இந்த வார ராசிபலன் 6-12-2020 முதல் 12-12-2020 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-6-12-2020-12-12-2020

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 03065.

கிரக பாதசாரம்:

சூரியன்: கேட்டை- 2, 3, 4.

செவ்வாய்: ரேவதி- 4, அஸ்வினி- 1.

புதன்: கேட்டை- 2, 3, 4, மூலம்- 1.

குரு: உத்திராடம்- 3.

சுக்கிரன்: விசாகம்- 2.

சனி: உத்திராடம்- 1.

ராகு: மிருகசீரிடம்- 1.

கேது: கேட்டை- 3.

கிரக மாற்றம்:

10-12-2020- மேஷச் செவ்வாய்.

12-12-2020- தனுசு புதன்.

12-12-2020- விருச்சிக சுக்கிரன்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கடகம்.

6-12-2020- சிம்மம்.

8-12-2020- கன்னி.

10-12-2020- துலாம்.

12-12-2020- விருச்சிகம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைவு. பத்தாம் தேதி மேஷத்தில், தன் ராசியில் ஆட்சியாக மாறுகிறார். அதுவரை தேவையற்ற அலைச்சல்களும் பயணங்களும் தவிர்க்கமுடியாத விரயங்களும் செலவுகளும் காணப்படும். செவ்வாய் அல்லது குரு தசாபுக்தி நடப்பவர்களுக்கு பயன்தரும் பயணங்களும் பலன்தரும் பயணங்களும் அமையும். சிலருக்கு வராது என்று நினைத்திருந்த பணமெல்லாம் எதிர்பாராமல் வந்துசேரும். வேறுசிலருக்கு மனைவிவகையில் அல்லது சகோதரவகையில் எதிர்பாராத தனப்ராப்தி உண்டாகும். (பெண்கள் ஜாதகம் என்றால் கணவர்வகையில் வரவு உண்டாகும்.) 9-க்குடைய குருவும் 10-க்குடைய சனியும் பரிவர்த்தனையாக இருப்பதால் நல்ல மனைவி, நல்ல கணவன், நல்ல மக்கள் அமைவார்கள். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பதுபோல குடும்பம் மனநிறைவாகத் திகழும். செய்யும் தொழில் லாபகரமாக அமையும். புதிய தொழில் விருத்தியடையும். குரு, சனி பரிவர்த்தனை தர்மகர்மாதிபதி யோகப் பரிவர்த்தனை என்பதால், குருவருளும் திருவருளும் பெருகும். உறவுவகையிலும் நட்புவகையிலும் உங்களை ஒதுக்கியவர்கள், நீங்கள் இல்லாமல் எந்தக் காரியமும் பூர்த்திபெறாதே என்றுணர்ந்து உங்களைத் தேடிவருவார்கள். உங்களின் முக்கியத்துவம் பெருகும். பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயமென்று நீங்களும் செயல்படலாம்.

dddd

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந்தாலும் ஆட்சியாக இருக்கிறார். 8, 11-க்குடைய குரு சாரம் பெறுகிறார். (விசாகம்.) குருவும் சனியும் பரிவர்த்தனையாக இருக்கிறார்கள். "அட்டமச் சனி தொட்டது துலங்காது' என்பது பழமொழி. ஆனால் உங்களுக்கு அது விதிவிலக்கு. அட்டமத்துச் சனியில் விட்டது கிடைக்கும். கெட்டது விலகும். ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதியான சனி குருவின் வீட்டில் குருவோடு பரிவர்த்தனை என்பதால், இப்படி எதிர்மறையான பலன்களெல்லாம் உடன்மறையான பலன்களாக மாறும். நெல்லிக்காய் உமிழ்நீர் பட்டவுடன் இனிப்பாக மாறுவதுபோல, கெடுதலாகத் தோன்றுபவை அனைத்தும் நல்லவையாக மாறும். அதற்காக நல்லதாகத் தோன்றுபவை கெடுதலாக மாறுமா என்ற சந்தேகம் வேண்டாம். இல்லான் என்றால் எதுவும் இல்லாதவன் என்று பொருள். அதேசமயம் இல்லாள் என்றால் இல்லத்தை ஆள்பவள்; எல்லாம் உடையவள் என்று பொருள். ஆகவே, உங்களுக்கு குரு, சனி பரிவர்த்தனை யோகத்தால் இல்லாதது என்பதே இல்லை. இல்லையென்ற சொல்லுக்கு இருக்கிறது என்று ஒரு உள்ளர்த்தம் உண்டு. வீரத்துறவி விவேகானந்தர் அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்கொரு நாத்திக வேலைக்காரர், god is nowhere என்று எழுதினார். உடனே விவேகானந்தர் ஜ்

