ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மகரம்.

4-3-2019- கும்பம்.

7-3-2019- மீனம்.

9-3-2019- மேஷம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: சதயம்- 4, பூரட்டாதி- 1, 2.

செவ்வாய்: பரணி- 2, 3, 4.

புதன்: பூரட்டாதி- 2, 1, சதயம்- 4.

குரு: கேட்டை- 4.

சுக்கிரன்: உத்திராடம்- 3, 4, திருவோணம்- 1, 2.

சனி: பூராடம்- 2.

ராகு: புனர்பூசம்- 3.

கேது: உத்திராடம்- 1.

கிரக மாற்றம்:

புதன் வக்ரம், அஸ்தமனம்.

Advertisment

vinayagar

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிக்கு 3-ல் ராகு நின்று மேஷ ராசியைப் பார்க்கிறார். ஜென்ம ராசியில் செவ்வாய் ஆட்சி; 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். உடன்பிறந்த சகோதர- சகோதரி வகையில் நிலவும் கருத்து வேறுபாடுகள் மறை யும். ஒற்றுமையுணர்வு ஏற்படும். பூமி, வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் விலகும். சிலர் குடியிருப்பு மாற்றத்தைச் சந்திக்கலாம். சிலர் வேலையில் இடமாற் றத்தையோ வேலை மாற்றத்தையோ சந்திக்கநேரும். இன்னும் சிலர் நீண்டநாட்களுக்கு முன்பு வாங்கிப்போட்ட மனையில் வீடு கட்டும் பணியைத் துவங்கும் முயற்சியை மேற்கொள்ளலாம். அதற்குண்டான வங்கிக்கடனோ தனியார் கடனோ கிடைக்கும். 8-ல் குரு மறைந்தாலும், செவ் வாய் வீட்டில் அவர் நிற்பதாலும், குருவுக்கு செவ்வாய் பார்வை கிடைப்பதாலும் மறைவு தோஷம் விலகும். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். எனவே, உங்களது முயற்சி களிலும் காரியங்களிலும் தடை, தாம தங்கள் விலகி வெற்றி உண்டாகும். 5-க்குடைய சூரியன் 11-ல் இருப்பதும் காரிய வெற்றியைத் தரும். குரு 12-ஆம் இடத்தைப் பார்த்தாலும், 2-ஆமிடத்தையும் பார்ப்பதால் விரயங்கள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் வகையில் பொருளாதாரம் அமையும். சிலருக்கு ஏற்கெனவே பார்த்து வந்த வேலையில் கிடைத்த வருமானத்தைவிட, சுயதொழில் ஆரம்பித்து கிடைக்கும் வருமானம் குறைவாக இருந்தாலும், அதற்கேற்றபடி செலவுகளைக் குறைத்து ஈடுசெய்யலாம். கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 9-ஆம் இடமான மகரத்தில் இருக்கிறார்; சூரியன் சாரத்தில் சஞ்சரிக்கிறார். (உத்திராடம்). 2-ல் ராகு இருப்பதால் குடும்பத்தில் குழப்பம், பொருளாதாரத்தில் சிக்கல், சிரமங்கள், கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு முதலியவற்றைச் சந்தித்தாலும், குரு ராசியைப் பார்க்கிறார். குரு அட்டமாதிபதி என்பதால் அவருடைய பார்வையும் முழு நிறைவு தராது. பொறாமையாளர்கள் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. "கட்டிய வீட்டிற்கு எட்டு வக்கணை சொல்லுவார்கள்' என்று. அதுபோல, உங்கள் செயலையும் நடவடிக்கைகளையும் விமர்சனம் செய்வார்கள். திரைப்பட நகைச்சுவைப் பகுதியில் "தானும் படுக்கமாட்டான். தள்ளியும் படுக்கமாட்டான்' என்று சொல்வதுபோல, உங்களைச் சார்ந்தவர்கள் உங்களை எதுவும் செய்யவிட மாட்டார்கள். அதுமட்டுமல்ல; "காலைச் சுற்றிய பாம்பு கடித்த பாடும் இல்லை; கழன்றுவிட்டு விலகிய பாடும் இல்லை.' இவையெல்லாம் 8-ஆம் இடத்தில் உள்ள சனி- கேதுவின் வேலை. என்றாலும் 7-ல் உள்ள குரு ராசியைப் பார்ப்பதால், "முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு' என்பதுபோல, எல்லாமே உங்களுக் குப் பழகிப்போன சமாச்சாரமாகிவிடும். 2-ல் ராகு- ஒரு வார்த்தை கொல்லும்- ஒரு வார்த்தை வெல்லும் என்பதால், பேச்சில் நிதானம் தேவை.

