முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026.
தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூராடம்- 4.
செவ்வாய்: கேட்டை- 3.
புதன்: திருவோணம்- 2.
குரு: சதயம்- 1.
சுக்கிரன்: பூராடம்- 4 (வ).
சனி: திருவோணம்- 3.
ராகு: கிருத்திகை- 3.
கேது: அனுஷம்- 1.
கிரக மாற்றம்:
தை 1 (14-1-2022) மகர சூரியன்- பகல் 2.29 மணிக்கு.
தை 1 (14-1-2022) புதன் வக்ர ஆரம்பம்- மாலை 5.11 மணிக்கு.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மீனம்.
10-1-2022 காலை 8.49 மணிக்கு மேஷம்.
12-1-2022 இரவு 8.45 மணிக்கு ரிஷபம்.
15-1-2022 இரவு 9.51 மணிக்கு மிதுனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 10-ல் புதன் சஞ்சரிப்ப தால் நல்ல வாய்ப்புகள் தேடிவரும். நெருக்கடியான சூழ்நிலையில்கூட சாமர்த்தியமாக செயல்பட்டு நல்லபெயர் எடுப்பீர்கள். 11-ல் சஞ்சரிக்கும் குரு 5, 7 ஆகிய வீடுகளைப் பார்ப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி, குடும்பத்தில் சந்தோஷம், சிறப்பான பணவரவால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் யோகம் இவ்வாரத்தில் உண்டு. சூரியன் இவ்வாரத்தில் 9, 10-ல் சஞ்சரிப்பதால் பெரியோர்களின் ஆசி கிடைத்து கடந்தகால நெருக்கடிகள் படிப்படியாகக் குறையும். ராகு 2-ல், செவ்வாய், கேது 8-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் பொருளாதாரரீதியாக சிறப்பான பலனையடையும் வாய்ப்புண்டு. சுக்கிரன் வக்ரம் பெற்றிருப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை இருக்குமென்றாலும், வெளிநபர்களால் வீண் பிரச்சினை கள் ஏற்படலாம் என்பதால், குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டாம். தொழில், வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் கிடைத்து நல்ல லாபங்களை அடையும் வாய்ப்புண்டு. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்கள் தங்களின் திறமையை வெளிபடுத்துமள வுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். ராகு காலங் களில் துர்கையம்மனுக்கு சிவப்புநிற வஸ்திரம் சாற்றி, அரளிமலர் மாலையிட்டு நெய்தீபமேற்றி வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் வக்ரகதியில் 8-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சனி பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஒருசில பொருளாதார உதவிகள் கிடைக்குமென்றாலும், ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கையிருப்பைக் கொண்டுதான் அன்றாட செலவுகளை எதிர்கொள்ள வேண்டும். குரு பகவான் 10-ல் சஞ்சரிப்பதால் அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தற்கா-க மாகத் தள்ளிவைப்பது நல்லது. செவ்வாய் 7-ல், சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள், உறவினர்களால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் எதிர்பாராத அனுகூலங்களை அடையும் யோகமுண்டு. திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் தேவையற்ற பயணங்கள், வீண் செலவுகள் ஏற்படும். ராகு ஜென்மத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதைச் செய்வதென்றாலும் யோசித்து செய்தால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். அரசு அதிகாரிகளிடம் கவன மாக பேசுவது நல்லது. உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் பழிச்சொற்களை எதிர் கொள்ளும் நேரமென்பதால் உங்கள் பணியில் மட்டும் அக்கறை செலுத்துவது நல்லது. தூரப் பயணங்களை முடிந்தவரை தள்ளி வைக்க வும். 14-ஆம் தேதிமுதல் 8-ல் சஞ்சரிக்கும் சூரியன் 9-ஆம் வீட்டிற்கு மாறவிருப்பதால், இவ்வாரம் மட்டும் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. சிவ வழிபாடு செய்வது, வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்து பொருமாளை வழிபட்டால் சிறப் பான பலன்களை அடையலாம்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எதில் ஈடுபட்டாலும் அதில் ஆதாயத்தை அடையும் யோகமுண்டு. கடந்த காலங்களில் உங்களுக்கிருந்த வம்பு வழக்குகள், மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் படிப்படியாக விலகும். குரு 9-ல் சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்ப்பதால் பணவரவு மிகமிக நன்றாக இருந்து நெருக்கடிகள் குறையும். கடன்களைத் தீர்க்கும் யோகமுண்டு. பிள்ளைகள் வழியில் ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சி அரங்கேறும். பூர்வீக சொத்து வழியில் நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வரும். ராசியாதிபதி புதன், சனி சேர்க்கைப் பெற்று 8-ல் சஞ்சரிப்ப தால், ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, சிறு பிரச்சினை என்றாலும் அதற் கான சிகிச்சையை உடனே எடுத்துக்கொள்வது நல்லது. சுக்கிரன் வக்ர கதியில் 7-ல் சஞ்சரிப்ப தாலும், இவ்வாரத்தில் சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதாலும் கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் வாய்ப்பும், உங்கள் முயற்சிகளுக்கு