Advertisment

இந்த வார ராசிபலன் 4-10-2020 முதல் 10-10-2020 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-4-10-2020-10-10-2020

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: அஸ்தம்- 3, 4, சித்திரை- 1.

செவ்வாய்: அஸ்வினி- 2.

புதன்: சித்திரை- 3.

குரு: பூராடம்- 4.

சுக்கிரன்: மகம்- 3, 4, பூரம்- 1.

சனி: பூராடம்- 4.

ராகு: மிருகசீரிடம்- 4.

கேது: கேட்டை- 4.

கிரக மாற்றம்:

செவ்வாய் வக்ரம்.

புதன் வக்ரம், அஸ்தமனம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மேஷம்.

5-10-2020- ரிஷபம்.

8-10-2020- மிதுனம்.

10-10-2020- கடகம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக அமர்ந்து 4, 7, 8-ஆமிடங்களைப் பார்க்கிறார். 4- சுகம், கல்வி, வீடு, வாகனம், தாய் ஆகியோரைக் குறிக்குமிடம். 7- திருமணம், மணவாழ்க்கை, 8- ஆயுளைக் குறிக்கும். ராசிநாதனோ லக்னநாதனோ எந்த இடத்திலிருந்தாலும் அல்லது எந்த இடத்தைப் பார்த்தாலும் அந்த இடத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. துர்பலன் நீங்கி நற்பலன் களாகவே நடக்கும். அவருக்கு 6, 8, 12 ஆகிய மறைவு தோஷம் இருக்காது. உதாரணமாக, மேஷ ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைந்தாலும் அவர் அங்கு ஆட்சிபெறுவதால் செல்வாக்கு, திறமை, புகழ், செயல், ஆற்றல் எல்லாம் பிரகாசமாக அமையும். ராசிநாதனோ லக்னநாதனோ 6-ல் மறைந்தாலும் கெடுதல் செய்யாது. சான்றாக, ரிஷப ராசிக்கு சுக்கிரன் 6-ல் மறைந்தாலும் ஆட்சி பெறுவதால், லக்னத்தைக் குறிப்பிடும் செயல், ஆற்றல், கௌரவம், புகழ், திறமை ஆகியவற்றுக்கு எந்தக் குறையுமிருக்காது. 6, 8, 12-ல் லக்னாதிபதியோ ராசியாதிபதியோ மறைந்தாலும், வேகத்தடையுள்ள இடங்களில் கிளட்சை மாற்றி மெதுவாகப் போகும்படி இருக்குமேதவிர, பயணம் தடைப்படாது. நெல்லிக்காய் முதலில் துவர்க்கும்; பிறகு இனிக்கும் என்பதுபோல, ஆரம்பத்தில் குறுக்கீடுகளும் தடைகளும் காணப்பட்டாலும் முடிவில் எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிக்கலாம். வெற்றிக்கனியைத் தட்டிப் பறிக்கலாம். மேலும், 9-ல் குரு, சனி சேர்ந்திருப்பது தர்மகர்மாதிபதி சேர்க்கை என்பதால், உங்கள் முயற்சிகளுக்கெல்லாம் தெய்வம் துணைநிற்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