மிதுனம்

Advertisment

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் திரிகோணத்தில் இருக்கிறார். (9-ஆம் இடம்). சூரியனோடு சம்பந்தம். புதன் வக்ரம், அஸ்தமனம். 7, 10-க்குடைய குருவும் 6-ல் மறைவு. ஜென்ம ராகு, சப்தமத்தில் கேது, சனி. இவையெல்லாம் உங்களை நம்பிக்கை இழக்கச்செய்யும். கடுமையான உழைப்பு, மிகமிக சொற்பமான பணம். சிலர் பள்ளத்திலிருந்து மேட்டுப் பகுதிக்குத் தண்ணீர் பாய்ச்சுவார்கள். சிலர் ஓட்டை வாளியில் தண்ணீர் இறைப்பார்கள். மொத்தத்தில் "சிறுவர் வெள்ளாமை வீடு சேராது' என்பதுபோல, உங்கள் முயற்சிகள் எல்லாம் வீணாகும். குறிப்பாக, இடம், வீடு, நிலத்தரகர்கள் பாடுபட்டு ஏற்பாடு செய்த காரியத்திற்கு பணமும் கமிஷனும் கிடைக்காமல், மற்றவர்கள் தட்டிப்பறித்துக்கொண்டு போய்விடுவார்கள். சிறுகச்சிறுக குருவி சேர்த்ததை, ஒரே நொடியில் பருந்து கொண்டுபோனதுபோல இழப்பாகிவிடும். என்றாலும் 11-ஆம் இடத்துச் செவ்வாய் ஆட்சி பெற்றதாலும், 2-ஆமிடத்தைப் பார்ப்பதாலும், 10-க்குடையவரே 10-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும் "ஒரு கதவு அடைபட்டால் இன்னொரு கதவு திறக்கும்' என்பதுபோல, காலம் உங்களுக்கு கைகொடுக்கும். திருக்குரானில் ஒரு வாசகம் உண்டு. "ஒவ்வொரு அரிசியிலும் அதைச் சாப்பிடுகிறவர் பெயரை அல்லா எழுதி வைத்திருக்கிறார்' என்பதுதான் அது. அதுபோல உங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 5-ல் நிற்கும் குரு ஜென்ம ராசியைப் பார்க்கிறார். அத்துடன் 9, 11-ஆமிடங்களையும் பார்க்கிறார். 10-ல் செவ்வாய் ஆட்சி பெற்று, 9-க்குடைய குருவையும் பார்க்கிறார். இவையெல்லாம் உங்களுக்கு ப்ளஸ் பாயின்ட்டுகள். கற்பூரம் எளிதில் பற்றிக்கொள்ளும். பற்ற வைக்கா விட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாகக் காற்றில் கரையும். நீங்கள் எதற்கெடுத் தாலும் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய வர்கள். ஆத்திரம் கண்ணை மறைக்கும் என்பதுபோல, சிலசமயம் அர்த்தமில் லாமல் ஆத்திரப்படுவீர்கள். அதை "செல்ப் கன்ட்ரோல்' செய்துகொண்டால், எப்போதும் எதிலும் தோல்வி இருக்காது. அதேசமயம் 9-க்குடையவரே 9-ஐப் பார்ப்பதால், நீங்கள் எதைச் செய்தாலும் உங்களுக்கு தெய்வம் துணைநின்று அருள் பாலிக்கும். தெய்வம் நேரடியாக வராது. மனைவி, மக்கள்மூலமாக வரும். அதைப் புரிந்து செயல்பட்டால், எம்.ஜி.ஆர். "நாளை நமதே' என்று பாடியமாதிரி வெற்றி உங்கள் பக்கம். ஜெயித்துக்காட்டலாம். 6-ஆமிடத்துச் சனி- சில நல்ல காரியங்களுக்காக கடன் வாங்க நேரும். அதனால் தவறில்லை. மனைவி சொல்லே மந்திரம் என்றும் நினைக்க வேண்டாம். 7-ல் சுக்கிரன் இருப்ப தால், மனைவி சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் போதும். அவர்கள் சொல்லுவது உங்களுக்கு வழிகாட்டுதலாக சிலசமயம் அமையும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

