ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்: ரேவதி- 2, 3, 4.
செவ்வாய்: மிருகசீரிடம்- 1, 2.
புதன்: ரேவதி- 1, 2, 3, 4, அஸ்வினி- 1.
குரு: அவிட்டம்- 2, 3.
சுக்கிரன்: ரேவதி- 2, 3, 4.
சனி: உத்திராடம்- 4, திருவோணம்- 1.
ராகு: ரோகிணி- 3.
கேது: கேட்டை- 1.
கிரக மாற்றம்:
5-4-2021- கும்ப குரு (அதிசாரம்).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- தனுசு.
5-4-2021- மகரம்.
7-4-2021- கும்பம்.
9-4-2021- மீனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 2-ல் ராகுவோடு கூடியிருக்கிறார். கேது பார்க்கிறார். 5-ஆம் தேதி மகரத்தில் நீசமாக இருக்கும் குரு கும்ப ராசிக்கு அதிசாரமாக மாறுகிறார். உங்கள் முயற்சிகளில் தோல்விக்கு இடமில்லை. தொடர்ந்து முன்னேறலாம். குடும்பத்தில் அர்த்தமில்லாத- காரண காரியமில்லாத பிரச்சினைகள் உருவாகலாம். உங்களுடைய பொறுமையாலும் சகிப்புத் தன்மையாலும் அவற்றைச் சமாளிக்கவேண்டும். வார்த்தைக்கு வார்த்தை, அடிக்கு அடி, உதைக்கு உதை என்று செயல்பட்டால் குடும்பம் குடும்பமாக இருக்காது; ரணகளமாகிவிடும். அதாவது யுத்த பூமியாக மாறும். உதாரணமாக- எப்போதோ நடந்துமுடிந்த பிரச்சினைகள் இப்போதும் புத்துயிர் பெற்று மெருகுகூட்டி, பெரும் பிரச்சினையாக உருவாகி உங்களை வந்து தழுவும். அதற்கு நீங்கள் முழுப் பொறுப்பு ஏற்கவேண்டிவரும். உங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று ஒதுங்கவும் முடியாது; கழற்றிவிடவும் முடியாது. லேசான பேச்சு வார்த்தைகளாக உருவாகும் பிரச்சினைகள், ஒரு தென்றல் புயலாக மாறுவதுபோல, உங்களைத் தாக்கிடும். அதில் தப்புவதும் காப்பாற்றப் படுவதும் உங்கள் விதிவசம்தான். என்றாலும் புயலுக்குப்பின் அமைதி என்பதுபோல சாந்தமடையவும் மார்க்கமுண்டு. என்றாலும் "தின்கிறவன் திங்க திருப்பத்தூரான் தெண்டம் கொடுத்த கதை'யாக ஏதோ ஒருவகையில் அந்த பாதிப்பு உங்களை வந்தடையும். அந்த நஷ்டத்தை ஏற்றுக்கொள்ள தயாராகிக்கொள்ளத்தான் வேண்டும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசியில் செவ்வாயும் ராகுவும் நிற்க, 7-ல் கேது நிற்பது சோதனையும் வேதனையும் கலந்த வாழ்க்கையை உணர்த்துகிறது. என்றா லும் குரு பார்வையினால் நிவர்த்திக்கும் இடம் உண்டாகிறது. குரு பார்வை கோடி தோஷம் போக்கும் என்பதால், அவ நீச ராசியில் இருந்தாலும் சனியுடன் சம்பந்தம் என்பதால் நீசபங்க ராஜயோகமாகும்! அதாவது நீச கிரகம் நின்ற ராசிநாதன் ஆட்சி, உச்சம் பெற்றால் நீசபங்க ராஜயோகமாகும்! குரு ரிஷப ராசிக்கு 8-க்குடையவர். அவர் 9-ல் திரிகோணம் ஏறுவதால் தோஷம் நீங்கும். "அஞ்சு ஒன்பதுக்கு அதிபர் பாபரானாலும் சுபரானாலும் பொன் போன்ற சுபப் பலனே தருவர்' என்பது சந்திர காவியம் என்ற ஜோதிட நூலின் கருத்து! அந்தப் பெருமை 5, 9-ல் திரி கோணம் பெறும் கிரகங்களுக்கும் பொருந்தும். எனவே, ரிஷப