Advertisment

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 4-ல் அமர்ந்து 10-ஆமிடமான கும்பத் தைப் பார்க்கிறார். ஜென்ம ராகு, சப்தமக் கேதுவாக இருந்தாலும் தொழில், வாழ்க்கை, உத்தியோகம் ஆகியவற்றில் கேடு கெடுதிக்கு இடமில்லை. அதேசமயம், ஜென்ம ராகு, சப்தமக் கேது திருமணத்தடைகளையும் தாமதங்களையும் ஏற்படுத்தலாமெனினும், ராசிநாதனும் களத்திரகார கனுமான சுக்கிரனை குரு பார்ப்பதால், நடிகர் ரஜினிகாந்த் ஒரு திரைப் படத்தில் "லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன்' என்று வசனம் பேசியமாதிரி, தாமதமானாலும் தகுதியும் தரமும் உடைய திருமணமாக அமையும். மேலும், ரிஷப ராசிக்கு 9, 10-க்குரிய சனியும், 11-க்குரிய குருவும் 8-ல் சேர்க்கையாக இருப்பது அதிர்ஷ்ட யோகமாகும். 8-ஆமிடம் மாரக ஸ்தானம், ஆயுள் ஸ்தானம், துர்ஸ்தானம் எனினும், 2, 9, 11-க்குரியவர்கள் சம்பந்தப்படும் போது அது அதிர்ஷ்ட ஸ்தானமாக மாறிவிடும். அதனால் அட்டமத்துச்சனி நடந்தாலும் கெட்ட பலன்களெல்லாம் உங்களைவிட்டு விலகிப்போகும். தொட்டது துலங்கும். பட்டது துளிர்க்கும். விட்டது கிடைக்கும். மொத்தத்தில், "கெட்டவன் கெட்டிடில் கிட்டி டும் யோகம்' என்பதுபோல, 8-க்குரியவர் 8-ல் மறைகிறாரென எடுத்துக்கொள்வதா? 8-ல் ஆட்சிபெறுகிறாரென எடுத்துக்கொள்வதா? 9, 10-க்குரிய சனியுடன் சேர்ந்த தால் "தர்மகர்மாதிபதி யோகம்' என எடுத்துக்கொள்வதா? குட்டையைக் குழப்பி மீனைப் பிடிப்பதுபோல பலன்பெறலாம்; பயனடையலாம். ரிஷப ராசிக்கு சனி ராஜயோகாதிபதி என்பதால் அட்டமத்துச்சனி நல்லத

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: அஸ்தம்- 3, 4, சித்திரை- 1.

செவ்வாய்: அஸ்வினி- 2.

புதன்: சித்திரை- 3.

குரு: பூராடம்- 4.

சுக்கிரன்: மகம்- 3, 4, பூரம்- 1.

சனி: பூராடம்- 4.

ராகு: மிருகசீரிடம்- 4.

கேது: கேட்டை- 4.

கிரக மாற்றம்:

செவ்வாய் வக்ரம்.

புதன் வக்ரம், அஸ்தமனம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மேஷம்.

5-10-2020- ரிஷபம்.

8-10-2020- மிதுனம்.

10-10-2020- கடகம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக அமர்ந்து 4, 7, 8-ஆமிடங்களைப் பார்க்கிறார். 4- சுகம், கல்வி, வீடு, வாகனம், தாய் ஆகியோரைக் குறிக்குமிடம். 7- திருமணம், மணவாழ்க்கை, 8- ஆயுளைக் குறிக்கும். ராசிநாதனோ லக்னநாதனோ எந்த இடத்திலிருந்தாலும் அல்லது எந்த இடத்தைப் பார்த்தாலும் அந்த இடத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. துர்பலன் நீங்கி நற்பலன் களாகவே நடக்கும். அவருக்கு 6, 8, 12 ஆகிய மறைவு தோஷம் இருக்காது. உதாரணமாக, மேஷ ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைந்தாலும் அவர் அங்கு ஆட்சிபெறுவதால் செல்வாக்கு, திறமை, புகழ், செயல், ஆற்றல் எல்லாம் பிரகாசமாக அமையும். ராசிநாதனோ லக்னநாதனோ 6-ல் மறைந்தாலும் கெடுதல் செய்யாது. சான்றாக, ரிஷப ராசிக்கு சுக்கிரன் 6-ல் மறைந்தாலும் ஆட்சி பெறுவதால், லக்னத்தைக் குறிப்பிடும் செயல், ஆற்றல், கௌரவம், புகழ், திறமை ஆகியவற்றுக்கு எந்தக் குறையுமிருக்காது. 6, 8, 12-ல் லக்னாதிபதியோ ராசியாதிபதியோ மறைந்தாலும், வேகத்தடையுள்ள இடங்களில் கிளட்சை மாற்றி மெதுவாகப் போகும்படி இருக்குமேதவிர, பயணம் தடைப்படாது. நெல்லிக்காய் முதலில் துவர்க்கும்; பிறகு இனிக்கும் என்பதுபோல, ஆரம்பத்தில் குறுக்கீடுகளும் தடைகளும் காணப்பட்டாலும் முடிவில் எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிக்கலாம். வெற்றிக்கனியைத் தட்டிப் பறிக்கலாம். மேலும், 9-ல் குரு, சனி சேர்ந்திருப்பது தர்மகர்மாதிபதி சேர்க்கை என்பதால், உங்கள் முயற்சிகளுக்கெல்லாம் தெய்வம் துணைநிற்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

