ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரகப் பாதசாரம்:
சூரியன்: ஆயில்யம்- 2, 3, 4.
செவ்வாய்: ரேவதி-4, அஸ்வினி-1.
புதன்: ஆயில்யம்-2, 3, 4. மகம்-1, 2.
குரு: பூராடம்-4.
சுக்கிரன்: திருவாதிரை-1, 2, 3.
சனி: பூராடம்-4.
ராகு: மிருகசீரிடம்-3.
கேது: மூலம்-1.
கிரக மாற்றம்:
12-8-2020- மேஷச் செவ்வாய்.
13-8-2020-சிம்மப் புதன்.
குரு, சனி வக்ரம்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மீனம்.
9-8-2020- மேஷம்.
12-8-2020- ரிஷபம்.
14-8-2020- மிதுனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் வாரத் தொடக்கத்தில் 12-ல் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். 12-ஆம் தேதி ஜென்ம ராசிக்கு மாறுவார். அப்பொழுது குரு பார்வையைப் பெறுவார். எனவே, வாரத் தொடக்கத்தில் தேவையில்லாத பயணங்களும் செலவுகளும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவு மிகமிக மந்த நிலையில் செயல்படும். வரவேண்டிய பணம் வசூலாவதில் தடையும் தாமதமும் காணப்படும். ஆனால், நீங்கள் கொடுக்கவேண்டியதற்குக் கெடுபிடியும் விரட்டுதலும் வேகமாக இருக்கும். 12-ஆம் தேதி செவ்வாய் மாற்றத்திற்குப் பிறகு, வரவு- செலவுகள் சீராகும். வரவேண்டிய பணம் எதிர் பார்த்தபடி வந்துசேரும். அதேபோல, கொடுக்க வேண்டியதும் குறிப் பிட்டபடி ஓடியடையும். குரு ராசியைப் பார்ப்பதால் பொருளாதாரத்தில் சிக்கலோ கௌரவப் பிரச் சினையோ ஏற்படாது. வாரத் தவணை அல்லது மாதத் தவணை சற்று முன்பின் ஆனாலும், நாணயத் தோடு கொடுத்து நல்லபேர் எடுக்கலாம். 9-ல் சனியும் குருவும் இணைவது தர்மகர் மாதிபதி யோகமாகும். எனவே, உங்கள் விருப்பங்களும் நிறைவேறும்; தேவைகளும் பூர்த்தியடையும். பொதுவாக, எந்தவொரு ஜாதகத்திலும் தர்மகர்மாதிபதி யோகமிருந்தால், அந்த ஜாதகர் தங்குதடையில்லாமல் நெடுஞ்சாலையில் பயணிப்பதுபோல செயல்படும். தர்ம ஸ்தானம் என்பது 9-ஆமிட பாக்கிய ஸ்தானம். கர்ம ஸ்தானம் என்பது 10-ஆமிடம். கர்ம ஸ்தானம் என்பது முயற்சி அல்லது செயலைக் குறிக்கும். பாக்கிய ஸ்தானம் என்பது தெய்வ அனுகூல ஸ்தானம். ஆகவே, குருவருளும் திருவருளும் பரிபூரண மாக விளங்குவதால் தோல்விக்கு இடமில்லை. வெற்றியே முழுமையாக அமையும். அவரவர் பிறந்த ஜாதகத்திலும் இப்படி தர்மகர் மாதிபதியோகம் அமைந்துவிட்டால், எந்தவொரு முயற்சியிலும் தோல்விக்கு இடமில்லை. வெற்றிவேல் வெற்றி வந்துசேரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் தன் ஸ்தானத்துக்கு 2-ல்- ராகு ஸ்தானத்தில் (திருவாதிரை) இருப்பதோடு ராகு சம்பந்தம். அதனால், அட்டமச்சனியின் பாதிப்பு குறையும். அதாவது, டபுள் மைனஸ்= ஒரு பிளஸ் என்னும் அடிப்படையில் தோஷம் விலகும். சனியுடன் கேதுவும், அவர்களுக்கு