Advertisment

இந்த வார ராசிபலன்22

/idhalgal/balajothidam/weeks-rasibalan

22-4-2018 முதல் 28-4-2018 வரை

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு,

(பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மிதுனம்.

22-4-2018- கடகம்.

24-4-2018- சிம்மம்.

26-4-2018- கன்னி.

28-4-2018- துலாம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: அஸ்வினி- 3, 4, பரணி- 1.

செவ்வாய்: பூராடம்- 4, உத்திராடம்- 1.

புதன்: உத்திரட்டாதி- 3, 4, ரேவதி- 1, 2.

குரு: விசாகம்- 3.

சுக்கிரன்: கார்த்திகை- 2, 3, 4.

சனி: மூலம்- 3.

ராகு: பூசம்- 4.

கேது: திருவோணம்- 2.

கிரக மாற்றம்:

குரு வக்ரம்.

சனி வக்ரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாயும், 10, 11-க்குடைய சனியும் பாக்கிய ஸ்தானத்தில் சேர்ந்திருக்கிறார்கள். பொதுவாக செவ்வாயும் சனியும் சேர்ந்தாலும் பார்த்தாலும் பிரச்சினைதான், சிக்கல்தான். கூட்டத்தில் விட்டெறிந்த கல் தேடிவந்து நம் தலையில் விழும். பச்சையாகச் சொன்னால் "சந்தையில் விட்டெறிந்த செருப்பு சனியன் பிடித்தவன் தலையில் விழுந்தது' என்று சொல்லுவார்கள். தொழில்துறையில் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருக்கலாம். வேலை செய்யும் இடத்தில் வேலைச்சுமை அதிகமாக இருக்கலாம். அல்லது மெட்டீரியல் பற்றாக்குறையினாலோ வேறு காரணங்களினாலோ வேலை இல்லாமல் போகலாம். ரெகுலராக வந்த வருமானம் பாதிக்கப்படலாம். என்றாலும் செவ்வாய், சனிக்கு வீடு கொடுத்த குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். ஆகவே உங்கள் தேவைகள் எதுவும் பாதிக்காது. உணவு, உடை, உறைவிடம் போன்ற அன்றாட வசதிகளுக்கும் சௌகரியங்களுக்கும் குறை வராது. குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார்; 5-க்குடைய சூரியன் சாரம் பெறுகிறார். திட்டங்களும் எண்ணங்களும் தடையில்லாமல் செயல்படும். ஒரு வாரம் விடுமுறையாக இருந்தாலும் மறுவாரம் விடுமுறை நாளையும் சேர்த்து ஓவர் டைம் வேலை பார்க்கலாம். 4-ல் ராகு, அவருக்கு செவ்வாய் பார்வை என்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.

Advertisment

sivan

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். உச்சம் பெற்ற சூரியன் சாரம் பெறுகிறார். 9, 10-க்குடைய சனியும், 7, 12-க்குடைய செவ்வாயும் 8-ல் மறைகிறார்கள். அவர்களுக்கு வீடு கொடுத்த குருவும் 6-ல் மறைகிறார். ராசியாதிபதி சுக்கிரன் ஆட்சி பலத்தால் செல்வாக்கு, புகழ், மரியாதை, பொருளாதாரம் எல்லாம் குறைவில்லாமல் இருந்தாலும், தொழில் இயக்கம் சிறப்பாக இருந்தாலும், எல்லா காரியங்களும் ஆமை வேகத்தில் இயங்கும். ஒருசிலருக்கு "ஹவுஸ் அரஸ்ட்'போல வெளிநடமாட்டம் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்கும் சூழ்நிலையும் இருக்கும். நேரடி நிர்வாகத்தால் பார்த்த எல்லாக் காரியங்களையும் மற்றவர்கள் பொறுப்பில் செயல்பட வேண்டிய சூழ்நிலை அமையும். அது எந்தளவில் முழுமையான பலனைத் தரும் என்று சொல்லமுடியாது. "உடையவர் இல்லை என்றால் ஒரு முழம் கட்டை' என்பார்கள். அதேபோல "தான் பார்க்க வேண்டிய காரியத்தைத் தம்பியை அனுப்பிப் பார்க்கச் சொன்னால் பலன் கிடைக்குமா' என்று சொல்லுவார்கள். 3-ல் ராகு, 9-ல் கேது இருப்பதால் உடன்பிறப்புக்கள் வகையிலும் அல்லது தகப்பனார் வகையிலும் அல்லது பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகளிலும் சிலர் சிக்கல்களைச் சந்திக்க நேரும். எதிர்பாராத செலவுகளும் வீண் விரயங்களும்