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 03065.

கிரக பாதசாரம்:

சூரியன்: கேட்டை- 2, 3, 4.

செவ்வாய்: ரேவதி- 4, அஸ்வினி- 1.

புதன்: கேட்டை- 2, 3, 4, மூலம்- 1.

குரு: உத்திராடம்- 3.

சுக்கிரன்: விசாகம்- 2.

சனி: உத்திராடம்- 1.

ராகு: மிருகசீரிடம்- 1.

கேது: கேட்டை- 3.

கிரக மாற்றம்:

10-12-2020- மேஷச் செவ்வாய்.

12-12-2020- தனுசு புதன்.

12-12-2020- விருச்சிக சுக்கிரன்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கடகம்.

6-12-2020- சிம்மம்.

8-12-2020- கன்னி.

10-12-2020- துலாம்.

12-12-2020- விருச்சிகம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைவு. பத்தாம் தேதி மேஷத்தில், தன் ராசியில் ஆட்சியாக மாறுகிறார். அதுவரை தேவையற்ற அலைச்சல்களும் பயணங்களும் தவிர்க்கமுடியாத விரயங்களும் செலவுகளும் காணப்படும். செவ்வாய் அல்லது குரு தசாபுக்தி நடப்பவர்களுக்கு பயன்தரும் பயணங்களும் பலன்தரும் பயணங்களும் அமையும். சிலருக்கு வராது என்று நினைத்திருந்த பணமெல்லாம் எதிர்பாராமல் வந்துசேரும். வேறுசிலருக்கு மனைவிவகையில் அல்லது சகோதரவகையில் எதிர்பாராத தனப்ராப்தி உண்டாகும். (பெண்கள் ஜாதகம் என்றால் கணவர்வகையில் வரவு உண்டாகும்.) 9-க்குடைய குருவும் 10-க்குடைய சனியும் பரிவர்த்தனையாக இருப்பதால் நல்ல மனைவி, நல்ல கணவன், நல்ல மக்கள் அமைவார்கள். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பதுபோல குடும்பம் மனநிறைவாகத் திகழும். செய்யும் தொழில் லாபகரமாக அமையும். புதிய தொழில் விருத்தியடையும். குரு, சனி பரிவர்த்தனை தர்மகர்மாதிபதி யோகப் பரிவர்த்தனை என்பதால், குருவருளும் திருவருளும் பெருகும். உறவுவகையிலும் நட்புவகையிலும் உங்களை ஒதுக்கியவர்கள், நீங்கள் இல்லாமல் எந்தக் காரியமும் பூர்த்திபெறாதே என்றுணர்ந்து உங்களைத் தேடிவருவார்கள். உங்களின் முக்கியத்துவம் பெருகும். பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயமென்று நீங்களும் செயல்படலாம்.

