ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

Advertisment

சூரியன்: பூரம்- 2, 3, 4.

செவ்வாய்: உத்திரம்- 1, 2.

புதன்: அஸ்தம்- 2, 3.

Advertisment

குரு: அவிட்டம்- 3.

சுக்கிரன்: சித்திரை- 2, 3, 4.

சனி: உத்திராடம்- 3.

ராகு: ரோகிணி- 1.

கேது: அனுஷம்- 3.

கிரக மாற்றம்:

6-9-2021- துலா சுக்கிரன்.

7-9-2021- கன்னிச் செவ்வாய்.

குரு வக்ரம்.

சனி வக்ரம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கடகம்.

5-9-2021- சிம்மம்.

7-9-2021- கன்னி.

9-9-2021- துலாம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் வாரத் தொடக்கத்தில் சிம்மத்தில் திரிகோணமாக இருக்கிறார். உங்கள் திட்டங்களில் தேக்கம் இருக்காது. பிறகு 6-ல் (7-ஆம் தேதிமுதல்) கன்னியில் மாறுகிறார். 6-ஆமிடம் மறைவு ஸ்தானம் என்றாலும் அவர் சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில் சஞ்சரிக்கிறார். செவ்வாயுடன் ஆட்சிபெற்ற புதனும் சம்பந்தம். எனவே செவ்வாய்க்கு மறைவு தோஷம் பெரியளவில் பாதிக்காது. புதிய கடன் உருவாகலாம். தேகநலனில் சிறுசிறு வைத்தியச் செலவுகள் தோன்றி மறையும். 2-க்குடைய சுக்கிரன் 7-ல் ஆட்சிபெற்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். பொதுவாக களஸ்திர காரகன் களஸ்திர ஸ்தானத்தில் நின்றால் தோஷம் என்றாலும், இங்கு ஆட்சி என்பதால் தோஷத்தைக் கணக்கில் எடுக்கவேண்டியதில்லை. பொருளாதார நிலையில் பற்றாக்குறை நீங்கி வரவு- செலவு கள் ஏற்படும். என்றாலும் சேமிப்புக்கு இடமில்லாதது மனதில் ஒரு வருத்தத்தை உண்டாக்கலாம். எவ்வளவுதான் நீங்கள் உண்மையாக நடந்துகொண்டாலும் உறவு கள் உங்களை உதாசீனப்படுத்தி காயப்படுத் தலாம். "யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க' என்று ஒரு திரைப்படத் தில் பாடியமாதிரி, நீங்களும் தட்டிவிட்டுச் சென்று உங்கள் வேலையில் கவனமாக இருங் கள். விலகியவர்களும் அவமானப்படுத்தி யவர்களும் திருந்தி உங்களிடம் உறவாடும் போது அவர்களை ஏற்பதும் விலக்குவதும் உங்கள் மனதைப் பொருத்தது.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் வாரத் தொடக்கத்தில் 6-ல் மறைந்தாலும் ஆட்சி பெறுகிறார். 7, 12-க்குடைய செவ்வாயின் சாரம் (சித்திரை) பெறுகிறார். உங்களது முயற்சிகளுக்கும் திட்டங்களுக்கும் வாழ்க்கைத் துணையின் மூலம் ஆதரவும் அனுகூலமும் எதிர்பார்க்கலாம். 7-க்குடைய செவ்வாய் 5-ல் திரிகோணம் பெறுகிறார். செயல் வேகம் உண்டாகும். எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் படிப்படியாகக் குறையும். 2-க்குடைய புதன் 5-ல் ஆட்சி. பொருளாதாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தாராள வரவு- செலவுகள் உண்டாகும். தொழில்துறையில் வாக்கு சாதுர்த்தியத்தின்மூலம் லாபம் உண்டாகும். சிறுதொழில் புரிபவர்களுக்கு புதிய முதலீடுகள் பற்றிய சிந்தனைத் திறன் அதிகரிக்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களின்வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் நிலவிய பணிச்சுமை குறையும். சமூகப்பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்வது நன்மையை ஏற்படுத்தும். 10-க்குடைய சனி 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். அது உங்களது வாழ்வில் வறுமை, தரித்திரத்திற்கு இடம்தராத வகையில் காப்பாற்றும். ஜென்ம ராகு, சப்தம கேது தாமதத் திருமணத்தை உண்டாக்கும். வாகனவகையில் கடன் உண்டாகலாம்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர் பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 4-ல் ஆட்சிபெறுகிறார். வாரத் தொடக்கத்தில் 11-க்குடைய லாபாதிபதி செவ்வாய், புதனுடன் இணைகிறார். அட்டமத்துச் சனி நடந்தாலும் 10-க்குடைய குரு 9-ல் நின்று தர்மகர்மாதிபதி யோகம் பெற்று ராசியைப் பார்க்கிறார். உங்கள் முயற்சிகள் ஆமை வேகம்போல் செயல்பட்டாலும், முடிவில் முயலை ஆமை தோற்கடித்து வெற்றிபெற்றது போல வெற்றிபெறலாம். 12-ஆமிடத்து ராகு அலைச்சல், திரிச்சல்களை ஏற்படுத்தினாலும் அந்த அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் இலக்கை அடைவீர்கள். 5-க்குடைய சுக்கிரன் ஆட்சி. 5-ஆமிடத்தை குரு பார்க்கிறார். மனதில் நிலவிய சந்தேகங்களுக்கு தீர்வுகள் உண்டாகும். சுறுசுறுப்பான சூழ்நிலையுடன் காணப்படு வீர்கள். 7-க்குடைய குரு 9-ல் திரிகோணம் பெறுகிறார். எனவே, வாழ்க்கைத் துணைவரின் வழியில் விட்டுக்கொடுத்துச் சென்று மகிழ்ச்சியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள லாம். வாகனம் தொடர்பான பழுதை சீர் செய்வீர்கள். சிலர் புதிய வாகனத்திற்காகக் கடன் வாங்கும் சூழ்நிலை அமையும். வியாபாரம் சார்ந்த பணிகளில் வாடிக்கையாள ரின் எண்ணங்களை அறிந்து செயல்படலாம். 3-ல் சூரியன் மறைந்தாலும் ஆட்சியென் பதால், அரசு சம்பந்தப் பட்ட வகையில் தன்னம்பிக்கை யுடனும் தைரியத்துடனும் செயல்படலாம்.

tt

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிநாதன் சந்திரன் வார ஆரம்பத்தில் கடகத்தில் ஆட்சி. 2-க்குடைய சூரியன் ஆட்சி. 9-க்குடைய குரு 8-ல் மறைந்தாலும் 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். பொருளாதார நிலையில் இருந்துவந்த தேக்கங்கள் விலகும். வரவு- செலவுகளில் தாராள புழக்கம் உண்டாகும். எதிர்பாராத செயல்பாடுகளின்மூலம் லாபமும் ஆதாயமும் அடைவீர்கள். 10-க்குடைய செவ்வாய் 3-ல் மறைவதால் தொழில்துறையில் சில காரியங்கள் தள்ளிப்போகலாம். குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பிக்க முடியாமல் திணறவேண்டிய நிலை காணப்படலாம். என்றா லும் 3-க்குடைய புதன் ஆட்சி. தைரியம், தன்னம்பிக்கை குறையாது. உடன்பிறந்த சகோதரவகையில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமையும் பாசமும் அதிகமாகும். உங்களைத் தவறாகப் புரிந்கொண்டவர்களும் உங்களிடம் "ஈகோ' பாராட்டியவர்களும் உங்களின் அருமை பெருமை தெரிந்துவந்து இணைவர். 4-ல் ஆட்சி பெறும் சுக்கிரன் கணவன்- மனைவிக்குள் அன்யோன்யத்தை உருவாக்குவார். கணவன் மனைவியையோ அல்லது மனைவி கணவனையோ நினைத்துப் பெருமைப்படும்படியான செயல்களைச் செய்வீர்கள். 7-ல் சனி இருப்பதால் திருமண வயதை ஒட்டிய ஆண்- பெண்களுக்குத் தாமதத் திருமணம் ஏற்பட வாய்ப்புண்டு. லேட்டானா லும் லேட்டஸ்ட்டாக அமையும் என்பதுபோல!

