ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 03065.
கிரக பாதசாரம்:
சூரியன்: விசாகம்- 1, 2, 3.
செவ்வாய்: ரேவதி- 4.
புதன்: சித்திரை- 3, 4, சுவாதி- 1, 2, 3.
குரு: உத்திராடம்- 1.
சுக்கிரன்: அஸ்தம்- 3.
சனி: பூராடம்- 1.
ராகு: மிருகசீரிடம்- 1.
கேது: கேட்டை- 3.
கிரக மாற்றம்:
இல்லை.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கடகம்.
8-11-2020- சிம்மம்.
11-11-2020- கன்னி.
13-11-2020- துலாம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 11-ல் மறைவு என்றாலும், அவருக்கு வீடு கொடுத்த குரு 9-ல் ஆட்சி! மேலும் 10-க்குடைய சனியுடன் சேர்க்கை! அதனால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. மேலும் சனியோடுகூடிய குரு ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பதால், உங்களுக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும்! அதனால் 2- தனஸ்தானத்திலுள்ள ராகுவால் உண்டாகும் பணப் பற்றாக் குறையையும், பொருளாதாரப் போராட்டங்ளையும் மிகமிக எளிதாகச் சமாளித்து கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளலாம். அதற்குத் துணையாக 5-க்குடைய சூரியன் 7-ல் நீசபங்கம் பெற்று ராசியைப் பார்ப்பதால் மதிப்பு, மரியாதை, கௌரவத்துக்கு எந்த வகையிலும் பாதிப்புக்கு இடமில்லை. "யானை படுத்தாலும் குதிரை மட்டம்' என்றமாதிரி, கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்று சொல்லும்படி உங்களுடைய செல்வாக்கு குறையாது. 5-க்குடைய சூரியன் 7-ல் நீசபங்கம் என்பதோடு, ராசிநாதன் செவ்வாயின் பார்வையைப் பெறுவதும் மற்றொரு காரணம். 5-ஆமிடத்தை குரு 9-ல் ஆட்சிபெற்றுப் பார்ப்பதும் இன்னொரு காரணம். அதாவது ஒரு திரிகோணாதிபதி இன்னொரு திரிகோண ஸ்தானத்தைப் பார்ப்பது சிறப்பு. திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம்; கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம். 9, 10-குடைய குரு, சனி சேர்க்கைப் பலனாக, நினைப்பது உங்கள் கடமை; நிறைவேற்றுவது இறைவன் உரிமை! "எண்ணிய எண்ணியாங்கு எய்து- எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்ற திருக்குறளுக்குப் பொருத்தமாக உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் முழுமையாக ஈடேறும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் (5-ல்) நீசம். என்றாலும், அவருக்கு வீடுகொடுத்த புதன், சுக்கிரன் வீட்டில் பரிவர்த்தனை என்பதால் சுக்கிரனுக்கு நீசபங்கராஜ யோகம் அமைகிறது. இன்னொரு வகையில் சுக்கிரன் வீட்டில் (துலா ராசியில்) சூரியனும் நீசம் என்பதாலும் சுக்கிரனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. எனவே உங்களுடைய செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, செயல்திறன், கடமை காரியங்கள் எதுவும் சோடை போகாது. சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும்- செயல்வேகம்- புயல்வேகமாகப் பலன் தரும். அதனால் அட்டமச்சனி நடந்தாலும் கெட்ட பலனுக்கு இடமில்லை. பொங்குசனியாகப் பொலிவைத்தரும். சிலருக்கு இடப்பெயர்ச்சி அல்லது ஊர்மாற்றம், குடியிருப்பு மாற்றம், பதவி உயர்வு போன்ற மாற்றம் ஏற்றம் தரும்! அதேசமயம் ஜென்ம ராகுவும் சப்தம கேதுவும் உங்களுக்கு நடக்குமா? நடக்காதா? நம்மால் முடியுமா? முடியாதா என்ற சந்தேகத்தையும் தன்னம் பிக்கைக் குறைவையும் உண்டாக்கலாம். ஜெய வீர அனுமன் சீதையைத் தேடி இலங்கைக்குப் புறப் படும்போது, கடலைத் தாண்டிப் போவது எப்படியென்று தவித்து நின்றாராம். ஜாம்பவான் என்ற கரடிதான் அவர் ஆற்றலை அவருக்கு எடுத்து உணர்த்தி, ஊக்கம் கொடுத்தாராம். அதுமாதிரி உங்கள் ஆற்றலையும் திறமை யையும் உங்களுக்கு உணர்த்தி, உங்களை செயல்பட வைக்குமளவு மனைவி அல்லது உற்றவர்களும் மற்றவர்களும் உதவிபுரிவார்கள். விளக்குத் திரி கருகி அணையும் நிலையில் தூண்டுகோல் துணைபுரிவதுபோல, உங்களுக்கும் ஒரு தூண்டுகோல் அமையும். யானைக்கு தன் பலம் தெரியாது. அதனால்தான்
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 03065.
