- மிதுனம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திரம்- 1, 2, 3.
செவ்வாய்: பூரம்- 3, 4, உத்திரம்- 1.
புதன்: அஸ்தம்- 1, 2, 3.
குரு: கேட்டை- 3.
சுக்கிரன்: உத்திரம்- 3, 4, அஸ்தம்- 1, 2.
சனி: மூலம்- 4.
ராகு: திருவாதிரை- 4.
கேது: பூராடம்- 2.
கிரக மாற்றம்:
புதன், சுக்கிரன் அஸ்தமனம்.
17-9-2019- கன்னிச் சூரியன்.
17-9-2019- புதன் உதயம்.
20-9-2019- சுக்கிரன் உதயம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 5-ல் திரிகோணமாக இருக்கிறார். அவருக்கு வீடுகொடுத்த சூரியன் அவரோடு சேர்க்கை. சூரியன் ஆட்சி என்பது மட்டுமல்லாமல், மேஷ ராசியின் உச்சநாதனும்கூட. 5-ஆம் பாவம் என்பது மனசு, புத்தி, புத்திரர்கள், மகிழ்ச்சி ஆகியவற்றைக் குறிக்குமிடம். எனவே இதுசம்பந்தப்பட்ட எல்லா பலன்களும் நல்ல முறையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு கிடைக்கும். நீண்டநாள் திட்டங்கள் நிறைவேறும். பொன், பொருள் சேர்க்கையும் உண்டாகும். தந்தை- மக்கள் உறவு பலப்படும். பாசமும் நேசமும் பெருகும். பெண் பிள்ளைகளுக்கு சுபகாரியங்கள் நடைபெறும். படிப்புத்துறையிலும், வேலைத்துறையிலும் முன்னேற்றகரமான திருப்பங்கள்அமையும். பிள்ளைகளின் நல்ல செயல்களும், பிள்ளைகளுக்குக் கிடைக்கும் பெருமையும் பாராட்டும் உங்களுக்கு மகிழ்ச்சியையும், மனஆறுதலையும் தரும். "தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தியிருப்பச் செயல்' என்று திருவள்ளு வரின் தெளிவுரைப்படி பெற்றோர்களுக்கும், "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்' என்ற குறளின் வாசகப்படி பிள்ளைகளும் நடந்துகொள்ளும் வாய்ப்பு உருவாகும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 5-ல் நீசமடைந்தாலும், அவருக்கு வீடுகொடுத்த புதன் அங்கு ஆட்சி என்பதால் சுக்கிரனுக்கு நீசபங்க யோகம் ஏற்படுகிறது. மேலும் 7-ல் குரு அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். எனவே மதிப்பு, மரியாதை, செல்வாக்கு எல்லாம் மிகச்சிறப்பாக இருக்கும். ரிஷப ராசிக்கு 8-ல் சனியும் கேதுவும் இருந்தாலும், ராசியை குரு பார்க்கும் காரணத்தால், சனி- கேதுவினுடைய தோஷம் விலகும். அட்டமத்துச்சனி சிலருக்கு இட மாறுதலை ஏற்படுத்தலாம். திருமண யோகம், புத்திர யோகம், தொழில் யோகம், தனயோகம் போன்ற எல்லா பாக்கியங்களையும் அடையலாம். இடமாறுதல் என்பது வேலை, தொழில், குடியிருப்பு வகையிலும் சனி ஏற்படுத்துவார். அந்த மாறுதல் ஆறுதலைத் தரும்; தேறுதலைத் தரும். அதேசமயம் 2-ஆமிடத்து ராகு- விஷவாக்கு எனச் சொல்லப்படும். ஆகவே, பேசும்போது நிதானமும் பொறுமையும் அவசியம் தேவைப்படும். ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும் என்பதால், மற்றவர்களைப் புண்படுத்தும்படி பேசாமல் கனிவாகப் பேசவேண்டும். இதமாகப் பேசுங்கள், பதமாகப் பேசுங்கள். குடும்பத்திலும் சரி; வெளிவட்டாரத்திலும் சரி- இதைக் கடைப்பிடித்தால் வம்புதும்புகளுக்கு இடமில்லை.