ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
இந்த வார கிரக பாதசாரம்:
சூரியன்: ரேவதி- 4, அஸ்வினி- 1, 2.
செவ்வாய்: மிருகசீரிடம்- 2, 3.
புதன்: அஸ்வினி- 1, 2, 3.
குரு: அவிட்டம்- 3.
சுக்கிரன்: ரேவதி- 4, அஸ்வினி- 1, 2, 3.
சனி: திருவோணம்- 1.
ராகு: ரோகிணி- 3.
கேது: கேட்டை- 1.
இந்த வார கிரக மாற்றம்:
11-4-2021- மேஷ சுக்கிரன்.
14-4-2021- மேஷ சூரியன்.
14-4-2021- மிதுனச் செவ்வாய்.
இந்த வார சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மீனம்.
12-4-2021- மேஷம்.
14-4-2021- ரிஷபம்.
17-4-2021- மிதுனம்.v
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிக்கு 10-ஆவது லக்னத்திலும், 12-ஆவது ராசியிலும் தமிழ் புதுவருடம் பிறக்கிறது. மேலும் மேஷ ராசிநாதன் செவ்வாய் மகரத்தில்தான் உச்சம் அடைவார். எனவே, இந்த தமிழ் வருடம் மேஷ ராசி அல்லது மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தொழில் உயர்வு, வாழ்க்கை நிம்மதி, மனநிறைவு, வருமானப் பெருக்கம், குடும்பத்தில் ஒற்றுமை ஆகிய நற்பலன்களை எதிர்பார்க்கலாம். உங்கள் ராசிக்கு 12-ல் சூரியன், சுக்கிரன், சந்திரன் அமைவதால் உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் ஈடேறும் என்றாலும், விரும்பிய பொருளை அடைவதற்கு அதிக விலையானாலும் பரவாயில்லை என்று கொடுத்து வாங்குவீர்கள். தவிர்க்கமுடியாத பயணங்களும் உண்டாகும். சிலர் ஆன்மிக சுற்றுலா போகலாம். சிலர் உல்லாசப் பயணமாகவும் போகலாம். ஒருசிலர் காலில் பாதச் சக்கரம் அமைந்தமாதிரி தவிர்க்கமுடியாத பயணங்களைச் சந்திக்கலாம். பயணங்கள் முடிவதில்லை என்றாலும் பயனுள்ள பயணங்களாகவும் அமைவதில் யோகமுண்டு. சிலருக்கு நீண்டகால விருப்பமான வெளிநாட்டுப் பயணமும் அமையும். "வரவு எட்டணா செலவு பத்தணா' என்றளவில் கிரக அமைப்பு காணப்படுவதால், ஆற்றில் போட்டாலும் அளந்துபோட வேண்டும் என்பதுபோல சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படவேண்டும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ஜென்ம ராசியில் செவ்வாயும் ராகுவும் நிற்க, 7-ல் கேது அமர்கிறார். 9-க்குடைய சனி 9-ல் ஆட்சியாகவும், 10-ல் லாபாதிபதி குருவும் இருப்பதால் வாழ்க்கை, தொழில் இவற்றில் புதிய திட்டங்கள் வகுத்து செயல்படுவீர்கள். அடிமை வேலை உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உண்மைக்கும் விசுவாசத்திற்கும் புதிய மதிப்பு கிடைக்கும். உயர்வும் உண்டாகும். 2-க்குடைய புதன் 12-ல் மறைந்தால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டாலும் அவசியமானதாகவும் பயனுள்ளதாகவும் அமையும். 10-ல் இருக்கும் குரு புதிய வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றை உருவாக்கித் தருவார். ஜென்மத்திலுள்ள செவ்வாயும் ராகுவும் பங்காளி, பகுத்தாளிவகையில் அல்லது உடன்பிறப்புகள்வகையில் பொறாமை களையும் விமர்சனங்களையும் உருவாக்கலாம். "கல்லடிக்குத் தப்பினா லும் கண்ணடிக்குத் தப்பமுடியாது' என்பதுபோல சிலசமயம் உங்களுக்கு பிரச்சினைகளை உருவாக்கினால் ஜாதக தசாபுக்திக்கு ஏற்ற பரிகாரங் களைச் செய்துகொள்ளுங்கள். திருஷ்டி பரிகாரமும் செய்யுங்கள். புது வருடம் உங்கள் ராசிக்கு 11-ஆமிட ராசியிலும் 9-ஆமிட லக்னத்திலும் அமைவதால் உங்கள் முயற்சிகள் யாவும் முழுமையாக வெற்றியடையும்; தடையில்லாத முன்னேற்றமும் உண்டாகும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர் பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 11-ல் கேது சாரம் பெறுகிறார். அவருக்கு சாரம் கொடுத்த கேது
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
இந்த வார கிரக பாதசாரம்:
சூரியன்: ரேவதி- 4, அஸ்வினி- 1, 2.