வீடு கொடுத்த குரு ஆட்சியாகவும் இருப்பதால், சிலசமயம் ஏமாற்றம், தடை, தாமதம் காணப்பட்டாலும் அதுவும் ஒரு நன்மைக் காகவே அமையும். அந்த நேரம் தடை, ஏமாற்ற மாகத் தோன்றினாலும், பின்னால் அதுவும் ஒருவகையில் நன்மையாகவே அமைந்தது என்ற திருப்தி உண்டாகும். டிவி விளம்பரத்தில் ஒரு மூதாட்டி தொலைவிலுள்ள கைத்தடியை எடுத்துத் தரச்சொல்லி ஐஸ்கிரீம் சாப்பிடும் இளைஞனிடம் கேட்பாள். அவனும் தலையாட்டிவிட்டு தன்பாட்டுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடுவான். உடனே, மூதாட்டி அவனை எதிர்பார்க்காமல் தானே எழுந்துபோய் அந்தக் கைத்தடியை எடுத்துக்கொள்வார். அதேசமயம், அவள் உட்கார்ந்திருந்த இடத்தின்மீது சுவர் இடிந்து விழுந்துவிடும். அவள் எழுந்திருக்காமல் இருந்திருந்தால் அவள் தலைமேல் இடிந்த சுவர் விழுந்திருக்கும். இப்படிப் பல சம்பவங்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக அமையும். ஓர் உதாரணம்- ஒரு பெண் கைக்குழந்த
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரகப் பாதசாரம்:
சூரியன்: ஆயில்யம்- 2, 3, 4.
செவ்வாய்: ரேவதி-4, அஸ்வினி-1.
புதன்: ஆயில்யம்-2, 3, 4. மகம்-1, 2.
குரு: பூராடம்-4.
சுக்கிரன்: திருவாதிரை-1, 2, 3.
சனி: பூராடம்-4.
ராகு: மிருகசீரிடம்-3.
கேது: மூலம்-1.
கிரக மாற்றம்:
12-8-2020- மேஷச் செவ்வாய்.
13-8-2020-சிம்மப் புதன்.
குரு, சனி வக்ரம்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மீனம்.
9-8-2020- மேஷம்.
12-8-2020- ரிஷபம்.
14-8-2020- மிதுனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் வாரத் தொடக்கத்தில் 12-ல் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். 12-ஆம் தேதி ஜென்ம ராசிக்கு மாறுவார். அப்பொழுது குரு பார்வையைப் பெறுவார். எனவே, வாரத் தொடக்கத்தில் தேவையில்லாத பயணங்களும் செலவுகளும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவு மிகமிக மந்த நிலையில் செயல்படும். வரவேண்டிய பணம் வசூலாவதில் தடையும் தாமதமும் காணப்படும். ஆனால், நீங்கள் கொடுக்கவேண்டியதற்குக் கெடுபிடியும் விரட்டுதலும் வேகமாக இருக்கும். 12-ஆம் தேதி செவ்வாய் மாற்றத்திற்குப் பிறகு, வரவு- செலவுகள் சீராகும். வரவேண்டிய பணம் எதிர் பார்த்தபடி வந்துசேரும். அதேபோல, கொடுக்க வேண்டியதும் குறிப் பிட்டபடி ஓடியடையும். குரு ராசியைப் பார்ப்பதால் பொருளாதாரத்தில் சிக்கலோ கௌரவப் பிரச் சினையோ ஏற்படாது. வாரத் தவணை அல்லது மாதத் தவணை சற்று முன்பின் ஆனாலும், நாணயத் தோடு கொடுத்து நல்லபேர் எடுக்கலாம். 