ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மேஷம்.
2-6-2019- ரிஷபம்.
4-6-2019- மிதுனம்.
6-6-2019-கடகம்.
8-6-2019- சிம்மம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: ரோகிணி- 3, 4, மிருகசீரிடம்- 1.
செவ்வாய்: திருவாதிரை- 3, 4, புனர்பூசம்- 1.
புதன்: மிருகசீரிடம்- 4, திருவாதிரை- 1, 2, 3.
குரு: கேட்டை- 4.
சுக்கிரன்: பரணி- 4, கார்த்திகை- 1, 2, 3.
சனி: பூராடம்- 2.
ராகு: புனர்பூசம்- 2.
கேது: பூராடம்- 4.
கிரக மாற்றம்:
குரு, சனி வக்ரம்.
4-6-2019- ரிஷபச் சுக்கிரன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் ஆரம்பத்தில் ராகு சாரத்தில் இருக்கிறார். பிறகு சுயசாரம் பெறுகிறார். செவ்வாய் ராகுவோடு சேர்ந்திருக்கிறார். காரியத்தடை, சகோதர- சகோதரி வகையில் மனவருத்தம், நேரடியாகவோ மறைமுகமாகவோ மனசங்கடங்களைச் சந்தித்தல் போன்ற சூழ்நிலைகள் உருவாகலாம். 9-க்குடைய குரு 8-ல் மறைவு, வக்ரம். என்றாலும் ஏற்கெனவே கூறியமாதிரி, 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர் மாதிபதி யோகம்; அது வழிநடத்தும். 4-ஆம் தேதிமுதல் 2-க்குடைய சுக்கிரன் ஆட்சிபெறுகிறார். பொருளாதாரத் தேக்கநிலை மாறும். சுக்கிரனை குருவும் பார்க்கிறார். தேவைகள் பூர்த்தியாகும். எவ்வளவு உழைத்தாலும் வருமானம் போதவில்லையே என்ற சூழலும் மாறும். 8-ல் குரு மறைந்தாலும், 12-ஆம் இடம், 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் பூமி, வீடு, மனை சம்பந்தமான சில சுபவிர யங்கள் ஏற்படலாம். சிலர் சொந்தமாக மனை வாங்கு வதற்கு வங்கிக்கடன் அல்லது தனியார் கடனை எதிர்பார்த்து செயல்படும் காரியம் பூர்த்தியாகலாம். தாயார் உடல்நிலனில் ஆரோக்கியக்குறைவு தென்பட் டாலும் பாதிப்புகளுக்கு இடம் ஏற்படாது. 5-க்குடைய சூரியன் 2-ல் இருக்கிறார். அவரை 9-க்குடைய குரு பார்க் கிறார். எனவே இரண்டு திரிகோணாதிபதிகள் பார்த்துக் கொள்வது நன்மையே. குருவருள் துணைபுரியும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிக்கு 2-ல் ராகுவும் செவ்வாயும் இருக் கிறார்கள். அவர்களுடன் புதனும் ஆட்சி. 2-ஆமிடத்துக்கு சனி, கேது பார்வை. எனவே குடும்பத்தில் குழப்பம், தீர்வு காணமுடியாத பிரச்சினை- அவற்றால் மனநிம்மதி பாதித்தல் போன்றவற்றை சந்திக்கநேரும். ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி ஒருபுறம் காரியத்தடை, தாமதம், மந்தத்தன்மை ஆகியவற்றை உருவாக்கும். 4-ஆம் தேதிமுதல் ஜென்மத்திற்கு சுக்கிரன் மாறி ஆட்சிபெறுகிறார். இதனால் ஒரு ஆறுதல் என்னவென்றால், பிரச்சினைகளை சமாளிக்கும் யுக்திகள் தோன்றும். அதாவது மழை பெய்யும்போது நனையாமல் வெளியேசெல்ல குடை பிடித்துக்கொள்வதுபோல. பிரச்சினைகள் வருவதைத் தடுக்க முடியாது என்றாலும் சமாளிக்கலாம். 4-க்குடைய சூரியன், சுக்கிரனோடு ஜென்மத்தில் இருக்கிறார். தகப்ப னாருடன் மனவருத்தம், சங்கடங்களைச் சந்தித்தவர்களுக்கு ஒற்றுமையுணர்வும் அன்பும் அரவணைப்பும் மேலோங்கும். தந்தையைத் தவறாகப் புரிந்து கொண்டு விலகியிருக்கும் பிள்ளைகள் மீண்டும் ஒன்று சேரலாம். 7-ல் உள்ள குரு ஜென்ம ராசியைப் பார்ப்பதால், உங்களது பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். 2-ல் உள்ள ராகுவும், அவரைப் பார்க்கும் கேதுவும் வாக்கில் நச்சுத்தன்மையை வெளிப்படுத்தலாம். எனவே பேசும்போது வார்த்தைகளை கவனமுடன் கையாள்வது அவசியம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம்
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மேஷம்.