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசியில் ஜென்ம ராகு நிற்க, 7-ல் சனி, கேது நின்று ராசியைப் பார்க்கிறார்கள். இதைப் பொதுவாக நாகதோஷம் என்பார்கள். களஸ்திர தோஷம், மாங்கல்ய தோஷம் என்றும் சொல்லலாம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத்தடையும் தாமதமும் ஏற்படும். தடை, தாமதத்தின் எல்லை- ஆண்கள் என்றால் முப்பது வயதிற்குமேல்; பெண்கள் என்றால் இருபத்தைந்து வயதிற்குமேல் திருமணம் ஏற்படும். இப்படி தோஷமுள்ளவர்கள் மேலே குறிப்பிட்ட வயதிற்குமுன்னால் திருமணம் செய்துகொண்டால், கணவன்- மனைவிக்குள் சச்சரவு, பகை, வருத்தம் ஏற்படலாம். தவிர்க்க முடியாமல் தோஷ காலத்திற்குள் திருமணம் செய்யவேண்டுமென்றால், பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும், ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும் செய்துகொள்ள வேண்டும். ஹோமம் செய்ய வசதியில்லா தவர்கள் திருவீழிமிழலைக்கும் (பெண்கள்), திருவேதிக்குடிக்கும் (ஆண்கள்) சென்று வழிபடலாம். திருமணமானவர்களுக்குள் தசாபுக்திகள் பாதகமாக இருந்தால், கணவன்- மனைவிக்குள் ஒற்றுமைக்குறைவும், பிரச்சினைகளும் உருவாகும். அப்படிப்பட்டவர்கள் திருநா கேஸ்வரம், திருப்பாம்புரம் போன்ற தலங்கள் சென்று நாகதோஷ நிவர்த்தி செய்யலாம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 5-ல் குரு திரிகோணம் பெற்று ராசியைப் பார்க்கிறார். "பாட படிக்க, பரதவியம் கற்க, தேட சுகிக்க செலவழிக்க கற்கடகம் சிம்மம் கன்னிக் கல்லாது மற்கிடமேது' என்பது ஜோதிடப் பாடல். பிரம்மதேவன் இந்த உலகத்தைப் படைக்கும்போது கடக லக்னம் உதயமானதாக சாஸ்திரம். இந்த உலக சுகானுபவங்களை முழுமையாக அனுபவிக்கப் பிறந்தவர்கள் இந்த மூன்று ராசிக்காரர்கள்; இந்த மூன்று லக்னத்துக்காரர்கள்தான். அதிலும் நடப்புக் கோட்சாரம்- 10-க்குடைய செவ்வாய் 9-க்குடைய குருவைப் பார்ப்பதால் தர்மகர் மாதிபதி யோகம் ஏற்படுகிறது. தர்மகர் மாதிபதி யோகம் என்றால் என்ன? குருவருளும் இறையருளும் கூடிநின்று அருளும் என்பது பொருள். அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்புக்கு ஆளாக லாம். மற்ற ராசிக்காரர்களும் லக்னத்துக் காரர்களும் இந்த மூன்று ராசி, லக்னத் தாரை கூட்டணி சேர்த்துக்கொண்டு நன்மைகளைப் பங்குபோட்டு அனுப விக்கலாம். அரசியல் பிரமுகர்களும், புகழ்பெற்ற மேதைகளும், ஆராய்ச்சியாளர் களும் இந்த மூன்று ராசி அல்லது லக்னத்துக் காரர்களாகத்தான் இருப்பார்கள். எனவே "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்' என்ற வாசகத்துக்கேற்றபடி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் ஆட்சிபெறுகிறார். அவருடன் சூரியனின் உச்ச ராசிநாதன் செவ்வாய் சேர்க்கை. எடுக்கும் முயற்சிகளில் தோல்வி, துயரம், துன்பமில்லாமல் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடையலாம். வெற்றிக்குப் பஞ்சமில்லை. 4, 9-க்குடைய செவ்வாய் 5-ஆம் இடம் தனுசுவைப் பார்க்கிறார். நீங்கள் எண்ணுகிற எண்ணங்களும், திட்டங்களும் எளிதாக ஈடேறும் வாய்ப்புகள் இயற்கையாகவே அமைகின்றன. 10-ஆமிடம் விஷ்ணு ஸ்தானம், 9-ஆமிடம் லட்சுமி ஸ்தானம் என்று ஒரு விதி உண்டு. 9-ஆமிடத்துக்கு 9-ஆமிடம் 5-ஆமிடம். அதற்கு செவ்வாயின் பார்வை கிடைப்பதால், நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். விரும்பியதெல்லாம் வந்துசேரும். அதைத்தான் அதிர்ஷ்டம் என்பது. 