9-ல் சனியும் குருவும் இணைவது தர்மகர் மாதிபதி யோகமாகும். எனவே, உங்கள் விருப்பங்களும் நிறைவேறும்; தேவைகளும் பூர்த்தியடையும். பொதுவாக, எந்தவொரு ஜாதகத்திலும் தர்மகர்மாதிபதி யோகமிருந்தால், அந்த ஜாதகர் தங்குதடையில்லாமல் நெடுஞ்சாலையில் பயணிப்பதுபோல செயல்படும். தர்ம ஸ்தானம் என்பது 9-ஆமிட பாக்கிய ஸ்தானம். கர்ம ஸ்தானம் என்பது 10-ஆமிடம். கர்ம ஸ்தானம் என்பது முயற்சி அல்லது செயலைக் குறிக்கும். பாக்கிய ஸ்தானம் என்பது தெய்வ அனுகூல ஸ்தானம். ஆகவே, குருவருளும் திருவருளும் பரிபூரண மாக விளங்குவதால் தோல்விக்கு இடமில்லை. வெற்றியே முழுமையாக அமையும். அவரவர் பிறந்த ஜாதகத்திலும் இப்படி தர்மகர் மாதிபதியோகம் அமைந்துவிட்டால், எந்தவொரு முயற்சியிலும் தோல்விக்கு இடமில்லை. வெற்றிவேல் வெற்றி வந்துசேரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் தன் ஸ்தானத்துக்கு 2-ல்- ராகு ஸ்தானத்தில் (திருவாதிரை) இருப்பதோடு ராகு சம்பந்தம். அதனால், அட்டமச்சனியின் பாதிப்பு குறையும். அதாவது, டபுள் மைனஸ்= ஒரு பிளஸ் என்னும் அடிப்படையில் தோஷம் விலகும். சனியுடன் கேதுவும், அவர்களுக்கு வீடு கொடுத்த குரு ஆட்சியாகவும் இருப்பதால், சிலசமயம் ஏமாற்றம், தடை, தாமதம் காணப்பட்டாலும் அதுவும் ஒரு நன்மைக் காகவே அமையும். அந்த நேரம் தடை, ஏமாற்ற மாகத் தோன்றினாலும், பின்னால் அதுவும் ஒருவகையில் நன்மையாகவே அமைந்தது என்ற திருப்தி உண்டாகும். டிவி விளம்பரத்தில் ஒரு மூதாட்டி தொலைவிலுள்ள கைத்தடியை எடுத்துத் தரச்சொல்லி ஐஸ்கிரீம் சாப்பிடும் இளைஞனிடம் கேட்பாள். அவனும் தலையாட்டிவிட்டு தன்பாட்டுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடுவான். உடனே, மூதாட்டி அவனை எதிர்பார்க்காமல் தானே எழுந்துபோய் அந்தக் கைத்தடியை எடுத்துக்கொள்வார். அதேசமயம், அவள் உட்கார்ந்திருந்த இடத்தின்மீது சுவர் இடிந்து விழுந்துவிடும். அவள் எழுந்திருக்காமல் இருந்திருந்தால் அவள் தலைமேல் இடிந்த சுவர் விழுந்திருக்கும். இப்படிப் பல சம்பவங்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக அமையும். ஓர் உதாரணம்- ஒரு பெண் கைக்குழந்தையுடன் டிரைவர் சீட் அருகில் அமர்ந்து பயணம்செய்தாள். ஹாரன் சத்தம் கேட்டு குழந்தை திடுக்கிட்டு கண்விழித்ததால், கடைசி சீட்டிற்குப் (பின்னால்) போய் அமர்ந்தாள். சிறிது நேரத்தில் எதிரில் ஓவர் டேக்செய்த ஒரு லாரி பஸ் முன்பகுதியில் மோதியது. உயிர்ச்சேதம் இல்லையெனினும் முன்வரிசையில் இருந் தோருக்கு காயம் ஏற்பட்டது. இப்படி சிலசமயம் எதிர்பாராத செயல்கள் நமக்குப் பாதுகாப்பாக அமையும். அட்டமச்சனியில் இப்படிப்பட்ட சில அனுபவங்களை நீங்கள் சந்திக்கலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், கிருஷ்ண பகவான் சொன்னதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். ""எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்'.'