2-6-2019- ரிஷபம்.
4-6-2019- மிதுனம்.
6-6-2019-கடகம்.
8-6-2019- சிம்மம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: ரோகிணி- 3, 4, மிருகசீரிடம்- 1.
செவ்வாய்: திருவாதிரை- 3, 4, புனர்பூசம்- 1.
புதன்: மிருகசீரிடம்- 4, திருவாதிரை- 1, 2, 3.
குரு: கேட்டை- 4.
சுக்கிரன்: பரணி- 4, கார்த்திகை- 1, 2, 3.
சனி: பூராடம்- 2.
ராகு: புனர்பூசம்- 2.
கேது: பூராடம்- 4.
கிரக மாற்றம்:
குரு, சனி வக்ரம்.
4-6-2019- ரிஷபச் சுக்கிரன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் ஆரம்பத்தில் ராகு சாரத்தில் இருக்கிறார். பிறகு சுயசாரம் பெறுகிறார். செவ்வாய் ராகுவோடு சேர்ந்திருக்கிறார். காரியத்தடை, சகோதர- சகோதரி வகையில் மனவருத்தம், நேரடியாகவோ மறைமுகமாகவோ மனசங்கடங்களைச் சந்தித்தல் போன்ற சூழ்நிலைகள் உருவாகலாம். 9-க்குடைய குரு 8-ல் மறைவு, வக்ரம். என்றாலும் ஏற்கெனவே கூறியமாதிரி, 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர் மாதிபதி யோகம்; அது வழிநடத்தும். 4-ஆம் தேதிமுதல் 2-க்குடைய சுக்கிரன் ஆட்சிபெறுகிறார். பொருளாதாரத் தேக்கநிலை மாறும். சுக்கிரனை குருவும் பார்க்கிறார். தேவைகள் பூர்த்தியாகும். எவ்வளவு உழைத்தாலும் வருமானம் போதவில்லையே என்ற சூழலும் மாறும். 8-ல் குரு மறைந்தாலும், 12-ஆம் இடம், 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் பூமி, வீடு, மனை சம்பந்தமான சில சுபவிர யங்கள் ஏற்படலாம். சிலர் சொந்தமாக மனை வாங்கு வதற்கு வங்கிக்கடன் அல்லது தனியார் கடனை எதிர்பார்த்து செயல்படும் காரியம் பூர்த்தியாகலாம். தாயார் உடல்நிலனில் ஆரோக்கியக்குறைவு தென்பட் டாலும் பாதிப்புகளுக்கு இடம் ஏற்படாது. 5-க்குடைய சூரியன் 2-ல் இருக்கிறார். அவரை 9-க்குடைய குரு பார்க் கிறார். எனவே இரண்டு திரிகோணாதிபதிகள் பார்த்துக் கொள்வது நன்மையே. குருவருள் துணைபுரியும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிக்கு 2-ல் ராகுவும் செவ்வாயும் இருக் கிறார்கள். அவர்களுடன் புதனும் ஆட்சி. 2-ஆமிடத்துக்கு சனி, கேது பார்வை. எனவே குடும்பத்தில் குழப்பம், தீர்வு காணமுடியாத பிரச்சினை- அவற்றால் மனநிம்மதி பாதித்தல் போன்றவற்றை சந்திக்கநேரும். ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி ஒருபுறம் காரியத்தடை, தாமதம், மந்தத்தன்மை ஆகியவற்றை உருவாக்கும். 4-ஆம் தேதிமுதல் ஜென்மத்திற்கு சுக்கிரன் மாறி ஆட்சிபெறுகிறார். இதனால் ஒரு ஆறுதல் என்னவென்றால், பிரச்சினைகளை சமாளிக்கும் யுக்திகள் தோன்றும். அதாவது மழை பெய்யும்போது நனையாமல் வெளியேசெல்ல குடை பிடித்துக்கொள்வதுபோல. பிரச்சினைகள் வருவதைத் தடுக்க முடியாது என்றாலும் சமாளிக்கலாம். 4-க்குடைய சூரியன், சுக்கிரனோடு ஜென்மத்தில் இருக்கிறார். தகப்ப னாருடன் மனவருத்தம், சங்கடங்களைச் சந்தித்தவர்களுக்கு ஒற்றுமையுணர்வும் அன்பும் அரவணைப்பும் மேலோங்கும். தந்தையைத் தவறாகப் புரிந்து கொண்டு விலகியிருக்கும் பிள்ளைகள் மீண்டும் ஒன்று சேரலாம். 7-ல் உள்ள குரு ஜென்ம ராசியைப் பார்ப்பதால், உங்களது பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். 2-ல் உள்ள ராகுவும், அவரைப் பார்க்கும் கேதுவும் வாக்கில் நச்சுத்தன்மையை வெளிப்படுத்தலாம். எனவே பேசும்போது வார்த்தைகளை கவனமுடன் கையாள்வது அவசியம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். ஆரம்பத்தில் செவ்வாய் சாரத்திலும், பிறகு ராகு சாரத்திலும் சஞ்சாரம். செவ்வாயும் ராகுவும் புதனுடன் சேர்க்கை. "ஒன்று நினைக்கின் அது ஒழிந்து மற்றொன் றாகும்...' என்ற பாடலுக்கேற்ப, நினைத்த காரியங்களை நிறைவேற்றுவதில் சிக்கல், சிரமங்களை சந்திக்கலாம். 12-க்குடைய சுக்கிரன் 12-ல் ஆட்சிபெறுவது விரயங்களை ஏற்படுத்தலாம். அப்படி ஏற்படும் விரயங்களை சுபவிரயமாக மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனம். 7-க்குடைய குரு 6-ல் மறைவு, வக்ரம். வக்ரத்தில் உக்ரபலம். கடன்கள் உண்டாகும். கடனில் இரண்டுவகை உண்டு. சுபக்கடன், அசுபக் கடன். திருமணம், மனை வாங்குதல், வீடு கட்டுதல் ஆகியவற்றுக்காகப் பெறும் கடன் சுபக்கடன். சிலர் அனாவசியச் செலவு களுக்காகவும், வீண்விரயங்களுக்காகவும் கடன் வாங்குவதும் உண்டு. அது அசுபக்கடன். எனக்குத் தெரிந்த நபர் சூதாடுவதற்காகவே கடன் வாங்கி செலவழிப்பார். அது தவறு என்று பலமுறை கூறியும், அவற்றை விடமுடியாமல், கடைசியில் பெற்ற மகனே அவரை அடித்து வெளியில் தள்ளிவிட்டார். எனவே நேரம் காலம் நன்றாக இருக்கும்வரை கெடுதல்கூட நல்லதாக மாறும். ஆனால் கிரகச் சூழ்நிலைகள் சரியில்லையென்றால், நல்லதுகூட தீயதாக மாறித் தொல்லை தரும்! இறைநம்பிக்கையோடு ஒழுக்கமும் முக்கியம் என்பதை மறவாமல் செயல்படவேண்டும். திருவருள் கிடைக்கும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 10-க்குடைய செவ்வாய் 12-ல் மறைவு. அவருடன் ராகு சேர்க்கை. தொழில்துறையில் மந்தம், மீறி நடந்தால் வரவேண்டிய பணம் வராமல் இழுத்தடிப்பு, விரக்தி போன்றவற்றை சந்தித்தாலும், குரு 5-ல் இருந்து ராசியைப் பார்ப்பது ஒரு பலம். குரு 9-க்குடையவர்; அவர் 5-ல் திரிகோணம் பெறுகிறார். ஒரு திரிகோணாதிபதி, இன்னொரு திரிகோணம் ஏறுவது சிறப்பு. ஆகவே மந்த நிலையைப் பற்றிய கவலை கொள்ளத் தேவையில்லை. செயலில் பொறுமை யும் நிதானமும் அவசியம். குருவருளும் திருவருளும் உங்களுக்குத் துணைபுரிந்து, செயல்பாட்டில் வெற்றியைத் தரும். 11-ல் சூரியன். 4-ஆம் தேதிமுதல் சுக்கிரனும் 11-ல் ஆட்சி. தடைப்பட்ட, தாமதப்பட்ட காரியங் கள் இந்த வாரம்முதல் துரித வேகத்தில் செயல்படும். ஒரு மாணவன் தேர்வுக்கே செல்லாமல், "நான் இறைவனை வழிபடு கிறேன். அதனால் பாஸ் செய்துவிடுவேன்' என்று சொன்னால் அது முட்டாள்தனம். கடவுள் நம்பிக்கை ஒருபுறம் இருந்தாலும், தன் சுயமுயற்சியும் வேண்டும். வீட்டிலேயே இருந்துகொண்டு, "எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்கொள்வான்' என்றால், கீழே இருக்கிறவன் எதைப் பார்ப்பான்? வள்ளுவர், "தெய்வத் தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்கிறார். முயற்சிப்பவனுக்கே வெற்றியை இறைவன் தருவார். கோவில் குளம் என்று சுற்றினாலும், தொழிலிலும் வேலையிலும் கவனமிருந்தால்தான் அவனருளால் வெற்றி காணலாம். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிக்கு 10-க்குடைய சுக்கிரன் 10-ல் ஆட்சி. அவருடன் ராசிநாதன் சூரியன் சேர்க்கை. 10-ஆமிடத்துக்கு குரு பார்வை. எனவே அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகள் கைகூடும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். இரவு பகலாக உழைத்தும் பயனில்லையே என்று புலம்பியவர்களின் நிலை மாறும். 11-ல் உள்ள ராகுவும், அவற்றை நிறைவேற்றித் தரும் வழிகளைக் காட்டுவார். 5-ல் சனி, கேது- பிள்ளைகளைப் பற்றிய கவலையும், அவர்கள்வகையில் கிடைக்கவேண்டிய நற்பலன்கள் தள்ளிப்போவதும் மனதை கவலையில் ஆழ்த்தும். சிலருடைய பிள்ளைகள் படித்த படிப்பு ஒன்று, பார்க்கும் வேலை ஒன்று என அலைந்துதிரியும் நிகழ்வுகளும் இறைவன்மேல் நம்பிக்கை இழக்கச் செய்யும். கடவுள் இருக்கிறாரா, இல்லையா? நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்றெல்லாம் சிந்தனை செய்யவைக்கும். 7-க்குடைய சனி 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். திருமண வயதை ஒட்டிய ஆண்- பெண்களுக்குத் திருமணம் நிறைவேறும் வாய்ப்பு ஏற்படும். பொதுவாக சனி 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் திருமணத் தடை, தாமதம் என்று கூறுலாம். இங்கு 7-க்குடையவரே 7-ஆம் இடத்தைப் பார்ப்பது அதற்கு ஒரு விதிவிலக்கு. 2-க்குடைய புதன் 11-ல். பொருளாதாரப் பற்றாக்குறை விலகும். சிலருக்கு பூர்வீகச் சொத்து சம்பந்தமான நற்பலன்கள் கைகொடுக்கும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் (1, 10-க்குடையவர்). 10-ல் ஆட்சி. தொழில்துறையில் சில முன்னேற் றம் காணப்பட்டாலும், எதிலும் ஒரு நிறைவில்லாத தன்மை. 9-ல் சூரியன். அவருடன் 9-க்குடைய சுக்கிரன் ஆட்சி. தகப் பனார்வகையில் இழப்புகள், போராட்டங் களைச் சந்தித்திருந்தாலும், அவரால் கிடைக்க வேண்டிய பங்குபாகங்கள், பூர்வீகச்சொத் திலிருக்கும் வில்லங்கங்கள் ஒரு நல்ல முடிவுக்கு வரும். 3-ல் உள்ள குரு மறைவு- வக்ரம். உடன் பிறந்தவர்கள் வகையில் சச்சரவுகள், பனிப் போர் இருந்தாலும், ஒற்றுமையில் பிரிவு, பிளவு ஏற்படாது. தாமரை இலைமேல் தண்ணீர் போல ஒட்டியும் ஒட்டாமலும் செயல்படும். 4-ல் உள்ள சனி, கேது; அவரைப் பார்க்கும் ராகு- தாயார் உடல்நிலையில் ஆரோக்கியக்குறைபாடுகள், மருத்துவச் செலவுகள், தன் சுகம் பாதித்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும். செவ்வாயும் சம்பந்தப்படுவதால் அறுவை சிகிச்சைக்கும் இடமுண்டு. ஜனன ஜாதக தசாபுக்தியை அனுசரித்து பரிகாரங்களை மேற்கொள்ளவும். கணவன்- மனைவி கருத்து வேறுபாடு விலகும். பிரிந்திருக்கும் கணவன்- மனைவிக்குள் மீண்டும் சேருவதற்குண்டான வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் அமையும். ஈகோ உணர்வை விலக்கி, ஒற்றுமையுணர்வை வளர்த்துக்கொண்டு, விட்டுக்கொடுத்து அனுசரித்துச்செல்வது அவசியம்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிக்கு 11-க்குடைய சூரியன் 8-ல் மறைவு. 