Advertisment

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 4-ல் அமர்ந்து 10-ஆமிடமான கும்பத் தைப் பார்க்கிறார். ஜென்ம ராகு, சப்தமக் கேதுவாக இருந்தாலும் தொழில், வாழ்க்கை, உத்தியோகம் ஆகியவற்றில் கேடு கெடுதிக்கு இடமில்லை. அதேசமயம், ஜென்ம ராகு, சப்தமக் கேது திருமணத்தடைகளையும் தாமதங்களையும் ஏற்படுத்தலாமெனினும், ராசிநாதனும் களத்திரகார கனுமான சுக்கிரனை குரு பார்ப்பதால், நடிகர் ரஜினிகாந்த் ஒரு திரைப் படத்தில் "லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன்' என்று வசனம் பேசியமாதிரி, தாமதமானாலும் தகுதியும் தரமும் உடைய திருமணமாக அமையும். மேலும், ரிஷப ராசிக்கு 9, 10-க்குரிய சனியும், 11-க்குரிய குருவும் 8-ல் சேர்க்கையாக இருப்பது அதிர்ஷ்ட யோகமாகும். 8-ஆமிடம் மாரக ஸ்தானம், ஆயுள் ஸ்தானம், துர்ஸ்தானம் எனினும், 2, 9, 11-க்குரியவர்கள் சம்பந்தப்படும் போது அது அதிர்ஷ்ட ஸ்தானமாக மாறிவிடும். அதனால் அட்டமத்துச்சனி நடந்தாலும் கெட்ட பலன்களெல்லாம் உங்களைவிட்டு விலகிப்போகும். தொட்டது துலங்கும். பட்டது துளிர்க்கும். விட்டது கிடைக்கும். மொத்தத்தில், "கெட்டவன் கெட்டிடில் கிட்டி டும் யோகம்' என்பதுபோல, 8-க்குரியவர் 8-ல் மறைகிறாரென எடுத்துக்கொள்வதா? 8-ல் ஆட்சிபெறுகிறாரென எடுத்துக்கொள்வதா? 9, 10-க்குரிய சனியுடன் சேர்ந்த தால் "தர்மகர்மாதிபதி யோகம்' என எடுத்துக்கொள்வதா? குட்டையைக் குழப்பி மீனைப் பிடிப்பதுபோல பலன்பெறலாம்; பயனடையலாம். ரிஷப ராசிக்கு சனி ராஜயோகாதிபதி என்பதால் அட்டமத்துச்சனி நல்லதாகவே பலன் தரும்.