ராசியில் (ஜென்மத்தில்) செவ்வாய், ராகு சேர்க்கையும், கேது பார்வை யும் உங்களை பாதிக்காது! உங்கள் கௌரவம், கீர்த்தி, செல்வாக்கு, செயல்திறன் எல்லா வற்றுக்கும் நல்லதே செய்யும். மேலும் குருபார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப, குரு பார்வையும் உங்கள் கிரக தோஷத்தைப் போக்கு கிறது. "மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கு வாள்' என்பது ஒரு விதி. கங்கைக்கு சூதக மில்லை. பாவத் தன்மையுமில்லை. அதனால் தான் எல்லா தீட்டையும் போக்கும் தன்மை தண்ணீருக்கு உண்டு. கங்கையில் எந்த அசுத்தம் கலந்தாலும் அதன் புனிதத்தன்மை கெடுவதில்லை. அதுபோலவே குருவின் தன்மையும் புனிதமானது. கு என்றால் இருட்டு; ரு என்றால் விலக்குவது என்று பொருள் "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே' எ
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்: ரேவதி- 2, 3, 4.
செவ்வாய்: மிருகசீரிடம்- 1, 2.
புதன்: ரேவதி- 1, 2, 3, 4, அஸ்வினி- 1.
குரு: அவிட்டம்- 2, 3.
சுக்கிரன்: ரேவதி- 2, 3, 4.
சனி: உத்திராடம்- 4, திருவோணம்- 1.
ராகு: ரோகிணி- 3.
கேது: கேட்டை- 1.
கிரக மாற்றம்:
5-4-2021- கும்ப குரு (அதிசாரம்).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- தனுசு.
5-4-2021- மகரம்.
7-4-2021- கும்பம்.
9-4-2021- மீனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 2-ல் ராகுவோடு கூடியிருக்கிறார். கேது பார்க்கிறார். 5-ஆம் தேதி மகரத்தில் நீசமாக இருக்கும் குரு கும்ப ராசிக்கு அதிசாரமாக மாறுகிறார். உங்கள் முயற்சிகளில் தோல்விக்கு இடமில்லை. தொடர்ந்து முன்னேறலாம். குடும்பத்தில் அர்த்தமில்லாத- காரண காரியமில்லாத பிரச்சினைகள் உருவாகலாம். உங்களுடைய பொறுமையாலும் சகிப்புத் தன்மையாலும் அவற்றைச் சமாளிக்கவேண்டும். வார்த்தைக்கு வார்த்தை, அடிக்கு அடி, உதைக்கு உதை என்று செயல்பட்டால் குடும்பம் குடும்பமாக இருக்காது; ரணகளமாகிவிடும். அதாவது யுத்த பூமியாக மாறும். உதாரணமாக- எப்போதோ நடந்துமுடிந்த பிரச்சினைகள் இப்போதும் புத்துயிர் பெற்று மெருகுகூட்டி, பெரும் பிரச்சினையாக உருவாகி உங்களை வந்து தழுவும். அதற்கு நீங்கள் முழுப் பொறுப்பு ஏற்கவேண்டிவரும். உங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று ஒதுங்கவும் முடியாது; கழற்றிவிடவும் முடியாது. லேசான பேச்சு வார்த்தைகளாக உருவாகும் பிரச்சினைகள், ஒரு தென்றல் புயலாக மாறுவதுபோல, உங்களைத் தாக்கிடும். அதில் தப்புவதும் காப்பாற்றப் படுவதும் உங்கள் விதிவசம்தான். என்றாலும் புயலுக்குப்பின் அமைதி என்பதுபோல சாந்தமடையவும் மார்க்கமுண்டு. என்றாலும் "தின்கிறவன் திங்க திருப்பத்தூரான் தெண்டம் கொடுத்த கதை'யாக ஏதோ ஒருவகையில் அந்த பாதிப்பு உங்களை வந்தடையும். அந்த நஷ்டத்தை ஏற்றுக்கொள்ள தயாராகிக்கொள்ளத்தான் வேண்டும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசியில் செவ்வாயும் ராகுவும் நிற்க, 