ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்:
பரணி- 4, கார்த்திகை- 1, 2.
செவ்வாய்: திருவாதிரை- 3, 4.
புதன்: ரோகிணி- 2, 3.
குரு: அவிட்டம்- 4.
சுக்கிரன்: கார்த்திகை- 3, 4,
ரோகிணி- 1.
சனி: திருவோணம்- 1.
ராகு: ரோகிணி- 3, 2.
கேது: கேட்டை- 1, அனுஷம்- 4.
கிரக மாற்றம்:
12-5-2021- சனி வக்ர ஆரம்பம்.
15-5-2021- ரிஷப சூரியன்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மீனம்.
9-5-2021- மேஷம்.
12-5-2021- ரிஷபம்.
14-5-2021- மிதுனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 3-ல் மறைந்தாலும் பாக்கியாதிபதி குருவின் பார்வையைப் பெறுகிறார். மறைவு தோஷம் விலகுகிறது. 5-ஆமிடமும், 9-ஆமிடமும் திரிகோண ஸ்தானங்கள். அந்த திரி கோணாதிபதி களின் சம்பந்தம் பெற்றால் எல்லா தோஷமும் விலகி விடும். சந்திர காவியம் என்ற ஜோதிட நூ-ல் "ஐந்து ஒன்பதுக் கதிபர் பாபர் சுபரானாலும் பொன் போன்ற சுபமே தருவார்' என்று சொல்லப் படுகிறது. 1, 5, 9 திரிகோண ஸ்தானங்கள். 1, 4, 7, 10 கேந்திர ஸ்தானங்கள். திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம் என் றும், கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம் என்றும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. திரிகோணம் என்பது தெய்வானுகூல ஸ்தானம். முன்ஜென்ம வினைப்பயனால் நம்மை வந்தடையும் யோகமாகும். 5- என்பது வரும் ஜென்மம். 9- என்பது பூர்வஜென்மம். வரும் ஜென்மத்தை வாரிசு யோகம் எனலாம். பூர்வஜென்மம் என்பதை போன ஜென்மம், முன்னோர் தவப்பயன் என்று சொல்லாம். "ஜெனனீ ஜென்ம ஸெக்யானாம் வர்த்தனீ குல சம்பதாம் பதவி பூர்வபுண்ணியானாம்' என்று ஜாதகம் எழுதுவதற்கு முன்பு எழுதப்படும் வாசகம். முன்ஜென்மாவில் செய்த நல்வினை- தீவினைக் கேற்ப அந்த உயிர் இந்த ஜென்மாவில் நல்ல பெற்றோர் கருவில் உருவாகி றது. தந்தை யின் கர்ப்பத்தில் இரண்டு மாதமும், தாயின் கர்ப்பத் தில் பத்து மாதமும் ஒரு உயிர் வாசம் செய்யும். அது தான் தமிழ் மாதம் பன்னிரண்டு. ராசிகள் பன்னி ரண்டு. 9-க்குடைய குரு 5-ஆமிடத் தைப் பார்க்கி றார். உங்களுக்கு முற்பிறவியும் நற்பிறவி; இப்பிறவியும் நற்பிறவி.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சிபெறுகிறார். அவருடன் 2, 5-க்குடைய புதன் சேர்க்கை. உங்களுடைய செயல்திறன், ஆற்றல், மதிநுட்பம், திறமை எல்லாம் வெகுசிறப்பாக அமையும். ஜென்மத்தில் ராகுவும் சப்தமத்தில் கேதுவும் இருப்பது ஒருவகையில் உங்களுக்கு வேகத்தடை போல முன்னேற்றத்தைத் தடுக்கும் கிரகங் களாகும். என்றாலும் ராசியாதிபதி சுக்கிரன் ஆட்சிபெறுவதால் தடைகள் உடைபடும். படையெடுப்பதுபோல் செயல்கள் துரிதமடை யும். 