wee

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

Advertisment

மிதுன ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். அவர் 4-ஆமிடத்துக் கேந்திராதிபதி. எந்தவொரு ஜாதகத்திலும் கேந்திரமும் திரிகோணமும் சம்பந்தப் படும்போது அது "ராஜயோகம்' எனப்படும். கேந்திரம் என்பது மனித முயற்சி. திரிகோணம் என்பது தெய்வத்தின் அனு கூலம். ""நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு: ஒன்று- மனசாட்சி, இன்னொன்று- தெய்வத்தின் சாட்சி'' என்று நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ஒரு திரைப்படத்தில் பாடியமாதிரி, கேந்திரமும் திரிகோணமும் இணையும் போது மனசாட்சியும் தெய்வ சாட்சியும் இணைந்து அருள்பாலிக்கும். இன்றைய நாகரிக உலகிலும் வழக்கு மன்றத்தில் சாட்சிக் கூண்டில் நிற்பவரிடம், "தெய்வ சாட்சியாக நான் சொல்வதெல்லாம் உண்மை' என்று தான் வாக்கு வாங்குகிறார்கள். ஆனால், உண்மைக்குப் புறம்பாகப் பொய் சாட்சி சொல்கிறவனும் பொய் சத்தியம் செய்கிறான். அதனால்தான், நீதிதேவதையின் கண்களைக் கருப்புத் துணியால் கட்டிவைத்திருக்கிறார்கள். "வேலைக்காரி' என்ற திரைப்படத்தில் நடிகர் டி.எஸ். பாலையா ""தெய்வத்தின் சாட்சி யாக சல்லிக்காசுகூட வாங்கவில்லை'' என்று சத்தியம் செய்வார். இது அறிஞர் அண்ணாவின் கதை, வசனம். ""இப்படிப் பொய் சத்தியம் செய்கிறாயே...'' என்று அவர் நண்பர் கேட்கும் போது, ""நான் வாங்கியதோ நூறு. ஆனால், சல்லிக்காசுகூட வாங்கவில்லை என்றுதானே சத்தியம் செய்தேன்'' என்று கூறுவார். 7, 10-க்குரிய குரு 7-ல் ஆட்சிபெற்று 9-க்குரிய சனி யோடு சம்பந்தமாகி ராசியைப் பார்ப்பதால், உங்களுக்கு தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படு கிறது. மேற்படி யோகம் அமைந்தால், அந்த ஜாதகர் ஒருபொழுதும் வீழ்ச்சியடைய மாட்டார்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 6-ல் குரு, சனி சேர்க்கை, மறைவு. 5-ல் கேது. 11-ல் ராகு. இவையெல்லாம் உங்களுக்கு சாதக, பாதகப் பலன்களைக் கலந்துசெய்யும். என்றாலும் 10-ஆமிடத்துச் செவ்வாய் ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பதாலும், 4, 11-க்குரிய சுக்கிரன் 2-ல் பலம்பெறுவதாலும் எவ்வளவு பிரச்சினைகள் காணப்பட்டாலும், அவற்றைக் கடந்து முன்னேறுவீர்கள். லட்சியப் பயணம் மேற்கொள்வீர்கள். வெற்றி இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். அதற்கு உறுதுணையாக 11-ஆமிடத்து ராகு அமைகிறார். குருவின் மறைவு தோஷத்துக்கு நிவர்த்தி ஏற்படுகிறது. 11-ல் ராகு நிற்பதும், 11-க்குரியவர் 2-ல் நிற்பதும் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி என்பதை சுட்டிக்காட்டுகிறது. அதே சமயம், 5-ஆமிடத்துக் கேதுவும், 6-ல் மறையும் பாக்கியாதிபதியும் ஆசைகாட்டி மோசம் செய்வதுபோல சில ஏமாற்றங்களையும் தரக்கூடும். ஆனால், பந்தயத்தில் கால் இடறிவிழுந்த குதிரை வேகமாகத் துள்ளி யெழுந்து ஓடுவதுபோல, உங்கள் வெற்றிப் பயணம் தொடரும். 