இந்த வார ராசிபலன் 31-1-2021 முதல் 6-2-2021 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-31-1-2021-6-2-2021

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: திருவோணம்- 3, 4, அவிட்டம்- 1.

செவ்வாய்: பரணி- 3, 4.

புதன்: திருவோணம்- 2, 1, உத்திராடம்- 4.

குரு: திருவோணம்- 2, 3.

சுக்கிரன்: உத்திராடம்- 2, 3, 4, திருவோணம்- 1.

சனி: உத்திராடம்- 3.

ராகு: ரோகிணி- 4.

கேது: கேட்டை- 2.

கிரக மாற்றம்:

புதன் அஸ்தமனம்.

6-2-2021 சனி உதயம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- சிம்மம்.

1-2-2021- கன்னி.

3-2-2021- துலாம்.

5-2-2021- விருச்சிகம்.

hg

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிக்கு 10-ஆமிடத்தில் சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களின் சேர்க்கை உள்ளது. இது என்ன செய்யுமோ என்று கவலைப்பட வேண்டாம். 10-ஆமிடம் தொழில், வாழ்க்கை ஸ்தானம். எனவே இவற்றில் பிரச்சினைக்கு, சங்கடத்திற்கு இடமில்லை என்றாலும், ஏதோ ஒரு இனம்புரியாத குழப்பம் மனதை நெருடலாம். 2-ல் உள்ள ராகு அந்த குழப்பத்திற்குக் காரணமானா லும், குரு 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் குழப்பத்தை சமாளிக்கலாம். 9-க்குடைய குரு 10-ல் நீசபங்க ராஜயோகமும், தர்மகர்மாதிபதி யோகத்தையும் பெற்றுள்ளதால், அது உங்களை வழிநடத்தும். 5-க்குடைய திரிகோணாதிபதி சூரியன் 10-ல் கேந்திரம் பெறுகிறார். எனவே அரசு காரியங்களில் சாதகமான பலன்கள் நடைபெறும். இதுவரை தள்ளிப்போன அரசு உதவிகள் கிடைக்கப்பெறும். 10-ல் உள்ள சுக்கிரன், கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் தொழில் துறையிலோ உத்தியோகத்திலோ வருமா னத்தை ஏற்படுத்தித் தரும். தாய்மாமன் அல்லது பாட்டனார்வழியில் சங்கடங்கள் உண்டானாலும், அவற்றை சரிசெய்து தருவார். 10-ஆமிடத்துச் சனி அஸ்தமனமாக இருப்பதால் சில காரியங்களில் மந்தமான நிகழ்வுகளே காணப்படலாம். அஸ்தமனம் நீங்கி உதயமானதும் விரைவாக காரியங்கள் நடைபெறும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் நிற்பது தோஷம். இது நாகதோஷம் எனப்படும். இவ்வாறு நாகதோஷமுள்ள ஜாதகர்களுக்குத் திருமணம் தடையாகும் அல்லது வாரிசு தடையாகும். முறையான பரிகாரம் செய்துகொண்டால் திருமணத்தடை விலகும்; வாரிசுத் தடையும் விலகும். குடும்பஸ்தர்களுக்கு மேற்படி கிரக அமைப்பிருந்தால் முயற்சிகளிலும் தடையுண்டாகும். ஒருமுறைக்குப் பலமுறை முயன்றா லும் முழுமையான பலனை எதிர்பார்க்க முடியாது. பாதி கிணறு தாண்டியதுபோல பாதிப்புகள் ஏற்படும். அப்படிப் பட்டவர்கள் சூலினிதுர்க்கா ஹோமம் போன்ற நாகதோஷ நிவர்த்திப் பரிகாரங்களைச் செய்துகொள்ளலாம். ராகுவை குரு பார்ப்பதால் பரிகாரங்கள், ஹோமங்கள் பலன்தரும். பாதிப்புகள் விலகும். தெய்வ அனுகூலம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாகும். "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்பது குறள். அதேசமயம் விதியை வெல்லலாம் என்றாலும் அதுவும் வேந்தன் வகுத்த வழியாகும். ராசிநாதன் 9-ல் இருப்பதால், 9-க்குடைய சனியும் உடனிருப்பதால் தெய்வ கடாட்சமும் பூர்வபுண்ணிய பாக்கியமும் உங்களை வழிநடத்தும். 12-ல் செவ்வாய் ஆட்சி. திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத்த