கிரக பாதசாரம்:
சூரியன்: விசாகம்- 1, 2, 3.
செவ்வாய்: ரேவதி- 4.
புதன்: சித்திரை- 3, 4, சுவாதி- 1, 2, 3.
குரு: உத்திராடம்- 1.
சுக்கிரன்: அஸ்தம்- 3.
சனி: பூராடம்- 1.
ராகு: மிருகசீரிடம்- 1.
கேது: கேட்டை- 3.
கிரக மாற்றம்:
இல்லை.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கடகம்.
8-11-2020- சிம்மம்.
11-11-2020- கன்னி.
13-11-2020- துலாம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 11-ல் மறைவு என்றாலும், அவருக்கு வீடு கொடுத்த குரு 9-ல் ஆட்சி! மேலும் 10-க்குடைய சனியுடன் சேர்க்கை! அதனால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. மேலும் சனியோடுகூடிய குரு ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பதால், உங்களுக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும்! அதனால் 2- தனஸ்தானத்திலுள்ள ராகுவால் உண்டாகும் பணப் பற்றாக் குறையையும், பொருளாதாரப் போராட்டங்ளையும் மிகமிக எளிதாகச் சமாளித்து கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளலாம். அதற்குத் துணையாக 5-க்குடைய சூரியன் 7-ல் நீசபங்கம் பெற்று ராசியைப் பார்ப்பதால் மதிப்பு, மரியாதை, கௌரவத்துக்கு எந்த வகையிலும் பாதிப்புக்கு இடமில்லை. "யானை படுத்தாலும் குதிரை மட்டம்' என்றமாதிரி, கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்று சொல்லும்படி உங்களுடைய செல்வாக்கு குறையாது. 5-க்குடைய சூரியன் 7-ல் நீசபங்கம் என்பதோடு, ராசிநாதன் செவ்வாயின் பார்வையைப் பெறுவதும் மற்றொரு காரணம். 5-ஆமிடத்தை குரு 9-ல் ஆட்சிபெற்றுப் பார்ப்பதும் இன்னொரு காரணம். அதாவது ஒரு திரிகோணாதிபதி இன்னொரு திரிகோண ஸ்தானத்தைப் பார்ப்பது சிறப்பு. திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம்; கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம். 9, 10-குடைய குரு, சனி சேர்க்கைப் பலனாக, நினைப்பது உங்கள் கடமை; நிறைவேற்றுவது இறைவன் உரிமை! "எண்ணிய எண்ணியாங்கு எய்து- எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்ற திருக்குறளுக்குப் பொருத்தமாக உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் முழுமையாக ஈடேறும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் (5-ல்) நீசம். என்றாலும், அவருக்கு வீடுகொடுத்த புதன், சுக்கிரன் வீட்டில் பரிவர்த்தனை என்பதால் சுக்கிரனுக்கு நீசபங்கராஜ யோகம் அமைகிறது. இன்னொரு வகையில் சுக்கிரன் வீட்டில் (துலா ராசியில்) சூரியனும் நீசம் என்பதாலும் சுக்கிரனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. எனவே உங்களுடைய செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, செயல்திறன், கடமை காரியங்கள் எதுவும் சோடை