10-ஆமிடத்தை 10-ல் ஆட்சிபெற்ற செவ்வாயும், 9-க்குரிய குருவும் பார்ப்பதால் உங்களுக்கு தர்மகர்மாதிபதி யோகம் இருக்கிறது. அதனால் "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடுவதுபோல குறையேதும் வராது. 5-ஆமிடத்துக் கேது குழப்பங்களைக் கொடுத்தாலும், அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய் 10-ல் ஆட்சிபெற்று அவரைப் பார்ப்பதால் எண்ணியது ஈடேறும். கருதியது கைகூடும். நினைத்தது நிறைவேறும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 2-ல் பலம் பெறு கிறார். 5-ல் ஆட்சிபெற்ற குரு சிம்ம ராசியைப் பார்க்கிறார். பாக்கியாதிபதி செவ்வாயும் திரிகோணத்தில் ஆட்சிபெறுகிறார். அடிக்கடி நான் எழுதுவதுபோல, கேந்திர ஸ்தானம்- முயற்சி ஸ்தானம். திரிகோணம்- தெய்வ அனுகூல ஸ்தானம். கேந்திரம் விஷ்ணு ஸ்தானம். திரிகோணம் லட்சுமி ஸ்தானம். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். அதனால் தான் திருவள்ளுவர் "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்றார். இறைவன் இருவருக்குத் துணைநிற்க மாட்டார். ஒருவன் சோம்பேறி. இன்னொருவன் நம்பிக்கைத் துரோகி. துரோகம் செய்கிறவன் அப்போது தெளிவாக இருப்பதாகக் தெரிந்தாலும் அடுத்த கட்டத்தில் அழிந்துவிடுவான். அதனால்தான் சரித்திரங்களில் காட்டிக்கொடுப்பனை சாதகமடைந்தவன் கொன்றுவிடுகிறான். துரோகிகள் அந்த துரோகத்தாலேயே அழிக்கப் படுவார்கள். இதில் ஒரு சர்ச்சைக்குரிய கேள்வி எழும்- ராமாயணத்தில் விபீஷணன் பங்காளியான இராவணனுக்குத் துரோக மிழைத்து ராமனோடு சேர்ந்தான். இராவணனுக் குப் பிறகு இலங்கை அரசுடைமையை ராமன் விபீஷணனுக்குக் கொடுத்தான். இது தர்மமா என்றால், இராவணனைப் பொருத்தவரை விபீஷணன் செய்தது பங்காளித் துரோகம். ஆனால், அடுத்தவன் (ராமன்) மனைவியான சீதையைக் கவர்ந்தது இராவணன் செய்த குற்றம். அவனுக்குத் தக்க உபதேசம் செய்த விபீஷணனை அவன் பொருட்படுத்தவில்லை. அதனால்தான் இராவணனைவிட்டு விபீஷணன் வெளியேறினான். இது தர்மமா என்றால், விபீஷணன் செய்தது "அப்ரூவர்' நிலைக்குச் சமம்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 2-ல் இருக்கிறார். புதனுக்கு வீடுகொடுத்த சுக்கிரன் சிம்மத்தில் இருக்கிறார். சுக்கிரனுக்கு வீடுகொடுத்த சூரியன் கன்னியில் புதன் வீட்டில் இருக்கிறார். இந்த இணைப்பு சங்கிலித்தொடர் இணைப்பு. ஒன்றுக்கொன்று இணைப்பு. அரசியலில் சிலசமயம் சில கோரிக்கைகளுக்காக சங்கிலித் தொடர் மறியல்செய்து போராடுவார்கள். அதுபோல, உங்கள் முயற்சிகளில் நிலவும் தளர்ச்சிகள் விலகும். 