2-ல் செவ்வாய் இருப்பது தோஷம் எனப் பட்டாலும், கும்ப குரு 5-ஆம் பார்வையாக செவ்வாயைப் பார்ப்பதால் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகிறது. பொதுவாக செவ்வாய் தோஷ முள்ள ஆணுக்கு செவ்வாய் தோஷமுள்ள பெண்ணைத் தான் திருமணம் முடிக்க வேண்டும். ஒருவருக்கு ரத்தம் ஏற்றும்போது பிளட் குரூப் பார்த்து ஏற்றுவதுபோல இதன் பலனாகும். எந்த தோஷமாக இருந்தாலும் திரிகோணாதிபதிகளோ குருவோ பார்த்தால் அந்த தோஷம் நிவர்த்தியாகும். ஒருவழிப்பாதையில் இரவு பத்து மணிக்குமேல் அந்த விதி சட்டவிரோதமாக மாறாது. அதேபோல அவரசகால வாகனங் கள் (ஆம்புலன்ஸ், தீயணைப்புவண்டி) விதிவிலக்காக அனுமதிக்கப்படும். ஆகவே, எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு என்று ஒன்றுண்டு. ஜோதிடத்தில் கேந்திர- திரிகோணாதிபதிகளுக்கு அது பொருந்தும். ஜெனன ஜாதகத்திலும் ராகு- கேது
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்:
பரணி- 4, கார்த்திகை- 1, 2.
செவ்வாய்: திருவாதிரை- 3, 4.
புதன்: ரோகிணி- 2, 3.
குரு: அவிட்டம்- 4.
சுக்கிரன்: கார்த்திகை- 3, 4,
ரோகிணி- 1.
சனி: திருவோணம்- 1.
ராகு: ரோகிணி- 3, 2.
கேது: கேட்டை- 1, அனுஷம்- 4.
கிரக மாற்றம்:
12-5-2021- சனி வக்ர ஆரம்பம்.
15-5-2021- ரிஷப சூரியன்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மீனம்.
9-5-2021- மேஷம்.
12-5-2021- ரிஷபம்.
14-5-2021- மிதுனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 3-ல் மறைந்தாலும் பாக்கியாதிபதி குருவின் பார்வையைப் பெறுகிறார். மறைவு தோஷம் விலகுகிறது. 5-ஆமிடமும், 9-ஆமிடமும் திரிகோண ஸ்தானங்கள். அந்த திரி கோணாதிபதி களின் சம்பந்தம் பெற்றால் எல்லா தோஷமும் விலகி விடும். சந்திர காவியம் என்ற ஜோதிட நூ-ல் "ஐந்து ஒன்பதுக் கதிபர் பாபர் சுபரானாலும் பொன் போன்ற சுபமே தருவார்' என்று சொல்லப் படுகிறது. 1, 5, 9 திரிகோண ஸ்தானங்கள். 1, 4, 7, 10 கேந்திர ஸ்தானங்கள். திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம் என் றும், கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம் என்றும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. திரிகோணம் என்பது தெய்வானுகூல ஸ்தானம். முன்ஜென்ம வினைப்பயனால் நம்மை வந்தடையும் யோகமாகும். 5- என்பது வரும் ஜென்மம். 9- என்பது பூர்வஜென்மம். வரும் ஜென்மத்தை வாரிசு யோகம் எனலாம். பூர்வஜென்மம் என்பதை போன ஜென்மம், முன்னோர் தவப்பயன் என்று சொல்லாம். "ஜெனனீ ஜென்ம ஸெக்யானாம் வர்த்தனீ குல சம்பதாம் பதவி பூர்வபுண்ணியானாம்' என்று ஜாதகம் எழுதுவதற்கு முன்பு எழுதப்படும் வாசகம். முன்ஜென்மாவில் செய்த நல்வினை- தீவினைக் கேற்ப அந்த உயிர் இந்த ஜென்மாவில் நல்ல பெற்றோர் கருவில் உருவாகி றது. தந்தை யின் கர்ப்பத்தில் இரண்டு மாதமும், தாயின் கர்ப்பத் தில் பத்து மாதமும் ஒரு உயிர் வாசம் செய்யும். அது தான் தமிழ் மாதம் பன்னிரண்டு. ராசிகள் பன்னி ரண்டு. 9-க்குடைய குரு 5-ஆமிடத் தைப் பார்க்கி றார். உங்களுக்கு முற்பிறவியும் நற்பிறவி; இப்பிறவியும் நற்பிறவி.