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசியில் ராகுவும் அதற்கு ஏழில் சனியும் கேதுவும் இருப்பது ஒருவகையில் தீங்குதான். என்றாலும், குரு 7-ல் ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பது தோஷ நிவர்த்தி. குரு பார்க்கக் கோடி தோஷம் போகும் எனவும் சொல்லலாம். கோடி நன்மை கூடும் எனவும் சொல்லலாம். அதனால்தான், ""நல்லாரைக் காண்பதும் நன்று- நல்லார் சொல் கேட்பதும் நன்று- நல்லாரோடு இணங்கியிருப்பதும் நன்று'' என்று பெரியோர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமல்ல, ""நல்லார் ஒருவர் உளறேல் அவர்பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை'' என்றும் சொன்னார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஓர் உண்மைச் சம்பவம். பாம்பன் பாலத்தில் பயணிகள் பேருந்து ஒன்று, சுவரில் மோதி நின்றது. டிரைவர் சாமர்த்தியத்தால் ஹேண்ட் பிரேக், கால்பிரேக் எல்லாவற்றையும் பயன்படுத்திப் பயணிகள் அனைவரையும் பின்வாசல்வழியாக இறக்கிவிட்டு, ஆட்களைவைத்துப் பேருந்தைப் பின்னால் நகர்த்தினார்கள். அந்தப் பேருந்தில் யாரோ ஒரு நல்லவர் இருந்திருப்பார் போலும்- அவர் புண்ணியத்தால் எல்லாருக்கும் உயிர்ப்பிச்சை கிடைத்ததென்று எல்லாரும் பேசிக்கொண்டார்கள். ஜென்ம ராசியில் ராகுவும் சுக்கிரனும் இருக்க, அவர்களை மீனச் செவ்வாயும் தனுசு சனியும் கேதுவும் பார்ப்பது ஒருவகையில் தோஷம். வாலிப வயதினருக்குத் திருமணத்தடை ஏற்படலாம். திருமணமான தம்பதிக்குள் விவகாரம், பூசல் உருவாகலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் இடைக்கால- தற்காலப் பிரிவுகூட ஏற்படலாம். குரு பார்வை இருப்பதாலும், 7-ல் குரு ஆட்சி என்பதாலும் நிரந்தரப் பிரிவோ விவாகரத்து போன்ற சம்பவங்களுக்கோ இடமில்லை. பேரறிஞர் பெர்னாட்ஷô,""கணவன்- மனைவிக்குள் அன்பும் பாசமும் நெருக்கமும் உண்டாக அடிக்கடி இருவரும் விடுமுறை எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார். அந்தக் காலத்து சம்பிரதாயப்படி, வீட்டுவிலக்கான மனைவி வீட்டுக்குள் புழங்காமல், வீட்டின் ஓரத்தில் அமர்ந்திருப்பார். அவர்முன் ஒரு உலக்கையைப் போட்டுவைப்பார்கள். சில பிராமணர்கள் குடும்பத்தில் இன்றும் அந்த நடைமுறை உள்ளது. 30 நாளும் வேலைக்குப்போகும் பெண்களெல்லாம் அதைப் பின்பற்ற இயலாது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் சூரியன், புதன் சேர்க்கையாக இருக்கிறார்கள். சூரியன் 2-க்குரியவர். புதன் 3, 12-க்குரியவர். சகோதரப் பாசமும் சகோதர சகாயமும் சிறப்பாக அமையும். ஒருசிலருக்கு சகோதர வகையில் வரவும் உண்டு; செலவும் உண்டு. 10-க்குரிய செவ்வாய் 9-ல் நிற்பதும், 9-க்குரிய குரு 10-ஆமிடத் தைப் பார்ப்பதும் தர்மகர்மாதிபதி யோகமாகும். உங்களின் உண்மை, உழைப்பு, நேர்மை ஆகியவற்றுக்கு உயர்வு கிடைக்கும். திறமைக்குப் பெருமை ஏற்படும். சொல்வாக்கு செல்வாக்கை உண்டாக்கும். 6-ல் குரு ஆட்சிபெற்று அட்டமாதிபதி சனியோடு சம்பந்தப்பட்டு, கேது- ராகு சம்பந்தமும் பெறுவதால் ஒருசிலருக்கு கடன் கவலை காணப்படும். அல்லது வேலை பார்த்துக் கூலி காலாகாலத்தில் கிடைக்காமல் ஏமாற்றமாகலாம், தாமதமா கலாம். ஏமாற்றம் எனச் சொல்வதைவிட தாமதம் எனக் குறிப்பிடுவதுதான் சரியானது. தாமதமானாலும் கட்டாயம் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்கிறவர்கள் தொழில் சம்பந்தமாக சக்திக்குமீறி கடன் வாங்கநேரும். கடன் ஏற்பட்டாலும் கௌரவம் பாதிக்காது. நாணயம் பிசகாது. ஒருசிலர் தொழில் சம்பந்தமாக கூட்டுசேர்ந்து புது முயற்சிகளை செயல்படுத்தலாம். "கூட்டாளியின் முதலீடு ; உங்கள் பங்கு தொழில் வேலை' என்னும் அடிப் படையில் ஒப்பந்தம் பேசலாம். 4-க்குரிய சுக்கிரன் 12-ல் மறைந்து 6-க்குரிய குரு பார்வை யைப் பெறுகிறார். அதனால்தான், கடன் எனக் குறிப்பிட்டுள்ளேன். ஒருசிலருக்கு போட்டி, பொறாமையை சந்திக்கநேரும். குரு 6-க்குரியவர் என்றாலும், அவரே பாக்கியாதிபதி என்பதால், எதிரி பணபலம், படை பலம் உடையவராக இருந்தாலும், உங்களுக்குத் தெய்வபலம் இருப்பதால் தோல்விக்கு இடமில்லை; வெற்றி எளிதாகும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 12-ல் மறைந் தாலும் 2, 11-க்குரிய புதனுடன் சம்பந்தம். சூரியன் நிற்பதும் புதன் சாரம் (ஆயில்யம்). எனவே, 2-ஆமிடம் வாக்கு, தனம், குடும்பம், 11-ஆமிடம் மூத்த சகோதரம், லாபம், வெற்றி ஆகியவற்றைக் குறிக்கும் ஸ்தானங்கள். ஆகவே, உங்கள் முயற்சிகளில் தளர்ச்சி இருக்காது. விடாமுயற்சி வெற்றிதரும். சொல்வாக்கும் செல்வாக்கும் பெருகும். அதேசமயம் 6-ல் உள்ள குரு ஆட்சிபெற்றும் வக்ரமடைந்தும் ராசியைப் பார்ப்பதால், உங்கள் வளர்ச்சியில் கிளர்ச்சியடைந்தவர்கள் உங்களைத் தளர்ச்சியடையச் செய்து தடைப் படுத்த முயலலாம். ஆனால், நீங்களோ மலையே விழுந்தாலும் மனம் குலையாத நிலைமை பெற்று எதிர்சவால் போட்டுப் போராடுவீர்கள். கவியரசர் கண்ணதாசன் எழுதியமாதிரி, ""ஏற்றதென எனதுள்ளம் எடுத்துரைத்தால் அக்கருத்தை சாற்றிடுவேன் தைரியமாகச் சாதித்திடுவேன் பவ்யமாக. எவர் வரினும் எதிர்த்து நின்றாலும் நில்லேன் அஞ்சேன்''என்பதுபோல, எதிரிகளை உதிரிகளாக்கி, ஊக்கம்கொண்டு செயலில் ஆக்கம் காட்டுவீர்கள். எதிரியிடம் பணபலம், படைபலம் இருந்தாலும் பாரதியார் பாடியமாதிரி, உறுதிகொண்ட நெஞ்சினராய் உண்மையை எதிர்த்துப் போராடி வெற்றி வாகை சூடலாம். சிம்ம ராசிநாதன் சூரியன் உலகுக்கு ஒரேயொரு சூரியன்தான். ஆகவே, வெற்றி உங்கள் பக்கமே முழுமையாகும். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவனை மறைக்க இயலுமா? அதுபோல, உங்கள் முன்னேற்றத்தையும் பேச்சையும் தடுக்கமுடியாது; மறைக்கமுடியாது. அஷ்டலட்சுமிகளுள் ஒருத்தியான தைரியலட்சுமி உங்கள் பக்கம் இருக்கும்பொழுது பயம் எதற்கு?
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 11-ல் பலம்பெறுகிறார். வாரத் தொடக்கத்தில் சுயசாரம் பெறு கிறார். (ஆயில்யம்). அவருடன் விரயாதிபதி சூரியன் சம்பந்தம். எனவே, "ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கவேண்டும்,' "பாடுகிற மாட்டை பாடிக் கறக்கவேண்டும்' என்பதுபோல, வாய்ச் சாமர்த்தியத்தால் சில காரியங்களை சாதிக்கலாம். அதிகாரம்பேசி சில காரியங்களை சாதிக்கலாம். நயந்து பேசி சில காரியங்களை சாதிக்கலாம். கெஞ்சிப் பேசி சில காரியங்களை சாதிக்கலாம். "சாமதான பேத தண்டம்' என்று சொல்வதுபோல சந்தர்ப்பத்திற்கேற்றமாதிரி சாகசம் புரிந்து காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். அதை சிலர் "ராஜதந்திரம்' என்பார்கள். சிலர் சகுனியின் தந்திரம் என்பார்கள். யார் எப்படிச் சொன்னாலும் அதற்கு முக்கியத்துவம் தராமல், "கழுதையா னாலும் காலைப் பிடித்துக் காரியத்தை முடி' என்பதுபோல, வெற்றிக்காகக் காரியத்தை அனுகூலமாக்கிவிடுவீர்கள். 9-க்குரிய சுக்கிரன் 10- இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அவர் ராகுவோடு சேர்ந்திருக்கிறார். அவர்களை குரு, சனி, கேது மூவரும் பார்க்கிறார்கள். சனி 5-க்குரியவர். சுக்கிரன் 9-க்குரியவர். இருவரும் திரிகோணாதிபதிகள். திரிகோணாதிபதிகளின் சேர்க்கையும் பார்வையும் தெய்வ பலத்தைக் குறிக்கும். கேந்திராதிபதிகளின் சேர்க்கையும் பார்வையும் மனித முயற்சியைக் குறிக்கும். கேந்திர ஸ்தானத்தை "விஷ்ணு ஸ்தானம்' எனவும், திரிகோண ஸ்தானத்தை "லட்சுமி ஸ்தானம்' எனவும் சொல்வார்கள்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 9-ல் திரிகோணம். அவரோடு ராகு சம்பந்தம். அவர்களுக்கு குரு, சனி, கேது பார்வை. 9-ஆமிடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். மீனத்திலுள்ள செவ்வாயும் 9-ஆமிடத்தையும் சுக்கிரனையும் ராகுவையும் பார்க்கிறார். 5-ஆமிடமும் பூர்வபுண்ணிய ஸ்தானம். அதற்குரிய சனி தனுசு ராசியில் நின்று 5-ஆமிடத்தையும் பார்க்கிறார்; 9-ஆமிடத் தையும் பார்க்கிறார். 9- என்பது தகப்பனார் ஸ்தானம், முன்ஜென்மம். 5- என்பது புத்திர ஸ்தானம், வரும் ஜென்மம். 9-க்கு 9-ஆமிடம் என்பது 5-ஆமிடமாகும். இந்த 5, 9-ன் சம்பந்தம் உங்கள் ராசிக்குக் கிடைப்பதால், போன ஜென்ம புண்ணிய பலத்தால் இந்த ஜென்மப் பலனாக உங்கள் வாரிசுகள் சுகபோகங்களை அடைவார்கள். ஒரு உயிர் தாயின் கர்ப்பத்தில் உருவாகும்பொழுது, எட்டாவது மாதத்தில் அந்த உயிரின் (கர்ப்பத்தில்) தலையில் பிரம்மா தலையெழுத்தை எழுதிவிடுவாராம். ஒருவரின் ஆயுள், கல்வி, செல்வம் ஆகிய மூன்றும் அப்பொழுது நிர்ணயிக்கப்படுகிறது. ராசி நாதன் சுக்கிரனுக்கு 5, 9-ஆமிடங்களின் சம்பந்தம் கிடைப்பதால் பூர்வபுண்ணிய பலம் அமைகிறது. 