4-ல் கேந்திர பலம் பெற்ற சனி உங்கள் ராசியைப் பார்க்கிறார். சில நேரங்களில் உங்களின் நியாயமான கோரிக்கைகளும் நேர்மையான வாதங்களும் "ஏழைச்சொல் அம்பலமேறாது' என்பதுபோல தோல்வியானாலும், "வாய்மையே வெல்லும்' என்ற வாசத்துக்கேற்ப முடிவில் வெற்றி யடையும். "அரசன் அன்று தீர்ப்பளிப்பான், தெய்வம் நின்று தீர்ப்பளிக்கும்' என்பது பொய்யாகாது. 9-ஆமிடத்து ராகு குல தெய்வத்தின் பரிபூரண அருளுக்கு உங்களை ஆளாக்கும். ஆன்மிக ஈடுபாடு, இஷ்ட தெய்வப் பிரார்த்தனை நிறைவேற்றம், ஆலய தரிசனம் என உங்களுக்கு பக்திப் பரவசங்களை உண்டாக்கும். அதேபோல, ஜோதிடம், எண்கணிதம், அருள்வாக்கு என உங்களுக்கு எல்லாவகையிலும் பேரும்புகழும் ஏற்படுத்தும். சிலர் குலதெய்வ, இஷ்ட தெய்வக் கோவில் திருப்பணிகளில் ஈடுபடுவார்கள். வசூல்செய்து கும்பாபிஷேகம் நடத்தலாம். தனிப்பட்ட முறையில் கோவில் கட்டலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவான நிலையை சந்திக்கலாம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிக்கு 7-ல் செவ்வாய் ஆட்சி பெற்று, அவர் நின்ற இடத்துக்கு 9-க்குரிய குருவின் பார்வையைப் பெறுகிறார். ஒரு கிரகப் பலனை நிர்ணயிக்கும்போது அவர் நின்ற இடத்துப் பலன், அவருக்கு சாரம்கொடுத்த கிரகத்தின் பலன், அவரைப் பார்த்த கிரகத்தின் பலன், அவரோடு சேர்ந்த கிரகத்தின் பலன், அம்சத்தில் அவர் எந்த இடத்திலிருந்தாரோ அந்த கிரகப் பலன், அந்த கிரகம் பார்த்த இடத்தின் பலன் ஆகிய அனைத்தையும் கணித்துச் சொல்லவேண்டும். இதுதான் "ஷட்பலம்.' "ஷட்' என்றால் ஆறு. இது ஸ்தூலமான பலன். பாகை கலையோடு பார்ப்பது சூட்சுமமான பலன். மொத்தத்தில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள் ஆகியவற்றுக்குள்தான் கோடான கோடி ஜாதகத்தின் சுழற்சி இருக்கிறது. இரட்டைக் குழந்தைகளின் ஜாதகத்தில்கூட ராசி, அம்சம் ஒன்றாக இருந்தாலும், இருப்பு தசை அல்லது நவாம்சத்தில் வித்தியாசப்படும். ஆனால், இப்படி ஒரேமாதிரி அமையும் ஜாதகங் களுக்கு நடக்கும் பலன்கள் முற்றிலும் வேறுபட்ட தாகவே இருக்கும். இரட்டைக் குழந்தைகளின் ஜாதகத்தில் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், வாரிசு போன்ற அமைப்புகளில் வேறுபட்ட பலன்களாக நடக்கும். அதுதான் இறைவன் கணிப்பு, தெய்வ ரகசியம். இதிலுள்ள ரகசியம் என்னவெனில், அவரவர் செய்த முன்ஜென்ம வினைப்பயன். "அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்', "குலம் சம்பத் பதவி பூர்வ புண்யானாம்' என சொல்லப்படுகிறது. எனவே எல்லா காரியங்களிலும் நன்மையை எதிர்பார்க்கலாம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந்தாலும் ஆட்சிபெற்று 8-ஆம் பார்வையாகத் தன் ராசியைப் பார்க்கிறார். விருச்சிக ராசிக்கு 2, 5-க்குரிய குரு 2-ல் ஆட்சிபெற்று செவ்வாயைப் பார்க்கிறார். 