செவ்வாய்: மிருகசீரிடம்- 2, 3.
புதன்: அஸ்வினி- 1, 2, 3.
குரு: அவிட்டம்- 3.
சுக்கிரன்: ரேவதி- 4, அஸ்வினி- 1, 2, 3.
சனி: திருவோணம்- 1.
ராகு: ரோகிணி- 3.
கேது: கேட்டை- 1.
இந்த வார கிரக மாற்றம்:
11-4-2021- மேஷ சுக்கிரன்.
14-4-2021- மேஷ சூரியன்.
14-4-2021- மிதுனச் செவ்வாய்.
இந்த வார சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மீனம்.
12-4-2021- மேஷம்.
14-4-2021- ரிஷபம்.
17-4-2021- மிதுனம்.v
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிக்கு 10-ஆவது லக்னத்திலும், 12-ஆவது ராசியிலும் தமிழ் புதுவருடம் பிறக்கிறது. மேலும் மேஷ ராசிநாதன் செவ்வாய் மகரத்தில்தான் உச்சம் அடைவார். எனவே, இந்த தமிழ் வருடம் மேஷ ராசி அல்லது மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தொழில் உயர்வு, வாழ்க்கை நிம்மதி, மனநிறைவு, வருமானப் பெருக்கம், குடும்பத்தில் ஒற்றுமை ஆகிய நற்பலன்களை எதிர்பார்க்கலாம். உங்கள் ராசிக்கு 12-ல் சூரியன், சுக்கிரன், சந்திரன் அமைவதால் உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் ஈடேறும் என்றாலும், விரும்பிய பொருளை அடைவதற்கு அதிக விலையானாலும் பரவாயில்லை என்று கொடுத்து வாங்குவீர்கள். தவிர்க்கமுடியாத பயணங்களும் உண்டாகும். சிலர் ஆன்மிக சுற்றுலா போகலாம். சிலர் உல்லாசப் பயணமாகவும் போகலாம். ஒருசிலர் காலில் பாதச் சக்கரம் அமைந்தமாதிரி தவிர்க்கமுடியாத பயணங்களைச் சந்திக்கலாம். பயணங்கள் முடிவதில்லை என்றாலும் பயனுள்ள பயணங்களாகவும் அமைவதில் யோகமுண்டு. சிலருக்கு நீண்டகால விருப்பமான வெளிநாட்டுப் பயணமும் அமையும். "வரவு எட்டணா செலவு பத்தணா' என்றளவில் கிரக அமைப்பு காணப்படுவதால், ஆற்றில் போட்டாலும் அளந்துபோட வேண்டும் என்பதுபோல சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படவேண்டும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ஜென்ம ராசியில் செவ்வாயும் ராகுவும் நிற்க, 7-ல் கேது அமர்கிறார். 9-க்குடைய சனி 9-ல் ஆட்சியாகவும், 10-ல் லாபாதிபதி குருவும் இருப்பதால் வாழ்க்கை, தொழில் இவற்றில் புதிய திட்டங்கள் வகுத்து செயல்படுவீர்கள். அடிமை வேலை உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உண்மைக்கும் விசுவாசத்திற்கும் புதிய மதிப்பு கிடைக்கும். உயர்வும் உண்டாகும். 2-க்குடைய புதன் 12-ல் மறைந்தால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டாலும் அவசியமானதாகவும் பயனுள்ளதாகவும் அமையும். 10-ல் இருக்கும் குரு புதிய வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றை உருவாக்கித் தருவார். ஜென்மத்திலுள்ள செவ்வாயும் ராகுவும் பங்காளி, பகுத்தாளிவகையில் அல்லது உடன்பிறப்புகள்வகையில் பொறாமை களையும் விமர்சனங்களையும் உருவாக்கலாம். "கல்லடிக்குத் தப்பினா லும் கண்ணடிக்குத் தப்பமுடியாது' என்பதுபோல சிலசமயம் உங்களுக்கு பிரச்சினைகளை உருவாக்கினால் ஜாதக தசாபுக்திக்கு ஏற்ற பரிகாரங் களைச் செய்துகொள்ளுங்கள். திருஷ்டி பரிகாரமும் செய்யுங்கள். புது