5, 9-திரிகோணம், 4, 7, 10- கேந்திரம். திரிகோணம் என்பது தெய்வ அனுகூல ஸ்தானம். கேந்திரம் என்பது முயற்சி அல்லது செயல் ஸ்தானம். முயற்சிக்கேற்ற பலன் கிடைப்பது திரிகோண ஸ்தான பலன்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் தன் ஸ்தானத்திற்கு 5-ல் திரிகோணம் பெறுகிறார். வாரக் கடைசியில் 6-ல் (மேஷத்தில்) மாறி னாலும், மேஷம் அவரது ராசி என்பதால் செவ்வாய் ஆட்சிபெறுகிறார். ஆகவே, மறைவு தோஷம் விலகிவிடும். மேஷச் செவ்வாய் விருச்சிக ராசியை 8-ஆம் பார்வை பார்ப்பது பலம். தடைகளைக் கடந்து, தளர்வுகளை உடைத்து வெற்றிப் பயணத்தை செயல்படுத்த லாம். 2-ல் குரு, சனி, கேது இருந்தாலும் குரு ஆட்சிபெறுவதால் பணக்கஷ்டம் இருக்காது. தாராளமான வரவு-செலவுகள் நடைபெறும். கடன்கள் இருந்தாலும் அவற்றால் பாதிப் பிருக்காது. எளிதானவகையில் கடன்கள் அடைபடும். சிலர் புதிய கடனை உருவாக்கிப் பழைய கடனை அடைத்துவிடலாம். 6-ஆமிடத்துச் செவ்வாய் போட்டி, பொறாமை, சத்ரு ஜெயம் எனப்படும். 10-க்குரிய சூரியன் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அவருடன் 8-க்குரிய புதன் சேர்வது "பானு புதன் யோகம்'. அறிவு, புத்திக்கூர்மை, தெளிவு எல்லாவற்றையும் சூரியன், புதன் சேர்க்கை தரும். உங்கள் திறமைக்கேற்ற பெருமையும் பாராட்டும் கிடைக்கும். பொதுவாக, சூரியனும் புதனும் ஒன்றுசேரும் ஜாதகர்கள் அனைவருமே ஏதோ வொரு வகையில் திறமைசாலிகளாகவும் பெருமையுடையவர்களாகவும் திகழ்வார்கள்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு அங்கு ஆட்சி பெறுகிறார். அவருக்கு சாரம்கொடுத்த சுக்கிரன் (பூராடம்) 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். நல்ல கணவர், நல்ல மனைவி என்பதோடு, 5-ஆமிடத்தை குரு பார்ப்பதால் நல்ல பிள்ளைகள் என்னும் பெருமைக்கும் உடைய வராவீர்கள். ஜென்மச்சனி நடப்பதால் சிலநேரம் உடல் சோர்வு, உள்ளச் சோர்வு (மனச்சோர்வு) காணப்படலாம். பெரும்பாலும் சுற்றத்தாருடன் ஏற்படும் சம்பவங்களே அந்த சோர்வுக்குக் காரணமாக அமையலாம். "குற்றம் பார்க்கின் சுற்ற மில்லை' என்னும் தத்துவத்தைக் கடைப் பிடித்தால் வருத்தத்திற்கு இடமிருக்காது. ஜென்மச்சனியும் அதற்கொரு காரணமாக அமைகிறது. அவருடன் கேது- ராகு சம்பந்தமும் காரணமாகிறது. ஆகவே, சனி, கேது- ராகு கிரகங்களுக்குத் தேவையான பரிகாரப் பூஜைகள் செய்துவிட்டால் தோஷம் விலகும். செம்புப் பாத்திரத்தைப் புளிகொண்டு துலக் கினால் பளிச்சென்று தென்படும். அதுபோல, உங்கள் உள்ளத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். இறைவழிபாட்டினால் உங்கள் மனம் பக்குவமடையும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு. என்றாலும், அவருக்கு வீடுகொடுத்த குரு அங்கு ஆட்சிபெறுவதாலும், சனிக்கு சாரம் கொடுத்த சுக்கிரன் (பூராடம்) சனியைப் பார்ப்பதாலும் ஏழரைச்சனியின் தோஷமும் விரயச்சனியின் வேகமும் தணியும். விரயச் சனியால் செலவுகள் காணப்பட்டாலும் அவை சுபச்செலவுகளாகவே அமையும். வங்கி முதலீடு, புதிய பூமி, இடம், வீடு சம்பந்தப்பட்ட