ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மகரம்.
3-12-2019- கும்பம்.
5-12-2019- மீனம்.
7-12-2019- மேஷம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: அனுஷம்- 4, கேட்டை- 1, 2.
செவ்வாய்: சுவாதி- 2, 3.
புதன்: விசாகம்- 3, 4, அனுஷம்- 1, 2.
குரு: மூலம்- 2, 3.
சுக்கிரன்: மூலம்- 4, பூராடம்- 1, 2.
சனி: பூராடம்- 2.
ராகு: திருவாதிரை- 3.
கேது: பூராடம்- 1.
கிரக மாற்றம்:
3-12-2019- விருச்சிக புதன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். அதனால் ஆயுள், ஆரோக்கியம், செல்வாக்கு, செயல்பாடு ஆகியவற்றுக்குக் குறைவில்லை. 6-க்குடைய புதன் அவருடன் சம்பந்தம். சிலருக்கு கடன் தொல்லை, சிலருக்கு போட்டி, பொறாமையால் தொல்லை, சிலருக்கு வைத்தியச் செலவு, தனக்கோ- மனைவிக்கோ (வாழ்க்கைத்துணைக்கு) உடல்பிணி அல்லது மனப்பிணி, சஞ்சலம் காணப்படலாம். கடுமையாக உழைக்கும் பெண்மணி களுக்கு படபடப்பு, கைகால் உளைச்சல் போன்ற நச்சுப் பிணிகளும், உபாதைகளும் ஏற்படலாம். இருந்தாலும் பாக் கியாதிபதி குரு 9-ல் ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பதால், எந்த பாதிப்புக்கும் இடம் ஏற்படாது. மேலும் 10-க்குடைய சனி 9-ல் 9-க்குடையவரோடு சேர்க்கை என்பதால்- தர்மகர்மாதிபதி யோகம் இருப்பதால் எந்த சங்கடமும், சஞ்சலமும் உங்களை அணுகாது. உடல் தைரியத்தைவிட மனதைரியம் 100 சதவிகிதம் இருப்பதால் வைராக்கியமாக செயல்பட்டு சாதனை படைக்க லாம். மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிப்பது போலவும், தும்மல் வருவது போலவும் சிறுசிறு தொந்தரவுகள்தானே தவிர, பயப் படுமளவு பாதிப்பு எதற்கும் இடம் ஏற்படாது. தந்தைவழி கவலை சிலருக்கு சிந்தையில் புகுந்து தொந்தரவு ஏற்படுத்த லாம். சொக்கநாத வெண்பாவில் "அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்- அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்- எவரெவர்க் குதவினர்- எவரெவர்க்குதவிலர்- தவரவர் நினைவது தமை உணர்வதுவே' என்று ஒரு பாடல் உண்டு. அவரவர் அவரவரைப் புரிந்துகொண்டால் போதும்; உணர்ந்துகொண்டால் போதும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிக்கு அட்ட மச்சனி நடப்பது மட்டுமல்ல; அட்டமத்தில் குரு, சுக்கிரன், கேதுவும் மறைவு. அட்டமத்தில் அட்டமாதிபதி குரு ஆட்சி என்பதால் பாதிக்காது என்றாலும், சனி, கேது- ராகு சம்பந்தம் என்ப தாலும்; 6-க்குடைய சுக்கிரனும் சேர்க்கை என்பதாலும் கவலை களும், கற்பனை பயமும் ஏற்படும்! சிலருக்கு வெளி யிலுள்ளவர்களாலும், சிலருக்கு வீட்டிலுள்ளவர்களாலும் பிரச்சினைகள் உருவாகி வேதனை உண்டாக்கும். 8-ஆம் இடம் சஞ்சலம் மட்டுமல்ல; ஏமாற்றம், இழப்பு, கௌரவப் போராட்டம் ஆகியவற்றையும் குறிக்கும் இடம். ஜாதகரீதியாக 6, 8, 12-க்குடைய தசாபுக்திகள் நடந்தால், கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாக எப்போதோ நடந்துமுடிந்த பிரச்சினைகள் புத்துயிர் பெற்று புறப்பட்டுவந்து, வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதுபோல நொந்து நோகவைக்கும். பரிகாரம் தேடி ஆலயம் சென்றாலும் அங்கும் கதவு அடைத்திருக்கும். ஆறுதல் வேண்டி, வேண்டியவர்களை அண்டினாலும் அவர்களும் ஊரைத்தாண்டி வெளியூர் போயிருப்பார்கள். இதை ஒரு பழமொழி "கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால், அங்கே இரண்டு கொடுமை ஆடிக்கொண்டிருந்ததாம்' என்று விளக்கும். இதைதான் மேஷராசி பலனில் "அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்' என்று குறிப்பிட்டிருக்கிறேன். தெய்வத்தை வணங்கு வதற்கும்,
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மகரம்.
3-12-2019- கும்பம்.
5-12-2019- மீனம்.
7-12-2019- மேஷம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: அனுஷம்- 4, கேட்டை- 1, 2.
செவ்வாய்: சுவாதி- 2, 3.
புதன்: விசாகம்- 3, 4, அனுஷம்- 1, 2.
குரு: மூலம்- 2, 3.
சுக்கிரன்: மூலம்- 4, பூராடம்- 1, 2.
சனி: பூராடம்- 2.
ராகு: திருவாதிரை- 3.
கேது: பூராடம்- 1.
கிரக மாற்றம்:
3-12-2019- விருச்சிக புதன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். அதனால் ஆயுள், ஆரோக்கியம், செல்வாக்கு, செயல்பாடு ஆகியவற்றுக்குக் குறைவில்லை. 6-க்குடைய புதன் அவருடன் சம்பந்தம். சிலருக்கு கடன் தொல்லை, சிலருக்கு போட்டி, பொறாமையால் தொல்லை, சிலருக்கு வைத்தியச் செலவு, தனக்கோ- மனைவிக்கோ (வாழ்க்கைத்துணைக்கு) உடல்பிணி அல்லது மனப்பிணி, சஞ்சலம் காணப்படலாம். கடுமையாக உழைக்கும் பெண்மணி களுக்கு படபடப்பு, கைகால் உளைச்சல் போன்ற நச்சுப் பிணிகளும், உபாதைகளும் ஏற்படலாம். இருந்தாலும் பாக் கியாதிபதி குரு 9-ல் ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பதால், எந்த பாதிப்புக்கும் இடம் ஏற்படாது. மேலும் 10-க்குடைய சனி 9-ல் 9-க்குடையவரோடு சேர்க்கை என்பதால்- தர்மகர்மாதிபதி யோகம் இருப்பதால் எந்த சங்கடமும், சஞ்சலமும் உங்களை அணுகாது. உடல் தைரியத்தைவிட மனதைரியம் 100 சதவிகிதம் இருப்பதால் வைராக்கியமாக செயல்பட்டு சாதனை படைக்க லாம். மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிப்பது போலவும், தும்மல் வருவது போலவும் சிறுசிறு தொந்தரவுகள்தானே தவிர, பயப் படுமளவு பாதிப்பு எதற்கும் இடம் ஏற்படாது. தந்தைவழி கவலை சிலருக்கு சிந்தையில் புகுந்து தொந்தரவு ஏற்படுத்த லாம். சொக்கநாத வெண்பாவில் "அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்- அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்- எவரெவர்க் குதவினர்- எவரெவர்க்குதவிலர்- தவரவர் நினைவது தமை உணர்வதுவே' என்று ஒரு பாடல் உண்டு. அவரவர் அவரவரைப் புரிந்துகொண்டால் போதும்; உணர்ந்துகொண்டால் போதும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிக்கு அட்ட மச்சனி நடப்பது மட்டுமல்ல; அட்டமத்தில் குரு, சுக்கிரன், கேதுவும் மறைவு. அட்டமத்தில் அட்டமாதிபதி குரு ஆட்சி என்பதால் பாதிக்காது என்றாலும், சனி, கேது- ராகு சம்பந்தம் என்ப தாலும்; 6-க்குடைய சுக்கிரனும் சேர்க்கை என்பதாலும் கவலை களும், கற்பனை பயமும் ஏற்படும்! சிலருக்கு வெளி யிலுள்ளவர்களாலும், சிலருக்கு வீட்டிலுள்ளவர்களாலும் பிரச்சினைகள் உருவாகி வேதனை உண்டாக்கும். 8-ஆம் இடம் சஞ்சலம் மட்டுமல்ல; ஏமாற்றம், இழப்பு, கௌரவப் போராட்டம் ஆகியவற்றையும் குறிக்கும் இடம். ஜாதகரீதியாக 6, 8, 12-க்குடைய தசாபுக்திகள் நடந்தால், கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாக எப்போதோ நடந்துமுடிந்த பிரச்சினைகள் புத்துயிர் பெற்று புறப்பட்டுவந்து, வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதுபோல நொந்து நோகவைக்கும். பரிகாரம் தேடி ஆலயம் சென்றாலும் அங்கும் கதவு அடைத்திருக்கும். ஆறுதல் வேண்டி, வேண்டியவர்களை அண்டினாலும் அவர்களும் ஊரைத்தாண்டி வெளியூர் போயிருப்பார்கள். இதை ஒரு பழமொழி "கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால், அங்கே இரண்டு கொடுமை ஆடிக்கொண்டிருந்ததாம்' என்று விளக்கும். இதைதான் மேஷராசி பலனில் "அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்' என்று குறிப்பிட்டிருக்கிறேன். தெய்வத்தை வணங்கு வதற்கும், சித்தர்களை வழிபடுவதற்கும் என்ன வித்தியாசம் என்றால்- வினைப்பயனை ஏற்று அனுவிக்க தெய்வம் நெஞ்சுறுதியையும், ஆறுதலையும் தரும். வினையைத் தடுத்து நிறுத்தமுடியாது. ஆனால் சித்தர்களால் வினைப் பயனை விலக்கி அடைக்கலம் தரமுடியும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெறு கிறார். தொடக்கத்தில் 7, 10-க்குடைய குருவின் சாரத்திலும், பிறகு 8, 9-க்குடைய சனியின் சாரத்திலும் சஞ்சாரம். ஜென்ம ராகுவும், சப்தமக் கேதுவும் சனியும் மனைவி, மக்கள் வகையில் மனசங்கடத்தையும் சஞ்சலத்தையும் உருவாக்க லாம். என்றாலும் 7-ல் குரு ஆட்சிபெற்று ராசியைப் பார்ப் பதாலும்; 7-ஆமிடத்துச் சுக்கிரன் சுயசாரம் பெறுவ தாலும்- இருண்ட மேகங்கள் திரண்டு தொடர்மழை பெய்யப்போகிறது என்று பயமுறுத்தினாலும், வெறும் தூறல், பிசுபிசுப்போடு மழைமேகம் மாறிவிடுவதுபோல! பிரளயத்தை உருவாக்கப் போகும் பிரச்சினைகள் சர்வ சாதாரணமாகி உங்களைத் தீண்டாமல் விலகிப் போய் விடும். 3-க்குடைய சூரியன் 6-ல் மறைவதால் நண்பர்கள் வகையிலும், உடன்பிறந்தவர்கள்வகையிலும் பிரச்சினை களை சந்திக்கநேரலாம். அனுதாபப்பட்டு உதவி செய்யப் போக ஆதங்கப்பட்டு அவஸ்தைகளைச் சந்திக்க நேரும். சிலசமயம் "தின்கிறவன் திங்க திருப்பத் தூரான் தண்டம் கொடுத்த கதை' என்று சொல் வதுபோல, யாரோ செய்த பழிபாவம் உங்கள் தலைமேல் விழும். சொந்தப் பிரச்சினையில் சோகமாக இருக்கும்போது, வந்த பிரச்சினையும் தாகம்தீர்க்க முடியாமல் தவிப்பீர்கள். என்றாலும் குருபார்வை உங்களைக் காப்பாற்றும்; கைகொடுக்கும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 6-ஆமிடத்தில் குரு, சுக்கிரன், சனி, கேது நால்வரும் மறை கிறார்கள். குரு 9-க்குடையவர். சனி 7-க்குடையவர். சுக்கிரன் 4, 11-க்குடையவர். இவையெல்லாம் "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்' என்று சொல்வதுபோல, "இது இருந்தால் அது இல்லை; அது இருந்தால் இது இல்லை' என்று கண்ணா மூச்சி விளையாடும். என்றாலும் 9-க்குடைய குரு 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. அதனால் குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். அதுமட்டுமல்ல; 10-க்குடைய செவ்வாயும் 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். செவ்வாயோடு 3, 12-க்குடைய புதனும் சம்பந்தம் என்பதால், வரவும் வரும்செலவும் வரும். சிலசமயம் வரவு வருவதற்கு முன்னதாக செலவு வாசலில் வந்து காத்திருக்கும். குடும்பத் தேவை களைப் பூர்த்திசெய்ய உங்கள் கையிருப்பை அல்லது சேமிப்பை எடுத்துச் செலவழிக்க மனைவியும் மக்களும் தூண்டுவார்கள். "இறைக்கிற கிணறுதான் ஊறும்; எடுத்துக் கொடுங்கள்' என மனைவியும் பிள்ளை களும் உங்களை வற்புறுத்தலாம். அவர்கள் எண்ணப்படியே இருப்பதை எடுத்துக் கொடுத்துவிட்டால், மீண்டும் வரவு வந்து அந்த இடத்தைப் பூர்த்தி செய்து விடும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 4-ல் கேந்திரம் பெற்று 10-ஆமிடத்தைப் பார்க்கிறார். 2, 11-க்குடைய புதனும் செவ்வாயோடு சேர்ந்து 9-ஆமிடத்தைப் பார்க்கிறார். அதற்குமேலாக 5-க்குடைய குரு ஆட்சிபெற்று ராசியைப் பார்க்கிறார். எனவே, இந்த கிரக அமைப்புகளெல்லாம் ஆயுள்தண்டனை பெற்ற கைதி தனது ஒழுக்க நடவடிக்கையால் தண்டனைக்காலம் முடிவதற்கு முன்னதாகவே விடுதலை செய்யப்படுவதுபோல, துன்பப்படவேண்டும் என்ற வினைப்பயனை விலக்கி, இன்பமடையலாம் என்ற நிலையை ஏற்படுத்தும். ஜாதகம் எழுதும்போது "ஜெனனீ ஜென்ம சௌக்யானாம் வர்த்தனீ குல சம்பதாம் பதவீ பூர்வ புண்ணியானாம்' என்று எழுதப்படு கிறது. அதாவது ஒரு ஜீவாத்மா பிறவி எடுப்பதற்கு முன் குறிப்பிட்ட தாய்- தந்தையின் கருவில் உருவாகிப் பிறந்து, வளர்ந்து, ஆளாகி, படித்து, செயல்பட்டு, சம்பாதித்து வாழவேண்டுமென்று எழுதப்படுகிறது. அதைத்தான் பெரியவர்கள் "பிராரப்தம்' என்பார்கள். ஓர் உயிர் தந்தையின் கருவில் இரண்டு மாதமும், தாயின் கருவில் பத்து மாதமும் உருவாகி வளர்கிறது. ஆக, ஒரு கரு உருவாகி உயிர்பெற்று எழுவதற்கு பன்னிரண்டு மாதங்களாகின்றன. இதனடிப்படையில்தான் மாதங்கள் 12, ராசிகள் 12, லக்னங்கள் 12 என்று கூறப்படுகிறது.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 2-ல் 3, 8-க்குடைய செவ்வாயோடு சம்பந்தப்பட்டு, இருவரும் 8-ஆமிடத்தைப் பார்க்கிறார்கள் 8-ஆமிடம் என்பது ஆயுளையும் குறிக்கும்; அதிர்ஷ்டத்தையும் குறிக்கும். 8-ஆமிடம் 2, 11-க்குடையவரோடு சம்பந்தப்படுகிறபோது அதிர்ஷ்ட ஸ்தானமாக மாறும். 4, 12-க்குடையவரோடு சம்பந்தப்படுகிறபோது 8-ஆமிடம் மாரகஸ்தானமாக மாறும். ஒரு ஜாதகத்தில் மாரகம் எப்படி வருமென்பதை கிரக அமைப்பை வைத்தே கூறிவிடலாம். இயற்கை மரணம், நோயால் மரணம், விபத்தால் மரணம்- துர்மரணம் (தற்கொலை அல்லது கொலை) என இப்படி மூன்று வகை மரணமுண்டு. இதை காலமிருத்யு, அகாலமிருத்யு, அவமிருத்யு என்று சாஸ்திரத்தில் வகுத்திருக்கிறார்கள். லக்னம், ராசி, லக்னாதிபதி, ராசியாதிபதி ஆகியோருக்கு குரு சம்பந்தமோ, 5, 9-க்குடைய திரிகோணாதிபதிகள் சம்பந்தமோ ஏற்பட்டால் இயற்கை மரணம். (காலமிருத்யு). 6, 8, 12 அல்லது சனி, ராகு- கேது சம்பந்தப்பட்டாலும்; அந்தவகையில் தசாபுக்திகள் நடந்தாலும் மற்றவகை மரணங்கள் சம்பவிக்கும். ஜோதிடம் பயிலும் மாணவர்கள் இவற்றை ஆராய்ச்சிசெய்து பார்த்தால் மரண ரகசியம் புலப்படும். கிருபானந்த வாரியார் சுவாமிகள் விமானத்தில் பயணிக்கும்போது காலமானார். கவியரசர் கண்ணதாசன் சொந்த நாட்டைவிட்டு வெளிநாட்டில் இருக்கும்போது மரணமடைந்தார். எதிர் பாராத உதவிகள் கிடைத்து ஏற்றம் பெறு வீர்கள். பணவரவு திருப்தியாக இருக்கும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் ஈடேறும். ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை காணப்பட்டாலும் பாதிப்புக்கு இடமில்லை. சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிட்டும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். விநாயகர், முருக வழிபாடு நன்மை தரும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 3-ல் மறைந்தாலும், அவருக்கு வீடுகொடுத்த குரு ஆட்சியாக இருப்பதால் மறைவு தோஷம் பரிகாரமாகிவிடுகிறது. மேலும், சுக்கிரனுக்கு யோக கிரகமான சனி சேர்க்கை; கேது சேர்க்கை. ஆகவே, இயற்கை அறிவு, உங்களுக்கு நிறைய அமையும். கல்வி மூன்று வகைப்படும். (அதாவது வித்தை). பயிற்சி (படிப்பு) செய்து கற்பது ஒரு கல்வி. அந்தக் காலத்தில் குருகுலம். இந்தக் காலத்தில் பள்ளிக்கூடம். இறையருளால் பூர்வ புண்ணியப் பலமாக அமையும் கல்வி, அனுபவ அறிவால் ஏற்படும் கல்வி (ஞானம்). மகாகவி காளிதாஸர், குமரகுருபரர், திருஞானசம்பந்தர் இறையருளால் ஞானம்பெற்றவர்கள். நாரதரின் உபதேசத்தால், தாயின் கர்ப்பத்திலேயே பிரகலாதன் ஞானம்பெற்றான். சுபத்திரையின் கர்ப்பத்தில் அபிமன்யு யுத்ததர்ம விதிகளை கிருஷ்ணர் உபதேசத்தால் அடைந்தான். இவை யெல்லாம் பூர்வபுண்ணிய ஞானங்கள். போஜ மகாராஜா சபையிலிருந்த உத்தண்ட கவிராயர் முறைப்படி இலக்கணம் கற்று புலமையும், திறமையும் பெற்றவர். அவை யிலிருந்த காளிதாசருக்கு போஜன் "மகாகவி' என்று பட்டம் சூட்டும்போது உத்தண்டரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் உத்தண்டர் அக்னி வளர்த்து தீக்குளிக்க முயற்சி செய்தபோது, அம்பாள் தோன்றி அவரைத் தடுத்தாட்கொண்டு, ""நீ நான் பெற்ற பிள்ளை! காளிதாசன் எனக்கு அபிமான புத்திரன். உனக்கு எல்லா உரிமையும் இயற்கையாக (சட்டப்படி) கிடைக்கும். அபிமான புத்திரனுக்கு நான் அனுமதி வழங்கவேண்டும்'' என்றாராம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் தன் ராசிக்கு 12-ல் மறைகிறார். ராகு சாரம் பெறு கிறார். (சுவாதி). 8-க்குடைய புதன் செவ்வா யோடு 12-ல் சம்பந்தம். அத்துடன் ஏழரைச் சனியில் கடைசிக்கட்டம். எனவே சிலசமயம் ஏமாற்றங்களும், இழப்புகளும், விரயங்களும் ஏற்படலாம். 8-க்குடையவர் 12-ல் மறைவது நல்லது என்றாலும், 11-க்குடையவரும் 12-ல் மறைகிறார்- அதாவது லாபாதிபதியும் மறைவு. வியாபாரிகள் மிக கவனமாக செயல்பட வேண்டும். லாபம் வரும் என்றெண்ணி, குறைந்த விலையில் இருக்கும்போது வாங்கிய சரக்குகள் தேங்கிப் போய்விடும். வாங்காத சரக்குகள் விலையுயர்ந்து மற்றவர்களுக்கு லாபம் தந்து விடும். இது ஏழரைச்சனிக்கும், 8-ஆமிடத்து ராகுவுக்கும், 12-ஆமிடத்து செவ்வாய்க்கும் உரிய பலன் என்றாலும், 2-ல் குரு ஆட்சிபெறுவதால், மனதைத் தளரவிடாமல் நம்பிக்கையோடு காத்திருந்தால், எதிர்பாராத லாபமும் சில சமயம் கிடைத்துவிடும். பொது ஹர்த்தால் நேரத்தில் எல்லாக்கடைகளும் அடைக்கப்பட்டிருக் கும்போது சந்துகளிலுள்ள கடைகளுக்கு வியாபாரம் நன்றாக இருக்கும். பஸ் நிலையத் திலுள்ள கடைகளுக்கு போக்குவரத்தால் வியாபாரம் குறையாமலிருக்கும். அதுபோல!
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. என்றாலும் சனிக்கு வீடுகொடுத்த குரு ஆட்சியாக இருக்கிறார். சனிக்கு சாரம்கொடுத்த சுக்கிரன் அவரோடு சேர்ந்திருக்கிறார். எனவே எல்லாரும் ஏழரைச்சனியைப் பற்றி கவலைப் படத் தேவையில்லை. சந்திர தசை, சந்திர புக்தி நடப்பவர்கள் மட்டும் பாதிப்புகள், உயிரிழப்பு அல்லது பொருள் இழப்பை சந்திக்கநேரலாம். அதற்குப் பரிகாரம் திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்திற்குப் பாலாபிஷேகம் செய்து, ஒருமுறை ருத்ரஹோமம் வளர்த்து சிவனுக்கு ருத்ராபிஷேகம் செய்யவேண்டும். தட்சனின் சாபத்தால் தேய்ந்துவரும் சந்திரனை ஈசன் தலையில் சூடிக்கொண்டதாகவும், "தேய்ந்து தேய்ந்து வளரக்கடவது' என்றும் வரமருளி சந்திரனுக்கு அடைக்கலம் தந்ததாகவும் புராணம் கூறுகிறது. அதனால்தான் அவருக்கு "சந்திரசேகரன்' என்று பெயர். சந்திரன் பாலுக்கு அதிபதி. ஆகவே, திங்கட்கிழமை சிவனுக்கு பாலாபிஷேகம் செய்வது முறையான பரிகாரமாகும். ருத்ரஜெப ஹோமங்கள் சிவனை குளிரச் செய்வதாகும். ஜென்மச்சனியின் பாதிப்பு விலக சனிக்கிழமைதோறும் சனி பகவானின் குருநாதரான காலபைரவருக்கு நெய்யில் மிளகு தீபமேற்றலாம். சனி பகவானுக்கு எள்தீபமேற்றக் கூடாது. சாஸ்திர விரோதம்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. வாக்கியப் பஞ்சாங்கப்படி, சனிப்பெயர்ச்சி சார்வரி வருடம், மார்கழி மாதம் 11-ஆம் தேதி. (26-12-2020). அதுதான் சரியான சனிப்பெயர்ச்சிக் காலமாகும். அதுவரை தனுசு ராசியில்தான் சனி சஞ்சாரம் செய்கிறார். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி, முன்னதாக சனி மகரத்திற்குப் பெயர்ச்சி யானாலும், அனுபவரீதியாக சரிவரப் பலன் செய்யாது. ஜோதிடத்தில் சுருதி, யுக்தி, அனுபவம் என்று மூன்றுநிலை உண்டு. பஞ்சாங்கம் குறிப் பிடுவது சுருதி. திருக்கணிதம் சரியா? வாக்கியம் சரியா என்று ஆய்வது யுக்தி. வாக்கியமே சரிதான் என்று நிர்ணயிப்பது அனுபவம். சனிக்குரிய ஆலயமாக அங்கீகரிக்கப்பட்ட ஆலயம் திருநள் ளாறுதான். அங்கு வாக்கியப் பஞ்சாங்கப் படிதான் பெயர்ச்சி விழா நடக்கிறது. அதேபோல குருவுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஆலயம் ஆலங்குடி. அங்கும் வாக்கியப் பஞசாங்கப் படிதான் பெயர்ச்சி விழா நடக்கிறது. ஆகவே, வாக்கியப் பஞ்சாங்கத்தையே கடைப்பிடிப்பது நல்லது. சிலர், 2020 மார்ச்சில் சனி மகரத்திற்கு அதிசாரமாகப் போகிறார் என்று சொல் வார்கள். அது முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாகும். உங்களுக்கு இந்த வாரம் எண்ணங்களெல்லாம் ஈடேறும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே நல்லுறவு நீடிக்கும். உறவி னர்கள், சக தொழிலாளர்களின் ஆதரவுண்டு. தொழில், வியாபாரம் சிறப்பாக இயங்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கடன் சுமை குறையும். விநாயகரையும் ஆஞ்சனேயரையும் வழிபட்டால் இடையூறுகள் விலகி நன்மைகள் பெருகும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். கும்ப ராசிக்கு சுக்கிரன் ராஜயோ காதிபதியானவர். அதாவது ஒரு ராசிக்கு கேந்தி ராதிபத்தியமும், திரிகோணாதிபத்தியமும் எந்த கிரகத்துக்கு கிடைக்கிறதோ, அந்த கிரகம் அந்த ராசிக்கு ராஜயோகாதிபதியாகும். கேந்திரம் என்பது முயற்சி ஸ்தானம். அதை "விஷ்ணு ஸ்தானம்' என்பார்கள். திரிகோணம் என்பது அதிர்ஷ்ட ஸ்தானம். அதை "லட்சுமி ஸ்தானம்' என்பார்கள். முயற்சி மட்டும் இருந்து, அதிர்ஷ்டம் இல்லையென்றால் வெற்றியடையமுடியாது. முயற்சி இல்லாமல் அதிர்ஷ்டம் மட்டும் இருந்தால் அது நிரந் தரமாக இருக்காது. அதிர்ஷ்டம் அது இஷ்டமாக வரும்; அது இஷ்டமாகவே போய்விடும். வள்ளுவர் சொன்னதுபோல, "முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.' அவ்வை சொன்னதுபோல, "உண்மையான முயற்சி என்றும் தோற்காது.' "நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்' என்று ஒரு வாசகம் உண்டு. வெற்றி என்பது என்றுமே முடிவடையாது. தோல்வி என்பது என்றுமே முடிவாகாது. இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க இயலாது. இறைவன் தடுப்பதை யாராலும் கொடுக்க இயலாது. இவற்றை உணர்ந்து செயல்பட்டாலே நீங்கள் உயர்வடையலாம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 10-ல் இருக்கிறார். கேதுவின் சாரத்தில் (மூலம்) சஞ்சரிக்கிறார். அவருடன் கேதுவும் சம்பந்தம். 11, 12-க்குடைய சனியும் 10-ல் இருக்கிறார். 4-ஆமிடத்தையும், 10-ஆமிடத்தை யும் சனி பார்க்கிறார். எனவே, திருமண மாகாதவர்களுக்குத் தாயாரும், திருமணமானவர்களுக்குத் தாரமும் துணையாக நின்று வழிநடத்துவார்கள். அதனால்தான் "தாய்க் குப்பின் தாரம்' என்றார்கள். சனி 11, 12-க்குடை யவர் என்பதால், வரவும் உண்டு; செலவும் உண்டு. 9-ல் 6-க்குடைய சூரியன் நிற்பதால், ஒருசிலருக்கு தகப்பனார் வகையில் நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு. தகப்பனாரை இழந்தவர்களுக்கு தகப்பனாரின் ஆசிர் வாதம் கிடைக்கும். 4-ல் ராகு- ஒருசிலருக்கு தேக ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தலாம். தசாபுக்திரீதியாகப் பரிகாரம் தேடிக்கொள்ள லாம். 10-ல் சுக்கிரன், சனி, கேது- ராகு சம்பந்தம் கிடைப்பதால், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் கலைத்துறையிலோ, பத்திரிகைத்துறையிலோ (மீடியா) பிரபலம் அடையலாம்; லாபம் பார்க்கலாம். ஏற்கெனவே எழுதியபடி, நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம். அதற்கு நீங்களே உதாரணமாக அமைவீர்கள். சித்தர்கள் வழிபாடு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும்.