5-க்குடைய குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால், தொழில்துறையிலும், வாழ்க்கை அமைப்பிலும், உத்தியோகம், வேலை, பணியிடங்களிலும் வளர்ச்சியும் முன்னேற்றமும் எளிதாக அமையும். அதாவது 5-திரிகோணம், 10-கேந்திரம். இந்த இரண்டுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. இதைத்தான் வள்ளுவர் "எண்ணிய எண்ணி யாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்று சொன்னார். அதற்கு உதாரணம் விசுவாமித்திரர்தான்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசியில் புதனும் சுக்கிரனும் சேர்க்கை. சுக்கிரன் நீச ராசியில் நின்றாலும், வீடுகொடுத்த புதன் ஆட்சிபெறுவதால் சுக்கிரனுக்கு நீசபங்கம் ஏற்படுகிறது. அத்துடன் 9-க்குடைய சுக்கிரனும், 10-க்குடைய புதனும் ஜென்ம ராசியில் இணைந்திருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். 4, 7-க்குடைய குருவை செவ்வாய் பார்ப்பதால், எதிர்பாராத அதிர்ஷ்ட யோகம் உங்களைத் தேடிவரும். செவ்வாய் 8-க்குடையவர். அவர் 4, 7-க்குடைய குருவைப் பார்ப்பதால், தாயார்வகையிலும், மனைவிவகையிலும் எதிர்பாராத அதிர்ஷ்ட யோகங்கள் வந்தடையும். எதிர்பாராத லாபங்களும், வெற்றிகளும், முன்னேற்றகரமான திருப்பங்களும் எதிர்பார்க்கலாம். சனி, கேது, ராகு மூவரும் குழப்ப கிரகங்கள் என்பதால், யாரிடமும் எந்தவிதமான ஆலோசனைகளையும் கேட்காமல், உங்கள் சொந்த தீர்மானப்படி எதையும் செயல்படுத்தவேண்டும். தலைவலிக் குப் பத்துபேரிடம் மருந்து கேட்டால், பத்துபேரும் பலவிதமாகச் சொல்லி நெற்றியில் பத்துப்போட வைப்பார்கள். உங்கள் சொந்த முடிவுப்படி எதையும் செயல்படுத்துங்கள். உங்களுடைய மனவுறுதியும், வைராக்கியமும், நம்பிக்கையான விடாமுயற்சியும் வெற்றி வாய்ப்பைத் தேடித்தரும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 12-ல் நீச ராசியில் நீசபங்கம் அடைகிறார். அவருக்கு சனி பார்வையும் கிடைக்கிறது. 12-க்குடைய புதனும் சுக்கிரனோடு சேர்ந் திருக்கிறார். 9-ல் ராகு. அதற்கு சனி, கேது பார்வை. தகப்பனார் அல்லது பூர்வீக சொத்துப் பிரச்சினைகளில் உங்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய பங்கு பாகங்கள் தங்குதடையில்லாமல் கிடைப் பதில் தயக்கமும் மயக்கமும் உண்டாகும். நியாயமாகக் கிடைக்கவேண்டிய பங்குபாகங் களைப் பெற உரிமையோடு கொடிதூக்கிப் போராட்டம் நடத்தவேண்டும். ஒருசிலரின் ஆதரவும், ஒருசிலரின் எதிர்ப்பும் ஏற்படும். அதை சமாளிக்கத்தான் வேண்டும். இந்த உலகத்தில் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவனாகவும் மாறவேண்டும். வல்லான் வகுத்ததே வாய்க்கால். 10-ஆமிடத் துக்கு குரு பார்வை கிடைக்காததால், நியாயத்தை மட்டும் நம்பிக் காத்திருப்பதால் பயனில்லை. உரிமைக்காக குரல் கொடுத்துப் போராடவேண்டும். கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும். 9-ஆமிடத்தை குரு பார்ப்பதால், "தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும். தேடுங்கள் கிடைக்கப்படும்.' அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்!