சிம்ம ராசிநாதன் சூரியன் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அவருடன் 2, 11-க்குடைய புதனும் சேர்க்கை. 10-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைந்தாலும், 10-ஆம் இடத்துக்குத் திரிகோணம். தொழில் சம்பந்த மாகவும், வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவைக்குப் பொருள் சேர்ப்பதற்காகவும் கடன் வாங்க நேரிடும். அவையெல்லாம் சுபக் கடன்தான். சிலர் கட்டட சீர்திருத்தத்திற்காக கடன் வாங்கலாம். சிலர் வெளிநாட்டு வேலைக்குப் போவதற்காகக் கடன் வாங்கலாம். சிலர் பிள்ளைகளின் கல்விக்காக, மங்கள காரியத்திற்காகக் கடன் வாங்கலாம். எல்லாம் சுபக்கடன்தான். 6-க்குடைய சனி 5-ல் குரு வீட்டில் இருப்பதால், கடன் கவலை ஒருபுறம் இருந்தாலும், மதிப்பு, மரியாதை, கௌரவம் பாதிக்காது. ஒருசிலர் பூர்வீக இடங்களை லாபத்துக்கு விற்று, சௌகரியம்போல மாற்றியமைத்துக்கொள்ளலாம். அண்ணன்- தம்பி, பங்காளிகளின் ஆதரவும் அனுசரணை யும் எதிர்பார்க்கலாம். தனலாபம் பெருகும். குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் நிலவும். மங்கள காரியங்கள் நிறைவேறும். தேக ஆரோக்கியத்தில் தெளிவும், நல்ல முன்னேற்ற மும் தெரியும். புதுமுயற்சிகள் கைகூடும். அரசாங்கப் பிரச்சினைகளும் சிக்கல்களும் நிவர்த்தியாகும். சிலருக்கு அரசியல் ஈடுபாடும் முன்னேற்றமும் தெரியும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 6-ல் மறை கிறார். இருந்தாலும், அவருக்கு வீடு கொடுத்த சனி அவரையும் பார்க்கிறார்; 10-ஆம் இடத்தையும் பார்க்கிறார்; ஜென்ம ராசியையும் பார்க்கிறார். தொழில், வியா பாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப் புகள் தேடிவரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல் படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியிருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு திறமைக் கேற்ப வேலை அமையும். 9-க்குடைய சுக்கிரன் 5-ல் இருப்பது சிறப்பு. ஒரு திரிகோணாதிபதி மற்றொரு திரிகோணம் ஏறுவது சிறப்பு. தெய்வ அனுகூலமும் குலதெய்வக் கிருபையும் பரிபூரணமாக இருக்கும். அதாவது குருவருளும் திருவருளும் பரிபூரணமாக வழிநடத்தும். 1, 10-க்குடையவர் 12-க்குடைய சூரியனோடு சேர்ந்து 6-ல் மறைவதால் தொழில், வாழ்க்கை, கல்விக்காக கடன் வாங்கலாம். அல்லது வேலைக்காகவும் கடன் வாங்கலாம். ஆட்சி மாறுவதால் கடன் ரத்தாகலாம். 10-ல் உள்ள ராகு ஒருசிலருக்கு தொழில் மாற்றம், இடமாற்றத்தை ஏற்படுத்துவார். அதேபோல, 4-ஆமிடத்துச் சனியும் கேதுவும் ஊர் மாற்றம், குடியிருப்பு மாற்றத்தையும் ஏற்படுத்த லாம். எந்த மாற்றமாக இருந்தாலும், அந்த மாற்றம் நல்ல மாற்றமாக அமையும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 4-ல் அமர்ந்து 10-ஆம் இடத்தைப் பார்க் கிறார். 10-க்கு திரிகோணாதிபதியான குருவும் 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். ராசிக்கு 6-க்குடையவர் குரு என்பதால், பொறுப்புகளும் வேலைப்பளுவும் சற்று அதிகமாகவே காணப்பட்டாலும், உத்தியோகஸ்தர்கள் அனுகூலமான பலனை அடையலாம். எதிர்பார்த்த பதவி உயர்வும், மேலதிகாரிகளின் ஆதரவும், பாராட்டும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சிலர் எதிர்பார்த்துக் காத்திருந்த இடமாற்றமும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேபோல, வாழ்க்கையிலும் குடும்பத்திலும் குதூகலமும் பூரிப்பும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர- புத்திரிகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். இதுவரை தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் தாராள தனவரவு களால் சிறப்பாக நிறைவேறும். வாகனம் வாங்கும் யோகமும், வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலனும் உண்டாகும். திருமண சுபகாரியப் பேச்சுவார்த்தைகளில் அனுகூலமான பலனை அடையலாம். உடல் நலனில் சிறுசிறு பலவீனங்கள் ஏற்பட்டாலும், முயற்சிகளில் தளர்ச்சி எதுவும் ஏற்படாது. மனவலிமையினால் எல்லாவற்றையும் சாதிப்பீர்கள்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைவது குற்றம் என்றாலும், அங்கு அவர் ஆட்சியாக இருக்கிறார்; 7, 12-க்குடைய சுக்கிரன் சாரம் பெறுகிறார். சுக்கிரன் 7-ஆமிடத்திற்குத் திரிகோணமாக இருப் பதோடு, 2-க்குடைய ஜென்ம குரு 7-ஆமிடத் தையும் பார்க்கிறார். திருமணமாகாதவர் களுக்குத் திருமண முயற்சிகள் கைகூடும். பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளையும், ஆணுக்கு நல்ல மணமகளும் அமைவார்கள். திருமணமானவர்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலிலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. வேலை தேடி அலைபவர்களுக்கு வெளிநாட்டு வேலை முயற்சி பலனளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் வெளியூர் வர்த்தகம் தொடர்புடையவற்றால் அனுகூலமான பலனை சந்திக்கலாம். ஜனன ஜாதக தசாபுக் திகள் பாதகமாக இருந்தால், எதையும் மிகுந்த கவனமுடனும், எச்சரிக்கையுடனும் செயல் படுத்துவது அவசியம். ஏழரைச்சனியில் சந்திர தசையோ சந்திரபுக்தியோ நடந்தால் சிலருக்கு உயிர்ச்சேதம் அல்லது பொருட் சேதத்தை ஏற்படுத்தும் என்பதால், திங்கட்கிழமை தோறும் சிவலிலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்யவும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு தன் ராசிக்கு 12-ல் மறைந்தாலும், 7, 10-க்குடைய புதன் சாரத்தில் (கேட்டை 4-ல்) இருக்கிறார். நவாம்சத்தில், மீனத்தில் ஆட்சிபெறுவார். ராசிச் சக்கரத் திலும் மீனத்தை (4-ஆம் இடத்தை 4-க்குடை யவரே) பார்க்கிறார். எனவே, உங்கள் ஆரோக் கியம், வாழ்க்கை, தொழில், வேலை, உத்தி யோகம் எதிலும் எந்தக் குறையும் இல்லை. ஜென்மச்சனி சிலருக்கு ஆரோக்கியக்குறைவைக் கொடுத்தாலும், டாக்டரிடம் போனால் எந்தக் குறையும், கம்ப்ளையின்ட்டும் எதுவு மில்லை என்றும், சத்துக்குறை மட்டும் என்று சத்து ஊசி போட்டுவிடுவார். அதனால், ஜென்ம கேதுவும், ஜென்மச்சனியும் கற்பனை பயத்தையும் கற்பனைக் கவலையையும் உண்டாக்கலாம். "குறையொன்றுமில்லை மறைமூர்த்திகண்ணா' என்று பாடியமாதிரி குறையில்லை. சிலருக்கு 12-ல் குரு இருப்பதால், தவிர்க்கமுடியாத செலவுகளும் பயணங்களும் ஏற்படலாம். பாதிப்பு ஏதும் இருக்காது. மேலும், அந்த அனுபவங்கள் உங்களுக்கு ஆனந்தத்தை ஏற்படுத்தும். மனதில் மகிழ்ச்சி உண்டாக்கும். 7, 10-க்குடைய புதன் வக்ரம், அஸ்தமனம் என்பதால், ஒருசிலரின் வாழ்க்கைத் துணைவருக்கு (மனைவி அல்லது கணவருக்கு) சத்துக்குறைவு, வேலை செய்யும் போது தளர்ச்சியை ஏற்படுத்தலாம். முதலிலில் சொன்னதுபோல சத்து டானிக், சத்து ஊசி போட்டு சமாளிக்கலாம். பாதிப்புக்கு இடமில்லை. 5-ல் உள்ள செவ்வாய் (12-க்கு டையவர்) 12-ஆம் இடத்தைப் பார்ப்பதால், சிலர் வீடு மாறலாம் அல்லது வேலை மாறலாம் அல்லது பிள்ளைகளின் படிப்புக்காக தற்காலிக முகவரிகூட மாற்றலாம். உண்மையான மாற்றம் 2020 சனிப்பெயர்ச்சிக்குப் பிறகுதான் அமையும். அதுவரை அவரவர் வயதுடன் ஒரு எண்ணிக்கை சேர்த்து, அந்த எண்ணிக்கை மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி சனிக்கிழமைதோறும் (அடுத்த சனிப் பெயர்ச்சிவரை) காலபைரவர் சந்நிதியில் நெய்யில் தீபமேற்றி வழிபடலாம்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி தன் ராசிக்கு 12-ல் மறைவு. அவருக்கு வீடு கொடுத்த குரு அதற்கு 12-ல் மறைவு. குருவுக்கு 12-க்குடைய சுக்கிரன் ஜென்ம ராசியில்! எனவே முதலில் செலவு- விரயம். பிறகு தன வரவு, லாப வரவு! அதாவது, முதலீடு என்று அதை எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக, வங்கியில் பிக்சட் டெபாசிட் அல்லது ரெகரிங் டெபாசிட் கணக்கில் செலுத்தும் போது, முதலிலில் செலவு (விரயம்). பிறகு, வட்டியும் முதலும் சேர்த்து வரவு, திரும்பப் பெறுதல் என்பதுபோல! ஜென்மச் சுக்கிரன் 5, 10-க்குடையவர் என்பதால், உங்கள் எண்ணங்கள் ஈடேறும். திட்டங்கள் வெற்றி யடையும். கருதிய காரியங்கள் கைகூடும். விருப்பங்கள் நிறைவேறும். அதேபோல, தொழில்துறையில் முன்னேற்றமும் வளர்ச்சியும் உண்டாகும். லாபம் பெருகும். வேலையில் திருப்தியும் ஆர்வமும் உண்டாகும். பதவி உயர்வு, விரும்பிய இடப் பெயர்ச்சி போன்ற நன்மைகளும் உண்டாகும். 6, 9-க்குடைய புதன் 2-ல் இருப்பதால், 8-க்குடையவரோடு சேர்ந்திருப்பதால், தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக கடன் வாங்கநேரும். கடனும் கிடைக்கும். குடும் பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகளும், ஒற்றுமைக்குறைவு அல்லது ஒத்துழைப் புக்குறைவு ஏற்பட்டாலும், "நீரடித்து நீர் விலகாது' என்பதையும், "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை' என்பதையும் நினைவில் கொண்டு, எல்லாரையும் அனுசரித்து, அரவணைத்துப்போனால் எந்த பாதிப்புக்கும் இடமிருக்காது. கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவு விஷயத்தில் திட்டமிட்டு செயல் படுவது நல்லது. வரவேண்டியது தாமதப் பட்டாலும், கொடுக்க வேண்டியதை வாக்கு நாணயம் தவறாமல் கொடுப்பதால் கடன் உருவாகும். அது சுபமான கடன்தான்!

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசியில் 7-க்குடைய சூரியனும், 8-க்குடைய புதனும் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வீடு கொடுத்த சனி 11-ல் நின்று ராசியையும் பார்க்கிறார்; ராசியில் நிற்கும் சூரியனையும் புதனையும் பார்க்கிறார். 2-க்குடைய குரு 2-ஆம் இடத்தையே பார்க் கிறார். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறு பாடுகள் காணப்பட்டாலும், எந்தவிதமான பாதிப்புக்கும் இடமில்லாத வகையில் நாளும் பொழுதும் ஓடும். சிலசமயம், வெட்டிச் செலவுகளும் விரயச்செலவுகளும் ஏற்பட்டாலும், அவையும் நன்மையான பலன்களைத் தரும். அதாவது "சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்பது உங்களுக்குப் பொருத்தமாக அமையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சிறுசிறு தடைகளுக்குப் பிறகு நினைத்தபடி நிறைவேறும். சில காரியங்கள் உடனே முடிவடையும். சில காரியங்கள் தாமதமாக முடிவடையும். மொத்தத்தில் "கோல்' போட்டுவிடலாம்; வெற்றிபெற்று விடலாம். ஆடம்பரச் செலவுகளையும், அனாவசியமான செலவுகளையும் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வகையிலும் நண்பர்கள் வகையிலும், நன்மைகளும் உண்டு; தொல்லை களும் உண்டு. தொல்லைகளை அன்புத் தொல்லைகளாக ஏற்றுக்கொள்ளுங்கள். வம்புத் தொல்லைகளை விலக்கி ஒதுக்குங்கள். 11-ஆமிடத்துச் சனியும், கேது- ராகுவும் எதிர்பாராத யோகங்களை அள்ளித்தரும்!

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிக்கு 9-ல் குரு நிற்கிறார்; மீன ராசியைப் பார்க்கிறார். குரு 10-க்குடையவர் 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகம். 10-க்குடையவரே 9-க்குடைய செவ்வாயைப் பார்ப்பதும் தர்மகர்மாதிபதி யோகம்தான். பொதுவாகவே பன்னிரண்டு ராசிக்காரர்களிலும், சமீபகால கோட்சாரம் மீன ராசிக்காரர் களுக்குத்தான் அதியோக மாக அமைகிறது. உடல்நிலை யில் உங்களுக்கோ வாழ்க்கைத் துணைக்கோ சிறுசிறு சங்கடங்கள் அவ்வப்போது தோன்றினாலும், அவற்றைச் சமாளித்து செயல்படுவீர்கள். வேதனைகளையெல்லாம் விலக்கிவிட்டு சாதனை படைக்கலாம். சோதனைகளைக் கடக்கலாம். தோரணையாக நடக்கலாம். குடும்பத்தில் உள்ள வர்களுக்காகவும், உங்களை நம்பி இருப்பவர்களுக்காகவும் நீங்கள் "ரிஸ்க்' எடுத்து, சாதித்து, ஆறுதல் அடைவீர்கள். மாறு தல்கள் எதுவானாலும் அவை தேறுதல்களாக அமையும். திரைப்படத்தில் பாடியமாதிரி "வெற்றிமீது வெற்றிவந்து உங்களைச் சாரும். அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் மனைவி, மக்களைச் சாரும்.' 4-ல் உள்ள ராகுவுக்கும், அவரைப் பார்க்கும் சனி- கேதுவுக்கும் ஜாதகரீதியான தசாபுக்திகளுக்காகவும் உரிய பரிகாரங்களைக் கண்டுபிடித்து செய்துகொண்டால் துன்பம் என்பதில்லை. எல்லாம் இன்ப மயமே!