போகாது. சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும்- செயல்வேகம்- புயல்வேகமாகப் பலன் தரும். அதனால் அட்டமச்சனி நடந்தாலும் கெட்ட பலனுக்கு இடமில்லை. பொங்குசனியாகப் பொலிவைத்தரும். சிலருக்கு இடப்பெயர்ச்சி அல்லது ஊர்மாற்றம், குடியிருப்பு மாற்றம், பதவி உயர்வு போன்ற மாற்றம் ஏற்றம் தரும்! அதேசமயம் ஜென்ம ராகுவும் சப்தம கேதுவும் உங்களுக்கு நடக்குமா? நடக்காதா? நம்மால் முடியுமா? முடியாதா என்ற சந்தேகத்தையும் தன்னம் பிக்கைக் குறைவையும் உண்டாக்கலாம். ஜெய வீர அனுமன் சீதையைத் தேடி இலங்கைக்குப் புறப் படும்போது, கடலைத் தாண்டிப் போவது எப்படியென்று தவித்து நின்றாராம். ஜாம்பவான் என்ற கரடிதான் அவர் ஆற்றலை அவருக்கு எடுத்து உணர்த்தி, ஊக்கம் கொடுத்தாராம். அதுமாதிரி உங்கள் ஆற்றலையும் திறமை யையும் உங்களுக்கு உணர்த்தி, உங்களை செயல்பட வைக்குமளவு மனைவி அல்லது உற்றவர்களும் மற்றவர்களும் உதவிபுரிவார்கள். விளக்குத் திரி கருகி அணையும் நிலையில் தூண்டுகோல் துணைபுரிவதுபோல, உங்களுக்கும் ஒரு தூண்டுகோல் அமையும். யானைக்கு தன் பலம் தெரியாது. அதனால்தான் மாவுத்தனுக்குக் கட்டுப்பட்டு "சலாம்' போடுகிறது. மதம்கொண்ட யானை யாருக்கும் கட்டுப்படாது. அதுமாதிரி நீங்களும். அட்டமச்சனி குருவோடு கூடியதால் உங்கள் பலத்தை மற்றவர்கள் உணர்த்தலாம்! அதைத்தான் பாரதியார், "காதல் அரம்பையர் கடைக்கண் காட்டிவிட்டால் மலையும் கடுகு என சிறு துரும்பாகும் என்று பாடினார்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் திரிகோணத்தில்- துலா ராசியில் 3-க்குடைய சூரியனோடு சம்பந்தம்! சூரியன் தைரியஸ்தானத்துக்கு அதிபதி. அத்துடன் சகோதர ஸ்தானாதி பதி, நண்பர்கள் ஸ்தானாதிபதி! மேலும் சகோதரகாரகனும் சத்ரு ஸ்தானாதிபதிபதியுமான செவ்வாய் 10-ல் கேந்திரம் பெற்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். மேலும் அவர் 11-ஆமிடம் ஜெய ஸ்தானாதிபதி- வெற்றி ஸ்தானாதிபதி! தவிரவும் செவ்வாய்க்கு வீடுகொடுத்த குருவும் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பது கெஜகேசரி யோகம் எனப்படும். அதாவது கெஜம் என்றால் யானை; கேசரி என்றால் சிங்கம். ஒரு சிங்கத்தைப் பார்த்த யானைக்கூட்டம் பயந்து ஒதுங்கும் என்பார்கள். அதுபோல எதிரிகள் உங்களைப் பார்த்து உதிரி களாகிவிடுவார்கள். அதற்கு முக்கியமான காரணம், 9-க்குடைய சனியும் 10-க்குடைய குருவும் இணைந்து ராசியைப் பார்ப்பதே! 9- என்பது திரிகோணம்; 10- என்பது கேந்திரம்! கேந்திரம் என்பது மனித முயற்சி; திரிகோணம் என்பது தெய்வத்தின் கருணை, இறையருள்! நினைப்பது மனிதனின் கடமை! நிறைவேற்றுவது தெய்வத்தின் உரிமை! அதனால் தான் திரிகோணத்தை லட்சுமி ஸ்தானம் என்றும், கேந்திரத்தை விஷ்ணு ஸ்தானம் என்றும் கூறினார்கள்! ஆக, முயற்சியும் வேண்டும். அது வெற்றியடைய தெய்வ கடாட்சமும் வேண்டும்!