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சிபெறுகிறார். அவருடன் 2, 5-க்குடைய புதன் சேர்க்கை. உங்களுடைய செயல்திறன், ஆற்றல், மதிநுட்பம், திறமை எல்லாம் வெகுசிறப்பாக அமையும். ஜென்மத்தில் ராகுவும் சப்தமத்தில் கேதுவும் இருப்பது ஒருவகையில் உங்களுக்கு வேகத்தடை போல முன்னேற்றத்தைத் தடுக்கும் கிரகங் களாகும். என்றாலும் ராசியாதிபதி சுக்கிரன் ஆட்சிபெறுவதால் தடைகள் உடைபடும். படையெடுப்பதுபோல் செயல்கள் துரிதமடை யும். 2-ல் செவ்வாய் இருப்பது தோஷம் எனப் பட்டாலும், கும்ப குரு 5-ஆம் பார்வையாக செவ்வாயைப் பார்ப்பதால் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகிறது. பொதுவாக செவ்வாய் தோஷ முள்ள ஆணுக்கு செவ்வாய் தோஷமுள்ள பெண்ணைத் தான் திருமணம் முடிக்க வேண்டும். ஒருவருக்கு ரத்தம் ஏற்றும்போது பிளட் குரூப் பார்த்து ஏற்றுவதுபோல இதன் பலனாகும். எந்த தோஷமாக இருந்தாலும் திரிகோணாதிபதிகளோ குருவோ பார்த்தால் அந்த தோஷம் நிவர்த்தியாகும். ஒருவழிப்பாதையில் இரவு பத்து மணிக்குமேல் அந்த விதி சட்டவிரோதமாக மாறாது. அதேபோல அவரசகால வாகனங் கள் (ஆம்புலன்ஸ், தீயணைப்புவண்டி) விதிவிலக்காக அனுமதிக்கப்படும். ஆகவே, எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு என்று ஒன்றுண்டு. ஜோதிடத்தில் கேந்திர- திரிகோணாதிபதிகளுக்கு அது பொருந்தும். ஜெனன ஜாதகத்திலும் ராகு- கேது தோஷமிருந் தால் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் தன் ராசிக்கு 12-ல் மறைவு. என்றாலும் அவருக்கு (புதனுக்கு) வீடுகொடுத்த சுக்கிரன் ஆட்சியென்பதால் தோஷமில்லை. உதாரண மாக வீட்டுச் சொந்தக்காரர் அருகில் இருந் தால் குடியிருப்பவர்கள் கட்டுப்பாட்டோடு வாழவேண்டிய நிலை. உரிமையாளர் வேறெங்கேயோ இருந்தால் குடியிருப்போர் தங்கள் இஷ்டத்திற்கு சுவற்றில் ஆணியடிப் பர். வாசலைப் பெருக்காமல்கூட புழங்குவர் என்பதுபோல! 6-க்குடையவர் செவ்வாய்- அவர் ஜென்ம ராசியி-ருப்பதாலும், அவரை 9-ல் இருக்கும் குரு பார்ப்பதாலும் எதிரிகளும் உங்களுக்கு அனுகூலமாக- ஆதரவாக மாறுவார்கள். அதைத்தான் "எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன்' என்பார்கள். நீண்டகாலத்திற்கு முன்பு சீனா இந்தியாவின்மீது படையெடுத்தபோது இந்தியாவில் இருந்த எல்லாக் கட்சிகளும் தலைவர் களும் ஒன்றுபட்டு பொது எதிரி சீனாவை விரட்டி யடிக்கப் பாடுபட்டார்கள். (நேரு காலத்தில்). மிதுன ராசிக்கு 12-ல் ராகுவும், 6-ல் கேதுவும் இருப்பது ஒருவகையில் நல்லது; இன்னொருவகையில் கெடுதல். அதாவது 12-ஆமிடம் என்பதும், 6-ஆமிடம் என்பதும் மறைவு ஸ்தானம், விரய ஸ்தானம், கடன் சத்ரு ஸ்தானம். இவற்றில் ராகு- கேது நிற்பது இந்த இரண்டு வீட்டுப்பலனையும் அதிகரிக்கவும் செய்யும்; குறைக்கவும் செய்யும். புரையோடிய புண்ணை கத்தியால் அறுத்து அறுவை சிகிச்சை செய்து மருந்து போடுவதுபோல!