22-4-2018 முதல் 28-4-2018 வரை

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு,

(பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மிதுனம்.

22-4-2018- கடகம்.

24-4-2018- சிம்மம்.

26-4-2018- கன்னி.

28-4-2018- துலாம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: அஸ்வினி- 3, 4, பரணி- 1.

செவ்வாய்: பூராடம்- 4, உத்திராடம்- 1.

புதன்: உத்திரட்டாதி- 3, 4, ரேவதி- 1, 2.

குரு: விசாகம்- 3.

சுக்கிரன்: கார்த்திகை- 2, 3, 4.

சனி: மூலம்- 3.

ராகு: பூசம்- 4.

கேது: திருவோணம்- 2.

கிரக மாற்றம்:

குரு வக்ரம்.

சனி வக்ரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாயும், 10, 11-க்குடைய சனியும் பாக்கிய ஸ்தானத்தில் சேர்ந்திருக்கிறார்கள். பொதுவாக செவ்வாயும் சனியும் சேர்ந்தாலும் பார்த்தாலும் பிரச்சினைதான், சிக்கல்தான். கூட்டத்தில் விட்டெறிந்த கல் தேடிவந்து நம் தலையில் விழும். பச்சையாகச் சொன்னால் "சந்தையில் விட்டெறிந்த செருப்பு சனியன் பிடித்தவன் தலையில் விழுந்தது' என்று சொல்லுவார்கள். தொழில்துறையில் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருக்கலாம். வேலை செய்யும் இடத்தில் வேலைச்சுமை அதிகமாக இருக்கலாம். அல்லது மெட்டீரியல் பற்றாக்குறையினாலோ வேறு காரணங்களினாலோ வேலை இல்லாமல் போகலாம். ரெகுலராக வந்த வருமானம் பாதிக்கப்படலாம். என்றாலும் செவ்வாய், சனிக்கு வீடு கொடுத்த குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். ஆகவே உங்கள் தேவைகள் எதுவும் பாதிக்காது. உணவு, உடை, உறைவிடம் போன்ற அன்றாட வசதிகளுக்கும் சௌகரியங்களுக்கும் குறை வராது. குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார்; 5-க்குடைய சூரியன் சாரம் பெறுகிறார். திட்டங்களும் எண்ணங்களும் தடையில்லாமல் செயல்படும். ஒரு வாரம் விடுமுறையாக இருந்தாலும் மறுவாரம் விடுமுறை நாளையும் சேர்த்து ஓவர் டைம் வேலை பார்க்கலாம். 4-ல் ராகு, அவருக்கு செவ்வாய் பார்வை என்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.