வருடம் உங்கள் ராசிக்கு 11-ஆமிட ராசியிலும் 9-ஆமிட லக்னத்திலும் அமைவதால் உங்கள் முயற்சிகள் யாவும் முழுமையாக வெற்றியடையும்; தடையில்லாத முன்னேற்றமும் உண்டாகும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர் பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 11-ல் கேது சாரம் பெறுகிறார். அவருக்கு சாரம் கொடுத்த கேது ராசிக்கு 6-ல் மறைவு. வீடுகொடுத்த செவ்வாய் ராசிக்கு 12-ல் மறைவு. எனவே, நினைத்தோம் முடித்தோம் என்றில்லாமல், ஒவ்வொரு காரியத்தையும் பகீரதப் பிரயத் தனம் செய்து விடாமுயற்சியோடு செயல்பட்டு சாதிக்கவேண்டும். "அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்று எடுத்த கருமங்கள் ஆகாது' என்பது பழமொழி. அதனால் விடாமுயற்சியும் நம்பிக்கையும் தேவைப்படும். "கிட்டதாயின் வெட்டென மற' என்ற பழமொழியை மறந்துவிட்டு, அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்ற முதுமொழியை நினைத்து செயல்படுங்கள். நினைத்ததை நிறைவேற்றலாம். 10-க்குடைய குரு 9-ல் திரிகோணம் பெற்று மிதுன ராசியைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகமும் அமைகிறது. எனவே, குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தி உங்கள் எண்ணங்களை ஈடேற்றும். கருதியவற்றை நிறைவேற்றும். "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்ற வாசகப்படி நினைப்பதெல்லாம் உயர்வாகவும் தெளிவாகவும் நினைக்கவேண்டும். நினைப்பதில் என்ன கஞ்சத்தனம். நடந்தால் நன்மைதான். நடக்காவிட்டாலும் நஷ்டமில்லை. பொதுவாக விடாமுயற்சி வெற்றிதரும் என்பதுபோல தளர்ச்சியில்லாமல் உங்கள் முயற்சிகளை செயல் படுத்துங்கள்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 9-ல் சூரியன், சுக்கிரன் சேர்க்கை. 10-ல் புதன். 11-ல் செவ்வாய், ராகு. 9-க்குடைய குரு 8-ல் மறைந்தாலும் அவருக்கு வீடுகொடுத்த சனி ஆட்சிபெற்று கடக ராசியைப் பார்க்கிறார். ஆகவே குருவுக்கு மறைவு தோஷம் விலகும். அதற்கும் மேலாக 11-ல் உள்ள செவ்வாயும் ராகுவும் 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் எளிதாக ஈடேறும். "ஆகும் காலம் மெய்வருந்த வேண்டாம். போகும் காலம் கதவை அடைக்க வேண்டாம்' என்பது ஒரு பழமொழி. காரியம் நிறைவேறும் காலம் கடுமையாக கஷ்டப்பட வேண்டாம். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக எல்லாம் எளிதாகக் கைகூடும். "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்' என்பது குறள். 9-க்குடையவர் 8-ல் மறைவதால் தெய்வ அனுகூலம் உங்களுக்குத் துணையாக இல்லாவிட்டாலும், உங்கள் கடுமையான முயற்சியும் வைராக்கியமும் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். அதற்கு உதாரணம் பகீரதன். தன் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய அவர்களின் அஸ்தி யைக் கரைப்பதற்கு ஆகாயத் தில் இருக்கும் கங்கையை பூமிக்கு கடும் முயற்சிசெய்து வரவழைத்தான். ஆகாய கங்கை பூமியில் இறங்கும்போது பூமி தாங்காது என்று சர்வேஸ்வரர் தன் தலையில் தாங்கி