இந்த வார ராசிபலன் 7-2-2021 முதல் 13-2-2021 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-7-2-2021-13-2-2021

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: அவிட்டம்- 1, 2, 3.

செவ்வாய்: பரணி- 4, கார்த்திகை- 1.

(வ) புதன்: உத்திராடம்- 4.

குரு: திருவோணம்- 3.

சுக்கிரன்: திருவோணம்- 1, 2, 3.

சனி: உத்திராடம்- 3.

ராகு: ரோகிணி- 4.

கேது: கேட்டை- 2.

கிரக மாற்றம்:

13-2-2021 கும்ப சூரியன்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- விருச்சிகம்.

7-2-2021- தனுசு.

9-2-2021- மகரம்.

12-2-2021- கும்பம்

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் தன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். 5-க்குடைய சூரியன், ராசிநாதன் செவ்வாயின் சாரம் பெறுகிறார் (அவிட்டம்). 10-ல் சூரியன் திக்பலம். 9-க்குடைய குரு 10-ல் நீசபங்க ராஜயோகம். அத்துடன் தர்மகர்மாதிபதி யோகம். கடந்த வாரம் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளையும் சங்கடங்களையும் சந்தித்த மேஷ ராசிக்காரர்களுக்கும் மேஷ லக்னக் காரர்களுக்கும் இந்த வாரம் முழுமையான தீர்வு ஏற்படும். பூரண ஆரோக்கியம், உற்சாகம், காரியத்தில் தெளிவு எல்லாம் எதிர்பார்க்கலாம். 2-ல் உள்ள ராகு ஒருசிலருக்கு குடும்பத்தில் கோபதாபங்களையும் குழப்பத்தையும் உருவாக்கினாலும், 10-ல் உள்ள குரு தர்மகர்மாதிபதி யோகம் பெற்று நீசபங்க ராஜயோகமாகி ராகுவைப் பார்ப்பதால், பாதிப்புக்கு இடமில்லாமல்- பிரச்சினைகளுக்கு இடமில்லாமல் சமாளிக்கலாம். 10-ல் ஐந்து கிரகச் சேர்க்கை ஏற்படுவதால் (சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி) தொழில்துறையிலும் வாழ்க்கைத்துறையிலும் நினைத்ததை சாதிக்கலாம்; எண்ணியதை ஈடேற்றலாம். வேலையில் இருப்போருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நன்மைகளை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் இருப்போர்களுக்கு அமைதி, ஆனந்தம், திருப்தி, வாழ்க்கை முன்னேற்றம் போன்றவகையில் நன்மையும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். பொருளாதாரம் சீராக இருக்கும்.

பரிகாரம்: திருப்பரங்குன்றத்தில்- திருக்கூடல்மலையில் சோமப்பா சுவாமி மற்றும் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி ஜீவசமாதி சென்று வழிபடவும்.

ttt

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் திரிகோணத்தில் இருக்கிறார். அவருடன் 5-க்குடைய புதனும், 9-க்குடைய சனியும்! ஆக, இரண்டு திரிகோணாதிபதிகளின் சேர்க்கையினால் குருவருளும் திருவருளும் பெருகும். மேலும் 10-க்குடையவர் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். ஜாதகத்தில் 108-க்கு மேற்பட்ட யோகங்கள் கூறப்பட்டாலும், பிரதானமான யோகங்கள் குறிப்பிட்ட சில யோகங்கள்தான். அதில் தர்மகர்மாதிபதி யோகமும் உண்டு. தர்மம் என்பது 9; கர்மம் என்பது 10. அதாவது திரிகோணாதிபதியும் கேந்திராதி பதியும் இணைவது தர்ம கர்மாதிபதி யோகமாகும். அது எல்லா யோகங்களுக்கும் தலையாய யோகமாகும். பரிவர்த்தனை யோகமும் தர்மகர்மாதிபதி யோகமும் ஒரு ஜாதகத்தில் அமையப் பெற்றால் அந்த ஜாதகருக்கு எப்போதும் வீழ்ச்சிக்கு இடமில்லை; தாழ்ச்சிக்கும் இடமில்லை. சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்து வெற்றிகொள்ளும் அளவு வீரமும் விவேகமும் வெற்றியும் உண்டாகும். மேற்படி தர்ம கர்மாதிபதி யோகமுடைய ஜாதகமாக இந்திராகாந்தி ஜாதகம் அமைந்த காரணத்தால்தான், வஞ்சகர்களின் துரோகச் செயலால் பதவியிழந்த இந்திராகாந்தி மீண்டும் அரசியலில் வெற்றிபெற்று பதவ

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: அவிட்டம்- 1, 2, 3.

செவ்வாய்: பரணி- 4, கார்த்திகை- 1.

(வ) புதன்: உத்திராடம்- 4.

குரு: திருவோணம்- 3.

சுக்கிரன்: திருவோணம்- 1, 2, 3.

சனி: உத்திராடம்- 3.

ராகு: ரோகிணி- 4.

கேது: கேட்டை- 2.

கிரக மாற்றம்:

13-2-2021 கும்ப சூரியன்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- விருச்சிகம்.

7-2-2021- தனுசு.

9-2-2021- மகரம்.

12-2-2021- கும்பம்

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் தன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். 5-க்குடைய சூரியன், ராசிநாதன் செவ்வாயின் சாரம் பெறுகிறார் (அவிட்டம்). 10-ல் சூரியன் திக்பலம். 9-க்குடைய குரு 10-ல் நீசபங்க ராஜயோகம். அத்துடன் தர்மகர்மாதிபதி யோகம். கடந்த வாரம் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளையும் சங்கடங்களையும் சந்தித்த மேஷ ராசிக்காரர்களுக்கும் மேஷ லக்னக் காரர்களுக்கும் இந்த வாரம் முழுமையான தீர்வு ஏற்படும். பூரண ஆரோக்கியம், உற்சாகம், காரியத்தில் தெளிவு எல்லாம் எதிர்பார்க்கலாம். 2-ல் உள்ள ராகு ஒருசிலருக்கு குடும்பத்தில் கோபதாபங்களையும் குழப்பத்தையும் உருவாக்கினாலும், 10-ல் உள்ள குரு தர்மகர்மாதிபதி யோகம் பெற்று நீசபங்க ராஜயோகமாகி ராகுவைப் பார்ப்பதால், பாதிப்புக்கு இடமில்லாமல்- பிரச்சினைகளுக்கு இடமில்லாமல் சமாளிக்கலாம். 10-ல் ஐந்து கிரகச் சேர்க்கை ஏற்படுவதால் (சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி) தொழில்துறையிலும் வாழ்க்கைத்துறையிலும் நினைத்ததை சாதிக்கலாம்; எண்ணியதை ஈடேற்றலாம். வேலையில் இருப்போருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நன்மைகளை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் இருப்போர்களுக்கு அமைதி, ஆனந்தம், திருப்தி, வாழ்க்கை முன்னேற்றம் போன்றவகையில் நன்மையும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். பொருளாதாரம் சீராக இருக்கும்.

பரிகாரம்: திருப்பரங்குன்றத்தில்- திருக்கூடல்மலையில் சோமப்பா சுவாமி மற்றும் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி ஜீவசமாதி சென்று வழிபடவும்.

ttt

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் திரிகோணத்தில் இருக்கிறார். அவருடன் 5-க்குடைய புதனும், 9-க்குடைய சனியும்! ஆக, இரண்டு திரிகோணாதிபதிகளின் சேர்க்கையினால் குருவருளும் திருவருளும் பெருகும். மேலும் 10-க்குடையவர் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். ஜாதகத்தில் 108-க்கு மேற்பட்ட யோகங்கள் கூறப்பட்டாலும், பிரதானமான யோகங்கள் குறிப்பிட்ட சில யோகங்கள்தான். அதில் தர்மகர்மாதிபதி யோகமும் உண்டு. தர்மம் என்பது 9; கர்மம் என்பது 10. அதாவது திரிகோணாதிபதியும் கேந்திராதி பதியும் இணைவது தர்ம கர்மாதிபதி யோகமாகும். அது எல்லா யோகங்களுக்கும் தலையாய யோகமாகும். பரிவர்த்தனை யோகமும் தர்மகர்மாதிபதி யோகமும் ஒரு ஜாதகத்தில் அமையப் பெற்றால் அந்த ஜாதகருக்கு எப்போதும் வீழ்ச்சிக்கு இடமில்லை; தாழ்ச்சிக்கும் இடமில்லை. சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்து வெற்றிகொள்ளும் அளவு வீரமும் விவேகமும் வெற்றியும் உண்டாகும். மேற்படி தர்ம கர்மாதிபதி யோகமுடைய ஜாதகமாக இந்திராகாந்தி ஜாதகம் அமைந்த காரணத்தால்தான், வஞ்சகர்களின் துரோகச் செயலால் பதவியிழந்த இந்திராகாந்தி மீண்டும் அரசியலில் வெற்றிபெற்று பதவியில் அமர்ந்தார்.

பரிகாரம்: நாகப்பட்டினம் அருகில் வடக்குப் பொய்கை நல்லூரிலுள்ள கோரக்கர் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 8-ல் வக்ரமாக இருக்கிறார். வக்ரத்தில் உக்ரபலம் என்பார்கள். 8- மறைவு ஸ்தானம். மறைந்த புதன் நிறைந்த தனம் என்பதும் ஜோதிட விதி. 8-ஆமிடம் இழப்பு, ஏமாற்றம், விபத்து என்று குறிப்பிட்டாலும், 2, 9, 11-ஆமிடத்து அதிபதிகள் சம்பந்தப்படும்போது அதுவே அதிர்ஷ்ட ஸ்தானமாகவும் மாறிவிடும். 9-க்குடைய சனி சம்பந்தப்பட்டு, 11-ஆமிடத்து அதிபதி குருவும் சம்பந்தப்பட்டு, 5-க்குடைய திரிகோணாதிபதி சுக்கிரனும் சம்பந்தப்படுவதால் மறைந்த புதன் நிறைந்த தனம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமையும். மேலும் 9-க்குடைய சனி, 10-க்குடைய குரு தர்மகர்மாதிபதி சேர்க்கை இருக்கிறது. 8-ஆமிடம் என்பது எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும் குறிக்கும். ஏமாற்றம், இழப்பு, விபத்துகளையும் குறிக்கும். தர்மகர்மாதிபதி சேர்க்கை தீயவற்றை விலக்கிவிடும். 12-ஆமிடத்து ராகுவும் 6-ஆமிடத்துக் கேதுவும் சத்ரு ஜெயம் எனப் படும். அத்துடன் 11-ஆமிடத்து செவ்வாயால், சொல்லி வெல்வதுபோல் வெற்றிக்களைக் குவிக்கலாம். 12-ஆமிடத்து ராகு வெளிநாட்டு வேலை, வெளிநாட்டு உத்தியோகம் அல்லது வர்த்தக தொடர்புகளை உருவாக்கித் தரும். சிலர் வெளிநாடு போய் கல்வி பயிலலாம். அல்லது தொழில் செய்யலாம். 12-ஆமிடம் என்பது அயல் தேசத்தைக் குறிக்கும்.

பரிகாரம்: திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் ஓதசுவாமிகள் என்னும் சுப்பையா சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 7-ல் சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகச் சேர்க்கை அமைந்து உங்கள் ராசியைப் பார்க்கிறார்கள். அத்துடன் 10-ல் செவ்வாய் ஆட்சி. 11-ல் ராகு பலம். இதுவரை நிலையான தொழிலும் நிரந்தரமான வருமானமும் இல்லாதவர் களுக்கு இனி தொழில் யோகமும் சம்பாத்திய யோகமும் அமையும். தற்காலிக வேலையில் இருந்தோருக்கு நிரந்தரப் பணி வாய்ப்பும் நிலையான ஊதிய வாய்ப்பும் அமையும். அதேபோல தொழில்துறையில் கஷ்டக் கூட்டாக வேலை பார்த்தவர்களுக்கு சமக் கூட்டாளி என்ற அந்தஸ்து கிடைக்கும். (கஷ்டக் கூட்டு என்பது ஒர்க்கிங் பார்டனர். சமக்கூட்டு என்பது ஈக்வல் பார்டனர்). அக்னி சம்பந்தம், கட்டட சம்பந்தம், ரசாயான சம்பந்தம், ரியல் எஸ்டேட் போன்ற செவ்வாயின் அம்சம் பெற்ற தொழில்துறையில் இருப்பவர்களுக்கு இனி லாபமும் முன்னேற்றமும் அமையும். ராகு- கேதுக்களுக்கு 3, 6, 11-ஆமிடங்கள் யோகமான இடங்களாகும். 11-ல் ராகுவும் 5-ல் கேதுவும் அமைந்து, 5-க்குடைய செவ்வாய் 10-ல் ஆட்சிபெற்று கேதுவைப் பார்ப்பதால் உங்களுடைய நியாயமான கோரிக்கைகள், திட்டங்கள் மிக எளிமையாக நிறைவேறும். அதற்குரிய முதலீடுகளும் அமையும். தேக சௌக்கியமும் நன்றாக இருக்கும்.

பரிகாரம்: சிங்கம்புணரியிலுள்ள முத்து வடுகச் சித்தர் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிக்கு 6-ல் சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி என ஐந்து கிரகங்களும் மறைகிறார் கள். ராசி, லக்னத்திற்கு 6-ஆமிடம் என்பது மறைவு ஸ்தானம் என்று கணக்கிடப்பட்டாலும், 10-ஆமிடமாகிய வாழ்க்கை, தொழில் ஸ்தானத்திற்கு 9-ஆமிடம் பாக்கிய ஸ்தானமாகும். இந்த உலகத்தில் கஷ்டப்பட்டாதால்தான் எந்த சுகத்தையும் அடைய முடியும். கஷ்டப்படாமல் எந்த நன்மையையும் அடையமுடியாது. அதைக் குறிப்பதற்காகத்தான் 6, 8, 12-ஆமிடங்கள் அசுப ஸ்தானங்கள் என்று சொல்லப்பட்டாலும், 10-ஆமிடத்திற்கு 6- பாக்கிய ஸ்தானம். 5-ஆமிடத்திற்கு 6- கேந்திர ஸ்தானம். 4-ஆமிடத்திற்கு 8- திரிகோண ஸ்தானம். 9-ஆமிடம் பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு 12 விரயஸ்தானம். ஆக, கஷ்டமும் யோகமும் ரோஜா செடியில் மலரோடு பூத்த முட்கள்போல மறைந் திருக்கும். இங்கு 12-ஆமிடம் விரய ஸ்தானம் என்பதை சுபவிரய ஸ்தானமாக எடுத்துக்கொள்ளலாம். விரயம் என்பது கெடுதலாகச் சொல்லப்பட்டாலும், மகப்பேறில் லாத ஒரு தாய் நெடுங்காலத்திற்குப்பிறகு கரு உருவாகி பிரசவித்து தாயாகி அடையும் பேரின்பம்போல! 10-ல் உள்ள ராகு- அதற்குத் திரிகோணத்திலுள்ள சுக்கிரன் கடல் கடந்த வேலைவாய்ப்பு, தொழில் யோகங்களைக் குறிக்கும். திரைகடல் ஓடி திரவியம் பெறலாம்.

பரிகாரம்: திருவாரூர்- மடப்புரத்தில் தட்சிணாமூர்த்தி சுவாமி ஜீவசமாதியை வழிபடவும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். அவருடன் சூரியன், சுக்கிரன், குரு, சனி சேர்க்கை. சூரியன் 12-க்குடையவர். சனி 6-க்குடையவர். உங்கள் திட்டங்களுக்காகவும் நல்ல காரியங்களுக்காகவும் கடன் வாங்கலாம். கடன் சுமையாகத் தெரிந்தாலும் அது சுகமான சுமையாகும். இந்த சுமை- சுகமான சுமை. அதேபோல கர்ப்பஸ்திரீ அனுபவிக்கும் சுமையும் சுகமான சுமை. முதலில் சுமையாகத் தெரிவதெல்லாம் பிறகு சுகமான சுமையாகவும் சுபமான சுமையாகவும் தெரியும். 8-ல் மறையும் செவ்வாய் 3-ஆமிடத்துக் கேதுவைப் பார்ப்பதால், உடன்பிறப்புகள்வகையிலும் பங்காளிவகையிலும் ஒருசிலருக்கு முதலில் துன்பமாகத் தெரிவதெல்லாம் முடிவில் இன்பமாக மாறும். ஒரு திரைப்படத்தில் இடத்துப் பிரச்சினைக்காக வக்கீலை நாடிவரும் பங்காளிகளிடம், நடிகர் விஜய் சமரசப்படுத்தி ஒற்றுமையோடு இணைந்து போகும்படி செய்வார். பங்கை ஆளுகிறவன் பங்காளி. அதை விட்டுக்கொடுத்துப் போகிறவன் கெட்டுப்போகாத உறவாளி. விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை. தேக சுகத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: பழனி போகும் வழியில் கணக்கன்பட்டியில் பழனி சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 4-ல் கேந்திரபலம் பெறுகிறார். ஒரு கேந்திராதிபதி இன்னொரு கேந்திரம் ஏறினால் கேந்திர தோஷம் எனப்படும். அதேபோல அசுப கிரகங்கள் (சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது) கேந்திரம் பெறலாம். சுக்கிரன், குரு, புதன், சந்திரன் சுபகிரகங்கள்- திரிகோணம் பெறலாம். 5, 9-க்கு அதிபர்கள்- அதாவது திரிகோணாதிபதிகள் பாபர் சுபரானாலும் திரிகோணம் ஏறினால் சுபப் பலனைத் தருவார் என்பது சந்திர காவிய விதி. துலா ராசிக்கு 7-க்குடைய கேந்திராதிபதி செவ்வாய் கேந்திர ஸ்தானத்தில் ஆட்சிபெறுவதால், அவர் அசுப கிரகம் என்பதால் அவர் நிற்கும் இடம், பார்க்குமிடம் எல்லாம் நன்மையாக முடியும். தனிப்பட்ட முறையில் 7-ல் செவ்வாய் நிற்பது தோஷம். இங்கு ஆட்சிபெற்ற செவ்வாய்க்கு எந்த தோஷமும் அணுகாது. ஆனால் 2-ல் உள்ள கேதுவும், 8-ல் உள்ள ராகுவும் திருமணத்தடை, குடும்ப வாழ்க்கையில் நிம்மதி குறைவு, பொருளாதாரத்தில் தேக்க நிலையை உருவாக்கலாம். தசாபுக்திகள் யோகமாக இருந்தால் மேற்படி குறை விலகும்.

பரிகாரம்: நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று தத்தகிரி முருகன் கோவிலில் ஸ்வயம்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந்தாலும் ஆட்சி பெற்று தன் ராசியைப் பார்க்கிறார். எல்லாக் கிரகத்திற்கும் பாவம், பாவாதிபதி, பாவகாரகத்துவம் என்று மூன்றுநிலை உண்டு. இந்த மூன்று நிலையைப் பொருத்துத்தான் அந்த பாவத்தின் நன்மை- தீமைகளை நிர்ணயிக்கவேண்டும். விருச்சிக பாவம், செயல், செல்வாக்கு, பெருமை இவற்றைக் குறிக்கும் 1-ஆமிடம். அந்த பாவத்தில் கேது இருப்பது ஒரு வகையில் தோஷம். அந்த வீட்டுக்குடையவர் செவ்வாய் 6-ல் மறைவதும் தோஷம். ஆனால், அந்த வீட்டுக்குடைய செவ்வாய் ஆட்சி பெறுவதாலும் தன் ஸ்தானத் தைத் தானே பார்ப்பதாலும் தோஷம் விலகிவிடும். கையுறை அணிந்து கரன்ட்டைத் தொடுவதுபோல! ஷாக் அடிக்காது. உங்கள் பேருக்கும் பெருமைக்கும் களங்கம் ஏற்படுத்தும்படியான சூழ்நிலைகள் உருவானா லும், செவ்வாய் ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பதால், ராமாயணத்தில் சீதை களங்கமற்றவள் என்று நிரூபிக்க அக்னிப் பிரவேசம் செய்தமாதிரி களங்கம் நீங்கும். செல்வாக்கும் பெருமையும் குறையாது.

பரிகாரம்: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி சந்நிதி பின்புறம் சுந்தரானந் தர் என்னும் வல்லப சித்தர் சந்நிதி சென்று வழிபடவும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 2-ல் நீசபங்க ராஜயோகமாக இருக்கிறார். 5-ல் செவ்வாய் ஆட்சி. ஏழரைச்சனி நடப்பதால் சிலசமயம் உடல்நலக் குறைவும் மனநலக் குறைவும் ஏற்பட்டாலும், அடிப்படை வாழ்க்கை வசதிகளில் கேடு கெடுதிக்கு இடமில்லை. பொதுவாக ஏழரைச்சனி எந்தச் சுற்றாக இருந்தாலும் உங்களுக்கு பொங்குசனியாகவே நற்பலன் தரும். ஏழரைச்சனியில் முதல் சுற்று மங்குசனி, இரண்டாம் சுற்று பொங்குசனி, மூன்றாம் சுற்று மரணச்சனி என்பார்கள். ஏழரைச்சனியின் சுற்று முதல் சுற்றாக இருந்தாலும் உங்களை பாதிக்காது. சொந்தவீடு, இடம், வாகனம், சொத்து சுகங்கள் போன்றவகையில் உங்களை ஈடுபடுத்தி சுபமுதலீடு செய்யவைத்துக் கடனை உருவாக்கும். அந்த கடன்சுமை சுகமான சுமைதான். எத்தனை லட்சம் கடனாக இருந்தாலும், எவ்வளவு வட்டி கட்டினாலும் அது ஓடியடையும். எதிர்கால இன்பவாழ்வுக்கு அடிப்படை அஸ்திவாரமாக அமையும். ஏற்கெனவே எழுதியபடி எந்த சுகமும் கஷ்டப்படாமல் அடையமுடியாது. முதலில் கஷ்டமாக இருந்தாலும் பிறகு இஷ்டமாக- இனிமையாக அமையும். ஒரு வீட்டைக் கட்டினாலும் கல்யாணம் காட்சி நடத்தினாலும் இஷ்டமும் கஷ்டமும் உண்டு.

பரிகாரம்: திண்டுக்கல் அருகில் கசவனம் பட்டி சென்று ஜோதி மௌனகுரு நிர்வாண சுவாமி ஜீவசமாதியை வழிபடவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசியில் ஐந்து கிரகச் சேர்க்கை இருக்கிறது. (சூரியன், புதன், குரு, சுக்கிரன் சனி). சிலர் இதை கிரகயுத்தம் என்று சொல்வார்கள். இவர்களுக்கு வீடுகொடுத்த சனியும் இவர்களுடன் குருவும் சம்பந்தப்படுவதால், கிரகயுத்தம் என்ற நிலைமாறி கிரக கூட்டணி என்ற பெருமைக்கு ஆளாகிறது. தேர்தல் சமயம் பொது எதிரியை வீழ்த்த கொள்கை வேறுபாடு கொண்ட கட்சிகள் கூட்டணி அமைப்பதில்லையா- அதேபோலத்தான் கிரகயுத்தம் கிரகக் கூட்டணியாக மாறிவிடுகிறது. அதை எப்படி ஒப்புக்கொள்வது என்ற சந்தேகம் வந்தால்- பல ஆண்டுகளுக்குமுன்பு சீனா இந்தியாவின்மீது படையெடுத்தபோது கொள்கை வேறுபட்ட எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து பொது எதிரி சீனாவை எதிர்த்து நின்றார்கள். பொன்னும் பொருளும் வாரிவாரி வழங்கினார் கள். அண்ணன்- தம்பிக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் மூன்றாவது அந்நியருக்கு இடம்தராமல் ஒன்றுபட்டு நின்றதைப்போல! 5-ஆமிடத்து ராகு- நாகதோஷம் என்றாலும் வாரிசு தோஷம் என்றாலும், புத்திரகாரகன் குரு நீசபங்க ராஜயோகம் பெற்று 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் தோஷம் விலகும்; சந்ததி விருத்தியாகும்.