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 9-க்குடைய குரு 8-ல் மறைகிறார். 10-க்குடைய செவ்வாய் 12-ல் மறைகிறார். என்றாலும் செவ்வாயை குரு பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். அதாவது 10-க்குடைய கேந்திராதிபதியை (செவ்வாய்) 9-க்குடைய திரிகோணாதிபதி (குரு) பார்க்கிறார். அடிக்கடி நான் எழுதுவதுபோல திரிகோணம் என்பது தெய்வ அனுகூல ஸ்தானம். (லட்சுமி ஸ்தானம்). கேந்திர என்பது முயற்சி ஸ்தானம். (விஷ்ணு ஸ்தானம்). ஒருவர் யோகத்தை அனுபவிக்கவேண்டும் என்றால் லட்சுமியின் அனுக்கிரகமும் வேண்டும். விஷ்ணுவின் அனுக்கிரகமும் வேண்டும். வித்யாதரர் என்ற பிரம்மச்சாரி வறுமையால் கஷ்டப் பட்டார். குபேரனையும் லட்சுமியையும் நோக்கி கடும்தவம் புரிந்தார். அவர்கள் இருவரும் காட்சிதந்து "உன் ஜாதகப்படி இந்த ஜென்மாவில் செவ்வந்தனாகும் படி அமைப்பு இல்லை' என்றார்கள். அப்போது "எம் தவத் திற்குப் பலன் இல்லையா' என்ற போது "இந்த தவப் பயன் மறுஜென்மா வில் கிடைக்கும்' என்று கூறி மறைந்தார்கள். இவர்கள் குருவின் ஆலோசனைப்படி இருவரும் சந்நியாசம் பெற்றதால் மறு ஜென்மம் எடுத்தற்கு சமமாகிவிட்டது. குபேரனும் லட்சுமியும் சங்கநிதி, பதுமநிதி களைக் கொண்டுவந்து கொடுத்து விட்டார் கள். சந்நியாசம் பெற்றதால் அவர்கள் இருவரும் மறுஜென்மா அடைந்ததாக மாறினாலும் செவ்வந்தின்மேல் இருந்த பற்று நீங்கிவிட்டது. அதனால் அந்த செல்வத்தைக் கொண்டு விஜயநகரப் பேரரசை உருவாக்கினார்கள்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 9-ல் உச்சம் பெறுகிறார். அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய் 11-ல் பலம் பெறுகிறார். அவருக்கு வீடுகொடுத்த புதன் 10-ல் திக்பலம் பெறுகி றார். அவருடன் சுக்கிரனும் ஆட்சியாக இருக்கிறார். எனவே, எல்லாவகையிலும் இந்த கிரக அமைப்பு உங்களுக்கு அனுகூலமாக அமைகிறது. குடும்ப சுகம் பெருகும். சுபமங்களச் செலவுகள் உண்டாகும். தொழில் முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் ஏற்படும். மனதில் வகுத்த திட்டங்கள் செயல்படும். பிள்ளைகள்வகையில் நல்லவை எல்லாம் நடக்கும். தாராளமான வரவு- செலவும், பழைய கடன்கள் அடைபடுவதும், சேமிப்பு பெருகுவதும் போன்ற நல்லன எல்லாம் நடக்கும். 5, 8-க்குடைய குரு 7-ல் நின்று உங்கள் ராசியைப் பார்ப்ப தால், திருமணமாகாத வர்களுக்குத் திருமண யோகமும், வாரிசு யோகமும், பிள்ளைகள் இருப்போருக்கு நல்ல காரியங்களும் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். தந்தைவழி, பாட்டனார் வழியில் நிலவிய சொத்துப் பிரச்சிகைளும் சிக்கல்களும் நிவர்த்தியாகி எல்லாம் உங்களுக்கு சாதகமாக நிறைவேறும். நீண்டகாலமாக