6-ல் மறையும் செவ்வாய்க்கு ராசிநாதன் மறைந்தார் என்ற குற்றம் உண்டா எனக் கேள்வி எழலாம். ஆட்சிபெற்ற கிரகத்தை மறைவு தோஷம் பாதிக்காது. அதேபோல, மறைவு ஸ்தானத்தில் இருக்கும் கிரகத்துக்கு அந்த கிரகத்தின் கேந்திராதிபதி அல்லது திரிகோணாதிபதி சம்பந்தம் ஏற்பட்டாலும் மறைவு தோஷக் குறை எனச் சொல்லக்கூடாது. ராமாயணத்தில் வாலியை ராமர் மறைந்திருந்து அம்பு எய்து கொன்றார். ஏனென் றால், வாலியுடன் நேருக்கு நேர் மோதும் எதிரியின் பலத்தில் பாதிபலம் வாலிக் குப் போய்ச் சேர்ந்துவிடுமாம். எப்போதும் ராமர் எய்யும் அம்பு, அவர் எதிரி யைத் தாக்கிவிட்டு மீண்டும் ராமரின் அம்பறாத் தூணியில் வந்து தங்கிவிடுமாம். வாலியைத் தாக்கிய அம்பு வாலியின் நெஞ்சிலேயே தங்கிவிட்டது. அதனால் ராமரின் செயல் தர்மமான செயலல்ல என்று வாலி சுட்டிக் காட்டினான். ராமர் என்ற கதாபாத்திரத்தில் இரண்டு இடங்கள் ராமருக்குக் கரும்புள்ளி ஏற்படுத்திய நிலை. ஒன்று வாலியின் வதம். இன்னொன்று இராவணனிடமிருந்து மீட்ட சீதையை அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்ன நிலை. அடுத்து, அதே சீதை கர்ப்பிணி என்றும் பாராமல் வனவாசத்திற்கு அனுப்பியது. இது தெய்வ அவதாரங்களுக்கே ஏற்பட்ட சோதனை. இது ஏனென்றால், ராமரின் ஜாதகத்தில் புத்திர தோஷம் உண்டு. எனவே, ராசிநாதன் மறைவு என்னும் நிலை நீங்குவதால் உங்கள் செயல்களில் வெற்றியையும் லாபத்தையும் எதிர்பார்க்கலாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். 5-க்குரிய செவ்வாய் 5-ல் ஆட்சியாக இருக்கிறார். ராசிநாதன் குரு 5-ஆமிடத் தையும், 9-ஆமிடத்தையும் பார்க்கிறார். 9-க்குரிய சூரியன் 10-ல் தர்மகர்மாதி பதி யோகமாகப் பலம் பெறுகிறார். தனுசு ராசிக்கு ஏழரைச்சனி நடந்தாலும், எல்லா நிகழ்ச்சியும் மகிழ்ச்சி யாக அமையுமென்பதை நெகிழ்ச்சியாகச் சொல்ல லாம். ஏழரைச்சனி நடந்தா லும் இகழ்ச்சிக்கு இட மில்லை. புகழ்ச்சிக்கு இடமுண்டு. குரு, சனி சேர்க்கை, தர்மகர்மாதிபதி யோகம் ஆகிய இரண்டும் உங்களை வழிநடத்துவதால் குறையொன்றும் வராது. அதேசமயம், 12-க்குரியவர் 5-ல் இருப்பதால், பிள்ளைகள் வகையில் சிலருக்கு அன்புத் தொல்லைகளும் கவலைகளும் ஏற்பட இடமுண்டு. ஆனாலும், அவை பெரிதாக பாதிக்காது. செல்வாக்கு, பெருமை, செயல்பாடு ஆகியவற்றுக்கு குறைவும் ஏற்படாது. 4-க்குரிய குரு சனியோடு சம்பந்தப்பட்டு 6-க்குரிய சுக்கிரன் சாரம் பெறுவதால், சிலருக்கு இடம், வீடுபோன்ற வகையில் கவலைகளும் மாறுதல்களை விரும்பும் மனப்பான்மையும் உருவாகும். 9-க்குரிய சூரியன் 10-ல் இருக்கும் தர்மகர்மாதி பதி யோகப் பலனாக உங்கள் மனதைத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். தைரியத்தை வரவழைத்துக்கொள்ள வேண்டும். "தைரியம் புருஷ லட்சணம்.'