7-ல் கேது நிற்பது சோதனையும் வேதனையும் கலந்த வாழ்க்கையை உணர்த்துகிறது. என்றா லும் குரு பார்வையினால் நிவர்த்திக்கும் இடம் உண்டாகிறது. குரு பார்வை கோடி தோஷம் போக்கும் என்பதால், அவ நீச ராசியில் இருந்தாலும் சனியுடன் சம்பந்தம் என்பதால் நீசபங்க ராஜயோகமாகும்! அதாவது நீச கிரகம் நின்ற ராசிநாதன் ஆட்சி, உச்சம் பெற்றால் நீசபங்க ராஜயோகமாகும்! குரு ரிஷப ராசிக்கு 8-க்குடையவர். அவர் 9-ல் திரிகோணம் ஏறுவதால் தோஷம் நீங்கும். "அஞ்சு ஒன்பதுக்கு அதிபர் பாபரானாலும் சுபரானாலும் பொன் போன்ற சுபப் பலனே தருவர்' என்பது சந்திர காவியம் என்ற ஜோதிட நூலின் கருத்து! அந்தப் பெருமை 5, 9-ல் திரி கோணம் பெறும் கிரகங்களுக்கும் பொருந்தும். எனவே, ரிஷப ராசியில் (ஜென்மத்தில்) செவ்வாய், ராகு சேர்க்கையும், கேது பார்வை யும் உங்களை பாதிக்காது! உங்கள் கௌரவம், கீர்த்தி, செல்வாக்கு, செயல்திறன் எல்லா வற்றுக்கும் நல்லதே செய்யும். மேலும் குருபார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப, குரு பார்வையும் உங்கள் கிரக தோஷத்தைப் போக்கு கிறது. "மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கு வாள்' என்பது ஒரு விதி. கங்கைக்கு சூதக மில்லை. பாவத் தன்மையுமில்லை. அதனால் தான் எல்லா தீட்டையும் போக்கும் தன்மை தண்ணீருக்கு உண்டு. கங்கையில் எந்த அசுத்தம் கலந்தாலும் அதன் புனிதத்தன்மை கெடுவதில்லை. அதுபோலவே குருவின் தன்மையும் புனிதமானது. கு என்றால் இருட்டு; ரு என்றால் விலக்குவது என்று பொருள் "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே' என்ற வாசகப்படி நல்லாரோடு இணங்கி யிருப்பதும் நன்று. நல்லாரைக் காண்பதும் நன்று. அதாவது பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்!
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 10-ல் நீசம் பெற்றாலும்- அவருக்கு வீடு கொடுத்த குருவும் நீசம். (நீசபங்கம்). எனவே, புதனும் நீசபங்கம் அடைவார். மேலும் உச்சம்பெற்ற சுக்கிரனோடு சேர்வதாலும் புதனுக்கு நீசபங்க ராஜயோகம்! நல்லவரோ கெட்டவரோ- உயர்ந்த ஜாதியோ தாழ்ந்த- ஜாதியோ- அதிகாரப்பதவியில் இருந்தால் அவருக்கு எல்லாரும் வணக்கம் செலுத்தியாகவேண்டும். அவர் சொல்வதைக் கேட்கத்தான் வேண்டும். அதுபோல ராசிநாதன் அல்லது லக்னநாதன் நீசம், பகை, மறைவு என்றாலும் விதி விலக்கு உண்டு. எல்லாவகைத் தீட்டுகளையும் தண்ணீரூம் பாலும் போக்கும் அல்லவா! தண்ணீரை அல்லது பாலைத் தெளித்தால் தீட்டுப்போகும். அதுபோல கோமியம் (கோ-ஜலம்) பசுவின் நீர் தீட்டுப்போக்கும். அதனால்தான் சுப விசேஷ காரியங்களுக்கு கோமியம் பயன்படுகிறது. அதேபோல மாவிலையும் பயன்படும். மாவிலை வாடுமேதவிர அழுகாது. ஆக, நமது முன்னோர்கள் ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு விதிவிலக்கு கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அதுபோல நவகிரகத்தி லும் குருவுக்கு முக்கியத் துவம் கொடுத்திருக்கி றார்கள். இந்திரன் மகனுக்கு முகூர்த்த லக்னம் குறிக்கும்போது, வியாழ பகவானுக்கு (குருவுக்கு) குழப்பமாக இருந்ததாம். அதாவது தோஷமில்லாத லக்னம் அமைக்கவேண்டும் என்று! அப்போது அசுர குருவான சுக்கிரன்- "நீங்கள் இருக்கும் இடமே புனிதமானது தானே' என்று எடுத்துக் கொடுத்தாராம். குரு இருந்தாலும் பார்த்தா லும் குறைபோகும். அது தான் குருவின் பெருமை! ஒரு சீடன் தன் ஆசானி டம் எல்லா வித்தைகளையும் கற்றுக்கொண்ட தும், குருவையே சண்டைக்கு அழைத்து சவால் விட்டானாம். குருவின் பத்தினி ஆலோசனைப் படி ஒரு அகப்பையை எடுத்துவந்து "இந்த வித்தையை உனக்குக் கற்றுத்தரவில்லை' என்றதும் சீடன் மன்னிப்புக் கேட்டானாம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 7-ல் குரு, சனி சேர்க்கை. 9-ல் சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கை! 7- கேந்திரம், 9- திரிகோணம். இது உங்களுக்கு வெற்றிக் கூட்டணி கிரகம் ஆகும். அத்துடன் 11-ல் செவ்வாயும் ராகுவும் இருப்பதும் அதை விட யோகமான கிரகச் சேர்க்கையாகும். எனவே, உங்கள் முயற்சிகளிலும் செயல்களிலும் நூற்றுக்கு நூறு வெற்றிதான்! "பேட்டா' செருப் புக்கடை மாதிரி "99' என்றுகூட இருக்காது. உங்கள் கிரக அமைப்பு இதற்கு விதிவிலக்கு ஆகும்! அதாவது கேந்திர ஸ்தானத்திலும் (7-ல்) திரிகோண ஸ்தானத்திலும் (9-ல்) உள்ள கிரகங்கள், உங்களுக்கு மனித முயற்சிக்கு இறைவன் ஆசியை வழங்குவதாக அர்த்தம். மேலும் 11-ஆமிடம் வெற்றி ஸ்தானம்; ஜெயஸ்தானம். அங்கு செவ்வாயும் ராகுவும் இருப்பதும் விசேஷம்! "எங்கும் வெற்றி- எதிலும் வெற்றி' என்று பாரதியார் பாடியமாதிரி வெற்றிமுகம்தான்! தோல்விக்கும் இட மில்லை. துயரத்துக்கும் இடமில்லை; தொய்வுக் கும் இடமில்லை. எனவே, ஹைவேஸ் ரோட்டில்- "ஸ்பீடு பிரேக்கர்' இல்லாத நிலையில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிப்பதுபோல் பயணம் போகலாம்! ஏற்கெனவே குறிப் பிட்டமாதிரி கேந்திரம் என்பது மனிதமுயற்சி. திரிகோணம் என்பது தெய்வ கடாட்சம்! உங்களுக்கு கேந்திரமும் திரிகோணமும் பலமாக அமைவதால் தோல்வியே இல்லை. கலைஞர் சொன்னமாதிரி செய்வதையே சொல்வீர்கள்- சொன்ன தையே செய்வீர்கள். பிறகென்ன- எல்லா வாக்கு களும் உங்களுக்குத்தான்- வெற்றியும் உங்களுக்கே! அதே சமயம் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று வள்ளுவர் சொல்லியமாதிரி உயர்ந்த லட்சியத்தோடு எண்ணுவதும் செயல்படுவதும் அவசியம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் தன் ராசிக்கு 8-ல் மறைகிறார். என்றாலும் அவர் புதனோடும் சுக்கிரனோடும் இணைவதால் மறைவு தோஷம் நீங்கும். அதாவது சிம்ம ராசிக்கு 10-க்குடைய சுக்கிரனோடும் 11-க்குடைய புதனோடும் சேர்க்கை. மேலும் சுக்கிரன் உச்சம்! புதன் நீசபங்கராஜ யோகம்! இரண்டு வகையில் புதனுக்கு நீசபங்கம் உண்டாகிறது. புதனுக்கு வீடு கொடுத்த குருவும் நீசம்! அடுத்து புதன் உச்ச சுக்கிரனோடு சம்பந்தம்! எனவே, சில காரியகள் முடிகிறமாதிரி வேகமாகப் போய் முடியும் கட்டத்தில் தாமதப்பட்டாலும் "கேரம் போர்டு விளையாட்டில் குழிக்கு அருகில் காய் போய் நின்றுவிடுவதுபோல சில காரியங்களில் தாமதம் அல்லது தடை காணப்படலாம். அடுத்த முயற்சியில் அதுவும் குழிக்குள் விழுந்துவிடும். வெற்றியாகும்! உங்களுடைய வெற்றிக்கு 10-ஆமிடத்து செவ்வாயும் ராகுவும் துணையாக இருப்பார்கள். மேலும் அதற்கு திரிகோணத்தில் (மகரத்தில்) குரு- சனி சேர்க்கை. இதுவும் உங்கள் வெற்றிக்குத் துணையாக அமையும். தவிரவும் 9-க்குடைய செவ்வாய் 10-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். இது உங்கள் வெற்றிக்கு இயற்கையே வழிவிடு வதாக அமையும்! மேலும் ராசிக்கு 2, 8-ஆமிடம் அதிர்ஷ்ட ஸ்தானமாகும். எதிர்பாராத நன்மைகளும் யோகங்களும் உண்டாகும்! 6-ல் குரு, சனி சேர்க்கை தொழில் உயர்வு, புது முயற்சிகளில் வெற்றி, வழக்கு விவகாரங்களில் அனுகூலம் போன்ற நற்பலனை உருவாக்கும். பணியில் இருப்போருக்கு பதவி உயர்வு, விரும்பிய இடப்பெயர்ச்சி போன்ற பலன் களையும் எதிர்பார்க்கலாம். 8-ல் சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கை 2-ஆமிடத்தைப் பார்ப்ப தால் எதிர்பாராத தனப்பிராப்தி யோகம் அமைவதோடு, நெடுங்காலமாக வராமல் இருந்த பணம் வரவாகும். என்னத்தெ கண்ணையா சொன்னமாதிரி "வரும் ஆனால் வராது' என்ற நிலையும் ஒரு சிலருக்கு அமையும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 7-ல் நீசமாக இருந்தாலும் உச்சம்பெற்ற சுக்கிரனோடு கூடுவதால் நீசபங்க ராஜயோகம். புதனும் நீசம்; புதனுக்கு வீடுகொடுத்த குருவும் நீசம். அதனால் டபுள் மைனஸ் ஒரு ப்ளஸ் என்பதுமாதிரி அதுவும் நீசபங்க ராஜயோகம். எதிர்பாராத அதிர்ஷ்டம், எதிர்பாராத யோகம், எதிர் பாராத நன்மை உண்டாகும். 8-க்குடைய செவ்வாய் 9-ல் இருப்பதாலும் ராகு- கேது சம்பந்தம் பெறுவதாலும் மேற்சொன்ன யோகம் நன்மை களுக்குக் காரணமாகிறது. 5-ஆம் தேதி கும்பத் திற்கு குரு மாறுகிறார். பொதுவாக கன்னி ராசிக்கு- கன்னி லக்னத்திற்கு குரு பாதகாதி பத்திய தோஷம் பெற்றவர். அவர் நீசம் அடைவதும் அல்லது மறைவதும் யோகமாகும். கன்னி ராசிக்கு 3, 8-க்குடைய செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சரிப்பதால், எந்த ஒரு காரியத்தையும் நினைத்தோம் முடித்தோம் என்றில்லால் போராடிப் போராடித்தான் சாதிக்கவேண்டும். கன்னி ராசிக்கு 5-ல் சனி இருப்பதும் ஒரு வகையில் பிள்ளைகள்வகையில் தொல்லை களைக் குறிப்பிடலாம். என்றாலும் சனி ஆட்சிபெற்றவர் என்பதால் கடுமையான தோஷங்கள் பாதிக்காது. குழந்தையே இல்லாமல் இருப்பது புத்திர தோஷம். குழந்தைகள் பிறந்து அழிவது புத்திர சோகம். ஜனன ஜாதகத்தில் 5-ஆமிடமும் புத்திரகாரகன் குருவும் மறைந்திருப்பதும், சனி, ராகு- கேதுவும் மேற்படி தோஷங்களுக்குக் காரணமாகும். ஒருசிலருக்கு ஒரே வாரிசு மட்டும் இருக்கும். அதற்கு கதலி வந்தியாதோஷம் எனப்படும். ஜனன ஜாதகத்தில் அந்த தோஷமிருந்தால் சந்தான பரமேஸ்வர ஹோமம், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம் செய்துகொள்வது நல்லது.