வாராதிருந்த கடன் வசூலாகும். அதைக் கொண்டு எதிர்கால வாழ்வுக்கான நல்ல திட்டங்களை வகுத்து செயல்படலாம். வழக்கு வியாஜ்ஜியங்கள் அனுகூலமாகவும் சாதகமாகவும் அமையும். தேக ஆரோக்கியம் தெளிவாக இருக்கும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 9-ல் இருக்கி றார். அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் 9-ல் ஆட்சியாக இருக்கிறார். பலம் பெறுகிறார். அவர்கள் இருவரும் ராகு- கேது சம்பந்தப்படுவதால் வேகத்தடைபோல சிறுசிறு தடைகளும் இடையூறுகளும் ஏற்பட்டாலும், உங்கள் பயணம் தடைப்படாது; தொடர்ந்து செயல்படலாம். சிலசமயம் ரோடு பராமரிப்பு வேலை நடப்பதால் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்ற அறிவிப்பின்படி, பக்கத்துப் பாதையில் பயணம் செய்து போகவேண்டிய இடம் போகலாம். 10-க்குடைய புதன் 9-ல் இருப்பதும், 9-க்குடைய சுக்கிர னோடு சேர்ந்திருப்பதும் முழு அளவில் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. எந்த ஒரு ஜாதகத்திலும் ஆட்சி, உச்சம், நட்பு பலத்தைவிட 9, 10 என்ற தர்மகர்மாதிபதி யோகம் இருந்தால் அந்த ஜாதகருக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாக அமையும். குருவருள் இருந்தால் திருவருள் பெறலாம். திருவருள் இருந்தால் எப்போதும் வெற்றிதான்; தோல்விக்கு இடமில்லை. ஆகவே, ஜெயித்துக்கொண்டே இருக்கலாம். தேக சுகம் நன்றாக இருக்கும். வைத்தியச்செலவுகள் விலகும். தெளிவு பிறந்தால் திறமை பெருகும். திறமை இருந்தால் செயல்பாட்டிற்குப் பஞ்சமில்லை. செயல்பாடிருந்தால் வெற்றி உண்டாகும். முய-ன் அலட்சியத்தால் ஆமையும் முயலை முந்தி பந்தயத்தில் ஜெயிக்கநேரும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைவென்றாலும் ஆட்சிபலம் பெறுவதால் மறைவு தோஷம் பாதிக்காது. போர்த் தந்திரத்தில் மறைந்திருந்து தாக்கும் மரபு என்று ஒன்றுண்டு. அந்த விதிப்படிதான் இராமபிரான் மறைந்திருந்து வா-யை வதம்செய்தார். ஆக, மறைவு ஸ்தானமும் சமயத்தில் நிறைவு ஸ்தானமாகிவிடும். சில காரியங்களை வெளிச்சத்தில் செய்யவேண்டும். சில காரியங்களை இருட்டில்தான் செய்யவேண்டும். இருட்டு என்பது திருட்டுக்குத் துணை போகும். துலா ராசிக்கு 11-க்குடைய சூரியன் 7-ல் உச்சம்பெற்று ராசியைப் பார்க்கிறார். வாரக்கடைசியில்தான் 8-ஆமிடத்திற்கு மாறுவார். அப்படி சூரியன் 8-ல் மறைந் தாலும், அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் ஆட்சி பெறுவதாலும் அவருடன் 9-க்குடைய புதன் சம்பந்தப்படுவதாலும் சூரியனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. பொதுவாக 11-ல் சூரியனோ செவ்வாயோ இருந்தால் எல்லாக் காரியங்களிலும் வெற்றி ஏற்படும் என்பது ஜோதிடவிதி. 