அனு கூலங்கள் கிடைக்கும் யோகமும் உண்டு. தொழில், வியாபாரத்தில் சிறப்பான பலன்களைப் பெற்று, போட்ட முதலீட்டைவிட அதிகபடியான லாபத்தை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வைகுண்ட ஏகாதசி யன்று விரதமிருந்து, விஷ்ணு ஆலயங்களுக் குச் சென்று மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமி யையும் துளசிமாலை சாற்றி வழிபட்டால் சகல நன்மைகளையும் பெறலாம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு சூரியன் 6-ல் தனது நட்பு வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர்கள். புதன் 7-ல், ராகு 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரத் தேக்கங்களை சமாளித்து தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சூழ்நிலைக்குத் தக்கவாறு செயல் பட்டு நற்பலனை அடையமுடியும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத் தில் சிக்கனமாக இருப்பது நல்லது. செவ்வாய், கேதுவுடன் 5-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. கடந்தசில நாட்களாக இருந்த மனகுழப்பங்கள் விலகி நல்லது நடக்கும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் மிகவும் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். தொழில், வியாபாரத் தில் அதிக முதலீடுகளை செய்யாமல் கவனமாக செயல் பட்டால் நற்பலனை அடைய லாம். தற்போது இருக்கும் வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொண்டால் ஓரிரு மாதங் களில் நல்ல முன்னேற்றங் களை அடையமுடியும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்தாலும், அதற்கான சன்மானம் கிடைக்காது. உங்களது குடும்ப விஷயங் களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது பிரச்சினைகளைக் குறைக்கும். வீடு, வாகனங் களைப் பராமரிப்பதற்காக செலவுசெய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி, கொண்டைக் கடலை மாலையிட்டு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து தீபமேற்றி வழி பட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் வக்ர கதியில், ராசியாதிபதி சூரியன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் பொறுமையுடன் செயல்பட்டால் வளமான பலன்களை அடைய முடியும். குரு 7-ல் சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்ப்பதால் சிறப்பான ஆரோக்கியம், எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிர்பாராத தனலாபம் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை, சுபகாரியங்கள் கைகூடும் யோகம் ஏற்படும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் வெற்றிமேல் வெற்றி அடையமுடியும். செவ்வாய், கேது 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட்டு வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படும். ஞாயிறன்று மன நிம்மதி குறையும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்பதால் உங்களுக்கு மறக்கமுடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக அதிக முதலீடுகளை ஈடு படுத்தி நல்ல லாபத்தை அடையமுடியும். நவீனகரமான பொருட்களை வாங்கும் ஆசை நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன் படுத்தி சமுதாயத்தில் கௌரவ மான நிலையை அடைவீர் கள். உத்தியோகத்தில் சிறப் பான நிலையைப் பெற்று நிம்மதியுடன் பணியாற்ற முடியும். நீண்டநாட்களாகப் பதவி உயர்வை எதிர்பார்த்த வர்களுக்கும், வேலை தேடிக்கொண்டிருப்ப வர் களுக்கும் வரும் நாட்க ளில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சனிப்பிரதோஷத் தன்று விரதமிருந்து சிவாலயங் களுக்குச் சென்று நந்தி வழிபாட்டையும் சிவ வழிபாட்டையும் மேற்கொண்டால் சகல பிரச்சினைகளும் விலகும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எதிலும் துணிச்சலுடன் செயல் படுவீர்கள். உங்கள் செயல்களுக்கு நெருங்கியவர் களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். சுக்கிரன் 4-ல், ராசியாதிபதி புதன் 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவு சாதகமாக இருந்து நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். தனகாரகன் குரு 6-ல் மறைந்து சஞ்சரிப்பதால் சிக்கனமாக செயல்படுவது நல்லது. சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் உற்றார்- உறவினர் களிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் சாதகமான பலன் களை அடைவீர்கள். திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தடைப்படும் என்பதால் பொறுமை யுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிலும் கவனமாக இருப்பதன் மூலமாகவும், வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன் மூலமாகவும் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். தொழிலை அபிவிருத்தி செய்யும் எண்ணத்தை ஓரிரு மாதத்திற்குத் தள்ளிவைப்பது நல்லது. வெளி