4-ஆம் தேதிமுதல் ராசிநாதன் சுக்கிரனும் 8-ல் மறைவு என்றாலும் ஆட்சி. தொழிலில் மந்தம், வேலையில் நிம்மதி யின்மை, குடும்பத்தில் சங்கடம் ஆகியவை தோன்றினாலும், குரு பார்வை 8-ஆமிடத்துக் குக் கிடைப்பதால், இவற்றிலிலிருந்து நிவாரணமும் பெறலாம். உங்கள் செயல்பாடு, திறமை ஆகிய வற்றில் பாதிப்பு ஏற்படா வண்ணம் நடந்து கொள்ளலாம். 2-ல் குரு- பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்தாலும் நிறை விருக்காது. கொடுக்கல்- வாங்கலிலில் நிதானத் தையும் எச்சரிக்கையையும் கடைப்பிடிப்பது அவசியம். 9-ல் செவ்வாய், ராகு. சிலருக்கு தகப்பனாரால் சங்கடம் நேரலாம். அல்லது தகப்பனாருக்கு வைத்தியச் செலவு, பிரச் சினை ஆகியவற்றை சந்திக்கநேரும். 3-ல் சனி, கேது- இளைய சகோதரத்தால் பிரச்சினை, குடும்பத்தில் குழப்பம் போன்றவை உருவா னாலும், குருவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் 3-ஆமிடத்தைப் பார்ப்பதால், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுமாதிரி பிரச் சினைகளிலிலிருந்து விடுபடலாம். (செவ்வாய் சகோதரகாரகன்- சகோதர ஸ்தானத்தைப் பார்ப்பதால் நிவர்த்தி). கணவன்- மனை விக்குள் அன்யோன்யமும் சந்தோஷமும் கைகூடும். தெய்வீக யாத்திரை அல்லது குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றலாம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனியில் கடை சிக்கூறு பாதச்சனி நடக்கிறது. இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலையாகத்தான் ஓடும். வேலையில் திருப்தியற்ற நிலை, வீண் அலைச்சல் போன்றவற்றை சந்திக்க வேண்டியவரும். ராசிக்கு 7-ல் சூரியன். 4-ஆம் தேதிமுதல் சுக்கிரனும் ஆட்சி; சூரியனோடு சேர்க்கை. களஸ்திரகாரகன், களஸ்திர ஸ்தானத்திலிலிருப்பது தோஷம்தான். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, சச்சரவு, பிரச்சினை, கூட்டாளிகளுக்குள் மனவருத்தம் நேரலாம். என்றாலும், ஜென்ம குரு 7-ஆமிடத்தைப் பார்ப்பதால், இவற்றில் பிரிவு, பிளவை சந்திக்கநேராது. நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பதுபோல, வெட்டியும் விடமுடியாது, ஒட்டவும் முடியாது. 2-ல் சனி, கேது. வாக்கில் நிதானத் தைக் கடைப்பிடிக்க வேண்டும். வாக்குச்சனி கோப்பைக் குலைக்கும். ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும். எனவே மிகுந்த எச்ச ரிக்கையாக இருப்பது அவசியம். ராசிநாதன் செவ்வாய் 8-ல் ராகுவோடு சேர்ந்திருக்கிறார். சனி அவரைப் பார்க்கிறார். திருமண வயதை யொட்டிய ஆண்- பெண் சிலர் காதல் வயப் படலாம். அல்லது கலப்புத் திருமணத்தை சந்திக்கலாம். தேக ஆரோக்கியத்தில் பிரச் சினையில்லை. தாய் சுகம் நன்றாக இருக்கும். ஜனன ஜாதகத்தில் சந்திரதசையோ சந்திரபுக் தியோ நடந்தால், திங்கட்கிழமைதோறும் சிவலிலிங்கத்திற்குப் பாலாபிஷேகம் செய்யவும். இழப்புகள் நேராமல் தடுக்கலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. ராசிநாதன் குரு 12-ல் மறைவு. குருவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் 7-ல் ராகு, புதனோடு சேர்க்கை. அதோடு ராசிக்கு செவ்வாய், ராகு பார்வை. சிலர் திருமணத்தில் பிரச்சினைகளை சந்திக்கலாம். தடை அல்லது தாமதங்கள் உண்டாகலாம். தேக சுகத்தில் ஆரோக்கியக்குறைவு, வைத்தியச் செலவு ஏற்படும். ராசிநாதன் குரு 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் அறுவை சிகிச்சைக்கு இடம் ஏற்படாது. 6-ல் சுக்கிரன் மறைவு, ஆட்சி. கடன்சுமை கூடும். பொருளாதாரத்தில் திருப்தியற்ற நிலை காணப்படும். கணவன்- மனைவிக்குள் வீண்வாக்குவாதம், ஈகோ உணர்வு அதிகரிக்கும். விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை என்ற கருத்தை மனதில் கொண்டு, ஒருவரையொருவர் அனுசரித்துச்செல்வது நல்லது. கோட்சாரம் சாதகமாக இல்லாத நிலையில், நாமும் சற்று வளைந்துகொடுத்துச் சென்றால், குடும்பத்தில் குழப்பமும் பிரச்சினைகளும் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். பிள்ளைகள்வகையில் நல்ல திருப்பங்களும் நற்பலன்களும் அமையும். அது ஒருவகையில் மனதிற்கு நிம்மதி தரும். உடன்பிறந்த சகோதர- சகோதரி வகையில் நிலவும் கருத்துமோதல்கள் மாறி, ஒற்றுமையும் ஆதரவும் உண்டாகும். திண்டுக்கல் அருகில் தாடிக்கொம்பில் சௌந்திர ராஜப்பெருமாள் கோவிலிலில் தன்வந்திரி சந்நிதி உள்ளது. சென்று வழிபடவும். அபிஷேக பூஜையும் செய்யலாம்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிக்கு ஏழரைச்சனி நடந்தாலும், மற்ற ராசியைப்போல் மகரம், கும்ப ராசிகளுக்கு சனி பெரிய அளவில் கெடுதல் செய்யமாட்டார். ஏனென்றால், இந்த இரண்டு ராசிக்கும் அதிபதி சனிதானே! பொதுவாக, சனி கெட்டகிரகம் என்று சொல்லப்பட்டாலும், அவர் கெட்டவர் கிடையாது. சனி நீதி, நேர்மை தவறாமல் செயல்படுபவர். அவரவர் வினைக்கேற்றபடி, நற்பலனும் கெடுபலனும் நடக்குமேதவிர, சனியைக் குறைகூற முடியாது. வினை விதைத்தவன் வினையறுப்பான். உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பதும், தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பதும் காலத்தின் கட்டளை. சனி 12-ல் மறைவு, வக்ரம். அவர் 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். 5-ல் உள்ள சூரியன் பிள்ளைகள்வகையில் மனக் கவலையை ஏற்படுத்தினாலும், சுக்கிரன் அங்கு ஆட்சிபெறுவதால், காயத்திற்கு மருந்து போட்டமாதிரி ஆறுதலான சில நிகழ்வுகளும் நடக்கும். 6-ல் உள்ள செவ்வாய், ராகு தொழில்துறையிலுள்ள போட்டி, பொறாமைகளை விலக்குவர். தனியார் துறையில் பணிபுரிவோர் அதிக சிரத்தையுடன் உழைக்கவேண்டியதிருக்கும். பணிச்சுமை கூடும். உங்கள் தெய்வ பக்தியும், குருபக்தியும் நல்வழியில் உங்களை நடத்தும் என்பதில் ஐயம் கொள்ளத் தேவையில்லை. நண்பர்களால் அனுகூலமும் ஆதரவும் உண்டாகும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். ராசிநாதனே ராசியைப் பார்ப்பது சிறப்பு. திறமை, செயல்பாடு எல்லாம் நன்றாக இருக்கும். என்றாலும் செவ்வாய்- ராகு, சனி- கேது பார்வை, சம்பந்தம் என்பதால், உடன்பிறந்த சகோதர- சகோதரி வகையில் இழப்பு, வருத் தங்களை சந்திக்கநேரலாம். செவ்வாய், சனி பார்வையால் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணங்களையும் எதிர்கொள்ள லாம். 4-க்குடைய சுக்கிரன் 4-ல் ஆட்சி. வாகன வகையில் மாற்றங்களும் அல்லது பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் அமைப்பும் உருவாகும். ஆடம்பரத் தேவைகள் நிறைவேறும். ஆடை, அணிகலன் சேர்க்கை ஏற்படும். 10-ல் உள்ள குரு 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். 2-க்குடையவரும் அவரே. குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டாலும், குரு பார்வையால் நிவர்த்தியும் நிம்மதியும் உண்டாகும். தொழில்துறையில் சில புதிய மாற்றங்களை ஏற்படுத்தலாம். சிலர் தொழில் தொடங்க கூட்டுமுயற்சிகளை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். நல்ல கூட்டாளிகளும் அமைவார்கள். தாய்வழி உறவினர்களிடையே மனசஞ்சலம் தோன்றும். எதிர்பாராத திடீர் விரயமும், செலவும் ஏற்படும். வரவுக்கேற்ற செலவும் அமையும். சிலசமயம் வரவைமீறிய செலவும் இருக்கும். 6-ஆமிடத்தைப் பார்க்கும் குரு போட்டி, பொறாமை, கடன் ஆகியவற்றை ஏற்படுத்தி விலக்குவார். கொடுக்கல்- வாங்கலிலில் கவனம் தேவை.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிக்கு 2-ல் இருக்கும் சுக்கிரன் 4-ஆம் தேதிமுதல் 3-ல் ஆட்சியாக மாறுகிறார். 3-ஆம் இடம் மறைவு ஸ்தானம் என்றாலும், ஆட்சி என்பதால் மறைவு தோஷம் பாதிக்காது. 10-க்குடைய குரு 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம் என்பது உங்களுக்கே தெரிந்த விஷயம்தான். அது ஒருவகையில் வழிநடத்தும். சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்படலாம். புதிய ஊர், புதிய இடம்; ஆனால் பார்த்த வேலைதான் என்ப தால், வேலையில் ஒரு முத்திரை பதிக்கலாம். அந்த ஊரிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கும் தன்மை வளரும். 2-க்குடைய செவ்வாய் 4-ல் ராகுவோடு சேர்ந்திருக்கிறார். அவருக்கு சனி, கேதுவின் பார்வை. குடும் பத்தில் அவ்வப்போது சலசலப்பு, பிரச் சினை உண்டாகும். சிலர் குடும்பம் ஓரிடம், தான் ஓரிடம், பெற்றோர் ஓரிடம் என்று அலைக்கழிப்பை நோக்கும் சூழல் ஏற்படும். உடன்பிறந்த வகையில் ஒற்றுமையின்மை, தொழில் போட்டி ஒருபுறம் பாடாய்ப் படுத்தினாலும், விடாமுயற்சியும் தன்னம் பிக்கை தைரியமும் முன்னின்று காத்து, செயல்பட வைக்கும். தேகசுகம் பாதிக் கப்படலாம். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். பிள்ளைகளைப் பற்றிய கவலை மாறும். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் விலகி, சுமுகத் தீர்வு உண்டாகும். தாயாருக்கு வைத்தியச்செலவுகள் வந்து விலகும். வீண்செலவுகளைச் சுருக்கி அத்தியாவ சியத் தேவைகளை நிறைவேற்றுவது நல்லது!