3, 6-க்குடைய குரு 5-ல் அமர்ந்து துலா ராசியைப் பார்க்கிறார். அத்துடன் அவருக்கு வீடுகொடுத்த சனியும் 10-ஆம் பார்வையாக துலா ராசியைப் பார்க்கிறார். குரு பார்க்கக் கோடி நன்மை என்பார்கள். குரு நின்றா லும் பார்த்தாலும் அந்த ஜாதகர்களுக்கு குருவருளும் திருவருளும் பெருகும் என்பது ஒரு அனுபவம். உங்களுக்கு குரு கடாட்சம் கிடைக்கிறது.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைகிறார். ஆனாலும் அவரை 2, 5-க்குடைய குரு 4-ல் அமர்ந்து பார்க்கிறார். எனவே, ராசிநாதன் மறைவு தோஷம் பாதிக்காது. ஆனால் ஜென்ம கேதுவும் சப்தம ராகுவும் உங்களுக்குத் தடைகளையும் குறுக்கீடுகளையும் ஏற்படுத்தலாம். ராசிநாதனான செவ்வாயை குரு பார்ப்பதால் அந்த தோஷமும் விலகும். 7-ல் புதன், சுக்கிரன் சேர்க்கையால் 7-ல் இருக்கும் ராகு தோஷம் விலகும். பொதுவாக ஜென்ம ராசி, ஜென்ம லக்னம் இவற்றில் ராகு- கேது நின்றாலும் பார்த்தாலும் அல்லது எந்த ஒரு வீட்டில் ராகு- கேது நின்றா லும் பார்த்தாலும் நாகதோஷம் ஏற்படும். அதனால் திருமணம், வாரிசு, சொந்தவீடு, வாகனம் போன்ற சுகபோக யோகங்கள் தடைப்படும். ஆனால் ராசிநாதன் பலத்தாலும் குரு பார்வை, சேர்க்கை பலத்தாலும் ராகு- கேது நின்ற வீட்டின் கிரகப் பலனாலும் மேற்படி தோஷம் மாறுவதற்கு இடமுண்டு. ஆகவே, உங்களுக்கு நாகதோஷம் பற்றிய பயம் வேண்டாம். நன்மைகள் சிலசமயம் தாமதமாகலாம். தடை, தாமதம் என்பது வேறு. நிஷ்பலன் என்பது வேறு. (அதாவது எதிர்மறைப் பலன் என்பதுவேறு). நரி வலம் போனால் நல்லதா- இடம்போனால் நல்லதா என்றால், மேலே விழுந்து கடிக்காமல் போனால் நல்லது என்பது மாதிரிதான்! தேக ஆரோக்கியம், பொருளாதாரத்தில் பிரச்சினைக்கு இடமில்லை.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு 3-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த சனி 2-ல் ஆட்சி. சனிக்கு 5-க்குடைய செவ்வாய் பார்வை. செவ்வாய்க்கு ராசிநாதன் குரு பார்வை. தேர்த-ல் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் இரண்டிலும் வெற்றி பெறுவதுபோலதான் உங்கள் வெற்றி உறுதிப்படுத்தப்படுகிறது. உண்மையில் ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில்தான் போட்டியிட வேண்டுமென்று சட்டதிட்டம் மாற்றியமைக்க வேண்டும். அதனால் காலப்பிரயத்தையும் பணவிரயத்தையும் காப்பாற்றமுடியும். இந்த கிரக அமைப்பு- ஒரே தேதியில், ஒரே நேரத்தில் வேலைக்கு மனுபோட்ட இடத்தில் நேர்முக அழைப்பு விடுத்தமாதிரி! இதற்குப் பெயர்தான் தர்மசங்கடம். "அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை' என்ற பழமொழிபோல! இது சீராக வேண்டுமென்றால் "நாட்டமை... தீர்ப்பை