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: திருவோணம்- 3, 4, அவிட்டம்- 1.

செவ்வாய்: பரணி- 3, 4.

புதன்: திருவோணம்- 2, 1, உத்திராடம்- 4.

குரு: திருவோணம்- 2, 3.

சுக்கிரன்: உத்திராடம்- 2, 3, 4, திருவோணம்- 1.

சனி: உத்திராடம்- 3.

ராகு: ரோகிணி- 4.

கேது: கேட்டை- 2.

கிரக மாற்றம்:

புதன் அஸ்தமனம்.

6-2-2021 சனி உதயம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- சிம்மம்.

1-2-2021- கன்னி.

3-2-2021- துலாம்.

5-2-2021- விருச்சிகம்.

hg

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிக்கு 10-ஆமிடத்தில் சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களின் சேர்க்கை உள்ளது. இது என்ன செய்யுமோ என்று கவலைப்பட வேண்டாம். 10-ஆமிடம் தொழில், வாழ்க்கை ஸ்தானம். எனவே இவற்றில் பிரச்சினைக்கு, சங்கடத்திற்கு இடமில்லை என்றாலும், ஏதோ ஒரு இனம்புரியாத குழப்பம் மனதை நெருடலாம். 2-ல் உள்ள ராகு அந்த குழப்பத்திற்குக் காரணமானா லும், குரு 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் குழப்பத்தை சமாளிக்கலாம். 9-க்குடைய குரு 10-ல் நீசபங்க ராஜயோகமும், தர்மகர்மாதிபதி யோகத்தையும் பெற்றுள்ளதால், அது உங்களை வழிநடத்தும். 5-க்குடைய திரிகோணாதிபதி சூரியன் 10-ல் கேந்திரம் பெறுகிறார். எனவே அரசு காரியங்களில் சாதகமான பலன்கள் நடைபெறும். இதுவரை தள்ளிப்போன அரசு உதவிகள் கிடைக்கப்பெறும். 10-ல் உள்ள சுக்கிரன், கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் தொழில் துறையிலோ உத்தியோகத்திலோ வருமா னத்தை ஏற்படுத்தித் தரும். தாய்மாமன் அல்லது பாட்டனார்வழியில் சங்கடங்கள் உண்டானாலும், அவற்றை சரிசெய்து தருவார். 10-ஆமிடத்துச் சனி அஸ்தமனமாக இருப்பதால் சில காரியங்களில் மந்தமான நிகழ்வுகளே காணப்படலாம். அஸ்தமனம் நீங்கி உதயமானதும் விரைவாக காரியங்கள் நடைபெறும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் நிற்பது தோஷம். இது நாகதோஷம் எனப்படும். இவ்வாறு நாகதோஷமுள்ள ஜாதகர்களுக்குத் திருமணம் தடையாகும் அல்லது வாரிசு தடையாகும். முறையான பரிகாரம் செய்துகொண்டால் திருமணத்தடை விலகும்; வாரிசுத் தடையும் விலகும். குடும்பஸ்தர்களுக்கு மேற்படி கிரக அமைப்பிருந்தால் முயற்சிகளிலும் தடையுண்டாகும். ஒருமுறைக்குப் பலமுறை முயன்றா லும் முழுமையான பலனை எதிர்பார்க்க முடியாது. பாதி கிணறு தாண்டியதுபோல பாதிப்புகள் ஏற்படும். அப்படிப் பட்டவர்கள் சூலினிதுர்க்கா ஹோமம் போன்ற நாகதோஷ நிவர்த்திப் பரிகாரங்களைச் செய்துகொள்ளலாம். ராகுவை குரு பார்ப்பதால் பரிகாரங்கள், ஹோமங்கள் பலன்தரும். பாதிப்புகள் விலகும். தெய்வ அனுகூலம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாகும். "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்பது குறள். அதேசமயம் விதியை வெல்லலாம் என்றாலும் அதுவும் வேந்தன் வகுத்த வழியாகும். ராசிநாதன் 9-ல் இருப்பதால், 9-க்குடைய சனியும் உடனிருப்பதால் தெய்வ கடாட்சமும் பூர்வபுண்ணிய பாக்கியமும் உங்களை வழிநடத்தும். 12-ல் செவ்வாய் ஆட்சி. திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் (மனைவியால் கணவருக்கும் கணவரால் மனைவிக்கும்) பல நன்மைகள் உண்டாகும்..