Advertisment

sivan

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். உச்சம் பெற்ற சூரியன் சாரம் பெறுகிறார். 9, 10-க்குடைய சனியும், 7, 12-க்குடைய செவ்வாயும் 8-ல் மறைகிறார்கள். அவர்களுக்கு வீடு கொடுத்த குருவும் 6-ல் மறைகிறார். ராசியாதிபதி சுக்கிரன் ஆட்சி பலத்தால் செல்வாக்கு, புகழ், மரியாதை, பொருளாதாரம் எல்லாம் குறைவில்லாமல் இருந்தாலும், தொழில் இயக்கம் சிறப்பாக இருந்தாலும், எல்லா காரியங்களும் ஆமை வேகத்தில் இயங்கும். ஒருசிலருக்கு "ஹவுஸ் அரஸ்ட்'போல வெளிநடமாட்டம் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்கும் சூழ்நிலையும் இருக்கும். நேரடி நிர்வாகத்தால் பார்த்த எல்லாக் காரியங்களையும் மற்றவர்கள் பொறுப்பில் செயல்பட வேண்டிய சூழ்நிலை அமையும். அது எந்தளவில் முழுமையான பலனைத் தரும் என்று சொல்லமுடியாது. "உடையவர் இல்லை என்றால் ஒரு முழம் கட்டை' என்பார்கள். அதேபோல "தான் பார்க்க வேண்டிய காரியத்தைத் தம்பியை அனுப்பிப் பார்க்கச் சொன்னால் பலன் கிடைக்குமா' என்று சொல்லுவார்கள். 3-ல் ராகு, 9-ல் கேது இருப்பதால் உடன்பிறப்புக்கள் வகையிலும் அல்லது தகப்பனார் வகையிலும் அல்லது பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகளிலும் சிலர் சிக்கல்களைச் சந்திக்க நேரும். எதிர்பாராத செலவுகளும் வீண் விரயங்களும் ஏற்படலாம். தானம் கொடுத்த மாட்டை பல்லைத் தட்டிப் பார்ப்பதுபோல சில சம்பவங்களும் நடக்கும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