பூமியில் ஓடச் செய்தார். அதுபோல உங்கள் வெற்றி முயற்சியால் விளையும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 8-ல் மறைகிறார். அவருடன் 3, 10-க்குடைய சுக்கிரனும் மறைகிறார். ஆனால் சுக்கிரன் உச்சம் என்பதால் அவருக்கு மறைவு தோஷம் பாதிக்காது. அவரோடு இணைந்த சூரியனுக்கும் மறைவு தோஷம் பாதிக்காது. மேலும் திரிகோணாதிபதி குரு 7-ல் கேந்திர பலம் பெற்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். அதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு கடாட்சம் பெருகும். குருவருளும் திருவருளும் பெருகும் போது குறையேது? "குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடலாம். 8 என்பது மறைவு, விபத்து ஸ்தானம் என்றாலும் அதுவே அதிர்ஷ்ட ஸ்தானமுமாகும். திருஷ்டம் என்பது தெரிவது. அதிருஷ்டம் என்பது கண்ணுக்குத் தெரியாதது. விபத்தும் அதிருஷ்டமும் கண்ணுக்குத் தெரியாது என்று அர்த்தம். 6, 12-க்குடையவர்கள் சம்பந்தப்படும்போது 8-ஆமிடம் விபத்து ஸ்தானமாகும். கேந்திர ஸ்தானாதிபதியும் திரிகோண ஸ்தானாதிபதியும் சம்பந்தப் படும்போது 8-ஆமிடம் அதிர்ஷ்ட ஸ்தானமாகும். இதிலிருந்து ஒரு உண்மை தெரிகிறது. என்னவென்றால் கெட்டதிலும் நல்லது இருக்கிறது. நல்லத்திலும் கெட்டது இருக்கிறது. குரு துரோணர்- உலகத்தில் நல்லவர்கள்- கெட்டவர்கள் எத்தனைபேர் என்று தருமரிடமும் துரியோதனனிடமும் கணக்கெடுக்கச் சொன்னான். தருமரோ "கெட்டவர்களே இல்லை. கெட்டவன் இடமும் ஒரு நல்லவன் இருக்கிறான்' என்றார். துரியோதனன் "நல்லவர்களே இல்லை நல்லவனிடத்தும் கெட்டவன் இருக்கிறான்' என்றான்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 8-ல் மறைகிறார். மறைந்த புதன் நிறைந்த தனம் என்பார்கள். சதாசர்வ காலம் சூரியனோடு இணைந்தே சஞ்சரிக் கும் கிரகம் புதன். அதனால் அவருக்கு மறைவு தோஷம், அஸ்தமன தோஷம் பாதிக்காது. மேலும் 1, 10-க்குடையவன் 8-ல் மறைந்தாலும், 10-ஆமிடத்திற்கு 11- லாபஸ்தானத்தில் அமர்ந்து தன ஸ்தானமான 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் பொருளா தாரத்திலும் குடும்பச் சூழ்நிலையிலும் தொழில்துறையிலும் உங்களுக்கு கேடு கெடுதிக்கு இடம் வராது. வேகத்தடை அமைந்த சாலைகளில் வாகனங்கள் கியரைமாற்றி மெதுவாகப் போவதுபோல உங்கள் காரியங்களும் செயல்களும் நிதானமாக நிறைவேறும்; தடை இருக்காது. இது தான் 8-ல் மறைந்த புதனின் வேலை. கன்னி ராசிக்கு திரிகோண ஸ்தானமான மகரத்தில் லக்னம் (வருடம்) பிறக்கிறது. 7-ஆமிடமான மீன ராசி அமைகிறது. எனவே உங்கள் காரியங்களிலும் முயற்சிகளிலும் கடமைகளிலும் எந்தவிதான பாதிப்புக்கும் இடமில்லை. நினைத்தது நிறைவேறும். கருதியவை கைகூடும். உங்களுடைய வைராக்கியம், விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தரும். 