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந் தாலும் உச்சமாக இருக்கிறார். உச்சம் அல்லது நீசமடையும் கிரகங்களுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. 8-ல் செவ்வாயும் ராகுவும் இருப்பது தோஷமென்றாலும், குரு பார்ப்பதால் அது நிவர்த்தியாகும். செவ்வாய் 7-க்குரியவர் என்பதாலும், களத்திர ஸ்தானாதி பதி 8-ல் மறைவதாலும், ராகு- கேது சம்பந்தம் பெறுவதாலும், களத்திரகாரகன் சுக்கிரன் 6-ல் மறைவதாலும் சிலருக்கு தாமதத் திருமணம் நடைபெறும். தாமதம் என்பதற்கு எல்லைக் கோடு எதுவென்றால் பெண்களுக்கு 27 வயதும், ஆண்களுக்கு 30 வயதும் கடக்கவேண்டும். அவ்வாறு அமைந்தால் மணவாழ்க்கை மகிழ்ச்சி கரமாக அமையும். அதற்கு முன்னதாக திருமணம் நடைபெற்றால் குடும்பத்தில் குழப்பம், வருத்தம், பிரிவுகளை சந்திக்கநேரும். தவிர்க்கமுடியாமல் நல்ல இடத்து சம்பந்தம் தெரிந்தால் பெண்களுக்கு பார்வதி சுயம் வரகலா ஹோமமும், ஆண்களுக்கு கந்தர்வராஜ ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும். எளிய பரிகாரமாக (8-ல் செவ்வாய், ராகு சேர்க்கை என்பதால்) காளஹஸ்தி சென்று வழிபடலாம். ஆந்திரா வில் திருப்பதியை அடுத்திருப்பது வட காள ஹஸ்தி. தமிழகத்தில் உத்தமபாளையத்தில் இருப்பது தென் காளஹஸ்தி. யாருக்கு எங்கு வசதியோ அங்குசென்று வழிபடலாம். களத்திர காரகன் சுக்கிரன் உச்சம்பெறுவதால் தாமதத் திருமணம் என்றாலும் திருப்திகரமான திருமண மாக அமையும். அதேபோல நல்ல வாரிசு யோகமும் சற்று தாமதமாக அமையும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனி முடிந்துவிட்டது என்றாலும், ஜென்ம கேது- சப்தம ராகு மாறுகிறவரை ஏதாவதொரு பிரச்சினை இருந்துகொண்டுதான் இருக்கும். வேதனையும் சோதனையும் சூழ்ந்துகொண்டே இருக்கும். ஒருசிலருக்கு திருமணத்தில் தடை, தாமதம், ஒரு சிலருக்கு மணவாழ்க்கையில் மனவருத்தம், இன்னும் சிலருக்கு பிரிவு, பிளவு என ஏதாவதொரு சோதனையும் வேதனையும் காணப்படும். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்துத் தேவையான பரிகாரங்களைச் செய்துகொள்ளவும். பிரிந்திருக்கும் கணவன்- மனைவி ஒன்றுசேர நாமக்கல்வழி மோகனூர் தலத்தில் அமைந்துள்ள சம்மோஹன கிருஷ்ணரை வழிபடவும். அங்கு வழிபட்டால் பிரிந்திருக்கும் கணவன்- மனைவி ஒன்றுசேருவர் என்பது அனுபவப்பூர்வமான உண்மை. வாரத் தொடக்கத்தில் குரு, சனி சேர்ந்திருந்தாலும், ஐந்தாம் தேதி கும்ப ராசிக்கு குரு அதிசாரமாக மாறிவிடுவார். அதன்பிறகு உடன்பிறப்புகள் அல்லது