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவென்றாலும், அவருக்கு வீடுகொடுத்த குருவோடு சேர்ந்திருப்பதால் மறைவு தோஷம் பாதிக்காது. அதேபோல, ஏழரைச்சனியும் பாதிக்காது. ஏழரைச்சனியில் விரயச்சனி நடப்பதால், சிலருடைய அனுபவத்தில் "வரவு எட்டணா செலவு பத்தணா' என்கிற முறையில் தவிர்க்கமுடியாதவையாக அமையும். அப்படி வரும் செலவுகளை சுபச்செலவுகளாக மாற்றிக்கொள்ள வேண்டியது உங்களின் பொறுப்பு. கல்யாணம் காட்சி, குழந்தைப் பேறு என்பதுதான் சுபச்செலவு என அர்த்தமல்ல. வங்கியில் டெபாசிட் செய்வதும் சுபச்செலவுதான். அதற்கு, வட்டி லாபமாக வந்தடையும். ஏழரைச்சனி நடப்பதால் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது ஆகாது. அனுதாபத்தின்பேரிலோ வட்டிக்கு ஆசைப்பட்டோ மற்றவருக்குக் கடன் கொடுத்தால், "கைவிட்டுப்போன பணம் யானை வாய்க் கரும்பு' மாதிரிதான். இடம், பூமி, மனை, வாகனம் போன்றவற்றில் சுபமுதலீடு செய்வது பலன் தரும். லாபம் தரும். சிலரின் அனுபவத்தில் ஆலய தரிசனம், ஆன்மிகச் சுற்றுலா, உல்லாசப் பயணம், காசி யாத்திரை போன்ற வகையில் பயணங்களும் செலவுகளும் ஏற்பட இடமுண்டு. குடும்பத்தில் மங்கள காரியங்கள் வகையிலும் சுபச்செலவுகள் ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் குலதெய்வக் கோவில் திருப்பணிக் கைங்கரியங்களில் ஈடுபடலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம்பெற்று ராசியைப் பார்க்கிறார். சனிக்கு சாரம்கொடுத்த சுக்கிரன் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். சுக்கிரன் 4, 9-க்குரியவர். சுக்கிரனுக்கு சனியோடு சேர்ந்த குரு பார்வை கிடைக்கிறது. அதனால் ராசிநாதன் சனி சுக்கிரனைப் பார்ப்பதாக எடுத்துக்கொள்ளலாம். உடல்நலம், தொழில் வளம், தேக பலம், குடும்ப பலம் எல்லாம் அற்புதமாக அமையும். 3-ல் செவ்வாய் ஆட்சி. சகோதரவகையில் சகாயம், நண்பர்கள் வகையில் நல்லாதரவு எல்லாம் நன்றாக அமையும். சொத்துப் பிரச்சினை, பங்காளிப் பிரச்சினை ஆகியவையும் சாதகமாக அமையும். 6-ஆமிடத்தை செவ்வாய் பார்ப்ப தால், நீண்டகாலமாக நிலுவையிலுள்ள வழக்கு, விவகாரம், வியாஜ்ஜியங்களெல்லாம் தற்போது சுமுகமாக முடியும். உங்களுக்கு சாதகமாக நிறைவேறும். வரவேண்டிய பணம் வசூலாகும். கொடுக்கவேண்டிய கடன் அடைபடும். 10-ஆமிடத்தில் கேது இருப்பதும் அவரை ராகு பார்ப்பதும்- தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அந்த வீட்டுக்குரிய செவ்வாய் பார்ப்பதால் சூரியனைக்கண்ட பனிபோல விலகிவிடும். தொழில் உயர்வு, பதவி உயர்வு வேலையில்லாதோருக்கு வேலை ஆகிய பலன்களை சந்திக்கலாம். சிலருக்கு வெளிமாநிலம், வெளிநாடு, வெளியூர்வாசம் ஏற்படலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சியாக இருக்கிறார். அவரோடு 11-க்குரிய சனி சம்பந்தமாகிறார். குருவும் சனியும் பூராடம் 4-ல் சுக்கிரன் சாரம் பெறுகிறார்கள். சுக்கிரனை சனியோடு சம்பந்தப்பட்ட குரு பார்க்கிறார். பதவியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம். தொழிலில் இருப்பவர் களுக்கு தொழில் முன்னேற்றம் நிச்சயம். குருவும் சனியும் சுக்கிரன் சாரம் பெறுவதால் ஆடை, அலங்காரம், ஆடம்பரம், உணவு சம்பந்தம், கலைத்தொழில் போன்றவற்றில் புதிய திட்டங்களும் எண்ணங்களும் முயற்சிகளும் உருவாகும். முதலீடு பற்றாக் குறையை சமாளிக்க தனியார் அல்லது வங்கிக்கடன் அல்லது செல்வந்தர்களின் கூட்டு யோகமும் அமைய வாய்ப்புண்டு. சிலர் கட்டுமானப் பணிகளில் ஈடுபடலாம். திட்டமிட்டபடி செயல்படமுடியாமல் சில மாறுதல்களும் தேக்கங்களும் வரலாம். இது குரு, சனி சேர்க்கையின் பலனாகும். என்றாலும் முயற்சிகளில் தளர்ச்சி ஏற்படாது. வளர்ச்சிக்கு இடமுண்டு. இப்போது தொடங்குவது பிள்ளையார் சுழி போடுவதற்குச் சமம். போகப்போக உங்கள் முயற்சி முன்னேற்றமடைந்து பலன் தரும் அமைப்புண்டாகும். 9-ல் கேது இருப்பது, ராகு சம்பந்தப்படுவது ஒருவகையில் உங்கள் முயற்சிகளுக்கு தகப்ப னாரே திசைதிருப்பமாக அமையலாம். அதன் வெற்றி- தோல்வியை காலம்தான் நிர்ணயிக்க வேண்டும்.

bala091020
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe