இந்த வார ராசிபலன் 7-3-2021 முதல் 13-3-2021 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-7-3-2021-13-3-2021

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: பூரட்டாதி- 3.

செவ்வாய்: ரோகிணி- 1.

புதன்: அவிட்டம்- 3, 4,

சதயம்- 1.

குரு: அவிட்டம்- 1.

சுக்கிரன்: சதயம்- 4.

பூரட்டாதி- 1, 2.

சனி: உத்திராடம்- 4.

ராகு: ரோகிணி- 3.

கேது: கேட்டை- 1.

கிரக மாற்றம்:

7-3-2021- கும்ப புதன்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- தனுசு.

8-3-2021- மகரம்.

11-3-2021- கும்பம்.

13-3-2021- மீனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 2-ல் ராகுவோடு சேர்ந்து கேதுவின் பார்வையைப் பெறுகிறார். 2-ஆமிடம் வாக்கு, தனம், குடும்பம், நேத்ர ஸ்தானம். அங்கு ராகு- கேது சம்பந்தம் ஏற்படுவதும், அந்த வீட்டுக்குடைய சுக்கிரன் மேஷ ராசிக்கு 11-ல் பாதக ஸ்தானத்தில் இருப்பதும் குற்றம். எனவே, குடும்பத்தில் குழப்பம், பிரச்சினைகள், பொருளாதாரத்தில் நெருக்கடி, பார்வையில் குறைபாடுகள் போன்ற பலன்கள் ஏற்பட இடமுண்டு. என்றாலும் பாக்கியாதிபதி குரு 10-ல் நின்று தர்மகர்மாதிபதி யோகமாகி, 2-ஆமிடத்தையும் அங்குள்ள ராகு, செவ்வாயையும் பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. நெல்லிக்கனி முதலில் துவர்ப்புச் சுவையாக இருந்தாலும் உமிழ்நீர் பட்ட வுடன் இனிப்புச் சுவையாக மாறுவதுபோல் தொடக்கத்தில் பிரச்சினையாக இருப்பவை எல்லாம் முடிவில் சாதகமாகத் தீர்வாகும். மேஷ ராசிக்கு 3, 6-க்குடைய புதன் 10-ல் இருப்பது வேலை, தொழில், உத்தியோகம் இவற்றில் பிரச்சினைகளை உருவாக்கினா லும் முடிவில் அவை சுமுகமான முறையில் தீர்வாகும். பொருளாதாரத்தில் சரளமான நிலையோ சேமிப்புக்குக் கீழ் நிலையோ இருந்தாலும் தேவைகள் பூர்த்தியடையும். அதற்குண்டான நிலையில் வருமானம் வரும். அதாவது இறைக்கிற கிணறு ஊறும் என்பதுபோல. ஊற்று பெருகிப் பொங்கி வழியாது. இறைக்க இறைக்க ஊறும் என்பதுபோல, செலவழிக்க செலவழிக்க வரவும் வந்துகொண்டு இருக்கும். ஆடம்பரச் செலவல்ல- அத்தியாவசியச் செலவு!