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்மத்தில் சூரியன் ஆட்சி. 2-க்குடைய புதனும் ஆட்சி. 3-க்குடைய சுக்கிரனும் வாரத் தொடக்கத்தில் 3-ல் ஆட்சி. 6-ல் சனி ஆட்சி. இப்படி முக்கிய கிரகங்கள் ஆட்சிபெறுவது ஒரு வகையில் ப்ளஸ் பாயின்ட். 5-க்குடைய குரு 7-ல் நின்று ராசியைப் பார்ப்பது பலம். உங்கள் திறமைகள் பளிச்சிடும். நீண்ட நாள் நடைபெறாமலிருந்த காரியம் ஒன்று திடீரென நடந்து ஆச்சரியத்தை உண்டாக்கும். 2-ல் ஆட்சிபெறும் புதன்- பொருளாதார நிலையில் பற்றாக்குறைக்கு இடம் தராதவகையில் அமையும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் அதிகமாகும். கருத்து வேறுபாடுகள் மறையும். ஒருவருக்கொருவர் ஆதரவுடன் விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். 4-ல் உள்ள கேது தாயார்சுகம் அல்லது தன்சுகத்தில் சிறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். சிலருக்கு தாயார்வழியில் கண் சம்பந்தப்பட்ட சிகிச்சை அல்லது மூட்டு சம்பந்தப்பட்ட சிகிச்சைகள் நடைபெற வாய்ப்புண்டு. சகோதரகாரகன் செவ்வாய் 3-ஆமிடத்திற்கு 12-ல் மறைகிறார். சகோதர ஒற்றுமையில் பிரிவுகளைச் சந்திக்க நேரும். பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்சினை கள், விவகாரங்கள் ஏற்படலாம். பொதுக்காரியங் களில் கவனமுடன் நடந்துகொள்வது அவசியம்!

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் ஜென்ம ராசியில் ஆட்சி. அவருடன் 8-க்குடைய செவ்வாய் சேர்க்கை. ஜான் ஏற முழம் வழுக்கிய கதையாகத்தான் உங்கள் செயல்பாடுகள் அமையும். எதிலும் ஒரு திருப்தியற்ற நிலை. சிலர் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வாழும் சூழ்நிலை. 12-க்குடைய சூரியன் ஆட்சி. 12-ஆமிடத்திற்கு குரு பார்வை. பொதுவாக குரு எந்த இடத்தைப் பார்க்கிறாரோ அந்த இடத்துப் பலனை அதிகரிக்கச் செய்வார். எனவே, அலைச்சலும் திரிச்சலும் தவிர்க்கமுடியாததாக அமையும். 2-ல் சுக்கிரன் ஆட்சிபெறுவதாலும் குரு 2-ஆமிடத்தைப் பார்ப்பதாலும் அலைச்சலுடன் கூடிய ஆதாயம் உண்டாகும்; அனுகூலமும் உண்டாகும். 10-ஆமிடத்தை குரு பார்ப்பதால் தொழில் இயக்கம் தடைப்படாமல் ஓடிக்கொண்டிருந்தாலும், எதிர்பார்த்த லாபமும் முன்னேற்றமும் கிடைக்காதது வருத்தத்தை அளிக்கும். எது எப்படி இருந்தாலும் உங்கள் தேவைகள் அனைத்தும் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கலாம். புதிய முயற்சிகளில் முடிவெடுக்கும்போது சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது அவசியமாகும். மருத்துவம் தொடர்பான பணிகளில் இருப்பவர் களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் பிரிவினைக்கு இடம் ஏற்படாது.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் ஆட்சிபெறுகிறார். 12-க்குடைய புதனும் ஆட்சி. ஜென்ம ராசிக்கு குரு பார்வை. சுக்கிரன் ஆட்சி பெறுவதும், ராசிக்கு குரு பார்வை கிடைப்பதும் ஒருவகையில் ப்ளஸ். ஒரு வேலையில் இருந்து மற்றொரு நல்ல வேலைக்கு இடமாற்றம் ஏற்படும். அது முன்னேற்றகரமான மாற்றமாக வும் அமையும். ஜெனன ஜாதகத்தில் தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் முந்தைய வேலையைவிட ஊதியத்தில் குறைவாக அமையும். சிக்கனமான செயல்பாடுகள் இருக்கும் என்றாலும், சேமிப்புக்கு இடம்தராதவகையில் செலவினங்கள் உருவாகும். 7-ஆமிடத்தை சுக்கிரன் பார்க்கிறார். சிலருக்கு மனைவியால் கணவருக்கு ஆதாயமும் பெருமையும் உண்டாகும். இன்னும் சொல்லப்போனால் மனைவியால்தான் குடும்பப் பொறுப்புகளை ஏற்று நடத்தவேண்டிய சூழலும் உருவாகலாம். என்றாலும் 7-க்குடைய செவ்வாய் 12-ல் மறைவது மனைவிக்கு தேகநலனில் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தலாம். 4-ல் ஆட்சிபெறும் சனி 10-ஆமிடத்தைப் பார்க்கிறார். சிலர் இரும்பு எந்திரம் சம்பந்த மான புதிய முயற்சிகளை மேற்கொள்ள லாம். அது விஷயமாக கூட்டு முயற்சி களும் பலன் தரும். அந்நிய இனத்து நண்பர் ஒருவர் கூட்டுச் சேர்க்கைக்கு, முன்வருவார். 5-ஆமிடத்து குரு அந்த திட்டங்களிலும் செயல்பாடுகளிலும் காரியசித்தியை உண்டாக்குவார்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

வாரத் தொடக்கத்தில் ராசிநாதன் 11-ல் மாறுகிறார். 11-ஆமிடம் லாபஸ்தானம்; ஜெயஸ்தானம். அவருடன் 11-க்குடைய புதனும் ஆட்சி. ஆகவே, "கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி' நீங்கள் எதிர்கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்றமும் ஏற்படும் என்பது உறுதி. 12-ல் சுக்கிரன் ஆட்சியென்றாலும் அயன சயன ஸ்தானத்தில் குறைகளுக்கு இடமில்லை. அலைச்சலும் உண்டு; ஆதாயமும் உண்டு. தொழில்துறையில் பங்குதாரர்களால் ஏற்பட்ட மனக்கசப்பு மாறி ஒற்றுமையுணர்வு உண்டாகும். எதையும் சமாளிக்கும் தைரியமும் தன்னம் பிக்கையும் பெருகும். 4-ஆமிடத்து குரு தேகநலனில் ஆரோக்கியத்தைத் தருவார். 10-ல் உள்ள சூரியன் (ஆட்சி) அரசு சார்ந்த வகையில் சாதகமான பலனைத் தருவார். மந்தமான நிலைமாறி சுறுசுறுப்பும் விவேகமும் தென்படும். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்த்த நன்முடிவுகள் கிடைக்கும். திரிகோணாதிபதி 4-ல் கேந்திரம் பெறுவது சிறப்பு. ஜென்ம கேது- சப்தம ராகுவின் தோஷ பாதிப்புகளை விலக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். கேளிக்கை, உல்லாசப் பயணங்களும் நடைபெறும். தாய்மாமன் ஒருவரால் ஏற்பட்ட பிரச்சினைக்கு சுமுக தீர்வுகள் உண்டாகும். தன தான்ய விருத்தியான சூழ்நிலைகள் உருவாகும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்கு 9-ல் சூரியன் ஆட்சி. 9-ஆமிடத்துக்கு குரு பார்வை. எனவே பூர்வபுண்ணிய வகையில் நன்மைகள் உண்டாகும். பூர்வீக சொத்துகள் வழியில் நிலவிய வில்லங்கம் விவகாரங்களிலும், வியாஜ்ஜியங்களிலும் சாதகமான பலன்கள் ஏற்படும். பங்காளிகள் பகையாளியாக செயல்பட்ட நிலைமாறி உறவாளியாக மாறும் அமைப்பும் உண்டாகும். ஒற்றுமை யால் சமரசம் உண்டாகும். 2-ல் சனி ஆட்சி. குடும்பத்தில் அவ்வப்போது சில குழப்பங் களும் பெற்றோரிடையே கருத்து மோதல் களும் ஏற்படலாம். என்றாலும் 5-க்குடைய செவ்வாய் 10-ல் மாறி (7-ஆம் தேதிமுதல்) 4-ஆமிடத்தையும், 5-ஆமிடத்தையும் பார்க்கி றார். எனவே, வீடு, வாகனம், ஆரோக்கியம் சம்பந்தமாக நற்பலன்கள் நடைபெறும். சிலர் குடியிருப்பு மாறலாம். ஒருசிலர் வாடகை வீட்டி-ருந்து ஒத்தி வீட்டுக்கு மாறலாம். ஒருசிலர் புதிய வீடுகட்டிக் குடியேறலாம். அந்த எண்ணங்களையும் திட்டங்களையும் 5-ஆமிடத்ûப் பார்க்கும் செவ்வாய் நிறைவேற்றுவார். 3-ல் மறையும் குரு 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். மனைவி பெயரில் சொத்துகள் வாங்கலாம். கணவன்- மனைவிக்குள் ஆதரவு பெருகும். 11-ஆமிடத்தில் ஆட்சிபெறும் சுக்கிரன் வெற்றியைத் தருவார் என்று எதிர் பார்க்கலாம். வங்கிக்கடனை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு கடன் கிடைக்கும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி ஆட்சி. எதிர்பாராத வகையில் சில அதிர்ஷ்டகரமான சூழ்நிலை கள் ஏற்படலாம். ஏழரைச்சனி நடைபெற்றா லும் சனி ராசிநாதன் என்பதால் அலைச்சலு டன்கூடிய ஆதாயத்தையும் தருவார் என்று நம்பலாம். 10-ல் சுக்கிரன் ஆட்சி. 9-ல் புதன் ஆட்சி. 8-ல் சூரியன் ஆட்சி. இப்படி ஆட்சி பெற்ற கிரகங்களால் அந்தத் தொழிலில் திடீர் ராஜயோகமும் ஏற்படும். தொழிலுக்குரிய கடனும் கிடைக்கும். தேக ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவைப்படும். உங்கள் எண்ணங்களிலும் திட்டங்களிலும் அவ்வப் போது சில சந்தேகங்களும் குறுக்கீடுகளும் நிலவினாலும் காரியத்தடை என்பதற்கு இடம் ஏற்படாது. சில சமயங்களில் மனதில் சஞ்சலங்கள் தோன்றி மறையும். 