Advertisment

மிதுன ராசிநாதன் புதன் 10-ல் நீசமாக இருக்கிறார். வார முற்பகுதியில் சனியின் சாரத்திலும் (உத்திரட்டாதி), பிறகு சொந்த சாரத்திலும் (ரேவதி) சஞ்சாரம். பல விதிமுறையில் புதனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. ராசிக்கு கேந்திரம் என்பது ஒரு விதி. புதனுக்கு வீடு கொடுத்த குரு 5-ல் திரிகோணம் பெற்று ராசியைப் பார்க்கிறார் என்பது ஒரு விதி. புதனுக்கு சாரம் கொடுத்த சனி ராசிக்கு 7-ல் கேந்திரம் பெற்று ராசியைப் பார்க்கிறார் என்பது விதி. சனியோடு சேர்ந்த செவ்வாய் புதனைப் பார்ப்பதும் ஒரு விதி. ஆகவே புதன் தசாபுக்திகள் நடந்தாலும், சுப ஆதிபத்தியம் பெற்றாலும் இக்காலம்- இந்த வாரம் உங்களுக்கு ராஜயோகம் ஏற்படும். 7, 10-க்குடையவர் 5-ல் நின்று ராசியைப் பார்ப்பதால் மனைவியால் கணவருக்கும், கணவரால் மனைவிக்கும் நன்மைகள் ஏற்படும். தொழில் மேன்மையடையும். கூட்டுத் தொழிலும் ஆரம்பிக்கலாம். 7-ல் செவ்வாய்- சனி சேர்க்கை பலனாக கலப்புத் திருமணம், காதல் திருமணம் ஏற்படலாம். ராகு- கேது, சனி சம்பந்தப்பட்ட தசாபுக்திகள் நடந்தால் காதல் தோல்விகளும், திருமண முறிவுகளும், விவாகரத்துகளும் ஏற்படலாம். மறுமண யோகமும் அமையும். பெண்களுக்கு புனர்விவாக பார்வதி சுயம்வர கலாஹோமம் நடத்தலாம். ஆண்களுக்கு புனர்விவாக கந்தர்வராஜ ஹோமம் நடத்த வேண்டும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 5, 10-க்குடைய செவ்வாய் 6-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். பொதுவாக 6-ல் செவ்வாய், சனி, ராகு- கேது போன்ற அசுப கிரகங்கள் இருந்தால் சத்ரு ஜெயம், நோய் நிவர்த்தி, கடன் நிவாரணம் என்பது பொதுப்பலன். 6-க்குடைய குரு 4-ல் அமர்ந்து 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 9-க்குடையவர் 10-ஆம் இடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். எனவே "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடிய மாதிரி பொதுவாக எந்தக் குறைபாடுகளும் இருக்காது. அதேசமயம் ஜென்மத்தில் ராகு, 7-ல் கேது நிற்பதால் கணவன் அல்லது மனைவி வகையில் வேலைப்பளு, தொழில் டென்ஷன், உத்தியோகச் சுமை எல்லாம் இருக்கும். என்றாலும் கடகம் என்பது நண்டு; நண்டுக்கு உடம்பைச் சுற்றி கால்கள் இருப்பதால் உடலைத் திருப்பாமல் எந்த திசையிலும் பயணிக்க முடியும். அதுபோல உங்கள் சாமர்த்தியத்தால் எல்லாப் பிரச்சினைகளையும் எளிதாக சமாளித்துவிடலாம். 2-க்குடைய சூரியன் 10-ல் உச்சம் என்பதால் பதவி, தொழில், பணவரவு இவற்றில் பாதிப்புக்கு இடமில்லை. 4-ல் 6-க்குடைய குரு வக்ரம் என்பதால், 4-க்குடைய சுக்கிரன் தன் ஸ்தானத்துக்கு 8-ல் மறைவதால் தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தன்வந்திரி மந்திரத்தைப் பாராயணம் செய்யலாம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 9-ல் உச்சம். அவருக்கு 5-க்குடைய குரு (3-ல் அமர்ந்து) பார்வை. சூரியனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 5-ல் அமர்வு. ஆக 1, 5, 9 என்ற முக்கோணத் திரிகோணத்தொடர்பு ஏற்படுவது உங்களுக்கு எல்லா வகையிலும் நலமும் வளமும் உண்டாகும். நன்மைகள் பெருகும். நினைத்தவை நிறைவேறும். திட்டங்கள் கைகூடும். 10-ல் சுக்கிரன் ஆட்சி என்பதால் வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் ஏற்படும். பொறுப்புகள் அதிகரிக்கும். செல்வாக்கு கூடும். சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கு தொழில் முன்னேற்றம், எதிர்பாராத லாபம், கைநிறைய சம்பாத்தியம், உபதொழில் விருத்தி, மனதில் திருப்தி ஆகிய பலன்களும் உண்டாகும். 2, 11-க்குடைய புதன் 8-ல் நீசபங்கம் என்பதால் விபரீத ராஜயோகமும் ஏற்படும். தொழிலதிபர்கள், குறைந்த முதலீட்டில் வாங்கி விற்ற சரக்குகள் விலை உயர்வால் பன்மடங்கு லாபம் எதிர்பார்க்கலாம். கமிஷன் அடிப்படையில் செய்யும் தொழில்கள் அத்தனையும் தனலாபம் பெருகும். ஷேர் மார்க்கெட் பிக் ஆப் ஆகும்; கைகொடுக்கும். 6-ல் கேது, 12-ல் ராகு என்பதால் விரயம் குறையும், சேமிப்பு பெருகும். நோய் நொடி, வைத்தியச்செலவு விலகும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 7-ல் நீசமாக இருந்தாலும் பல விதிகளினால் நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. (இதில் மிதுன ராசிக்கு எழுதிய பலனில் இந்த விதிமுறைகள் எழுதப்பட்டுள்ளன.) 4, 7-க்குடைய குரு 2-ல் வக்ரம் பெறுவதாலும் அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் ராசிக்கு திரிகோணத்தில் இடம் பெறுவதாலும்- கணவன் அல்லது மனைவி வகையில் எதிர்பாராத வருமானங்களும் நன்மைகளும் சொத்து சுகங்களும் எதிர்பார்க்கலாம். வரவேண்டிய பணம் வந்துசேரும். 4-ல் செவ்வாய்- சனி சேர்க்கையால் சிலருக்கு பூமி, இடத்துப் பிரச்சினை உருவாகலாம். பங்காளி வகையில் சங்கடங்கள் ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் கோர்ட் விவகாரங்கள், போலீஸ் விவகாரங்களைச் சந்திக்க நேரும். ராசிநாதன் புதன் 7-ல் நீசபங்கமாக இருந்தாலும் ஒருசிலருடைய மனைவிமார் கணவருக்குத் தெரியாமல் ஏலச்சீட்டு, குலுக்கல் சீட்டு நடத்தி வரவு- செலவில் பிரச்சினைகள் ஏற்பட்டு, வாராக்கடனாய் ஏமாற்றமடைய நேரும். எதிர்பாராத இழப்புகளையும் சந்திக்க நேரும். ரகசிய நடவடிக்கைகள் எல்லாருக்கும் தெரிந்து குடும்பத்தில் பிரச்சினைகளையும் சந்திக்க நேரும். முறையான பரிகாரங்களைத் தேடிக்கொண்டால் சமாளிக்கலாம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைவாக இருந்தாலும் ஆட்சி பெறுகிறார். 7-ல் உச்சம் பெற்ற சூரியன் சாரம் பெறுகிறார். (கார்த்திகை நட்சத்திரம்). 11-க்குடைய சூரியனும் ராசியைப் பார்க்கிறார். ஆகவே செய்தொழில் விருத்தி, தனலாபம், பேச்சில் இனிமை, தொழில்- வியாபாரத்தில் திட்டமிட்ட நடவடிக்கைகள் எல்லாம் உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும். அரசுப்பணி, தனியார் பணியில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகம். ஊதியம் குறைவாக இருக்கும். 10-ல் ராகு இருப்பதால் முகத்திற்கு நேராக இனிமையாகவும் முதுகுக்குப் பின்னால் கடுமையாகவும் புறம்பேசுவர்களோடுதான் பழகுவீர்கள். நீங்கள் வாங்கிக் கொடுத்த காபி டீயைக் குடித்துவிட்டு உங்களுக்கு எதிர்மறையாக செயல்டுவார்கள். அப்படிப்பட்ட கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு ஒதுக்குவது நல்லது. 4-ல் கேது. 4-க்குடைய செவ்வாய், சனி சம்பந்தம். உங்களுக்கோ தாயாருக்கோ நரம்பு சம்பந்தப் பட்ட பிணி, பீடைகள், முழங்கால் வலி, மூட்டு வலி சர்வ சாதாரணமாக இருக்கும். நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பதுபோல ஆபத்துகளுக்கு இடமில்லை என்றாலும் அவஸ்தைகள் அதிகமாக இருக்கும். "நோய்க்கும் பார் பேய்க்கும் பார்' என்பதுபோல வைத்தியமும் அவசியம். தன்வந்திரி வழிபாடும் அவசியம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 2-ல் சனியோடு சம்பந்தமாக இருக்கிறார். பொதுவாக செவ்வாய், சனி சேர்க்கை கெடுதலையே செய்யும். என்றாலும் செவ்வாய்க்கு ராசிநாதன் என்ற அந்தஸ்து கிடைப்பதால்- குரு வீட்டில் இருவரும் இருப்பதால் கெடுபலன் குறைய இடமுண்டு. குடும்பாதிபதி குரு 12-ல் மறைவதால் குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகளும் பிரச்சினைகளும் ஏற்பட இடமுண்டு. வாக்குவாதங்களும் தர்க்கங்களும் ஏற்பட்டாலும் உங்கள் பொறுமையாலும் சகிப்புத்தன்மையாலும் அதை சமாளிக்க வேண்டும். பேச்சுக்குப் பேச்சு வளர்ந்தால்- பதிலுக்குப் பதில் பதிலடி கொடுத்தால் விவகாரம் பெரிதாகத்தானே ஆகும். மனைவியோ, மக்களோ, உற்றார்- உறவினர்களோ, மற்றவர்களோ, நண்பர்களோ யார் எது சொன்னாலும் என்ன விமர்சனம் செய்தாலும் "மௌனம் கலக நாஸ்தி' என்று அமைதியாக இருந்துவிட்டால் பிரச்சினைகளை வளரவிடாமல் முற்றுப்புள்ளி வைக்கலாம். 7-க்குடைய சுக்கிரன் ஆட்சி பெற்று ராசியைப் பார்ப்பதால் யார் எப்படி இருந்தாலும் கணவருக்கு மனைவியும், மனைவிக்கு கணவரும்தான் ஆதரவாகவும் அனுசரணையாகவும் இருப்பார்கள். ஈஸ்வரனே தன் உடம்பில் சரிபாதியை சக்திக்குக் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலிக்கிறார்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 11-ல் வக்ரமடைகிறார். சுப ஸ்தானங்களில் வக்ரமடையும் கிரகங்கள் சுபப்பலன்களை அதிகவேகமாக (உக்ரமாகச்) செய்யும். அதேபோல பாவ ஸ்தானங்களில் வக்ரமடையும் கிரகங்கள் அந்தக் கெடுபலன்களையும் உக்ரமாக- பலமாகச் செய்யும். இங்கு லாப ஸ்தானத்தில் குரு வக்ரமடைவதால் லாபம், வெற்றி, முயற்சித்த காரியங்களில் முன்னேற்றம், மனதில் தெய்வ சிந்தனை, எதிலும் ஆர்வம், அக்கறை உண்டாகும். குரு சுக்கிரன் வீட்டில் இருப்பதால் சுக்கிரனும் குருவும் பகையென்று, நன்மை செய்யாது என்று சிலர் கருதலாம். உண்மையில் குருவுக்கும் சுக்கிரனுக்கும் பகையில்லை. குரு தேவர்களுக்கு குரு! சுக்கிரன் அசுரர்களுக்கு குரு! தேவர்களுக்கும் அசுரர்களுக்கும்தான் பகை. வாதியும் பிரதிவாதியும் பகை! ஆனால் அவர்களுக்காக வாதாடும் வக்கீல்கள் பகைவர்கள் அல்ல! கோர்ட்டில் காரசாரமாக எதிர்மறை வாதங்கள் புரிந்தாலும் கோர்ட்டுக்கு வெளியே இரு கட்சி வக்கீல்களும் கைகோர்த்துக்கொண்டு காபி சாப்பிட வருவார்கள். மேலும் குருவின் சொந்த வீடான மீனத்தில்தான் சுக்கிரன் உச்சமடைகிறார். அப்படி இருக்கும்போது அவர்களுக்குள் பகைத் தன்மையோ கெடுபலனோ நடக்கும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். சுக்கிரன் களஸ்திர காரகன். குரு மாங்கல்ய காரகன். வாழ்க்கை எனும் வண்டிக்கு கணவனும் மனைவியும்தான் இரண்டு சக்கரங்கள் ஆவார்கள்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி தன் ராசிக்கு 12-ல் மறைவு. அவருக்கு வீடு கொடுத்த குரு அவருக்கு 11-ல் பலம். ராசிக்கு 10-ல் சனியோடு லாபாதிபதி செவ்வாய் சேர்க்கை. எனவே, விரயச்சனி நடந்தாலும் உங்களுக்கு கெடுதல் இல்லை. தொழில் சம்பந்தமாகவும் ஆரோக்கியம் சம்பந்தமாகவும் பூமி, வீடு, மனை சம்பந்தமாகவும் குடும்பத்தில் மங்கள காரியங்களுக்காகவும் விரயங்களும் சுபச்செலவுகளும் உண்டாகலாம். புதிய விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில்துறையில் அக்கறையும் விடாமுயற்சியும் உண்டாகும். அதனால் வெற்றியும் லாபமும் எளிதாக அமையும். வேலை தேடி அலைவோர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்யலாம். ஜென்ம கேது- சப்தம ராகு என்பதால் அரபு நாடுகளுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். வேலை சம்பந்தமாகவோ சொந்தத் தொழில் சம்பந்தமாகவோ சிலர் கடன் வாங்க நேரும். அது சுபக்கடன் அல்லது விருத்திக்கடன் எனலாம். 6, 9-க்குடைய புதன் 3-ல் நீசபங்கம். பங்காளி வகையிலும் உடன்பிறப்புக்கள் வகையிலும் வருத்தங்கள் ஏற்பட இடமிருப்பதால் அனுசரித்துப்போவது நல்லது. "விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை' என்பது பழமொழி. இனி ஒரு ஜென்மாவில் யார் எங்கேயோ! இந்த ஜென்மாவில் உடன்பிறந்தவர்களோடு ஒன்றுபட்டுப் போவது நல்லது.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம் பெறுகிறார். அவரோடு செவ்வாயும் சேர்க்கை. அவர்களுக்கு வீடு கொடுத்த குரு 9-ல். செவ்வாய்க்கும் சனிக்கும் 3, 6, 11-ஆம் இடங்கள் நன்மை தரும் இடங்கள். குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் நன்மை தரும் இடங்கள். குறிப்பாக "ஓடிப்போனவருக்கு ஒன்பதில் குரு' என்பார்கள். 9-ஆமிடமான திரிகோணம் குருவுக்கு நல்ல இடம். அதிலும் உங்கள் ராசியையே 2, 11-க்குடைய குரு திரிகோணத்திலிருந்து பார்க்கிறார். ஆக இந்தக் கோட்சாரம் (11-ஆமிடத்துச் செவ்வாய், சனி, 9-ஆமிடத்து குரு) உங்களுக்கு ராஜயோகப் பலனைத் தரும் என்பது நிச்சயம். அதற்கேற்ற வகையில் தசாபுக்திகளும் யோகமாக அமைந்தால் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு கிடைத்தமாதிரிதான். தசாபுக்திகள் பாதகமாக இருந்தாலும் திருவிளையாடல் திரைப்படத்தில் தருமியாக நடிக்கும் நாகேஷ் ""பாட்டில் பிழை இருந்தால் என்ன? பரிசுத் தொகையை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்வதுபோல, கோட்சாரம் சாதக பாதங்களை விலக்கி அதில் நன்மை செய்யும். 5, 8-க்குடையவர் 2-ல் நீசம் என்பதால் விபரீத ராஜயோகப் பலனைச் சந்திக்கலாம். எதிர்பாராத தனப்ராப்திகளையும் சந்திக்கலாம். பிரச்சினைகள் இல்லாமல் சமாளிக்க ஓபிஎஸ்.-ஐ, இபிஎஸ் துணை முதல்வராக்கி சேர்த்துக்கொண்டது போல!