9-ஆமிடமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு இருப்பதால் குலதெய்வ வழிபாட்டில் ஏதேனும் பிரச்சினைகள் உருவாகலாம்; சமாளிக்கவேண்டும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந் தாலும் உச்சம் பெறுவதால் மறைவு தோஷமில்லை. எந்த ஒரு கிரகத்துக்கும் 6, 8, 12-ஆமிடம் மறைவு ஸ்தானம் என்றா லும், அந்த கிரகம் ஆட்சி, உச்சம்பெற்றால் அந்த கிரகத்துக்கு மறைவு தோஷம் பாதிக்காது. உதாரணமாக தனுசு, மீன ராசிக்கு சுக்கிரன் 6, 8-க்குடையவர். சுக்கிரன் ரிஷபத்திலும் துலாத்திலும் ஆட்சிபெற்றா லும் அல்லது மீனத்தில் உச்சம்பெற்றாலும் அதேமாதிரி கன்னியில் நீசம்பெற்றாலும் சுக்கிரனுக்கு தோஷம் பாதிக்காது. துலா ராசிக்கு 4-ஆமிடத்தில் தமிழ் வருட லக்னம் பிறக்கிறது. அதேபோல 6-ஆமிடத்தில் மீன ராசியில் பிறக்கிறது. மீன ராசி சுக்கிரனுக்கு உச்சவீடு. எனவே, தமிழ் வருடம் எல்லாவகையிலும் நல்ல வருடமாக அமையும் "இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே' என்று பாடியமாதிரி இன்பமயமாக அமையும். கும்ப குரு 3, 6-க்குடையவராக இருந்தாலும் 5-ல் திரிகோணம் பெற்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். 5, 9-க்கதிபர் பாபர் சுபரானாலும், பொன் போன்ற நன்மை பயக்கும் என்ற சந்திர காவிய விதிப்படி உங்களுக்கு நல்லதே நடக்கும். 5, 9- என்ற திரிகோணம் தெய்வ அனுகூல ஸ்தானம். 4, 7, 10- என்ற கேந்திரம் மனித முயற்சி ஸ்தானம். மனிதன் நினைக்கிறான். இறைவன் நிறைவேற்றுகிறான். எந்த ஒரு ஜாதகத்திலும் 5, 9-ல் குருவோ சுக்கிரனோ இருந்தால் அந்த ஜாதகர் வாழ்வில் தாழ்வு அடைவதில்லை. இது ராசி, லக்னம் இரண்டுக்கும் பொருந்தும். 5-ஆமிடமும் 9-ஆமிடமும் பூர்வபுண்ணிய ஸ்தானம். அதாவது 5-க்கும் 5. 9- போன ஜென்மம்; 5- வரும் ஜென்மம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசியில் கேது நிற்க, 7-ல் செவ்வாயும் ராகுவும் இருக்கிறார்கள். ஜென்ம ராசியிலும் சப்தம ஸ்தானத்திலும் பாவகிரகங்களாகிய கேது, ராகு இருப்பது தோஷம். திருணத்தடை, மணவாழ்க்கையில் மகிழ்ச்சிக்குறைவு, ஏட்டிக்குப் போட்டியான வாக்குவாதங்கள் எல்லாம் தரும் என்பது பொதுவிதி! என்றாலும் அந்த இடங்களுக்கு பாவாதிபதியும் குருவும் சம்பந்தப்பட்டால் எந்த தோஷமும் பாதிக்காது. ரப்பர் கையுறையுடன் கரன்ட்டைத் தொடுவதுபோல! இங்கு ராசிநாதன் செவ்வாய் சம்பந்தப்படுவதோடு, செவ்வாய் மிருகசீரிட நட்சத்திரத்தில் சுயசாரம் பெறுவதாலும் விதிவிலக்கு உண்டு. அடுத்தவர் அடிக்கும் வலி கடுமையாக வலிக்கும். தன்னைத்தானே அடித்துக்கொள்ளும்போது வலி கடுமையாகத் தெரியாது. அதுபோல ஆட்சி, உச்சம், சுயசாரம் பெறும் கிரகங்களுக்கு கடுமையும் வலிமையும் வேகமும் இருக்காது. விருச்சிக ராசிக்கு 3-ஆமிடமாகிய மகர லக்னத்திலும், 5-ஆமிடமான மீன ராசியிலும் தமிழ் வருடம் பிறக்கிறது. மகரம்தான் ராசிநாதன் செவ்வாய்க்கு உச்சவீடு. எனவே, தமிழ்ப் புத்தாண்டு அமிழ்தினும் இனிய ஆண்டாக அமையும். நீண்டகாலக் கனவு களும் திட்டங்களும் நிறைவேறும். ராசிநாதனும் சத்ரு ஸ்தானாதிபதியும் செவ்வாயாக அமைவதால், நேற்றுவரை வேண்டாதவராகவும் பகைவராகவும் இருந்தவர்கள் இன்று விரும்பிவந்து நட்பு கொண்டாடுவார்கள். பழையன மறந்து புதியன இணைந்து செயல்படலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு 3-ல் மறைந்தாலும் பஞ்சமாதிபதி (5-க்குடையவர்) செவ்வாயின் சாரம் பெறுவதால் (அவிட் டம்-3) எந்தக் குறையுமில்லை. 5, 9-க்கபதிர் பாபர் சுபரானாலும் பொன் போன்ற நன்மையே புரிவார் என்பது சந்திர காவியத்தின் விதி. இன்னொருவகையில் 5, 9-ம் திரிகோண ஸ்தானங்கள். அதை லட்சுமி ஸ்தானம் என்று கூறுவார்கள். 4, 7, 10 கேந்திர ஸ்தானம். அதை விஷ்ணு ஸ்தானம் என்பார்கள். இதை முந்தைய ராசியிலேயே எழுதியிருக்கிறேன். விஷ்ணு ஸ்தானம் என்பது உழைத்த உழைப்புக்கு கிடைக்கும் கூலி. லட்சுமி ஸ்தானம் என்பது சம்பளத்துக்கு மேல் கிடைக்கும் போனஸ். சம்பளம் அதிகமாக இருந்து போனஸ் குறைவாக இருந்தாலும் அதை வாங்குவதில்தான் இரட்டிப்பு ஆனந்தம் கிடைக்கும். அது ஒருவருக்கு கொடுக்கும் டிப்ஸ்- இனாம் மாதிரி. அதைப் பெற்றுக்கொண்டவர் ஒரு சல்யூட் அடிப்பார். அது நமக்கு ஆனந்தமாக இருக்கும். தமிழ்ப் புதுவருடம் மகர லக்னத் திலும் மீன ராசியிலும் உதயமாகிறது. உங்கள் ராசிக்கு 2-ஆவது லக்னம். 4-ஆவது ராசி. 2- என்பது தனம். 4- என்பது சுகம். எனவே, தனவரவு, சுகம், நிம்மதி எல்லாம் இந்தக் காலகட்டத்தில் கிடைக்கும் என்பது தெளிவு. வற்றாத செல்வமும் தட்டாத நிலையும் ஆரோக்கியமான வாழ்வும் அமைந்து விட்டால் வேறு என்ன வேண்டும்? போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்தாகும். அந்த மனம் அமைந்துவிட்டால் அவர்களே பொன்மனச் செம்மல் ஆவார்கள்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி ஆட்சி பெறுகிறார். தமிழ்ப் புதுவருடமும் மகர லக்னத்தில்தான் உதயமாகிறது. தமிழ்ப் புத்தாண்டு பிலவ வருடம் மகரம், மீனம் இந்த இரண்டு ராசி, லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் ராஜ யோகமான பலன் ஆகும். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக எதிர்பாராத அதிர்ஷ்டமும் நன்மையும் இவர்களுக்குத்தான் நடக்கும். மகரம், மீனம் இந்த இரண்டு ராசி அல்லது இந்த இரண்டு லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் இது பொருந்தும். அதைவிட ஒரு சிறப்பு என்னவென்றால் மகரத்தின் அதிபதி சனி. மீனத் தின் அதிபதி குரு. இந்த இரு கிரகங்களின் தசாபுக்தி நடப்பவர்களுக்கும் மேற்படி ராஜயோகமும் நன்மையான பலன்களும் எதிர்பார்க்கலாம். 5-ல் செவ்வாய் ராகு- கேது சம்பந்தம். அவர்களுக்கு வீடுகொடுத்த சுக்கிரன் 3-ல் உச்சம். அட்டமாதிபதி சூரியன் சுக்கிரனுடன் சேர்க்கை. சில காரியங்கள் உடனுக்குடன் நிறைவேறும். சிலகாரியங்கள் கடும் முயற்சிக்குப்பின் நிறைவேறும். ஆப்பிள் பழத்தை அப்படியே கடித்துத் தின்னலாம். பலாப்பழத்தை தோலுரித்து கொட்டை நீக்கி நார் உரித்து சாப்பிடவேண்டும். அதுபோல உங்கள் முயற்சிகளுக்குப் பலன் எதிர்பார்க்கலாம். பொதுவாக தனுசு, மீனம், கடகம் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் எப்போதும் காலம் அனுகூலமாகவே அமையும். இந்த மூன்று ராசிக்கும் குரு சம்பந்தம் கிடைக்கிறது.