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிக்கு 8-ல் சூரியன், குரு, புதன், சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் மறைகின்றனர். ராகு 12-ல், கேது 6-ல் மறைகிறார்கள். செவ்வாய் ஒருவரே 11-ல் பலம்பெறுகி றார். எனவே தோப்புக்கு மத்தியிலுள்ள மரமானா லும், தண்ணீர் ஊற்றுவார் இல்லாத தனிமரமாக இருப்பதுபோல எல்லாவகையி லும் நீங்கள் தனியாக தவிக்கநேரலாம். உற்றார்- உறவினர், பிள்ளைகள், குடும்பம் என எல்லாம் இருந்தும் உதவிக்கு யாருமில்லாத வரைப்போல அல்லல்பட நேரலாம். எடுத்து வைத்தா லும் கொடுத்து வைக்க வில்லை என்பதுபோல, பல சந்தர்ப்பங் களில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையாக ஏமாற்றமாகலாம். என்றாலும் 11-ஆமிடத்துச் செவ்வாய் ஆட்சிபெற்று 2-ஆமிடம், 5-ஆமிடங்களைப் பார்ப்பதால், கடைசி நேரத்தில் தேவைகள் ஓடியடையும்; பூர்த்தியாகும். 6-ஆமிடத்தையும் செவ்வாய் பார்ப்பதால், ரேஷன் கடையில் கூட்டத்தில் இழுபறிபட்டு உங்கள் சலுகைகளை வாங்குவதுபோல, உங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். முக்கியமான எல்லா கிரகங்களும் 8-ல் மறைந்ததற்கான பலன் இதுவே. 11-ல் செவ்வாய் ஆட்சிபெற்றதால் அரசு சலுகைகளை அடையலாம். உடல்நலம் நன்றாக இருக்கும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 10-ல் செவ்வாய் ஆட்சிபெற்று ராசியைப் பார்க்கிறார். அத்துடன் 11-ல் உள்ள ராகுவும் ராசியைப் பார்க்கிறார். (ராகுவுக்கு மூன்றாம் பார்வையும் உண்டு; பதினொன்றாம் பார்வை உண்டு.) மேலும் சூரியன், குரு, புதன், சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் ராசியைப் பார்க்கிறார்கள். எனவே "இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா' என்று சவால் விட்டதுபோலவும், "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்பதுபோலவும் எல்லாவகையிலும் சொல்லி கில்லி அடிக்கலாம். 5-ல் உள்ள கேது, சில நேரங்களில் இது சாத்தியமா- இது நம்மால் முடியுமா என்று சந்தேகத்தையும் பயத்தையும் உருவாக்கினாலும், 10-ல் ஆட்சிபெற்ற செவ்வாய் ராசியைப் பார்ப்பதால், "உன்னால் முடியும் தம்பி' என்று செயல்படுத்தலாம். எல்லாவற்றிலும் வெற்றியடையலாம். பழைய முயற்சிகளில் முனைப்போடு செயல்படலாம். புதிய முயற்சிகளிலும் தைரியமாகவும் தன்னம்பிக்கையாகவும் செயல்படலாம். "அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா' என்று சொல்லப்பட்டாலும், அதற்கு எதிர்மறையாக "அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்' என்றும் சொல்லிவைத்தார்கள். அதுதான் விடாமுயற்சியின் வெற்றியென்பது.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிக்கு ராசிநாதன் சூரியன் உட்பட குரு, புதன், சுக்கிரன், சனி ஆகிய எல்லா கிரகங்களும் 6-ல் மறைகிறார்கள். 10-ல் ராகு, 4-ல் கேது. எனவே, உங்கள் முயற்சிகளில் தளர்ச்சியும் தன்னம்பிக்கைக் குறைவும் ஏமாற்றமும் அதிகமாகவே காணப்படும். ஆர்வத்தோடும் அக்கறையோடும் சில காரியங்களில் முனைப்போடு இறங்குவீர்கள். ஆனால் தொடர்ந்து செயல்பட விருப்பமில்லாமல், தொடக்கத்திலேயே பிடித்தமில்லாமல் விட்டு ஒதுங்கிவிடுவீர்கள். பாகவதத்தில், ஒரு அசுரனைக் கொல்வதற்கு கிருஷ்ணருக்கு பாமா துணையாக இருந் தாள். அதுபோல உங்களு டைய வெற்றிக்கு உங்கள் மனைவியும் சில நேரங்களில் உறுதுணையாக இருப்பார். 8-க்குடைய குரு 6-ல் நீசபங்கம் பெறுவது- ஒருவகையில் எதிரியே உங்கள் வெற்றிக்கு மறைமுகத் துணையாக நிற்பார்கள். 6-ஆமிடம் என்பது 10-ஆமிடத்திற்கு பாக்கிய ஸ்தானமானகும். 10-ஆமிடமென்பது தொழில், வாழ்க்கை ஸ்தானமாகும். எனவே, அதில் மறையும் கிரகங்கள் வாழ்க்கை, தொழிலுக்கு யோகமாக அமையும். 4-ல் கேது. தேகசுகத்திலும் தாய்- சுகத்திலும் அக்கறை தேவை. செவ்வாயும் ராகுவும் 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் சிலருக்கு அறுவைசிகிச்சை, வைத்தியச் செலவு ஏற்பட இடமுண்டு.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிக்கு 5-ல் சூரியன், குரு, புதன், சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் இருப்பதால், உங்கள் எண்ணங்கள் ஈடேறும்; முயற்சிகள் கைகூடும்; திட்டங்கள் வெற்றியடையும். செய்வதையே சொல்வீர்கள்; சொல்வதையே செய்வீர்கள். 9-ல் உள்ள ராகு அதற்குத் துணையாக அமைந்து, குலதெய்வ- இஷ்ட தெய்வங்களில் அருளைப் பெற்றுத்தருவார். ஜாதக ரீதியாக 5, 9 எனப்படும் திரிகோணாதிபதிகள் சம்பந்தப்பட்ட தசாபுக்திகள் நடந்தால் இவையெல்லாம் எளிதாகவும் அற்புதமாக வும் நடைபெறும். நீங்களே இந்த வாரத்தின் வெற்றிக் கதாநாயகனாக விளங்குவீர்கள். 3-ஆமிடத்தி லுள்ள கேதுவை 3-க் குடைய செவ்வாய் (8-ல் மறைந்திருந்தாலும்) ஆட்சி பெற்றுப் பார்ப்பதால், பங்காளிவகையிலும் உடன்பிறப்புகள் வகையிலும் நிலவிய எல்லா துன்பங்களும் துயரங்களும் பிரச்சினைகளும் விலகிவிடும். என்றாலும் தெய்வானுகூல ஸ்தானமான 9-ஆமிடத்தில் ராகு நின்று குரு பார்ப்பதால், குலதெய்வப் பிரார்த்தனைகள் இருந்தால் உடனே அதை நிறைவேற்றிவிடுங்கள். பித்ருக்கடன், தெய்வக்கடன், மனிதக்கடன் என்ற மூன்றும் நமது முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாகும். அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றிவிட்டால் நிம்மதி கிடைக்கும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 4-ல் கேந்திரபலம் பெறுகிறார். தொடக்கத்தில் உத்திராடம் சூரியன் சாரத்திலும், பிறகு திருவோணம் சந்திரன் சாரத்திலும் சஞ்சாரம். சூரியன் 11-க்குடையவர். சந்திரன் 10-க்குடையவர். எனவே, தொழில், உத்தியோகம், வேலை, வாழ்க்கை இவற்றில் உங்களுக்கு எந்தப் பிரச்சினைக்கும் இடமில்லை. வழக்கம்போல செயல்பாடுகள் சிறப்பாக அமையும். ஏற்கெனவே தொட்டக் காரியங்களில் விட்டதும் விடுபட்டதும் இப்போது பூர்த்தியடையும்; முழுமையடையும். துலா ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு நிற்பதால் சில நேரம் பணத்தட்டுப்பாடும் பற்றாக் குறையும் காணப்படலாம். என்றாலும் நீசபங்க ராஜயோகம் பெற்ற குரு ராகுவைப் பார்ப்பதால் குறைகள் நிறைவாகும். அதாவது ராகு தலை- கேது வால்! இதில் ராகுவையோ கேதுவையோ யாராவது ஒருவரை குரு பார்த்தாலும் மற்றவரையும் பார்த்தமாதிரிதான் பலன் கிடைக்கும். துலா ராசிக்கு 7-ல் செவ்வாய் ஆட்சிபெற்றுப் பார்ப்பதால் திருமணத்தடை விலகும். திருமணமாக வேண்டிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடனடி திருமண யோகம் அமையும். திருமணத்தடையால் மனமொடிந்த ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும் பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும், இரு சாரரும் காமோகர்ஷண ஹோமமும் செய்து சல அபிஷேகம் செய்துகொண்டால் திருமணத்தடை விலகி நல்ல வாழ்க்கைத்துணைய அடையலாம். மேற்படி ஹோமம் அவசியம் தானா என்ற சந்தேகம் ஏற்பட்டால்- 2-ல் குடும்பஸ்தானத் தில் கேதுவும், 8-ல் ராகுவும் இருப்பதே அதற்கு காரணம்! ஆகவே, பரிகாரம் அவசிய மாகும்! எல்லா தோஷங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் நிவர்த்தி உண்டு- பரிகாரம் உண்டு! அதை முழுமையாகக் கண்டுபிடித்து முறையாகச் செய்தால் பலன் உண்டு.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ல் ஆட்சி பெறுவதோடு தன் ராசியைப் பார்க்கிறார். 6-ல் செவ்வாய் இருப்பது சத்ரு ஜெயம். எதிரியையும் நண்பனாக மாற்றிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். அலெக்ஸாண்டர் என்ற கிரேக்க மன்னன் இந்தியாமீது படையெடுத்து புருஷோத்தமன் என்ற வடநாட்டு மன்னனைக் கைது செய்தான். அப்போது அலெக்ஸாண்டர் அவனிடம் "உம்மை எப்படி நடக்கவேண்டும்?' என்று கேட்டார். அதற்கு "என் கை விலங்குகளை நீக்கிவிட்டு ஒரு மன்னனுக்குரிய ராஜமரியாதையோடு நடத்த வேண்டும் என்று அஞ்சாமல் சொன்னான். அடிமைப்பட்ட நிலையிலும் அவன் வீரத்தைக் கண்ட அலெக்ஸாண்டர் மகிழ்ச்சியடைந்து, அவனை விடுவித்து அவன் நாட்டுக்கே அசரனாக்கி நண்பனாக்கிக் கொண்டார். கோழைகள் தினமும் செத்து செத்து மடிவார்கள். வீரன் ஒரே ஒருமுறை தான் சாவான் என்று சொல்வார்கள். ஜென்ம கேது, சப்தம ராகு திருமணத் தடைகளை ஏற்படுத்தினாலும், 7-ஆமிடத்தை நீசபங்கம் பெற்ற குரு பார்ப்பதால் தாமத மானாலும் நல்ல வாழ்க்கைத் துணையை அடையலாம். பெண்களுக்கு நல்ல துணைவன், ஆண்களுக்கு நல்ல துணைவி அமையும். கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் ஆதாயம் உண்டாகும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 2-ல் நீசபங்க ராஜயோகமாக இருக்கிறார். 5-ல் செவ்வாய் ஆட்சி பெறுகிறார். 7, 10-க்குடைய புதன், 9-க்குடைய சூரியன், 6, 11-க்குடைய சுக்கிரன், 2, 3-க்குடைய சனி எல்லாருக்கும் 2-ஆமிடத்தில் இருக்கிறார்கள். 9-க்குடைய சூரியனும், 10-க்குடைய புதனும் கூடியிருப்பது தர்மகர்மாதிபதி யோகம். தனுசு என்றால் வில்- அம்பு. தனுசு ராசி அல்லது தனுசு லக்னத்தில் பிறந்த ஆண்களும் பெண்களும் வீரனின் வில்லிலிருந்து கிளம்பும் அம்புபோல எதிலும் வேகம்- விறுவிறுப்பு- சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆண்கள் தொழில்துறையிலும், பெண்கள் வீட்டு நிர்வாகத்திலும் சிறந்து விளங்குவீர்கள். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வீர்கள். அதேசமயம் 5-ஆமிடத்து ராகுவும், 12-ஆமிடத்துக் கேதுவும் உங்களை யறியாமலேயே வறட்டுக் கௌரவத்துக்கும் ஆளாக்கும். அதற்கு இடம்தராமல் செயல் பட்டால் தடாகத்தில் பூத்த தாமரையாகத் திகழலாம். எதிரியும் போற்றும் அல்லது வாழ்த்தி வணங்கும் பெருமைக்கும் ஆளாகலாம். அதைத்தான் அறிஞர் அண்ணா ஒருசமயம் "மாற்றன் தோட்டத்து மல்லிகை யும் மனம் வீசும்' என்றார்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகரத்தில் சூரியன், குரு, புதன், சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் சேர்க்கையாக இருக்கிறார்கள். அதனால் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று சொன்ன மாதிரியும், "எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே' என்று தாயுமானவர் பாடிய மாதிரியும் ஊருக்கு உழைத்த உத்தமராக வாழ்வீர்கள். 4-ல் உள்ள செவ்வாய் அதற்குரிய தேக வலுவையும் மனவலுவையும் தரும். 5-ஆமிடத்து ராகு உங்கள் கொள்கைகளுக்கும் கோட்பாடு களுக்கும் செயல்களுக்கும் குடும்பத்திற்குள் ளேயே எதிர்ப்பையும் இடையூறுகளையும் ஏற்படுத்தினாலும் மயங்கமாட்டீர்கள்; தயங்கமாட்டீர்கள். கவியரசர், "போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றுட்டும் ஏற்றதென எனதுள்ளம் எடுத்துரைத்தால் அக்கருத்தை சாற்றுவேன்; எவர் எதிர் வரினும் நில்லேன் அஞ்சேன்' என்று பாடியமாதிரி கொண்ட கொள்கையில் உறுதிப்பாட்டுடன் செயல்படுவீர்கள். அந்த உறுதிப்பாட்டுக்கு காலமும் கடவுளும் உறுதுணையாக அமைந்து வெற்றி தேடித்தரும். தேக ஆரோக்கியம், பொருளா தாரம் இரண்டிலும் குறை ஒன்றுமில்லை.