மாத்தி சொல்லு' என்று சொன்ன மாதிரி தீர்ப்புகள் திருத்தப்பட வேண்டும். அது பரிகாரமாகும். அதேபோல கிரகங்களின் துர்ச்செயலை நற்செயலாக மாற்றுவதற்கும் பரிகாரமுண்டு. அது அவரவரர் ஜாதகப்படி தெரிந்து தெளிந்து செயல்படவேண்டும். இல்லாவிட்டால் "போனால் வராது; பொழுது விடிந்தால் கிடைக்காது' என்றமாதிரி எல்லாம் வியாபாரமாகிவிடும். தும்பைவிட்டு வாலைப் பிடித்த கதையாகவும் மாறிவிடும். இதை ஏன் எழுதுகிறேன் என்றால், 2023 டிசம்பர் வரை உங்களுக்கு ஏழரைச்சனி நடக்கிறது. அது உங்கள் பயணப்பாதையை மாற்றியமைக்கலாம்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி ஆட்சி பெறுகிறார். அந்த வீட்டுக்கு உச்சநாதனான செவ்வாய் சனியைப் பார்க்கிறார். "மந்தன் சேய் இருவரும் சேர்ந்திடவும் தீது; பார்த்திடவும் தீது' என்பது ஜோதிட விதி. இதை தேவகேரளயம் என்ற ஜோதிட நூ-ல் விரிவாக விளக்கியுள்ளார்கள். இந்த விதிக்கும் விதிவிலக்கு உண்டு. செவ்வாயும் சனியும் ஆட்சி, உச்சம் பெற்றால் தோஷமில்லை. அடுத்தவர் கைவிரல் நம் கண்ணில் குத்தினால் விஷம். நம் கைவிரலே நம் கண்ணில் குத்தி னால் விஷமாகாது. ஆகமொத்தத்தில் விதி என்று ஒன்று இருந்தால் அதற்கு விதிவிலக்கு என்ற ஒன்றுண்டு. ஜனனம்- மரணத்தைத் தவிர எல்லாவற்றுக்கும் விதிவிலக்கு உண்டு. இந்த இரண்டையும் தாமதப்படுத்தலாமே தவிர நிறுத்த முடியாது. அதனால்தான் கவியரசர் கண்ணதாசன், "வேந்தன் வகுத்த விதியை மாற்றலாம் என்றாலும் அதுவும் வேந்தன் வகுத்த விதியாகும்' என்றார். ராசிநாதன் சனி ஆட்சியின் பலன்- அவரை செவ்வாய் பார்த்த பலன் இந்த ராசிக்கு மட்டும் கெடுக்காது. ஏனென்றால் சனி ஆட்சி கிரகம். செவ்வாய் மகரத்திற்கு உச்சகிரகம். (இதுதான் விதிவிலக்கு). ஊரடங்கு நேரத்தில் எல்லா ஊர்வலங்களுக்கும் தடைபோட்டாலும், இறுதிச்சடங்கு ஊர்வலத்திற்கு தடைபோட முடியாது. எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம். 3, 12-க்குடைய குரு 2-ல் இருக்கிறார். சிலருக்கு செலவுகளுக்குப்பின் வருமானம் வரும்; சிலருக்கு வருமானம் அனைத்தும் செலவாகும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 12-ல் மறைந் தாலும் ஆட்சியாக இருக்கிறார். ஆட்சி, உச்சம் பெறும் கிரகங்களுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. 2, 11-க்குடைய குரு ஜென்ம ராசியில் பலம் பெறுகிறார். கும்ப ராசிக்கு 5, 7, 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். 5-ம் 9-ம் திரிகோண ஸ்தானங்கள். 7- கேந்திர ஸ்தானம். 5-ம் 9-ம் பூர்வபுண்ணிய ஸ்தானம். 7- கணவன் அல்லது மனைவி ஸ்தானம். திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்போருக்கும், திருமணமாகி வாரிசுக்காகக் காத்திருப்போருக்கும் இக்காலம் திருமணமும் நடக்கும். வாரிசும் கிடைக்கும். 