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 6-ல் குருவும் சனியும் மறைகிறார்கள். அதாவது ஒரு திரிகோணாதிபதியும், கேந்திராதிபதியும் மறைகிறார்கள். அதனால் உங்கள் முயற்சிகள் எல்லாம் விழலுக்கிறைத்த நீராக வீணாகப் போய்விடுமா என்றால், நிச்சயம் வீண்போகாது. 10-க்குடைய செவ்வாய் 9-ல் அமர்ந்திருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி 10- என்பது மனித முயற்சி; 9- என்பது இறையருள். மனிதன் நினைக்கிறான்; இறைவன் ஈடேற்றுகிறான். அதை வள்ளுவர், "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்' என்றார். தெய்வத்தால் ஆகாதது என்று எதுவுமே இல்லை. "முயற்சி திருவினையாக்கும்' என்றார்கள். ஹரிஹரன்- புக்கன் என்ற இருவர் (பிரம்மச்சாரிகள்) தீராத வறுமையில் வாடினார்கள். மிகக் கடுமையாகத் தவம், ஹோமம் செய்தார்கள். ஆதிலட்சுமி தோன்றி, "உங்கள் வினைப்பயன்படி இந்த ஜென்மத்தில் நீங்கள் செல்வந்தராக வாய்ப்பில்லை' என்றாள். "அப்படியானால் எங்கள் தவம், ஜபம் எல்லாம் வீணா' என்றார் கள். "வீண்போகாது. அடுத்த ஜென்மத்தில் பலனைத் தரும்' என்று பதில் கிடைத்தது. அவர்கள் குருவிடம் சென்று விளக்கம் கேட்டார்கள். அதற்கு அவர், "அடுத்த ஜென்மம் என்றால் நீங்கள் மரணமடைந்து மறுபிறவி எடுக்க வேண்டுமென்று அர்த்தமல்ல. சந்நியாசம் ஏற்றுக்கொண்டாலே மறு ஜென்மம் எடுத்ததற்கு சமம்தான்' என்றார். உடனே அவர்கள் சந்நியாசம் பெற்றார்கள். சந்நியாசம் வாங்கியதும் செல்வத்தின்மீதிருந்த பற்று அவர்களுக்கு நீங்கிவிட்டது. "எங்களுக்கு செல்வம் வேண்டாம்' என்றார்கள். மகாலட்சுமி, "அது சாத்தியமில்லை. நீங்கள் செய்த தவப்பயன் உங்களுக்குக் கிடைத்தாக வேண்டும். என்னை கடனாளியாக்கி விடாதீர்கள்' என்று குபேரனுக்குக் கட்டளை பிறப்பிக்க, அவனும் சங்கநிதி, பதுமநிதி எல்லாவற்றையும் கொட்டிக் குவித்துவிட்டான். அவர்கள் தங்கள் சீடர்களைக்கொண்டு அந்த செல்வத்தைப் பயன்படுத்தி விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்து விட்டார்கள்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 3-ல் நீசம் பெறுகிறார். அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் கன்னியில் நீசம் பெறுகிறார். (கன்னி புதன் வீடு). சுக்கிரனும் புதனும் பரிவர்த்தனை. எனவே ராசிநாதன் சூரியனும், சூரியனுக்கு வீடு கொடுத்த சுக்கிரனும் நீசபங்க ராஜயோகம் அடைகிறார்கள். மேலும் குரு 5-ல் ஆட்சிபெற்று ராசியைப் பார்க்கிறார். குரு 8-க்கும் உடையவர். எட்டாம் இடமென்பது ஏமாற்றம், இழப்பு, நஷ்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்டாலும், 8-க்குடையவர் திரிகோணம் பெற்றால் அது அதிர்ஷ்ட ஸ்தானமாகிவிடும். எனவே, சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும் யோகமும் வரக்கூடும். காமராஜர் முதல்வராக இருந்த காலம், விருத்தாசலத்தைச் சேர்ந்த பூவராகன் என்பவருக்கு அவர் சார்ந்த சமூகத்திற்காக ஒரு மந்திரி பதவியை ஒதுக்கி, விவரம் சொல்லாமல் உடனடியாக வருமாறு அவருக்கு தகவல் அனுப்பினார். அவர் இரவோடு இரவாக லாரியில் பயணம் செய்து காலையில் காமராஜர் வீட்டுமுன்பு நின்றார். அவருக்கு மந்திரி பதவியை காமராஜர் வழங்கினார். அதுதான் அதிர்ஷ்டம் வந்து இரவிலும் கதவைத் தட்டும் என்பது. ஆக, அது இஷ்டமாக வருவது அதிர்ஷ்டம். 2, 8, 9, 11 ஆகிய ஆதிபத்தியங்கள் இணைந்தால் அதிர்ஷ்டமும் யோகமும் உண்டாகும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் இரண்டில் சுக்கிரன் வீட்டில் இருக்க, அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் புதன் வீட்டில் இருக்க, இருவரும் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார் கள். ஜாதகத்தில் நூற்றுக்கணக்கான யோகங்கள் இருந்தாலும் பரிவர்த்தனை யோகத்திற்கு ஒரு சிறப்புண்டு. அதேபோல தர்மகர்மாதிபதி யோகத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. கன்னி ராசியை 5, 6-க்குடைய சனி 4-ல் இருந்து பார்க்கிறார். வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, பிளாட் வாங்குவது போன்ற வகையில் சுபச் செலவுகள் செய்ய நேரும். மனதில் வகுத்த திட்டங்களை சிரமமில்லாமல் நிறைவேற்றலாம். சில திட்டங்களை செயல்படுத்த, பணப்பற்றாக்குறையை சமாளிக்க வெளியில் கடன் வாங்க நேரும். பழைய வாகனங்களைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்க நேரும். 7-க்குடைய குரு, சனியுடன் கூடி 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் சிலர் மனைவி, பிள்ளைகளுடன் கூடி புதிய தொழில் தொடங்கலாம். சொத்து சுகங்களை ஏற்படுத்தலாம். ஏற்கெனவே செய்துவரும் தொழில் துறையில் மனைவி, மக்களை பங்குதாரராக சேர்க்கலாம். லிமிடெட் கன்சர்ன் அல்லது பிரைவேட் லிமிடெட் கன்சர்ன் என்று, வருமானவரி திட்டத்திலிருந்து தப்பிக்க சில திட்டங்களை செயல்படுத்தலாம்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 12-ல் புதன் வீட்டில் இருக்க, அவருக்கு வீடுகொடுத்த புதன் துலா ராசியில் பரிவர்த்தனை. புதன் 9, 12-க்குடையவர். தகப்பனார் வகையில் சுபச்செலவுகள் உருவாகும். சொத்துப் பரிமாற்றங்கள் ஏற்படவும் இடமுண்டு. சிலர் பூர்வீகச் சொத்தின்பேரில் கடன்பெற்று சீர்திருத்தங்கள் செய்யலாம். வருமானத்தை ஏற்படுத்தலாம். பூர்வீக இடத்தில் காம்ப்ளக்ஸ் கட்டடம் கட்டி வாடகை வருமானத்திற்கு ஏற்பாடு செய்யலாம். அதற்குரிய வழிமுறைகள், வங்கி நடைமுறைகளை செயல்படுத்தலாம். உடல் ஆரோக்கியத்தில் தெளிவான நிலை ஏற்படும். பொருளாதாரத்தில் சரளமான பணப்புழக்கம் காணப்படும். 