சுப முதலீடு, தொழில் முதலீடு போன்றவற்றுள் பணத்தை முடக்குவது நல்லது. அது தொடக்கத் தில் விரயமாகத் தெரிந்தாலும் வட்டியும் முதலுமாகத் திரும்பக் கிடைத்துவிடும். இன்ஸ்சூரன்ஸ் வகையிலும் டெபாசிட் செய்யலாம். இவையெல்லாம் விரயச்சனியாகத் தெரிந்தாலும், பின்னால் ஆதாயம் தரும் லாப விரயமாக மாறும். ஒருசிலருக்கு ஜாதக அமைப்பின்படி, வெளியூர் மாறலாம். வேலை, உத்தியோகம், தொழில்வகையிலும் மாற்றம் வரலாம். உள்ளூரில் குடியிருப்பு மாறலாம். அது எந்த மாற்றமாக அமைந்தாலும் முன்னேற்றம் தரும் இனிய மாற்றமாக வருமென எதிர்பார்க்க லாம். ஒருசிலர் உத்தியோகரீதியாக வெளிநாடு போகலாம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் அமர்ந்து தன் ராசியைத் தானே பார்க்கிறார். அவருடன் ஆட்சிபெற்ற குருவும் கேதுவும் சம்பந்தம். சுக்கிரன், ராகு பார்வை திருமணமாகா தவர்களுக்குத் திருமண யோகமும், புத்திர பாக்கியமில்லாத தம்பதியருக்கு புத்திர பாக்கியமும் தரும். சகோதரவகையில் சகாயமும் சந்தோஷமும் நிலவும். கடந்த காலத்தில் பகையாக இருந்தவர்கள் நேசக்கரம்நீட்டி பாசப்பிணைப்போடு இணைவார்கள். சொத்துப் பிரச்சினைகளில் நீங்கள் எதிர்பார்த்த படி பங்குபாகங்கள் சாதகமாக முடியும். ஒருசிலருக்கு இடம், பொருளாக அமையும். ஒருசிலருக்கு அதற்குரிய மதிப்பீட்டில் ரொக்கத் தொகையாகக் கிடைக்கும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் பங்குபாகப் பிரச்சினைகள் விஸ்வரூமெடுத்து விவகாரமாக முடியும். விட்டுக்கொடுத்து நடந்தால் விவகாரத் திற்கு இடமில்லை. விரயத்திற்கும் இடமில்லை. வீண் வறட்டுப் பிடிவாதத்தால் மிகக்குறைவான மதிப்புடைய சொத்துக்காக அதற்குமேல் பலமடங்கு மதிப்பான அல்லது போலீஸ், கோர்ட் என அலைந்து செலவுசெய்து வீணாய்ப் போன குடும்பங்கள் ஏராளம் உண்டு.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 10-ல் இருக்கிறார். 9-க்குரிய செவ்வாய் ஜென்ம ராசியில் இருக் கிறார். 11-க்குரிய சனியும் 10-ல் குருவோடு சம்பந்தம். ஆகவே, உங்கள் வாழ்க்கைப் பயணம் எளிதாகவும் இனிமையாகவும் அமையும். அதேசமயம் "காய்த்த மரத்தில்தான் கல் எறிவார்கள்' என்பதுபோல, உங்கள் சந்தோஷத்தைக் கெடுக்க சிலர் சகுனியாகவும் கூனியாகவும் சதிசெய்யலாம். இது சனி, கேது- ராகு சம்பந்தத்தால் வரும் தோஷம். அவற்றுக்கு இடந்தராமல் முறைப்படி, தர்மநெறிப்படி சாதுர்யமாக நடந்துகொண்டால் குடும்பத்தில் இன்னொரு மகாபாரத யுத்தம் (குருக்ஷேத்திரப் போர்) வராமல் தடுக்கலாம். பொதுவாக, மீன ராசிக்காரர்கள் சாமர்த்தியசாலிகள், சாதுர்யம் மிக்கவர்கள், திறமையானவர்களுங்கூட. ஆனால், குடத்துக்குள் ஏற்றிய விளக்குப்போல அதன் திறமையும் பெருமையும் தெரியாமல் செயலற்றிருப்பார்கள். அனுமனின் திறமையை ஜாம்பவான் என்ற கரடி எடுத்துக்கூறியதுபோல, மற்றவர்கள் உங்களுக்குத் தூண்டுகோலாக அமைந்துவிட்டால், அதுவே சான்றுகோலாக மாறி சாதிக்கலாம்.