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசியில் குரு அமர்ந்திருக்கிறார். குரு 2, 11-க்குடையவர். குருவுக்கு வீடுகொடுத்த சனி 12-ல் மறைந்தாலும் ஆட்சியாக இருக்கிறார். எனவே, இந்த வாரக் கோட்சாரம் உங்களுக்கு யோகமாக அமைகிறது. எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் எளிதாக ஈடேறும் என்பதில் சந்தேகமில்லை. பெரும்பாலும் அதிர்ஷ்டம்- அது இஷ்டமாக உங்களை வந்து அரவணைக்கும். அதைதான் பெரியோர்கள் காக்கை உட்கார பனம்பழம் விழுந்ததாகச் சொன்னார்கள். தமிழ்ப் புதுவருடம் விரயஸ்தானமான 12-ல் மகர லக்னத்தில் உதயமானாலும், 2-ஆமிடமாகிய மீன ராசியில் வருடம் பிறப்பது ஒரு திருப்பமாகும். லக்னம் அல்லது ராசி அல்லது ஒரு கிரகத்துக்கு 2, 12-ல் கிரகம் இருந்தால் அனபா யோகம், சுனபா யோகம் என்று பெயர். அப்படி அமைந்தால் அந்த ஜாதகர் பக்கபலமாக தக்க துணையோடு எதையும் சாதிக்கலாம் என்பது கருத்து. அதைத்தான் கிராமப் புறங்களில் "கஞ்சி ஊற்ற ஆளில்லாவிட்டாலும் கச்சை கட்ட ஆள் துணையுண்டு' என்று சொல்வார்கள். அதையே "தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்று சொல்லலாம். உங்கள் ராசிக்கு 12-ல் லக்னமும், 2-ல் சந்திரனும்- அதாவது ராசியும் அமைவதால் பொருளாதாரத்தில் நிறைவான பலன்களை சந்திப்பதோடு திருப்தியாக காரியங்களைச் சாதிக்கலாம். உங்களுடைய செயல் நடவடிக்கைகளுக்கு தக்கசமயத்தில் பக்கபலம் அமையும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 12-ல் மறைந்தாலும் அவருக்கு வீடுகொடுத்த சனி 11-ல் ஆட்சியாக இருப்பதால், கேடு கெடுதிக்கு இடமில்லாமல் உங்கள் காரியங்கள் யாவும் நிறைவேறும். மேலும் 11-க்குடைய சனி உங்கள் ராசி யைப் பார்க்கிறார். ரேஷன் கடையில் கூட்டமிருக்கும் நிலையில் வரிசையில் இருப்பவரிடம் "வீட்டுக்கு போய் அட்டையை எடுத்துவருகிறேன்- அதுவரை என் வரிசையைப் பார்த்துகொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டுப் போய் அட்டையை எடுத்து வந்து மீண்டும் வரிசையில் நிற்பதுபோல! அதாவது காத்திருப்பு நேரம் குறையும். ஒரு காலத்தில் குழாய் நீர் பிடிக்க (குடிநீர்) வரிசையில் டப்பாக்களை போட்டுவைத்து குடத்தில் தண்ணீர் பிடிப்பார்கள். அதாவது- இடத்தை வரிசையில் பதிவு பண்ணுவதுபோல! இப்போது பெரும்பாலும் அந்த நிலை இல்லை. தமிழ்ப் புதுவருடம் 11-ஆவது லக்னத்திலும் (மகரம்), ஜென்ம ராசியிலும் (மீனம்) பிறக்கிறது. கடந்தகால அனுபவங் களைவிட இந்த வருட அனுபவம் உங்களுக்கு புதுமையாகவும் மனநிறைவாகவும் மகிழ்வு தருவதாகவும் அமையும். "அனுபவம் புதுமை' என்று பாடலாம். மீனத்தில் 6-க்குடைய சூரியனும். 8-க்குடைய சுக்கிரனும் இருப்பது ஒரு சிறப்பு. அவர்களுக்கு வீடுகொடுத்த குரு 12-ல் மறைவதும் சிறப்பு. இது விபரீத ராஜயோகம் எனப்படும். பல வருடங்களுக்குமுன் ஒரு தேர்தலில் எம்.ஜி.ஆர் உடம்பில் கட்டுப்போட்ட நிலையில் மக்களின் அனுதாப அலையைப் பெற்று அவர் சார்ந்திருந்த கட்சியை வெற்றிபெறச் செய்தார். அதுபோல உங்களுக்கும் மற்றவர்களின் அனுதாபம் வெற்றியைத் தேடித்தரும்.