rasipalan

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 10-ல் பலம் பெறுகிறார். அவருடன் 4-க்குடைய சூரியன் சம்பந்தம். 8, 11-க்குடைய குரு 9-ல் திரிகோணம் பெற்று ராசியைப் பார்க்கி றார். குரு நீச ராசியில் இருந்தாலும் அவருக்கு வீடுகொடுத்த சனி ஆட்சி என்பதால் நீசபங்க ராஜயோகம் ஏற்படும். மேலும் ரிஷப ராசிக்கு குரு கெட்ட ஆதிபத்தியம் பெற்றவர் என்பதால், "கெட்டவன் கெட்டிடில் கிட்டும் ராஜயோகம்' என்பதுபோலவும், டபுள் மைனஸ் ஒரு ப்ளஸ் என்பது போலவும் நீச குருவால் நன்மைகளே உருவாகும். பல வருடங்களுக்குமுன்பு எம்.ஜி.ஆர் ஒரு தேர்தலில் உடம்பெல்லாம் கட்டுப் போட்ட நிலையில் (உடல் நலக் குறைவால்) போட்டி யிட்டு முழு வெற்றிபெற்றார். அதே போல இன்னொரு தேர்தலில் இந்திரா காந்தி மறைவிற்குபின் அவர் போஸ்டர் ஒட்டி காங்கிரஸ்காரர்கள் பெரும் வெற்றிபெற்றார்கள். இதுதான் அனுதாப அலை என்பது! அதுபோல செவ்வாயும் ராகுவும் ரிஷப ராசியில் இருப்பது பாதிப்பு என்றாலும், நீசபங்க ராஜயோகம் பெற்ற குருவின் பார்வையால் உங்களின் வெற்றிக்கும், சித்திக்கும், காரிய பூர்த்திக்கும் அதுவே அனுதாப அலையாக மாறி துணை செய்யும். இதுதான் நீசபங்கம் ராஜயோகம் என்பது! பொருளாதார அடிப்படையிலும் தொழில், வேலை, உத்தியோக வகையிலும் எல்லாக் குறைகளையும் சமாளித்து நிறைவாக்கிவிடலாம். தாய்- தந்தையருடன் சற்று அனுசரித்துச் செல்வது நல்லது!

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் ம

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: பூரட்டாதி- 3.

செவ்வாய்: ரோகிணி- 1.

புதன்: அவிட்டம்- 3, 4,

சதயம்- 1.

குரு: அவிட்டம்- 1.

சுக்கிரன்: சதயம்- 4.

பூரட்டாதி- 1, 2.

சனி: உத்திராடம்- 4.

ராகு: ரோகிணி- 3.

கேது: கேட்டை- 1.

கிரக மாற்றம்:

7-3-2021- கும்ப புதன்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- தனுசு.

8-3-2021- மகரம்.

11-3-2021- கும்பம்.

13-3-2021- மீனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 2-ல் ராகுவோடு சேர்ந்து கேதுவின் பார்வையைப் பெறுகிறார். 2-ஆமிடம் வாக்கு, தனம், குடும்பம், நேத்ர ஸ்தானம். அங்கு ராகு- கேது சம்பந்தம் ஏற்படுவதும், அந்த வீட்டுக்குடைய சுக்கிரன் மேஷ ராசிக்கு 11-ல் பாதக ஸ்தானத்தில் இருப்பதும் குற்றம். எனவே, குடும்பத்தில் குழப்பம், பிரச்சினைகள், பொருளாதாரத்தில் நெருக்கடி, பார்வையில் குறைபாடுகள் போன்ற பலன்கள் ஏற்பட இடமுண்டு. என்றாலும் பாக்கியாதிபதி குரு 10-ல் நின்று தர்மகர்மாதிபதி யோகமாகி, 2-ஆமிடத்தையும் அங்குள்ள ராகு, செவ்வாயையும் பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. நெல்லிக்கனி முதலில் துவர்ப்புச் சுவையாக இருந்தாலும் உமிழ்நீர் பட்ட வுடன் இனிப்புச் சுவையாக மாறுவதுபோல் தொடக்கத்தில் பிரச்சினையாக இருப்பவை எல்லாம் முடிவில் சாதகமாகத் தீர்வாகும். மேஷ ராசிக்கு 3, 6-க்குடைய புதன் 10-ல் இருப்பது வேலை, தொழில், உத்தியோகம் இவற்றில் பிரச்சினைகளை உருவாக்கினா லும் முடிவில் அவை சுமுகமான முறையில் தீர்வாகும். பொருளாதாரத்தில் சரளமான நிலையோ சேமிப்புக்குக் கீழ் நிலையோ இருந்தாலும் தேவைகள் பூர்த்தியடையும். அதற்குண்டான நிலையில் வருமானம் வரும். அதாவது இறைக்கிற கிணறு ஊறும் என்பதுபோல. ஊற்று பெருகிப் பொங்கி வழியாது. இறைக்க இறைக்க ஊறும் என்பதுபோல, செலவழிக்க செலவழிக்க வரவும் வந்துகொண்டு இருக்கும். ஆடம்பரச் செலவல்ல- அத்தியாவசியச் செலவு!

rasipalan

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 10-ல் பலம் பெறுகிறார். அவருடன் 4-க்குடைய சூரியன் சம்பந்தம். 8, 11-க்குடைய குரு 9-ல் திரிகோணம் பெற்று ராசியைப் பார்க்கி றார். குரு நீச ராசியில் இருந்தாலும் அவருக்கு வீடுகொடுத்த சனி ஆட்சி என்பதால் நீசபங்க ராஜயோகம் ஏற்படும். மேலும் ரிஷப ராசிக்கு குரு கெட்ட ஆதிபத்தியம் பெற்றவர் என்பதால், "கெட்டவன் கெட்டிடில் கிட்டும் ராஜயோகம்' என்பதுபோலவும், டபுள் மைனஸ் ஒரு ப்ளஸ் என்பது போலவும் நீச குருவால் நன்மைகளே உருவாகும். பல வருடங்களுக்குமுன்பு எம்.ஜி.ஆர் ஒரு தேர்தலில் உடம்பெல்லாம் கட்டுப் போட்ட நிலையில் (உடல் நலக் குறைவால்) போட்டி யிட்டு முழு வெற்றிபெற்றார். அதே போல இன்னொரு தேர்தலில் இந்திரா காந்தி மறைவிற்குபின் அவர் போஸ்டர் ஒட்டி காங்கிரஸ்காரர்கள் பெரும் வெற்றிபெற்றார்கள். இதுதான் அனுதாப அலை என்பது! அதுபோல செவ்வாயும் ராகுவும் ரிஷப ராசியில் இருப்பது பாதிப்பு என்றாலும், நீசபங்க ராஜயோகம் பெற்ற குருவின் பார்வையால் உங்களின் வெற்றிக்கும், சித்திக்கும், காரிய பூர்த்திக்கும் அதுவே அனுதாப அலையாக மாறி துணை செய்யும். இதுதான் நீசபங்கம் ராஜயோகம் என்பது! பொருளாதார அடிப்படையிலும் தொழில், வேலை, உத்தியோக வகையிலும் எல்லாக் குறைகளையும் சமாளித்து நிறைவாக்கிவிடலாம். தாய்- தந்தையருடன் சற்று அனுசரித்துச் செல்வது நல்லது!

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 8-ல் மறைந் தாலும், மறைந்த புதன் நிறைந்த தனம் என்பதுபோல- 2-ஆமிடத் தைப் பார்ப்பதால் சரளமான பொருளாதாரம் ஏற்படும். மேலும் 9-க்குடைய சனியும் 10-க்குடைய குருவும் ராசிநாதனான புதனுடன் சம்பந்தப்படுவதால் தர்ம கர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. அது உங்களுக்கு வழித் துணை யாகவும் வாழ்க்கைத் துணை யாகவும் அமைந்து வளமான நலத்தை உருவாக்கும். ராசிக்கு 9-ல் சூரியன், சுக்கிரன் சேர்க்கை. தகப்பனார் அல்லது பிதுரார்ஜித வர்க்கத்தில் சங்கடங் களையும் சஞ்சலங்களையும் விரயங்களையும் வேதனைகளையும் சந்திக்கநேரும். ஜாதக ரீதியாக நடக்கும் தசாபுக்திகளை அனுசரித் துத் தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்ளவும். தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போனமாதிரி எளிமையாகிவிடும். 8-ல் புதன், குரு, சனி சேர்க்கையும், இவர்களின் பார்வை 2-ஆமிடத்துக்குக் கிடைப்பதாலும் எதிர்பாராத தனப்ராப்திக்கு இடமுண்டு. அவினாசியில் முதலை உண்ட பாலகன் அவினாசியப்பர் திருவருளால் மீண்டும் வெளிவந்ததுபோல, வராது என்று நினைத்த பணமெல்லாம் வந்துசேரும். யானையின் வாயில் போன கரும்பு திரும்பக் கிடைத்தது போல உங்களுக்கு யோகம் உண்டாகும். கும்பகோணம் அருகில் திருச்சேறை வழி குடவாசல் சேங்காலிபுரத்தில் சென்று வழிபட்டால் இழந்த பணம், வரவேண்டிய பணம் திரும்பக் கிடைக்கும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

"பாட படிக்க பரதவியம் கற்க, தேடசுகிக்க செலவழிக்க கற்கடகம் சிம்மம் கன்னிக்கல்லாது மற்கிடமேது மற்றில்' என்பது ஜோதிடப் பாடல். பன்னிரண்டு ராசிகளிலும் கடகம் சர ராசி. சிம்மம் ஸ்திர ராசி. கன்னி உபய ராசி. இந்த மூன்று ராசிகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. மற்ற ராசிகளிலும் இந்த மூன்று பிரிவு இருந்தாலும் கடகத்தை மட்டும் ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும்? பிரம்மா பூவுலகைப் படைக்கும்போது கடக லக்னம் உதயமானதாம். அத்துடன் குருவின் உச்ச ராசியாகும். சூரியனுக்கு சிம்மம் ஒரே ராசி. கன்னி புதனுக்கு ஆட்சி உச்ச ராசி. எனவேதான் இந்த மூன்று ராசிகளும் முக்கியத்துவம் பெற்றன. 9-க்குடைய குரு 10-க்குடைய செவ்வாயைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். ஆகவே, உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் செயல்வடிவம் பெறுவதற்கு குருவருளும் திருவருளும் துணைபுரியும். மனிதனின் எண்ணங்கள் ஈடேறுவதற்கு காலமும் கடவுளும் அருள்புரியவேண்டும். அது தர்மகர்மாதிபதி யோகமுடைய ஜாதகங் களுக்கு மிக எளிதாக அமையும். 9-ஆமிடம் குருவருள் ஸ்தானம். 10-ஆமிடம் திருவருள் ஸ்தானம். சூரியனும் சுக்கிரனும் 8-ல் மறைந் தாலும் குரு, சனி பார்வை ராசிக்குக் கிடைப்பதால் ஏற்கெனவே கூறியதுபோல் திட்டங்கள் கைகூடும். 11-ஆமிடம் வெற்றி- ஜெய ஸ்தானம். அங்கு செவ்வாய், ராகு நிற்பதும், பாக்கியாதிபதி பார்ப்பதும் உங்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் எளிதாக நிறைவேறும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். அவருடன் 3, 10-க்குடைய சுக்கிரன் சேர்க்கை. உங்களின் வெற்றிக்கு மனைவி ஒரு காரணமாக அமைவார். உடன்பிறப்புகளும் ஒரு காரண மாக அமைவார்கள். அதனால்தான் தாய்க்குப் பின் தாரம் என்றார்கள். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்றும் சொன்னார்கள். பூர்வபுண்ணிய யோகம் இருந்தால் இந்த இரண்டும் (தாரமும், சகோதரமும்) நல்லபடி அமையும். பூர்வபுண்ணிய பலமில்லை என்றால் தாரம் அவதாரமாகிவிடும். சகோதரம் உடன்பிறந்தே கொல்லும் வியாதியாக மாறிவிடும். அதனால்தான் ஔவையார் "பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை அமையாவிட்டால் கூறாமல் சன்னியாசம் கொள்' என்றார். மனோன்மணியம் என்ற காவியத்தில் "இப்படை தோற்கின் எப்படை வெல்லும். தம்பியுடையான் படைக்கஞ்சான்' என்று சொல்லப்படும். அது போல நல்ல உடன்பிறப்புகள் அமையும். பஞ்ச பாண்டவர்கள்- துரியோதனனோடு சேர்த்து நூறுபேரையும் வென்றார்கள். 4-ல் உள்ள கேது, 10-ல் உள்ள ராகு வாழ்க்கை, தொழில், சுகத்திற்கு கேடு விளைவித்தாலும், 4-க்குடைய செவ்வாய் சம்பந்தம் பெறுவதா லும், குரு பார்ப்பதாலும் நிவர்த்தியுண்டாகும். பூமி, வீடு வாகனம் போன்ற 4-ஆமிடத்து நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். அவருடன் 4, 7-க்குடையவர் கேந்திராதிபதியான குரு சம்பந்தம். கேந்திரம் என்பது முயற்சி ஸ்தானம். எண்ணுவது மனிதன் கடமை. ஈடேற்றுவது இறைவன் கருணை. அதுதான் கேந்திரமும் திரிகோணமும் இணைவதன் பலன். இதைத்தான் குருவருள் திருவருள் என்பார் கள். 8-க்குடைய செவ்வாய் 9-ல் இருப்பதும் ராகு- கேது சம்பந்தம் பெறுவதும் இஷ்ட தெய்வ வழிபாடு அல்லது குலதெய்வ வழிபாடு இவற்றில் பிரச்சினைகளை உருவாக்கும் என்றாலும், குரு பார்வை பெறுவதால் வைராக்கியமும் விடாமுயற்சியும் உங்களுக்கு முழுமையான வெற்றியை ஏற்படுத்தும். பகீரதன் என்னும் மன்னன் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய ஈமக்கிரியை செய்வதற்கு ஆகாய கங்கையை பூமிக்கு வர வழைக்க கடுங்தவம் இருந்தான். அவன் தவவலிமையால் ஆகாயத்திலுள்ள கங்கையை ஈசன் தலையில் தாங்கி இமயமலை வழியாக பூமிக்கு நதியாக ஓடச்செய்தார். பகீரத முயற்சியால் கங்கை பூமிக்கு வந்தமாதிரி உங்கள் முயற்சியும் வெற்றிபெறும். 6-ல் 12-க்குடைய சூரியன், 2, 9-க்குடைய சுக்கிரன் இருப்பதும் முன்னோர் கள்வகையில் வில்லங்கம், விவகாரம் ஏற்பட இடமுண்டு. ஜனன ஜாதகம் பாதகமாக இருந்தால் முறையான பரிகாரம் செய்துகொள்ளவும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிக்கு 2-ல் கேதுவும்- 8-ல் செவ்வாயும் ராகுவும் இருப்பது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். செவ்வாய், ராகுவை குரு பார்ப்பதால் தேவைகள் பூர்த்தியடையும். அளந்துபடி போட்டதுபோல அந்தந்த நேரத்திற்குத் தேவையான அளவு பொருளாதார வசதியை இறைவன் தருவார். ஆக, இருப்புவைத்து எதையும் செலவு செய்யும் அமைப்பு ஏற்படாது. ஒரே பஸ்ஸில் நேர்வழிப் பயணம் போகாமல், பல பஸ்கள் மாறி போகவேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர்வதுபோல உங்கள் தேவைகள் நிறைவேறும்; காரியங்கள் பூர்த்தியடையும். படுத்துக்கொண்டு போர்த்தினால் என்ன போர்த்திக்கொண்டு படுத்தாலென்ன- எப்படியோ தூங்கினால் போதும் என்பதுபோல, எப்படியோ உங்கள் காரியம் நிறைவேறினால் போதும். கொசுக்கடியிலும் மாட்டுக்கொட்டகையில் குறட்டைவிட்டுத் தூங்குவாரும் உண்டு. ஏ.சி. ரூமில் பஞ்சு மெத்தையில் தூக்கம் வராமல் புரண்டுபுரண்டு படுத்திருப்போரும் உண்டு. பாதகாதிபதி சூரியன், ராசிநாதனான சுக்கிரனோடு இணைவதால் தந்தை- பிள்ளை உறவில் சிலருக்கு கசப்புணர்வுகள் தோன்றலாம். குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதைக் கடைப்பிடிப்பதோடு, விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போக மாட்டான் என்று நடந்துகொண்டால் உறவு முறியாது; பகைமை வளராது.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் கேதுவும், 7-ல் செவ்வாய், ராகுவும் இருப்பது, ஆண் களுக்கு களஸ்திர தோஷத் தையும், பெண்களுக்கு மாங்கல்ய தோஷத்தையும் ஏற்படுத்தும் என்றாலும், செவ்வாய் ராசிநாதன் என்பதாலும் நீசபங்க ராஜயோகம் பெற்ற குரு செவ்வாயைப் பார்ப்பதாலும் (7-ஆமிடம்) களஸ்திர தோஷமும் மாங்கல்ய தோஷமும் விலகும். செவ்வாய், ராகு- கேது சம்பந்தம் திருமணத்தில் தடை, தாமதங் களை ஏற்படுத்தும். பெண்கள் என்றால் 27 வயதிற்குமேல், ஆண்களுக்கு 30 வயதுக்குமேல் திருமணம் செயல்படும். முன்னதாக வாய்ப்புவந்தால் பெண்கள் பார்வதி சுயம்வர கலா ஹோமமும், ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும் செய்து கலச அபிஷேகமும் செய்துகொண்டால் நல்ல மணவாழ்க்கை அமையும். 4-ல் சூரியன், சுக்கிரன் இணைந்து 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் ஜாதகரீதியாக யோகமிருந்தால் அரசு வேலைக்கு வாய்ப்புண்டு. அல்லது அரசு மானியம் பெற்று தொழில் செய்யும் யோகமுண்டு. .ஜாதக தசாபுக்திகள் சாதகமாக அமைந்தால் வெளிநாடு சென்று சம்பாதிக் கும் பாக்கியம் உண்டாகும். அல்லது வெளிமாநிலம் போய் வேலை செய்யும் அமைப்பும் உண்டாகலாம். சிலர் தொழில் வகைக்காக கடன் வாங்கலாம். அரசுக் கடன் தனியார்க் கடன் கிடைக்கும். அந்தக் கடனை தொழில் மூலமாக அடைக்கலாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் கடைசிக்கூறு பாதச்சனி நடக்கிறது. 5-க்குடைய செவ்வாய் 6-ல் ராகுவுடன் சேர்க்கை, மறைவு. உங்களது திட்டங்களிலும் செயல்பாடுகளிலும் எண்ணங்களிலும் தேக்கம், தடை, தாமதம் காணப்பட்டாலும், ராசிநாதன் குரு 2-ல் நீபங்க ராஜயோகம் பெற்று செவ்வாய், ராகுவைப் பார்ப்பதால், மேற்கண்டவற்றில் தாமதம் இருந்தாலும் காரியங்கள் நடைபெறாமல் போகாது. அதாவது லேட்டானாலும் லேட்டஸ்ட்டாக நடப்பதுமாதிரி! 2-ல் சனி ஆட்சி. 10-க்குடைய புதன் சேர்க்கை. தொழில், குடும்பம் இவற்றில் சிறுசிறு குழப்பங்கள் இருக்கும் என்றாலும் அதற்குத் தீர்வும் கிடைக்கும். வாக்குச்சனி கோப்பைக் குலைக்கும் என்பதுபோல உங்கள் பேச்சுகளில் நிதானம் தேவை. ஒரு வார்த்தை கொல்லும்; ஒரு வார்த்தை வெல்லும் என்பதால் கவனமுடன் பேசுவது அவசியம். 4-ஆமிடத்தை சனி பார்ப்பதாலும், சனியும், 4-க்குடைய குருவும் இணைந்திருப்பதாலும் பூமி, வீடு, வாகன வகையில் நற்பலன்கள் உண்டாகும். சிலர் பழைய வீட்டை விலைக்கு வாங்கலாம். சிலர் புதிய வீடு கட்டலாம். அது சம்பந்தமான கடன்முயற்சிகளும் கிடைக்கும். 9-க்குடைய சூரியனும், 6-க்குடைய சுக்கிரனும் 3-ல் இருக்கிறார்கள். மனைவிவழியில் சில சங்கட நிகழ்வுகள் ஏற்படலாம். தகப்பனாரு டன் கருத்து வேறுபாடு உருவாகலாம். எந்த ஒரு நற்காரியத்திலும் தாய்- தகப்பனை விலக்கிச் செய்தல் கூடாது. அவர்களின் ஆசிபெற்று செய்வதால் தெய்வமும் அதற்குத் துணை நின்று நிறைவேற்றித் தருமென்பது சந்தேகமற்ற உண்மை. நீரடித்து நீர் விலகாது என்பதை மனதில்கொண்டு நடந்துகொள்ளவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 12-க்குடைய குரு சஞ்சாரம். எனவே, விரயங்களும் சுபவிரயங் களும் இருக்கும். அதாவது ஏற்படும் விரயங்களை சுபவிரயமாக மாற்றும் முயற்சியை மேற்கொள்வது என்பது அர்த்தம். மருத்துவச் செலவு, திடீர் வாகனப் பழுது செலவு, ஆடம்பரப் பொருள் வாங்குவது இது எல்லாம் வீண்விரயம். வீடு கட்டுவது, மனை வாங்குவது, திருமணம் போன்ற நிகழ்ச்சியை நடத்துவது எல்லாம் சுபவிரயம். எனவே, வீண்விரயத்தால் மன உளைச்சல், நிம்மதிக்குறைவு போன்றவை ஏற்படும். சுபவிரயத்தால் மனமகிழ்ச்சி, நிம்மதி, சந்தோஷம் உண்டாகும். அது சுமையாக இருந்தாலும் சுகமான சுமையா கும். 2-ல் சூரியன், சுக்கிரன் சேர்க்கை. பொருளாதாரத்தில் பற்றாக்குறை விலகும். என்றாலும் சேமிப்புக்கு இடம் இருக்காது. வரவுக்கேற்ற செலவு நடைபெறும். அன்றா டத் தேவைகள் நிறைவேற அடுத்தவர் உதவியை நாடும் அவசியம் இல்லை என்பதற்குத்தான் பற்றாக்குறை இல்லை என்று பொருள். தகப்பனார் அல்லது பிதுரார்ஜித சொத்துகள்வகையில் விற்பனை அல்லது பரிவர்த்தனை உண்டாக இட முண்டு. 5-ல் செவ்வாய், ராகு உங்கள் திட்டங்களிலும் முயற்சிகளிலும் சிலசமயம் முட்டுக்கட்டை போடுவதுபோல் தெரிந்தா லும், ஜென்ம குரு அவர்களைப் பார்ப்பதால் முட்டுக்கட்டை விலகி காரியச் சித்தி உண்டாகும். 11-ல் உள்ள கேதுவும் அதற் குத் துணைபுரிந்து ஜெயத்தைத் தரும். சுயதொழில் புரிவோருக்கு ஏற்றமும் இறக்க மும் மாறி மாறி நடைபெறும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 12-ல் இருக்கிறார். கும்ப ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. முதல் சுற்று நடப்பவர்களுக்கு மங்குச்சனியும், இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு பொங்குச்சனியும், மூன்றாம் சுற்று நடப்பவர்களுக்கு மரணச்சனியும் நடக்கிறது. மரணச்சனி என்றால் மரணம் சம்பவிக்கும் என்று அர்த்தமல்ல. அதற்கு சமான உபாதைகள் என்றும் பொருள். 11-க்குடைய குரு 12-ல் நீசபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார். தொழில்வகையில் சில மாற்றங்கள் ஏற்படலாம். 10-ல் உள்ள கேது ரசாயனம் மற்றும் கெமிக்கல் சார்ந்த துறையினருக்கு நல்ல பலன்களை சந்திக்கலாம். 7-க்குடைய சூரியனும். 4, 9-க்குடைய சுக்கிரனும் ஜென்ம ராசியில் இருக்கிறார்கள். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும். தந்தைவழியில் சில சங்கட நிகழ்வுகள் ஏற்படலாம். என்றாலும் பெரியளவில் பாதிப்புக்கு இடமிருக்காது. தாயாருக்கு உடல்நலனில் அக்கறை தேவை. 3-க்குடைய செவ்வாய் 4-ல் ராகுவுடன் சம்பந்தம் பெறுகிறார். குரு பார்வை இருப்பதால் உடன்பிறந்த சகோதர- சகோதரிவகையில் நன்மையும், மகிழ்ச்சியும் உண்டாகும். சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கும் அச்சாரம் போடலாம். குருவுடன் சேர்ந்த சனி 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். பொருளாதாரத்தில் பற்றாக்குறை நிலவாது. சிலர் பூமி, மனை சம்பந்தப்பட்ட வகையில் முதலீடு செய்யலாம். 5-க்குடைய புதன் ஜென்ம ராசியில் மாறுவதால் திட்டம், செயல்பாடு இவற்றில் முன்னேற்றகரமான சூழல் உருவாகும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிக்கு 11-ல் குரு. 11-ல் சனி ஆட்சி. எதைத் தொட்டாலும் வெற்றி, எதிலும் வெற்றி என்றரீதியாக செயல்படும். 6-க்குடைய சூரியன் 12-ல் மறைந்தாலும் அவர் 6-க்குடையவர் என்ற அடிப்படையில் நல்லதுதான். 3, 8-க்குடைய சுக்கிரனும் அவருடன் மறைகிறார். இங்கும் "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்றமாதிரி நன்மைகள் விளையும். 9-ல் உள்ள கேது ஆன்மிகப் பயணம், யாத்திரை போன்றவற்றில் ஈடுபடுத்தும். சிலர் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம். சிலர் குலதெய்வக் கோவிலை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கலாம். அந்த முயற்சிகளும் குருவருளால் பூர்த்தியாகும். குருவருள் கிடைத்தாலே திருவருளும் கிடைத்துவிடும். 3-ல் உள்ள ராகுவும் அவருடன் இணையும் செவ்வாயும் சகோதரவழி சகாயங்களை ஏற்படுத்தித் தருவார்கள். அங்காளி பங்காளிகள் சேர்ந்து குலதெய்வ வழிபாட்டை பூர்த்திசெய்யலாம். 7-ஆமிடத்தை குரு பார்க்கிறார். கணவன்- மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்; ஒற்றுமை நிலவும். கூட்டுத்தொழில் புரிகிறவர்களுக்கும் கூட்டுத்தொழில் சம்பந்தமான புரிந்துணர்வுகள் நன்றாக இருக்கும். தந்தை வழியிலோ அல்லது தந்தைவழி உறவினர்கள் வகையிலோ சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். பூர்வபுண்ணிய சொத்து சம்பந்தமாக வில்லங்கம், விவகாரம், வியாஜ்ஜியங்களிலும் சங்கடங்கள் உண்டாகலாம்.

bala150321
இதையும் படியுங்கள்
Subscribe