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிக்கு 2020 மார்ச்வரை ஏழரைச்சனி நடந்தாலும், ஜென்ம ராசியில் குரு நிற்க, அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய் குருவைப் பார்ப்பதால், இந்த ஏழரைச்சனி உங்களுக்கு பொங்குசனியாக மாறும். சனி எப்போதும் எல்லாருக்கும் கெட்டவர் என்று சொல்லமுடியாது. பகலிலில் செய்யவேண்டிய காரியங்களை பகலிலிலும், இரவில் செய்யவேண்டிய காரியங்களை இரவிலும்தான் செய்யவேண்டும். சனி இருட்டு கிரகம் என்பதால், இருட்டிலும் உங்களுக்கு நன்மைகள் நடக்க வாய்ப்புண்டு. அதாவது பகலிலில் உழைக்கவேண்டும். இரவில் ஓய்வெடுக்கவேண்டும். இரவு வேலைக்காரர்கள் மாறித்தானே செயல்படுவார்கள்? இதுதான் 4-ஆமிடத்துச் சனியும் கேதுவும் 10-ல் உள்ள ராகுவைப் பார்க்கும் பலன். 7-ஆம் இடத்தை 5-க்குடைய குரு பார்க்கிறார். அதனால் 7-க்குடைய சுக்கிரனின் நீசத்தன்மை மாறும். நல்ல இடத்து சம்பந்தம் அமையும். நல்ல கணவன், நல்ல மனைவி யோகம் உண்டாகும். ஏற்கெனவே மணமானவர்களுக்கு மனைவி, மக்கள் ஆதரவு கைகொடுக்கும். முன்னேற்றப் பாதையில் பயணிக்கலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசியில் சனி, கேது. 7-ல் ராகு. ராசிநாதன் குரு 12-ல் மறைவு. ஆயுள் தீர்க்கம் என்றாலும், ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் உருவாகும். சிலருக்கு சளித்தொல்லை. சிலருக்கு காய்ச்சல், சோர்வு, தலைவலிலி. சிலருக்கு அசதி. சிலருக்கு அசமந்தம், தூக்க மயக்கம். இப்படி ஏதாவது சில நச்சுப் பிணிகள் உங்களை தொந்தரவு செய்வதால் உற்சாகமிழந்து காணப்படுவீர்கள். 5-க்குடைய செவ்வாய், ராசிநாதன் குருவைப் பார்ப்பதால், எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு உற்சாகமாக செயல்பட உங்களைத் தயாரித்துக் கொள்ளுங்கள். அதாவது உஷாராக இருங்கள். முழுக்க நனைந்தவனுக்கு முக்காடு எதற்கு? குளிர் காலத்தில் பச்சைத் தண்ணீரில் குளிப் பதற்கு யோசனையாகத்தான் இருக்கும். இரண்டு செம்பு தண்ணீர் தலையில் விழுந்தவுடன் குளிர் மறைந்துவிடும்; உற்சாகம் பிறந்துவிடும். அதுமாதிரிதான் இந்த ஏழரைச்சனியில் எந்த ஒரு காரியத்தையும் துவங்கும்முன் மயக்கமாகவும் தயக்கமாகவும் இருக்கலாம். "மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா?' என்று கவியரசரின் வரிகளை நினைவுகூர்ந்து செயல்படுங்கள்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு; கேதுவுடன் சேர்க்கை; ராகுவின் பார்வை. சனிக்கு வீடுகொடுத்த குரு சனிக்கு 12-ல் மறைவு; ராகுவுக்கும் 6-ல் மறைவு. ஏழரைச்சனியில் விரயச்சனி. நீங்கள் கெட்டிக்காரர்தான். சாமர்த்தியசாலிலிதான். ஆனால் இப்போது எதையுமே சாதிக்கமுடியவில்லையே. "சமர்த்தன் சந்தைக்குப்போனால் வாங்கவும் மாட்டான்; விற்கவும் மாட்டான்' என்பது பழமொழி. அப்படித்தான் வாழ்நாள் வீண் நாளாக ஓடுகிறது. 