பங்காளிவகையிலுள்ள பிரச்சினைகள் விலகும்; சிக்கல்கள் தீரும். செவ்வாய் சகோதரகாரகன் என்பதாலும், ராகு- கேது சம்பந்தம் பெறுவதாலும் உடன்பிறப்பு அல்லது பங்காளிவகையில் சங்கடங்கள் ஏற்பட அதுவும் ஒரு காரணம். என்றாலும் "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை' என்பதைக் கடைப் பிடித்தால் சகோதரவகை சஞ்சலங்கள் நிவர்த்தியாகும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் கடைசிக்கூறு நடக்கிறது. இது 2023 வரை இருக்கும். இதில் சந்திரதசை அல்லது சந்திர புக்தி நடப்பவர்கள் மட்டும் ஆரோக்கியக் குறைவு, மனக்கஷ்டம், பணக்கஷ்டம் போன்ற வற்றை சந்திக்க நேரும். அப்படிப்பட்டவர்கள் திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகமும், சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு நெய்மிளகு தீபமேற்றி வழிபட வேண்டும். அதனால் மலைபோல வரும் துன்பம் பனிபோல விலகிப்போகும். அதேபோல இந்த ஏழரைச்சனி இரண்டாவது சுற்றாக இருந்தால், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு அதிகமிருக்காது. ஏப்ரல் 5-ஆம் தேதி குரு கும்பத்திற்கு மாறுவார். 7, 9, 11-ஆம் இடங்களுக்கு குருவின் பார்வை கிடைப்பதால், உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். திருமண வயதில் காத்திருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் ஈடேறும். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு யோகம் அமையும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் உள்ளவர் களுக்கு அவை நீங்கும். வழக்குகள் சாதகமாகும். சொத்துப் பரிவர்த்தனைக்கும் இடமுண்டு. அதாவது ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை வாங்குவது பரிவர்த்தனையாகும்..
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி ஆட்சியாக இருக்கிறார். வாரத் தொடக்கத்தில் உத்திராடம் நான்காம் பாதத்தில் அஷ்டமாதிபதி சூரியனின் சாரம் பெறுகி றார். பிறகு ஏழுக்குடைய சந்திரன் சாரம் பெறுவார். (திருவோணம்). திருவோணத்தில் சனிவரும் காலம் திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகமும், பிரிந்திருக்கும் தம்பதிகள் இணைந்து வாழும் யோகமும் உண்டாகும். வேலை காரணமாக வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊரில் குடும்பத்தோடு இணைந்து வாழும் யோகம் உண்டாகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நன்மைகளை எதிர்பார்க்கலாம். இதுவரை மகரத்தில் நீசமாக இருந்த குரு ஐந்தாம் தேதி இரண்டாமிடத்திற்கு மாறுவது நல்ல திருப்பம். கடன் நிவர்த்தி ஏற்படும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். வரவேண்டிய பாக்கி பணத் தொகைகள் வசூலாகும். குடும்ப வாரிசுகளின் பெயரில் சிறுசேமிப்பு அல்லது ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற திட்டங்களை செயல்படுத்தலாம். சிலர் புதிய தொழில்வகையில் முதலீடு செய்யலாம் அல்லது வீடு, இடம் போன்ற வகையில் சுபச்செலவு செய்யலாம். சிலருக்கு வாகன யோகம் அமையும். வைத்தியச் செலவுகள் விலகும்; தெளிவு பிறக்கும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