பரிகாரம்: பொன்னமராவதி அருகில் செம்பூதி என்னும் ஊரில் ஏகம்மை உடனுறை சிவந்திலிங்க சுவாமி ஜீவசமாதியை வழிபடவும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

பொதுவாக கும்ப ராசிக்காரர்களை அனுதாபத்திற்குரியவர்கள் என்று அடிக்கடி எழுதுவேன். அது ஏனென்றால் ராசிநாதனே விரயாதிபதியாக வருவதால்! ரிஷப ராசிக்கு ராசிநாதன் சுக்கிரன் 6-க்குடையவர். துலா ராசிக்கு சுக்கிரன் ராசிநாதன் 8-க்குடையவர். கும்ப ராசிக்கு மட்டும் ராசிநாதனே 12-க்குடையவராக இருக்கிறார். அதாவது ராசிநாதனே விரயாதிபதி ஆகிறார். அது கெடுதலா? நல்லதா என்று பட்டிமன்றம் நடத்தினால், "தன்னைத்தானே நம்பாதது சந்தேகம்' என்று சிதம்பரம் ஜெயராமன் பாடிய மாதிரிதான். மேலும் "கண்ணால் காண்பதும் பொய்- காதால் கேட்பதும் பொய்' என்மாதிரி சுற்றுச் சூழல் அத்தனையும் எதிர்மறையாக அமைந்து. உங்களை மயக்கும். தயக்கமடையச் செய்யும். அதில் தெளிவு பெற்றால்தான் உண்மை புலப்படும். அதனால்தான் 12 ராசிக்குரியவர்களில் கும்ப ராசிக்காரர்கள் மட்டும் அனுதாபத்திற் குரியவர்கள் என்று வர்ணித்தேன். இந்த நிலையில் இந்த வாரம் முக்கியமான எல்லா கிரகங்களும் உங்கள் ராசிக்கு 12-ல் மறைகின்றன. 2, 11-க்குடைய குரு, 7-க்குடைய சூரியன், 5, 8-க்குடைய புதன். 4, 9-க்குடைய சுக்கிரன் இவர்களோடு ராசிநாதனும் 12-ல் மறைகிறார். ஒரே வரியில் சொன்னால் நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பத்திற்கு ஆளாக்குவீர்கள்.

பரிகாரம்: பொன்னமராவதி- குழிபிறை அருகில் பனையூர் ஒடுக்கம் ஞானி சாது புல்லான் சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 11-ல் நீசபங்க ராஜயோகம். 9-க்குடைய செவ்வாய் 2-ல் ஆட்சிபெற்று 9-ஆமிடத்திற்குப் பார்வை. 9-க்குடைய செவ்வாயும் 10-க்குடையவரும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரம். எனவே, இந்த வாரம் கழுவின மீனில் நழுவின மீனைப்போல் உங்களுக்கு எல்லாவகையிலும் நல்லது நடக்கும். எந்த ஒரு செயலும் ஆரம்பத்தில் தயக்கமும் மயக்கமும் குழப்பமும் நிறைந்ததாகத் தெரிந்தாலும், பிறகு தெளிவுபெற்று வலுவான துணையோடு செயல்பட்டு வெற்றியை அடைய லாம். அதாவது ராசிநாதனும் 10-க்குடையவரு மான குரு நீச ராசியில். சனி ஆட்சி பெறுவதால் நீசபங்க ராஜயோகமாவதன் பலன் இதுதான். மேலும் 9-ஆமிடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். அதில் கேது நிற்க, ராகு பார்க்க, 9-க்குடைய செவ்வாயும் அதைப் பார்ப்பதால் குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். "தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல்; தெளிவு குருவின் திருமேனியைப் பார்த்தல்; தெளிவு குருவின் திருநாமம் செப்பல்; தெளிவு குருவின் திருவுருவைச் சிந்தித்தல் தானே' என்ற திருமூலரின் திருவாக்கைக் கடைப்பிடித்தால் எல்லாம் லட்சுமி கடாட்சமாக அமையும்.

பரிகாரம்: மதுரை- ஆரம்பாளையம் காளவாசலில் ஸ்ரீகுழந்தையானந்த சுவாமிகள் சந்நிதி சென்று வழிபடவும்.

Bala120221
இதையும் படியுங்கள்
Subscribe