5-ஆமிடத்து சுக்கிரன் நீசமாக இருப்பதால், சிலசமயம் தேவையற்ற சந்தேகங்கள் கற்பனை பயத்தை உண்டாக்கும். ஒரு திரைப்படத்தில் ஒரு கல்யாண வீட்டிற்கு நாகேஷ் வருவார். மணமேடை அருகில் ஒரு குத்துவிளக்கு எரிந்துகொண்டிருக்கும். மேடையை அலங்கரிக்கும் திரைச்சீலை காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும். உடனே திரைச்சீலை குத்து விளக்கின் நெருப்பில் சிக்கி எரிவதுபோலவும், கல்யாணப்பந்தலும், சுற்றியுள்ள இடமும் தீக்கரையாகி பாதிப்பதுபோலவும் நாகேஷ் கற்பனை செய்து அழ ஆரம்பித்துவிடுவார். இப்படி உங்கள் கற்பனை பயமும் விபரீத விளைவுகளை உருவகப்படுத்துவதால் அதற்கு இடம்தராமல் செயல்படுங்கள்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம் பெற்றாலும், அந்த வெற்றியை முழுமையாக அனுபவிக்கவிடாமல், அவரோடு சம்பந்தப்படும் கேதுவும் ராகுவும் தடுப்பார்கள். கலிலிங்கத்துப் போரில் அசோகச் சக்கரவர்த்தி எதிரிகளைக் கொன்று குவித்து, முழுவெற்றி அடைந்தபிறகு, யுத்த களத்தை வட்டமிட்டுப் பார்த்தபோது, அங்கு நிலவிய மயான அமைதி அவர் மனதில் சோகத்தை எழுப்பியது. இத்தனை மனிதர்களைப் பலிலிகொண்டு பெற்ற வெற்றி ஒரு வெற்றியா என்று வருத்தப்பட்டார். அப்போது ஒரு பௌத்தத் துறவி வந்து, மனித உறவின் மாண்புகளை அசோகருக்கு உபதேசித்தார். அப்போதுதான் அசோகர் போர்க்குணத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அகிம்சா தர்மத்தை ஏற்று, பௌத்த மதத்தை வளர்க்கப் பாடுபட்டார். அதன் நினைவாகத்தான் பாரத நாட்டின் அரசியல் சின்னமாக அசோகச் சக்கரத்தை உருவாக்கினார்கள். வலுவானவன் வலுவற்றவனை வீழ்த்துவது வெற்றி அல்ல. அவரவர் மனதிலே எழும் காம குரோத லோப மோக மத மாச்சர்யங்களை அடக்கி ஜெயிப்பதுதான் வாழ்க்கையின் வெற்றி.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
ராசிநாதன் குரு ராசியைப் பார்க்கிறார். இது ஒருவகையில் பலம். அத்துடன் 10-க்குடைய குரு 9-ல் நிற்பது இன்னொரு வகையில் பலம். 9-க்குடைய செவ்வாய் 6-ல் மறைந்தாலும் 10-க்குடைய குருவைப் பார்ப்பது மற்றொரு வகையில் பலம். எனவே இந்த மூன்று பலங்களும் உங்களை வழிநடத்துவதால், முப்படை பலம் எனப்படும். (தரைப்படை, கப்பற்படை, விமானப்படை). அதனால் 4-ஆம் இடத்து ராகுவும், 10-ஆமிடத்து சனி- கேதுவும் உங்கள்மீது படையெடுத்தாலும் அவற்றை நிலைகுலையச்செய்து வெற்றிபெறலாம். உங்கள் வெற்றிக்கு- திருமணமானவர்களுக்கு மனைவி உறுதுணையாக இருப்பதுபோல், திருமணமாகாதவர் களுக்குத் தாயார் துணையாக இருப்பார். (தாய்க்குப் பின் தாரம்). இந்த இரண்டு அமைப்பும் இல்லாதவர்களுக்கு குருவே துணையாக அமைந்து வழிநடத்துவார். தெய்வம்தான் குரு. குருதான் தெய்வம். இந்த உலகத்தில் எதை சாதிக்க வேண்டும் என்றாலும், குருவருளும் திருவருளும் முதலிலில் வேண்டும். பிறகுதான் பண பலமும் படைபலம் போன்ற ஆற்றல் களும். ஆக, குருவருளும் திருவருளும் மீன ராசிக்காரர்களுக்கும் லக்னத்துக்கும் உண்டு.