நபர்களிடம் தொழில் தொடர்பான விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் பயணங்கள் செல்லும் சூழ்நிலை, அதன்மூலம் எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ளும் நிலை உண்டாகும். சூரியன் 14-ஆம் தேதி முதல் 5-ல் சஞ்சரிக்கவிருப்பதால், அதன்பிறகு தற்போதுள்ள பிரச்சினைகள் சற்று குறையும். வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருப்பது, மகா விஷ்ணுவையும் மகாலட்சுமியையும் வழிபடு வது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சரிக் கும் குரு ஜென்ம ராசி மற்றும் 9, 11 ஆகிய ஸ்தானங் களைப் பார்ப்பதால் எதிலும் தெம்புடன் செயல்படும் திறன், தாராள தனவரவு, எதிர் பாராத லாபங்கள், நீண்டநாள் கனவுகள் நிறைவேறும் யோகம் வரும் நாட்களில் ஏற்படும். சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் புதிய திட்டங்களைத் தீட்டி அதில் வெற்றி பெறும் வாய்ப்புண்டு. புதன் 4-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம், சிலருக்கு அசையா சொத்து வகையில் அனுகூலங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானமாக செயல்படுவது, கணவன்- மனைவி யிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது சிறப்பு. குறிப்பாக பேச்சால் பிரச்சினைகள் ஏற்பட லாம் என்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் சிறப்பாக சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகளுக்கு எளிதில் அனுகூலங்கள் கிடைக்கும். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கடந்தகால பொருட் தேக்கங்கள் விலகி லாபங்கள் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தூரப் பயணங்கள் மேற்கொள்ளும்போது நிதானத் தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ் தர்களுக்கு நல்ல வாய்ப்புகள், எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் கிடைக்கும். சனிப் பிரதோஷத் தன்று சனி பகவானுக்கு எள் தீபமேற்றி வழிபடுவது, ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது மிக நல்லது.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
செவ்வாய் ஜென்ம ராசியில் கேதுவுடன் சஞ்சரிப்பதாலும், சூரியன் 2-ல் சஞ்சரிப்பதாலும் உங்களின் முன்கோபத் தால் தேவையற்ற நெருக்கடிகளை எதிர் கொள்வீர்கள். நீங்கள் நல்லதாகப் பேசினாலும் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், உடனிருப்பவர்களிடம் நிதானத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் சென்றால்தான் அன்றா டப் பணிகளை சிறப்பாகச் செய்யமுடியும். சனி 3-ல் வலுவாக புதன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றும் திறன், சிறப்பான பணவரவு இவ்வாரத்தில் இருக்கும். சுக்கிரன் 2-ல் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியரீதியாக சிறுசிறு பாதிப்பு கள் இருந்தாலும் குரு பார்வை 8-ஆம் வீட்டிற்கு இருப்பதால் எதையும் சமாளித்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் மிகவும் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத லாபங்களைப் பெற்று வாழ்க்கை தரம் உயரும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் உறுதுணை யாக இருப்பதால் லாபகரமான பலனை அடை வீர்கள். அரசு அதிகாரிகள்மூலம் நெருக்கடி கள் வரலாம் என்பதால் எந்த செய-லும் பொறுமையுடன் ஈடுபட்டால் நற்பலனை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் நற்பலனை எட்டமுடியும். விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் தடைப்பட்ட காரியங்கள் கைகூடும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதைச் செய்வதென்றா லும் சிந்தித்து செயல்படுவது நல்லது. குரு 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் நெருக்கடி, வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். செவ்வாய் 12-ல் கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வதும், எதிலும் நிதானத்துடன் இருப்பதும் உத்தமம். உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் ஒருசில உதவிகள் கிடைத்து அதன்மூலம் நெருக்கடிகள் சற்று குறையும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றுவதில் இடையூறுகள் உண்டாகும். வரும் நாட்களில் தேவையில்லாத பயணங்கள் ஏற்படும். பிரதான கிரக சஞ்சாரம் சாதக மற்று இருந்தாலும், வியாழன், வெள்ளி, சனிக் கிழமைகளில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு பொருளாதார நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் தற்போதுள்ள வாய்ப்புகளைத் தக்கவைத்துக்கொண்டு நிதானமாக செயல்படுவது நல்லது. உத்தியோகஸ் தர்கள் ஆரோக்கியக் குறைபாட்டால் பணியை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க முடியாது. வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. கிருத்திகையன்று விரதமிருந்து முருகப் பெருமானுக்கு அர்ச் சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்..