பொதுவாக கும்ப ராசியில் பிறந் தவர்களும், கும்ப லக்னத்தில் பிறந்த வர்களும் அனுதாபத்துக்குரியவர்கள் என்பது ஒரு கணிப்பாகும். ஏனென்றால் கும்ப ராசிநாதனும் கும்ப லக்னநாதனும் 12-க்கும் அதிபதியாவார்கள். 12 என்பது விரய ஸ்தானம். தனக்குத்தானே விரயத்தை சந்திக்கக்கூடியவர்கள். ஆனால் இந்தமுறை குரு ஜென்மராசியில் அமர்வதால் அந்த விதி மாறிவிடும். கும்ப ராசிக்காரர்களின் திறமையும் செயலும் பெருமையடையும் வகையில் முன்னேற்றம் உண்டாகும். 2, 11-க்குடைய குரு ஜென்மராசியில் அமர்வது உங்களுக்கு ஒரு பிளஸ் பாயின்ட் என்றே சொல்லலாம். இதுவரையில் குடத்தில் எரிந்த விளக்கு இனி குன்றின் உச்சியில் ஏற்றப்படும் விளக்காக மாறிப் பிரகாசிக்கும். உங்கள் திறமைக்கு நல்ல சந்தர்ப்பம் அமையும். எல்லாரிடமும் ஏதாவதொரு திறமை அடங்கியிருக்கும். அதை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் வந்தால்தான் பிரகாசிக்க முடியும். இப்போது அந்த வாய்ப்பு உங்களுக்கு அமைகிறது. ஆகவே, "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்பதுபோல, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டால் உங்கள் ஆற்றலும் அறிவுத்திறனும் வெளிப் படும். மதிப்பு, மரியாதை, பாராட்டுகளுக்கு உரியவராகலாம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசியில் சூரியன், சுக்கிரன், புதன் சேர்ந்திருக்கிறார்கள். பொதுவாக மீன ராசிக்கு சுக்கிரன் 3, 8-க்குரியவர். சூரியன் 6-க்குரியவர். புதன் 4, 7-க்குரியவர்; அதேசமயம் பாதகாதிபதி. எனவே, சோதனைகளும் வேதனைகளும் உங்களை சூழ்ந்து நின்றா லும் குரு, சனி சேர்க்கையாலும், ஐந்தாம் தேதி கும்பத்திற்கு குரு மாறுவதாலும் சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கையால் உண்டாகும் எல்லா கெடுதல்களும் விலகி நன்மையாக மாறும். குரு 12-ல் மறைந்தாலும் மீன ராசிக்கு 2, 9-க்குடைய செவ்வாய் சாரம் பெறுவதால் (அவிட்டம்), முதலில் துவர்க்கும் நெல்லிக்கனி தண்ணீர் அல்லது உமிழ்நீர் பட்டவுடன் இனிப்புச்சுவையாக மாறுவதுபோல கெடுதல்கள் எல்லாம் நல்லவையாக மாறும். 1, 10-க்குடைய குரு 12-ல் மறைவது ஒருவகையில் நல்லதல்ல என்றாலும், பாக்கியாதிபதி சாரம் பெறுவதால் நன்மைதான். அதாவது 9-க்குடைய சாரத்தில் 10-க்குடைய குரு சஞ்சாரம் செய்வது தர்மகர்மாதிபதி யோகம் எனப்படும். தர்மஸ்தானம் என்பது தெய்வ கடாட்சம்; கர்மஸ்தானம் (பத்தாமிடம்) என்பது முயற்சி ஸ்தானம். "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்னும் குறளின் தத்துவப்படி, உ ங்கள் முயற்சிகளுக்கு முழுமையான பலனும் பரிசும் பாராட்டும் கிடைக்கும்.