2-ல் கேது இருப்பதால் தவிர்க்கமுடியாத வீண் செலவுகளும் ஏற்படும். "ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும்' என்பார்கள். ஒரு காலத்தில் அமெரிக்காவில் பொருளாதார திட்டத்தை சமன்படுத்த, விளைந்த கோதுமைகளை எல்லாம் கடலில் கொட்டியதாகக் கூறுவார்கள். (உபரியானவை). குடும்பத்தில் சுபமங்களச் செலவுகள் உருவாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் வகுத்த திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் வகையில் நல்லவை நடக்கும். சில எதிர்பாராத பயணங்களால் வாழ்க்கை முன்னேற்றம், தொழில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்குப் பிள்ளையார் சுழி போடலாம். தொழிலதிபர்கள் வருமான வரி இலாகாவிலிருந்து தப்பிக்க சில புத்தி சாலித்தனமான செயல்களைச் செய்வார்கள். கோவில் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
2020- டிசம்பரில் விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனி முழுமையாக விலகுகிறது. அதுவரை எல்லாவகையிலும் எதிர்நீச்சல் போடத்தான் வேண்டும். ராகு- கேது, குரு போன்ற கிரகங்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பதால், ஏழரைச்சனியை மிக எளிதாகக் கடந்துவிடலாம். விருச்சிக ராசிநாதன் செவ்வாய் குருவின் வீடான மீனத் தில் வர்க்கோத்தமமாக இருக்கிறார். (ரேவதி 4-ல் செவ்வாய்). ரேவதி புதனின் நட்சத்திரம். புதன் 8, 11-க்குடையவர் 12-ல் இருக்கிறார். செவ்வாயின் பார்வையையும் பெறுகிறார். எனவே, 12-ல் இருக்கும் புதன் செலவுகளை ஏற்படுத்தினாலும், எல்லாம் சுபச்செலவாக அமையும். பூமி, வீடு, வாகனம், புதிய தொழில் வாய்ப்புகளில் முதலீடு செய்யலாம். அரசு அல்லது தனியார்த் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு தவிர்க்கமுடியாத இடப்பெயர்ச்சி உண்டாகும். ஜாதகரீதியாக யோகமான தசாபுக்திகள் நடந்தால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நன்மைகள் நடக்கும். 6, 8, 12-க்குடைய தசாபுக்திகள் நடந்தால் பதவி இறக்கம், தேவையற்ற இடப்பெயர்ச்சி, வீண் விரயம் போன்றவை ஏற்படலாம். 7-க்குடைய சுக்கிரன் 11-ல் நீசபங்கம் பெறுவதால், (சுக்கிரன்- புதன் பரிவர்த்தனை) பெண்களுக்கு கணவர் வகையிலும், ஆண்களுக்கு மனைவி வகையிலும் எதிர்பாராத தனலாபம், சொத்துச் சேர்க்கை, பங்கு பாகங்கள் கிடைக்கும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஏழரைச்சனி நடைபெற்றாலும் வீடு கொடுத்த குருவோடு கூடியிருப்பதால், ஜென்மச்சனி உங்களுக்கு பொங்குசனியாக மாறி நல்லது செய்வார். சனி பகவான் 3-ஆமிடம், 7-ஆமிடம், 10-ஆமிடங்களைப் பார்ப்பதால் உடன்பிறந்தவர்கள் வகையில் முன்னேற் றம் உண்டாகும். உதவி ஒத்தாசைகள் அமையும். கணவன் அல்லது மனைவி வழியில் அன்பும் ஆனந்தமும் பெருகும். தொழில்துறையாளர்கள் தொழில்வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்தலாம். நடந்துவரும் தொழில்களுக்குக் கிளைகளை உருவாக்கி விரிவுபடுத்தலாம். வயதான தொழிலதிபர்கள் வாரிசுதாரர்களுக்கு பங்கு பிரித்துக் கொடுக்கலாம். கூட்டுத்தொழில் புரிபவர்கள் கூட்டாளிகளை நீக்கிவிட்டு தனித்தொழில் தொடங்கலாம். அரசுப் பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வு கருதி இடமாற்றங்களை செயல்படுத்தலாம். வாடகை வீட்டில் குடியிருப்போர் சொந்தவீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்யலாம். ஏற்கெனவே வெளிநாட்டில் இருப்போர் மேலும் புதிய வீடுகள் வாங்கி வாடகை வருமானத்தைப் பெருக்கலாம். 4-ல் செவ்வாய் கேந்திரம் பெறுவதால், உடன்பிறந்தவர்கள் வகையில் அன்பும் நட்பும் பெருகும். மனதில் வகுத்த திட்டங்கள் செயல் வடிவாகி நிறைவை ஏற்படுத்தும். பிள்ளைகள் வகையில் நல்லவை நடக்கும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி பன்னிரண்டில் மறைந்தாலும் குருவோடு கூடியதால் மறைவு தோஷம் விலகும். குருவே மறைவுதானே. டபுள் மைனஸ்- ஒரு ப்ளஸ் என்பதுபோல உங்களுக்கு நற்பலனை எதிர்பார்க்கலாம். எதிர்மறை- உடன்மறை என்று உண்டு. இதை எப்படி விளக்குவதென்றால், "ஐயமிட்டு உண்' என்று பாடிய அவ்வையார், "ஏற்பது இகழ்ச்சி' என்றும் பாடியிருக்கிறார். ஐயம் என்றால் தர்மம் செய்வது. தர்மம் செய்துதான் சாப்பிடவேண்டும் என்றால், ஏற்பது இகழ்ச்சி என்பது எப்படிப் பொருந்தும்? இதுதான் எதிர்மறை- உடன்மறை என்பது. வாழ்க்கையின் அனுபவங்கள் எதிர்மறையாகவும் அமையும்; உடன்மறையாகவும் அமையும். சனி 12-ல் மறைந்தாலும் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் செலவும் இருக்கும்; வரவும் இருக்கும். அதாவது இறைக்கிற கிணறுதான் ஊறும். வருமானத்திற்குக் குறைவிருக்காது. அது ஏனென்றால், தனகாரகன் குருவோடு சேர்ந்த சனி 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். 6-ஆமிடத்தையும் பார்க்கிறார். 9-ஆமிடத்தையும் பார்க்கிறார். தசாபுக்திகள் பாதகமாக இருப்பவர்கள் பூர்வீக சொத்துப் பிரச்சினைகளில் வில்லங்கம், விவகாரங்களை சந்திப்பதோடு, விரயங்களையும் சந்திக்க நேரும். பங்கு பாகங்களில் குழப்பம் உண்டாகும் அல்லது பஞ்சாயத்து ஏற்படும். சிலர் நீதிமன்ற விவகாரங்களையும் சந்திக்க நேரும். நல்ல தசாபுக்திகள் நடந்தால் சொத்து சுகங்களுக்கு ஆசைப்படாமல் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்துப் போவார்கள்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்றா லும் ராசியைப் பார்க்கிறார். குரு 11-க்குடையவர். பொதுவாக கும்ப ராசிக்காரர்கள் அனுதாபத்துக்குரியவர்கள் என்பது ஒரு கணக்கு. ஏனென்றால் ராசிநாதன் விரயாதிபத்தியமும் பெறுகிறார். எழுதி எழுதி சரியில்லை என்று அடித்துவிட்டு, மீண்டும் மீண்டும் எழுதுகிறவர்களை