dddd

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந்தாலும் ஆட்சியாக இருக்கிறார். 8, 11-க்குடைய குரு சாரம் பெறுகிறார். (விசாகம்.) குருவும் சனியும் பரிவர்த்தனையாக இருக்கிறார்கள். "அட்டமச் சனி தொட்டது துலங்காது' என்பது பழமொழி. ஆனால் உங்களுக்கு அது விதிவிலக்கு. அட்டமத்துச் சனியில் விட்டது கிடைக்கும். கெட்டது விலகும். ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதியான சனி குருவின் வீட்டில் குருவோடு பரிவர்த்தனை என்பதால், இப்படி எதிர்மறையான பலன்களெல்லாம் உடன்மறையான பலன்களாக மாறும். நெல்லிக்காய் உமிழ்நீர் பட்டவுடன் இனிப்பாக மாறுவதுபோல, கெடுதலாகத் தோன்றுபவை அனைத்தும் நல்லவையாக மாறும். அதற்காக நல்லதாகத் தோன்றுபவை கெடுதலாக மாறுமா என்ற சந்தேகம் வேண்டாம். இல்லான் என்றால் எதுவும் இல்லாதவன் என்று பொருள். அதேசமயம் இல்லாள் என்றால் இல்லத்தை ஆள்பவள்; எல்லாம் உடையவள் என்று பொருள். ஆகவே, உங்களுக்கு குரு, சனி பரிவர்த்தனை யோகத்தால் இல்லாதது என்பதே இல்லை. இல்லையென்ற சொல்லுக்கு இருக்கிறது என்று ஒரு உள்ளர்த்தம் உண்டு. வீரத்துறவி விவேகானந்தர் அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்கொரு நாத்திக வேலைக்காரர், god is nowhere என்று எழுதினார். உடனே விவேகானந்தர் ஜ் பக்கத்தில் கமா போட்டு, god is now here என்று மாற்றிவிட்டார். ஆகவே இருக்கிறது என்ற வார்த்தையில் இல்லை என்ற பொருள் மறைந்திருக்கிறது. இல்லை என்ற சொல்லில் இருக்கிறது என்ற பொருள் புதைந்திருக்கிறது.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 6-ல் மறைவென் றாலும், கேட்டை என்ற சுய சாரத்தில் சஞ்சரிக்கி றார். 10-ஆம் இடமான தொழில், வாழ்க்கை ஸ்தானத்துக்கு 6-ஆம் இடம் பாக்கியஸ்தானம். ஆகவே, ஜாதகத்தில் 6, 8, 12 என்ற மறைவிடங்கள் வேறொரு பாவத்திற்கு யோகமாக அமையும். இதுதான் ஜோதிட ரகசியம். ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இல்லையென் றாலும், ஒன்றில்லாவிட்டால் மற்றவற்றால் அடையும் பயன் குறைவுதான். அதேபோல ஜாதகத்தில் ஒரு கிரகம் கெடுபலன் தந்தாலும், அதனோடு சேரும் கிரகங்கள் வலுப்பெற்றால் நற்பலனாக மாறிவிடும். 7-ல் சனி இருப்பது களஸ்திர தோஷமாகும். அதாவது தாமதத் திருமணம். மிக இளமையில் திருமணமென் றால் தாரதோஷம்; மறுமணத்திற்கு இடம்தரும். இங்கு ஒன்றை முக்கியமாகக் குறிப்பிடவேண்டும். எண்கணிதப்படி 4, 7, 8-ல் செயல்படும் எல்லா காரியங்களும் பாதிப்படைகின்றன. எண்கணிதம் அவசியமா என்றால், ஒரு மனிதனுக்கு ஜாதகம் உயிரென்றால், எண்கணிதம் உடல்! 5-ல் சுக்கிரன் ஆட்சி. அவருக்கு 6, 11-க்குடைய செவ்வாய் பார்வை. உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் சிலசமயம் உடனுக்குடன் நிறைவேறும். சிலசமயம் தாமதமாக தடைப்பட்டுத் தடைப்பட்டு நிறைவேறும். எப்படி இருந்தாலும் செவ்வாய், சனி ராசியைப் பார்ப்பதால் நினைத் ததை முடிப்பீர்கள். ஏனென்றால் 11-க்குடைய செவ்வாய் 10-ஆம் இடத்தில் இருக்கிறார். 9-க்குடைய சனி 9-ஆம் இடத்தைப் பார்க்கிறார். இது தர்மகர்மாதிபதி யோகம்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 7-ல் குரு அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். குரு நீச ராசியில் சனியின் வீட்டில் இருந்தாலும், சனியும் குருவும் பரிவர்த்தனை. அதாவது குரு வீட்டில் சனியும், சனி வீட்டில் குருவும்! இது, குரு வீட்டில் குருவும், சனி வீட்டில் சனியும் இருப்பதற்குச் சமமான பலன். பரிவர்த்தனைக்கு சுய க்ஷேத்திரப் பலன் என்று பொருள். கடுமையான உழைப்பு, அற்ப ஊதியம் என்றும் சொல்வார்கள். அதேசமயம் பரிவர்த்தனை யோகம் கடன் அடையச் செய்யும். ஹோட்டல் சர்வருக்கு டிப்ஸ் கொடுப்பது போலவும், ஆட்டோ அல்லது டாக்சி டிரைவருக்கு மீட்டருக்கு மேல் கூடுதல் தொகை கொடுப்பது போலவும் உங்கள் சம்பளத்திற்குமேல் சன்மானம் கிடைக்கும். அதாவது உழைப்பிற்கேற்ற ஊதியம்- அதற்கு மேலாக பிரியமாகக் கொடுக்கும் சன்மானம் என்பதுபோல அமையும். 5, 10-க்குடைய செவ்வாய் 9-ல் இருப்பது இரு யோகம். கடக ராசிக்கு 5-க்குடைய திரி கோணாதிபதி மற்றொரு திரிகோணம் (9-ல்) ஏறுவது ஒரு யோகம். 10-க்குடைய கேந்திராதிபதி 9-ஆம் இடமாகிய திரிகோணத்தில் இருப்பது ஒரு யோகம். (தர்மகர்மாதிபதி யோகம்.) இவை, வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் சம்பளம் கிடைப்பதற்கு சமம். உங்களுக்கு வருமானம் வரும். அது எப்படி வருமென்றால் ஒரு முழு டிஸ்ட்ரிபியூஷன் எடுத்த ஒருவருக்கு, சப் டீலர்கள் விற்பனைக்குரிய கமிஷன் கொடுப்பதற்கு சமம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 4-ல் நின்று 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 4- சுகஸ்தானம்; 10- வாழ்க்கை, தொழில் ஸ்தானம். 4-ல் கேது, 10-ல் ராகு இருப்பதால் இவையிரண்டும் உங்களுக்குப் பிரச்சினையாக இருந்தாலும், ராசிநாதன் சம்பந்தத்தால் கலகம் பிறந்தால் நியாயம் கிடைக்கும் என்பதுபோலவும், குட்டையைக் குழப்பி மீனைப் பிடிப்பது போலவும் அனுகூலமும் ஆதாயமும் அடையலாம். சிலசமயம் நம் கடமைகளைச் செய்தாலும் உரிமைகளை அடைவதற்குப் போராடத் தான் வேண்டும். அதுதான் ராகு- கேது 10-ஆம் இடத்திற்கு சம்பந்தப்பட்ட பலன். தொலைந்த பொருள் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாலும், அது உங்களுடைய உடைமை என்பதை நிரூபித்துவிட்டுதான் வாங்கமுடியும். அதுபோல சொத்து அல்லது மற்ற உடைமைப் பொருட்களில் உங்கள் உரிமையைப் பதிவு செய்துவிட்டுதான் பயனடையவேண்டும். மற்றபடி பொருளாதாரம், தொழில் நிலவரம், ஆரோக்கியம் இவற்றில் பாதிப்புக்கு இடமில்லை. குடும்ப ஒற்றுமைக்கும் பாதிப்பில்லை. மகிழ்ச்சியும் குறையாது. அதாவது ஆரோக்கியம், வரவு- செலவெல்லாம் திட்டமிட்ட படி தெளிவாக அமையும்..