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
குரு ஜென்ம ராசிக்கு 2-ல் வலுவாக சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். கடந்தகால கடன்கள் எல்லாம் படிப்படியாகக் குறையும். செவ்வாய், கேது லாப ஸ்தானத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அதில் ஆதாயத்தை அடையும் யோகமுண்டு. ஏழரைச் சனியில் ஜென்மச்சனி நடப்பதாலும், 5-ல் ராகு சஞ்சரிப்பதாலும் உங்களின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், சிறிது பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதும் நல்லது. அன்றாடப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு பொருளாதார மேன்மையை அடையும் யோகம் இருக்கிறது என்றாலும், சூரியன், சுக்கிரன் 12-ல் சஞ்சரிப்பதால் வயது மூத்தவர்களிடம் வாக்குவாதம் செய்யாம-ருப்பதும், உங்களின் குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதும் நல்லது. ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் சிறப்பான பலன்களை அடையமுடியும். தொழில்ரீதியாக கடந்தகாலங்களில் இருந்த நெருக்கடிகள் குறைந்து படிப்படியான முன்னேற்றங்களை அடைவீர்கள். நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு இவ்வாரத்தில் உண்டு. வேலைக்குச் செல்பவர்களுக்கு உடல் சோர்வு இருந்தாலும் எதிலும் ஈடுபாடுடன் செயல்பட்டு எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்தில் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்கள்மீதிருந்த பழிச்சொல் விலகி நிம்மதியுடன் பணியாற்ற முடியும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை ஏற்ற- இறக்கமாக இருக்கும். என்றா லும் சூரியன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். குரு பார்வை 5, 7-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி, கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். ராகு 4-ல், சனி 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம் என்பதால், எந்த விஷயத்திலும் அகலக் கால் வைக்காமல் உங்கள் கையிருப்பைக் கொண்டு சிக்கனமாக செலவுசெய்வது நல்லது. உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், கேதுவுடன் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும் யோகம், கௌரவப் பதவிகளை அடையும் வாய்ப்புண்டாகும். திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நீங்கள் செய்யும் செயல்களுக்கு எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான ஆதாயங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சில அனுகூலங்களை அடையும் வாய்ப்பிருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் சிக்கனமாக இருப்பது நல்லது. மற்றவர்களை நம்பி வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும். வேலையில் இருப்பவர்கள் அனுகூலமான பலன்களையும் எதிர்பார்த்த பதவி உயர்வுகளையும் அடைய முடியும். என்றாலும் ஊதிய உயர்வு கிடைக்க தாமதமாகும். நவகிரகங்களில் குரு பகவானுக்கு முல்லை மலர்களாலும் ராகு பகவானுக்கு மந்தாரை மலர்களாலும் அர்ச்சனை செய்து வழிபடுவது மிகவும் நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 4, 7-க்கு அதிபதியான புதன் தனது நட்பு கிரகமான சனி சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பென்பதால், நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நீண்டநாட்களாக எண்ணிய கனவுகள் நனவாகக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். சூரியன் இவ்வாரம் 10, 11-ல் சஞ்சரிப்பதால் சமுதாயத்தில் கௌரவமான நிலையை அடையமுடியும். பணவரவுகள் தாராளமாக இருந்து கடன் பிரச்சினைகள் குறையும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளைத் தற்போது எடுத்தால் ஆதாயத்தை அடையமுடியும். ராகு 3-ல் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குரு பார்வை 6, 8-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகும். நல்ல உடல்நலத்துடன் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் லாபங்களை அடைவதுடன், தொழிலை அபிவிருத்தி செய்யும் எண்ணங்களும் நிறைவேறும். வேலையாட்களால் இருந்த பிரச்சினைகள் விலகி திறமைவாய்ந்த புதிய ஆட்கள் தொழிலுக்குக் கிடைப்பார்கள். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடந்த காலங்களில் நீங்கள் கொடுத்த கடன்கள் தற்போது திரும்பவந்து உங்கள் சேமிப்பை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் பதவி உயர்வையும் அடைய முடியும். முருகன், தட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சுபச் செய்திகள் தேடிவரும்.