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிக்கு 12-ல் சூரியன், குரு புதன், சுக்கிரன், சனி ஐந்து கிரகங்களும் மறைகிறார்கள். என்றாலும் சனி அங்கு ஆட்சி பெறுவதால் மறைவு தோஷத்தின் பாதிப்பு நீங்கிவிடும். 3-ல் செவ்வாய் ஆட்சி பெறுவதால் தைரியமும் தன்னம்பிக்கையும் உங்களை வழிநடத்தி வெற்றிப்பாதையில் அழைத்துச்செல்லும். மேலும் இதுவரை பகையாளியாக இருந்த பங்காளிகளும் உறவாகி உறுதுணையாக மாறுவார்கள். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் சிலருக்கு தாய்க்கு கெடுபலனும், சிலருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பும் ஏற்பட இடமுண்டு. அப்படி இருந்தால் ஜாதகரீதியாக தேவைப்படும் பரிகாரங்களைச் செய்துகொள்ளலாம். 10-க்குடைய செவ்வாய் 10-ஆமிடத்தையே பார்ப்பதால் தொழில்துறையில் புதிய முயற்சிகள் வெற்றியடையும். ஏற்கெனவே செய்துவரும் தொழில்துறையில் முன்னேற்ற மும் அபிவிருத்தியும் லாபமும் பெருகும். வேலை தேடுவோர் கடல் கடந்து வெளி நாட்டு வேலைக்குப் போகலாம். ஏற்கெனவே வெளிநாட்டில் இருப்பவர்கள் கான்டிராக்ட் முடிந்து சொந்த நாட்டிற்குத் திரும்பி சுயதொழில் முயற்சிகளில் இறங்கலாம்; வெற்றியும் ஏற்படும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 11-ல் நீச ராசியில் இருந்தாலும், அவருக்கு வீடுகொடுத்த சனி ஆட்சி என்பதாலும் மீன ராசியின் உச்சநாதனான சுக்கிரனின் சம்பந்தம் பெறுவதாலும் இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். தெளிவாகச் சொன்னால் இந்த வாரத்தின் கதாநாயகர்களுள் நீங்களும் ஒருவர். கொட்டினால்தான் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி என்பார்கள். பொதுவாக மீன ராசிக்காரர்கள் பெரும்பாலும் பிள்ளைப் பூச்சிகளாகவே வாழ்வார்கள். எதிரியும் நன்றாக இருக்கவேண்டும் என்று வாழ்த்துவார்கள். "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்' என்ற குறளுக்கு ஏற்றமாதிரி எதிரிக்கும் நன்மையே செய்வீர்கள். அதுதான் உங்கள் பலவீனம். பாம்புக்கு பால்வார்த்தமாதிரி ஏமாற்றுபவர்களை நம்புவீர்கள். வஞ்சகளுக்கும் வாழ்வு தருவீர்கள். ஏழை என்றால் மோழையும் பாயும் என்பதுபோல எல்லாரையும் நம்பி ஏமாறுவீர்கள். தானமும் தருமமும் கருணையும் இருக்கவேண்டும். அதே சமயம் பாத்திரமறிந்து பிச்சைபோட வேண்டும் என்பதுபோல, யாருக்கு கருணை காட்டுவது என்பதில் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும். ஆரோக்கியம், பொருளாதாரம், தொழில்வளம், உடல்நலம் இவையெல்லாம் வளமாக அமையும். 3-ல் ராகு- தைரியம், தன்னம்பிக்கையை அதிகமாக்கும்.

bala050221
இதையும் படியுங்கள்
Subscribe