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிக்கு சனி, செவ்வாய், குரு ஆகிய மூவரின் பார்வையும் கிடைக்கிறது. 2-ல் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். 2-ஆம் இடமென்பது வாக்கு, தனம், குடும்ப ஸ்தானம். 10-ஆம் இடத்துக்கும் செவ்வாய், சனி பார்வை கிடைக்கிறது. தொழில்துறையில் முன்னேற்றமும் லாபமும் எதிர்பார்க்கலாம். சிலர் வெளியூர் அல்லது வெளிமாநிலத்தில் வேலைவாய்ப்பை எதிர்பார்க்கலாம். அல்லது தொழில் தொடங்கலாம். சொந்தத் தொழில் செய்கிறவர்கள் தொழில் முன்னேற் றத்திற்காகவும் அபிவிருத்திக்காகவும் கடன் வாங்கலாம். தொழிலை விரிவாக்கலாம். அதிக லாபமும் சேமிப்பும் ஏற்படுத்தி கடனை அடைக்கலாம். முதலீட்டுப் பற்றாக் குறையை நிவர்த்திசெய்ய, தேவைப்பட்டால் கூட்டாளியை பங்குசேர்த்துக் கொள்ளலாம். அதை நிரந்தரக்கூட்டு என்று நினைக்க வேண்டாம். தற்காலிகக்கூட்டு என்று செயல்படலாம். அதேசமயம் சகோதரகாரகன் செவ்வாய் 3, 8-க்குடையவர் என்பதால், சகோதரவழி சம்பந்தம் சரியாக இருக்காது. அந்நிய நண்பர்கள் வகையில் பங்குசேர்க்கலாம் அல்லது மனைவியின் பேரில் பங்குசேர்த்து செயல்படலாம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். 2, 7-க்குடைய செவ்வாய் குரு வீட்டில் பலம்பெற்று ராசியைப் பார்க்கிறார். ஆயுள், ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். தொழில்துறையில் முயற்சிகள் கைகூடும். சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்கள் மேலிடத்தின் பாராட்டுக்கும் பரிசளிப்புக்கும் பாத்திரமாகலாம். பதவி உயர்வும் கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கும் பதவி உயர்வு கிடைக்கும். அரசியல், கட்சி என்று செயல்படுகிறவர்களுக்கும் செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, கௌரவம், பதவி எல்லாம் உண்டாகும். உடல்நலன், பொருளாதாரம் எல்லாம் திருப்திகரமாக செயல்படும். ராசிக்கு 10-ஆம் இடம் கடகம். அதற்குடையவர் சந்திரன். 10-ஆம் இடத்துக்கு குரு பார்வை. எனவே பூ வியாபாரம், உப்பு, அரிசி வியாபாரம், பால், தயிர் போன்ற திரவப் பொருட்கள், உணவுப் பொருட்கள், அழுகும் பொருட்கள் போன்ற தொழில்துறையில் ஈடுபடலாம். முதலீட்டுக்குத் தகுந்த அளவு ஆயிரம், லட்சம் என்று லாபம் பெறலாம். பெரும்பாலும் பிறந்த ஊரைக் காட்டிலும் வெளியூர், வெளிநாடு, வெளியிடங்களில் தொழில்செய்து வெற்றிபெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படும். உற்றார்- உறவினர், உடன்பிறந்தோர், நட்பு வட்டாரங்களில் பயனும் பலனும் அடையலாம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிக்கு டிசம்பர் 26-ஆம் தேதிவரை ஏழரைச் சனி இருக்கிறது. இது ஏழரைச் சனியின் கடைசிக்கட்டம் என்பதால், உங்களுக்கு எந்த சுற்றாக இருந்தாலும் சனி நன்மையைச் செய்வார். 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏழரைச்சனியின் சுற்று வரும். முதல் சுற்று மங்குசனி, இரண்டாம் சுற்று பொங்குசனி, மூன்றாம் சுற்று மரணச்சனி என்பது பொதுவிதி. சனியின் வீடான மகரத்தில் செவ்வாய் உச்சம் என்பதாலும், உங்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதாலும் உங்கள் ராசிக்கு சனி நல்லதே செய்வார். கொள்கை வேறுபாடு இருந்தாலும், தேர்தலில் தற்காலிகக் கூட்டு அமைத்துக்கொண்டால் ஒருவரையொருவர் எதிர்மறை விமர்சனம் செய்துகொள்ள மாட்டார்கள் என்பதுபோல, சுற்றத்தாரிடமும் நண்பர்களிடமும் குறையிருந்தாலும், குற்றம் கூறாமல் சமமாக ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படும். பொருளாதாரத்திலும் ஆரோக்கியத்திலும் பொதுவாக பாதிப்புக்கு இடமில்லை. அந்தக் காலத்தில் (புராணத்தில்) அன்னப் பட்சி இருந்ததாகவும், பாலையும் நீரையும் கலந்து வைத்தாலும் அது நீரை விலக்கிவிட்டு பாலைமட்டும் அருந்தும் என்பதாகவும் சொல்வார்கள். அதுபோல குற்றம் பார்க்கில் சுற்றமில்லை என்றும், நீரடித்து நீர் விலகாது என்றும், சிறியோர் செய்த பிழைகளைப் பெரியோர் பொறுத்தருள்வார்கள் என்றும் பெருந்தன்மையாக நடந்துகொள்வீர்கள். விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு சனியின் வீட்டிலும், சனி குருவின் வீட்டிலும் பரிவர்த்தனையாக இருக்கிறார்கள். இவ்வாறு இருந்தால் அவரவர் அவரவர் வீட்டில் ஆட்சியாக இருப்பதற்கு சமம். (சுய க்ஷேத்திர பலம்.) ஏற்கெனவே கூறியதுபோல, தனுசில் குருவும் மகரத்தில் சனியும் இருப்பதாக அர்த்தம். எனவே, ராசிநாதன் குரு ஆட்சிபலம் பெறுவதாகவும், 2-க்குடைய சனி 2-ல் ஆட்சிபலம் பெறுவதாகவும் எடுத்துக்கொள்ளவேண்டும். செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும். மதிப்பு, மரியாதை உயரும். சுற்றத்தார் வகையிலும் நண்பர்கள் வட்டாரத்திலும் உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் முக்கியத்துவத்தை உணர்ந்து உங்கள் உதவியை நாடித் தேடிவருவார்கள். நீங்களும் குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்று பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்வீர்கள். அதற்கு முட்டுக்கட்டையாக, உங்களது தேவையற்ற கௌரவம் தடையாக இருந்தாலும், விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை என்றும், சிறியோர் செய்த பிழையெல்லாம் பெரியோர் பொறுத்தல் கடமையென்றும் கருதி செயல்படுங்கள். ஜென்மச் சனியும் இரண்டாம் இடத்து குருவும் பரிவர்த்தனையாக இருப்பதால் சிலர் நிலம், வீடு, வாகனவகையில் புதிய திட்டங்களை வகுக்கலாம். அந்த திட்டங்கள் வெற்றிபெற மூத்தவர்களின் நல்லாசியைத் தேடிப்பெறுங்கள்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனியும், சனி நின்ற வீட்டதிபதி குருவும் பரிவர்த்தனை. பரிவர்த்தனைக்கு சுய க்ஷேத்திர ஆட்சிபலம் என்று பொருள். அதனால் உங்களுடைய கௌரவம், கீர்த்தி, புகழ், செயல்பாடெல்லாம் குறைவில்லாமல் நடைபெறும். சில காரியங்கள் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் மற்றவர்களுக்குப் பயனுள்ளதாகவும் பலன் தருவதாகவும் அமையும். எப்படி குளத்திலுள்ள மீன்கள் அசுத்தங்களை ஆகாரமாகப் பூசித்து நீரை சுத்தப்படுத்துகிறதோ, அப்படி மற்றவர்களுக்கு நன்மையாக முடியும். "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்பது பாடல். ஆகவே, நல்லாருக்கு நடக்கும் நன்மை எல்லாருக்கும் ஆகுமாம். "நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' என்பதுபோல! அதுதான் நல்லது