7-ஆமிடத்தை குரு பார்க்கிறார். திருமணமான தம்பதிகளுக் குள் பூசல்கள் விலகி நேசம் பிறக்கும். ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்வர். "நெய்க்கு தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா!' என்ற வகையில் உறவுகள் அமைந்து ஆச்சரியப் படுத்தும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாய்ப்பு கள் உண்டாகும். வெளியூர் அல்லது வெளிமாநில வேலைத் தொடர்புகளும் பயனளிக்கும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. ராசிநாதன் விரயஸ் தானத்தில் இருப்பது ஒருவகையில் மைனஸ் தான். என்றாலும் 2-க்குடைய குரு ஜென்ம ராசியில் நின்று 5, 7, 9 போன்ற இடங்களைப் பார்க்கிறார். எனவே, சிக்கல், சிரமங்களைச் சந்தித்தாலும் போராடி வெற்றி பெறலாம். யாருக்கும் வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்ப் பது நல்லது. உங்களது செயல்பாடுகளில் நிதானமும் சமயோசித சிந்தனையும் அவசியம். 10-க்குடைய செவ்வாய் 8-ல் மறைவு. மேலே கூறியதுபோல் தொழில், வேலை, உத்தியோகம் இவற்றில் மந்தமான நிலையும் தாமதப் பலனும் ஏற்படும். என்றா லும் 5-ஆமிடத்தைப் பார்க்கும் குரு உங்களின் கற்பனைக் கனவுகளையும் நனவாக்குவார் என்று எதிர்பார்க்கலாம். ஒருசிலருக்கு தகப்பனார்வழியில் சில சங்கட நிகழ்வுகள் உருவாகும். 9-ல் ஆட்சிபெறும் சுக்கிரனும் அவரைப் பார்க்கும் குருவும் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் சாதகமான பலனைத் தருவார்கள். வெளியூர், வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளுக்கு வேலை விஷயமாக முயற்சிப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். ஏழரைச்சனியின் தோஷ பாதிப்பிலிருந்து விடுபட வழிவகை செய்யும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 12-ல் மறைவு. குருவுக்கு வீடுகொடுத்த சனி அவருக்கு 12-ல் மறைவு. உங்கள் கனவிலும் கற்பனையிலும் "நானே ராஜா நானே மந்திரி' என்று செயல் படுவீர்கள். 7-க்குடைய புதன் ஆட்சி, உச்சம். 2-க்குடைய செவ்வாய் 7-ல் புதனுடன் சேர்க்கை. என்றாலும் உங்கள் முயற்சிகளில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். குரு பார்வை முறையே 4-ஆமிடம், 6-ஆமிடம் 8-ஆமிடங்களுக்குக் கிடைக்கிறது. வீடு, வாகனம், மனை போன்றவகையில் எதிர்பார்த்த அரசுவங்கி அல்லது தனியார்வங்கிக் கடன் கிடைக்கும். 8-க்குடைய சுக்கிரன் ஆட்சி. 8-ஆமிடத்தை குரு பார்க்கிறார். சஞ்சலம், சங்கடம் தோன்றினாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும் என்பதில் சந்தேக மில்லை. எதிலும் உங்கள் தைரியம் முன்வந்து நின்று வழிநடத்தும். 9-ல் உள்ள கேது ஆன்மிக ஞானத்தை உண்டாக்குவார். குலதெய்வ வழிபாடு சிறக்கும். கோவில் பணிக்காக எடுத்துக்கொண்ட பொறுப்புகள் நன்மதிப்பு பெறும். ஒருசிலர் ஆன்மிக யாத்திரை மேற்கொள்ளலாம். குரு 9-க்குடைய செவ்வாயின் சாரத்தில் சஞ்சாரம். அவர் (குரு) 10-க்கும் உடையவர். எனவே, இதுவும் தர்மகர்மாதிபதி யோகத்தை செயல்படுத்தும். இந்த ஒரு யோகம் மேற்கண்ட சில சங்கடமான பலனிலிருந்து விலக்கி நன்மை களைத் தருமென்று நம்பலாம். ஏனென்றால் தர்மகர்மாதிபதி யோகம் சிறந்த பலனைத் தரும் என்பது ஜோதிடவிதி!