7-க்குடைய சூரியன் 3-ல் உச்சம் பெறுவதால் (7-ஆமிடத்துக்கு திரிகோணம்) ஆண்களுக்கு யோகமான மனைவியும், பெண்களுக்கு யோகமான கணவனும் அமைவார்கள். கணவன் அல்லது மனைவிவகையில் ஆதரவும் யோகமும் எதிர்பார்க்கலாம். இன்னொரு வகையில் 7 என்பது 10-ஆமிடத்துக்கு 10-ஆமிடமாகும். எனவே தொழில், வேலை, உத்தியோகம் இவற்றில் உங்கள் கனவுகள் நனவாகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, புதிய தொழில் வாய்ப்பு, ஏற்கெனவே செய்துவரும் தொழில் முறையில் முன்னேற்றகரமான திருப்பங்கள் ஆகியவை எல்லாம் உண்டாகும். தேக ஆரோக்கியம், பொருளாதாரம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற நற்பலன்களும் எதிர்பார்க்கலாம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு தன் ராசிக்கு 12-ல் மறைவு என்றாலும், அவருக்கு வீடு கொடுத்த சனி ஆட்சிபெறுவதால் குருவின் மறைவு தோஷம் நிவர்த்தியாகிறது. எந்த ஒரு கிரகமும் 6, 8, 12-ல் மறைந்தாலும், அவருக்கு வீடுகொடுத்த கிரகம் அதற்கு கேந்திர திரிகோணமாக இருந்தாலும் அல்லது ஆட்சி, உச்சமானாலும் அந்த கிரகத்துக்கு மறைவு தோஷம் பாதிக்காது. வீட்டு உரிமையாளர் வெளியிடத்தில் வாழ்கிறார் என்றால் குடியிருப்போர் தன் இஷ்டத்துக்கு சுவற்றில் ஆணியடிப்பது முதல் எல்லாவகையிலும் சுதந்திரமாக செயல்படுவார் அல்லவா! அதனால் தான், "உடையவர் இல்லையென்றால் ஒருமுழம் கட்டை' என்றார்கள். 2, 9-க்குடைய செவ்வாய் 4-ல் புதன் வீட்டிலும் செவ்வாய்க்கு வீடுகொடுத்த புதன் மேஷத்தில் செவ்வாயின் வீட்டிலும் பரிவர்த்தனை யோகமாக இருக்கிறார்கள். பொதுவாக செவ்வாயும் புதனும் பகை கிரகம் என்றா லும், இங்கு தற்கா-க நட்பு கிரகமாக மாறி நல்லதே செய்வார்கள். எனவே, தேக ஆரோக்கியம், தன்சுகம், தாயின் சுகம், பூமி, வீடு, வாகன யோகம் போன்றவகையில் நற்பலன்களை எதிர்பார்க்கலாம். 3-ல் ராகு நிற்க கேது பார்க்க, 3-க்குடைய சுக்கிரன் தன் ராசிக்கு 12-ல் மறைவதால், சிலருக்கு உடன்பிறந்தோர்வகையில் செலவுகளும் பிரச்சினைகளும் வருத்தங்களும் ஏற்பட இடமுண்டு. எனவே, எந்த ஒரு பிரச்சினையும் பெரிதுபடுத்தாமல் எளிதாக எடுத்துக்கொள்ளவேண்டும். "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை' என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்து நடக்கவேண்டும். விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை. இந்த ஜென்மா வில் ரத்த பந்த சொந்தமாகப் பிறந்து விட்டோம். அடுத்த ஜென்மாவில் யார் யாரோ- எங்கெங்கோயோ யாருக்குத் தெரியும்? இருக்கும் காலம்வரை எல்லாருக்கும் நல்லவராக- இனியவராக இருப்போமே!