என்பதற்கு அடையாளம். தொழில் சம்பந்தமாக அல்லது குடியிருப்பு சம்பந்தமாக அல்லது வேலை சம்பந்தமாக சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். சிலருக்கு பதவிமாற்றம் ஏற்படும். சிலருக்கு ஊர்மாற்றம் ஏற்படும். எது வந்தாலும் அது உங்களுக்கு உயர்வான மாற்றமாக அமையும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். சனி வீட்டில் குருவும், குரு வீட்டில் சனியும் பரிவர்த்தனை. குடியிருப்புரீதியாகவும் பதவி, வேலைரீதியாகவும் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். அது நல்ல மாற்றமாக நிகழும். சிலர் வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலைக்கு முயற்சிசெய்யலாம். அங்கு கௌரவப் பதவியும் சம்பாத்தியமும் பெருகும். இதுவரை வாடகைவீட்டில் இருந்தோர் சொந்தவீட்டில் கிரகப்பிரவேசம் செய்து குடியேறலாம். அடுத்து ஏழரைச் சனி ஆரம்பமாவதால், எட்டாண்டு காலம் கடன்பட்டு வடிகட்டுமளவு முதலீடு செய்யலாம். ஒருசில கணவனும் மனைவியும் சேர்ந்து உழைத்து வேலைசெய்து கடனை அடைக்கலாம். ஒருசிலர் யோகத்திற்கு, பிறந்தவீட்டாரின் உதவியும் பெறலாம். ஏழரைச்சனியின் காலம் முடிந்தவுடன் பட்ட கடன் உங்களைவிட்டு விலகும். அதுவரை வட்டிநட்டம் என்று எடுத்துக்கொண்டாலும், ஒரு பொருளை உருவாக்கிவிட்டோம் என்கிற மனநிறைவை அடையலாம். குடும்ப உறவு, தேகசுகம், வேலை நிம்மதி, தொழில் முன்னேற் றம் எல்லாம் தெளிந்த நீரோடையாக செயல்படும். எதிர்கால வாழ்வுக்காக ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி சீரும் சிறப்பும் அடையலாம். பேரும் பெருமையும் பெறலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 11-ல் இருக்கிறார். நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். குருவும் சனியும் பரிவர்த்தனை என்பதால் அது நீசபங்க ராஜயோகமாகும். அதாவது 10-க்குடைய குருவும் 11-க்குடைய சனியும் பரிவர்த்தனை என்பதால், நீங்கள் தொழிலதிபராக இருந்தால் லாபமும் மேன்மையும் அடையலாம். வேலை பார்ப்பவராக இருந்தால் உயர்வும் பெருமையும் அடையலாம். பொதுச்சேவையில் இருந்தால் புகழும் உயர்வும் அடையலாம். ஆன்மிகம், அரசியல், பொதுநலம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு சீரும் சிறப்பும் செல்வாக்கும் உண்டாகும். ஒருசிலர் சம்பாத்தியம் செய்வதற்காகவே பொதுநலத் துறையில் ஈடுபடுவார்கள். சிலர் கைப்பொருளை செலவுசெய்து பொதுநலத்தொண்டு புரிவார்கள். ஆன்மிகம், அரசியல் இரண்டிலும் பொதுநலவாதிகளும் உண்டு; சுயநலவாதிகளும் உண்டு. பாரிஸ்டர் பட்டம்பெற்ற மகாத்மா காந்தியடிகள் கோட்டையும் சூட்டையும் களைந்துவிட்டு, முழங்காலளவு வேட்டியும் மேல்துண்டும் அணிந்து மக்கள்சேவை செய்தார். மக்களுக்காக உழைத்தார். அதன் நன்றிக் கடனாகத்தான் ரூபாய்நோட்டில் அவர் உருவத்தைப் பதிவுசெய்திருக்கிறார்கள். ஜென்மச் செவ்வாய் உங்களுக்கு ஆன்மிக ஈடுபாட்டை ஏற்படுத்தும். பணமா பாசமா- பணமா பக்தியா- பணமா மக்கள்சக்தியா என்பதுபோன்ற புதிர்களுக்கு உங்கள் வாழ்க்கையும் செயல்பாடுகளும் விடையாக அமையும். அதற்கு உதாரணம் மகாத்மாவும் காமராஜரும்தான்.

bala111220
இதையும் படியுங்கள்
Subscribe