கும்ப ராசிக்கு உவமையாகச் சொல்லலாம். ஆக்குவதும் அவர்கள்தான்; அழிப்பதும் அவர்கள்தான். அந்தக் காலத்தில் கலைஞர் வசனம் எழுதிய "பராசக்தி' படத்தில், குழந்தையைக் கொன்றதாக ஜூனியர் ரஞ்சனிமேல் வழக்கு விசாரணை நடக்கும். அப்போது, "நான் பெற்றேன்; நான் கொன்றேன் அது எப்படி குற்றமாகும்' என்று வாதாடுவார். அதற்கு நீதிபதி, "ஆக்கப்பட்ட பொருள் அனைத்தும் அரசாங்கத்திற்கு சொந்தம்' என்று விளக்கம் தருவார். இப்போதும் பூமியில் புதைந்து கிடக்கும் பொருளை எடுத்தால் அது அரசாங்கத்திற்குச் சொந்தம். சுவற்றில் இருக்கும் பொருளை எடுத்தால் வீட்டு சொந்தக்காரருக்கு சொந்தம். இதுதான் சட்டத்தின் வினோதம். சட்டம் என்பது வேறு; தர்மம் என்பது வேறு. ஒரு மனிதனை இன்னொருவன் கொலை செய்தால் குற்றம். சட்டம் அவனைத் தண்டிக்கும். ஆனால் தூக்குதண்டனை பெற்ற கைதியை அரசு ஊழியர் தூக்கிலிட்டால் அது சட்ட விரோதமாகாது. அதுபோல் போரில் எதிரிகளைக் கொன்று குவித்தால் அவனுக்கு வீரப்பதக்கம் கிடைக்கும். இவை உதாரணங்கள். ராசிநாதன் ராசியைப் பார்ப்பதும், அவரோடு குரு சேர்ந்திருப்பதும் வெற்றியை ஏற்படுத்தும் அமைப்பாகும். ஆகவே நீங்கள் எதிலும் வெற்றிநடை போடலாம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 10-ல் இருக்கி றார். சனியுடன் சம்பந்தம். ஜென்ம ராசியில் 2, 9-க்குடைய செவ்வாய் பலமாக இருக்கி றார். உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். வளர்ச்சி உண்டாகும். தளர்ச்சி விலகும். எடுத்த காரியங்களில் வெற்றியும் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். திறமைக்கேற்ற பெருமைகள் ஏற்படும். வழக்குகள் வெற்றியடையும். குலதெய்வ வழிபாடு மனதிற்கு இதமளிக்கும். சிலர் குலதெய்வத் திருப்பணிகளில் ஈடுபடலாம். வசூல் செய்து கும்பாபிஷேகம் காணலாம். இஷ்டதெய்வ வழிபாடு உங்களுக்கு வழிகாட்டியாக விளங்கும். யோகாசனம், முத்திரைப் பயிற்சி போன்ற வகையில் முழு கவனம் செலுத்திப் பயிற்சி பெறலாம். அல்லது ஜோதிடம், வைத்தியம், மாந்திரீகம் போன்ற வகையிலும் பயிற்சி பெறலாம். ஜாதகத்தில் சுக்கிரன் அல்லது ஏழுக்குடையவன் பலம் குறைந்தால் மேற்கண்ட துறைகளில் வியாபார நோக்கோடு செயல்பட்டுப் பணம் சம்பாதிக்கலாம். குரு அல்லது திரிகோணாதிபதிகள் (5, 9-க்குடையவர்கள்) பலம்பெற்றால் தன்னல மற்ற பொதுநலச் சேவை, தொண்டு புரியலாம். எல்லா துறையிலும் ஆன்மார்த்தம் என்றும் வருமான சம்பாத்தியம் என்றும் இரண்டு பிரிவுகள் உண்டு. அது அவரவர் ஜாதகத்தைப் பொருத்து செயல்படும். பத்தாமிடத்துச் சனி ஆரம்பத்தில் சோதனை, வேதனை, ஏமாற்றம், இழப்பு, நஷ்டங்களைத் தந்தபோதிலும், சனிப்பெயர்ச்சிக்குப்பிறகு (2020- டிசம்பர்) சாதனை, வெற்றி, லாபம், அனுகூலம், மனத் திருப்தி ஆகிய நற்பலன்களைத் தரும்