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 8-ல் மறைவது குற்றம் என்றாலும் 6-க்குடைய சூரியன் 2-ல் உச்சம் பெற்று அவரைப் பார்ப்பது பலம். குருவுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் 3-ல் ஆட்சி பெற்று அவரும் உச்சம் பெற்ற சூரியன் சாரத்தில் இருக்கிறார். 9-க்குடைய செவ்வாய் 10-ல் தர்மகர்மாதிபதி யோகமடைகிறார். எனவே எல்லா வகையிலும் இந்த வாரக் கோட்சாரம் கும்ப ராசிக்கும் அடுத்த மீன ராசிக்கும் விபரீத ராஜயோகமாக அமைகிறது. வெளித்தோற்றத்தில் பிரச்சினைகள் இருப்பதுபோலத் தோன்றினாலும் உடனிருப்பவர்கள் நம் மனம் விரும்பியபடி ஒத்துழைப்புத் தரவில்லையே என்று குறைபாடாக நினைத்தாலும் மொத்தத்தில் உங்கள் எண்ணங்கள் ஈடேறும். திட்டங்கள் நிறைவேறும். கருதிய காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தேவையற்ற செலவுகள் விட்டு விலகும். நட்பு வட்டம் விரியும். தொழில், உத்தியோகம், வேலை, பொருளாதாரம் எல்லாவற்றிலும் குறைவில்லாத நிறை ஏற்படும். ராசிநாதன் மறைவு பலத்தால் எல்லாம் சற்று தாமதமாக நடக்கும். சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் வேலை நடக்கும்போது கூட்ஸ் வேகத்தைவிட மெதுவாக ஊர்ந்து சென்று மராமத்துப் பகுதியைத் தாண்டியவுடன் அதிவேக ஓட்டத்தால் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடம்போய்ச் சேருவது போல!

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe