ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரகப் பாதசாரம்:
சூரியன்: புனர்பூசம்- 2, 3, 4.
செவ்வாய்: உத்திரட்டாதி- 4, ரேவதி- 1.
புதன்: திருவாதிரை- 2, 3, 4.
குரு: உத்திராடம்- 1
சுக்கிரன்: ரோகிணி- 3, 4.
சனி: உத்திராடம்- 1.
ராகு: மிருகசீரிஷம்- 3.
கேது: மூலம்- 1.
கிரக மாற்றம்:
குரு, சனி வக்ரம்.
16-7-2020- கடகச் சூரியன்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மீனம்.
13-7-2020- மேஷம்.
15-7-2020- ரிஷபம்.
18-7-2020- மிதுனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைந்தாலும், அவருக்கு வீடுகொடுத்த குரு ராசிக்கு ஒன்பதிலும், செவ்வாய்க்குப் பத்திலும் ஆட்சிபெறுவதால் மறைவு தோஷமில்லை. ராமபிரான் வாலியைத் தாக்கும்போது மறைந்திருந்துதான் அம்பெய்தார். ஏனென்றால், வாலிக்கு நேரெதிரில் நின்று போர் புரிகிறவர்களின் பலத்தில் பாதி வாலிக்குப் போய்ச்சேர்ந்து விடும். இந்த வரத்தை வாலி பெற்றிருந்தான். யுத்த தர்மத்தில், மறைந்திருந்து தாக்குதல் என ஒரு யுத்த தர்மம் உண்டு. இதனைக் "கொரில்லா போர்' என்பார்கள். சில காரியங்களில் "இலை மறைவுக் காய்' என்பார்கள். தமிழ் இலக்கணத்தில் மறைபொருள் இலக்கணம் என ஒரு நியதி- முறை உண்டு. எனவே, மறைவு என்பது ஒரு மரபுதான்; அது குற்றமாகாது- தோஷமாகாது. ஜாதகத்தில்கூட "மறைந்த புதன் நிறைந்த தனம்' எனும் ஒரு விதியுண்டு. தவிரவும், ராசிக்கோ லக்னத்துக்கோ 6, 8, 12-ல் மறையும் ஒரு கிரகம் மற்றொரு பாவகத்துக்கு (வீட்டுக்கு) கேந்திர- திரிகோணம் பெறும். ஆகவே, மறைவு கெடுதல் பலனைத் தரும் எனக் கருதவேண்டாம். நடைமுறையில், ஒரு மனிதனைக் கொல்வது பாவமாகும் அல்லது குற்றமாகும். இதற்குத் தண்டனை உண்டு. ஆனால், குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் ஊழியருக்கு பாவமோ- குற்றமோ- தண்டனையோ உண்டா? இதைத்தான் பகவத் கீதையில் கண்ண பரமாத்மா, "எல்லாம் நானே செய்கிறேன். எல்லா பாவபுண்ணியமும் என்னையே வந்தடையும்' என்றார். அசுத்தங்கள் கலக்கும் கங்கைக்குத் தீட்டு உண்டா? "தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக்கூடாது' என்பார்கள்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிக்கு 2020 டிசம்பர்வரை அட்டமத்துச்சனி நடக்கிறது. என்றாலும், 9-க்குடைய சனி 10-க்குடைய குருவோடு சேர்வ தால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டா கிறது. எனவே, 8-ஆமிடத்துத் தோஷம் பாதிக் காது. மேலும், ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். ஒரு ஜாதகத்தில் ராசிநாதனோ லக்னநாதனோ பலம்பெற்றால், அந்த ஜாதகருக்கு மற்ற கிரகங் களால் ஏற்படும் எல்லாக் குற்றங்களுக்கும் விதிவிலக்கு உண்டு. "ஒருவழிப்பாதை'யில் (நோ என்ட்ரி) காவல்துறை வாகனமோதீயணைப் புத்துறை வாகனமோ அவசரக் காலத்தில் போவது சட்டப்படி குற்றமாகாது அல்லவா? அதுபோல, குடும்ப ஸ்தானத்திற்கு ராகு- கேது சம்பந்தமிருப்பதால், அட்ட மத்துச்சனி நடக்கும் இந்தக் காலத்தில் ஒருசிலருக்கு குடும்பத்தில் குழப்பங்களும் பிரச்சினைகளும் உண்டாக லாம். அந்தசமயம்,
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரகப் பாதசாரம்:
சூரியன்: புனர்பூசம்- 2, 3, 4.
செவ்வாய்: உத்திரட்டாதி- 4, ரேவதி- 1.
புதன்: திருவாதிரை- 2, 3, 4.
குரு: உத்திராடம்- 1
சுக்கிரன்: ரோகிணி- 3, 4.
சனி: உத்திராடம்- 1.
ராகு: மிருகசீரிஷம்- 3.
கேது: மூலம்- 1.
கிரக மாற்றம்:
குரு, சனி வக்ரம்.
16-7-2020- கடகச் சூரியன்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மீனம்.
13-7-2020- மேஷம்.
15-7-2020- ரிஷபம்.
18-7-2020- மிதுனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைந்தாலும், அவருக்கு வீடுகொடுத்த குரு ராசிக்கு ஒன்பதிலும், செவ்வாய்க்குப் பத்திலும் ஆட்சிபெறுவதால் மறைவு தோஷமில்லை. ராமபிரான் வாலியைத் தாக்கும்போது மறைந்திருந்துதான் அம்பெய்தார். ஏனென்றால், வாலிக்கு நேரெதிரில் நின்று போர் புரிகிறவர்களின் பலத்தில் பாதி வாலிக்குப் போய்ச்சேர்ந்து விடும். இந்த வரத்தை வாலி பெற்றிருந்தான். யுத்த தர்மத்தில், மறைந்திருந்து தாக்குதல் என ஒரு யுத்த தர்மம் உண்டு. இதனைக் "கொரில்லா போர்' என்பார்கள். சில காரியங்களில் "இலை மறைவுக் காய்' என்பார்கள். தமிழ் இலக்கணத்தில் மறைபொருள் இலக்கணம் என ஒரு நியதி- முறை உண்டு. எனவே, மறைவு என்பது ஒரு மரபுதான்; அது குற்றமாகாது- தோஷமாகாது. ஜாதகத்தில்கூட "மறைந்த புதன் நிறைந்த தனம்' எனும் ஒரு விதியுண்டு. தவிரவும், ராசிக்கோ லக்னத்துக்கோ 6, 8, 12-ல் மறையும் ஒரு கிரகம் மற்றொரு பாவகத்துக்கு (வீட்டுக்கு) கேந்திர- திரிகோணம் பெறும். ஆகவே, மறைவு கெடுதல் பலனைத் தரும் எனக் கருதவேண்டாம். நடைமுறையில், ஒரு மனிதனைக் கொல்வது பாவமாகும் அல்லது குற்றமாகும். இதற்குத் தண்டனை உண்டு. ஆனால், குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் ஊழியருக்கு பாவமோ- குற்றமோ- தண்டனையோ உண்டா? இதைத்தான் பகவத் கீதையில் கண்ண பரமாத்மா, "எல்லாம் நானே செய்கிறேன். எல்லா பாவபுண்ணியமும் என்னையே வந்தடையும்' என்றார். அசுத்தங்கள் கலக்கும் கங்கைக்குத் தீட்டு உண்டா? "தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக்கூடாது' என்பார்கள்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிக்கு 2020 டிசம்பர்வரை அட்டமத்துச்சனி நடக்கிறது. என்றாலும், 9-க்குடைய சனி 10-க்குடைய குருவோடு சேர்வ தால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டா கிறது. எனவே, 8-ஆமிடத்துத் தோஷம் பாதிக் காது. மேலும், ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். ஒரு ஜாதகத்தில் ராசிநாதனோ லக்னநாதனோ பலம்பெற்றால், அந்த ஜாதகருக்கு மற்ற கிரகங் களால் ஏற்படும் எல்லாக் குற்றங்களுக்கும் விதிவிலக்கு உண்டு. "ஒருவழிப்பாதை'யில் (நோ என்ட்ரி) காவல்துறை வாகனமோதீயணைப் புத்துறை வாகனமோ அவசரக் காலத்தில் போவது சட்டப்படி குற்றமாகாது அல்லவா? அதுபோல, குடும்ப ஸ்தானத்திற்கு ராகு- கேது சம்பந்தமிருப்பதால், அட்ட மத்துச்சனி நடக்கும் இந்தக் காலத்தில் ஒருசிலருக்கு குடும்பத்தில் குழப்பங்களும் பிரச்சினைகளும் உண்டாக லாம். அந்தசமயம், சுக்கிரன், புதன் பரிவர்த்தனையாக இருப்பதாலும், குரு பார்வை யாலும் ராகு- கேது தோஷம் விலகும். குரு பார்க்கக் கோடி தோஷம் விலகும் என்பார்கள். அட்டமத்துச்சனி காரண மாக, அவ்வப்போது குடும்பத் தில் சில பிரச்சினைகள் உருவானாலும், பொருளா தாரத்தில் நெருக்கடி சூழ்நிலை ஏற்பட்டாலும் எல்லாவற்றையும் சமாளிக்க லாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் ஆட்சியாக இருக்கிறார். அவரை 7, 10-க்குரிய குருவும் பார்க்கிறார்; 8, 9-க்குரிய சனியும் பார்க்கிறார். எந்தவொரு பிரச்சினையிலும் நீங்கள் எடுக்கும் தனிப்பட்ட முடிவுகள் தர்மசங் கடத்தை ஏற்படுத்தும். திருமணமானவர்கள் மனைவி, மக்கள் செயல்பட்டாலும், திருமண மாகாதவர்கள் பெற்றோர் அல்லது பெரியோர் களின் ஆலோசனைப்படி செயல்பட்டாலும் எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிக்கலாம். அதனால்தான், பெரியவர்கள் ஒரு கை ஓசை தராது என்றார்கள். தேர்தல் காலத்தில், அரசியல் கட்சிகளும்கூட கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு வெற்றிபெற்றபின் ஆட்சியமைக்கின்றன. கலவரம் நடக்கும்போது கூட்டத்தினர் கும்பலாகச் சேர்ந்து தாக்கும்போது தண்டனையிலிருந்து தப்பிக்க வழியுண்டு. தனிப்பட்ட முறையில் தாக்கினால், அது சட்டவிரோதமாகும். அதனால்தான், "கூட்டுறவே நாட்டுறவு' என்று சொன்னார்கள்போலும்! 9-க்குரிய குருவும் 10-க்குரிய சனியும் இணைந்திருப்பது "தர்மகர்மாதிபதி யோகம்' என்று ஏற்கெனவே குறிப்பிட்டேன். சிலருக்குப் பெற்றோரால், சிலருக்குக் கணவர் அல்லது மனைவியாலும் இந்த யோகம் அமையும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 6-ல் குரு, சனி, கேதுவும், 12-ல் சூரியன், புதன், ராகுவும் மறைகிறார்கள். அதனால், ஒரு சிறிய காரியத்தைச் செய்துமுடிக்கக்கூட கடும் பிரயாசை எடுக்கக்கூடும். காரியத்தடையால், எட்டாத திராட்சைப் பழத்தை நினைத்து "சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்...' என்று நரி விலகிப்போனமாதிரி, நீங்கள் மனம் தளர்வடையக்கூடாது. "அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்' என்பது போலவும், "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், என்பதுபோலவும் செயல்பட்டால் உங்களின் விடாமுயற்சி வெற்றிபெறும். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. தோல்வி என்றுமே முடிவா காது. வெற்றி என்றுமே முடிவடையாது என்பதைக் கருத்திற்கொண்டு செயல் படுங்கள். நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம். 6, 12-ல் முக்கியமான கிரகங்கள் மறைவு பெற்றாலும், 9-ல் 10-க்குரிய செவ்வாய் இருப்பது ஒரு பலம்தான். இது, தர்மகர்மாதிபதி யோகமாகும். தர்மகர்மாதிபதி யோகமுள்ள ஜாதகங் கள் சிலந்திப்பூச்சிமாதிரி சறுக்கி சறுக்கி கீழே விழுந்தாலும், மீண்டும் வலைபின்னி மேலே போய்க்கொண்டிருப் பதைப்போல, தாழ்வில்லை, வீழ்ச்சியில்லை. முன்னேறலாம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
எந்தவொரு முகூர்த்த லக்னத்திற்கும் 11-ல் சூரியன் நிற்கும்படி லக்னம் அமைத்துக் கொடுத்தால், அந்தக் காரியம் வாழ்வாங்கு வளர்ச்சியடையும். அதன்படி, உங்கள் ராசிக்கு 11-ல் சூரியனும் புதனும் இருப்பது எல்லா வகையிலும் வெற்றிக்கு அறிகுறியாகும். அத்துடன், ராகு நிற்பதும், குரு, சனி, கேது பார்ப்பதும் வெற்றிக்குத் துணைபுரியும். 10-க்குரிய சுக்கிரன் ஆட்சிபெறுவதால், உங்களுடைய முயற்சிகள் அனைத் தும் முழுவெற்றியடையும். தொழில் வளம்பெறும். தேகம் நலம்பெறும். கல்வி பலம்பெறும். மேலும், 5-ல் குரு ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பதும், ராசிநாதன் சூரியனைப் பார்ப்பதும் நன்மையாகும். எண்ணங்கள் ஈடேறும். மகாகவி பாரதியார், ""எண்ணிய முடிதல் வேண்டும். நல்லவே எண்ணவேண்டும். திண்ணிய நெஞ்சம் வேண்டும். தெறிந்த நல்லறிவு வேண்டும். பண்ணிய பாவங்களெல்லாம் பரிதிமுன் பனியேபோல நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்'' என்று பாடியமாதிரி, உங்களுக்கு எல்லாம் இனிதாக அமையும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 10-ல் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் சூரியன், ராகு சம்பந்தம். 4, 7-க்குரிய குரு பார்வை. 8, 9-க்குரிய சனியும் பார்க்கிறார். 9-க்குரிய சுக்கிரன் 9-ல் ஆட்சி. ஒருசிலர் ஆன்மிகவழியில் சுபச்செலவுகள் செய்யலாம். கோவில் திருப்பணி, தர்ம ஸ்தாபனம், பொதுநலக் காரியங்களில் ஈடுபடலாம். சிலர் ஆன்மிகச் சுற்றுலா போகலாம். சிலர் சமூக சேவையில் ஈடுபடலாம். நீண்டநாள் கனவுகளையும் திட்டங்களையும் நிறைவேற்றலாம். இப்படிப்பட்ட செயல்களால் கைப்பொருள் செலவானாலுங்கூட பேரும்புகழும் அடைவதால் ஆத்ம திருப்தியடையலாம். சிலர் தொழில்ரீதியான புதுமுயற்சிளை மேற்கொண்டு வெற்றிகரமாக செயல்படுத்தலாம். பணியாளர்களுக்குப் பதவி உயர்வு, விரும்பும் இடப்பெயர்ச்சி, புதிய வேலை போன்ற யோகங்களை அடையலாம். வேலை விஷயமாக சிலர் வெளியூர்ப் பயணம் அல்லது வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளலாம். குறிப்பாக, ராகு, கேது தசாபுக்தி நடப்பவர்களுக்கு மேற்படி யோகம் அமையும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைந் தாலும் ஆட்சிபெறுகிறார். 8-ஆமிடம் என்பது ஆண்களுக்கு ஆயுள் ஸ்தானம், பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம். பெண்களுக்கு மாங்கல்ய ஆயுள் ஸ்தானம் என்பது எட்டுக்கு எட்டாமிடமாகிய மூன்றாமிடம். சிலர் 12-ஆமிடத்தையும் கூறுவார்கள். ஒரு ஜாதகத்தில் 2- ஆமிடமும், 9-ஆமிடமும் வலுவாக இருந்தால் தன பாக்கியம் நிறைந்த செல்வம் இருக்கும் என்பது விதி. அந்த ஜாதகத்தில் 12-ஆமிடமும் பலம்பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் அவர் எல்லா சுகபோகங்களையும் அனுப விக்கமுடியும். எனக்குத் தெரிந்த ஒரு நபர் கோடீஸ்வரர். அவரிடம் விலை உயர்ந்த கார் இருந்தது. ஆனால், அவர் உடம்பில் எல்லா நோய்களும் இருந்தன. ஆகவே, டாக்டர் அவரை எங்கும் அலையக்கூடாது, வெளியில் போகக்கூடாதென்று கட்டுப்பாடு செய்துவிட்டார். அந்தக் காரின் டிரைவர் அந்தக் காரைப் பயன்படுத்தி காய்கனி வாங்குவதுமுதல் தன் பிள்ளைகளைப் பள்ளியில் விடுவதுவரை அனைத்து வகையிலும் அனுபவித்தார். அதுதான் எடுத்துவைத்தாலும் கொடுத்துவைக்க வேண்டுமென்பது. ஜாதகத்தில் பாவகம், பாவக அதிபதி, பாவகக்காரகன் என மூன்று நிலையுண்டு. ஆங்கிலத்தில் "என்ஜாய் மென்ட்,' "என்ஜாயர்,' "த்ரூவிச்' என மூன்று நிலையைச் சொல்லும். பல அரசியல்வாதிகள் பினாமி பெயரில் சொத்துகளை வாங்கு வார்கள். உடமையாளர்கள் அனுபவிக்கா விட்டாலும் பினாமிகள் அதை அனுபவிப் பார்கள்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் குரு வீட்டில் (மீனத்தில்) திரிகோணமாக இருக்கிறார். குரு 2-ல் தனுசு ராசியில் ஆட்சியாக இருக்கிறார். செல்வாக்கு, சொல்வாக்கு ஆகியவற்றில் குறையேதுமில்லை. அதேசமயம், 2-ல் சனி, கேது, 8-ல் சூரியன், புதன், ராகு இருப் பதால் நிறை என்னும் திருப்தியடைய முடியாது. திருமண விருந்துச் சாப் பாட்டில் கடைசிப் பந்தியில் உட்காருபவர் களுக்கு அப்பளம், வடை, பாயசம் தீர்ந்துவிட்டது என்று சொல்வதுபோல- ஒன்று இருந்தால் மற்றொன்று இருக்காது என்பதுபோல- உங்கள் எண்ணங்களும் ஆசைகளும் நியாயமானதாகவே இருந்தாலும் எல்லாம் நிறைவேறாது. ஒரு திரைப்படத்தில் நடிகர் ரஜினி காந்த்,""கிடைக்காததை நினைத்து ஏங்குவதைவிட கிடைத்ததைக்கொண்டு திருப்தியடைய வேண்டும்'' என்பார். அப்படி மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். 7-ல் சுக்கிரன் ஆட்சி என்பதாலும், 5-ல் ராசிநாதன் செவ்வாய் 9-க்குடைய சந்திரனோடு சேர்ந்திருப் பதாலும் உங்கள் வெற்றிக்கு ஒரு பெண் பின்பலமாக இருப்பார். அது தாயாகவும் இருக்கலாம், சகோதரியாகவும் இருக்க லாம். காமவெறியனான அருணகிரி நாதருக்கு ஞானம் புகட்டி ஆன்மிக வாழ்க்கையில் திருப்பியவர் அவருடைய சகோதரிதான்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடக்கிறது. ராகு- கேது சம்பந்தம். அதனால், மனதளவிலும் உடல் நலத்தளவிலும் ஏதாவது பிரச்சினை இருந்துகொண்டேதான் இருக்கும். என்றாலும், ராசிநாதன் குரு ஜென்மத்தில் ஆட்சிபெறுவதால், காய்ச்சல் இருந்தாலும் "கொரோனா' தொற்று இல்லையென ரிசல்ட் வருவதுபோல உங்களுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கும். பணிச்சுமை அல்லது பொருளாதார நெருக்கடி, கடன் கவலை ஆகிய மூன்றும் உங்கள் சந்தோஷத்தைக் கெடுக்கும். எனினும், "கழுவின மீனில் நழுவின மீனைப்போல' பாதிப்பு களிலிருந்து விடுபடலாம். வருமுன் காப்போன், வந்தபின் காப்போன், வந்தபின்னும் காவாதவன் என மூன்று நிலையுண்டு. ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால், "வருமுன் காப்போன்' என்னும் சொல்லுக்கு லட்சணமாகத் திட்டமிட்டு செயலாற்றி, பாதிப்புகளிலிருந்து விடுபடுவீர்கள். ஜாதக தசாபுக் திகள் பாதகமாக இருப்பவர்களுக்கு மட்டும் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை பிரச்சினைகளை சந்திக்க நேரும். வள்ளுவர் சொல்லிய "எண்ணித் துணிக கருமம்' என்பதுபோல சிந்தித்து செயல் பட்டால் சங்கடங்களை சமாளிக்கலாம்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. 2020 டிசம்பர்வரை விரயச்சனி நடக்கும். இந்த விரயச்சனிக் காலத்தை சுபவிரயமாக மாற்றிக்கொள்வது உங்கள் சாமர்த்தியம். சந்திர தசை, சந்திர புக்தி நடப்பவர்கள் இடமாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம், குடியிருப்பு மாற்றம் போன்ற மாற்றங்களை சந்திக்கலாம். அந்த மாற்றங்கள் ஏற்றமான மாற்றங்களாக அமைய திங்கள்கிழமைதோறும் சிவனுக்குப் பாலபிஷேகம் செய்யலாம். வசதி இருப்பவர்கள் ருத்ரஹோமம் செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம். சந்திரன் பாலுக்கு அதிபதி. சிவன்- சந்திரசேகரன், பிறைசூடிய பெருமான் ஆவார். 5-ல் சுக்கிரன் ஆட்சி. 6-ல் புதன் ஆட்சி. மனைவி, மக்கள் வகையில் அத்தியாவசியச் செலவுள் ஏற்பட இடமுண்டு. அதற்கான கடன் வாங்கவும் அவசியமாகும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகளும் நடைபெறும். சிலருக்கு கோவில் திருப்பணி செலவுகள் ஏற்பட இடமுண்டு. சிலர் கோவிலுக்குப் பிரார்த் தனை செய்து காணிக்கை முடிந்து வைக்கலாம். கோவில் திறந்தபிறகு, வழிபாடு செய்யலாம். காணிக்கைகளைச் செலுத்தலாம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்பம் என்றால் குடம் என்று அர்த்தம். நிறைகுடம் தழும்பாது. குறைகுடம் தழும்பும். அப்படி கும்ப ராசிக்காரர்களுள் இரண்டு ரகத்தினரும் உண்டு. தன்னடக்கம் நிரம்பிய வர்களும் உண்டு; அரைகுறையாகத் தெரிந்து நிறைவாகத் தெரிந்ததுபோல பேசுபவர்களும் உண்டு. உண்மையில் இந்தக் காலத்தில் இரண்டாவது ரகம்போல இருந் தால்தான் பிழைக்கமுடியும். அன்றைக்கே அவ்வை மூதாட்டி, ""விரல் நிறைய மோதிரங்கள் வேண்டும். விரகர் இருவர் புகழ்வாகும் வேண்டும், அரையதினில் பஞ்சேனும் பட்டேனும் வேண்டும், அவர் கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று'' என்று பாடினார். இதைத்தான் கிராமத்தில் "ஆள்பாதி ஆடைபாதி' என்பார்கள். அதனால், உங்கள் சொல்லும் செயலும் நியாயத்தின் அடிப்படையில் இருந்தாலும், சபையில் ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உங்கள் தோற்றத்தை வைத்துத்தான் முடிவெடுக்கப்படும். "ஏழைசொல் அம்பலம் ஏறாது' என்று இதை வைத்துத்தான் சொன்னார்கள். எண்கணிதப்படி, சனி 8-க்கு அதிபதி. சனி என்றாலே பொய்மை, திருட்டு, இழப்பு, ஏமாற்றம், தோல்வி ஆகியவற்றையெல்லாம் குறிப்பிடும். தவறான வழியில் பொருள் சேர்ப்பவர்களுக்கு சனியின் ஆதிக்கம் அதிகம் தேவைப்படும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சி, வக்ரம். ஜென்ம ராசியில் 2, 9-க்குரிய செவ்வாய் பலம்பெறுகிறார். 10-க்குரிய குரு 10-ல் ஆட்சி. 9- என்பது திரிகோண ஸ்தானம். 10- என்பது கேந்திர ஸ்தானம். திரிகோணம் என்பது தெய்வானுகூல ஸ்தானம், அதிர்ஷ்ட ஸ்தானம் எனச் சொல்லலாம். கேந்திரம் என்பது முயற்சி ஸ்தானம். உழைப்புக்கேற்ற கூலி கிடைப்பது கேந்திர ஸ்தானத்தின் பலன். அதற்கு போனஸாகக் கிடைப்பது திரிகோண ஸ்தானத்தின் பலன்- ஹோட்டல்களில் டிப்ஸ் கொடுப்பதுபோல. ஆக, முயற்சியும் வேண்டும், அதிர்ஷ்டமும் வேண்டும். முயற்சி இல்லாத சோம்பேறிகளுக்கு அதிர்ஷ்டம் ஒரு நூலிழையில் மாறி விடும். அதனால்தான், வள்ளுவர், "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன்மெய் வருத்தக் கூலி தரும்' என்றார். 9-க்குரிய திரிகோணாதிபதி ஜென்ம ராசியில் நிற்பதும், 10-க்குரிய கேந்திரா திபதி 10-ல் ஆட்சிபெறுவதும் உங்களுக்கு திரிகோணமும் பலமாகிறது; கேந்திரமும் பலமாகிறது. காமராஜர் காலத்தில் பூவராகன் என்ற ஒருவர் எம்எல்ஏ ஆனார். அவர் சார்ந்த சமூகத்திற்கு மந்திரிப் பதவி கொடுக்கவேண்டுமென்று காமராஜர் விரும்பி அவரை அழைத்தார். இரவோடு இரவாக லாரியில் பயணம் செய்து காமராஜரைப் பார்த்து பதவி ஏற்றுக்கொண்டார்.